தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

10 டிசம்பர் 2017

பூட்ட இயலா கதவுகள்

ரமேஷ்ரக்சன்

தொடர் மழையின் இரவில்
திண்ணையில் ஒதுங்கிய
நாயின் ஊளையின் குரலால்

தோளில் சாய்ந்துறங்கும்
மகளின் காதுகளில் விழவும்
தலை நிமிர்த்து வாசல் நோக்கியவள்

பயம் அப்பிய மனதினை
விரல்களில் புகுத்தி தோள் பற்றி
கதவை தாழிட சமிக்ஞை செய்கிறாள்

சந்தையில் சந்தித்த
கீழத் தெருக்காரன் ஒருவன்
பாலுக்கான காசோடு வருவதை
அவள் அறிந்திருக்க நியாயமில்லை!

Series Navigationமுள்வெளி அத்தியாயம் -13பாரதியும் பட்டுக்கோட்டையாரும்(பகுதி-6)

Leave a Comment

Insider

Archives