தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

14 ஜூலை 2019

தலிபான்களின் தீவிரவாதம் சரியா

ஹெச்.ஜி.ரசூல்

Spread the love

Taliban_kills_woman-vi

Taliban fighters are seen in an undisclosed location in Afghanistan

1)இது சாதாரண பாய்முடையும் இஸ்லாமிய நம்பிக்கையுள்ள முஸ்லிம் சகோதரியின் தீவிரவாதமல்ல. ரோட்டோர கடைகளில் தனது உழைப்பை செலவளிக்கும் ஏழை எளிய முஸ்லிம் சகோதரனின் தீவிரவாதமுமல்ல. இது தலிபான் தீவிரவாதத்தின் ஒரு காட்சி.

2)ஆப்கன் தலைநகர் காபூலிலிருந்து 130கிமீ தொலைவிலுள்ள இரண்டாயிரம் நூற்றாண்டுக்கும் மேலான பழமைவாய்ந்த 175 மற்றும் 120 அடி உயரமுள்ள புத்த சிலைகளை தலிபான்கள் ராக்கெட் ஏவுகணைகளை டைனமேட் வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்து தகர்த்து அழித்தனர். காபூலில் வைக்கப்பட்டிருந்த ஏறத்தாழ ஆறாயிரம் புத்தச் சிலைகளையும் அழித்தொழித்தனர்.தலிபானின் உயர்நிலைத்தலைவர் முல்லா முகமது உமரின் ஆணைப்படியே 2001இல்இந்த அழித்தொழிப்பு அரசியல் மேலெழும்பியது.

3)இஸ்லாத்தின் புனிதநூலான குரான் பிற சமய தெய்வங்களை திட்டாதீர்கள் என்று கூறுகிறது…தலிபான்களின் தீவிரவாதம் சரியா?

4)நடிகர் கமலஹாஸனின் விஸ்வரூபம் திரைப்படத்திற்கான தடை மற்றும் தடை நீக்கம்,தீவிரவாதம் குறித்த விவாதங்கள் எதிரும் புதிருமாக நடைபெற்றுவருகையில் தவ்கீது பேசும் முஸ்லிம் தலைவர்களில் சிலர் மிகவும் கீழ்த்தரமான வசவுகளை பகிர்கின்றனர். அதில் ஒன்று நடிகர் கமல்ஹாசனையும் அவர்தம் மகள் சுருதிஹாசனையும் இணைத்து பேசிய பேச்சு. பிஜே எனும் பி.ஜெய்னுல் ஆப்தீன் அவர்கள் பேசிய இப்பேச்சு உலகின் மிக கீழ்த்தரமான பேச்சுகளில் ஒன்றாகவே இருக்கிறது. இது குரானிய அறவியலுக்கு எதிரான பேச்சு.

இந்நிலையில் முஸ்லிம் கூட்டமைப்பு தலைவர்கள் முஸ்லிம்களிடமும் முஸ்லிம் அல்லாதவர்களிடமும் இதற்கு இணையாக செய்யவேண்டிய பரப்புரை என்பதே இஸ்லாமும் தலிபானியமும் வெவ்வேறானது என்பதை பரப்புரை செய்ய வேண்டியதே ஆகும். இதை ஏன் அவர்கள் செய்ய மறுக்கிறார்கள்.

5)தலிபான் என்பதற்கு முஸ்லிம் என்பது பொருளல்ல. மாணவன் என்பதே பொருள்.தாலிப் என்ற அரபுவார்த்தையிலிருந்தே இது உருவாகிறது
6)எழுபதுகளில் ஆப்கன் – சோவியத் முரண்சூழலில் சோவியத்திற்கு,மார்க்ஸிய பின்னணி சார்ந்த ஆப்கன் அரசுக்கும் எதிராக அமெரிக்க உருவாக்கிய முஜாஹிதீன் அமைப்பினரின் வளர்ப்புக் குழந்தையே தலிபானியம்.

7)இது வகாபிய சித்தாந்த அரசியலை உள்வாங்கிய அமைப்பு. முஸ்லிம்பெண்களுக்கு எதிரான கடுமையான வன்முறையை நிகழ்த்தியது.
8)பாமியானின் மிக உயரமான புத்தச் சிலைகளை ராக்கெட் ஏவுகணைகளால் அழித்து ஒழித்தது.

9)முஸ்லிம் பெண்கல்விக்கு ஆதரவாகப் பேசிய மலாலாவை சுட்டுக் கொல்ல முயன்றது.

10)கஞ்சா உற்பத்தியே ஆப்கனின் விவசாயப்பொருளாதாரம்.இதை மேலைநாடுகளுக்கு காபிர்களுக்கும் விநியோகிப்பது ஷரிஆவில் அனுமதிக்கப்பட்ட்து என்று பேசியது.

11)விஸ்வரூபத்திற்கு எதிராக குரல் கொடுக்கும் சில முக்கியத் தலைவர்கள் இந்தியாவில் தடை செய்யப் பட்ட சிமி அமைப்பில் செயல்பட்டவர்கள். அதன் சித்தாந்த பின்னணியைக் கொண்டவர்கள். இவர்கள் தீவிரவாத்த்திற்கு எதிராக குரல் கொடுக்கிறார்கள் என்றால் எப்படி பிற இஸ்லாமிய அமைப்பினர்கள் இவர்களை நம்புகிறார்கள் என்றே தெரியவில்லை.இன்று இவர்கள் ஜனநாயக நடைமுறைக்கு திரும்பி இருப்பது ஒரு நல்ல விஷயம்.

12) உலகாளவில் இயங்கிக்கொண்டிருக்கும் வகாபிய ஆதரவு தீவிரவாத அமைப்புகளின் வன்முறை அரசியல் குறித்தும் இவர்கள் பொதுமக்கள் மத்தியில் தங்கள் பரப்புரையை செய்யவேண்டும்..

13) இஸ்லாத்தின் பெயரை வைத்துக் கொண்டு வகாபிசமோ பிற சமயக் கடவுள்களைத் தாக்குகிறது. புத்தசிலைகளை தகர்க்கிறது. சூபிகளின் சமாதிகளை தரைமட்டமாக்குகிறது.ஒடுக்கப்பட்ட முஸ்லிம்களின் உரிமைகளுக்காக போராடுவதை தவிர்த்த தீவிரவாதத்தை பரப்புரை செய்கிறது..தலிபான் முஜாஹிதீன் இயக்கம்,,லஷ்கர் ஐ தொய்பா,லஷ்கர் ஐ ஜப்பார்,மார்கஸ் தாவா இர்ஷாத், ஜமாஅத் தாவா,ஹரகதுல் முஜாஹிதீன், ஹரகதுல் அன்ஸார், என பல பெயர்களில் நடமாடுகிறது. இவ்வியக்கங்களால்தான் முஸ்லிம்கள் அனைவரும் தீவிரவாதிகள் என்கிற ஒரு மாயையான கருத்துருவாக்கம் முஸ்லிம் அல்லாதவர்களின் பொதுப்புத்தியில் உருவாகி இருக்கிறதோ என்கிற சந்தேகம் வலுவடைந்து உள்ளது.

14) ஆபிரிக்கநாடான மாலியில்,மர்றும் சோமாலியாவில் சூபிஞானிகளின் நினைவிடங்களை ஆயுதங்களால் தகர்த்து அழித்துக் கொண்டிருக்கும் வகாபிய இயங்கங்களை ஆதரித்துதமிழ்சூலில் எழுதி முஸ்லிம்களிடம் வகாபிய வன்முறை மனத்தை உருவாக்கும் இயக்கங்களின் நிலைபாடை எதிர்த்தும் இந்த முஸ்லிம் கூட்டமைப்பினர் பரப்புரை செய்யவேண்டும்.இதுவே பல்சமயசூழலில்தமிழக முஸ்லிம்களின் ஜனநாயக உணர்வை சகிப்புத்தன்மையை உலக மக்களுக்கு உணர்த்தும்

Series Navigationடோண்டு ராகவன் – அஞ்சலிபூமிக்கு அருகே 17,000 மைல் தூரத்தில் நிலவுக்கும் இடையே முதன்முறைக் குறுக்கிட்டுக் கடக்கப் போகும் முரண்கோள் [Asteroid]

13 Comments for “தலிபான்களின் தீவிரவாதம் சரியா”

 • paandiyan says:

  நாக்கில் தேன் தடவி எப்படி பசபுவது எப்படி ?? இப்படிதான் ……..ஆகா ஒரு ஜனநாயக நாட்டில் சட்ட விரோதமாக பண்ணும் காரியதிர்ற்கு சட்டம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூட சொல்லவில்லை . அது சரி ஒவைசி பற்றி ஒன்றும் இல்லை !!!??!!!

 • punaipeyaril says:

  தலிபான்களின் தீவிரவாதம் சரியா –> “தாலி அறுக்கப்படவர்களிடம் கேட்டால் தெரியும்”

 • ராஜ நரசிம்ம விவேக் says:

  அதே புத்தர் சிலை இருந்தாலும் தற்போது இருக்கும் ஆப்கான் அரசுமூலாம் அது புணரமைப்புக்கு உகந்தது அல்ல என்றும், நீக்கபட்டு இருக்கும், காரணம் சீனாவின் முக்கிய் உற்பத்திக்கு உரியதாக கருதப்படும் தாமிரம் ( copper )உள்ளது என்று உடைக்கபட்ட புத்தர் சிலை அடியில் இருந்து எடுக்க உள்ளது அதை காரிய கூத்தாடி அமெரிக்காவும், பொருளாதர கபளீஸ்வரன் சீனாவும் இனைந்து பெட்ரோலுக்கு இணையான பொருளாதாரத்தினை தரக்கூடிய சக்தியுடைய கனிம வேட்டைக்கு உனக்கு பாடி எனக்கு பாதி என்று அப்பம் திருடிய பூணைபோன்று இருக்கும் இவர்களின் சதியினாலேயே அது நடந்தேரியது. உண்மையா எனவே உண்மையிலேயே இஸ்லாமிய கலச்சார சீரழிவு ஏற்படுத்த இருந்த கம்யூனிச போர்வைகொண்டு வந்த ரஷ்யாவின கலாச்சார சீரழிவிலிருந்து ( உலகுக்கே தெரியும் ரஷ்யாவில் எந்தளவிற்க்கு பெண்கள் கூவி கூவி விபசாரம் செய்தார்கள் என்று )அவர்களின் கலாச்சார ஆபத்துகளிலிருந்து காக்க உள் நாட்டில் இருந்த சமூக சிறு அமைப்பே அது ஆனால் உண்மையான தொண்டர்கள் அழிக்கபட்டு அதன் பின்பு அரசு ரீதியில் உருவான அந்த தாலிபான்கள் இன்றைய அமெரிக்க கைத்தடிகளே அவர்கள் இன்னும் சொல்ல போனால் இஸ்லாமிய போர்வை போர்த்தி இருக்கும் துரோகியகளே இவர்கள். அவர்களின் செயல்பாடுகளை எதோ எல்லா ஆப்கானிய இஸ்லாமியர்களின் செயல்பாடு போன்று காட்டுவது தவறு. உதாரணத்திற்க்கு இந்தியாவில் இருக்கும் ஆர் எஸ் எஸ் மற்றும் பஜ்ரங்தள் அமைப்பினர் செயல்பாடு அனைத்து இந்துக்களின் செயல்பாடு போன்று காட்டுவதற்க்கு சமம்

  ராஜ நரசிம்ம விவேக்
  தஞ்சை

  • paandiyan says:

   ஆகா பிரமாதம் , என்ன ஒரு coverage . அது சரி ஒரு வாதத்திற்கு இது உண்மை என்றால் முஸ்லிம் எல்லாம் மூளை இல்லாத கூட்டமா என்ன ? அது சரி நீங்கள் சொன்னால் உண்மையாதான் இருக்கும் !! மசூதிக்கு அடியில் தாமிரம் இருந்தால் உலகம் பூராம் வேட்டையாடுங்கள், பழியை தூக்கி இளித்தவாயன் amercia மீது போட்டுவிடுவோம்

 • மனிதன் says:

  தலிபான்களின் தீவிரவாதம் சரியா?
  சரியே

  1. அங்கு என்ன நடந்து என்றே அறியாமல், போட்டோவை வைத்து கருத்து கூறுவது மடமை.
  2. அங்கு புத்தரை வழிபடும் மக்கள் இல்லை. இருக்கும் மக்களுக்கும் அவசியம் இல்லை. தன் நாட்டின்(afghan) எந்த முயற்சிக்கும் அக்கறை செலுத்தாதவர்கள், அவர்களுக்கு அவசியப்படாத சிலை உடைப்புக்காக கூக்குரல் இடுகிறார்கள். அவர்களின் நாடு, அவர்களின் இஷ்டம். இதில் என்ன தவறு.
  3 பதில் 2.ஐ பார்க்க
  4. தரக்குறைவாக பேசுவது சரியல்ல, யாராக இருப்பினும். இங்கு கமல், தாலிபானை சித்தரிப்பதான தொனிப்பொருளில், முஸ்லிம்களின் நடத்தைகளை தவறான விளக்கத்துடன் வெளிப்படுத்தியுள்ளார். ஒரு சமூக மேன்பட்டுக்காக உழைக்காவிட்டாலும் பரவாயில்லை, தன சுய இலாபத்துக்காக ஒன்றுபட்டுள்ள உறவில் விரிசலை ஏற்படுத்தும் விதமாக ஒரு பிரிவினரை தாக்கி படம் பிடித்திருப்பது, காசுக்காக எதையும் செய்ய தயாரான ஒரு நயவஞ்சகனின் முகம் தெரிகிறது.
  5. …..!
  6. …!
  7. ஒருவரின் கருத்து உண்மையான நிலைபாடாகாது. வெளியில் இருந்து பார்த்தால் எல்லாமே வேறுவிதமாகத்தான் தெரியும். உண்மை அறிந்து பேசவும்.
  8. ஒரே கேள்வி, வெவ்வேறு இடங்களில் …
  9. நடந்தது என்ன என்பதை அறியாமல், பத்திரிகை செய்தியை வைத்து கருத்து கூறுவது அறிவீனம். ரசியாவுடன் நேருக்கு நேர் மோதியவர்கள். புத்தியற்றவர்கள் அல்லர். மேலை நாடுகளின் விரோதியானால், மீடியாக்களில் வரும் செய்தி இப்படித்தான் இருக்கும். உண்மை பேச மானிட நேயம் வேண்டும்.
  10. க………. உற்பத்தியே ஆப்கனின் விவசாயப்பொருளாதாரம்-முட்டாள் தனமான கேள்வி. ஒரு நாட்டை கேவலப்படுத்த வேண்டுமென்றால், எதையும் கூறுவீர்கள் . ஏன் , அவர்களும் உங்களை போல் மனிதர்கள் தானே.
  11. தனிமனித சுதந்திரம் என்பதை தவறாக கையாளும் போதுதான் பிரச்சினைகள் வருகிறது. கமலின் “விஸ்வரூபம்” ,கருத்துச் சுதந்திரம் அல்ல. காசுக்காக எதையும் செய்ய முனையும் கேவலமான எண்ணம். மத நம்பிக்கை இல்லாதவன் எதற்கு, இறை நம்பிக்கையை தவறாக கொள்ளும் விதமாக கருத்து சொல்ல முற்படுவது? மாற்றான் தாய் மனப்பான்மை இருந்தால், இதை உணர முடியாது தான் .
  12. அவசியமில்லாத விடயம்
  13. எல்லா தீவிரவாத செயல்களையும் பிறர் செய்துவிட்டு, இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும் சாடுவது, இப்போது விசாரணைகளில் வெளி வருகிறது. தீவிரவாதிகள் உருவாகவில்லை. இஸ்லாத்தை எதிர்பவர்கள் வீணான உரு கொடுத்துள்ளார்கள்.
  14. வீணான கருத்துப்பாட்டையும், தவறான அணுகுமுறையும் கொண்ட வார்த்தை வரிகளால் அடுத்தவரின் புகழ்ச்சியில் குளிர்காய விரும்புகிறீர். “சத்தியம் வந்தது. அசத்தியம் அழிந்தது.
  நிச்சயம் அசத்தியம் அழிந்தே தீரும் ”

  இறுதியாக ,paandiyan . முஸ்லிம் எதிர்ப்பு எண்ணம் உங்களிடம் நிறையவே உண்டு . மனிதனுக்காகத்தான் எல்லா மார்க்கமும் . உங்கள் உரிமை ,நீங்கள் விரும்புவதை வழிபடுவது. மற்றவர் வழிபடுதலை அவர் விருப்பில் விடுங்கள். கண்ணியப்படுத்தாவிட்டலும் பரவாயில்லை , களங்கப்படுத்தாதீர்கள். வழிபடுதலை முடிந்தால் என்னவென்று தெரிய முயற்சியுங்கள். உங்களுக்கு உங்கள் மார்க்கம் , அவர்களுக்கு அவர்கள் மார்க்கம்.
  மனித நேயம் வளரட்டும் ! வாழ்க நலமுடன் அனைவரும் !

  • paandiyan says:

   //மனித நேயம் வளரட்டும் ! வாழ்க நலமுடன் அனைவரும் !

   //
   and also see the comment;
   அங்கு புத்தரை வழிபடும் மக்கள் இல்லை. இருக்கும் மக்களுக்கும் அவசியம் இல்லை. தன் நாட்டின்(afghan) எந்த முயற்சிக்கும் அக்கறை செலுத்தாதவர்கள், அவர்களுக்கு அவசியப்படாத சிலை உடைப்புக்காக கூக்குரல் இடுகிறார்கள். அவர்களின் நாடு, அவர்களின் இஷ்டம். இதில் என்ன தவறு.

   getting any heart attack after reading………….

 • தங்கமணி says:

  //1. அங்கு என்ன நடந்து என்றே அறியாமல், போட்டோவை வைத்து கருத்து கூறுவது மடமை.//
  http://ibnlive.in.com/news/taliban-publicly-execute-woman-near-kabul/270015-2.html

  //2. அங்கு புத்தரை வழிபடும் மக்கள் இல்லை. இருக்கும் மக்களுக்கும் அவசியம் இல்லை. தன் நாட்டின்(afghan) எந்த முயற்சிக்கும் அக்கறை செலுத்தாதவர்கள், அவர்களுக்கு அவசியப்படாத சிலை உடைப்புக்காக கூக்குரல் இடுகிறார்கள். அவர்களின் நாடு, அவர்களின் இஷ்டம். இதில் என்ன தவறு.
  //
  ஆப்கானிஸ்தானில் இந்துக்கள் அப்போதும் இருந்தார்கள் இப்போதும் இருக்கிறார்கள். இந்துக்களை பொறுத்தமட்டில், புத்தரும் விஷ்ணு அவதாரம். ஆகவே சிறுபான்மை இந்துக்களது உணர்வுகளை புண்படுத்தி அவர்கள் வணங்கும் புத்தர் சிலையை உடைத்தது சரியா?

  //3 பதில் 2.ஐ பார்க்க
  //இஸ்லாத்தின் புனிதநூலான குரான் பிற சமய தெய்வங்களை திட்டாதீர்கள் என்று கூறுகிறது…தலிபான்களின் தீவிரவாதம் சரியா?//
  இஸ்லாத்தின் புனித நூலான குரான் பிற சமய தெய்வங்களைதிட்டாதீர்கள் என்று எதற்காக கூறுகிறது? அப்போது இஸ்லாமிய தெய்வத்தை மற்றவர்கள் திட்டுவார்கள் என்று பயந்துதான் அப்படி திட்டாதீர்கள் என்று சொல்கிறது. ஆனால் குரானே ஆரம்பத்திலிருந்து கடைசி வரை மற்றவர்களது தெய்வங்களை திட்டுகிறது. அந்த தெய்வங்கள் கையாலாகாத தெய்வங்கள், வெறும் சிலைகள், உடையுங்கள் என்றெல்லாம் கூச்சல் போடுகிறது.

  //4. தரக்குறைவாக பேசுவது சரியல்ல, யாராக இருப்பினும். இங்கு கமல், தாலிபானை சித்தரிப்பதான தொனிப்பொருளில், முஸ்லிம்களின் நடத்தைகளை தவறான விளக்கத்துடன் வெளிப்படுத்தியுள்ளார். ஒரு சமூக மேன்பட்டுக்காக உழைக்காவிட்டாலும் பரவாயில்லை, தன சுய இலாபத்துக்காக ஒன்றுபட்டுள்ள உறவில் விரிசலை ஏற்படுத்தும் விதமாக ஒரு பிரிவினரை தாக்கி படம் பிடித்திருப்பது, காசுக்காக எதையும் செய்ய தயாரான ஒரு நயவஞ்சகனின் முகம் தெரிகிறது.//

  கமல் அந்த படத்தில் தாலிபானிய முஸ்லீம்களையும் மற்ற முஸ்லீம்களையும் பிரித்து காட்டியுள்ளார். அது தாலிபான் ஆதரவாளரான உங்களுக்கு பொறுக்கவில்லை என்று உங்கள் முகம் தெரிகிறது.

  //7. ஒருவரின் கருத்து உண்மையான நிலைபாடாகாது. வெளியில் இருந்து பார்த்தால் எல்லாமே வேறுவிதமாகத்தான் தெரியும். உண்மை அறிந்து பேசவும்.//
  வஹாபிய கருத்தாக்கம் இன்னமும் பெண்கள் மீதான வன்முறைக்கு குரானை துணைக்கழைத்து செய்துவருகிறது. இதில் வேறு என்ன உண்மை இருக்கிறது?

  /9. நடந்தது என்ன என்பதை அறியாமல், பத்திரிகை செய்தியை வைத்து கருத்து கூறுவது அறிவீனம். ரசியாவுடன் நேருக்கு நேர் மோதியவர்கள். புத்தியற்றவர்கள் அல்லர். மேலை நாடுகளின் விரோதியானால், மீடியாக்களில் வரும் செய்தி இப்படித்தான் இருக்கும். உண்மை பேச மானிட நேயம் வேண்டும்.
  /
  மலாலாவை சுட்டுகொன்றது தாங்களே என்று தாலிபானே சொல்லிவிட்ட பிறகும் இப்படி மானிட நேயத்தை பற்றி தாலிபான் ஆதரவாளர் பேசுவதற்கு மிகுந்த தைரியம் வேண்டும்.

  //10. க………. உற்பத்தியே ஆப்கனின் விவசாயப்பொருளாதாரம்-முட்டாள் தனமான கேள்வி. ஒரு நாட்டை கேவலப்படுத்த வேண்டுமென்றால், எதையும் கூறுவீர்கள் . ஏன் , அவர்களும் உங்களை போல் மனிதர்கள் தானே.//
  கஞ்சா உற்பத்தி அல்ல ஹெராயின் உற்பத்தி. உலகத்தின் முக்கியமான ஹெராயின் உற்பத்தி தளம் ஆப்கானிஸ்தான். அதுவும் தாலிபான் அந்த நாட்டை ஆண்டபோது. இதில் என்ன அவர்கள் மனிதர்கள்தானே என்ற சால்ஜாப்பு. மற்றவர்கள் எல்லோரும் ஹெராயின் உற்பத்தி செய்தா பிழைக்கிறார்கள்?

  //11. தனிமனித சுதந்திரம் என்பதை தவறாக கையாளும் போதுதான் பிரச்சினைகள் வருகிறது. கமலின் “விஸ்வரூபம்” ,கருத்துச் சுதந்திரம் அல்ல. காசுக்காக எதையும் செய்ய முனையும் கேவலமான எண்ணம். மத நம்பிக்கை இல்லாதவன் எதற்கு, இறை நம்பிக்கையை தவறாக கொள்ளும் விதமாக கருத்து சொல்ல முற்படுவது? மாற்றான் தாய் மனப்பான்மை இருந்தால், இதை உணர முடியாது தான் .//
  கமலின் விஸ்வரூபம் ஒரு காபிரின் நப்பாசை மனநிலையிலிருந்து எடுக்கப்பட்ட படம். முஸ்லீம்கள் வேறு தாலிபான் வேறு, தாலிபான் கெட்டது. சாதாரண முஸ்லீம்கள் நல்லவர்கள் என்று எடுக்கப்பட்ட படம். அதில் என்ன கேவலத்தை கண்டுவிட்டீர்கள்?

  //12. அவசியமில்லாத விடயம்//
  ஏனெனில் அந்த வஹாபியமே இந்த “தமிழன்” ஆதரிக்கும் விஷயம்.

  //13. எல்லா தீவிரவாத செயல்களையும் பிறர் செய்துவிட்டு, இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும் சாடுவது, இப்போது விசாரணைகளில் வெளி வருகிறது. தீவிரவாதிகள் உருவாகவில்லை. இஸ்லாத்தை எதிர்பவர்கள் வீணான உரு கொடுத்துள்ளார்கள்.//
  ஆமாம், இந்துக்களும் யூதர்களும் சென்று சூபி வணக்கத்தலங்களை அழிக்கிறார்கள். ஜப்பானிய பௌத்தர்கள் போய் ஈராக்கில் ஷியா பிரிவினர் இருக்கும் சந்தைகளில் குண்டுவைக்கிறார்கள் என்று பேசுங்களேன். நம்புவதற்கு உங்களிடம் ஏமாளிகளா பஞ்சம்?

  //14. வீணான கருத்துப்பாட்டையும், தவறான அணுகுமுறையும் கொண்ட வார்த்தை வரிகளால் அடுத்தவரின் புகழ்ச்சியில் குளிர்காய விரும்புகிறீர். //
  இதற்கும் ரஸூல் எழுதியதற்கும் என்ன சம்பந்தம்?

  • மனிதன் says:

   1. அங்கு என்ன நடந்து என்றே அறியாமல், போட்டோவை வைத்து கருத்து கூறுவது மடமை.//
   இப்போதும் சொல்கிறேன், நடுநிலையான செய்தியை படிக்கவும்.

   //ஆப்கானிஸ்தானில் இந்துக்கள் அப்போதும் இருந்தார்கள் இப்போதும் இருக்கிறார்கள். இந்துக்களை பொறுத்தமட்டில், புத்தரும் விஷ்ணு அவதாரம். ஆகவே சிறுபான்மை இந்துக்களது உணர்வுகளை புண்படுத்தி அவர்கள் வணங்கும் புத்தர் சிலையை உடைத்தது சரியா?//

   Over 99% of the Afghan population is Muslim. தகவல் http://en.wikipedia.org/wiki/Afghanistan.அவர்கள் செய்தது தவறு. இஸ்லாம் அனுமதிக்காத ஒன்று. நடந்தது எதனால் என்பதை சகோதரர் இனியவன் குறிப்பிட்டுள்ளார்.

   இலங்கையில் புத்தரை வழிபடுவோரே, தமிழ் இந்துக்களை கொன்றார்கள். அப்போது நீர் எங்கே போய் இருந்தீர். இவ்விரண்டில் நீர் எந்த பக்கம் ? ஒருவர் இருவரல்ல, ஒரு இலட்சத்துக்கும் மேல் ! இந்திய அரசே உதவி புரிந்தது ! இது எந்த ஊர் நியாயம்.

   //இஸ்லாத்தின் புனிதநூலான குரான் பிற சமய தெய்வங்களை திட்டாதீர்கள் என்று கூறுகிறது…தலிபான்களின் தீவிரவாதம் சரியா?//
   முன்பு குறிப்பிட்டது போல் அவர்கள் செய்தது தவறு. இஸ்லாம் அனுமதிக்காத ஒன்று. நடந்தது எதனால் என்பதை சகோதரர் இனியவன் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும் யார் செய்தலும் தவறு தவாறு தான்.

   //இஸ்லாத்தின் புனித நூலான குரான் பிற சமய தெய்வங்களைதிட்டாதீர்கள் என்று எதற்காக கூறுகிறது? அப்போது இஸ்லாமிய தெய்வத்தை மற்றவர்கள் திட்டுவார்கள் என்று பயந்துதான் அப்படி திட்டாதீர்கள் என்று சொல்கிறது.//
   யாரையும் மனம் நோக நடக்கக்கூடாதென்பதற்காக! அகௌரவ படுத்தக்கூடாதென்பதற்காக. அப்படி செய்தல் தண்டனைக்குரிய பாவமாகும்.

   //ஆனால் குரானே ஆரம்பத்திலிருந்து கடைசி வரை மற்றவர்களது தெய்வங்களை திட்டுகிறது. ………………. போடுகிறது.//
   முன்னுக்கு பின் முரணான கேள்வி. குர்ஹானில் குறிப்பிடாதவற்றை குறித்திருப்பது மத விரோத போக்கை தெளிவாக காட்டுகிறது. எல்லா மதங்களும் மனிதனுக்காகவே. ஒழுங்குற கற்று, ஒப்பிட்டு பார்த்தால், உண்மை அறிய வாய்ப்புண்டு. இல்லை “நான் சரி” என்று தனக்குத் தானே வரையரை இட்டுக்கொண்டால், அது அவரவர் விருப்பு. உண்மை ஒன்று ஆகத்தான் இருக்க முடியும். முயற்சிக்கலாம்.

   //கமல் அந்த படத்தில் தாலிபானிய முஸ்லீம்களையும் மற்ற முஸ்லீம்களையும் பிரித்து காட்டியுள்ளார். அது தாலிபான் ஆதரவாளரான உங்களுக்கு பொறுக்கவில்லை என்று உங்கள் முகம் தெரிகிறது.//

   சகோதரர்சாரு நிவேதிதாவின் பதில் என் கருத்தாக
   *************************************************
   சாரு நிவேதிதா அவர்களின் பார்வையில் விஸ்வரூபம்:-
   விஸ்வரூபம் பற்றி எழுத வேண்டாம் என்று இருந்தேன். அதற்குப் பல காரணங்கள். கஷ்டத்தில் இருப்பவரை மேலும் கஷ்டப்படுத்தக் கூடாது என்ற நல்லெண்ணமும் ஒரு காரணம். இன்னொரு காரணம், நான் இப்போது சினிமாத் துறையில் உள்ளே இருக்கிறேன். அதனால் நான் ஏதாவது சொல்லி வைத்து அது என்னோடு சம்பந்தப்பட்டிருப்பவர்களை எந்த விதத்திலும் பாதித்து விடக் கூடாது. என்னை எதிரியாக நினைப்பவர்கள் அங்கே மிகவும் அதிகம். ஆனால் இதையெல்லாம் மீறி இப்போது எழுதியே ஆக வேண்டும் என்ற எண்ணம் தோன்றிக் கொண்டே இருக்கிறது.

   ஹே ராம், உன்னைப் போல் ஒருவன் என்ற இரண்டு படங்களுக்கும் நான் உயிர்மையில் எழுதியுள்ள விமர்சனங்களே விஸ்வரூபம் படத்துக்கும் பொருந்தும். தெரிந்தோ தெரியாமலோ அறிந்தோ அறியாமலோ கமல்ஹாசனின் படங்களில் இஸ்லாமிய விரோதப் போக்கு மிக மோசமாக வெளிப்பட்டுக் கொண்டே இருக்கிறது. இதை நான் விரிவாக என் மதிப்புரைகளில் உயிர்மையில் எழுதியிருக்கிறேன். விஸ்வரூபத்தில் அந்த இஸ்லாமிய விரோதம் உச்சக் கட்டத்தில் உள்ளது. நான் ஆஃப்கானிஸ்தானைப் பற்றித்தானே எடுத்தேன் என்பதெல்லாம் வாதம் ஆகாது. அல் குரானின் வசனங்களைச் சொல்லிக் கொண்டே கொலை செய்கிறார்கள் என்றால் இந்தப் படத்தைப் பார்க்கும் non muslims-க்கு என்ன தோன்றும்? அல்லாஹ் அக்பர் என்று சொல்லிக் கொண்டே குண்டு வெடிக்கிறார்கள் என்றால் உங்கள் பக்கத்து வீட்டுக்காரரும் அல்லாஹ் அக்பர் என்று சொல்லும் போது உங்களுக்கு என்ன தோன்றும்?

   இது ஆஃப்கனிஸ்தானில் நடக்கிறது என்றால் அதை ஏன் தமிழில் வெளியிடுகிறீர்கள்? அல்லாஹ் அக்பர் என்றால் இறைவனே பெரியவன் என்று பொருள். ஆனால் அல்லாஹ் அக்பர் என்று சொல்லிக் கொண்டே இந்தப் படத்தில் குண்டு போடுகிறார்கள் என்றால் அது பாமர சினிமாவை மட்டுமே பார்த்து வெறும் பாமர ரசனையை மட்டுமே வளர்த்துக் கொண்ட பாமர ரசிகனுக்கு என்ன பொருளைத் தரும்? கருத்துச் சுதந்திரம் என்றால் என்ன? ஒரு மதத்தை அவமானப்படுத்துவதும், கொலைகாரர்களாகவும் பயங்கரவாதிகளாகவும் சித்தரிப்பதும்தான் கருத்துச் சுதந்திரம் என்றால் அதைத் தடை செய்வதும் சரிதான். கருத்துச் சுதந்திரத்தை விட மனித உயிர்கள் உயர்வானவை. பொறுப்பு (Responsibility) இல்லாத கருத்துச் சுதந்திரம் மனித குலத்துக்கே விரோதமானது. அதற்கும் கலைக்கும் சம்பந்தம் கிடையாது.

   இதற்கு மேல் நான் எதுவும் எழுத விரும்பவில்லை. ஒரு எழுத்தாளன் என்பவன் கூடு விட்டுக் கூடு பாய்பவனாக இருக்க வேண்டும் என்று பலமுறை நான் சொல்லி இருக்கிறேன். நான் ஒரு ஆணாக இருந்தாலும் ஒரு பெண்ணைப் பற்றி எழுதினால் நான் பெண்ணாக மாறியாக வேண்டும். அந்தப்படியே விஸ்வரூபத்தை நான் ஒரு இஸ்லாமியனாகவே பார்த்தேன். அப்படிப் பார்த்த போது அது என்னை மிகவும் கேவலப்படுத்தியது. வார்த்தைகளால் விளக்க முடியாத அளவுக்கு இஸ்லாத்தின் மீது வெறுப்பை அள்ளி வீசியது. சிறு குழந்தைகள் கூட கை விரல்களால் துப்பாக்கி பிடித்தபடி சுடுகிறார்கள் படத்தில். ஆனால் அமெரிக்கா ஈராக்கையும் ஆஃப்கனிஸ்தானையும் சுடுகாடு ஆக்கியது பற்றி விஸ்வரூபத்தில் எதுவுமே இல்லை. ஏதோ அமெரிக்க ஏஜண்ட் எடுத்தது போல் இருக்கிறது. ஆஃப்கனிஸ்தானில் கை இழந்த கால் இழந்த குழந்தைகள் ஆயிரக் கணக்கான பேர் இருக்கிறார்கள். அமெரிக்க குண்டு வீச்சினால் என் ஐந்து வயது குழந்தைக்கு கை கால் போனால் என் மனநிலை எப்படி இருக்கும்? நினைத்துப் பாருங்கள். ஆஃப்கனிலும் ஈராக்கிலும் அப்படி உடல் உறுப்புகளை இழந்த குழந்தைகள் ஆயிரக் கணக்கானோர்.

   விஸ்வரூபத்தைப் போல் இதுவரை ஹாலிவுட்டில் 50 கமர்ஷியல் படங்கள் வெளியாகி உள்ளன. ஒரு வியாபார மசாலா சினிமாவை இங்கே ஏதோ ஒரு மகத்தான கலைப் படைப்பைப் போல் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

   முஸ்லீம்களை அவமதித்து, அவர்களை பயங்கரவாதிகளைப் போல் சித்தரித்துப் படம் எடுத்து விட்டு நான் தெருவுக்கு வந்து விடுவேன், நாட்டை விட்டுப் போய் விடுவேன் என்று சொல்வதெல்லாம் மிக மிகக் கீழ்மையான தந்திரம். மகாநதி போன்ற ஒரு படத்தைக் கொடுத்த ஒருவர் இப்படி மாறிப் போனது எனக்கு வருத்தத்தை அளிக்கிறது…
   ****************8

 • Indian says:

  ” இது குரானிய அறவியலுக்கு எதிரான பேச்சு.”

  Sorry.Contradictory terms. ” Quran ” and ” Ariveyal” ?

 • இனியவன் says:

  தாலிபான்கள் புத்தர் சிலை தகர்க்க பட்டது மட்டுமே நமக்கு தெரியும்.ஆனால் அவர்கள் ஏன் தகர்த்தார்கள் என்று தெரியுமா?

  அமெரிக்கா சிதளம் அடைந்த புத்தர் சிலையை சரி 100 கோடி ஒதுக்குகிறது.அப்போதைய தாலிபன் தலைவர் முல்லா உமர் கேட்கிறார். நீங்கள் தாராளமாக சிலையை சரி செய்து கொள்ளுங்கள் ஆனால் ஒரு வேண்டுகோள் எங்கள் நாட்டு மக்கள் வறுமையில் வாடுகிறார்கள் ஆகவே எங்களுக்கு ஒரு கோடி கொடுங்கள் எங்கள் மக்களின் பசியை போக்க என்றார். அயோக்கிய அமெரிக்காவோ அதனை கண்டுகொள்ளவில்லை. என் நாட்டு மக்கள் பசியை விட உனக்கு புத்தர் சிலை தான் முக்கியம் என்றால் அப்படிப்பட்ட சிலை எங்கள் மண்ணில் இருக்க வேண்டியதில்லை என்று கூறி அவர்கள் அதனை தகர்த்தார்கள்.

  நாம் தமிழர் கட்சி – சீமான் உறை.

  • paandiyan says:

   ஆகா என்ன பிரமாதம். முஸ்லிம் சொல்ல பயப்படும் விஷயங்களை கூட காமெடி பண்ணாமல் இவர்கள் சப்பை கட்டு கட்டுவது ஆகா. அது சரி வறுமைக்கு ஏன் அமெரிக்க விடம் பிட்சை கேக்க வேண்டும் . சக முஸ்லிம் பணகார நாடுகள், பெட்ரோல் வைத்து செல்வம் குவிக்கும் சக நாடுகள் உதவி பண்ண வேண்டியதான. வறுமை இருக்கும் போது மசூதி எதற்கு???

 • paandiyan says:

  //அங்கு புத்தரை வழிபடும் மக்கள் இல்லை. இருக்கும் மக்களுக்கும் அவசியம் இல்லை. தன் நாட்டின்(afghan) எந்த முயற்சிக்கும் அக்கறை செலுத்தாதவர்கள், அவர்களுக்கு அவசியப்படாத சிலை உடைப்புக்காக கூக்குரல் இடுகிறார்கள். அவர்களின் நாடு, அவர்களின் இஷ்டம். இதில் என்ன தவறு.
  //
  வழிபாடு இல்லாத இடத்தில மசூதி எதற்கு ? எதற்கு இங்கு அக்கபோரு கூட்டுகின்றார்கள் . நீங்கள் மறைமுகமாக அவர்களை நாக்கை பிடுங்குவதுபோல கேட்டு இருகிண்றீகள் . உங்களுக்கு நன்றி பல

 • paandiyan says:

  சீமான் கட்சிக்கும் , வைகோ கட்சிக்கும் – உலகில் எல்லார் தாலியும் அறுந்து விழுந்துகொண்ட இருக்கவேண்டும் , அதை வைது இங்கு ஒப்பாரி இவர்கள் வைக்கவேண்டும் — இப்படி இரண்டு கட்சிகள் …


Leave a Comment

Archives