புதுக்கோட்டை ஞானாலயாவுக்கு நிதி உதவி வழங்க விரும்புவோருக்கு:

This entry is part 16 of 40 in the series 6 மே 2012

 

பாரத நாட்டின் எந்தப் பகுதியிலிருந்தாகிலும் இணையத்தின் வழியாக NEFT மூலம் புதுக்கோட்டை ஞானாலயாவுக்கு நிதி உதவி வழங்க விரும்புவோருக்கு:
நூறு ஆண்டுகளுக்கும் முற்பட்ட தமிழ் நூல்களையும் இதழ்களையும், சில முக்கிய ஆங்கில நூல்கள், இதழ்கலையுங்கூடச் சேமித்து வைத்து, ஆய்வாளர்களுக்குப் பேருதவி புரிந்து வரும் புதுக்கோட்டை ஞானாலயா ஆய்வு நூலகம் மேலும் சிறப்பாகப் பயன்படும் பொருட்டு இணையத்தின் வழியாகவே NFET  மூலம் நிதி உதவி வழங்க விரும்புவோர் பின்வரும் விவரங்களைக் குறித்துக் கொள்ளுமாறு வேண்டுகிறேன்:
Account Holder: B. Krishnamoorthy
SB Account No. 1017047 Name of the Bank: UCO Bank Branch: PUDUKKOTTAI (Tamilnadu, India) IFS Code: UCBA0000112
இவ்வாறு செலுத்தியபின் அன்பு கூர்ந்து ஞானாலயாவுக்கும் தகவல் தெரிவியுங்கள்: அவர்களின் மின்னஞ்சல் முகவரி: gnanalayapdk@gmail.com
அஞ்சல் வழி அனுப்புவதாயின், B. கிருஷ்ணமூர்த்தி,  6, பழனியப்பா நகர், திருக்கோகர்ணம், புதுக்கோட்டை 622 002 தமிழ்நாடு என்ற முகவரியைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
-மலர்மன்னன்

Series Navigation’சாலையோரத்து மரம்’சித்திரைத் தேரோட்டம்…!
author

மலர்மன்னன்

Similar Posts

Comments

  1. Avatar
    மலர்மன்னன் says:

    மே 07 ஞாயிறு காலை ஞானாலயா கிருஷ்ண மூர்த்தி என்னுடன் பேசினார். அதிகரித்துவரும் நூல்கள், புத்தகங்களைப் பாதுகாக்க ஞானாலயாவை விரிவு படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருப்பதைக் குறிப்பிட்டார். நான் அங்கு சென்றிருந்த போதேகூடப் புதிதாக வரும் பல இதழ்களூம் நூல்களும் இடப்பற்றாக்குறை காரணமாக மாடிப் படிக்கட்டுகளிலும் அடுக்கி வைக்கப்படிருப்பதைக் கண்டேன். பாதுகாப்பாகத்தான்! இன்றைய நூல்களும் இதழ்களும்கூட நாளை தேடப் படவேண்டியவை தாம். ஆகவே அவற்றையும் முறையாகப் பாதுகாப்பது அவசியமே. வீட்டை விரிவு படுத்தி வாடகைக்குவிட்டுச் சம்பாதிக்கவே பலரும் விரும்பும் இந்நாளில் கிருஷ்ண மூர்த்தியும் டோரதி கிருஷ்ண மூர்த்தியும் இவ்வாறு தமது இடத்தைப் பொது நலன் பயன்பாட்டுக்கு இலவசமாக வழங்குவது நம் அனைவரின் பாரட்டுக்கும் ஆதரவுக்கும் உரியது அல்லவா? ஞானாலயா ஓர் இலவச நூலகமே. அவர்கள் நுழைவுக் கட்டணம் ஏதும் விதிக்கவில்லை. உறுப்பினர் கட்டணமும் இல்லை. நுல்களையோ இதழ்களையோ பிரதி எடுத்துக்கொள்ள விரும்புவோரிடம் மட்டுமே அதற்குரிய கட்டணம் பெறுகிறார்கள். ஆகவே கூடிவரும் புத்தகங்கள், இதழ்களைப் பாதுகாக்கும் பொருட்டு ஞானாலயாவின் விரிவாக்கத்திற்கும் நாம் உடனடியாக நம்மாலியன்ற உதவியைச் செய்வோம். வீட்டில் சேர்ந்துவிட்ட நூல்கள்/இதழ்கள் இனித் தேவையில்லை எனவும் இடத்தை அடைத்துக்கொண்டிருப்பதாகவும் கருதுவோர் அவற்றை ஞானாலயாவுக்கு அன்பளிப்பாகக் கொடுக்கலாம். தரமான நூல்கள்/இதழ்களை!

    அன்புடன்,
    மலர்மன்னன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *