ஞான ஒளி (கலீல் கிப்ரான்)

This entry is part 16 of 33 in the series 27 மே 2012

இதமான அமைதியின் ஊடே உம் இதயம் உணரும் இரகசியமாய் பகல், இரவுகளின் நீட்சி.
ஆயினும் உம் செவிப்பறையின் ஏக்கமாய்
உம் இதயஞான, கீதத்தின் ஓசைகள்.
சதாசர்வமும் உம் சிந்தையை நிறைத்திருக்கும் எண்ண அலைகள்
இனிய சொற்களாய் வடிவுறும் கலையும் அறியக்கூடுமே நீவிர்
உம் கனவுகளின் நிர்வாணமதை
உம்முடைய விரல்கள் தீண்டும் இன்பம் பெறட்டும்.

எஞ்ஞான்றும் நன்றே செய்மினே. நீவிர்
உம்மின் ஆன்மாவினூடே புதைந்து கிடக்கும் நன்மைகள் எழுச்சியாய்
விரையட்டும் முணங்குதலாய்; சாகரம் நோக்கி.
கண்காணா ஆழத்தில் புதையுண்டு கிடக்கும் அக்கருவூலம்
உம் கண்களினூடே ஒளியாய் மின்னட்டும்.
ஆயினும் நீர் அறிந்திராத அச்செல்வங்களை
அளக்கும் அளவுகோல் ஏதும் இல்லாதிருக்கட்டும்:
உம் ஞானத்தின் ஆழத்தை ஊழியர்களோ அன்றி
உம் உளக்குறிப்பின் ரேகையோ கொண்டு நீவிர் தேடாமல் இருப்பீராக
காரணம் அளவையிலும்,கரையினுள்ளும் அடங்காத சாகரமாய் இருப்பதே அச்சுயம்.

”யாம் கண்டோம் சத்தியத்தை” என்றே செப்பாமல், “யாம் ஓர் சச்சமதைக் கண்டோம்” என்று செப்புவது மேல்.
“யாம் ஆன்மாவின் பாதையைக் கண்டோம்” என்பதைவிட “யாம் எம் பாதையின் மீது நடந்து செல்லும் அந்த ஆன்மாவை சந்தித்துவிட்டேன்” என்றே சொல்லும்.
காரணம் அந்த ஞாதிரு சர்வ தளங்களின் மீதும் தம் சுவடியைப் பதிக்கக் கூடியது. ஒற்றைக் கோட்டின் மீதும் நடப்பதில்லை அந்த ஞாதிரு, நானல் தளிராய் முளைப்பதும் இல்லை.
எண்ணிலடங்கா இதழ்களைக் கொண்ட தாமரையாய்த் தம்மையே மலரச்செய்கிற ஞாதிரு தாமேஅது.


On Self-Knowledge
Kahlil Gibran
Your hearts know in silence the secrets of the days and the nights.
But your ears thirst for the sound of your heart’s knowledge.
You would know in words that which you have always known in thought.
You would touch with your fingers the naked body of your dreams.

And it is well you should.
The hidden well-spring of your soul must needs rise and run murmuring to the sea;
And the treasure of your infinite depths would be revealed to your eyes.
But let there be no scales to weigh your unknown treasure;
And seek not the depths of your knowledge with staff or sounding line.
For self is a sea boundless and measureless.

Say not, “I have found the truth,” but rather, “I have found a truth.”
Say not, “I have found the path of the soul.” Say rather, “I have met the soul walking upon my path.”
For the soul walks upon all paths.
The soul walks not upon a line, neither does it grow like a reed.
The soul unfolds itself like a lotus of countless petals.

Series Navigationமறுபடியும்மகளிர் விழா அழைப்பிதழ்
author

பவள சங்கரி

Similar Posts

8 Comments

  1. Avatar
    சி. ஜெயபாரதன் says:

    மதிப்புக்குரிய பவள சுந்தரி,

    கலில் கிப்ரான் கவிதையைப் பின்புலத்தில் பாடும் இனிய பெண்குரல், தென்றல் நடையில் உங்கள் தகுந்த தமிழாக்கம், வரிக்கேற்று மாறும் திரைப் படங்கள் வெகு சிறப்பாய் இட்டுப் புதிய முறையில் படைத்திருக்கிறீர்கள்.

    பாராட்டுகள்.

    Soul என்பதை ஆத்மா வென்றும் Spirit என்பதை ஆன்மா வென்றும் குறிப்பிட்டால் பொருள் ஆழமாகப் புலப்படும். ஆத்மா என்பது உயிர்த்துவ விசை, ஆன்மா என்பது உயிர்த்துவ இயக்கம் என்பது என் கருத்து.

    அன்புடன்,
    சி. ஜெயபாரதன்

  2. Avatar
    vanijayam says:

    அற்புதமான கவிதையின் மொழிபெயர்ப்பு ஜீவஒளியாய்..மனதில் பதிந்தது.எனது முக நூலில் பகிர்ந்துக் கொண்டுள்ளேன்.வாழ்த்துக்கள்.

    1. Avatar
      பவள சங்கரி. says:

      அன்பின் வாணிஜெயம்,

      தங்களுடைய வாழ்த்திற்கும், ஊக்கத்திற்கும் நனிநன்றி தோழி.

      அன்புடன்
      பவள சங்கரி

  3. Avatar
    பவள சங்கரி. says:

    அன்பின் ஐயா,

    வணக்கம். தங்கள் ஊக்கமான வார்த்தைகளுக்கு நன்றி. ஆத்மா மற்றும் ஆன்மா என்பதற்கும் இன்னும் சற்று தெளிவான விளக்கம் அளித்தருளுங்கள்.

    அன்புடன்
    பவள சங்கரி

  4. Avatar
    சி. ஜெயபாரதன் says:

    ஆத்மா வென்பது உடல், மனத்திலிருந்து வேறுபட்டது. உயிர்க்கு உடந்தையானது. ஆத்மாவை ஆக்கவும் முடியாது அழிக்கவும் இயலாது. உயிருள்ள புல், பூண்டு, புழு, பூச்சி, விலங்கினம், மனித இனத்தை வாழ வைக்கும் உயிர்த்துவச் சக்தி ஆத்மா.
    ஆன்மா என்பது ஆறறிவுள்ள மனிதனுக்கு மட்டும் உரிய ஆத்மா.
    இது என் கருத்து.
    சி. ஜெயபாரதன்.

  5. Avatar
    சி. ஜெயபாரதன் says:

    AnbuLLa PavaLa Shangari,

    When we say “Spiritual Power” of a person, we know its is not ones physical strength, not his mental might, but it is a different kind of power, emanated from his Spirit “ஆன்மா “. Our fragile body Mahatma Gandhi had that spiritual strength. It could ignite 40 crores Indian people to riot against the British Raj.

    But we do not say “Mahanma Gandhi.”

    “ஆன்மா ” is a matured format of a developed Soul.

    Our Great Rishis had “Spiritual Power”.

    We do not say cows or dogs have Spiritual Power.

    At the same time we do not indicate any thing as Soul Power.

    Kind Regards,
    S. Jayabarathan.

    ++++++++++++++++++++++++++++++++

  6. Avatar
    ganesan says:

    well translated kavidhai…Kahlil Gibran himself appreciate this translation if he knows tamil..keep it up!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *