எலும்புத் திசு ( bone marrow ) – பேராசிரியர் நளினியின் தேவை..

author
0 minutes, 50 seconds Read
This entry is part 8 of 29 in the series 28 ஏப்ரல் 2013

கோவிந்த் கருப் 

————————

Bone marrrow  பற்றிய விவரங்கள் அறிய,

http://en.wikipedia.org/wiki/Bone_marrow

 

படத்திலிருப்பவர் ஸ்டான்ஃபோர்டில் பணி புரியும் முதல் அமெரிக்க இந்தியப் பேராசிரியர்.

மனோதத்துவத் துறையில் பணி புரிகிறார்.

 

அவருக்கு தற்போது மிக அரிதான வகை ரத்த கான்சர் நோயினால் பாதிப்பு. அதிலிருந்து அவர் மீட்கப்பட  குறிப்பிட்ட எலும்புத் திசு சிகிச்சைக்காகத்  தேவைப்படுகிறது.

 

இந்திய கேரள வம்சாவளி சேர்ந்த உறவுகளின் திசுக்கள் ஒவ்வாமையால், தொடர்ந்து அவருக்கு ஒத்துக் கொள்ளும் திசு அன்பளிப்புக்கான முயற்சி எல்லா வகையிலும் நடை பெறுகிறது.

இது பற்றிய விவரங்கள்:

http://youtu.be/bj1aL8h3V3g

https://www.facebook.com/HelpNaliniNow/posts/182232825263719

http://www.helpnalininow.org/

helpnaliniindia@gmail.com

( தகவல் என் டி டி வி .காம் நன்றி )

அவருக்கு இரண்டு பெண் குழந்தைகள்

அவர்கள், தந்தையின் அரவணைப்புடன் எழுதிய கவிதை :

நாங்கள் இந்தக் கவிதையை அம்மாவின் 50வது  பிறந்த நாளுக்காக எழுதினோம். பின் அவர் உதவியுடன் அவரின் தற்போதைய நிலையையும் இணைத்துள்ளோம்.

 

கவனமாக கதையை அது மலரும் போக்கிலேயே கவனியுங்கள்.

அழுகு தான் ஆயினும் தைரியமான

ஒரு குழந்தை கேரளாவில் பிறந்தது.

பெயரோ நளினி

வால்தனமோ அவளின் விளையாட்டு.

 

அடைந்தால் அவள் பதின்மூன்று –

கனிவாய், ஒல்லியாய்.

பள்ளியில் தல தான் அவள்

ஆயினும்

பனித் துளி மென்மை அவள்

தோழிகளுக்கு.

 

நியாயம் தான் அவள் என்றும்

இல்லை ஈத்திரை.

 

பதினெட்டு வயதினிலே

சிட்டானாள்

வந்த பையன் பார்க்கம் படலம் தப்ப

ஓடினாள் அமெரிக்கா…

 

சேர்ந்தாள் ஸ்டான்ஃபோர்டில்

மனோதத்துவ இயலில்.

 

 

எழுதிய அதே ஜீவனுடன் அக் கவிதை படிக்க, http://www.helpnalininow.org/

That very same year she got AML
Rounds and rounds of chemo and all seemed well
She thought she was cured
And good health secured
But, alas, time would tell…

…………

…………

Right after they unpack,
Comes the shock that the cancer is back!
We won’t give in to news that is harrowing,
Nalini’s friends are now going marrowing!
You too can help Nalini get back on track!

 

நலம பெற வேண்டுவோம் நாம், இரு விநாடி.

 

———————————————————————–

பொதுவாக, bone marrow  அன்பளிப்புக்கான ஒரு தளம் ( நளினி அவர்களின் தேவை தாண்டி, இது பொதுத் தளம் ) http://marrow.org/Home.aspx

இரத்த வங்கி மாதிரி இன்று உலகின் பல பகுதிகளிலும் எலும்புத் திசு வங்கி உருவாகி , திசுக்கள் சேகரிக்கப்படுகின்றன..

பொதுவாக 18லிருந்து 44 வயது வரையிலான வகையினர் நல் அன்பளிப்பாளராக கருதப்படுகிறார்கள்.

அவ் வயது தாண்டியவர்கள் எனில் ஒத்துப் போகுதலுக்கான டெஸ்ட் அதிகமாக இருக்கும், மற்றபடி அவர்களும் அன்பளிப்பாற்றலாம்.

இந்த எலும்புத் திசு அன்பளிப்பில் நீங்கள் எந்த இனம் என்பதும் எப்பகுதியினர் என்பதும் ( race and eithinicity ) முக்கிய பங்களிப்பு வகிக்கிறது.

Members of these backgrounds are especially needed:

Black or African American

American Indian or Alaska Native

Asian, including South Asian

Native Hawaiian or other Pacific Islander

Hispanic or Latino

Multiple race

ஒரு வேளை ஜாதி இன நம்பிக்கையில்லாதவர்களுக்கு எலும்புத் திசு தேவைப்பட்டால் , ஜாதி இனம் இருக்கிறது என்ற தகவல் தந்தால் மட்டுமே தான் அவருக்குண்டான திசுக்களை தேட முடியும்.

மேலும் விவரங்களுக்கு

http://marrow.org/Join/FAQs_about_Joining.aspx#younger

Series Navigationசுஜாதாவின் கடவுள் வந்திருந்தார் நாடகம் – விமர்சனம்உபதேசம்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *