தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

9 டிசம்பர் 2018

Kobo Books தளத்தில் ரெ.கா.வின் மின்னூல்கள்

மலேசிய எழுத்தாளர் ரெ.கார்த்திகேசு அவர்களின்  அண்மைய நூல்களான “நீர் மேல் எழுத்து” என்னும் சிறுகதைத் தொகுப்பும் “விமர்சன முகம் 2” என்னும் கட்டுரைத் தொகுப்பும் மின்னூல்களாக Kobo Books தளத்தில் இடம்பெற்றுள்ளன. தமிழ் மின்னூல்கள் புத்தக  வர்த்தகச் சந்தையில் விற்குமா என்னும் கேள்விக்கு விடைகாண சோதனை முறையிலேயே இந்த நூல்கள் அங்கு வைக்கப்பட்டுள்ளன.Kobo Books தளத்தில் இடம்பெறும் முதல் தமிழ் மின்னூல்களும் இவையே. ஆங்கில மொழியில் உள்ள மின்னூல்களில் உள்ள அனைத்து அம்சங்களும் கொண்ட நூல்களாக இவை தயாரிக்கப்பட்டுள்ளன.

 

Kobo Books தளத்தில் search பகுதியில் நூல்களின் பெயரையோ அல்லது “ரெ.கார்த்திகேசு” என்னும் ஆசிரியர் பெயரையோ தமிழிலேயே இட்டுத் தேடினால் கிடைக்கும். நூல் ஒவ்வொன்றுக்கும் ஆகக் குறைந்த விலையான $1.99 என்ற விலையே இடப்பட்டுள்ளது. நூல்களுக்கு இதற்கும் குறைவான விலை வைப்பதை Kobo Books ஆதரிக்கவில்லை. கடன் அட்டை அல்லது PayPal வழியாகப் பணம் செலுத்திப் பெறலாம்.

 

Kobo Books தளத்தில் நூல்களை இடம் பெறச் செய்ய நூல் வெளியீட்டாளர்களுக்கு அது எந்தக் கட்டணமும் விதிப்பதில்லை. விற்பனையிலிருந்து மட்டுமே ஒரு சிறு விகிதத்தை அது எடுத்துக்கொள்ளுகிறது.

 

இணைய வாசகர்கள் இந்த முயற்சியை ஆதரித்து இன்னும் பலர் இந்த முயற்சியில் ஈடுபட உதவலாம்.

Series Navigationஇந்த நேரத்தில்——முள்வெளி-அத்தியாயம் 25 (நிறைவுப் பகுதி)

Leave a Comment

Archives