மார்க் துல்லி – கல்கத்தாவில் பிறந்து இங்கிலாந்தில் கல்வி பயின்ற ஆங்கிலேயர். பி.பி.சி.யின் தெற்காசிய செய்தித் தொடர்பாளராக இருந்தவர். தற்போது புது தில்லியில் பத்திரிகையாளராக இருப்பவர்.
ஜில்லியன் ரைட் – இவர் துல்லியின் தோழி. இந்திய நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வருபவர்.
இந்த இருவரும் இணைந்து பல புத்தகங்களை எழுதியுள்ளனர். ‘No Full Stops in India’, ‘The Heart of India’ ஆகிய புத்தகங்கள் மிகவும் பிரபலமானவை.
2002-ஆம் ஆண்டு பென்குவின் புத்தக நிறுவனம் இவர்கள் எழுதிய ‘India in Slow Motion’ என்ற புத்தகத்தை வெளியிட்டது.
புத்தகத்தின் முன்னுரையில் இந்திய அதிகார வர்கம் இந்திய மக்களுக்காக எதுவும் செய்யாமல் பிரிட்டிஷ் அரசின் அதிகார இடத்தைப் பிடித்துக் கொண்டது என்பதை புந்தேல்கண்ட் பகுதியில் ஊர்சா கிராமத்தில் நடந்த சம்பவத்தை வைத்து ஆரம்பிக்கிறார். உலக வங்கியின் அறிக்கைபடி 1980-ஆம் ஆண்டிலிருந்து வெகு வேகமாக முன்னேறிவரும் நாடாகக் குறிக்கப்படும் அதே நேரத்தில் தனி மனித வளர்ச்சியில் மிகவும் பின் தங்கிய நாடுகளில் ஒன்றாகக் குறிக்கப்படுவதைக் சுட்டுகிறார். இந்த மெதுவான வளர்ச்சி வேகத்திற்கான காரணத்தைக் கூறுகையில் – பல்வேறு தரப்பினர் இந்தியாவின் இந்த மந்த வேக வளர்ச்சிக்குக் காரணமாக மதம், கலாச்சாரம், தட்பவெட்பம், அந்நிய ஆட்சி, போட்டி-பொறாமை போன்றவற்றைக் கூறினாலும் – மோசமான அரசாட்சி என்பதையே குறிப்பிடுகிறார். 1999-ஆம் ஆண்டு தேசிய முன்னேற்ற கவுன்சிலில் பிரதமர் வாஜ்பாயின் உரையில் ‘மக்கள் அதிகார வர்கத்தை சேவை செய்பவர்களாக் எண்ணாமல் சுரண்டல்காரர்களின் கைக்கூலிகளாகவே காண்கின்றனர்; ஊழல் ஒரு குறைவான் அபாயத்தில் அதிக வருவாய் கொடுக்கும் நடவடிக்கை ஆகிவிட்டது. அதிகாரிகள் அடிக்கடி ஒரு வரைமுறையன்றி மாற்றப்படுவது வேலை நெறிமுறைகளைக் குலைப்பதுடன் நேர்மையான அதிகாரிகளின் ஆர்வத்தையும் குலைக்கிறது. அதிகாரிகளிடம் நேர்மையும் நிறைவும் எதிர்பார்க்கும் வேளையில் அரசியல் அதிகாரம் தன்னையும் சுயசோதனைச் செய்ய வேண்டியதும் உள்ளது’ என்று கூறினார். ஆனால், மூன்று ஆண்டுகளில் மாயாவதியுடன் கூட்டு சேர்ந்து ஆறாறு மாத ஆட்சி ஒப்பந்தம் செய்ததையும் அவர் முதல் பத்து நாட்களிலேயே 200 அதிகாரிகளை மாற்றல் செய்து முரண்பட்டதைக் குறிப்பிட்டு புத்தகத்தில் மோசமான அரசாட்சி சம்பவங்களைக் கூறுவதைவிட அதன் பின்னணியை விளக்க முற்படுவதாகசும் கூறுகிறார்.
இதில் அவர் 10 அதிகாரங்களில் வெவ்வேறு சம்பவங்களைக் காட்டுகிறார். அவை..
-
ராமர் மீட்டெடுப்பு (Reinvention of Rama)
இதில் அயோத்தியில் பாபர் மசூதி இடிப்பும் அப்பகுதியிலேயே வசிக்கும் மக்களின் மனநிலையையும் பற்றி விவரிக்கிறார்.
-
தவறானத் தொண்டு (Misplaced Charity)
இது குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு பற்றியது. ’ருக்மார்க்’ சேனல்-4 இல் வெளியிட்ட விளம்பரத்தில் ஆசிய நிறுவனங்கள் (குறிப்பாக இந்திய நிறுவனங்கள்) தங்கள் கார்பெட் தயாரிப்பில் குழந்தைத் தொழிலாளர்களை ஈடுபடுத்துவதையும் ருக்மார்க் முத்திரை வழங்கப்பட்ட கார்பெட்கள் குழந்தைகள் கைப்படாதவை என்றும் விளம்பரம் படுத்தியது. இதில் ருக்மார்க் நிறுவனத்துடன் ஒப்பந்தம் இடாத நிறுவனங்களும் குழந்தைத் தொழிலாளர்களை ஈடுபடுத்தாவிட்டாலும் அவர்கள் இவ்விளம்பரத்தால் பாதிக்கப்படுவதைப் பற்றி விவரித்துள்ளார்
-
தலைமுதல் வால்வரை ஊழல் (Corruption from Top to Tail)
sting operation மூலம் ஜெயா ஜெட்லிக்கும் (ஜார்ஜ் பெர்ணாடஸின் ஜனதாதளக் கட்சித் தலைவர்), பங்காரு லக்ஷ்மனுக்கும் (அச்சமயத்தில் பாஜகவின் கட்சித் தலைவர்) லஞ்சம் கொடுத்த மாத்யு சாமுவேல் என்ற தெகல்காவின் நிருபருடன் நடத்திய சந்திப்பும், ராஜஸ்தானில் (ஜனவாத் மாவட்டத்தில் அருணாராய்-ஆல் நடத்தப்பட்ட மக்கள் இயக்கம் தகவலறியும் இயக்கமாக மாறியதையும் (பின்னர் தகவலறியும் சட்டமாக பரிணாமம் பெற்றது) பற்றி விவரித்துள்ளார்.
-
மாற்றியமைக்கப்பட்ட பீடங்கள் (Altered Altars)
கோவா-வின் மத அரசியலை ப் பற்றி புரிந்து கொள்ளும் வகையில் உள்ள கட்டுரை. குறிப்பாக கிருத்துவ தேவாலயங்கள் இந்திய கோவில்களைப் போல் இயங்குவதை விளக்குகிறார்.
-
சைபராபாத் உருவாக்குதல் (Creating Cyperabad)
ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவால் முன்னெடுக்கப்பட்ட இ-கவர்னன்ஸ் கொள்கையும் ஆனால் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் தங்கள் சுயமுன்னேற்றத்திற்காக அத்திட்டத்திற்கு எதிரான கருத்துகளைக் கொண்டிருந்ததைக் காட்டுகிறது.
-
சூஃபிகளும் வெற்று நம்பிக்கையும் (The Sufiis and the plain faith)
ஹசரத் நிஜாமுதின் என்ற சூஃபி தர்காவின் பிரபலத்தையும் அது பிரபல படுத்தும் மத நல்லிணக்கம் ஆகியவற்றையும் விளக்கும் அதே வேளையில், தப்லீக்-களின் இஸ்லாத்தைத் தூய்மை படுத்தும் இயக்கம் வளர்ந்து வருவதுடன் அது வஹாபி முறைக்கு அடிக்கோலிடுவதையும் விளக்குகிறது.
-
விவசாயத்தின் வெகுமதி (Farmers’ reward)
காங்கிரஸ் ஆட்சியில் கர்நாடகத்தில் வறட்சியால் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதையும் அதே நேரம் பாஜக-வின் குஜராத்தில் பாக்கு தொழிலிளும் அதே நிலைமை ஏற்பட்ட பொழுது மத்திய அரசின் கொள்கையையும் பின்னணியில் இருந்த WTO ஒப்பந்தத்தையும் ஆனால், 70-களில் நடந்தது போல் விவசாயிகள் புரட்சி நடக்கச் சாத்தியமில்லாததையும் விவரிக்கிறது
-
இரு சகோதரர்களின் கதை (A tale of two brothers)
தன் நண்பர் சந்த் பக்ஸ் சிங்-ஐப் பற்றியும் அவர் இந்திராகாந்தியின் ஆட்சியைப் பற்றி சில விமர்சனங்களைத் தொடர்ந்து வெளியுறவுத்துறை அமைச்சர் தினேஷ்சிங்-இன் இடத்திற்கு (தினேஷ் சிங் தனக்கும் இந்திராகாந்திக்கும் இருந்த ‘உறவை’ ஊடகங்களில் கசிய விட்டதால் இந்திரா அவரை நீக்க வேண்டியிருந்ததாம்) அதற்காக அவர் தம்பி வி.பி.சிங்-ஐ உத்திரபிரதேச முதல்வராக ஆக்கியதையும் பின்னர் வி.பி.சிங் பிரதமராக ஆகியதையும் அப்பொழுது வி.பி.சிங் சந்த் பக்ஸ் சிங்-இற்கு உதவ மறுத்ததையும் சந்த் பக்ஸ்-இன் ஃபரீதாபாத் தொகுதியை (தேவிலால் ஒத்துக் கொண்ட பொழுதும்) வி.பி.சிங் தான் எடுத்துக் கொண்டதையும் பற்றி விவரிக்கிறார்.
-
மழைநீர் சேமிப்பு (Water Harvesting)
2000-ஆம் ஆண்டு ஊடகங்களால் பரப்பப்பட்ட குஜராத் வறட்சியும் அதைப் போக்க சௌராஷ்ட்ரா பகுதியில் ராஜ்சம்தியாலா பகுதியில் சிற்றணைகளால் நீர் சேமிப்பு வெற்றிகரமாக நடந்ததையும் அரசு அதை மற்ற கிராமங்களும் பின்பற்ற ஊக்குவிக்கும் விதமாக இது போன்ற சிற்றணைகளுக்கு நிதி வழங்க முடிவெடுத்ததையும் ஆனால் அதிகாரிகளின் ஊழலாலும் நர்மதா அணை அரசியலாலும் இது தோல்வியடைந்ததையும் விவரிக்கிறார்.
-
இழந்த சொர்கம் (Paradise Lost)
காச்மீர் பிரச்சனையும் அதில் இந்திய அரசு செய்த சொதப்பல்களையும் பின்னணியில் போலீஸின் ஊழலையும் விவரிக்கிறார்.
முடிவுரையாக 2002-ஆம் ஆண்டு நடந்த கோத்ரா சம்பவம், குஜராத் கலவரம் அதில் அரசியல் அதிகார வர்கத்தின் கையாளாகாதத் தனத்தையும் விமர்சிக்கிறார். முன்னாள் சி.பி.ஐ தலைவர் ராகவன் அந்நிய ஆட்சியின் நீட்சியாகவே அரசியல் அதிகார வர்கம் செயல்படுகிறது என்பதைக் காட்டுகிறார். வி.பி.சிங் தான் நேர்மையாக இருந்தாலும் தன் கட்சி வெற்றி பெற மற்றவர்களின் நேர்மையற்ற நிதி தேவையாக இருக்கிறது என்று குறிப்பிடுவதை காட்டுகிறார். இதிலிருந்து பொதுவாக இந்தியாவின் அரசியல் நிலைமையை நமக்கு விளங்குகிறது. இந்தியாவின் மெதுவான வேகத்திற்கு இதன் ஜனநாயகத்தையே சில குறை கூறுவதை சுட்டும் வேளையில் அது இல்லாத அண்டை நாடுகளின் வளர்ச்சி இதையும் விட மோசமாக இருப்பதையும் காட்டி அதை மறுக்கிறார். இந்தியா ஒரு transitional நேரத்தில் இருப்பதையும் அதுவே அதன் வளர்ச்சியின் தளர்ச்சிக்குக் காரணம் என்றும் கூறுகிறார்
தன் அனுபவத்தில் சந்தித்தவைகளை வைத்து இந்தியாவின் நிகழ்வுகளையும் அதன் மறுபக்கத்தையும் நகைச்சுவையுடன், அதே நேரம் மற்ற ஆங்கில எழுத்தாளர்கள் போல் குறைகளை மட்டுமேச் சுட்டிக்காட்டி கிண்டலடிக்காமல் (இதற்கு அவர் இந்தியாவில் பிறந்து வளர்ந்ததும் காரணமாக இருக்கலாம்) அதே நேரம் நம்மிடமுல்ல முரண்பாடுகளை நயம்பட எடுத்துக் கூறியும் எழுதி இந்தியாவின் முன்னேற்றத்தின் முட்டுக்கட்டுகளை அதன் வளர்ச்சி வேகத்தை மட்டுப்படுத்தும் கூறுகளை எடுத்துக் கூறுவதே இந்தப் புத்தகம்.
மொத்தத்தில் பல்வேறு இந்திய மாநிலங்களைப் பற்றியும் அவற்றின் அரசியல் நிலைமையையும் புரிந்து கொள்ள உதவும் நல்ல புத்தகம்!
- ‘நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து…. 21 இரா.முருகன் – ‘மூன்றுவிரல்’
- திருக்குறளில் மனித உரிமைகள்!
- போதி மரம் பாகம் ஒன்று – யசோதரா அத்தியாயம் – 12
- கரிகாலன் விருது தேவையில்லை
- காலம்
- நூல் கொண்டு ஆடும் பொம்மைகள்
- எதிர்காலத்தில் இலங்கையில் பெரும்பான்மையினராக முஸ்லிம்கள்
- மூன்று அரிய பொக்கிஷங்கள்
- வேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -2 பாகம் -1
- சுத்தம் தந்த சொத்து..!
- நன்றியுடன் என் பாட்டு…….குறு நாவல் அத்தியாயம் – 1
- மெல்ல நடக்கும் இந்தியா
- மஞ்சள் விழிகள்
- குருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 3
- சி.சு. செல்லப்பா – தமிழகம் உணராத ஒரு வாமனாதார நிகழ்வு (6)
- வாலிகையும் நுரையும் – (15)
- யாதுமாகி நின்றாய்….. !
- மூக்கு
- தாகூரின் கீதப் பாமாலை – 56 புல்லாங்குழல் பொழியும் இனிமை !
- விட்டில் பூச்சிகள்
- வால்ட் விட்மன் வசனக் கவிதை -15 என்னைப் பற்றிய பாடல் – 8 (Song of Myself)
- “தோற்றப் பிழை” (சிறுகதைத் தொகுதி) ( ”படைப்பிலக்கியத்தின் கச்சிதமான காட்சிப் பதிவுகள்” )
- புதுத் துகள் ஹிக்ஸ் போஸான் கண்டுபிடிப்பு பூதச் செர்ன் விரைவாக்கியில் உறுதியானது.
- அக்னிப்பிரவேசம்-27 தெலுங்கில் : எண்டமூரி வீரேந்திரநாத்
- வாழ்வியல் வரலாற்றில் சில பக்கங்கள் -48
- நடு வலதுசாரி திட்டத்தை முன்வைக்கிறார் நரேந்திர மோடி