கூடு

Spread the love

 

 

புழக்கமில்லாத வீட்டில்

சிட்டுக்குருவி

புதுக்குடித்தனம்.

 

ஐந்தாவது மாடியிலிருந்து

கீழே பார்க்க

எறும்புகளாய் ஜனங்கள்.

 

நிலவுத்தட்டில்

பரிமாறப்பட்ட உணவு

நான் நீ என்ற

போட்டியால்

நாய்க்குப் போனது.

 

புல் தயங்குகிறது

விடியலில்

பனித்துளிக்கு

விடைகொடுக்க.

 

நீர் ஊறுவதற்கு முன்பே

நரபலி கேட்கிறது

ஆழ்துளைக் கிணறு.

 

சாளரம் வழியே

சவஊர்வலக் காட்சி

எத்தனைப் பூக்கள்

சிதைந்து அழியும்

செருப்புக்கால்களால்.

 

அடுக்களையில்

வியர்வை வழிய

சமையல் செய்தவள்

சாப்பிடுவதென்னவோ

மிச்சத்தைத் தான்.

 

Series Navigationபிரதிவாதி பயங்கரம் ஸ்ரீனிவாஸ் பெயரில் வந்த கௌரவம்: பலரோடு எனக்கும் ஒன்றுபாலைவனத் தொழிலாளியின் பா(ட்)டு!