தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

12 ஆகஸ்ட் 2018

இடமாற்றம்

சித்ரா

_________

கண்களுக்கு எதிரே
விரல்களுக்கு இடையே
நழுவுகிறது தருணங்கள்

 

இந்நாட்டு மக்களின்
மெல்லிய சிரிப்பை
அதிராத பேச்சுக்களை
கலைந்திராத தெருக்களை
நேர்த்தியான தோட்டங்களை

 

வாரிச் சுருட்டி
வெண் கம்பளத்தில் அடுக்கி
அணைத்தபடி உடன் கொணர நேர்ந்தால்
கை நழுவுகிற தருணங்களைப் பிடித்து விடலாம்

 

நேசித்தவைகளை அங்கங்கே விட்டுவிட
சொல்கிற ஒவ்வொரு இடமாற்றமும்
வாழ்விலிருந்து விடுபடுகையில் , மரணத்தை
நளினத்துடன் தழுவப் பயிற்றுவிக்கும் ஒத்திகைகள்……
– சித்ரா
(k_chithra@yahoo.com)

Series Navigationயாதுமாகி….,புகழ் ​பெற்ற ஏ​ழைகள் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்

2 Comments for “இடமாற்றம்”

  • கவிஞர் இராய செல்லப்பா says:

    “ஒவ்வொரு இடமாற்றமும்// வாழ்விலிருந்து விடுபடுகையில்// மரணத்தை
    நளினத்துடன் தழுவப் பயிற்றுவிக்கும்// ஒத்திகைகள்……” என்ற வரிகள் சற்று அதீதமாக உணர்ச்சிவசப்பட்டதன் விளைவோ? அரசுப் பணியில் இருப்பவர்கள் அடிக்கடி இடமாற்றம் பெற்றுத்தானே ஆகவேண்டியிருக்கிறது! – நியூஜெர்சியிலிருந்து கவிஞர் இராய.செல்லப்பா.

  • chithra says:

    கவிஞரின் கருத்துக்கு நன்றி.
    நேசித்தவைகளை அங்கங்கே விட்டுவிட சொல்கிற நிகழ்வுகள் யாவும், இடமாற்றங்களோ, மற்றவையோ உணர்ச்சிவசபடுத்த கூடியவை.அதற்கு பயிற்சியாக இடமாற்றங்கள் அமைகிறது சிலருக்கு..


Leave a Comment

Archives