தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

9 ஆகஸ்ட் 2020

ஈரக் கனாக்கள்

எம்.ரிஷான் ஷெரீப்

Spread the love

ஈரம் கசியும் புல்வெளியெங்கிலும்

நீர்ப்பாம்புகளசையும்

தூறல் மழையிரவில் நிலவு

ஒரு பாடலைத் தேடும்

வௌவால்களின் மெல்லிய கீச்சிடலில்

மூங்கில்கள் இசையமைக்கும்

அப் பாடலின் வரிகளை

முகில்கள் மொழிபெயர்க்கக் கூடும்

ஆல விருட்சத்தின்

பரந்த கிளைக் கூடுகளுக்குள்

எந்தப் பட்சிகளின் உறக்கமோ

கூரையின் விரிசல்கள் வழியே

ஒழுகி வழிகின்றன

கனாக்கள்

நீர்ப்பாம்புகள் வௌவால்கள்

இன்னபிறவற்றை

வீட்டுக்குள் எடுத்துவரும் கனாக்கள்

தூறல் மழையாகிச் சிதறுகின்றன

ஆவியாகி

பறவைகளோடு சகலமும் மௌனித்த இரவில்

வெளியெங்கும்

– எம்.ரிஷான் ஷெரீப்

Series Navigationபங்குபாரதிதாசனின் குடும்பவிளக்கு

2 Comments for “ஈரக் கனாக்கள்”

 • jayashree shankar says:

  கவிஞர் ரிஷான் ஷெரிப் அவர்களுக்கு,

  இரவின் இயற்கை…நிகழ்வுகள்..
  அத்தனையும்…எளிமையாக
  பெட்டிக்குள் பாம்பாக அடக்கி…
  கனவுகளை தாளாரமாக…
  பறக்க வைத்த கவிதை அருமை..
  எப்போதும் போலவே இதுவும்
  முத்திரை பதிக்கிறது…

  ஜெயஸ்ரீ ஷங்கர்…

 • சோமா says:

  இரவுமழையோடு கூடிய நீர்ப்பாம்புகள் வௌவால்கள் அதனூடே கனவுகள்…ரம்மியம். ஆனால் வௌவால்களின் கீச்சிடலை மெல்லியது என்று சொலவது டூ மஸ்…:-)


Leave a Comment

Archives