தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

17 ஜனவரி 2021

வாருங்கள்…! வடிவேலுவை மேடை ஏற்றலாம்

Spread the love

வடிவேலு…நகைச்சுவை நாயகன்..!
அவரது உடலசைவும் முக பாவனையுமே போதும்…!
தமிழ் அகராதியில் அவர் சேர்த்த வார்த்தைகள்…அலங்காரங்கள் தான் மேல்தட்டு வகுப்பிலிருந்து அனைவரும் ஒரு முறையாவது அந்த வார்த்தைகளை உபயோகப் படுத்தியிருப்பார்கள்  அல்லது நினைத்தாவது பார்த்திருப்பார்கள். சார்லி சாப்ளின் போல் தன்னை மட்டும் பழித்து வேடிக்கை காட்டும் வித்தகன் வடிவேலு .
அவரது அத்தனை படத்திலும் இதுவரை அவர் மற்றவரைப் பழித்தோ, இழிவான வார்த்தைகள் பேசியோ..நம்மை சிரிக்க வைத்ததில்லை. ஆனால் கவுண்டமணி முதல் விவேக் வரை சந்தானம் வரை….மற்றவர்களை விமரிசித்துத் தான் நமக்கு சிரிப்பை வரவழைக்க  முயற்சி செய்வார்கள். வடிவேலு இதற்கு விதிவிலக்கு. மேலும் தற்போது
நகைச்சுவை நடிகரை மிளிரிக் கொண்டு இருக்கும் பாஸ்கர் அவர்களும் வடிவேலு போல் தான்.

சிரிக்க வைப்பது என்பது மிகப் பெரிய வரம். இன்றைய இயந்திர காலகட்டத்தில் மனிதன் மனம் சிறிதாவது இளகி சிரிக்க வேண்டும்.ரத்த அழுத்தம்….அதிகப் படியான கவலை,.,இதயக்கோளாறு இவையனைத்தும் கட்டுக்குள் கொண்டுவரும் ஒரே மருந்து சிரிப்பு தான்.
அனைவரையும் தனது அசட்டுத் தனத்தால் , நடிப்பால், சேஷ்ட்டகைகளால்…சிரிக்க வைத்த  மாபெரும் கலைஞனை இன்னுமாத தள்ளி வைப்பது.?
தமிழ் சினிமாவில் வடிவேலுவோடு நடிக்காத நடிகர்களே இல்லை….யாருக்குமே தோன்றவில்லையா? திரையுலக ஹீரோக்களில் நிஜ ஹீரோ ஒருவர் கூடவா…இல்லை…நண்பா…நீ வா என்று சொல்ல..?
அவர் இருக்கும் போதே அவரை நாம் இழக்கலாமா? யாருடைய சுய நலத்திற்க்காக இந்தப் பொதுநலம் புறக்கணிக்கப் படுகிறது. காலத்தால் அழியாதது அவர் நடிப்பு.
இப்போதே மற்ற மாநிலத்தவறேல்லாம் கேட்க ஆரம்பித்து விட்டார்கள். அமீர்கான் கூட சொன்னாராம்….ஏன்..இப்போது வடிவேலுவைக் காணவில்லை  என்று..? அவருக்கு பாஷையே தேவையில்லை..வேறு மாநிலத்தில் கூட பணியாற்றலாம் என்று திறமையை எங்கு கண்டாலும் அதைத் தட்டிக் கொடுத்து மிளிரச் செய்தவர் எம்.ஜி.ஆர்..அவர்கள்.இன்று எம்.ஜி.ஆர். வழில் ஒருவர் கூட இல்லையா? கட்சிகளின் சுயநலத்திற்காக ஒரு கலைஞனைத் தள்ளி வைப்பது மிகப் பெரிய குற்றம்
அதத் தமிழ் நாடு செய்வது மாபெரும் கேவலம்.
சசிகலாவை ஜெயலலிதா மன்னிக்கலாம்..வடிவேலுவை மன்னிக்கக் கூடாதா?
ஒன்று திரளுங்கள்….என்னைப் போல் பலரும் மறுபடியும் அவரின் விஸ்வரூபம் காண ஆவலோடு இருக்கிறார்கள்.
-டாக்டர்.சுபா.

Series Navigationபணம்ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (மூன்றாம் அங்கம்) அங்கம் -3 பாகம் – 21

17 Comments for “வாருங்கள்…! வடிவேலுவை மேடை ஏற்றலாம்”

 • paandiyan says:

  எதோ வடிவேலு விசயத்தில் ஜெயலலிதாவின் மறைமுக மிரட்டல் திரைபதிர்க்கு இருபது போல இருகின்றது இந்த கட்டுரை . ஏன் அவர் பிரசாரம் பண்ணிய கட்சி இன்றும் கூட திரைப்பட வியாபாரத்தில் கோடி.. இல்லை .. கொடி பரகின்றார்கள் .அவர்கள் வடிவேலுவை ஏன் உபயகோபடுதவில்லை. வடிவேலு அரசியல் போனது பெரும் தவறு அதயும் மீறி பிரசாரம் என்று உளறியது மிக தவறு . இந்த தண்டனை வேண்டியதுதான் ….

  • subha says:

   Thanks for the reply.He did make a mistake by plunging into politics. But such a great comedian,who made everybody laugh at least once does not deserve this treatment.

 • punai peyaril says:

  தேவையில்லை… நாகேஷ், சந்திரபாபு, ஐஸ்வரி வேலன், தே.சீனிவாசன்,டணால் தங்கவேலு, சோ, கவுண்டன்மணி, செந்தல், விவேக் என்ற நீண்ட பட்டியலில் ஒரு பெயரே வடிவேலு…. அவரும் கடித்துக் குதறிய காமெடிகள் உண்டு. காலம் யாரையும் இழப்பதில்லை… ஓடும் நதிபோல் தான் போகும் பாதையை அது கடந்து செல்லும்… வடிவேலு நிலைக்கு ஜெ காரணமில்லை… இதோ ஜெ , விஜயை தூக்கி எறிஞ்சாச்சு… உடனே விஜய்க்கு என்ன மார்கெட்டா போச்சு… இங்கு , தற்போது சந்தானம் காட்சிக்கு தியேட்டர் அதிரடி அடிக்கிறது. அப்ப , ஸ்டாலின் மகன், ஏன் வடிவேலுக்கு வாய்ப்பு தரவில்லை….? இது வியாபாரம்…. வடிவேலு பாணியில் இந்த கட்டுரையைப் பற்றிச் சொல்வதென்றால்…. “சிறு பிள்ளத் தனமால்ல இருக்கு…?”

 • smitha says:

  Vadivelu’s comedy had reached a saturation point.

  How long can we see him getting beaten up always? That too for the silliest/flimsiest of reasons?

  He dug his own grave by campaigning for the DMK in the assy elections.

  • K A V Y A says:

   If saturation point s the criterian, many actors wd have burnt out w/in a few years and got lost.

   True, one exhausts oneself; esp. an actor in the sense he gets associated with a particular style w/in a few years. Still they can continue provided they essay different roles in the same style. Chaplin and others have done. Shivaji has done. Y not vadivelu? Keep the style but apply it to different and exciting roles.

 • ruthraa says:

  டாக்டர் சுபா அவர்களே

  உங்கள் கட்டுரை உண்மையில்
  யாருக்கோ
  ஒரு மருத்துவ ஆலோசனை
  தந்தது போல் தான்
  இருக்கிறது.
  எல்லாம் இந்தப்பாழாய்ப் போன‌
  தேர்தலால் வந்தது.
  இல்லாவிட்டால்
  அப்படியொரு நகைச்சுவை மேதையை
  தூசியில் எறிவார்களா?

  நகைச்சுவை மட்டும் அல்ல‌
  தேவர் மகன்
  சங்கமம்
  போன்ற படங்களில்
  அநாயசமாக
  நடிப்பின் இமயத்தைத்
  தொட்டுவிட்டு வந்தவர்.

  அம்மா என்றால் அன்பு என்று
  அம்மாவே பாடியிருக்கிறார்கள்.
  அம்மா என்றால்
  வம்பு ஆகலாமா?
  அய்யா கூட அம்போ என்று
  விட்டு விட்டாரோ என்னவோ?

  வ‌டிவேலுவெல்லாம் வேண்டாம் என்று
  வ‌ந்திருக்கிற‌ ம‌ட‌ல்க‌ளைப்பாருங்க‌ள்.
  ம‌க்க‌ள் தில‌க‌ம் பாட்டு மாத்திர‌ம் போதும்
  ஓட்டுக‌ளை அள்ள‌.
  அவ‌ர் இன்று மீண்டும் உயிரோடு வ‌ந்தால்
  அந்த‌க் கோமானையும்
  “கோமா”வில் த‌ள்ளிவிடும்
  கோமாளிக‌ளே இங்கு அதிக‌ம்.

  தனிப்பட்ட ரசிகர்கள்
  என்ன செய்ய முடியும்
  புலம்புவதை தவிர.

  வெள்ளை உள்ளத்தோடு தான்
  மக்கள் திலகத்தின் பாட்டுகளைப் பாடினார்.
  பாவம்
  மக்கள் திலகமே
  ஒரு அடையாளத்தை மட்டும் தானே
  மக்களிடம் காட்டினார்.

  ஜனநாயகமோ அடையாளம் இழந்து
  வாக்குப்பெட்டிகளை வெறும்
  பெட்டிகளாய் காட்டி
  போக்கு காட்டியே
  பொன்விழாவெல்லாம்
  கொண்டாடி விட்டது…இனி
  படம் எடுக்கும்
  பணாதிபதிகளும்
  இயக்குநர்களுமே
  ம‌ன‌ம் வைக்க‌வேண்டும்.
  வ‌சூல் ம‌ங்கையின்
  க‌டைக்க‌ண் முன்னே
  க‌லைக்க‌ண் எல்லாம்
  க‌ண்ணிழ‌ந்து நிற்ப‌தே
  க‌ண்க‌ண்ட‌ காட்சிக‌ள்.

  ===============================================ருத்ரா.

 • punai peyaril says:

  ருத்ரா இது புதுக்கவிதையா..? படி கவிதையா…. வாக்கியமாக எழுதுங்களேன், புண்ணியமாகப் போகும்..

 • jayashree shankar says:

  டாக்டர் சுபா அவர்களுக்கு,
  வணக்கம்…
  வடிவேலு…இருக்கும்போதே அவரை நாம் இழக்கலாமா..?
  என்னும் வரிகள் யோசிக்க வைத்தது…

  எத்தனையோ நகைச்சுவை நடிகர்கள் வந்த போதிலும்….சிறுவர்கள் முதல்
  பெரியோர்கள் வரை…குறைந்த காலத்தில் பெரிய அளவில் ஒரு கலக்கு கலக்கியவர்…இன்னும் வீட்டுக்கு வீடு
  தொலைக்காட்சியில் சிரி…சிரி…என்று….சிரிக்க வைத்துக் கொண்டிருக்கும்
  அவரது திரைப்பட காட்சிகள்…பல சானல்களில்.

  “அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா….!”…என்று எடுத்துக் கொள்வார்…
  இல்லையேல்…இனிமேலாட்டும்…… சான்சு வரும்…ஆனா..வராதுன்னு…காத்திருப்பார்.
  கைப்புள்ள ……..நீங்க ரொம்ப நல்லவரு……எம்புட்டு அடிச்சாலும் தாங்குராருன்னு….
  தாங்கிக்க வேண்டியது தான்…” இருக்கும் இடத்தை விட்டு…இல்லாத இடம் தேடி…..!!!

  இதுவும் ஒரு பாடம் தான். .வடிவேலு மீண்டும் வருவார்.

  ஜெயஸ்ரீ ஷங்கர்..

 • ruthraa says:

  அன்புள்ள புனைபெயரில் அவர்களே!

  நீங்களே சொல்லிவிட்டீர்கள்.நன்றி.”படி”த்தால் புரியக்கூடிய கவிதை தான்.(அடம்)பிடித்தால் புரியாது.

  அன்புடன்
  ருத்ரா

 • rees says:

  எத்தன கோடிகள திருடினாலும் ஆழும் கட்சி அலுத்துப் போனா எதிர்க்கட்சிய ஆட்சிக்கு கொண்டு வரலாம் ..கொஞ்சம் தப்பா பேசிட்ட சின்னபுள்ள தண்டன அனுபவிக்கனும் …நல்லா இருக்கு பயபுள்ளகளோட நீதி …சின்னபுள்ள தனமா இல்ல ?

 • smitha says:

  Vadivelu’s time is up, it is now santhanam.

 • Truth says:

  Vadivelu is a great comedian no doubt and has acting skills also. What is still a mystery is: HOW AND WHY DOES TAMIL PEOPLE CONSIDER BEATING UP OF SOMEONE AS COMEDY and laugh about it? Every comedy scene has to end in getting beaten up. This rotten culture must go for good.

 • suganthi says:

  வடிவேலு மக்களிடமிருந்து கற்றுக்கொண்டு வந்த திறமைசாலி கலைஞன்.எல்லா தரப்பு மக்களிடமும் தன் நகைச்சுவை பாதிப்பை ஏற்படுத்தியவர்.கண்டிப்பாக திரும்ப வருவார்.

 • இளங்கோ says:

  வரவேற்கிறேன். வடிவேலு தனித்திறமையுள்ள நடிகர், அது நகைச்சுவையானாலும் சரி, குணச்சித்திர வேடமானாலும் சரி. ஏற்கனவே போன சோடையில் வண்டி ஒட்டியவரல்ல அவர். தனிப்பாதை கண்டவர்.

  அவர் தவறு செய்தால் அவருக்கு தண்டனை தர வேண்டும். ரசிகர்களுக்குமா? அவர் மீண்டு(ம்) வர வேண்டும். நமக்கு அரசியல் வேண்டாம். அவர் வந்தால் போதும்.

 • புனைப்பெயரில் says:

  காலம் யாருக்கும் காத்திருப்பதில்லை… போனவன் போனாண்டி.. இனி வந்தாலும் நிறைய மாறிப் போச்சுடி.. நாகேஷையே மறந்த திரை கறுப்பு நாகேஷ்க்காகவா காத்திருக்கும்… பழைய கழிவோம்…. புதியன புகுவோம்…


Leave a Comment

Archives