தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

25 அக்டோபர் 2020

சீக்கிரமே போயிருவேன்

Spread the love
ஷான்

வறண்டு போன வரப்பு
கருகுன அருகம் புல்லு
காருங்க பறக்குது
காத்தாலை கம்பெனிக்கு
பஸ்சுங்க பறக்குது
பனியன் கம்பெனிக்கு

ஐம்பது ஏக்கரா முதலாளி
அருமைக்காரர் தோட்டத்த
அறுத்தறுத்து வித்தாச்சு
அமெரிக்கா போறாரு
புள்ள அங்க வேலயில
இவருக்கொன்னும் வேலயில்ல

ரெண்டு ஏக்கர் முதலாளி
ரங்கசாமி எடத்துல
ராத்திரி நேரத்துல
மஞ்சக் கல்லு நட்டுட்டான்
ஐவேசு வருதுன்னான்
பூடீசு போட்டுக்கிட்டு
வாச்சு மேனா போறாரு
பங்காளி பேக்டரிக்கு

ஏரிக்கரை இடிஞ்சாச்சு
சாயப்பட்றை வந்தாச்சு
கரண்ட் இல்லா பூமியில
மோட்டாரையும் தின்னாச்சு
வெத நெல்லு சோறாச்சு
கடங்காரன் உறவாச்சு
பத்திரமும் போயாச்சு
பத்திரமா எதை வெக்க

கடசியாக் கடன் வாங்கி
வெசம் வாங்கி வெச்சிருந்தேன்
அண்ணாந்து ஊத்தரப்போ
அடிவயித்துப் பசியில
ஆடு மாடு கத்துதுங்க
தீவனம் அரிச்செடுக்க
தீவிரமா வந்துட்டேன்
சீக்கிரமே போயிருவேன்
சிரமமில்லா சீமைக்கு

– ஷான்

K. Shanmugam (9884091216)

Series Navigationகாதலின் அருமை தெரியாத காட்டுமிருகாண்டிகள்கணித மேதை ராமானுஜன் (1887-1920)

2 Comments for “சீக்கிரமே போயிருவேன்”

  • கே சண்முகம் says:

    எனது கவிதையை அங்கீகரித்ததற்கு நன்றிகள்..

  • மேகலா இராமமூர்த்தி says:

    கவிதையில் தெறிக்கின்ற யதார்த்தம் நெஞ்சைத் தொடுகின்றது…சுடுகின்றது. வாழ்த்துகள் கவிஞரே!

    -மேகலா


Leave a Comment

Archives