வால்ட் விட்மன் வசனக் கவிதை -32 என்னைப் பற்றிய பாடல் – 25

This entry is part 8 of 18 in the series 14 ஜூலை 2013

 

(Song of Myself)

வாழ்வின் அர்த்தம் என்ன ?

Walt Whitman 

 (1819-1892)

(புல்லின் இலைகள் –1)

 

மூலம் : வால்ட் விட்மன்
தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா

 

  

இதுதான் அந்த நகரம் !

அதனில் நானொருக் குடிப்பிறவி !

அரசியல், போர், கல்விக்கூடம், செய்தித் தாள்,

அங்காடி வாணிப நிலவரம்,

எவையெலாம் பிறருக்கு விருப்பமோ

அவை எனக்கும் விருப்பமே !

நகராண்மை அதிபர், உறுப்பினர்,

வங்கிகள், நீராவிக் கப்பல், தொழிற்கூடங்கள்,

சுங்க வரிகள்,

ஏற்றுமதி, இறக்குமதி வாணிபங்கள்

வீடு, கடை, நில விற்பனை;

என்ன வென்று அறிவேன்,

என்னைப் போலிருக்கும்

இரட்டையரை அறிந்து கொள்வேன்;

பலவீனரை,

ஆழ்மனம் இல்லாதவரை

அறிவேன்;

மரண மில்லை அவர்க்கும்

என்னைப் போல் !

 

 

நான் சொல்வதும், செய்வதும் கூட

பொறுத்தி ருக்கும் அவர்க்கு !

எனக்குத் தடுமாறும் ஒவ்வோர் எண்ணமும்

அவர்க்கும் தடுமாறும்.

எனக்கு நன்கு தெரியும்

என் தற்பெருமை முரசடிப்பு,

கண்டதைப் புசிப்பது,

இவற்றைக் குறைத்துக்

கூற முடியாது என்னால் !

கொடுத்திடச் சுமந்து வருவேன்  

எனக்குத் தோழனாய்

இருப்போ னுக்கு.

எனது இப்பாடல்

வாடிக்கை யான வேடிக்கை

வார்த்தைகள் அல்ல !

நேரடி வினாவைக் கேட்பவை

அண்டையில் உள்ள வற்றைத் தாண்டி

அப்பால் செல்பவை !

 

 

எப்போதும் வானவெளி மேலே

இருக்குது !

ஆயினும் இங்கே,

அடுத்த வீட்டு வாசலில்,

எதிர்த்த தெருவில்

புனிதர்கள்

வரலாற்று முனிவர்கள்

வசித்து வருகிறார் !

ஆனால் நீ

நீயாக இருக்கிறாயா

மதப் போதனைகள், சமயத் தத்துவங்கள்,

திருமறை நியதிகள்

இருந்தும் ?

ஆயினும் ஆழம் காண முடியா

மானிட மூளை !

ஏன் என்று கேட்ப தென்ன ?

காதல் என்ப தென்ன ?

வாழ்வின் அர்த்தம் என்ன ?

 

+++++++++++++

 

தகவல்:

  1. The Complete Poems of Walt Whitman , Notes By : Stephen Matterson [2006]
  2.  Penguin Classics : Walt Whitman Leaves of Grass Edited By : Malcolm
    Cowley [First 1855 Edition] [ 1986]
  3. Britannica Concise Encyclopedia [2003]
  4. Encyclopedia Britannica [1978]
  5. http://en.wikipedia.org/wiki/Walt_Whitman [November 19, 2012]
  6. http://jayabarathan.wordpress.com/abraham-lincoln/
    [ஆப்ரஹாம் லிங்கன் நாடகம்]

********************
jayabarat@tnt21.com [S. Jayabarathan] (July 9, 2013)
http://jayabarathan.wordpress.com/

Series Navigation‘நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து…………27 சி.சு. செல்லப்பா – ‘ நீ இன்று இருந்தால்’போதி மரம் சத்யானந்தன் பாகம் 2 – புத்தர் அத்தியாயம் 28
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

2 Comments

  1. Avatar
    Dr.G.Johnson says:

    அருமையான அழகுத் தமிழில் கவி பாடியுள்ளீர்கள் கவிஞர் ஜெயபாரதன் அவர்களே ! அறிவியல்., விண்வெளி , நாடகம் ,கவிதை வரி என எழுதிக் குவிக்கும் முத்தமிழ் வித்தகரே! …’டாக்டர் ஜி.ஜான்சன்.

  2. Avatar
    சி. ஜெயபாரதன் says:

    நண்பர் டாக்டர் ஜி. ஜான்ஸன்,

    தமிழில் கசப்புள்ள மருத்துவக் கட்டுரைகளையும், மெய்க் கதைகளையும் தொடர்ந்து திண்ணையில் சுவைப்பட எழுதுபவர் நீங்கள் ஒருவர்தான். கோடியில் ஒருவர். அதற்கு எனதினிய பாராட்டுகள்.

    உங்கள் பாராட்டுக்கு எனது பணிவான நன்றி.
    சி. ஜெயாரதன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *