22 ஃபீமல் கோட்டயம் ( மலையாளம் )

This entry is part 17 of 26 in the series 9 டிசம்பர் 2012

ஏமாற்றிக் கெடுத்தவனை, ஏமாந்தவள் ஒருத்தி, பழி வாங்கும் பழைய கதை. ஆனால் பழைய பானையில் புதிய கள்ளு என்பது போல், வ்¢த்தியாசமான திரைக்கதை, நடிப்பு எல்லாமே.

டெஸ்ஸா ஆப்ரகாம் ( ரீமா கலிங்கல் ) பெங்களூர்¢ல் வேலை பார்க்கும் இளம் செவ்¢லித்தாய். அவளுக்கும், அவளைப் போன்றோருக்கும், ஒரே கனவு, கனடா போய் செட்டில் ஆவது. அறைத் தோழி ஒருத்தி சிரில் ( ·பகாத் ·பாசில் ) என்பவனின் டிராவல் ஏஜென்சி மூலமாக, கனடா போகும் வாய்ப்பைப் பெறுகிறாள். அதற்கு உதவும் டிகே ( சத்தார் ) என்னும் பெரிய மனிதர், விலையாகக் கேட்பது அவளது உடலை. அவளும் அதற்கு உடன்படுகிறாள். ‘ நான் ஒன்றும் கன்னிப்பெண் இல்லை ‘ என்று ஒத்துக் கொள்ளும் டெசா, சிரிலைச் சந்திக்கிறாள். சிர்¢லுக்கு அவள் மேல் காதல் உண்டாகிறது. வ்¢சா கிடைக்கும்வரை இருவரும் சிரில் வீட்டிலேயே தங்க முடிவெடுக்கிறார்கள்.

டெசா ஒரு நல்ல  நர்ஸ். சாகக்கிடைக்கும் பணக்காரக் கிழவன் ஒருவன், அவளை கல்யாணம் செய்து கொள்ள நினனக்கிறான். ஆனாலும், அவனுக்கு அவள் மேல் பாசமே தவிர காதல் இல்லை.

ஹெக்டே ( ப்¢ரதாப் போத்தன் ) இரவில் தூக்கம் வராத வியாதியுடையவன். அவனுக்கு, இளம்பெண்களுடன் உறவு கொண்டால்தான், தூக்கம் வரும். அவனுக்கு பெண்களை தருவித்துத் தரும் தொழ்¢லில்தான் இருக்கிறான் ச்¢ரில். ஆனால் அது அவனைக் காதலிக்கும் டெசாவிற்குத் தெரியாது. உணவகத்தில் டெசாவும் சிரிலும் மது அருந்திக் கொண்டிருக்கும் போது, அவளைக் கேலி செய்யும் ஒருவனை, ச்¢ர்¢ல் அடித்து விடுக்¢றான். அடிபட்டவன் கர்னாடக அரசின் மந்திரி மகன். அதனால் சில நாட்கள் தலைமறைவாகி வ்¢டுகிறான் சிரில். சிரில் இல்லாத சமயத்தில், வீட்டிற்கு வரும் ஹெக்டே, டெசாவை மயக்கமுறச் செய்து, வன்புணர்ச்சி செய்து விடுகிறான். சிரில் இதைக் கேள்விப்பட்டவுடன் ஆத்திரமடைகிறான். ஹெக்டேயை கொல்வேன் எனக் கிளம்புகிறான். ஆனால் நிலைமை மாறுகிறது. டெசாவை அகற்ற ஹெக்டே பெரும் பணம் தருகிறான்.

சிரில் டெசாவின் கைப்பையில் போதைப்பொருளை வைத்து, போலிசில் பிடித்துக் கொடுத்துவிடுகிறான். ச்¢றையில் டெசா சந்திக்கும் சுபைதா ( ராஷ்மி சத்தீஷ் ) நிறைக் கர்ப்பிணி. இரண்டு உயிர்களில் ஒன்றே பிழைக்கும் என்கிற நிலையில், டெசா தன் அனுபவத்தால், குழந்தையையும் தாயையும் காப்பாற்றுகிறாள். சுபைதா, டெசாவுக்கு நட்பாகிறாள். ஆஸ்பத்திரியில் இருந்த கிழவர் இறக்கும்போது, பாதி சொத்தை டெசா பெயருக்கு எழுதி வைத்துவிடுகிறார். அவருடைய வக்கீல் உதவியால், டெசா வெளியே வருகிறாள். சுபைதா சொன்னபடி டிகேயை சந்திக்கிறாள். அவளது நோக்கம் ஹெக்டேயையும் சிரில்லையும் பழி வாங்குவது.

ஹெக்டேயை நாற்காலியில் கட்டிப்போட்டு, பாலீதீன் கவரில் நாகப்பாம்பை வைத்து அவனது காலில் கட்டி விடுகிறாள். அசைந்தால் பாம்பு கொத்தி விடும். மரண பயமும்,  அதீத பீதியும் சேர்ந்து ஹெக்டே துடிக்க, ரசிக்கிறாள் டெசா. கடைசியில் பாம்பு கடித்து ஹெக்டே மரணமடைகிறான்.

டெசாவின் அடுத்த குறி சிரில். ஆனால் அவன் இடம் மாறிவிட்டான். அவனைத் தேடிப் போகிறாள் டெசா. தான் ஒரு புது மாடல் என்பது போல் வேடமிட்டு, அவனைத் தனியே, அவனது படகு வீட்டில் சந்திக்கிறாள். ஆனால் சிரில் அவளை அடையாளம் கண்டு கொள்கிறான். அவனது தாக்குதலை எதிர்கொள்ள முடியாத டெசா, அவனிடம் இன்னமும் தான் காதல் கொண்டிருப்பதாக நடிக்கிறாள்.  நம்பும் சிர்¢லுடன் படுக்கையை பகிர்ந்து கொள்கிறாள். ஆனால் காலையில் எழுந்திருக்கும் சிரில் கட்டிலுடன் கட்டப்பட்டிருக்கிறான். இரவு பானத்தில் மயக்க மருந்தை கலந்து விட்டிருக்கிறாள் டெசா. அவன் மயக்கத்திலிருக்கும்போதே அவனுக்கு அறுவை சிகிச்சை செய்து, அவனுடைய ஆண் அடையாளத்தை அழித்து விடுகிறாள். “ இனி எந்த பெண்ணோடும் நீ உறவு கொள்ள முடியாது. சாவை விட இதுதான் உனக்கு பெரிய தண்டனை “ என்கிறாள் டெசா.

காரியம் முடிந்து கனடா செல்ல காரில் போகும்போது டிகேயிடமிருந்து அவளுக்கு போன். டீகே செய்த உதவிக்கு கூலி கேட்கிறார் அவளது உடலை. “ அதனாலென்ன, நிச்சயமாக ‘ என்றபடியே இணைப்பை துண்டித்து, சிம் கார்டை வெளியே வீசி எறிகிறாள். அவள் விமானம் கனடா நோக்கிப் பறக்கிறது.

ராஜேஷ் குமார்  நாவல் விறுவிறுப்பு படத்தில். ரீமா கலிங்கல் தூள் கிளப்பியிருக்கிறார் டெசாவாக. குடிபோதையில் பெண்களைத் தேடும் பெரிய மனிதன் வேடத்தில் பிரதாப் போத்தன் அசத்தியிருக்கிறார். மூன்று பேர் கொண்ட கதையில் விறுவிறுப்பு செம வேகத்தில் இருக்கிறது. அனாவசிய காட்சிகள் இல்லாமல் 122 நிமிடங்களில் ஒரு திரில்லர் படத்தைத் தந்திருக்கும் இயக்குனர் ஆஷிக் அபு பாராட்டுக்குரியவர். சிறைச்சாலை காட்சிகளில் ஒளிப்பதிவாளர் சிஜு காலிட்டின் லைட்டிங் உலகத்தரமாக இருக்கிறது.

பளிச்சென்ற பிரிண்டில் டிவிடி கிடைக்கிறது. கிடைத்தால் பாருங்கள்.

0

கொசுறு

ஈகா தியேட்டர் இருக்கும் சேத்துப்பட்டு ஒரு அத்துவானக் காடு. பக்கத்தில் பாமரன் உண்ண ஓட்டலே இல்லை. இருக்கும் ஒரே ஓட்டல் கெஸ்ட் ஓட்டல். ஆனால் அங்கு பொருள்கள் எல்லாம் யானை விலை குதிரை விலை. இருக்கற இடத்துக்கு ஈகா நிர்வாகமே ஒரு காண்டீன் ஆரம்பிக்கலாம்.

ஈகா அரங்கத்தில் பத்து ரூபாய் டிக்கெட் உண்டு. ஆனால் மற்ற டிக்கெட்டெல்லாம் விற்ற பிறகுதான் தருவார்கள். முழுதும் விற்கவில்லை என்றால் நோ டென் ருபீஸ். இது எந்த  அரசாணையில் கீழ் வருகிறது என்று தெரியவில்லை. 80 சொச்சம் டிக்கெட் வாங்க பெரும் திரளான கூட்டம். வரிசையை ஒழுங்குபடுத்த அரங்க வாட்ச்மேன் கையில் லட்டி வைத்திருப்பதும் அதையும் சகித்துக் கொண்டு சின்ன பையன்கள் வரிசையில் நிற்பதும் சினிமா ஆசையில் அல்லாமல் வேறென்ன?
0

 

 

Series Navigationபி.ஜி.சம்பத்தின் “ அவன் நானல்ல ( மலையாளக்கதை ) – ஒரு பார்வைநம்பிக்கை ஒளி! (10)
author

சிறகு இரவிச்சந்திரன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *