தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

17 பெப்ருவரி 2019

சதுரங்கம்

ப மதியழகன்

நாட்கள் நத்தை போல்

நகர்கிறது

கணக்குச் சூத்திரம் போல

வாழ்க்கை வெகு சிக்கலாக

இருக்கிறது

தாழப் பறந்து கொண்டுள்ளதால்

உயரே பறப்பவர்களின் எச்சம்

என் மீது விழுகிறது

சிலந்தி வலையில்

சிக்கிக் கொண்டதைப் போல

வாழ்க்கை சங்கிலிகளால்

என்னைப் பிணைத்துள்ளது

நினைத்தபடி காரியங்கள்

நடக்காத போது

சரணாகதி தீர்வாகிறது

அதல பாதாளத்தில்

விழுந்து கொண்டிருக்கும் போது

கையில் பற்றிய

மரக்கிளையும் முறிந்தால்

என் கதி என்னாவது

சூழ்நிலைக் கைதியாய்

விளையாட்டுப் பொம்மையாய்

விதியின் கைப்பாவையாய்

எத்தனை நாளைக்கு இருப்பது

சதுரங்க விளையாட்டில்

வெட்டுண்ட சிப்பாய்களுக்கு

ராஜாவை காக்க முடியவில்லையே

என்ற கவலை வருமா.

 

 

 

Series Navigationஊரில் மழையாமே?!மனவழிச் சாலை

Leave a Comment

Archives