பிசாவும் தலாஷ் 2டும்

This entry is part 6 of 30 in the series 20 ஜனவரி 2013

தலாஷ் 2ன் நாயகி ரோஷிணி தன் மகனை ஒரு விபத்தில் பறி கொடுக்கிறாள்.  புதிதாக குடி பெயர்ந்து வந்த இடத்தில், அவளது அண்டை வீட்டுக்காரப் பெண்மணி ஆவிகளுடன் பேசும் வித்தையைத் தெரிந்திருந்த காரணத்தால், ரோஷிணியின் மகன் கரண் அவர் மூலமாக தன் தாய் தந்தையாருடன் பேச விரும்புவதாகச் சொல்வதை இருவரிடமும் சொல்கிறார். நாயகி ஆறாத் துயரம் காரணமாக, ஒரு நாள் மகளின் ஆவியுடன் பேசத் துணிகிறாள்.  மகனும் தன் தாயின் வருத்தத்தைப் போக்கும் வகையில் எண்ணங்களை அந்தப் பெண்மணி மூலமாக எழுதிக் காட்டுகிறான். அன்று முதல் தாய் மகிழ்ச்சியுடன் வாழ முயற்சிக்கிறாள்.  அதே நேரத்தில், மகன் தன் தந்தையிடமும் பேச விரும்புகிறான். ஆனால் தந்தையோ காவல் அதிகாரி என்பதால் ஆவி பற்றிய நம்பிக்கை இல்லாத காரணத்தால் தன் மனைவி செய்யும் முயற்சியை எதிர்த்துப் பிரிக்கிறார்கள்.  ஆனால் படத்தின் இறுதியில் காவல் அதிகாரி சிகாவத்தும் ஆவி இருப்பதை நம்பி, தன் மகன் தனக்காகக் கொடுத்த செய்தியினை படித்து வருந்துகிறான்.
சுற்றுலா சென்ற இடத்தில் குழந்தைகள் இருவர் ரோஷிணியிடமும் சிகாவத்திடமும் சுற்றி பார்த்து வருகிறோம் என்று சொல்லிவிட்டு, அங்கு ஏரிக்கரையில் இருந்த படகினை எடுத்துச் சென்று படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளாகின்றனர்.  நண்பரின் மகனைக் காப்பாற்ற முடிந்த சிகாவத்திற்கு, மகனைக் காப்பாற்ற முடியாமல் போனது.  அது தன்னுடைய அசிர்த்தையின் காரணமாக ஏற்பட்டதை எண்ணி எண்ணி வருந்தும் காவலதிகாரி இறுதியில் மகன் கடிதத்தில் “விபத்திற்குக் காரணம் தான் தான், தந்தையிடம் தவறு ஏதும் கிடையாது.  அதனால் வருத்தப்படாமல், தாயுடன் மகிழ்ச்சியுடன் வாழுங்கள்..!” என்று கூறியிருப்பதைப் படித்து அழுகிறான்.
நாயகன் இதை எப்படி ஏற்கிறான் என்பதே கதை. மிகவும் திருப்தியுடன் வாழ்ந்து இறப்பவர்கள் நல் ஆவிகளாக அலைவார்கள்.  அதிருப்தியுடன் இறப்பவர்கள் மனித ரூபம் எடுத்து அலைவார்கள் என்று ஆவியுடன் பேசும் பெண்மணி கூறும் கூற்று முதலில் புரியாது போனாலும், கதை முடியும் தருணத்தில் அதைப் புரிய வைக்கிறார் இயக்குநர்.
மிகவும் பிரபலமான திரைப்படக் கலைஞன் ஒருவன் வண்டியில் சென்று, கடற்கரை அருகே விபத்துக்குள்ளாகி, கடலில் மூழ்கி இறப்பதிலிருந்து கதை ஆரம்பித்து, அதே போன்று மற்றொரு விபத்து ஏற்பட்டு கதையை முடிவிற்கு கொண்டு வந்து, அதில் விபத்தில் இறந்தவர் எப்படி, விபத்திற்குக் காரணமானவர்களைப் பழி வாங்குகிறார் என்பதை மிகவும் சுவாரசியமாகச் சொல்லிச் செல்கின்றனர்.
ஆனால் ‘பிசா’ படத்தின் ஆரம்பமே ஆவி பற்றி ஆராய்ச்சியுடன் ஆரம்பித்து, கதை முழுக்க ஆவி கிடையாது என்று சொல்லிக் கொண்டே வந்து, இறுதியில் ஆவி பற்றிய அனுபவத்தை நாயகன் பெறுவதாகக் காட்டுகின்றனர்.  அமானுஷ்யத்தில் ஆரம்பித்து, சாதாரண கதையாக நகர்த்தி, இறுதியில் அமானுஷ்யத்தில் முடித்ததும் ரசிக்கத்தக்கதாகவே இருந்தது.
படங்கள் இரண்டுமே பலரின் பாராட்டைப் பெற்றிருந்ததால் தான் நான் பார்க்கும் எண்ணம் கொண்டேன்.  இதில் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகர்ந்து கொள்ள எண்ணியே இச்சிறு கட்டுரையை எழுதத் துணிந்தேன்.  இந்தப் படங்களைப் பார்க்காதவர்கள், படங்களை கண்டு மகிழுங்கள்.  கதையின் மையக் கருவினை கூறாததற்கு அதுவும் காரணம்.  நேரம் உள்ளவர்கள் இணையத்தின் கதையைப் படித்துத் தெரிந்து கொள்ளலாம்.  நேரம் இல்லாதவர்கள் படத்தை நேரடியாகப் பார்த்து ரசிக்கலாம். ஆவிகள் உலகில் நடமாடுகின்றனவா என்ற கேள்விக்கு நீங்களே பதிலையும் ஆராய்ந்து புரிந்து கொள்ளலாம்.

 

Series Navigationநத்தம்போல் கேடும் உளதாகுஞ் சாக்காடும். . .மணலும் (வாலிகையும்) நுரையும் – கலீல் ஜிப்ரான் – 8
author

சித்ரா சிவகுமார், ஹாங்காங்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *