தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

22 ஜூலை 2018

பிடுங்கி நடுவோம்

அமீதாம்மாள்

விசாலமான வீடுகள்
வினாக் குறியாய்க்
குடும்பங்கள்

மாமா என்கிறோம்
அம்புலியை
யாரோ என்கிறோம்
அண்டை வீட்டாரை

எல்லாரும் திறனாளிகள்
எல்லாரும் பட்டதாரிகள்
எல்லாரும் கடனில்

அனைவர் கையிலும்
அறிவுச் சாவி
திறக்கத்தான்
நேரமில்லை

மருந்துகள் ஏராளம்
நோய்கள் அதைவிட
ஏராளம்

ஆதாயம் தேடும்
வியாபாரப் பொருள்களாய்
உறவுகள்

விரைவான உணவுகள்
மெதுவான சீரணங்கள்

ஸ்டீவ் ஜாப்ஸ் தெரிகிறார்
சிரிக்கத் தெரிவதில்லை

வாழும் நிலம் செத்துக்
கொண்டிருக்கிறது
குற்றுயிராய்
மனித நேயம்

வாருங்கள்
வாழ்க்கையைப்
பிடுங்கு நடுவோம்

அமீதாம்மாள்

Series Navigationவாசு பாஸ்கரின் “ மறுபடியும் ஒரு காதல் “ஆசை அறுமின்!

One Comment for “பிடுங்கி நடுவோம்”

 • ruthraa says:

  பிடுங்கி நடுவோம்.
  தாங்காத பல்வலி.
  வரிகள் வலிகள் ஆவதே
  இலக்கியம்.

  ச‌ரியாய்
  சோழிக‌ளை குலுக்கிப்
  போட்டுவிட்டீர்க‌ள்.
  க‌ணினிக‌ள்
  க‌ழ‌னிக‌ள் ஆவ‌தில்லை.

  ர‌ஜ‌னி பாடிய பிற‌கு
  எல்லோருக்குமே
  ஐஸ்வ‌ர்யாவுடனும்
  அந்த‌
  “டிஜிட‌ல்
  க்ரோம்ஸோம்க‌ளுட‌னுமே”
  உலா வ‌ர‌ ஆசை.

  அச‌லான‌ “ராமானுஜ‌ங்க‌ள்”
  அமுங்கிப்போக‌
  இவர்களுக்கு
  ப‌ட்ட‌ன் அமுக்கி அமுக்கி
  “கேம்ஸ்”விளையாடினாலே போதும்
  கேம்பிரிட்ஜ்க‌ளையெல்லாம்
  இழுத்து மூடிவிட‌லாம்.

  முத‌லில்
  பிடுங்கி எறிய‌த்தான் வேண்டும்.
  ந‌டுவ‌தைப் ப‌ற்றிய‌
  விதையை
  இதய‌மே
  மூளைக்கு கொண்டுபோக‌வேண்டும்.

  அமீதாம்மாள் அவ‌ர்க‌ளே
  ப‌ல் வ‌லி
  பய‌ணத்தின்
  மைல் க‌ற்க‌ளுக்குத்தான்.
  புதிய‌ ச‌ரித்திர‌ங்க‌ளை
  ந‌ட்டு வைப்போம்.

  உங்க‌ள் க‌விதைவ‌ரிக‌ள்
  க‌ட‌ல் அலைக‌ளாய்
  வ‌ருடுகின்றன‌.
  பாராட்டுக‌ள்.

  அன்புட‌ன்
  ருத்ரா


Leave a Comment

Archives