முல்லைப் பெரியார் அணை இனப் பற்றா? இன வெறியா?

26
0 minutes, 0 seconds Read
This entry is part 32 of 41 in the series 13 மே 2012

(குறிப்பு: கௌதம சித்தார்த்தன், முல்லை பெரியாறு பிரச்சனை குறித்து என்னுடைய கருத்தை பதிவு செய்து தரச் சொல்லிக் கேட்டிருந்தார். பல பேருடைய கருத்துக்களும் திரட்டி தொகுப்பு புத்தகக் கண்காட்சியில் கொண்டு வரப் போவதாகவும், ஆனால் அது என்ன காரணத்தினாலோ நூலாக வடிவம் பெறவில்லை எனது கட்டுரை இதோ)
பட்டி வீரன் பட்டியில் வசிக்கும் 99 வயதான எனது பாட்டனாரான நா. தில்லைக் கோவிந்தன் 2005 இல் சந்தித்த போது மணல் திருட்டு , மணல் கொள்ளை என மணல் பிரச்சனையாகத் தொடங்கிய கால கட்டம் அப்போது அவர் காமராஜர் கால கட்டத்தில் வைகை அணைகட்டிய போது நடந்த விசயங்களை நினைவு படுத்திப் பேசும் போது, இன்றைய நடைமுறைச் சிக்கல்களையும் இன்று தண்ணீர் மணல் , விவசாயம் என்று எல்லாவற்றிலும் பற்றாக்குறைகளும் எனக்கு உனக்கு என்று சண்டைகளும் வருவதைக் குறித்துச் சொல்லி “ ”அணையைக் கட்டினார்கள் அடிவயிற்றில் அடித்தார்கள்” என் தலைப்பிட்டு எழுதிய கட்டுரையை என்னிடம் தந்தார். அது அப்போதைய இணைய இதழ்களில் வெளி வந்தது அதில் சொல்லிய ஒரு வரி இன்று என் நினைவுக்கு வருகின்றது
”அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளின் Ego தான் அணைகள் கட்டப்பட்டன ”.
இதே வசனம் இன்று நிதர்சனமாகி வருகின்றது. கட்டப் படுவதற்கும் உடைக்கப் படுவதற்கும் கூட அதே ஈகோதான் இன்று காரணமாக இருக்கின்றது.கேரள பகுதி மக்களின் பிரதி நிதியாகவோ தமிழக மக்களின் பிரதி நிதியாகவோ இல்லாது நீர் நலமும் , நில நலமுமாக யோசிக்கின்ற பொது நலவாதிகளோ நாம் நம் இன மக்களுக்கு எதிரானவனாக சித்தரிக்கப் பட்டு விடுவோமோ என்று பயந்து தான் வார்த்தை பேச வேண்டி இருக்கின்றது.அல்லது அப்படியான பொதுநலவாதிகளின் குரல்கள் அமுங்கிப் போய் இனப் பற்றென்பதன் பேரில் இனவெறியை தூண்டிவிடும் தலைவர்கள் தான் பகுத்தறிவு பாசறையில் பிரகாச வெளிச்சத்தில் இன்று இருக்கின்றார்கள்
இன்று கம்பம் தேனி , என கேரள எல்லையோர பகுதிகளில் தொடர்ந்து மக்கள் சகஜ வாழ்வு பாதிக்கப் பட்டு உள்ளனர். தெருவில் இறங்கி ஒருவரை ஒருவர் அடித்துக் கொள்ளும் மனநிலை உருவாகி வருகின்றது எல்லா விசயத்தையும் பகுத்தறிவுப் பாசறையிலிருந்து கிளை பிரிந்தவர்கள் எல்லாருமே தீர்வு நோக்கி அறிவுத் தளத்தில் செயல்படுவதை விடுத்து உணர்வுக் கொந்தளிப்பில் ஈடுபடுவதற்கு வழிகோலுகின்றனர்.தமிழ்நாட்டில் ஏதோ ஒரு மலையாளியை இதற்கு பலியாக்குவதும், கேரளாவில் தமிழர்களை விரட்டியடிப்பதும், கவன ஈர்ப்புக்காக இனமானத்தோடு இளைஞர்கள் தீக்குளிப்பதும், அதற்கு ஓடிச் சென்று தலைவர்கள் மாலையணிவித்து இறந்தவன் மேலும் தன் மேலும் வெளிச்சத்தைப் பாய்ச்சிக் கொள்வதும் ஒரு நாளும் பிரச்சனைக்குரிய தீர்வாகப் போவதில்லை.
எனக்கு தெரிந்த இலங்கை நண்பர்கள் நமது கேரளாவில் தமிழர்கள் விரட்டியடிக்கப் பட்டர்கள் என்று செய்தி தெரிந்ததும் குறுந்தகவலில் விசாரித்தார்கள். ஏற்கனவே இனவாத பிரச்சனையால் பாதிக்கப் பட்டு இன்று ஏதிலிகலாக வாழ்பவர்களுக்கு தமிழனின் சொந்த நாட்டிலுமா இந்த நிலைமை என்ற கேள்வியும் பயமும் வருவது சரிதான் ஆனால் அது அதீதமான பயம். அந்த பயம் தமிழர்களிடையே நிலைபெறச் செய்ய இனமான தலைவர்கள் பாடுபடுகின்றார்கள் . ஒரு நல்ல தலைவன் தம் மக்களை அறிவு வழியில் நகர்த்த வேண்டுமே அல்லாது உணர்வு வழியில் திசை திருப்பி விடுதல் சரியில்லை. தலைவனுக்காக தீக்குளிக்க பழக்கிய பகுத்தறிவுக் கட்சிகளால் வளர்ந்த அரசியல் அபாயகரமானது.
அதேபோல், குழந்தையை காப்பகத்தில் அல்லது விடுதியில் வளர அனுமதித்த பெற்றோர்கள் சிலருக்கு குழந்தை வளர்ப்பு நம்முடைய பொறுப்பில் இல்லையே என்று எப்பவும் குற்ற உணர்வு இருக்கும். அவ்வாறு இருப்பவர்கள் அக்குழந்தை வீடு வருகின்ற நேரம் கொடுக்கின்ற கூடுதல் கவனிப்பு எல்லாவிதத்திலும் கெடுதலாகவே அமையும்
இன்றைய பொது சனமும் எல்லா நேரமும் குற்ற உணர்வுடனேயே வாழ கடமைப் பட்டுள்ளது
தப்பை சரியா செஞ்சா தப்பில்லை
50 சதவீதம் பொய் தொழிலில் தப்பில்லை
லஞ்சம் தவறு என்று தெரிந்த போதும், கெட்டிக் காரத் தனமாக வேலையை முடித்தேன் என்று பெருமைப் பட்டுக் கொள்ளுதல்
என எல்லா தவறுகளையும் நியாயப் படுத்தி நியாயப் படுத்தி வாழ நேர்ந்த குற்ற உணர்வை மறைக்க சமூக பொறுப்புள்ளவர்களாக காட்டியாக வேண்டிய மனோநிலைக்கு பொது சனம் தள்ளப் பட்டிருக்கின்றது.
அந்த மாதிரியான போலி சமூகப் பொறுப்புணர்வு இன்று எல்லாரிடத்தும் தலை தூக்கியுள்ளது மிகவும் ஆபத்தானது.
மூன்றாவது மீடியா எனப் படும்பத்திரிக்கை தொலைக் காட்சி கள்
முன்பெல்லாம் ஒரு தொலைக் காட்சி அதில் குறிப்பிட்ட மணி நேரம் மட்டுமே செய்தி, வெகு சில பத்திரிக்கைகளே மக்கள் அபிமானத்தோடு உலா வந்தன
இன்று ஏகப் பட்ட தொலைக் காட்சி நிறுவனங்கள், எல்லா நேரமும் செய்தி வாசித்துக் கொண்டிருக்க வேண்டிய கட்டாயங்கள் இதில் டி ஆர் பி ரேட்டிங் வெறு.
எதையாவது கொடுத்து தன் பத்திரிக்கையை வாங்கச் செய்யவேண்டிய கட்டாயத்தில் பத்திரிக்கைகள்
எல்லாருக்கும் யார் செய்திகளை முந்தித் தருவது என்ற போட்டியில் செய்திகள் பல உருவாக்கப் படுகின்றது. சில ஊதிப் பெரிதாக்கப் படுகின்றன ஒட்டக் கூத்தன் பாட்டுக்கு ரெட்டைத் தாழ்ப்பாள் போட்டது அந்தக் காலம்.ஒன்றுமே இல்லாததை நாளெல்லாம் பேசியே பிரச்சனை இருப்பது போலத் தோற்றம் தந்து , பின்னர் பிரச்சனையாக்கி, பிறகு தான் ஓய்கின்றார்கள்
அணைஉடையப் போகின்றது என்று கேரளாவில் ஓயாது கத்திப் பயமுறுத்திக் கொண்டிருக்கும் மீடியாக்களும், தமிழன் தவிச்ச வாய்க்கு தண்ணீர் இல்லாது அலையப் போகின்றான் இன்னொரு இலங்கை இங்கே உருவாகப் போகின்றது எனக் கதறும் தமிழ் செய்தி நிறுவனங்களும்
பாவம்,” இவர்கள் இன்னது செய்கிறோமென்று அறியாதவர்கள்”

உணர்வு கொந்தளிப்பு , தன் முனைப் படுத்தல், போலி சமூக பொறுப்புணர்வு இவை தமிழக மக்களை மட்டுமல்ல, கேரள மக்களையும்தான் தீர்வுகளை விட்டு விரட்டி விடுகின்றது. இவையெல்லாம் மட்டுப் பட மட்டுப் பட. அறிவு பூர்வமான மக்கள் வாழ வழி செய்யும் முடிவுகள் தானே எடுக்கப் படும் . இனப் பற்று வெறியாக மாறாமலிருப்பது எல்லாருக்குமே நல்லது

Series Navigationநன்றி நவிலல்நேர்காணல் இதழ் ஐந்து :ஓவியர் கிருஷ்ணமுர்த்தி அவர்களுக்குப் பாராட்டு விழா
author

திலகபாமா

Similar Posts

26 Comments

  1. Avatar
    sathyanandhan says:

    நன்றி, எழுத்தாளர் திலகபாமாவுக்கு. “ஒரு நல்ல தலைவன் தம் மக்களை அறிவு வழியில் நகர்த்த வேண்டுமே அல்லாது உணர்வு வழியில் திசை திருப்பி விடுதல் சரியில்லை.” என்னும் கருத்து மிகவும் வரவேற்கத் தகுந்தது. எழுத்தாளர்களே நடுநிலையற்று, சரியான விவரஙகள் அடிப்படையின்றி உணர்ச்சிப் பெருக்கில் இருப்பதை கூடங்குளம் விஷயத்திலும் பார்த்தோம். தங்கள் பதிவு சிந்தனையைத் தூண்டுவது. அன்புடன் சதயானந்தன்.

  2. Avatar
    Paramasivam says:

    Thilagabama started somewhere ended somewhere.I thoght she would give some facts unknown to every one.When one can accept that lot of sensational news was created,we cannot ignore the happenings mostly in Kerala at that time.My relative who went to Sabarimalai returned badly hurt.We spent sleeoless nights to receive him alive.Even after findings of the panel is published,the stand of the Kerala Govt is unreasonable.The state where large no.of peiople eking out living in other states some degree of tolerance is a must.

  3. Avatar
    சி. ஜெயபாரதன் says:

    http://en.wikipedia.org/wiki/List_of_dams_and_reservoirs
    http://wwf.panda.org/what_we_do/footprint/water/dams_initiative/quick_facts/

    என்னுடைய கண்ணோட்டம் திலகபாமாவின் கட்டுரைக்கு உடன்பாடோ மறுப்போ இல்லை.
    அணைகள் நாட்டுக்குத் தேவை என்று நான் அழுத்தமாய்ச் சொல்ல வருகிறேன்.
    ///”அணையைக் கட்டினார்கள் அடிவயிற்றில் அடித்தார்கள்” என்று தலைப்பிட்டு எழுதிய கட்டுரையைப் பாட்டனார் என்னிடம் தந்தார் என்று சொல்கிறார் திலகபாமா. இதை வலியுறுத்தித் திண்ணையில் முன்போர் கட்டுரையும் எழுதியுள்ளார். ////

    மழை நீர் வெள்ளத்தை ஏரிகளில் சேமிப்பதும், ஆற்று நீர்ப் பெருக்கை அணைக்கட்டில் சேமிப்பதும் ஆயிரம், ஆயிரம் ஆண்டுகளாக உலககெங்கும் நடைடெறும் அரசாங்க ஆக்க வினைகள். கட்டிய அணைகள் பல லட்சம் பேருக்கு நீர்வளம், நிலவளம், மிக மலிவான மின்சாரம், தொழிற்சாலை நிறுவகம் போன்றவை அமையப் பல்லாண்டுகளுக்கு பயன் அளித்து வருகின்றன.
    இத்தகைய பிரம்மாண்டமான கட்டட வேலையில் சிலரது வீடுகள், வயல்கள், காடுகள், சூழ்வெளிகள் பாதிக்கப் படலாம். அணைக்கட்டுகள் வேண்டுமென்றால் இவை நிச்சயம் பாதிக்கப்படும். இவற்றுக்குப் போதிய நிதித்தொகை ஈடு செய்வதில் அரசாங்க ஊழியர்கள் சிலர் தில்லு, முல்லு பண்ணலாம். அவ்விதம் அடிவயிற்றில் அடிவாங்கித் துன்புறுவோர் 5% அல்லது 10% இருக்கலாம். அணைகளால் பெறும் பயன்கள், வசதிகள், கிடைக்கும் தொழில் வேலைகள் எண்ணற்றவை. அவற்றின் பலனைப் பல்லாண்டுகள் அனுபவிக்கும் 90%-95% மற்ற பெரும்பான்மை மக்கள் 10% பாதிப்படையும் சிறுபான்மை மக்களால் வசதிகளை வாழ்வில் இழக்க வேண்டுமா ?
    உலகத்தில் தற்போது 50 அடி உயரத்துக்கு மேற்பட்ட அணைகள் சுமார் 48,000 உள்ளன. அவற்றில் பாதி எளிய வேளாண்மை நாடான சைனாவில் உள்ளன.
    நாட்டில் வேளாண்மை விருத்தி அடையவும், மலிவான மின்சாரம் பெறவும் அணைகள் தேவைப் படுகின்றன என்பதே நான் இங்கு வலுயுறுத்த விரும்பும் கருத்து.
    சி. ஜெயபாரதன்.

  4. Avatar
    punai peyaril says:

    மெஞ்ஞானம் விடுத்து விஞ்ஞானிகள் பின்னால் தான் வாழ்க்கை என்று சென்ற போதே நாசங்கள் தொடங்கி விட்டது. மக்களின் எண்ணங்களை செவி மடுக்கா விஞ்ஞானிகள் கேடு தரும் தீவிரவாதிகளினும் கேடானவர்கள். வேளான் புரட்சி என்று இவர்கள் விளை நிலங்களை விஷமாக்கியது உலகறியும். திலகபாமா இதயத்தின் வழி செலுத்தி மூளையின் சிந்தனைகளை கையாளுகிறார்… இதயமற்றவர்களுக்கு அது புரிவது கடினம்..

  5. Avatar
    சி. ஜெயபாரதன் says:

    அணைகள் ஒரு நாட்டின் கோயில்கள் என்றார் பண்டித நேரு. மழை நீரைத் தேக்கி ஏரியை நிரப்புவது, ஆற்று வெள்ளத்தை ஒதுக்கி அணை கட்டி வேளாண்மை செய்வது மின்சாரம் தயாரிப்பது உலகெங்கும் நிகழும் சாதாரண சம்பவங்கள். இதில் வேளாண்மைப் புரட்சி எப்படிப் பூனைப் பெயரானுக்குத் தெரியுது ?
    சி. ஜெயபாரதன்.

  6. Avatar
    மனீஷ் says:

    நல்ல கட்டுரை.நன்றி.தொடர்ந்து எழுதுங்கள்

  7. Avatar
    சான்றோன் says:

    ஒரு சிறு [முக்கியமான] திருத்தம்……அது ” முல்லை பெரியார் ” அல்ல….முல்லை ” பெரியாறு ”…..அந்த ஆற்றின் பெயர் பெரியாறு…..சின்னாறு , பாம்பாறு போல அது பெரிய ஆறு……அவ்வளவுதான்….அதற்கும் ஈ.வெ.ரா பெயரை சூட்டிவிட வேண்டாம்…..அந்த ஆறு பிழைத்துப்போகட்டும்……

  8. Avatar
    மலர்மன்னன் says:

    பெரிய பெரிய அணைகள் கட்டுவது ஆபத்து என உணரத் தலைப்பட்டுள்ள காலம் இது. கொலராடோ அணையை உடைத்துவிடலாம் என்ற யோசனை வந்திருப்பதாக நேஷனல் ஜியாக்ரஃபிக் நிகழ்ச்சியை நானே சமீபத்தில் தமிழாக்கம் செய்து கொடுத்தேன். அணைகள் கட்டுவதைவிடக் கால்வாய்களை ஆங்காங்கே வெட்டி வெள்ளப் பெருக்கைத் திருப்பி விட்டுச் சிறு அணைகள் மூலம் நீரைத் தேக்குவது ஆபத்தில்லாதது என்கிறார்கள். பெரிய அணைகள் சுற்றுச் சூழலுக்கு ஆபத்து. பசுமைப் புரட்சி என்பது உண்மையில் பசுமை வறட்சிக்குத்தான் வழி செய்துள்ளது. ரசாயன உரமும் ரசாயன பூச்சிகொல்லி களும் மண்ணில் உள்ள நல்ல நுண்ணுயிர்களையும் சேர்த்துக் கொன்று காற்றையும் நீரையும் நஞ்சாக்கி தாய்ப்பாலில்கூட நச்சுத்தன்மையை உண்டாக்கிவிட்டன. நிலத்தின் இயற்கையான சாரம் வற்றிப் போனது. நியாயப்படி இதற்குப் பொறுப்பான சுவாமிநாதனே தொடர்ந்து விவசாய ஆலோசகராக சகல நிதி உதவிகளும்பெற்று வலம் வருவது நம் நாட்டில் மட்டுமே நடக்கும்! புனைப் பெயரில் சொல்வதில் தவறென்ன? விஞ்ஞானி இன்று ஒன்றைச் சொல்ல அது உடனே ஏற்கப்படுகிறது. அடுத்த சில ஆண்டுகளுக்குப்பின் இன்னொரு விஞ்ஞானி அதைத் தவறு என நிரூபித்துப் புதிதாக ஒன்று சொல்கிறான். அதற்குள் பழைய கண்டுபிடிப்பால் போதிய அளவு சேதம் விளைந்தாகிறது! இதுவரை நடைமுறையில் இருந்த எத்தனை மருந்துகள் தீதானவை என்று தடை செய்யப்பட்டுவிட்டன? விண்வெளி ஆய்வின் பெயரால் பூமிக்கு மேலேயும் சிறிய, பெரிய குப்பைகள் போட்டு அதனால் ஆபத்து ஏற்படலாம் என்கிற நேஷனல் ஜ்யாக்ரஃபிக் நிகழ்ச்சியையும் தமிழாக்கம் செய்து கொடுத்தேன்!
    -மலர்மன்னன்

  9. Avatar
    சி. ஜெயபாரதன் says:

    வேளாண்மை இரசாயன உரங்கள் பற்றியும், விஞ்ஞானத் தொழில்களின் மேன்மை, கீழ்மை பற்றியும் நாமிங்கு தர்க்கம் செய்ய வில்லை.
    நாட்டுக்கு அணைக்கட்டுகள் தேவையா என்பதே கேள்வி !

    கொலராடோ போல் பேரணைகள் இந்தியாவில் கிடையாது. இருப்பவை எல்லாம் நடுத்தர உயரத்து அணைக்கட்டுகள். இவற்றை எல்லாம் நீக்கி விடுவதால் பெரும்பான்மை மக்களுக்கு என்ன பயன்கள் கிட்டும், எத்தகைய இழப்புகள் முட்டும் என்று முதலில் சொல்லுங்கள்.
    விஞ்ஞானம் இந்தியாவில் முன்னேறாமல் இருந்திருந்தால் சாணி யுகத்தில் தொடர்ந்து மாட்டு வண்டியில் சவாரி போய் வருவோம். விஞ்ஞானத்தை திருப்பி நற்பணியில் புகுத்துவது நம் கையில்தான் இருக்கிறது.
    சி. ஜெயாரதன்.

    1. Avatar
      punai peyaril says:

      சாணியுகம் என்ற பதம் வன்மையாக கண்டிக்கத் தக்கது. இவரது முப்பாட்டன் தட்டிய சாணியால் தார் இவர் துரைசாணி மாதிரி பொருந்தாத விஜிபி போல் கோட் சூட்டுடன் போட்டோவில்… ஆனானப்பட்ட பில்கேட்ஸே கேஸிவலில் வரும் போது இவர் இப்படி… அந்நிய மோகத்தில் தன் ஆணி வேர் சாணி உரத்தால் வந்தது என்பது மறந்த இவருக்கு பயோ புட்ஸ் பற்றி தெரியாத என்ன… கொலரோடோ அணைக்கட்டு கொள்ளையர்கள் பல நூறு ஆண்டுகள் முன் கொள்ளையடிக்க வந்த செழிப்பு பூமி நமது.. அப்போது என்ன அணைக்கட்டால அளப்பறிய செல்வம் கொண்டிருந்தோம்…? செயகனடன் இது புரிந்து கொண்டால் சரி…

        1. Avatar
          punai peyaril says:

          அய்யா கருத்துப் புலியே, இன்று தி ஹிந்து முடிந்தால் படியுங்கள். தன் அடையாளத்தை உள்ளது உள்ளபடி எழுதிய வேலை செய்த மஹந்தேஸ் என்பவரின் நிலை அறியுங்கள். பூனைப் பெயரில் தவறில்லை… ’பு’விற்கும் ‘பூ’ விற்கு வித்தியாசம் தெரியாதா என்ன உங்களுக்கு… எகத்தாளம் உங்களின் முன்னொரு இமேஜை உடைத்து உங்களின் உள்ள நிலையை காட்டுகிறது. உங்களுக்கு மேட்டுக்குடி இலக்கியமும், அதிகார சாம்ராஜய கம்பெனி தரும் ப்ரீ காப்பி டீ வேலை அட்மாஸ்பியரும் தானே தெரிகிறது… வீதிக்கு வந்து பாருங்கள்… ருஷ்ய, லத்தீன் அமெரிக்க கவிதைகள் படியுங்கள்.. தலித் இலக்கியங்கள் , கருப்பர் இன இலக்கியங்கள் படியுங்கள்.. அப்ப்புறம் வெண் தாடி கவிஞர்கள் தாண்டி இருண்ட வாழ்வு மனிதர்களின் நிலை தெரியும்… நக்கல் விடுங்கள் அதனால் எனக்கு ஏதும் ஆகிடப் போவதில்லை.. உங்கள் எகத்தாளம் உங்கள் உள்ளம் காட்டிடும் கண்ணாடி…. ‘அவனா… நீ…” என்று உங்களைப் பார்த்துச் சிரிக்கும் அது….

  10. Avatar
    மலர்மன்னன் says:

    அணைக்கட்டுகள், ரசாயன விவசாயம் எல்லாம் ஒன்றுக் கொன்று தொடர்புடையவைதாமே! கட்டுரையும் விவசாயத்தைத் தொடர்பு படுத்தியதுதானே!மேலும் ஹிந்துஸ்தானத்தில் 96 சத அனைக்கட்டுகள் விவசாயத்தின் பொருட்டு கட்டப்பட்டவை என்றும் ஆனால் ஏராளமான விளைநிலங்களும் வனங்களும் அவற்றால் மூழ்கிப்போயின என்றும் ஒரு கணிப்பு உள்ளது. கொலராடோ (ஹூவர்) அணை அளவுக்கு இல்லாவிடினும் பக்ரா-நங்கல், நாகார்ஜுனா போன்றவை பேரணைகள் என்கிற பட்டியலில் வரக் கூடியவை என்கிறார்கள். 1947 க்குப் பிறகு முன் யோசனை இன்றி ஏராளமான அணைகள் கட்டியதில் உணவு உற்பத்தி பெருகியது என்று சொல்லப்பட்டாலும் சுற்றுச் சூழல் பாதிப்பும் வேறு இடங்களில் உணவு உற்பத்திக் குறைவும் ஏற்பட்டுள்ளன என்கிறார்கள். அனைக்கட்டுகள் பற்றிப் பேசும்போது மாட்டு வண்டி நினைவு மட்டும் வருவானேன்? மேலும் மாட்டு வண்டிப் பயணங்களால் விளைந்த கேடுகள் என்ன? பிரபஞ்ச வெளியில் ஓர் அழகான நீல முத்துப் போன்ற பூமிக்குக் கேடுகள் விளைய ஆரம்பித்ததே கரியமில வாயுவை வெளியிடும் வாகனப் போக்குவரத்துகளின் தொடக்கம் தானே! அவரவர் அவரவர் வாழ்விடங்களில் நிம்மதியாக வாழ்ந்திருந்தால் தேவைகள் அதிகரித்திருக்க மாட்டா, ஆசைகள் பெருகியிருக்க மாட்டா, அவசர அவசரமாக எங்கும் போய் வர வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டிருக்கப் போவதில்லை! மாட்டு வண்டிப் பயணம் போதுமானதாகவே இருந்திருக்கும். ‘சாணி யுகம்’ என நீங்கள் மேற்கத்திய பாதிப்பில் இகழும் காலத்தில் நெடும் பயணங்கள் மேற்கொள்ளப்படாமலும் இல்லை. சாணியும் ஒரு நல்ல விஷயம்தான். இகழ்ச்சிகுரியது அல்ல! விஞ்ஞானம் என்பது கூடவே கூடாது என்று யார்தான் சொல்வார்கள்? ஆனால் விளைவை யோசியாத விஞ்ஞானம் நன்மையைக் காட்டிலும் தீமையைப் பயப்பதால்தான் மெய்ஞான வழியில் விஞ்ஞானம் செல்ல விழைகிறார்கள். சக்கரம் ஒரு அருமையான விஞ்ஞானக் கண்டுபிடிப்புதான். நீராவியின் பயனும் அப்படியே. எதுவும் அளவோடு இருந்தால் மோசமில்லை.பூமிக்கும் தன்னைத் தானே சரிக்கட்டிக் கொள்ளும் ஆற்றல் உண்டு! அந்த எல்லையைத் தாண்டும்போதுதான் பூமி திணறுகிறது. இயற்கை தண்டிக்கத் தொடங்குகிறது! அணைக்கட்டுகளும் சிறிய அளவில் பெரிய நீர்த் தேக்கங்கள் உண்டாகாதவாறு இருக்கலாம் என்றுதானே சொல்லப் படுகிறது? நீர்ப் பங்கீடு அதிக நிலம் நீரில் மூழ்காமலே அதிக இடங்களுக்குப் பரவலாகக் கிட்டுவது வரிசையாகக் கால்வாய்கள் வெட்டுவதால் சாத்தியம் ஆகி உணவு உற்பத்தியும் பரவலாக நடக்குமே! தஞ்சை மாவட்டத்தில் சாணி யுகத்து புத்திசாலிகள் கல்லணையை ஓரிடத்தில் மட்டும் கட்டி ஏராளமான சிற்றாறுகளை உருவாக்கியதால்தான் தஞ்சை மாவட்டம் முழுவதுமே உணவு உற்பத்தி பெருகியது.
    -மலர்மன்னன்

  11. Avatar
    சி. ஜெயபாரதன் says:

    அணைக்கட்டுகள் இல்லாமல், எந்த நீர்ச் சேமிப்பும் இல்லாமல், நீர்த்தேக்க ஏரிகள் எதுவும் இல்லாமல் வாய்க்கால்களுக்கு நீர் உந்து சக்தி எங்கிருந்து உண்டாகித் தொடர்ந்து நீரோட்டம் வரும் ? குடிநீர் எப்படி பைப்புகளில் அனுப்புவது ? இரயில் தொடர், கார் வாகனம், ஆகாய விமானம், கப்பல், ராக்கெட், கணனிகள் தொழிற்சாலைகள் இவை யெல்லாம் மக்களுக்குத் தேவை யில்லைதான். நாம் எல்லாரும் உலகின் சூழ்வெளியைப் பாதுகாக்கக் தொழிற்புரட்சி யுகத்தை விட்டுக் கற்காலத்துக்கு மீளலாம். மனிதர், விலங்குகள் உட்பட உலகில் இயங்கும் தொழிற் சாதனங்கள் அனைத்தும் கழிவுகள் இல்லாமல் நிலவ முடியாது. பசுமைவாதிகள் கழிவுகள் இல்லாத மின்சாரம் உற்பத்தி செய்ய முடியுமா ? அணை நீர்த்தேக்கங்கள் மிக மலிவான கழிவு குறைந்த மின்சாரம் அளித்தாலும், சூழ்வெளி பாழாகுது என்று புகார் செய்வது வேடிக்கையாக உள்ளது. இந்தியா சாணி யுகத்தைக் கடந்து இப்போது தொழிற்புரட்சி யுகத்தில் தடம் வைத்துள்ளது. பலர் வேண்டினாலும் அது மீண்டும் சாணி யுகத்துக்குத் திரும்பாது என்பது உறுதி.
    சி. ஜெயபாரதன்.

  12. Avatar
    மலர்மன்னன் says:

    //அணைக்கட்டுகளும் சிறிய அளவில் பெரிய நீர்த் தேக்கங்கள் உண்டாகாதவாறு இருக்கலாம் என்றுதானே சொல்லப் படுகிறது? நீர்ப் பங்கீடு அதிக நிலம் நீரில் மூழ்காமலே அதிக இடங்களுக்குப் பரவலாகக் கிட்டுவது வரிசையாகக் கால்வாய்கள் வெட்டுவதால் சாத்தியம் ஆகி உணவு உற்பத்தியும் பரவலாக நடக்குமே! தஞ்சை மாவட்டத்தில் சாணி யுகத்து புத்திசாலிகள் கல்லணையை ஓரிடத்தில் மட்டும் கட்டி ஏராளமான சிற்றாறுகளை உருவாக்கியதால்தான் தஞ்சை மாவட்டம் முழுவதுமே உணவு உற்பத்தி பெருகியது. –மலர்மன்னன்//

    இது நான் சொன்னதுதானே?

    //விஞ்ஞானம் என்பது கூடவே கூடாது என்று யார்தான் சொல்வார்கள்? ஆனால் விளைவை யோசியாத விஞ்ஞானம் நன்மையைக் காட்டிலும் தீமையைப் பயப்பதால்தான் மெய்ஞான வழியில் விஞ்ஞானம் செல்ல விழைகிறார்கள்.//

    இதுவும் நான் சொன்னதுதானே!
    அதென்னவோ தெரியவில்லை, எனது கருத்துகளுக்கு எதிர்வினை செய்வோர் நான் சொன்னவற்றில் பலவற்றைப் பொருட்படுத்தாமலும் நான் சொல்லாததையெல்லாம் சொன்னது போலவும் எழுதிக்கொண்டிருக்கிறார்கள்! விவரம் அறிந்த ஜயபாரதன் அவர்களும்கூட விக்கிபீடியாவை ஆதாரம் காட்டுவது கண்டு அதிர்ச்சி அடைந்தேன். ஹூவர் அணையை எதிர்த்து நான் ஒரு கட்டுரை எழுதினால் அதுவும் அதில் இடம் பெறும்! விக்கிபீடியாவில் என்ன எழுதியுள்ளது என்று நான் பார்க்கவில்லை. அவகாசம் இல்லை.
    அன்புடன், மலர்மன்னன்

  13. Avatar
    punai peyaril says:

    மெத்த படித்த விஞ்ஞானிகள் சோதனை என்ற பெயரில் இந்த பிரபஞ்சத்தை எலி போல் சோதனை செய்து இன்றைய எல்லா அழிவிற்கும் முன்னேற்றம் என்ற பெயரில் நாசம் செய்ததே அதிகம். அது என்னய்யா கற்காலம்…? இயற்கையுடன் இணைந்து வாழ்ந்த வாழ்வெங்கே.. இன்று ரசாயனத்தால் பாழாகிப் போன உணவுகளே விஷமாகி அதைச் சரி செய்கிறேன் என்று மருந்து என்ற பெயரில் ரசாயனத்தை குப்பியில் அடைத்து தருவது என்ன விஞ்ஞான அறிவோ…? இவர்களை விட இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் மேல். அளப்பரிய அகத்தியர், திருமூலர், திருக்குறள், தொல்காப்பியம் எல்லாம் என்ன கொலரடோ மின்சாரத்திலா எழுதப்பட்டது… ?

  14. Avatar
    சி. ஜெயபாரதன் says:

    விஞ்ஞானம் நமக்கொரு சாதனைக் கருவி. அதை நன்மைக்கோ அன்றி தீமைக்கோ பயன்படுத்துவது மனிதர் கையில் உள்ளது. தவறு செய்வது மனிதர், விஞ்ஞான மில்லை.

    சி. ஜெயபாரதன்.

  15. Avatar
    சான்றோன் says:

    நவீன கால அணைக்கட்டுக்கள் மாபெரும் தோல்வி என்பது நிதர்சனம்…..மறந்து போய் கூட நேரு எந்த உருப்படியான விஷயத்தையும் ஆதரித்ததில்லை…..அவர் தலையில் தூக்கி வைத்துக்கொண்டு ஆடிய பல விஷயங்கள் தான் நம் நாட்டை பிடித்த பீடைகள்…..அணைக்கட்டுக்களில் நீருடன் வந்து சேரும் சேற்றினை அகற்ற எந்த வழியும் இல்லை ….விளைவு? அணைகளின் கொள்ளளவு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது….மாறாக பண்டை தமிழகத்தில் , குறிப்பாக சோழர் காலத்தில் [ ஜெயபாரதன் மொழியில் சொன்னால், சாணியுகத்தில்] தடுப்பணைகளில் குமிழித்தூம்பு என்ற முறை பின்பற்றப்பட்டது…….இதன் மூலம் வெள்ளத்தில் வரும் நீரில் உள்ள சேறு குமிழித்தூம்பு எனப்படும் வடிகால் வழியாக வெளியேற்றப்படும்….தெளிந்த நீர் மட்டும் தேங்குவதால் அணைக்கு எந்த பாதிப்பும் இருக்காது…..வர‌லாற்று ஆய்வாளர் திரு.குடவாயில் பாலசுப்பிரமணியன் அவர்கள் குமிழித்தூம்பு பற்றி விரிவாக எழுதியுள்ளார்…தேடி படித்து, தெரிந்து கொள்ளுங்கள்…….

    அறிவியல் முன்னேற்றங்கள் தேவைதான்….அதை யாரும் மறுக்கவில்லை….ஆனால் அதற்கு நாம் எதை விலையாக கொடுக்கிறோம் என்பது முக்கியம்……கண்ணை விற்று சித்திரம் வாங்கி என்ன பயன்?

  16. Avatar
    சி. ஜெயபாரதன் says:

    அணைக்கட்டுகளில் சகதிம, குப்பை வடிகட்டும் உருளைச் சல்லடைகள் இடையிடையே இயங்கி வருகின்றன. இது பராமறிப்பு வேலைகள். இயங்கும் எந்த சாதனமும் சுத்தப் படுத்தப்பட வேண்டும். கண்காணிப்பற்ற அணைக்கட்டுகள் கண்காணிக்கப் பட வேண்டும். சகதி அடைத்த அணைகளை எல்லாம் மூடி விட வேண்டும் என்பது ஏற்றுக் கொள்ள முடியாது கருத்து.
    கல்லூரியில் 10 கயவர்கள் கலகம் செய்தால் கல்லூரிகளை மூடி விட வேண்டுமா ?
    சி. ஜெயபாரதன்.

  17. Avatar
    மலர்மன்னன் says:

    எனக்கு மிகவும் பிரியமான மரியாதைக்குரிய ஸ்ரீ ஜயபாரதன்,
    நீங்கள் வெறும் வாதத்திற்காக வாதம் செய்வது உங்களுக்கே புரியவில்லையா? தவறு, விஞ்ஞானத்திடம் இல்லை மனிதரிடம் உள்ளது (மனிதரிடமிருந்துதானே விஞ்ஞானமும் மெய்ஞானமும் வெளிவருகின்றன?), அணைகளை எல்லாம் மூடிவிட வேண்டும் என்பது ஏற்றுக் கொள்ள முடியாது, 10 கயவர்கள் கலகம் செய்தால்… என்றெல்லாம் பேசிக்கொண்டு போவது உங்களுக்கே எலிமெண்டரியாகப்படவில்லையா? இப்படிப் பேசிக் கொண்டே போகலாம், தீ நல்லதும்தான், கெட்டதும்தான், எல்லாம் பயன்படுதுவதைப் பொருத்தது, கத்தி நல்லதும்தான் கெட்டதும்தான் இப்படியெல்லாம் விவாதிப்பது அறிவு முதிர்ச்சியை வெளிப்படுத்தாது என்று உங்களுக்குத் தெரியாதா? அடிப்படையான கருத்து என்ன என்று பார்த்து விட்டு அதற்கு எதிர்வினை செய்வதுதானே உங்களைப் போன்றோரிடம் எதிர்பார்க்கப் படுகிறது? திலகபாமா சொல்வதில் உள்ள நியாயமான கருத்தை மறுப்பதானால் சரியாக மறுக்க வேண்டும் அல்லவா? நீங்கள் எதிர்வினை செய்கிறீர்கள் என்கிற ஒரே காரணத்திற்காகத்தான் நானும் என் கருத்தைப் பகிர்ந்து கொள்கிறேன். இல்லையேல் எப்போதோ நிறுத்தியிருப்பேன் அல்லது பங்கேற்றிருக்கவே மாட்டேன். ஸ்ரீ சான்றோன் சொல்வதுபோல் நேரு தொட்ட காரியம் எதுவுமே துலங்கவில்லை. அதன் விளைவை இப்போது நாம் அனுபவிக்கிறோம், நமது சந்ததிகளும் அனுபவித்துக்கொண்டே இருக்கப்போகிறார்கள். ஆனால் அவர்தான் நமக்கு அருந் தலைவர்! உங்களுக்குப் பிரச்சினை இல்லை. ஒரு விவரமான இடத்தில் நிம்மதியாக வாழ்கிறீர்கள். ஒரு காலத்தில் எனக்கும் வாய்ப்பு வராமல் இல்லை. வாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் ஹிந்துஸ்தானத்திலேதான் என்று பிடிவாதமாக இருந்துவிட்டேன். இதில் வேடிக்கை, என் மாப்பிள்ளையும் மகளும்கூட வாய்ப்புகள் வந்தும் பிடிவாதமாக இங்கேயே இருக்கிறார்கள்!
    இப்படிக் கூறுவதையும் தவறாக எடுத்துக் கொண்டு விடாதீர்கள். வாய்ப்பை ஏற்பதும் மறுப்பதும் அவரவர் சொந்த விஷயம. அதில் பிறர் விமர்சனத்திற்கு இடமில்லை.
    ஹிந்துஸ்தானத்தில் வாழ்வோர் நிலைபற்றிச் சுட்டிக் காட்டினேன், அவ்வளவுதான. இங்கு பராமரிப்புப் பொறுப்புணர்ச்சி எதற்குமே இல்லையே , அப்புறம் பேசிப் பயன் என்ன? 60 ஆண்டுகளுக்கும் கூடுதலான சுதந்திரம் வீணடிக்கப் பட்டு விட்டதை நினைத்தால் வேதனை தாங்கவில்லை. இன்னொரு நாடாக இருந்தால் எப்போதோ புரட்சி வெடித்திருக்கும்!
    ஹிந்துஸ்தானம் இன்னும் நீங்கள் சொல்லும் சாணி யுகத்திலும் விண்வெளியுகத்திலுமாக இரண்டின் தேவையற்றவைகளை மட்டுமே கிரகித்துக்கொண்டு இரண்டுங் கெட்டான் வாழ்க்கை நடத்தி வருகிறது தெரியாதா?
    அன்புடன்,
    மலர்மன்னன்

  18. Avatar
    சி. ஜெயபாரதன் says:

    மதிப்புக்குரிய மலர்மன்னன்,

    இப்படி முன்பு நாம் ஒருமுறைத் தர்க்கம் செய்து முடிவில் நீங்கள் இந்தியப் பிரதமராய்ப் பதவி ஏற்றால் முதல் 10 வேலைகள் என்று என்ன செய்வீர்கள் என்று நான் உங்களைக் கேட்டிருந்தேன். உங்கள் பதில் இல்லை. இப்போது அதே கேள்வியைக் கேட்கிறேன் மீண்டும். கலாச்சாரம், ஜாதி, மத, இன, மொழி, மாநிலப் பிரச்சனைகள் நிரம்பிய இந்தியாவை எப்படி ஆட்சி செய்வது என்று அனுபவம் மிக்க நீங்கள் வழி காட்டுங்கள். உங்களைப் போல் வெறும் குறைகளை மட்டும் கூறிக் கொண்டு இந்திய முன்னேற்றத்தைக் கேலி செய்து மறைத்து கொந்தளிப்பு உண்டாக்குவதைத் தவிர ஆக்க பூர்வமாக இந்திய தொழில்துறை வேளாண்மை அமைப்புத் தரங்களை (Indian Infra-structure) உயர்த்த என்ன செய்து வருகிறீர்கள் ?
    சி. ஜெயபாரதன்.

  19. Avatar
    மலர்மன்னன் says:

    ஜயபாரதன், நீங்கள் இன்னும் ஹைபாதெடிகல் கேள்விகள் கேட்கும் பழக்கத்தைவிட்டு விலக வில்லை. எல்லோரும் எல்லா வேலைகளையும் செய்ய முடியாது. எனக்கென்று சில பணிகளைத் தேர்ந்துகொண்டு அவற்றைச் செய்து வருகிறேன். அவையும் நேரடியாக சமூகத்திற்குப் பயன் அளிப்பவையே. ஹிந்துஸ்தானம் ஒரு வேளாண்மை, வேளாண்மை சார்ந்த தொழில்களை மட்டுமே மேற்கொண்டு, நவீன தொழில் நுட்பங்களையும் அவற்றுக்கே பயன்படுத்தி உலகம் முழுமைக்கும் உணவளிக்கும் அட்சய பாத்திரமாக விளங்குவதோடு தானும் செல்வம் கொழிக்கும் நாடாக, சுற்றுச் சூழலை பாதிக்காத தொழில்களை மட்டுமே மேற்கொண்டு வளம் பெறும் நாடாக விளங்க முடியும் என 1980- வாக்கிலேயே தினமணியில் கட்டுரைகள் எழுதி வந்திருக்கிறேன். அது ஆக்க பூர்வமான பணிதான். வண்டியைச் சரியாக ஓட்டு என்று பயணி சொன்னால் நீ வந்து ஓட்டு என்று ஓட்டுனர் சொல்வதுபோலிருக்கிறது, உங்கள் வாதம்! உங்களிடமிருந்து நான் இதை எதிர் பார்க்கவில்லை!
    -மலர்மன்னன்

  20. Avatar
    punai peyaril says:

    கேலிசெய்யும் செயகனடிகன், மம செல்வ செழிப்புடன் வாழ பல வாய்ப்பிருந்தும் கொள்கை என்று இந்நிலை கொண்டார். அரசியல்வாதியிடமும், ஆட்சியாளரிடமும் கேட்க வேண்டியதை மம விடம் கேட்பது உங்களின் விதண்டாவாத நிலையை காட்டுகிறது. ஓடும் தேரின் முன் பாதை சீராக காண கட்டை கொண்டு முட்டுக் கொடுப்பார்கள்… அது போன்று தேசம் சீரான பாதையில் செல்ல யோசனை சொல்லும் கட்டைகளில் ஒன்று மம… ஆனால் நீங்கள்…? பிரஞ்சுக்காரனும்,வெள்ளையனும் இங்கு ஆண்ட பொழுது அவனுக்கு அடிபணிந்து சுகத்துடன் நாட்டை அவன் ஆள துணை போனவர்களுக்கும், அந்த வெள்ளையன் பிரஞ்சுக்காரன் தேசங்களுக்கு சென்று குடியுரிமை பெற்று அவனுக்கு பணிந்து வாழ்பவருக்கும் வித்தியாசம் கிடையாது…ஆனால் மம போல் பலர் இந்த தேசத்தில் தங்க்ள இளைமையை அர்பணித்து முதுமையில் புலம்பாமல் தட்டி எழுப்பும் கருத்துக்களைச் சொல்பவர்களில் ஒருவர். அவர் செய்வது படித்து விட்டோம் என்ற ஒரே காரணத்திற்காக சம்பளம் , ஓ.டி , போனஸ், என்பதற்காக பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று வாழும் சனமல்ல அவர்…. செர்னோபில் முதல் நேற்றைய ஜப்பான் உலை வெடிப்பு முதல் அழிந்தவர் சாபம் , இதயமற்ற விஞ்ஞானிகள் உண்ணும் உணவில் இருக்கிறது., சுப்புடுவால் கர்நாடக இசை கட்டுக்குள் கொஞ்சமேனும் இருந்தது… அதனால் அவர் எம்.எஸ் அம்மா மாதிரி கச்சேரி செய்ய முடியுமா என கேட்பது எப்படி மூடத்தனமோ அது போல் மமவிற்கு விட்ட சவாலும்… மமவிற்கு எங்களின் வீரவணக்கங்கள் என்றும் உண்டு…

  21. Avatar
    மலர்மன்னன் says:

    ஸ்ரீ புனைப் பெயரில், நீங்கள் யாரென்றே எனக்குத் தெரியாது. என்னை எல்லை மீறித் தாங்கள் போற்றுவது தேவையில்லாத ஒன்று. அது படிப்பவர்களுக்கு எரிச்சலைத்தான் தரும். இது ஏதோ நானே செய்கிற ஏற்பாடு என்று சொல்லக் கூடச் சிலர் தயங்க மாட்டார்கள். ஆகவே தாங்கள் அன்பு கூர்ந்து என்னைப் போற்றி எழுத வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். தூற்றுபவர்களிடம் இப்படிக் கேட்க மாட்டேன். அவர்களின் தூற்றுதல் என்னை மேலும் உத்வேகத்துடன் பணியாற்றத் தூண்டும். போற்றுதல்களில் என்னுள் அகம்பாவத்தைத் தோற்றுவிக்கும் அபாயம் உள்ளது.
    அன்புடன்,
    மலர்மன்னன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *