சான்ஸ்கீரிட் டமிழுக்கு தம்பியா? அல்லது அண்ணா ? இல்ல இரண்டுத்தும் என்னதான் ஆச்சு ? தாயாதி சண்டையா? இல்லான மூத்த தாரத்து மக்களா? சக்களத்தி சண்டையா? அன்னிக்கி இன்ன டானா ? அந்த கச்சி மீட்டிங்கிலே வடமொழி ஒழிப்போன்னு குரல் உட்டுகினு கிறான் பழக்கடை பாலு. தமிழன் டிவி யில்ல என்ன சொல்றன்னு சம்ஸ்கிருதம் கலக்கமா பேசனும்கிறாண் !, வடமொழி அது இதுனு ரவுஸ் உடறானுங்க. அவன் இன்னடான கோயிலுல டமில்ல சாமிக்கு பாட்டு படிக்க கூடாதாம்.. […]
வணக்கம் நண்பரே மலைகள்.காம் malaigal.wordpress.com இலக்கியத்திற்கான இணைய இதழ் மலைகள்.காம் முதல் இதழ் வெளி வந்துவிட்டது மலைகள் முதல் இதழில் ஆத்மார்த்தி,பாவண்ணன்,கலாப்ரியா,ரவிக்குமார்,வித்யாஷங்கர், ந.பெரியசாமி,சம்பு… ஆகியோரின் படைப்புகளுடன் வெளி வந்துவிட்டது
இடம்: Don Bosco Institute of Communication Arts (DBICA), டைலார்ஸ் சாலை, கீழ்ப்பாக்கம் நாள்: மே 11 & 12 நேரம்: காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை. அனுமதி: அனைவருக்கும் இலவசம். பெரிதாக பார்க்க படத்தின் மீது சொடுக்கவும் வணக்கம் நண்பர்களே தமிழ் ஸ்டுடியோவின் நீண்ட நாள் கனவான சிறுவர்களுக்கான திரைப்பட திருவிழாவை இந்த ஆண்டு நடத்துவதில் முதலில் பெருமை கொள்கிறோம். மாற்று திரைப்படங்களுக்கான ரசனை சிறு வயதில் இருந்தே […]
Samaskritam kaRRukkoLvOm 57 சமஸ்கிருதம் 57 சென்ற வாரம் अपेक्षया (apekṣayā) என்ற சொல்லை இரண்டு பொருள்களுக்கிடையில் ஒரு குறிப்பிட்ட பண்பைக் கொண்டு ஒப்பிடும்போது உபயோகிக்கவேண்டும் என்று அறிந்து கொண்டோம். கீழேயுள்ள கதையை உரத்துப் படிக்கவும். कः बलवान्? पुरातनकाले गङ्गातीरे एकः आश्रमः आसीत्। तत्र याज्ञवल्क्यः नाम महर्षिः वसति स्म। सः श्येनमुखात् पतिताम् एकां मूषिकां दृष्टवान् | करुणया सः तां मूषिकाम् आश्रमं प्रति नीतवान् | तत्र […]
அன்று அம்மாவை எப்படியும் பார்த்து விடுவது என்று மனதில் உறுதியெடுத்துக் கொண்டான் கணேசன். இப்படித்தான் ஒவ்வொரு வாரமும் நினைத்துக் கொள்கிறான். ஆனால் போக முடியவில்லை. ஏதாவது வேலைகள் இருந்து கொண்டே இருக்கிறது. வேலைகளோடு வேலையாய், அதையும் ஒரு வேலையாய்க் கருதித்தானே சென்றாக வேண்டும். அப்படி ஒரு வேலையாய் நினைத்துச் செய்வதானால,; போக, பார்க்க என்று வருவதுதானே அது. அதில் விருப்பமில்லை இவனுக்கு. போனால் அம்மா கூட ஒரு நாள் முழுக்க இருந்தாக வேண்டும். இருக்க வேண்டும். அப்பொழுதுதான் […]
மக்களின் அன்றாட வாழ்வில் முக்கிய இடம் பெறுவது உணவு. இந்த சோற்றுக்காகத்தான் இத்தனை பாடு என்று எத்தனையோ ஏழை எளிய ஜனம் அனுதினமும் போராடிக் கொண்டிருக்கிறது. “ஒரு சாண் வயித்த நெப்புறதுக்கு என்ன பாடு படவேண்டியிருக்கு?” என்று புலம்புவதைக் கேட்டிருக்கிறோம். வெறும் சோறும் பச்சை மிளகாயும், வெறும் சோறும் வெங்காயமும் என்றும் நீரில் கலந்த, நீரில் கரைத்த சோறு என்றும் குடிபடைகள் பிழிந்து பிழிந்து உண்டு ஜீவிதம் கழிப்பதை உணர்ந்துதான் இருக்கிறோம். இதற்கு ஒரு படி மேலே […]
மலர்மன்னன் ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனி ஆட்சியின்போது சென்னை மாவட்ட கலெக்டராகப் பணியாற்றிய ஆங்கிலேயர்களில் ‘சென்னப் பட்டணத்து எல்லீசன் என்பவன் யானே’ என்று தன்னை அறிமுகம் செய்துகொண்ட ஃப்ரான்சிஸ் வைட் எல்லிஸ் (Francis Whyte Ellis) முக்கியமானவர். சென்னையில் திருவல்லிக்கேணி-திருவட்டீஸ்வரன்பேட்டையிலிருந்து அண்ணா சாலைக்குச் செல்லும் எல்லிஸ் சாலை நமக்கு நினைவுறுத்து வது இவரைத்தான் கிழக்கிந்தியக் கம்பெனியில் பணியாற்றுவதற்காக 1798-ல் இந்தியா வந்த எல்லிஸ், பல்வேறு பொறுப்புகளில் இருந்த பிறகு 1810-ல் சென்னை மாவட்டக் கலெக்டர் பதவியை ஏற்றார். தென்னிந்திய […]
(கட்டுரை: 78) சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா கண்ணுக்குத் தெரியாத கருந்துளை கதிர்க் கருவிக்குப் புலப்படும் ! காலவெளிக் கருங்கடலில் பாலம் கட்டுபவை கோலம் வரையா தவை கருந்துளைகள் ! கதிர்கள் வீசுபவை பிரபஞ்சக் கலைச் சிற்பியின் களிமண் களஞ்சியம் ! கருந்துளைக் குள்ளே ஒளிந்திருக்கும் ஒரு புதிய பிரபஞ்சம் ! ஒளி உறிஞ்சும் உடும்புகள் ! விண்மீன் விழுங்கிகள் ! காலாக்ஸி நெய்யலாம் ! பிரபஞ்சத்தை வயிற்றில் சுமக்கும் ஒரு பூதக் […]
மணிக்கூண்டு சிக்னல். கடைவீதியின் மிக முக்கியமான ஒரு நாற்சந்தியின் சிக்னல். ஈரோட்டின் ஜவுளிச் சந்தை கூடுமிடத்திற்கு வெகு சமீபம் என்பதாலும், அன்று சந்தை நாள் என்பதாலும் கலகலவென்று தெருவெல்லாம், சரக்கு வண்டிகளும், இருசககர, நான்கு சக்கர வாகனங்களும் அணிவகுத்து சென்று கொண்டிருந்தன. சிக்னலில் சிவப்பு வண்ணம் வந்து அந்த மூன்று நிமிடம் காத்திருக்கும் பொறுமை கூட இல்லாமல் சிக்னல் விழுவதற்குள் அந்த இடத்தைக் கடந்துவிட வேண்டும் என்ற அவசரம் அத்துனை பேருக்கும் இருந்தது. எத்துனை விதமான மனிதர்கள், […]