தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

17 ஜனவரி 2021

5 குறுங்கவிதைகள்

தேனம்மை லெக்ஷ்மணன்

Spread the love

ஒளியூட்டப் போகிறோமா
எரியூட்டப் போகிறோமா
என அறிவதில்லை
பற்றவைக்கப்படும் தீக்குச்சிகள்..

**************************************************

புழுவைப் போல உள்நுழைந்து
பத்து மாத உறக்கம்..
கொடி வழி உணவு கூட்டுக்குள்…
இறக்கைகளைப் போல
கை கால்கள் முளைத்ததும்
உந்திப் பறந்தது  கூடை விட்டு ..
குழந்தையாய்..

*****************************************************

உடல் எனும் உடைக்குள்
கைதிகள்
விடுதலையை எதிர்நோக்கி..

*****************************************************
பொம்மைப் பாசம்.:-
***************************

அவள் மடியமர்ந்து
போகேமான் பார்த்ததும்
அங்கிள் சிப்ஸ்., நூடுல்ஸ்
உதட்டில் ருசித்ததும் .,
தூங்கும் போதும்
கால் மேல் போட்டுக்
கட்டியணைத்துக் கிடந்ததும்
கனவோ கதையோ..

இப்போதெல்லாம்
பாய் ஃப்ரெண்டோடு
பைக்கில்  செல்லும் அவளை
ஷோகேஸில் அமர்ந்து
பார்த்துக் கொண்டிருக்கிறேன்
கன்னத்தில் கை வைத்து..

*********************************************************

தீக்குச்சி..:-
************************

தன் தலைக்கனத்தை உரசி
தானை அழிக்கிறது..

Series Navigationசாகச விரல்கள்அப்போதும் கடல் பார்த்துக்கொண்டிருந்தது : திரு.எஸ்.ராமகிருஷ்ணன்

Leave a Comment

Archives