ஒன்றுமறியாத பூனைக்குட்டி..:-

This entry is part 29 of 33 in the series 12 ஜூன் 2011

ஷாப்பிங் மால்களில்
முயல்குட்டிகளும்
பூனைக்குட்டிகளும்
கடந்த போது
அவன் கண்கள்
அவைபோல் துள்ளின.

கூட வரும் மனைவி
பார்க்கும்போது
கீழ்விடுவதும்
பின் ஏந்திக்கொள்வதுமாக
நீண்டன அவன் கண்கள்

குறுகலான கடையில்
இருந்த காலண்டர்
சாமியின் ஆயுதம்
அவனை மிரட்டியது .

கண்களை வெவ்வேறு
கோணங்களுக்கு
உள்ளாக்கியபோதும்
தட்டுப்பட்டபடியே
இருந்தன அவை.

இடப்பக்கக் கடைவழியே
குதித்துச் சென்றவைகளை
பட்டைக் கண்ணாடிகள்
பலவாய்ப் பிரதிபலித்தன.

பர்சின் கனம் குறைந்து
பைகளின்கனம் அதிகமானபோது
அவன் உரசிச்செல்லும்
சில பூனைகளையும்
வெறுக்கத்துவங்கி இருந்தான்..

ஏதுமறியாததுபோல்
புன்னகைத்தபடி
இணைப்பூனையாய்
அடியொற்றியபடி
நடந்தாள் மனைவி..

Series Navigationஅலையும் வெய்யில்:-சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 39

1 Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *