பின்னூட்டம் – ஒரு பார்வை

This entry is part 23 of 44 in the series 15 ஏப்ரல் 2012

திண்ணை இணைய இதழை நான் சமீபமாகத்தான் படிக்க ஆரம்பித்தேன். சில இதழ்களில் எழுதியும் இருக்கிறேன். சமீபத்திய இதழ்களில் வெளிவரும் பின்னூட்டங்களை பார்க்கும்போது ஆச்சர்யமாகவும் அவஸ்தையாகவும் இருக்கிறது. முன் பின் தெரியாத, ஒரே ஒரு கருத்தின் மூலமாக அறிமுகமான ஒருவரின் மீது இவ்வளவு பகையுணர்ச்சி பாராட்ட முடியும் என்பது ஆச்சர்யமாக இருக்கிறது (சிலரின் உண்மையான பெயர்கள் கூட தெரியவில்லை, சிலர் பல பெயர்களில் பின்னூட்டம் இடுகிறார்கள்.) அந்த முகம் தெரியாத மாற்றுக்கருத்தை கொண்ட மனிதர் மனித நேயம் மிக்க நல்ல மனிதராக கூட இருக்கலாம் என்பதை மறந்து விடுகிறார்கள். சில பின்னூட்டத்தின் தொடர்ச்சியான பின்னூட்டங்களில் உனக்கு தமிழே சரியாக எழுதவரவில்லை, நீ முதலில் அதை மாற்றிக்கொள் என்றெல்லாம் இடுகிறார்கள். அந்த முகம் தெரியாத, தமிழ் சரியாக எழுத வராத மனிதர் சமூக அக்கறை உள்ள நல்ல மனிதராக இருக்கலாம் அல்லவா? தமிழ் எழுத வரவில்லை என்பது என்ன மன்னிக்க முடியாத குற்றமா? மானுடம் வெல்வதற்கு உதவாத எது ஒன்றாலும் ஒரு பயனும் இல்லை. ஒருவர் மாற்றுக்கருத்தை கொண்டிருக்கிறார் என்பதற்காக இவ்வளவு துவேசமா?

 

எனக்கு தெரிந்த ஒரு கண்டக்டர் இருக்கிறார். ஒன்றும் பெரிதாக படிக்கவில்லை. தமிழ் இலக்கியம், திராவிட வரலாறு எல்லாம் தெரியாது. அவர் செய்யும் ஒரே நல்ல காரியம், மாதம் ஒரு முறை 30 சிறுவர்களுக்கு ஒரு பென்சிலும் ஒரு ரப்பரும் தருகிறார். (இதற்கும் கூட, ஒருத்தர் ஏழை சிறுவர்களுக்கு தருகிறாரா? இது எல்லாம் ஒரு சேவையா? என்றும் பின்னூட்டம் இடலாம்) என்னை பொறுத்து அந்த கண்டக்டர் நல்லவர். அதேபோல் அந்த மாற்றுக்கருத்தை கொண்ட மனிதர் இது போன்றவராக இருக்கலாம் அல்லவா? உலகத்திலேயே மிகப்பெரிய சுதந்திரம் என்பது என்னவென்றால் எதிரியே என்றாலும் அவருடைய கருத்தை சொல்ல அனுமதிப்பதும் அதை மதிப்பதும் தானே. எந்த விவாதமும் சொல்லப்பட்ட கருத்தை மேலும் ஆழமாக்க உதவவேண்டும் என்பது தானே விவாத்த்தின் நோக்கமாக இருக்க வேண்டும்.

 

மேலாண்மை தத்துவத்தில் “Win-Win Situation”  என்கிற ஒரு நிலையை சொல்கிறார்கள். பெரும்பாலான திண்ணை விவாதங்களில் இந்த நிலையை பார்க்க முடிகிறது. விவாதிப்பவர் எப்படியாவது வெற்றி அடைய முயற்சிக்கிறார். எந்த ஒரு விவாதத்தின் முடிவாகவும் விவாதிக்கப்பட்ட பொருள் வெற்றி பெற்றதாக இருக்கவேண்டுமே அன்றி விவாதித்தவர் வெற்றி பெற்றதாக இருக்க கூடாது. விவாதித்தவர் வெற்றி பெறுகிற நிலைகளில் விவாதித்தவர் திறமையாக வாதடக்கூடியவர் என்றுதான் பொருளே அன்றி விவாதப்பொருள் வெற்றி அடைகிறது என்று அர்த்தம் கொள்ள முடியாது. பெரும்பாலான விவாதங்களில் கண்டிப்பாக இருக்க வேண்டிய மெலிதான நகைச்சுவை உணர்வு திண்ணை விவாதங்களில் காணப்படவே இல்லை. குலம், கோத்திரம், இனம், மொழி, சாதி, திராவிடம், ஆர்யம் என்றெல்லாம் போய் கடைசியாக மனிதம் தொலைந்து போவதை பார்க்க முடிகிறது. (புற முதுகு காட்டி ஓடிவிட்டு என்றெல்லாம் பின்னூட்டங்களை பார்க்க முடிகிறது. திண்ணையில் என்ன போரா நடை பெறுகிறது?)

 

காட்டமான பின்னூட்டங்கள் திண்ணையின் Traffic-ஐ அதிகப்படுத்த உதவலாமே தவிர எழுதுப்பட்ட பொருள் குறித்த தீர்க்கமான விவாதங்களுக்கு வழி வகுக்காது என்பது எனது தனிப்பட்ட கருத்து. இந்த வியாபார கலாச்சாரத்தில் இந்த பின்னூட்டங்கள் அதற்குரிய மதிப்பையும் முக்கியத்துவத்தையும் பெற்று விடுகிறது. மேலும், அவை படிப்பவர்களுக்கு சுவாரசியத்தை தரவும் தவறுவதில்லை.

 

எனக்கு தெரிந்த இளைஞர் ஒருவரை திண்ணையில் நல்ல கட்டுரைகள் எல்லாம் வெளிவருகின்றது படியுங்கள் என்று பரிந்துரைத்தேன். ஒரு வாரம் கழித்து என்னை சந்தித்தவர் சொன்னார் ”எங்கள் அலுவலத்தில் எல்லாம் நாங்கள் இவ்வளவு அதிகமாக சாதிகள் குறித்து கவலைப்படுவதே இல்லை. திண்ணையில் அதிகமாக சாதி தான் பேசப்படுகிறது என்றார். இனிமேல் நான் திண்ணைப்பக்கம் போவதாக இல்லை என்றார்.” அதுதான் அவரின் கருத்தாக இருக்கிறது.

 

வெ.சா மற்றும் ம.ம தங்கள் கருத்தின் மீதான விவாதங்களை (சில அவதூறுகளையும்) மெலிதாக புறக்கணித்து விடுகிறார்கள். உண்மையான விவாதங்களுக்கும், அவர்களின் விளக்கத்திற்கும், அனுபவ பகிர்வுக்கும் வாய்ப்பே இல்லாமல் போய்விடுகிறது. உலகத்தில் மிக கொடுமையான வலி புறக்கணிப்பு தான். சட்டசபையில் ஒருவர் தவறாக நடந்தால் மற்றவர்கள் அவரை தள்ளிவைக்கிறார்கள். அவை கருத்தை ஒருவர் ஏற்கவில்லை என்றால் சட்ட சபையை அவர் புறக்கணிக்கிறார். பெரும்பாலும் எதிர்ப்பை காட்ட புறக்கணிப்பு தான் சரியான ஆயுதம் என்று நினைக்கிறார்கள். இப்பொழுதெல்லாம் வெ.சா மற்றும் ம.ம கட்டுரைகளை அதிகமாக காண முடியவில்லை. எதை எழுதினாலும் யாரவது ஒருவர் தடி எடுத்துக்கொண்டு வந்தால் யார்தான் எழுதுவார்கள்? (அவர்கள் குறைவாக எழுதுவதற்கு வேறு காரணமும் இருக்கலாம்)

 

எழுதப்பட்ட கருத்தின் மீது விவாத்தை கொண்டு செல்லாமல் தனி மனித துதி பாடலாக இல்லை துவேச பாடலாகத்தான் பின்னூட்டங்கள் இருக்கிறது. தனி மனித தாக்குதல்களை எப்படி திண்ணையில் அனுமதிக்கிறார்கள் என்றே தெரியவில்லை.

 

என்னதான் கருத்து சுதந்திரம் என்றாலும் இப்படியா முகம் தெரியாத மனிதரின் முகத்தில் காறி உமிழ்வது?

 

இந்த கட்டுரை திண்ணையில் வெளிவரும் பட்சத்தில் இதன் மீதான எந்த விதமான பின்னூட்டத்திற்கும் நான் பின்னூட்டம் இடுவதில்லை என்று நினைத்திருக்கிறேன். எந்த மாற்றுக்கருத்தையும் ஏற்று கொள்ளும் பக்குவத்தை எல்லாம் வல்ல இறைவன் எனக்கு அருள்வானாக.

 

“பகைவனுக்கு அருள்வாய் நன்னெஞ்சே”

 


அ.லெட்சுமணன்

Series Navigationஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (மூன்றாம் அங்கம்) அங்கம் -3 பாகம் – 19நீர் சொட்டும் கவிதை
author

அ.லெட்சுமணன்

Similar Posts

10 Comments

  1. Avatar
    puthiyamaadhavi says:

    நான் சொல்ல நினைத்தப் பல்வேறு கருத்துகளை உங்கள்
    பார்வையில் வெளிப்படுத்தி இருப்பதற்கு மிக்க நன்றி.

  2. Avatar
    balaiyer says:

    When you say that difference of opinion is a must and it should be accepted, then, why are you making it (Ve. Sa & Ma. Ma)an issue? Thinnai is providing an ideal platform for all kinds of writers. You see, your own writing is a critique on them.

  3. Avatar
    Kavya says:

    உங்கள் நண்பரை மதுரை மாநகரிலோ அல்லது மதுரை, இராம்நாதபுரம், சிவகங்கை மாவட்டங்களிலிலோ வந்து வாழச்சொல்லுங்கள். தன்னை தலித்து என்று சொல்லிக்கொண்டு வீடு வாடகைக்குத் தேடச்சொல்லுங்கள். தன்னைத் தலித்து என்று சொல்லிக்கொண்டு கல்லுப்பட்டி அரசு பள்ளியில் மகனை சேர்க்கச்சொல்லுங்கள்.

    நண்பரே, வாழ்க்கை கசப்பானது. கரடு முரடானது. மேடு பள்ளங்கள்; எவரை அடிமையாக்கிச் சுரண்டுவது என்றலையும் ம்னித வெறிநாய்கள் அலையும் தென்மாவட்டங்களுக்கு உங்கள் நண்பரை வரச்சொல்லுங்கள்.

    திண்ணை சமூகத்தைப் பிரதிபலிக்கட்டும். ஜீரணிக்க முடியா உண்மைகளை வாச்கர்களின் தொண்டைகளில் திணிக்கட்டும். உங்கள் நண்பரைப்போன்ற சோக்குப் பேர்வழிகளை என்றாவது தமிழகத்தைப் பார்ப்ப்பார்கள் என்ற உயரிய நோக்கத்தில் திண்ணையில் கட்டுரைகள் வரட்டும். உண்மையின் உரைகல்லாக உண்மையிலேயே இருக்கட்டும்.

    தன்னை ‘சாமி’ என்று கூப்பிடவில்லையே என்று ஏங்கும் பார்ப்ப்னர்கள் இன்றும் உள்ளார்கள். அதே வேளையில் ஒரு தலித்திய நாவலில் ஒரு கதாபாத்திரம் சொல்வதைப்பாருங்கள்:

    “சித்தப்பாவை யாராச்சும், சின்னக்குட்டையா என்று கூப்பிட்டால் ‘முசுக்’ கென்று கோபம் வரும் அவருக்கு. உட்னை முறைப்பார். சண்டைக்குப் போவார். அண்ணன் சரி சரி என்று போக முடியாது. பெரிய ரகளையே பண்ணி விடுவார். இதற்காக அவரை மட்டும், அவரது தகப்பனார் பெயரைச் சொல்லி இன்னார் மகன் என்பார்கள். கொட்டுக்கார பறப்பயல எப்படி சாமின்னு கூப்பிட முடியும்? என்று புலம்பிக்கொள்வார்கள். சின்ன முனிய சாமிக்குப் பறை அடிக்கத் தெரியும். பீப்பீயும் ஊதுவார். உறுமி வாசிப்பதில் கில்லாடி….”

    மதுரையில் அலங்கோலங்களைல் எழுதத்தால் போகிறேன் திண்ணையில். உங்கள் நண்பரை ஓடாமல் பிடித்துவைத்து வாசிக்கச் சொல்லுங்கள்.

  4. Avatar
    A.K.Chandramouli says:

    திண்ணை வலைத்தளம் பிராமண எதிப்பு மட்டுமேப்ரதிபளிக்க வேண்டும் என்றோ எந்த கட்டுரை யாக இருந்தாலும் அதை இந்த ரீதியில் விமரிசிப்பது மட்டுமே குறிக்கோளாக இருந்தால் திண்ணை வலை தளத்தை புறக்கணிப்பதுதான் சரி.2012 இலும் வெறுப்பு ஒன்றையே குறிக்கோளாக, பின்தங்கிய மக்களை உசுப்பி விடும் வேலையை செய்துவருபவர்களால் சமுதாயம் ஒன்றுபடவே செய்யாது. நிரந்தரமாக பிளவு பட்டே நிற்கும். காவ்யா அவர்கள் இதற்க்கு நீண்ட பதில் கொடுப்பார்கள்.எல்லாம் வேஸ்ட்.

  5. Avatar
    punai peyaril says:

    வெ.சா, ம.ம எழுதிக் கொண்டே இருக்க வேண்டும். காவ்யாவிற்கு தைரியமிருந்தால் ஜாதி இந்துக்களின் நிலையை எழுத வேண்டும். அவர் ஒரு கோழை…. அவர் திண்ணையில் எந்த பின்னூட்டத்திலும் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் தந்ததில்லை… பார்ப்பான் பார்ப்பான் என்கிறாரே, அவர்கள் இளையராஜா என்ற தாழ்த்தப்பட்டவரை இசையின் பிதாமகர் என்று கொண்டாடவில்லையா…? அந்த இளையராஜா ஏன் அம்பேத்கார் பற்றி ஒரு பாடல் கூட இயற்றவில்லை…? இல்லை தலித் தலைவர்கள் ராஜாவை கொண்டாடவில்லை…. ஏனென்றால் திறமையின் உச்சமே இறைவன் என்று கொண்டதால்…. மரியாதை கேட்டு வாங்குவதில்லை… தானாகக் கிடைப்பது , அதை இ.ராஜா நிரூபித்துவிட்டார், பிறர் கஷ்டப்பட்டு சைடு டிராக் வழியே குறைந்த மார்க் வாங்கி விட்டு கணித மேதை ராமானுஜத்துடன் தங்களை கம்பேர் செய்ய வேண்டும் என்கிறார்கள்… சரி , காவ்ய அடுத்த முறை பிளேனிலோ, டாக்சியிலோ போகும் போது, தன் ஜாதிக்காரரை ஓட்டுநராக போடுவாரா…? இல்லை, திறமையானவரையா என்று சொல்ல வேண்டும்… கோட்டா கொண்டு தூக்கி விட முடியும் ஆனால், பிதற்றல் தலைமையாக ஏற்றுக் கொள்ள முடியாது… மாயாவதி போன்றோர் நம்மை ஆள்வார்கள் என்றால் இந்த தேசத்தை வெள்ளையனே ஆண்டு கொள்ளட்டும்….

  6. Avatar
    punai peyaril says:

    காவ்யா, திண்ணியம், மதுரை சிவகங்கை பக்கம் என்ன பாப்பானா கொடுமை ப்டுத்துகிறான்…. தேவர், நாடார்கள் பற்றி எழுதினால்…. எப்படி எழுதுவீங்க… பாப்பான மாதிரி அவன் என்ன முதுகில் பூணுலா வைத்திருக்கிறான்… திருப்பாச்சேத்தி அருவாளுள்ள… அது தான் உங்கள் பயம்…

  7. Avatar
    Kavya says:

    நீண்ட பதில் தேவை. தென்மாவட்டங்களில் தினமும் ஒட்டப்படும் சுவரொட்டிகள் போதும். தலித்துகள் ஒரு வன்முறைச்சக்தியாக எழுப்பப்படும் சுவரொட்டிகள் நம்மைப்பயப்பட வைக்கின்றன. போராட்டம் வலுக்கிறது. மதுரை இஸ் சிட்டிங்க் ஆன் எ டிண்டர் பாக்ஸ் ! Madurai is sitting on a tinderbox. The more the atrocities on dalits in the district, the ferocious the flame of violence to burn ! After the incidents of dalits getting killed in paramakkudi, the grouping of dalits have crossed Madurai district and I was shocked to find it reaching all the neighbouring districts. Decades ago, there was no such grouping.

    போன மாதம் வாடிப்பட்டியில் (வாடிப்பட்டி, கல்லுப்பட்டி இவைகளெல்லாம் மதுரை மாநகர புறநகர சிற்றூர்கள்) ஒரு இயக்கம் தன்னை பதிவு செய்திருக்கிறது. அதன் பெயர் ‘தலித்துகளல்லா மக்களின் நல்வாழ்வு இயக்கம்’ என்பதே. இவ்வியக்கத்தை ஆரம்பித்திருப்போர் தேவர்கள். மதுரை வக்கீல்கள் சிலர் வாடிப்பட்டி சென்று இயக்கத்தினரைச் சந்தித்து தாமும் தேவர்கள்; இயக்கத்தில் இணைய வந்திருக்கிறோம் என பொய் சொல்ல‌, இயக்கத்தினர் தம் இயக்கம் தலித்துக்களுக்கு எதிரானது என்றும் அவர்களை ஒடுககி தம் ஜாதியினரைக் காக்கவே இவ்வியக்கமென்றும் வெளிப்படுத்தினார்கள்.

    பின்னர் வக்கீல்கள் மதுரை வந்து ஆட்சியாளர் சஹாயத்தைச் சந்தித்து ‘எப்படி அரசு இந்த இயக்கத்தைப் பதிவு செய்யலாம்;? அரசாண்மையின்படி இது தீண்டாமையைத்தூண்டும் செயல். ஏனெனின்ல் ‘தலித்துகளை நீக்கி ஒரு நல்வாழ்வு இயக்கம்’ எனத்தலைப்பில் சொன்னால் அது தீண்டாமையாகும். மேலும், அவ்வியக்கத்தினரின் குறிக்கோள் தலித்துகளை ஒடுக்குவதே என்பது நாங்கள் நேரில் கண்டது’ என்று மனுச்செய்தனர்.

    ஆட்சியர் அம்மனுவை விசாரித்துக்கொண்டிருக்கிறார்கள். கல்லுப்பட்டியில் அரசு உயர்நிலைப்பள்ளியில், ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர் ஊக்கத்துடன் மூன்று ஆண்டுகளாக தலித்து மாணவர்களுக்கும் தேவர் மாணவர்களுக்கும் வன்முறை. தி ஹிந்து நாளிதழ் நிருபர் ஆசிரியர் கூட்டமே தேவர் பக்கம்; அவ்வாசிரியர்கள் அனைவரையும் அப்பள்ளியிலிரிந்து நீக்கினால்தான் அமைதி திரும்பும் என எழுதினார். போன மாத சம்பங்கள் இரண்டு இவை.

    பிறஜாதிகளும் இளைத்தவை அல்ல.

    போகட்டும். பிராமண் எதிர்ப்பு என்ற் சொல்லே தவறானத. பிராம்ணீய எதிர்ப்பு என்ற சொல்லே சரி. அண்ணாத்துரை இவ்விரு சொற்களுக்குமுள்ள இடைவெளியை இப்படிக்காட்டினார்: ‘நான் பிராமணர்களை எதிர்க்கவில்லை; ;பிராமணீய்த்தையே எதிர்க்கிறேன்’

    அவர் மட்டுமல்லாமல், பல புகழ்பெற்ற பார்ப்பன்ர்களும் பிராமணீயத்தை எதிர்த்தவர்கள்; எதிர்த்துக்கொண்டும் வருகிறார்கள். வைத்திய்நாத்யைர் மீனாட்சி ஆலயப்பிரவேசம் நடத்தியது என்ன? அது பிராமணீய எதிர்ப்புச்செயலாகும். பிராமணியம் தலித்துகளைத் தடுத்தது. அதை எதிர்க்கக்கூடாதென்று சந்திரமவுலி சொல்கிறார்களா? தன் வாணாளையே பிராமணீய எதிர்ப்புக்குத்தானே செலவிட்டார் நாராயண குரு?

    பார்ப்ப்ன எதிர்ப்பு வரும். வர வேண்டும். எப்போது? பிராமணீயத்திலுள்ள‌ சமூகத்துக்கு எதிரான கொள்கைகளை எதிர்ப்போரை தடுக்கும் பார்ப்ப்னர்களப்பார்க்கும்போது! மீனாட்சி ஆலயப்பிரவேசத்துக்கு ஒரே ஒரு பார்ப்ப்னரைத்தவிர வேறெந்த பார்ப்ப்னர்கள் சேர்ந்தார்கள்? அப்படியென்றால் மதுரைப்பார்ப்பனர்களைத் திட்டுவதில் என்ன தவறு? சங்கரராமன் கொலையில் எத்தனை பார்ப்ப்னர்கள் சங்கரமடாதிபதியை எதிர்த்தார்கள்? மாறாக, தட்டிக்கேட்ட அனைவரையும், இங்கே சந்திரமவுலி பேசுவதைப்போல, ‘பிராமண எதிர்ப்பு’ (அதாவது அவர்கள் ஜாதிக்கு எதிரானதாம் !!) என்றல்லவா வழிகிறார்கள்?

    இப்படிப்பட்டவர்களை எதிர்ப்பதில் எந்த தவறுமில்லை. ஜெயசிரி சங்கர் எழுதினார் சிதம்பர தீட்சிதர்களைப்பற்றி. நான் காளஹஸதி பூஜாரிகளைப்பற்றியோ, சோளிங்கர் பூஜாரிகள் இருவர் பணத்திற்காக பக்தர்கள் முன்னிலையில் சண்டைபோட்டார்கள் என்று எழுதினால் சந்திரமவுலி பார்ப்ப்ன எதிர்ப்பு என்பார். பறையர்களை பச்சையாக திட்டிய கவிஞரை சுட்டிக்காட்டினால், ‘வெட்கமில்லை உனக்கு?’ என்ற பார்ப்ப்னரை எதிர்ப்பதில் என்ன தவறு? மேல்ஜாதி மேல்ஜாதியோடு சேர்ந்து கூட்டுக்களவாளித்தனம் பண்ணும்போது அதைத் திட்டுவதில் என்ன தவறு? கீழ்தட்டு மக்களைப்பற்றி இலக்கியத்தையும் எழுதும் ஆசிரியர்களையும் நக்கல் பண்ணி திண்ணையில் கட்டுரை போடுகிறார் சங்கரநாராயணன் என்பவர். இவரும் ராமசாமியும் எழுதுவதுதான் இலக்கியமாம. இவர்களுக்கு இருப்பது மேல்ஜாதித்திமிரல்லவா? இவர்களை நாம் ஏன் திட்டக்கூடாது? இது பார்ப்ப்ன எதிர்ப்பா?

    நம்பினால் நம்புங்கள். இதுவும் போன மாதச்செய்தியே: திருப்பரங்குன்ற முருகன் கோயில் குருக்களில் ஒருவரை ஆட்சியாளர் டிஸ்மிஸ் பண்ணினார்: காரணம்: துப்புரவுப்பெண்ணிடம் உல்லாசம். மறுநாள் நான் வாசித்ததில், அங்குள்ள பிற குருமார்கள் சொன்னதாவது: ‘அவன் இக்கோயிலில் நிரந்தர பூஜாரியன்று. தாற்காலிகமாக வைத்திருக்கிறார்கள். பலநாட்கள் இப்படி செய்துவந்தான். நல்லவேளை ஆரோ காட்டிக்கொடுத்தரர்கள். இல்லாவிட்டால் தொடர்ந்து செய்துகொண்டிருப்பானே!”: இச்செயலைப்பற்றி எவரேனும் திண்ணையில் எழுதினால், இது பிராமண எதிர்ப்பு என்றல்லா சொல்லப்படும்?இதிலிருந்து என்ன தெரிகிறது? இவர்களுக்கு எங்கே ஜாதி தொடங்குகிறது? எங்கே மதம் தொடங்குகிறது? எனப்து தெரியவில்லை. அண்ணாத்துரையில் வரி அதைக்காட்டுகிறது.

    நிறைய எழுதலாம். சுருங்கச்சொல்ல, எதிர்ப்பு என்பது நீதி, நேர்மை, மனித நேயம் இவற்றின் அடிப்படையில் செய்யப்பட்டால், அங்கே அந்த எதிர்ப்புதான் வரவேற்கப்படவேண்டுமே தவிர, எவருக்கு எப்ப்டி வலிக்கிறது; அய்யோ பாவம் என்றால் அவர்கள் செயலை நிறுத்தமாட்டார்கள். ‘பார்ப்ப்ன எதிர்ப்பு’ என்ற தந்திரமான சொல், அயோக்கியர்களை வாழ வைக்கும் அன்லெஸ் இட் இச் கரெக்டிலி டிஸ்டிங்கைஷ்டு அன்ட் அப்பிளைட் !. Unless you distinguish the phrase from the other phrase ‘Anti brahminism’ and allow us to attack the brahminism whenever and wherever it hurts !

  8. Avatar
    Dr.G.Johnson says:

    In this forum there should be heathy exchange of ideas and not personal attacks using unparliamentary words. Especially religion should not be brought here unnecessarily. Arguments on religious beliefs lead us nowhere as we are not going to change our religion. The arguments on important current issues are very useful to to improve our knowledge. None of us can claim to be experts in all fields. We can learn from one another through the exchange of ideas in this forum in THINNAI…
    ” KATTRATHU KAIMAN ALLAVU, KALLATHATHU ULLAGALAVU “……Dr.Johnson.

  9. Avatar
    Kavya says:

    //உனக்கு தமிழே சரியாக எழுதவரவில்லை, நீ முதலில் அதை மாற்றிக்கொள் என்றெல்லாம் இடுகிறார்கள். அந்த முகம் தெரியாத, தமிழ் சரியாக எழுத வராத மனிதர் சமூக அக்கறை உள்ள நல்ல மனிதராக இருக்கலாம் அல்லவா? தமிழ் எழுத வரவில்லை என்பது என்ன மன்னிக்க முடியாத குற்றமா? மானுடம் வெல்வதற்கு உதவாத எது ஒன்றாலும் ஒரு பயனும் இல்லை. ஒருவர் மாற்றுக்கருத்தை கொண்டிருக்கிறார் என்பதற்காக இவ்வளவு துவேசமா?//

    தமிழைக்காப்பாற்றுவது உங்களின் க்டமை. Not mine.

    ஆங்கில நாளிதழ்கள் ஆங்கிலத்தைப் பிழையில்லாமல் எழுதுகின்றன. தமிழ நாளிதழ்கள் இலக்கணப்பிழைகளோடு வெளியாகின்றன. அவை வெறும் அலட்சியமான பிழைகள்ல்ல். Not trivial errors. பெரிய பெரிய பிழைகள். ஆங்கிலச் சொற்களை அப்படியே தலைப்பில் பெருமையுடன் வெளியிடுகின்றார்கள்.

    ஆங்கில நாளிதழைப்படிக்கும் தமிழர்கள் அவ்விதழ்களில் ஏதேனும் இலக்கணப்பிழைகளிருந்தால் உடனேயே ஆசிரியருக்குக் கடிதங்கள் எழுதி விடுவார்கள். அந்நாளிதழ் மன்னிப்புக்கேட்டுக்கொள்ளும். அதே தமிழர் தமிழ் நாளிதழில் போடப்படும் பிழைகளை – ஒன்றா இரண்டா ஏராளம் ! – ஏற்றுக்கொள்கிறார். தமிழ் தமிழருக்கு இலக்காரம். அதைத்தான் மேலே சொல்லியிருக்கிறார் கட்டுரையாளர் Mr Lakshmanan !

    தமிழ், ஆங்கிலம் – இரு நாளிதழ்களையும் எடுத்தால், எந்த தமிழாசிரியரும் தினத்தந்தியையோ, தினமலரையோ படித்து நும் தமிழ்மொழி அறிவை மேம்படுத்துக என்று மாணாக்கருக்குச் சொல்வதில்லை. ஆனால், ஒவ்வொரு ஆசிரியரும், ஒவ்வொரும் தந்தையும் குழந்தைகளுக்கு சொல்கிறார்கள். இந்துவைப்படி, இந்தியன் எக்ஸ்பிரசைப்படி; உன் ஆங்கிலம் வளம் பெறும்” என்று பொயயா? உண்மையா? தமிழ் தாழ்ந்ததற்கும் ஆங்கிலம் கெடாமல் உயர்ந்ததற்கும் ஆர் காரணம் நண்பர்களே?

    சங்கத்தமிழ் எழுதவியலாமை குற்றமன்று. ஆனால் எளிய பழகு தமிழை அடிப்படை இலக்கணப்பிழைகளில்லாமல் எழுதத்தெரியாதது உங்கள் தாய்மொழியை நீங்கள் மதிகக்வில்லை என்றுதான் எடுத்துக்கொள்ளப்படும். ஏன்? முதல் பத்தியில் சொன்னதைப்பாருங்கள். ஆங்கிலத்தில் விட்டுக்கொடுப்பீர்களா? மாட்டீர்கள். தமிழில் ஏன் இந்த நிலையெடுக்கிறீர்கள் என்று தெரியவில்லை. இதற்கும் மானிடத்துக்கும் என்ன தொடர்பு? தாய்மொழியைக கெடாமல் காப்பாற்றுவது மானிடத்து உதவும் செயல். உருத்தெரியாமல் அதை அழித்துவிடுவது வருங்கால தமிழ்சந்ததியினருக்குச் செய்யும் தொண்டா mR Lakshmanan ?

    தமிழின் முதலும் கடைசியுமான விரோதிகள் தமிழர்களே.

    இன்றைய செய்தி: எல்லாவூர்களிலும் தமிழன்னைச் சிலைகள் நிறுவப்படும் – சட்டசபையில் அமைச்சர் சொன்னார்.

    சிரிக்கட்டுமா? அழட்டுமா Mr Lakshmanan ?

  10. Avatar
    லெட்சுமணன் says:

    அன்பு காவ்யா அவர்களே, அழவும் வேண்டாம் சிரிக்கவும் வேண்டாம். காரைக்குடி கம்பன் மணி மண்டபத்தில் வெகு நாட்களுக்கு முன்பே கட்டப்பட்டுள்ள தமிழ் தாயை ஒரு முறை தரிசித்து வேண்டிக்கொண்டு வாருங்கள். எல்லாரும் ஒழுங்காக தமிழ் எழுதுவார்கள்.

    என் கருத்தின் மீதான மாற்றுக்கருத்தை சிந்தித்து அவை எனக்கு ஒத்துப்போகும் நிலையில் என்னை மாற்றிக்கொண்டு என் கருத்துக்களயும் மாற்றிக்கொள்கிறேன்.

    பின்னூட்டம் இட்ட அனைவருக்கும் நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *