வால்ட் விட்மன் வசனக் கவிதை -36 என்னைப் பற்றிய பாடல் – 29 (Song of Myself) என் அடையாளச் சின்னங்கள் .. !

This entry is part 8 of 30 in the series 11 ஆகஸ்ட் 2013

 

 

Walt Whitman

 (1819-1892)

(புல்லின் இலைகள் –1)

மூலம் : வால்ட் விட்மன்
தமிழாக்கம் : சிஜெயபாரதன்கனடா

 

 

நல்லதோர் காலமும்,

நலமிக்க சூழ் வெளியும்

உள்ளது எனக்கென்று நான்

அறிவேன்;

என்னை யாரும்

எடை போட வில்லை !

என்னை என்றும்

எடை போடவும் இயலாது !

எல்லோரும் வந்து கேளீர் !

நில்லாத பயணத்தில்  

மிதிநடை வைத்து விட்டேன் !

என் அடையாளச் சின்னங்கள் :

மழைநீர் ஒட்டா அங்கி,

சிறந்த கால் செருப்பு,

காட்டு மரத்தில் வெட்டிய

கைத்தடி !

நண்பன் எவனும் சுகம் காணான்

என் நாற்காலியில் !

நாற்காலியும் இல்லை இப்போது !

கிறித்துவ ஆலயம் ஒன்று

எனக்கில்லை !

தத்துவச் சிந்தனை எதுவும்

எனக்கில்லை !

 

 

உணவறை மேஜைக்கோ,

நூலகத் துக்கோ,

பணப் பரிமாற்ற வங்கிக்கோ நான்

பாதை காட்டுவ தில்லை

எவருக்கும் !

ஆலய மணி அடித்தால்

ஆடவர், பெண்டிரை

நான் வழி

அனுப்பி வைப்பேன்.

இடது கரம் செல்லும் பெண்ணின்

இடுப்பைச் சுற்றி !

வலது கரம் கண்டச் சரிவுகள் உள்ள

உலகைச் சுட்டிக் காட்டும்

பொது வீதி உட்பட !

நானும், வேறு எவரும் அந்த

வீதியில் உனக்காக

நடைப் பயணி யாக முடியாது !

 

 

நீயே உனக்காகப்

பயணம் புரிய வேண்டும் !

வெகு தூரத்தில் இல்லை வீதி,

இயலும்

தூரத்துக் குள்ளே தான்

இருக்கிறது அதுவும் !

ஒருவேளை

பிறந்தது முதல்

நீ அதன் மேலே

இருந்திருக் கலாம்

தெரியா மலே !

எல்லா இடத்திலும் இருக்கலாம்

வீதி என்பது,

நீரிலும், நிலத்திலும்

ஒருவேளை

 

++++++++++++++++++++++

 

தகவல்:

  1. The Complete Poems of Walt Whitman , Notes By : Stephen Matterson [2006]
  2.  Penguin Classics : Walt Whitman Leaves of Grass Edited By : Malcolm
    Cowley [First 1855 Edition] [ 1986]
  3. Britannica Concise Encyclopedia [2003]
  4. Encyclopedia Britannica [1978]
  5. http://en.wikipedia.org/wiki/Walt_Whitman [November 19, 2012]
  6. http://jayabarathan.wordpress.com/abraham-lincoln/
    [ஆப்ரஹாம் லிங்கன் நாடகம்]

********************
jayabarat@tnt21.com [S. Jayabarathan] (August 7, 2013)
http://jayabarathan.wordpress.com/

Series Navigationமங்கோலியன் – I‘நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து…………30 வெங்கட் சாமிநாதன் – ‘இன்னும் சில ஆளுமைகள்’
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *