தாகூரின் கீதப் பாமாலை – 68 தேர்ந்தெடுத்த என் பாதை .. !

This entry is part 5 of 24 in the series 9 ஜூன் 2013

 

 

Tagore 

மூலம் : இரவீந்தரநாத் தாகூர்

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா.

 

 

திரும்பத் திரும்ப நான்

தேர்ந் தெடுத்து நடக்கும் இப்பாதை

ஒருமுறை கூடத்

தவறிப் போனதே இல்லை !   

ஆனால் அந்தப் பாதையின்

தடங்கள் அனைத்தும்

காட்டுப் புல்லொடு வளர்ந்து  இப்போது

காணாமல் மறைந்தன !

இன்னும் என்

நெஞ்சினில் தெரியு  தெனக்கு

அஞ்சக் கூடா தென்று !

ஏனெனில் இங்கோர் தென்றல்

எதிர்பா ராது அடிக்குது !

நேரம் வரும் போது உனைக் காண்பேன்  

நீ யிருப்பது போல்  !

காரணம் நீ என் தோழமை

பெற்றுள்ளாய்  !

 

 

தனியே வழக்கமாய் ஏந்திச் செல்லும்  

கைப்பிடி விளக்கில்

தீ யணைந்து போனதே !

ஆயினும்

எனக்குள் புலப்படும்

விண்மீன்களின்   முத்திரையில்

முகவரி

விளக்கப் பட்டுள்ளது  !

வெளிப்புறப் பாதை ஓரத்தில் பூக்கள்

விரிந்து கிடக்கும் !

அறிகிறேன்,

என் தவறை அறிகிறேன் !

மலர்கள் செம்மைப் படுத்தும்

மறைவாய்,

நாசூக்காய் அவற்றின்

நறுமணத்தை  !

அறிகுறிகள் மூழ்கிக் கிடக்கும்

பொறுத்திருந்து !

 

+++++++++++++++++++++++++

பாட்டு : 276   1926 ஏப்ரல் 10 இல் தாகூர்  64 வயதினராய் இருந்த போது சாந்திநிகேதனில் எழுதியது.

+++++++++++++++++++++++++

Source

1. Of  Love, Nature and Devotion Selected Songs of Rabindranath Tagore Oxford University Press, Translated from Bengali & Introduced By : Kalpana Bardhan

2. A Tagore Testament,

Translated From Bengali By Indu Dutt

Jaico Publishing House (1989)

121 Mahatma Gandhi Road,

Mombai : 400023

*********************

S. Jayabarathan [jayabarat@tnt21.com] June 4, 2013

http://jayabarathan.wordpress.com/

Series Navigationசீனம்-தமிழ் கலைச்சொல் அகராதி வெளியீடுநினைவு மண்டபம்
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *