பிரதிவாதி பயங்கரம் ஸ்ரீனிவாஸ் பெயரில் வந்த கௌரவம்: பலரோடு எனக்கும் ஒன்று

This entry is part 14 of 25 in the series 25 ஆகஸ்ட் 2013

பிரதிவாதி பயங்கரம் ஸ்ரீனிவாஸ் பெயரில் வந்த கௌரவம்: பலரோடு எனக்கும் ஒன்று இவ்வளவு மாதங்களுக்குப் பிறகு போன வருடம் டிஸம்பர் மாதத்திலிருந்து நடந்த நிகழ்வுகளை அவற்றின் தொடர்ச்சியில் சொல்லாம் தான். ஆனால் இவற்றின் தொடக்கம் எங்கு எப்போதிலிருந்து என்பதெல்லாம் எனக்கு தெரியாத காரணத்தால் சொல்வது கடினம். ஒருவாறாக யூகிக்கலாம். அது தவறாகவும் இருக்கலாம். சரி இப்படித்தான் தொடங்குகிறது. அம்ருத வர்ஷினி என்ற பங்களூரிலிருந்து செயல்படும் ஒரு ஸ்தாபனத்திலிருந்து கே.எஸ்.எல் ஸ்வாமி என்பவர் கையெழுத்திட்டு 5.12.2012 தேதியிட்ட கடிதம் […]

அயோத்தியின் பெருமை

This entry is part 10 of 25 in the series 25 ஆகஸ்ட் 2013

  சிலப்பதிகாரத்தின்  கதைத்தலைவன்  கோவலன்  புகார்  நகரை  விட்டுப்  பிரிந்து  செல்கிறான்.  அதனால்  அந்நகர  மக்கள் வருந்துகின்றனர்.  இதற்கு  உவமை கூற வந்த இளங்கோ அடிகள் இராமபிரான்  அயோத்தியை  விட்டுப் பிரியும்  போது  மக்கள் எவ்வாறு துன்பம் அடைந்தனரோ அதேபோல மக்கள் பெருந்துயருற்றனர் என்கிறார்.            “அருந்திறல் பிரிந்த அயோத்தி போல                         பெரும் பெயர்  மூதூர்  பெரும் பேதுற்றதும்” என்பன இளங்கோ எழுதிய பாடல் அடிகளாகும். பகவான் நாராயணனே வைகுந்தத்தின் மத்தியிலிருந்து அயோத்தியெனும் பாகத்தை […]

பிரபஞ்சத்தை உருவாக்கும் பிண்டம், கரும் பிண்டம், எதிர்ப் பிண்டம் [Matter, Dark Matter, Anti-Matter]

This entry is part 23 of 25 in the series 25 ஆகஸ்ட் 2013

      சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா     காலக் குயவன் ஆழியைச் சுற்றி ஞாலத்தை வார்க்க களி மண்ணை நாடி கரும்பிண்டம் படைத்தான் கரையற்ற விண்வெளி எல்லாம் ! ஏராளமாய்ப். பிரபஞ்ச இருள்வெளில் மிதப்பது கரும்பிண்டம் ! கதிர் வீசும் கரும்பிண்டம் கண்ணுக்குத் தெரியாது கருவிக்குப் புலப்படும், அதன் கவர்ச்சி விசை குவிந்த ஆடி போல் ஒளிக் கதிரை வில்லாய் வளைக்கும் ! கரும்பிண்டம் இல்லையேல் ஒளி மந்தைகள் […]

திட்டமிட்டு ஒரு கொலை

This entry is part 22 of 25 in the series 25 ஆகஸ்ட் 2013

எஸ். சிவகுமார்.   ராமகிருஷ்ணன் :   எதையும் திட்டமிட்டுச் செய்வதில் ஒரு சுகம், சௌகரியம் இருக்கிறது. திட்டமிட்ட வேலையைச் செய்யும்போது பதற்றம் இருக்காது. ரத்தக்கொதிப்பு அதிகரிக்காது. நான் எந்த வேலையும் இதுவரை திட்டமிடாமல் செய்தது கிடையாது. பள்ளிப்படிப்பு முடிந்ததுமே நன்றாக யோசனை செய்து, மேல்படிப்பு எனக்குச் சரிப்பட்டு வராது என்று முடிவு செய்து, யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் ஓடிப்போய் ராணுவத்தில் சேர்ந்ததிலிருந்து நினைத்துப் பார்த்தால், அதன் பின்னர் ஒவ்வொரு செயலுமே அவசரப்படாமல் யோசனை செய்துத் திட்டமிட்டே […]

நாவற் பழம்

This entry is part 21 of 25 in the series 25 ஆகஸ்ட் 2013

1960களில் நாவற்பழம் விற்கும் பாட்டியின் நங்கூரக் குரலால் தெருக்கோடி அதிரும்   ‘நவ்வாப்பழோம்……’   உழக்கரிசிக்கு உழக்குப் பழம் பள்ளிக் கூடத்திலும் ஒரு தாத்தா நாவற் களிகளை கூறு கட்டி விற்பார்   செங்காயை உள்ளங்கைகளில் உருட்டி கனிந்துவிட்ட தென்று களித்த காலங்கள் அவை   ஒரு நாள் விளையாட்டாய் விதைத்து வைத்தேன் ஒரு நாவல் விதையை இரண்டே மாதத்தில் இரண்டடி வளர்ந்தது புதிதாய்ப் பிறக்கும் பொன்தளிர் கண்டுதான் என் பொழுதுகள் புலர்ந்தன இருபது ஆண்டுகளில் இருபதடி […]

முக்கோணக் கிளிகள் [2]

This entry is part 20 of 25 in the series 25 ஆகஸ்ட் 2013

    இனம் தெரியவில்லை எவனோ என் அகம் தொட்டு விட்டான்! அன்று காலை முதல் பீரியட் கணக்கு வகுப்பில் ஏகப்பட்ட கலவரம். அப்போது தென்னக மாநிலங்கள் தனியாகப் பிரியாத காலம் அது! நூறு பேர் கொண்ட முதல் வகுப்பில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய நான்கு மொழி மாணவர்களும் கலந்திருந்தனர். அவர்களில் பெண்கள் மட்டும் பத்துப் பேர். முதல் வகுப்பு மலையாள மாணவர்களுக்கு சிவநாதனை ஏனோ பிடிக்கவில்லை! பின் பெஞ்சிகளில் அமர்ந்த மலையாளிகள் பலர் […]

சாகச நாயகன் – 4. ஷீ தாவ் – ஸ்டண்ட் ஒருங்கிணைப்பாளராக

This entry is part 19 of 25 in the series 25 ஆகஸ்ட் 2013

  பிஸ்ட் ஆப் புயூரி படத்தின் அனுபவம் சானுக்கு தான் யார் என்பதை உணர வைத்தது.  யாரையும் வீணே புகழ்ந்து துதி பாடி வாழ விரும்பாத குணம் தனக்கு இருந்ததைத் தெரிந்து கொண்டான்.   எத்தனை தான் நல்ல முறையில் ஸ்டண்ட் செய்தாலும், சான் நிச்சயம் இயக்குநர், தயாரிப்பாளர், முக்கியமாக ஸ்டண்ட் ஒருங்கிணைப்பாளரின் கீழ் அவர்களது ஏவலுக்கு பணிந்தே வேலை செய்ய வேண்டி இருந்தது.   அடிதடி சண்டைக் காட்சிகள் எடுக்கும் போது ஒருங்கிணைப்பாளரின் கை மிகவும் […]

தூங்காத கண்ணொன்று……

This entry is part 18 of 25 in the series 25 ஆகஸ்ட் 2013

இறங்க வேண்டிய இடம் கடந்து வெகுதூரம் வந்தாயிற்று; தோளில் வழிந்து தூங்குபவனை உதறிவிட்டு எப்படி எழுந்து போவது?   யுகங்களின் தூக்கத்தை ஒரே நாளில் தூங்குகிறானா? தூங்கியே துக்கங்களைக் கடந்து விடுகிற முயற்சியா? அமைதியாய் ஆழ்ந்து உறங்குகிற சூழல் அமையவே இல்லையா இதுவரை…   வீடென்பது இவனுக்கு போர்க்களமோ; அல்லது வீடற்ற பிளாட்பார வாசியா? இரவுகளில் தூங்க முடியாமல் உறவுச் சிக்கல்களில் உழல்பவனா; அல்லது பிரிவெனும் பெருந்துயரில் பிதற்றி அலைபவனா?   பேருந்தில் ஏறியதும் பேச்சுக் கொடுத்தான்; […]

தொல்காப்பியம், ஆந்திர சப்த சிந்தாமணியில் – வினையடிகள்

This entry is part 17 of 25 in the series 25 ஆகஸ்ட் 2013

ரா.பிரேம்குமார், முனைவர் பட்ட ஆய்வாளர், இந்திய மொழிகள் மற்றும் ஒப்பிலக்கியப்பள்ளி, தமிழ்ப்பல்கலைக்கழகம் தஞ்சாவூர். முன்னுரை: ஒரு மொழியின்கண் உள்ள எழுத்தமைப்பு, சொல்லமைப்பு, தொடரமைப்பு போன்றவற்றை வரையறை செய்து விளக்குவது இலக்கணமாகும். இவ்விலக்கணத்தில் மொழியின் வளமை, மரபு மற்றும் கட்டமைப்பு வரையறைகளை விளக்குவதிலும் இலக்கணம் இன்றியமையாத இடம் வகிக்கிறது. உலகில் உள்ள அனைத்து மொழிகளுக்குமே இலக்கணக் கட்டுக்கோப்பும் வரையறையும் உண்டு. இவ்வாறு இல்லாமற் போயின் ஒருவர் பேசுவது இன்னொருவருக்குப் புரியாமல் போய்விடும். தென் திராவிட மொழிக் குடும்பத்தைச் சார்ந்த […]