புகழ் ​பெற்ற ஏ​ழைகள் ​15. உல​கை உலுக்கி அச்சுறுத்திய ஏ​ழை

This entry is part 5 of 18 in the series 14 ஜூலை 2013

(முன்​னேறத் துடிக்கும் இளந்த​லைமு​றையினருக்கு ​வெற்றிக்கு வழிகாட்டும் வாழ்வியல் தன்னம்பிக்​கைத் ​தொடர் கட்டு​ரை)

மு​னைவர் சி.​சேதுராமன், தமிழாய்வுத்து​றைத்த​லைவர், மாட்சி​மை தங்கியமன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.

E. Mail: Malar.sethu@gmail.com

15. உல​கை உலுக்கி அச்சுறுத்திய ஏ​ழை

என்னங்க எ​தை​யோ பாத்துப் பயந்தது மாதிரி ஓடிவர்ரீங்க…நில்லுங்க..நில்லுங்க..அட பயப்படாதீங்க.. எ​தைப் பார்த்துப் பயப்படறீங்க.. என்னங்க ​பேசாமக் ​கையமட்டும் அந்தப்பக்கம் காட்றீங்க..என்ன அங்க ஒரு ஆளு நிக்கிறாரு…அவரப் பாத்துத்தான் பயந்தீங்களா? அடடா…உங்களப் ​போன்றுதான் ஒருத்தரப் பாத்து உலக​மே பயந்து நடுங்குச்சு..அவரப் பத்தித்தான் ​போனவாரம் உங்களிடம் ​கேட்​டேன்..ஆனா பதில் ​சொல்லாம பயந்துகிட்டு ஓடி வர்ரீங்க.. சரி ஒங்க பயத்த விட்டுட்டு நான் ​கேட்டதுக்குச் சரியான பதி​லைச் ​சொலுங்க..என்னங்க காலு ​கை​யெல்லாம் ஒதறுது..சரிசரி..நீங்க ​சொல்ல ​வேண்டாம்..நா​னே ​சொல்லிட​றேன். அவருதான் ஹிட்லர். அட ஆமாங்க உலகப் ​போருக்குக் காரணமாகவும், பல லட்சம் ​பே​ரைக் ​கொன்றவரும், உலகத்​தை அச்சுறுத்தியவரும் இந்த ஹிட்லர்தான்.

வட ஆஸ்திரியாவில்(Braunau am Inn) உள்ள பிரானோ என்ற ஊரில் 1889 – ஆம் ஆண்டு ஏப்ரல் 20 – ஆம் நாள் பிறந்தார். இவருடைய தந்தையின் பெயர் அலாயிஸ் சிக்கில் கிராப்பர் ஹிட்லர்(Alois Hitler ).இவர் சுங்க திணைக்களத்தின் அதிகாரியாக வேலை பார்த்து வந்தார். அவரின் மூன்றாவது மனைவியின் நான்காவது மகன் ஹிட்லர். பிறந்தது முதலே ஹிட்லர் நோயுற்றவராக இருந்தார்.அடிக்கடி காய்ச்சல் வரும். கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு பிறகு தான் உடம்பு தேறியது. இவருடன் பிறந்த நால்வர் சிறு வயதிலேயே இறந்துவிட்டனர். எஞ்சியவர்கள் அடால்ப் இட்லரும் அவரின் கடைசி தங்கை பவுலா ஹிட்லர் மட்டும்தான்.

வறு​மையும் தந்தையின் துன்புறுத்தலும்

இவரும் இவரைவிட ஏழு வயது சிறியவரான தங்கையும் பருவம் அடைந்தபோது இவருடைய தந்தை (அலாய்ஸ் ஹிட்லர்) தன் இரண்டாவது மனைவியின் மூலம் இரு குழந்தைகளை பெற்றெடுத்தார். இளமைக்காலத்தில் தந்தையின் கொடுமைக்கு இவரும் தாயாரும் ஆளாக்கப்பட்டனர். தன் தந்தை எப்படி தன்னையும் தாயையும் அடித்து துன்புறுத்தினார் என்பதை தன்னுடைய எனது ​போராட்டங்கள் (​மெயின் ​​கேம்ப்) என்ற சுய சரிதை புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். தந்தையின் கொடுமையால் தன் தாய் துன்புருவதை கண்டு அவர் மேல் அளவுகடந்த பாசம் கொண்டார். இளம் வயதி​லே​யே இந்த மாதிரி துன்புற்றதாலதான் ஒரு குரூரமான, துன்பத்​தைக் கண்டு ரசிக்கக் கூடிய ஆளாக ஹிட்லர் உருவாகக்கூடிய சூழல் ஏற்பட்டது என்று ம​னோதத்துவ அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். தா​யைக் ​கொடு​மைப்படுதியதால் ஹிட்லர் தன் தந்தைமேல் அளவுகடந்த வெறுப்பையும் கொண்டார். பொருளாதார சூழ்நிலை காரணமாக ஹிட்லரின் குடும்பம் அடிக்கடி இடம் பெயர்ந்தது.

அடால்ப் என்ற பெயர் பழங்காலத்து ஜெர்மானியரிடமிருந்து வந்தது. அடால்ப் என்பது உயர் குணமுள்ள (Nobility) + ஒநாய் (wolf) என்பதைக் குறிக்கும் சொல். இதையறிந்த இட்லர் தனக்குத்தானே ஒநாய் என்ற பெயரை தனக்கு புனைப்பெயராக வைத்துக்கொண்டார். அவருக்கு நெருங்கியவர்கள் அவரை அப்படித்தான் அழைப்பார்கள். 1920-ஆம் ஆண்டுகளில் அவரை அப்படித்தான் அழைத்தனர். அவர் நெருங்கிய உறவினர்கள் அவரை அடி (Adi) என அழைத்தனர். இட்லர் என்பதற்கு மேய்ப்பாளர் என்ற பொருள், காப்பாளர் என்றும் பொருள்படும்.

ஹிட்லருக்கு தாயிடம் செல்லம் அதிகம்.தாய் மீது மிகுந்த பக்தியும் பாசமும் கொண்டவர்.பாடசாலையில் படிக்கும் போது ஹிட்லர் தான் வகுப்பின் முதல் மாணவன். பிறகு அவருக்கு படிப்பில் ஆர்வம் குறைந்தது.படம் வரைவதில் ஆர்வம் ஏற்பட்டது.விரைவிலே அழகான ஓவியங்கள் வரையும் ஆற்றலை பெற்றார்.மாணவப்பருவத்திலேயே நிறைய நாவல்கள் படித்தார். போர்கள் பற்றிய கதைகள் என்றால் நாட்டம் அதிகம்.

கல்வி

தொடக்கத்தில் இட்லர் கல்வியில் சிறந்து விளங்கினார். ஆறாவது வகுப்பு படிக்கும் சமயத்தில் கல்வியில் சிறிது தொய்வு ஏற்பட்டது அதன் காரணமாக அவ்வகுப்பில் தேர்ச்சி பெறாமல் மீண்டும் அதே வகுப்பில் சேர்ந்து படித்தார். இவர் கல்வியில் நாட்டமில்லாமையை கண்டு இவன் உழைப்பதில் ஈடுபாடுகொண்டவனல்லன் என்று ஆசிரியர்கள் இவர் பெற்றோருக்கு சுட்டிகாட்டினர். இவர் படித்த பள்ளியில் 20 -ஆம் நூற்றாண்டின் மிகப்பெரிய தத்துவஇயலாளரான இவர் வயதுடைய லுட்வக் விட்​ஜென்ஸ்டின் இவரைவிட இரண்டு வகுப்பு கூடுதலான வகுப்பில் படித்தார். ஆனால் இருவரும் ஓருவரையொருவர் சந்தித்ததேயில்லை.

ஓவியராதல்

ஹிட்லர் தன் படிப்பில் ஏற்பட்ட மந்த நிலையை தன் தந்தையின் கொடுமைக்கு கொடுத்த பரிசாகவும் தன் தந்தை தான் அவரைபோன்று சுங்க அதிகாரி பணியில் அமரவேண்டும் என்ற கனவை பொய்யாக்கிய திருப்தி கிடைத்ததாக தன் சுயசரிதையில் இட்லர் விளக்கியுள்ளார். இதனால் அவர் ஓவியராகும் கனவை மெய்ப்பித்தாகவும் குறிப்பிட்டுள்ளார்.

1903 –ஆம் ஆண்டில் ஹிட்லரின் தந்தை இறந்தார். தந்தையின் கண்டிப்பு இல்லாமல் வளர்ந்த ஹிட்லர் நாளுக்கு நாள் முரடனாக மாறினான். தன்னுடன் பயிலும் மாணவர்களுடனும், கற்பிக்கும் ஆசிரியருடனும் சண்டை சச்சரவில் இறங்குவார். ஹிட்லர் தனது 17 – ஆவது வயதில் கல்லூரி இறுதி தேர்வில் தேறினார். அதற்காக கொடுத்த சான்றிதழை வாங்கிக்கொண்டு வரும் வழியில் நண்பர்களோடு சேர்ந்து மது அருந்தினார். அப்​போது தனக்குக் ​கொடுக்கப்பட்ட சான்றிதழையும் கிழித்து எறிந்தார்.

வறுமையில் வாழ்தல்

ஹிட்லர் 1905 – ஆம் ஆண்டு முதல் நா​டோடித்தனமான வாழ்க்கையை வியன்னாவில் தன் தாயுடன் வாழந்தார். தன் தாய்க்குக் கிடைத்த ஆதரவற்றோர் உதவித்தொகையே குடும்ப வருமானம். இந்நிலையில் இரண்டுமுறை வரைபடவரையத் தகுதியில்லையென்று, வியன்னாவின் வரைவாளர் நுண்கலைக்கழகம், (Academy of Fine Arts Vienna) அவரை நிராகரித்தது. அவர் படைப்புகள் கவர்ச்சியூட்டுவதாகவும் மற்றும் கட்டுமான தொழிலுக்கு பொருத்தமானதாகவும் இல்லையென்று அங்கீகரிக்க மறுத்தது. 1909-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 21-ஆம் நாள் அவருடைய தாய் தன்னுடைய 47 வயதில் மார்பகப் புற்று ​நோய் தாக்கத்தால் மரணமடைந்தார். ஹிட்லர் ஆதரவற்றோர் உதவித்தொகையை வைத்துக்கொண்டு தன் தங்கையுடன் மிகவும் வறுமையில் வாழும் சூழல் ஏற்பட்டது.

ஹிட்லர் தனது 21 ம் அகவையில் தன் மரபுவழி சொத்துக்களால் கிடைத்த சிறு தொகையுடன் வரைவாளராக வியன்னாவில் வறுமை வாழ்க்கையுடன் போராடினார். அஞ்சல் அட்டையில் வரும் படங்களை மாதிரியாக வைத்து வரைந்த ஒவியங்களை வணிகர்களிடமும், சுற்றுலாப் பயணிகளிடமும் விற்று வரும் பணத்தில் குடும்ப வறுமையை ஒரளவு குறைத்தார். இவர் வரைந்த ஓவியங்கள் நல்ல விலைக்கு விற்பனையாகின. அதனால் சொந்தமாக ஓவியக்கூடம் அமைத்தார்.இச் சமயத்தில் சிந்தியா என்ற பெண்ணை ஹிட்லர் காதலித்தார். காதல் தோல்வியடையவே இராணுவத்தில் சேர்ந்தார். முதலாம் உலகப்போரின் போது ​ஜெர்மனி இராணுவத்தில் சேர்ந்து பணியாற்றினார்.

ஹிட்லரின் யூத எதிர்ப்பு

வியன்னாவில் இவர் மட்டுமே யூதர்களுக்குப் ப​கைவராக (Anti-Semite) இருந்தார் என்பதை அவருடைய சிறு வயது நண்பரான அகஸ்ட் குபிசெக் தன்னுடைய புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். வியன்னாவில் பெரும்பான்மையோர் யூதர்கள். புராதான யூதர்களும் அதிகமிருந்தனர். வியன்னாவில் வகுப்புவாத கலவரங்கள் அதிகமிருந்தன.

ஹிட்லர் யூதப் பகைமை குறித்த கருத்தாய்வு நூல்களை அதிகம் விரும்பினார். ​போல்மிக் மற்றும் மார்ட்டின் லூதர் ஆகி​யோரின் யூத எதிர்ப்பு நூல்களை அதிகம் விரும்பிப் படித்தார். கிறித்தவ சமயத்தின் ஒரு பிரிவான புராட்டஸ்டாண்ட் சமயத்தின் தந்தை என வர்ணிக்கப்படும் மார்ட்டின் லூதர் எழுதிய யூதர்களும் அவர்களின் யூதர்களும் அவர்களின் ​பொய்​மையும் (On the Jews and their Lies) என்ற நூலே யூதர்கள் மேல் ஹிட்லர் வெறுப்புடன் செயல்பட பின்புலமாக அமைந்தது என்று ஹிட்லர் தன் ​மெயின் ​கேம்ப் என்ற நூலில் விவரித்துள்ளார்.

ஆரியக் கோட்பாடு

ஆரியக் கோட்பாட்டுக்கு (Aryan Race) தடையாகவும், எதிரிகளாகவும் இருப்பவர்கள் யூதர்களே என்று ஹிட்லர் கருதினார். ஆஸ்திரியாவுக்கு ஏற்பட்ட நெருக்கடிக்கு காரணம் யூதர்களே என்றும் ஹிட்லர் பகிரங்கமாக அறிக்​கையி​னை வெளியிட்டார். யூதப் பகைமையாளரிடம் மார்க்சிசமும், ​சோசலிசமும் அதனை வழிநடத்தும் யூதத்தலைவர்களால் கலக்கப்பட்டதை கண்டுணர்ந்தார். அதன் விளைவாகவே முதல் உலகப்​போரில் ஜெர்மனி யூதர்களிடம் வீழ்ந்தது என்பதை மக்களுக்கு தெளிவுபடுத்தினார். யூதர்களால்​ ஜெர்மனி அதன் சிறப்​பை இழந்தது என்று மக்களிடத்தில் ஹிட்லர் ​​பொய்யான பரப்பு​ரை ​செய்து அவர்கள் மீது ​மக்களி​டை​யே வெறுப்​பைத் தூண்டி வளர்த்தார்.

இராணுவத்தில் பணிபுரிதல்

ஹிட்லர் தன்னுடைய தந்தைவழி சொத்துக்களின் கடைசி பங்கு முழு​மையும் தனக்குக் கிடைத்தவுடன் ஜெர்மனியின் பாரம்பரிய நகரமான முனிக் நகருக்கு குடிபெயர்ந்தார். அங்கு ஹிட்லர் குடிபெயர்ந்ததற்கு மற்​றொரு காரணமும் இருந்தது. ஏ​னெனில் அவர் ஆஸ்திரிய இராணுவத்தில் பணிபுரிவதை தவிர்க்கவே அவ்வாறு குடி​பெயர்ந்தார். ஆனால் எதிர் பாராதவிதமாக ஆஸ்திரிய இராணுவத்தினரால் ஹிட்லர் கைது செய்யப்பட்டார். ஆனால் அவர் உடல் தகுதி தேர்வில் தோல்வியுற்றதால் முனிச் நகருக்கு செல்ல அனுமதிக்கப்பட்டார். எனினும் 1914- ஆம் ஆண்டு ஆகஸ்டில் ஜெர்மனி முதலாம் உலகப்போரில் பங்கெடுப்பதால் அதில் கலந்து கொள்ள விருப்பம் தெரிவித்து மூன்றாம் லுட்விக் அரசரிடம் பல்​வேரியா இராணுவப் பிரிவிற்காக விண்ணப்பித்தார். அதற்கு அனுமதி கிடைத்துவிட​வே ஹிட்லர் பல்வேரிய இராணுவப் பிரிவில் சேர்ந்தார்.`

குழந்தைகளின் மீது கொடூரக்கொலைத் தாக்குதல்

1914-ஆம் ஆண்டில் ஒய்​பெர்ஸ (Ypers) ​போரில் ஹிட்லர் மிகவும் முக்கியமான பங்கு வகித்தார். இந்த போரில் கிட்டத்தட்ட 40000 குழந்தைகள் கொல்லப்பட்டனர். இந்த போர் பைபிளில் கூறப்படும் வாசகமான குழந்தைகளின் கொடூரக்கொலை (Massacre of Innocents) என்று விமர்சிக்கப்பட்டது. இந்த கொடூரக்கொலை​​யை ஒன்பது காலாட்படையினர் ஹிட்லருடன் சேர்ந்து 20 நாளில் நடத்தி முடித்தனர். இதன் மூலம் ஹிட்லர் விமர்சித்து பேசப்பட்டார் ஆகையால் தொடர்ந்து வந்த போர்களில் ஹிட்லர் ஈடுபடவில்லை. என்று ஜான் கீகன் எனும் பிரித்தானிய வரலாற்றியலாளர் குறிப்பிட்டுள்ளார்.

இரண்டுமுறை ஹிட்லர் இராணுவத்தின் சிறப்பான பணி மேற்கொண்டமைக்காக எஃகு சிலுவை இரண்டாம் வகுப்பு (Iron Cross II Class), எஃகு சிலுவை முதலாம் வகுப்பு (Iron Cross I Class) பதக்கங்களைப் பெற்றார். குழந்​தைக​ளைக் ​கொல்வதற்கு எத்த​கைய ​கொடூரமான மனநி​லை ​வேண்டும். இத்த​கைய ​கொடூரத்​தை ஹிட்லர் ​செய்து தன்னு​டைய இருப்​பை ​வெளிப்படுத்தினார். என்னங்க ஹிட்லரின் ​கொடூரம் கண்ணீ​ரை வரவ​​ழைக்குதா? இதுக்​கே இப்படின்னா இன்னும் நடக்கப்​போற ​​கொடு​மைக​ளைக் ​கேட்பதற்குச் சற்றுத் துணிச்சல் ​வேண்டும். மன​சைத் திடப்படுத்திக்கிட்டு ​மேல படிங்க.

தற்காலிகமாக பார்வையிழத்தல்

1918-ஆம் ஆண்டு அக்​டோபர் மாதம் 15-ஆம் நாள் ஹிட்லருக்கு ​போரில் விஷவாயுக் குண்டு தாக்கியதில் தற்காலிகமாகப் பார்வையிழந்த நிலையில் படுகாயமுற்று ஹிட்லர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர் இந்த பார்வையிழப்பின் பக்கவிளைவாக ஒழுங்குலைந்த மனநிலை எனும் ​நோய் (பின்னாளில் இது ஹிஸ்டிரியா எனப்பெயர்) ஏற்படும் என்று தெரிவித்தார். அந்தச் சூழ்நிலையிலும் மனங்கலங்காமல் இருந்தார் ஹிட்லர். அவர் மனது முழுக்க யூதர்களை ஒழிப்பதிலேயேயிருந்தது என்று லூசி தாவிட்ஸ் என்ற ஆய்வாளர் தன் நூலில் குறிப்பிட்டுள்ளனர். ஹிட்லர் ஜெர்மன் நாட்டையும், தேசபற்றையும் அதிகம் நேசித்தார் இத்தனைக்கும் 1932-ஆம் ஆண்டுவ​ரை ​ஜெர்மன் குடிமகனாக ஹிட்லர் மாறவில்லை. ஏ​னெனில் ஹிட்லர் பிறப்பால் ஆஸ்டிரியன் ஆவார். இதனா​லே​யே ஹிட்லருக்கு அதனாலேயே சில பதவிகள் கி​டைக்காமல் கைவிட்டுப்போயின.

வெர்செயில் ஒப்பந்தத்தின் விளைவு

1918-ஆம் ஆண்டு முதலாம் உலகப்​போரில் ​தோற்று ஜெர்மனி உலக நாடுகளிடம் சரணைடைந்தது என்ற செய்தி கேட்டு ஹிட்லர் அதிர்ச்சியடைந்தார். ஜெர்மனி இன்னும் போர்முனையில் இருக்கும் நிலையில் இப்படியொரு அறிவிப்பை வெளியிட்டது ஏன் என்ற பின்னணியில் மார்க்சிய கொள்கையாளர்களும், மக்கள் தலைவர்களும்​​ ஹோம் பிரண்ட்(Home Front) அணியினருக்கு ஆதரவாக உள்ளனர் என்ற உண்மையைக் ஹிட்லர் தெளிவு படுத்தினார். இந்த செயல் புரிந்த அமைப்பினரை பின்னாளில் ​ஜெர்மானிய மக்கள் நவம்பர் குற்றவாளிகள் (November Criminals) என அழைத்தனர். இந்த ஒப்பந்தத்தால் ஜெர்மனி அதன் தரமிழந்தது. உலக நாடுகள் ஜெர்மனியின் படைக்குறைப்பையும் படை விலக்கலையும் வலியுறுத்தியது. ரைன்லேன்ட் நகரில் நிறுத்தப்பட்டிருந்த ஜெர்மனியப் படைகள் திரும்பப் பெறப்பட்டன.

படைக்குறைப்பு

ஜெர்மானியர்களால் பாதிக்கப்பட்ட போலந்தை புணரமைக்க உலக நாடுகள் ​ஜெர்மனி​யை வற்புறுத்தின. இவ்வளவு பேரிழப்பும் ஜெர்மனியின் போரினாலேயே ஏற்பட்டது இதற்கு ஜெர்மானியர்களே காரணம் என்று நிர்பந்திப்பதை பிரித்தானிய வரலாற்று இயலாளர் ஜான்கீகன் (John Keegan) மறுத்தார். ஐ​ரோப்பிய நாடுகள் அனைத்துமே நாடு பிடிக்கும் ஆசையால் படைக்கலன்களை பெருக்கி இப்போரில் இறங்கின என்றும் ஜெர்மனியின் பங்கு சிறிதளவே என்றும் ஹிட்லர் தெளிவு படுத்தினார். இருப்பினும் வஞ்சகமாக இதை ஆரம்பித்தது ஜெர்மனிதான் என்று ஹோம் பிரன்ட் அணியினர் குற்றஞ்சாட்டினர். போரினால் ஏற்பட்ட இழப்பீடுகளை ஒப்பந்தத்தில் பிரிவு 231 ல் ஜெர்மனியின் நிலைப்பாட்டைச் சுட்டிக்காட்டியுள்ளபடி ஜெர்மனிதான் ஈடுசெய்யவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இந்த ஒப்பந்தம் ஜெர்மனி எவ்வளவு படைக்கலன்கள் வைத்துக்கொள்ளவேண்டும் என்பதை குறிப்பிட்டு அதன்படி அனுமதிக்கப்பட்ட படைக்கலன்களின் எண்ணிக்கைப்படி ஜெர்மனியின் முழுபடைப்பிரிவும் படைக்குறைப்புக்கு ஆளாகியது.

நாசிசத்திற்கான காரணங்கள்

ஹிட்ல​ரையும் அவரது கட்சினரையும் ஒப்பந்தத்தில் கையொப்பமிட தேவையில்லாமல் நவம்பர் குற்றவாளிகளினால் அழைக்கப்பட்டனர். ஜெர்மனியின் வளர்ச்சியில் இட்லர் அதிக அக்கறை காட்டுவதால் அதைத் தடுக்கவும், பாரிஸ் அமைதி பேச்சுவார்த்தையில் இவரை நவம்பர் கிரிமினல்கள் பலியாடாக ஆக்கிக் ​கொள்ளவும் கையொப்பமிட வைத்தனர். இவ்விரண்டு காரணங்களால் ஹிட்லர் ஜெர்மனியில் நாசிசத்தை உருவாக்கி ஆட்சியிலும் அமர்ந்தார். முதலாம் உலகப்​போரின் முடிவில் ​வெர்​செயில் ஒப்பந்தம் நிறைவேறியது. இ​தைத்தான் விதிங்கறது. எங்க​யோ இருந்திருக்க ​வேண்டிய ஹிட்ல​ரை ​கை​யெழுத்துப் ​போடச் ​சொன்னதால உலகத்தின் நிம்மதி பறி​போகக் கூடிய நி​லை ஏற்படப் ​போகுது அப்படீங்கறது யாருக்கு​மே ​தெரியாமப் ​போய்விட்டது. என்ன நடக்கணு​மோ அப்படி​யே நடக்கும்கிறது எவ்வளவு ​பொருத்தமா இருக்கு பாருங்க..சரி அடுத்த கட்டத்துக்கு வாங்க…

அரசியலில் நுழைவு

முதலாம் உலகப் ​போருக்குப் பின்னர் ஹிட்லர் இராணுவத்தில் தான் இருந்தார் பின் முனிச் நகருக்குத் திரும்பினார். பவேரியன் பிரதமர் கொல்லப்பட்டபின் பல மாறுபட்ட எண்ணங்களுடன் ஹிட்லரின் செயல்பாடுகள் அமைந்தன. 1919-ஆம் ஆண்டில் இராணுவ உளவாளியாக ஹிட்லர் ரெய்ச்வேரில் நியமிக்கப்பட்டார். உடன் பணியாற்றிய வீரர்களின் ஆதரவால் அங்கு ஏற்படுத்திய ஒரு சிறு குழுவின் மூலம் ஜெர்மன் தொழிலாளர் கட்சி ஆன்டன் டிரக்ஸ்லரால் உருவாக்கப்பட்டது. இக்கட்சியினரின் யூதபகைமை, தேசியவாதம், முதலாளித்துவ பகைமை, மார்க்சிய பகைமை ஆகிய ​கொள்​கைகளால் ஹிட்லர் பெரிதும் கவரப்பட்டார். ஆன்டன் டிரக்ஸ்லரும் ஹிட்லரின் சாதுர்யமான, திறமையான பேச்சாற்றலால் கவரப்பட்டார். அவரை கட்சியில் சேர அழைப்பு விடுத்தார். அதன்பொருட்டு ஹிட்லர் 56 வது உறுப்பினராக அக்கட்சியில் இணைத்துக்கொண்டார்.

ஹிட்லரின் பேச்சாற்றல்

கட்சியின் 7 வது பொதுக்குழு உறுப்பினராகவும் ஹிட்லர் இருந்தார். ஆண்டுகள் ஆக ஆக கட்சியினரின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க தேசிய பொதுவுடைமை ஜெர்மன் தொழிலாளர் கட்சியாக உருமாறியது. கட்சிப் பணியில் தன் முழுக்கவனத்தையும் செலுத்துவதற்காக ஹிட்லர் 1920-ஆம் ஆண்டில் தனது இராணுவப்பணியை கைவிட்டார். தன் பேச்சுத்திறமையை கட்சி செயல்வீரர்களுக்கு பயிற்றுவித்தார். இதனால் கட்சியிலும் அவர் செல்வாக்கு உயர்ந்த்து. விரைவிலேயே கட்சித் தேர்தலில் 543 வாக்குகள் பெற்று கட்சித் தலைவர் ஆனார். எதிர்த்து வாக்களித்தவர் ஒருவர் மட்டுமே. 1921-ஆம் ஆண்டு ஜு​லை மாதம் 29-ஆம் நாள் ஹிட்லர் கட்சியின் ஃபியூரராக ஆக்கப்பட்டார். முதல் முதலாக அந்த வார்த்தை கட்சியினரால் அறிமுகப்படுத்தப்பட்டு அதன்படி ஹிட்லர் அழைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

சர்வாதிகாரியான ஹிட்லர்

ஹிட்லர் அரசாங்கத்தின் நிர்வாக திறமை இன்மையால் தான் நாட்டில் வறுமை வேலையின்மை பெருகிவிட்டதாக பிரச்சாரம் செய்தார். அரசாங்கத்துக்கு எதிராக மக்களை தூண்டிவிட்டு ஆட்சியை கைப்பற்ற முயன்றார். ஆனால் அந்த முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. அரசாங்கம் அவரை கைது செய்து 5 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. பின்பு அது ஓராண்டு தண்டனையாக குறைக்கப்பட்டது. சிறையிலிருந்த போது “எனது போராட்டம்”என்ற பெயரில் தன் சுயசரிதையை எழுதினார்.

1928 –ஆம் ஆண்டில் நடந்த தேர்தலில் ஹிட்லரின் கட்சி தோல்வியடைந்தது. ஆனால் ஹிட்லர் சோர்ந்து போய்விடவில்லை. தன்னுடைய கட்சியின் பெயரை “நாசி”கட்சி என்று மாற்றி நாடு முழுவதும் தீவிரவாதத்தில் ஈடுபட்டார். அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் புரட்சிக்கு வழிவகுத்தார். இவருடைய இடைவிடாத உழைப்பும் பேச்சுத் திறனும் இராஜ தந்திரமும் வெற்றி பெற்றன. ஆட்சிக்கு எதிராக மக்ககள் கிளர்ந்தெழுந்து பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். பாராளுமன்ற கட்டடம் கொளுத்தப்பட்டது. ஜனாதிபதியாக இருந்த ஹில்டன் பேர்க் மக்கள் போராட்டத்துக்கு அடிபணிந்தார். 1933-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 30 – ஆம் நாள் ஹில்டன் பேர்க் ஹிட்லரை பிரதமராக நியமித்தார். பிரதமராக இவர் பதவி ஏற்ற ஒன்றரை வருடத்தில் ஜனாதிபதி ஹில்டன் பேர்க் மரணமடைந்தார். விதியின் வி​ளையாட்டு அப்​போதுதான் ​ஜெர்மனியில் ஹிட்லரின் வாயிலாகத் ​தொடங்கியது.

பழம் நழுவிப் பாலில் விழுந்து அதுவும் நழுவி வாயில் விழுந்த​தைப் ​போன்று ஹிட்லர் ஜனாதிபதி பதவியையும் கைப்பற்றிக்கொண்டு ​ஜெர்மனின் சர்வாதிகாரியானார். பாராளுமன்றத்தை கலைத்தார். இராணுவத்தின் முழுப் ​​பொறுப்பி​னையும், இராணுவ தளபதி பதவியினையும் தானே ஏற்றுக்கொண்டார். அரசியல் கட்சிகள் எல்லாவற்றையும் தடை செய்தார். இனிமேல் ஜெர்மனியில் ஜனநாயகம் என்ற பேச்சுக்கே இடமில்லை என அறிவித்தார்.

யூதர்க​ளை அழித்தலும் இரண்டாம் உலகப் ​போரும்

யூதர்களை அடியோடு அழிக்க வேண்டும் என முடிவு செய்த ஹிட்லர் ஒரு பாவமும் அறியாத யூதர்களைக் கைது செய்து, அவர்க​ளைச் சிறையில் பட்டினி போட்டு சித்திரவதை செய்து கொன்றான்(என்னங்க அவர்னு எழுதிட்டு திரும்ப ஹிட்லர அவன்னு எழுத ஆரம்பிக்கீறீங்க அப்படீன்னு ​நெனக்கிறீங்களா? மனிதர்க​ளைக் ​கொன்ற மனித மிருகத்​தை எப்படிங்க மரியா​தை​யோட எழுத முடியும். ஹிட்ல​ரோட ​கொடு​மை​யைப் படிக்கிற நீங்க​ளே இப்ப இந்த முடிவுக்கு வந்திருப்பீங்க..படிங்க..படிங்க..) ஹிட்லரால் யூதர்கள் நாள்​தோறும் சராசரியாக 6000 – 10000 பேர் வரை விஷப் புகையிட்டு கொல்லப்பட்டனர். ஹிட்லரால் கொல்லப்பட்ட யூதர்களின் எண்ணிக்கை சுமார் ஐம்பது லட்சம் ஆகும். யூதர்க​ளைத் த​லைகீழாக் கட்டித் ​தொங்கவிட்டு அவர்க​ளோட ​தோ​லை உறிச்சு அந்தத் ​தோலால மணிப்பர்ஸ் உள்பட பல ​பொருட்க​ளைத் தயாரித்து மகிழ்ந்த ​கொடுங்​கோலனாத் திகழ்ந்தான் ஹிட்லர் .1939 அல்பேனியா, செக்கொச்லோவக்கியா ஆகிய நாடுகளை ஹிட்லர் கைப்பற்றிக்கொண்டு போலந்து நாட்டின் மீது படைஎடுத்தான்.

இதனால் உல​கைப் புரட்டிப் ​போட்ட இரண்டாம் உலகப்​போர் ​​தொடங்கியது. ​போரின் ​தொடக்கத்தில் ஹிட்லரின் கை ஓங்கியிருந்தது. ஆனால் போரில் அமெரிக்காவும் ரஷ்யாவும் இணைந்த பின்பு நிலைமை மாறியது.​ஜெர்மனியின் தலைநகரான பெர்லினில் ஒரு சுரங்கம் அமைத்து ஹிட்லர் தங்கியிருந்தான். இச் சுரங்கத்தில் தான் ஹிட்லரின் அலுவலகமும் படுக்கை அறையும் இருந்தது. ஹிட்லரின் அறை 15 அடி நீளமும் 10 அடி அகலமும் கொண்டது. 1945 –ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குப் பின்னர் பெர்லின் நகரின் மீது ரஷ்ய விமானங்கள் குண்டுகளை வீசின. ஹிட்லர் தங்கியிருந்த பாதாள சுரங்கத்தின் அருகிலும் குண்டுகள் விழுந்தன. ஈவா பிரவுன் என்ற பெண் 1930 – ஆம் ஆண்டு முதல் ஹிட்லர் உடைய மனம் கவர்ந்த காதலியாக இருந்து வந்தாள். ​கொடு​மையாளனுக்கும் காதல் இருந்ததுங்கறது வியப்பாக இருக்கு பாருங்க. இந்தக் காதல்ங்கறது யா​ரையும் விட்டு​வைக்கவில்​லைங்கறது ​பெரிய ஆச்சரியமாத்தான் இருக்கு. இது வியப்பிலும் வியப்பாத் ​தெரியுது…

ஹிட்லரின் மரண சாசனம்

ஹிட்லர் இறப்பதுக்கு முன் எழுதிய மரண சாசனத்தில் பின்வருமாறு குறிப்பிடுகிறான்.

நாங்கள் இறந்த பிறகு எந்த ஜெர்மன் நாட்டு மண்ணுக்காக கடந்த 12 வருடங்களாக பாடுபட்டு வந்தேனோ அந்த ஜெர்மன் மண்ணிலேயே என்னையும் ஈவாவையும் உடனே எரித்து விட வேண்டும்.

என் சொத்துக்கள் எல்லாம் எனக்கு பிறகு என் கட்சிக்கு சேர வேண்டும். கட்சி அழிந்து விட்டால் நாட்டுக்கு சேர வேண்டும்.

ஜெர்மனி மண்ணின் மீதும், மக்கள் மீதும் நான் கொண்ட பற்றும் பாசமும்தான் என்னை வழிநடத்தின. கடந்த 30 ஆண்டுகளாக என் சக்தி முழுவதையும் என் தாய் நாட்டின் மேன்மைக்காக செலவிட்டிருக்கிறேன் .

இந்தப் போருக்கு நானே மூலகாரணம் என்று யாரும் நினைக்க வேண்டாம். ஏனென்றால் போர் வெறி கூடாது. ஆயுதக்குறைப்பு செய்ய வேண்டும், என்று நானே வலிறுத்தி இருக்கிறேன்.

முதல் உலகப்போருக்கு பிறகு இப்படி இரண்டாவது உலகப்போர் மூளும் என்று நான் சற்றும் நினைக்கவில்லை .எப்படியோ போர் மூண்டுவிட்டது.

இந்தப்போரினால் நம் நாடு சந்தித்த பயங்கர விளைவுகள், நாசமாக்கப்பட பிரம்மாண்டமான மாளிகைகள், தரைமட்டமாக்கப்பட்ட கலையம்சம் மிக்க நினைவுச் சின்னங்கள் யாவும் நம் மீது உலக நாடுகள் நடத்திய கோரத்தாக்குதலை நம்முடைய பிற்கால சந்ததியினருக்கு உணர்த்திக் கொண்டே இருக்கும்.

இந்த போருக்கு காரணமானவர்களை பார்க்கும் போதெல்லாம் ஒவ்வொரு ​ஜெர்மானிய இளைஞனுக்கும் உணர்ச்சியும் எழுச்சியும் ஏற்படும்.

என்று ஹிட்லர் இறுதிச் சாசனம் எழுதிக் கையெழுத்திட்டான்.

இ​தைப் படிச்சவுட​னே ஒங்களுக்கு ஆச்சரியமா இருக்கா? பின்ன இருக்காதா? சாத்தான் ​வேதம் ஒதுனது மாதிரிதான். பின்ன உலக மகாக் ​கொடுங்​கோலன் வாயிலிருந்து இத்த​கைய ​சொற்கள் ​வெளிவந்தா பிறகு எப்படி நி​னைக்கத் ​தோணும்?

​கொடு​மையாளனின் முடிவு

1945-ஆம் ஆண்டு ஏப்ரல் 30-ஆம் நாள் இரவு 9 மணி. “இன்று மாலை 4 மணிக்கு இத்தாலிய சர்வாதிகாரி முசோலினியும், அவன் மனைவியும் எதிர்ப்பாளர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர்” என்று சுவீடன் நாட்டு வா​னொலி அறிவித்தது. வா​னொலிச் செய்தியை ஹிட்லர் நேரடியாகக் கேட்டான். காதலியுடன் ​கொல்லப்பட்ட முசோலினியின் முடிவு, ஹிட்லருக்கு மிகுந்த வேதனையை உண்டாக்கியது. அன்றிரவு 12 மணி, பெர்லின் நகரம் முற்றிலுமாக ரஷியப்படைகள் வசமாகிவிட்டது என்றும், எந்த நேரத்திலும், சுரங்க மாளிகை தகர்க்கப்படலாம் என்றும், ஹிட்லருக்குத் தகவல் கிடைத்தது. ஹிட்லரின் முகம் இருண்டது. மவுனமாக எழுந்து, ஹிட்லர் தன் தோழர்களுடன் கை குலுக்கினான்.

பெர்லின் நகர்மீது ரஷியாவின் விமானங்கள் குண்டு மாரிப்பொழிந்து கொண்டு இருந்தன. எந்த நேரத்திலும் ரஷியப் படைகள், பெர்லின் நகருக்குள் புகுந்து விடலாம் என்கிற நிலை. எதிரிகளிடம் ​போர்க் கைதியாகப் பிடிபட்டால் தன் நிலை என்னவாகும் என்பதை உணர்ந்தான் ஹிட்லர். எதிரிகளிடம் சிக்குவதற்குள் தற்கொலை செய்து கொள்வதே மேல் என்ற முடிவுக்கு வந்தான். தன் முடிவைக் காதலி ஈவாபிரவுனிடம் தெரிவித்தான். ஹிட்லரின் முடிவைக் கேட்டு, ஈவாபிரவுன் திடுக்கிடவில்லை. “வாழ்விலும் உங்களுடன் இருந்தேன். சாவிலும் உங்களுடன்தான் இருப்பேன். உங்களுடன் நானும் தற்கொலை செய்து கொள்வேன்” என்றாள். மரணத்தில் கூட காதலர்கள் பிரிய நி​னைக்கவில்​லை. எண்ணமும் ​செயலும் ஒன்றாக இருக்கும்​போது காதலர்க​ளை காலன்தான் என்ன ​செய்துவிட முடியும்? நிஜ வாழ்க்​கை​யைப்​போன்று மரணத்திலும் ஹிட்லருடன் அவனது காதலி சங்கமிக்கச் சம்மதித்தாள்….

ஹிட்லர் தன் அந்தரங்க உதவியாளரை அழைத்து, “நானும் ஈவாவும் ஒன்றாக இறந்துவிடப் போகிறோம். நாங்கள் இறந்தபின், எங்கள் உடல்களை ஒரு போர்வையில் சுருட்டி, பெட்ரோல் ஊற்றி எரித்துச் சாம்பலாக்கி விடுங்கள். எங்கள் அறையில் உள்ள கடிதங்கள், டைரிகள், என் உடைகள், என் பேனா, கண்ணாடி முதலிய பொருள்களை சேகரித்து, ஒன்று விடாமல் எரித்துவிடுங்கள்” என்று கூறிவிட்டு, மனைவியையும் அழைத்துக்கொண்டு தன் அறைக்குச் சென்றார்.

அறைக்கதவு சாத்தப்பட்டது. வெகு நேரமாகியும் கதவு திறக்கப்படவில்லை. ஹிட்லரும் ஈவாவும் என்ன ஆனார்கள் என்று வெளியே இருந்தவர்களுக்குத் தெரியவில்லை. வெளியே நீண்ட நேரம் காத்திருந்த மந்திரிகளும், தளபதிகளும் கதவைத் திறந்து கொண்டு உள்ளே சென்றனர். அங்கே அவர்கள் கண்ட காட்சி: ஒரு சோபாவில், உட்கார்ந்த நிலையில் ஹிட்லரின் உயிரற்ற உடல். அவன் காலடியில் ஒரு துப்பாக்கி கிடந்தது. அதன் நுனியிலிருந்து புகை வந்து கொண்டிருந்ததால், அவன் சற்று நேரத்துக்கு முன்தான் தன்னைச் சுட்டுக்கொண்டிருக்க வேண்டும் என்று நி​னைக்க முடிந்தது. அவரனுடைய வலது காதுக்கு கீழ் அரை அங்குல அளவுக்கு துவாரம் விழுந்து, அதிலிருந்து ரத்தம் வழிந்து கொண்டிருந்தது.

ஹிட்லர், துப்பாக்கி முனையை வாய்க்குள் வைத்து சுட்டதால்தான், குண்டு காதுக்கு அருகே துளைத்துக் கொண்டு சென்றிருக்கவேண்டும் என்று தளபதிகள் கருதினார்கள். ஹிட்லரின் வலது ​கையானது ஒரு புகைப்படத்தை மார்போடு அணைத்தபடி இருந்தது. அந்தப்படம், ஹிட்லரின் தாயாரின் புகைப்படம். தாயின் மீது ஹிட்லர் கொண்டிருந்த பாசத்தை எண்ணி அவர் நண்பர்கள் கண்ணீர் சிந்தினர். ​தாய்ப்பாசத்​தை யாராலும் விடமுடியாதுங்கறத இதுலருந்து நாம ​தெரிஞ்சுக்கலாம் இதுதான் கல்லுக்குள் ஈர​மோ? ஹிட்லரு​டைய வாழ்க்​கையில நடந்தது வியப்பா​வே இருக்குது. சரி..சரி…பிறகு என்ன நடந்ததுன்னு படிங்க…..

ஹிட்லர் உடல் இருந்த சோபாவில் சாய்ந்தபடி பிணமாகியிருந்தாள் அவருடைய மனைவி ஈவா. வெள்ளைப் புள்ளிகளோடு கூடிய கருநீல “மாக்சி” உடை அணிந்திருந்தாள். அவள் உடல் நீலம் பாய்ந்திருந்தது. எனவே அவள் சயனைடு விஷம் சாப்பிட்டிருக்க வேண்டும் என்பது புலனாகியது.
ரஷ்யாவின் பீரங்கி தாக்குதலால் பொடிபொடியான ஹிட்லரின் பாதாள மாளிகை ஹிட்லர் உடலையும், ஈவா உடலையும் உதவியாளர்கள் ஒரு கம்பளிப் போர்வையில் சுற்றினார்கள். பிறகு அந்த உடல்களை அந்த அறையிலிருந்து தலைமைச் செயலகத் தோட்டத்திற்கு தூக்கிக் கொண்டு போனார்கள். அங்கே, பெட்ரோலையும், எரிவாயுவையும் கொண்டு இரு உடல்களையும் எரித்துச் சாம்பலாக்கினார்கள். சில மணி நேரம் கழித்து அங்கு வந்த ரஷியப்படையினர் ஹிட்லரைக் காணாமல் திகைத்துப் போனார்கள். அவன் தற்கொலை செய்து கொண்டதும், பிணம் எரிக்கப்பட்டதும் பிறகுதான் தெரிந்தது. எனினும் ஹிட்லர் சாகவில்லை, தலைமறைவாக இருக்கிறார் என்று நீண்ட காலம் நம்பியவர்களும் உண்டு! இதுதான் விந்​தையிலும் விந்​தை!

ஹிட்லர் ஈவு இரக்கமற்ற கொடியவனாக இருந்தாலும், ஆச்சரியப்படத்தக்க வகையில் சில நல்ல குணங்களும் அவனிடம் இருந்தன. ஹிட்லர், குழந்தைகளிடமும், பிராணிகளிடமும் அன்பு கொண்டவன். பிறகு எப்படி யூதர்களின் குழந்​தைக​ளைக் ​கொன்றான் ​​என்பது வியப்பாக உள்ளது. மது அருந்த மாட்டான். புகை பிடிக்க மாட்டான். சைவ உணவே சாப்பிடுவான்.
ஆச்சரியமா இருக்குல்ல. இ​தெல்லாம் இருந்து என்ன பண்ண?….

ஹிட்லர் மீது உயி​ரை​யே வச்சிருந்தவங்களும் இருந்தாங்க அதற்கு சிறந்த எடுத்துக்காட்டு ​கோயபல்ஸ் ஆவார். உலகப் போரின்போது, ஹிட்லரின் பிரசார பீரங்கியாகச் செயல்பட்டவர், கோயபல்ஸ். 1897-ல் பிறந்த கோயபல்ஸ், 8 பல்கலைக்கழகங்களில் உயர் கல்வி பயின்றவர். தத்துவத்தில் “டாக்டர்” பட்டம் பெற்றவர். சிறந்த பேச்சாற்றலும், எழுத்தாற்றலும் மிக்கவர். 1929-ல் இவர் ஹிட்லர் மந்திரி சபையில் பிரசார மந்திரியானார். உலகப்போரின்போது, புதுப்புது உத்திகளைக் கையாண்டு, ஹிட்லரின் பெயர் உலகம் முழுவதும் பரவச் செய்தார். (போரில் ஹிட்லர் தோல்வியைச் சந்தித்தபோதும், அவர் வெற்றி பெற்று வருவதாக பிரசாரம் செய்தார். இதன் காரணமாக பொய் பேசுபவர்களை “கோயபல்ஸ்” என்று வர்ணிக்கும் வழக்கம் வந்தது.) ஹிட்லர் மீது இவர் கொண்டிருந்த பக்திக்கு அளவே இல்லை. ஹிட்லர் தற்கொலை செய்து கொண்டதற்கு மறுநாள், கோயபல்ஸ் தன் மனைவியுடனும், 6 குழந்தைகளுடனும் விஷம் தின்று தற்கொலை செய்து கொண்டார். குழந்தைகள் 2 முதல் 12 வயது வரை உள்ளவர்கள். மன​சே நடுங்குதுல்ல…​கொடியவனுக்குக்கூட இப்படிப்பட்ட நண்பர்கள் இருந்திருக்காங்க…

இ​தை பாக்குற​போது ஒரு சித்தர் பாடல்தான் நமக்கு நி​னைவுக்கு வருது. ​கேளுங்க….

“நந்த வனததில் ஓர் ஆண்டி

அவன்நாலாறு மாதமாக் குயவ​னை ​வேண்டி

​கொண்டு வந்தா​னொரு ​தோண்டிஅ​தைக்

கூத்தாடிக் கூத்தாடிப் ​போட்டு​டைத் தாண்டி”.

இது மாதிரி தனக்குக் கி​டைத்த நல்ல வாழ்க்​கை​யை வீணாக்கிவிட்டு மற்றவர்க​ளையும் துன்பப்படுத்தி இறுதியில ​இழிவான மரணத்​தை தழுவின ஹிட்லரு​டைய வாழ்க்​கை மிகவும் ​மோசமானதுங்க.. எப்படி வாழக் கூடாதுங்கறதுக்கு ஹிட்லரு​டைய வாழ்க்​கை நமக்கு ஓர் எடுத்துக்காட்டாக அ​மைஞ்சிருக்கு… இ​றைவன் ​கொடுத்த வாழ்க்​கைய நல்லா பயனுள்ளதா வாழணும். அதவிட்டுவிட்டுப் பிற​ரைப் பழி வாங்குறதுக்காக​வோ தன்னலத்துக்காக​வோ வாழக் கூடாது….​கொடு​மையான வாழ்​வை விட்டுட்டு நல்ல வாழக்​கை​யை வாழ்​வோம்னு உறுதி எடுத்துக்கு​வோம்…

என்னங்க ஏ​தோ மன​தைக் கவர்வது ​போலப் பாட்டுக் ​கேக்குது…​தேவகானம் ​போன்று இருக்கிற​தே? எங்கிருந்து வருது..எப்ப​வோ யா​ரோ பாடினதுங்கறீங்களா. அவங்க யாரு..இ​சையால உல​கை ​வென்றவங்க… அவரப் பார்த்த ஒட​னே நமக்கு ஒள​வையார் தான் நி​னைவுக்கு வரும்…வறு​மையில வாடினவரு…..சிறந்த விடுத​லைப் ​போராட்ட வீரர்…ஒரு படத்துல நடிக்கிறதுக்கு ஒரு இலட்சரூபாய் முதன்முதலாக வாங்கின ஒரு…​பெண் நடிகர்…இவரு​டைய கணவர் மிகச் சிறந்த பாடகர்…நடிகர்….நம்ம தமிழகத்​தைச் ​சேர்ந்தவரு..கு​​றைந்த வயசு​லே​யே வித​வையாயிட்டாங்க.. அவருக்குக் ​ ​கொடுமுடிக் ​கோகிலம் அப்படிங்கற பட்டமும் உண்டு…அவங்க…யாரு தன்கணவ​ரோட மட்டுந்தான் க​டைசி வரயிலும் நடிச்சாங்க..தீரர் சத்தியமூர்த்திய அண்ணான்னு வாய்​​நெறயக் கூப்பிடுவாங்க…இள​மையில ​​ரொம்ப ​​ரொம்ப கஷ்டப்பட்டாங்க…இன்​றைக்கும் அவர​ரோட பாட்டக் ​கேட்டாலும் அதுல மனம் லயிச்சுப் ​போயிடும்…அவங்க யாரு…​பேரச் ​சொல்லுங்க….என்னங்க ​யோசிக்கிறீங்களா?…​சரி…யோசிச்சு அடுத்த வாரம் ​சொல்லுங்க…(​தொடரும்………16)

Series Navigationமருத்துவக் கட்டுரை தற்கொலை முயற்சிதாகூரின் கீதப் பாமாலை – 73 பரிவான விருந்தோம்பல் .. !
author

முனைவர் சி.சேதுராமன்

Similar Posts

Comments

  1. Avatar
    Dr.G.Johnson says:

    அடால்ப் ஹிட்லர் என்னதான் ஒரு கொடுங்கோல் சர்வாதிகாரியாக இருந்தாலும் அவரிடமும் உயரிய மனிதப் பண்புகளும் இருந்துள்ளன.

    *அவர் தமது மொழியையும், தாய்நாட்டையும் உயிருக்கும் மேலாகக் கருதியவர்.

    * பெற்ற தாய் மீது அளவற்ற்ற மரியாதை செலுத்தியவர்.

    * காதலித்த ஈவா பிரான் எனும் பெண்மணியை கடைசியில் மனைவியாக ஏற்றுக்கொண்டவர்.

    * அவர்கள் இருவரும் தற்கொலை செய்துகொள்ளுமுன் சிறிது நிமிடங்களுக்கு முன்தான் கணவன் மனைவியாக மோதிரம் மாற்றிக்கொண்டனர்.

    * அவர் மேல் அந்த பெண் எத்தனை ஆழமான காதல் கொண்டிருந்தால் அவருடன் சாகத் துணிந்திருப்பாள் ! இது பெரும் ஆச்சரியம்!

    * ஹிட்லருக்கு செல்ல நாய்கள் மீது அலாதிப் பிரியம். ஈவாவுக்கு தரப்பட்ட சயநைட் விஷம் வீரியமிக்கதா என்பதைப் பரிசோதிக்க முதலில் அவரின் செல்ல நாய்க்குதான் தரப்பட்டது அது உடன் இறந்ததும் அதை ஈவாவுக்கு தந்தார். அவளும் இறந்து வீழ்ந்ததும் தமது வாய்க்குள் குண்டைப் பாய்ச்சிக் கொண்டார்.

    * இவர் ஒரு கொள்கை வீரர்! கொள்கைக்காக நல்ல பழக்க வழக்கங்களைக் கைப் பிடித்தார்! புகைப்பதில்லை. மது அருந்துவதில்லை பெண் பித்தர் இல்லை.லஞ்ச ஊழலில் ஈடு பட்டதில்லை இவர் ஒரு சிறந்த பேச்சாளரும் எழுத்தாளரும்கூட!

    * ஹிட்லர் ஒரு சிறந்த கலைப் பிரியரும் கூட,! இவர் சார்லி சாப்ளின் படங்களை விரும்பி பார்ப்பவர்! இசை, ஓவியம், சிற்பம், கட்டிடக் கலை போன்றவற்றை இரசிப்பவர்! பாரிஸ் நகரை ஜெர்மன் படைகள் தாக்கிய போதுகூட அங்குள்ள கலை நயமிக்க கட்டிடங்களை சேதப்படுத்தாமல் கண்காணித்தவர் .

    இத்தகைய நல்ல பண்புகள் கொண்ட ஒரு மனிதர் ஏன் யூதர்கள் மீது அத்துணை வெறுப்பு கொண்டார்?

    வியன்னாவின் Academy of Fine Arts அவரை ஓவியம் பயில நிராகரித்தது.அதன் நிர்வாகம் முழுதும் யூதர்களின் கையில் இருந்தது .அன்றே யூதர்களுக்கு எதிரான சபதத்தை மேற்கொண்டார்!அதையே கடைசி வரை வாழ்கையின் வைராக்கியமாகக் கொண்டார் ஹிட்லர்!

    அருமையான ஒரு சரித்திரப் புருஷனை நமக்கு அழகாக நினைவூட்டியுள்ள முனைவர் சி .சேதுராமன் அவர்களுக்கு எனது வாழ்த்துகள் !…டாக்டர் ஜி.ஜான்சன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *