This entry is part 9 of 46 in the series 26 ஜூன் 2011

பிடிகள் தேடி கைகளும்
ஆதாரங்கள் தேடி கால்களும்
அலையும்.
உயிர்வளிக்காய் பிதற்றும்
நுரையீரல்கள்…
வெள்ளி மறைந்து
நாளை குறித்த ஐயங்கள்
முளைக்கையில்
எங்கோ தூரத்தில் ஓர் ஊர் குருவி
தனக்கான கூட்டை கட்டி முடித்திருக்கும்.
பெருவேதனைக்குப் பின்னே
பிரசவித்த மகவு கண்டு
வலி மறந்து
புன்முறுவல் பூப்பாள்
சில நொடிகளுக்கு
முன் பிறந்த அன்னை.

– வருணன்.

Series Navigationஓர் இரவின் கீழ் சில நிலாக்கள்..புறமுகம்.