கவிதை பக்கம்
காலியாக சிலகாலம்
கவிதையான நிகழ்வுகளும்
குறைவான காலம்
திடீரென பள்ளிகூட அலுமினி கூட்டம் –
பழைய சினேகிதிகள் ஒவ்வொருவராய்
பேச்புக்கில் கண்டுபிடிப்பு – சபை நிறைந்தது
பேச்புக் கூட்ட பக்க உரையாடல்
பள்ளிகூட வராந்தாவாக சலசலப்பு
பலவருடத்திற்கு பிறகு புகைபடத்தில்,
அவளா இவள் ? இவளா அவள் ?
ஆறுவித்தியாச துணுக்காக
நினைவுகளும்,நிஜங்களும்..
சிரிக்க வைத்தவள்,சீண்டியவள்
சிணுங்கியவள்,கலகலத்தவள் –
ம்றுபடியும் பார்க்கையில்,
தீக்குச்சி நெருப்பென சீண்டப்பட்ட
நிகழ்வுகளும் மறைந்து போனது
காலை முதல் மாலை வரை
வாழ்க்கை முழுவதற்கும் சேர்த்து
சிரித்தது போல் சிரித்தது…
பாட நேரத்தில் ஆசிரியர் அசைவுகளை
கவனமாக கவனித்து – மதியஉணவுடன்
சேர்த்து அரைத்து சிரித்தது…
நினைவுகள் யாவும்
பள்ளி வராந்தா ஒலியாக
உடம்பு முழுதும் பரவியது..
இக்குதுகூலம் கவிதை இல்லையெனில்
வேறு எது கவிதையாக கூடும்?
– சித்ரா
(k_chithra@yahoo.com)
- மணலும் (வாலிகையும்) நுரையும் – (9)
- பறக்காத பறவைகள்- சிறுகதை
- சிரித்துக் கொண்டே இருக்கும் பொம்மைகள்
- போதி மரம் பாகம் ஒன்று – யசோதரா அத்தியாயம் – 5
- ‘நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து……….14 வண்ணநிலவன் – ‘கடல்புரத்தில்’
- இந்து முசுலிம் அடிப்படைவாதிகளால் பந்தாடப்படும் கமல்
- கற்றறிந்தார் ஏத்தும் கலியில்’ வாழ்வியல் அறங்கள்
- சி.சு. செல்லப்பா – தமிழகம் உணராத ஒரு வாமனாவதார நிகழ்வு
- வந்தியத்தேவன்: அவன் ஒரு கதாநாயகன்
- வேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -1 பாகம் -3
- வங்க தேசம் முதல் பாகிஸ்தான் வரை : இந்துப்பெண்களின் மீது தொடரும் பாலியல் பலாத்காரம்
- அக்னிப்பிரவேசம்-20
- மௌலானா அபுல் கலாம் ஆசாத் – பங்களாதேஷில் தாமதமாக வந்த நீதி
- பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! சுருள் நிபுலாவிலிருந்து (Helix Nebula) வெளியேறும் சூரிய மண்டல வடிவுள்ள அண்டத் துண்டுகள்
- பள்ளியெழுச்சி
- விற்பனைக்குப் பேய்
- விழித்தெழுக என் தேசம் ! – இரவீந்திரநாத் தாகூர்
- ஒரு வண்ணத்துப் பூச்சியின் மரணம்
- வால்ட் விட்மன் வசன கவிதை -8 என்னைப் பற்றிய பாடல் (Song of Myself)
- பூரண சுதந்திரம் யாருக்கு ?
- விதி
- தாய்மை
- கவிஞர் நெப்போலியனின் காதல் கடிதங்கள் 2013
- உண்மையே உன் நிறம் என்ன?
- ஜோதிர்லதா கிரிஜாவின் நந்தவனத்து நறுமலர்கள் – 2
- குப்பை
- கவிதை பக்கம்
- ரயில் நிலைய அவதிகள்