டாக்டர் ஐடா – தியாகம்

This entry is part 10 of 15 in the series 1 செப்டம்பர் 2013

Ida_S._Scudder_1899indeximages s

                                                     டாக்டர் ஜி. ஜான்சன்

           திண்டிவனம் என்றும் போல காரிருளில் மூழ்கியிருந்தது. அது இரவு நேரம். மின்சாரம் இல்லாத காலம். வருடம் 1870 !

அந்த மிஷன் பங்களாவில் சிம்னி விளக்கு வெளிச்சத்தில் ஒரு இளம் அழகிய அமெரிக்க நங்கை ஆங்கில நாவல் படித்துக் கொண்டிருந்தாள் .

அவளின் பெயர் ஐடா ஸோஃபியா ஸ்கடர் ( Ida Sophia Scudder ) . வயது 20. அமெரிக்காவில் இறைத் தூதர் ( missionary ) பயிற்சியும் பெற்றவள் . ஆனால் அதில் ஆர்வம் இல்லாதவள் .

இந்தியாவில் நிலவிய வறுமை, பஞ்சம்,வியாதி அவளை விரக்திக்குள்ளாக்கியது .

அவளுடைய தந்தை ஒரு மருத்துவ இறைத் தூதர் ( Medical Missionary ) பெயர் மறைத்திரு டாக்டர் ஜான் ஸ்கடர் . திண்டிவனம் பகுதியில் ஏசுவின் இறைப்பணியுடன் மருத்துவப் பாணியிலும் ஈடுபட்டிருந்தார்.

தாய்க்கு உடல் நலம் குன்றிய காரணத்தினால் ஐடா ஸ்கடர் அப்போது திண்டிவனம் வந்திருந்தாள் .

.          தந்தையின் மருத்துவப் பணியின்போது உதவி வந்த தாய்க்கு உடல் நலம் குன்றிய காரணத்தால் இவள் உதவ வேண்டிய நிர்ப்பந்தம் உண்டானது. பாமர மக்கள் இவளையும் ஒரு மருத்துவராக எண்ணினர்.

இறைத் தூதர் பணியில் அவளுக்கு நாட்டமில்லாமல் போனதற்கு இந்தியாவின் பின்தங்கிய நிலை ஒரு காரணம். அவளுடைய குடும்ப உறுப்பினர் அனைவருமே இறைப் பணியாளர்கள் என்பது இன்னொரு காரணம். அவருடைய ஏழு சகோதரர் அனைவருமே இறைப் பணியாளர்கள்தான்! அதோடு அவளின் இளமை. பிடித்த ஒருவரை திருமணம் புரிந்து அமெரிக்காவில் சொகுசாக வாழ வேண்டும் என்ற கனவு!

ஆனால் அன்றைய இருண்ட இரவு அவளுடைய உள்ளத்தில் ஒரு உள்ளொளியை உண்டுபண்ணியதை இறைவனின் செயல் என்றுதான் கூறவேண்டும்!

நாவலில் மூழ்கியிருந்தவளின் கவனத்தை கதவை வெளியில் யாரோ தட்டும் சத்தம் கலைத்தது. நள்ளிரவை நெருங்கும் நேரம். பெற்றோர் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தனர். எழுந்து சென்று கதவைத் திறந்தாள்.

லாந்தர் ஒளியில் ஒரு இஸ்லாமியர் தலையில் சமய குல்லா அணிந்தவாறு நிற்பது கண்டாள் . அவரைப் பார்த்து அவள் திரு திருவென விழித்தாள். வந்தவர் பதற்றத்துடன் காணப்பட்டார்.

” மிஸ்ஸியம்மா . நீங்கள்தான் என் மகளைக் காப்பாற்றணும்! ” அவர் மன்றாடினார்.

” உங்கள் மகளுக்கு என்ன? ” எனும் அர்த்தம்பட தமிழில் கேட்டாள் அந்த அமெரிக்க மங்கை.

” தலைப் பிரசவம்! வலியால் துடிக்கிறாள்! உடனே வாருங்கள் அம்மா ” அவர் கெஞ்சுகிறார்.

” ஐ. ஆம் சாரி. நான் டாக்டர் இல்லே. பிரசவம் பாக்க எனக்கு தெரியலே . ”

+ அப்படி சொல்லாதீங்க மிஸ்ஸியம்மா. ஏதாவது செய்யுங்கள். ‘ அவரின் நிலை அப்படி.

” இருங்கள். அப்பாவை எழுப்புறேன். அவர் உடன் வருவார். ” என்றவாறு மாடி அறைக்குச் செல்ல திரும்பினாள்.

” வேண்டாம் மிஸ்ஸி. அவரை எழுப்பவேண்டாம். ” அவர் உரக்க கூறி தடுத்தார்.

” ஏன் வேண்டாம்? உங்களுடைய மகள் ? ”

” வேண்டாம் அம்மா வேண்டாம்! ஒரு முஸ்லீம் பெண்ணுக்கு ஆண் பிரசவம் பார்க்க எங்களின் வேதத்தில் இடம் இல்லை. அதைவிட அவள் செத்தாலும் பரவாயில்லை. நான் வருகிறேன் தாயே! ” கைகள் கூப்பி விடை பெற்று இருளில் மறைந்துபோனார்.

அவள் செய்வதறியாது வியந்து நின்றாள்.

கதவைத் தாழிட்டுவிட்டு நாவலைக் கையில் எடுத்தாள். விட்ட இடத்தில் தொடர முயன்றாள். ஆனால் முடியவில்லை.

மனதில் ஒரு நெருடல்.

அதிக நேரம் ஆகவில்லை.

மீண்டும் கதவு தட்டப்பட்டது.

ஒருவேளை அவர்தான் மனம் மாறி மீண்டும் வந்துள்ளாரோ என்ற எண்ணத்தில் கதவைத் திறந்து பார்த்தாள்

அது வேறொருவர். நடுத்தர வயதுடையவர். நெற்றியில் பட்டை தீட்டியிருந்தது. அவ்ர் ஒரு இந்து. வணக்கம் கூறிவிட்டு அவர் சொன்னது அவளை வியப்பில் ஆழ்த்தியது.

” மிஸ்ஸியம்மா . என் மனைவி பிரசவ வலியால் துடிக்கிறாள். உடன் என்னோடு வாருங்கள் அம்மா . அந்த இரு உயிரையும் காப்பாற்றுங்கள் தாயே! ” அவரும் கெஞ்சினார்.

மீண்டும் அதே பதிலைத்தான் அவள் கூறினாள். தந்தையை அழைக்கவா என்று கேட்டாள்.

” வேண்டாம் தாயே! எங்கள் ஹிந்து சாஸ்த்திரத்தில் அதற்கு இடமில்லை . என் மனைவி செத்தாலும் சாகலாமே ஒரு ஆண் அவளுக்கு பிரசவம் பார்க்க முடியாது தாயே. ” அவரும் ஏமாற்றத்துடன் திரும்பினார்.

அவர் சென்றபின்பு அவள் அமைதி இழந்து போனாள். நாவலை மூடிவிட்டு படுக்கச் சென்றாள். உறக்கம் வரவில்லை. அப்போது மீண்டும் கதவு தட்டப்படும் சதம் கேட்டு குதித்தெழுந்தாள்.

கதவைத் திறந்து பார்த்தபோது வேறொரு நபர்! அவரும் ஒரு இந்துதான்.

” மனைவிக்கு பிரசவ வலியா? ” இவளே கேட்டாள்.

” ஆமாம் தாயே . அது எப்படி உங்களுக்குத் தெரிந்தது? உடனே வந்து என் மனைவியைக் காப்பாற்றுங்கள் மிஸ்ஸி. ” அவரின் கெஞ்சல் .

” அப்பாவை எழுப்பவா? ” என்ன பதில் வரும் என்று தெரிந்துதான் கேட்டாள்.

” அப்பாவா? வேண்டாம் தாயே. அது எங்கள் சம்பிரதாயத்தில் இல்லை தாயே. நீங்கள்தான் வரணும். ” அவர் உறுதியாகக் கூறினார்.

” இல்லை. நான் டாக்டர் இல்லையே? அப்பாதான் வர முடியும் ” அவள் உண்மையைக் கூறினாள்.

” அதை விட என் மனைவி சாகலாம். ” என்றவாறே வந்த வழியே திரும்பினார்.

அதன்பின்பு அவளின் தூக்கம் பறந்தோடியது. இது இந்திய நாடு. இங்குள்ள கலாச்சாரமே வேறு. பெண்கள்தான் பிரசவம் பார்க்கவேண்டும் என்பதில் நம்பிக்கைக்கொண்ட மக்கள் வாழும் நாடு. இதற்கு என்னதான் தீர்வு ? பெண் டாக்டர்களே இந்தியாவில் இல்லாத காலமாயிற்றே ? தீவிரமாக யோசித்தாள் ஐடா என்ற அந்த இருபது  வயதுடைய அமெரிக்க இள நங்கை!

மறு நாள் மாலையில் பங்களா தோட்டத்தில் ஐடா அமர்ந்து நாவல் படித்துக் கொண்டிருந்த போது வீதியில் ஒன்றன் பின் ஒன்றாக மூன்று சவ ஊர்வலங்கள் சென்று கொண்டிருப்பதைப் பார்த்தாள் . அந்த மூவரும் பிரசவ சிக்கலில் இரவில் இறந்துபோன பதின்ம வயது பெண்மணிகள் என்பதைத் தெரிந்து கொண்டபின் மனம் வெதும்பினாள்.

இரவில் தோன்றிய உள்ளொளி அப்போது முழு வடிவம் பெற்றது!

அப்போதே தனது கனவான அமெரிக்காவின் சொகுசு வாழ்க்கையை தியாகம் செய்து விட்டாள் ஐடா!

இந்தியப் பெண்மணிகளுக்கு உடனடி தேவை பெண் மருத்துவர்கள் என்பதை அன்றே உணர்ந்து கொண்டாள்.அவர்களுக்காக தன்னையே அப்போது அர்ப்பணம் செய்து கொண்டாள். அதை கடவுளின் அழைப்பாகவும் நம்பினாள்.

அவள் திருமணம் பற்றிய எண்ணத்தையும் அன்றே கைவிட்டாள். அதன்பின் நடந்தவை வரலாறு.

1899 ஆம் வருடம் நியூ யார்க் நகரில் கார்நெல் பல்கலைக்கழகமருத்துவக் கல்லூரியில் ( Cornell Universty Medical College ) சேர்ந்தாள். அதிலும் ஒரு சிறப்பு . பெண்கள் மருத்துவம் பயில அனுமதிக்கப்பட்ட முதல் வகுப்பு அது!

1899 ஆம் ஆண்டில் அவர் தேர்ச்சியுற்று மருத்துவரானார் .

உடன் தமிழ் நாடு திரும்பி மருத்துவப் பணியை    பிணியாளிகளுக்கு, குறிப்பாக பெண்களுக்கு செய்யவேண்டும் என்ற ஆர்வம் கொண்டார்.பலரிடம் தனது திட்டத்தைக் கூறினார்.

மான்ஹாட்டான் நகரைச் சேர்ந்த வங்கியாளர் ஷெள் ( Schell ) என்பவர் தமிழ் நாட்டு பெண்களின் நலனுக்காக 10,000 அமெரிக்க டாலர்களை அவரின் மனைவியின் நினைவாக ஐடாவிடம் வழங்கினார். ( அப்போது அதன் மதிப்பு மிகவும் அதிகமாகும் )

அவர் தமிழ் நாடு திரும்பியபோது அவரின் தந்தை வேலூரில் மருத்துவப் பணியில் ஈடு பட்டிருந்தார். அவர் குடியிருந்த மிஷன் பங்களாவில் இரண்டு வருடங்கள் டாக்டர் ஐடாவும் 2000 நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தார் ..

1900 ஆம் ஆண்டில் அவரின் தந்தை மரணமுற்றார்

மருத்துவப் பணியின் முழுப் பொறுப்பையும் ஐடா ஏற்றுக்கொண்டார். அமெரிக்காவிலிருந்து கொண்டு வந்திருந்த நன்கொடையைப் பயன்படுத்தி 1902 ஆம் வருடம் ஒரு சிறு மருத்துவமனையை வேலூரில் அமைத்து அதற்கு ஷெல் மருத்துவமனை ( Schell Hospital ) என்று பெயரிட்டார் . சிகிச்சையும் மருந்துகளும் இலவசமாக தரப்பட்டன.( தற்போது இது Mary Tabler Schell Eye Hospital ) என்று கண் மருத்துவமனையாக பெரிய அளவில் இயங்கி வருகின்றது )

சுற்று வட்டார மக்கள் அதிக அளவில் அங்கு வந்து பயன் பெற்றனர். வருடத்தில் 40,000 நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தார் .

அப்போது தமிழகத்தில் பரவலாக காணப்பட்ட ப்ளேக் ( plague ) , காலரா , தொழுநோய் ஆகியவற்றிலிருந்து மக்களைக் காப்பாற்றப் போராடினார்.

தமிழ் நாட்டு பெண்களின் நல்வாழ்வுக்காக தான் ஒருவர் மட்டும்  முயற்சியை மேற்கொள்வது இயலாத காரியம் என்பதை அவர் உணர்ந்தார்.

பெண்களுக்கான தாதியர் பயிற்சிப் பள்ளி நிறுவ எண்ணினார். அப்போது ஆசியாவிலேயே இது கேள்விப் படாத ஒன்றாகும். சென்னைப் பல்கலைக்கழக சம்மதத்துடன் இந்தியாவிலேயே முதல் தாதியர் பயிற்சிப் பள்ளியை நிறுவினார்.

1909 ஆண்டில் அவர் ஆரம்பித்த வீதியோர கிளினிக் ( roadside clinic ) திட்டம் கிராம மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அவர கிராமம் கிராமமாகச் சென்று மரத்தடியிலும், குளத்தங்கரையிலும் அமர்ந்து ஏழை எளியோருக்கு மருத்துவச் சேவை புரிந்தார்.

ஆனால் அவருக்கு அப்போதும் திருப்தி உண்டாகவில்லை. தானும் தன்னால் உருவாக்கப்பட்ட தாதியராலும்  பெண்களுக்குத் தேவையான மருத்துவ சேவையை வழங்குவது இயலாத காரியம் என்பதை உணர்ந்தார்.

பெண் மருத்துவர்களை உருவாக்குவதே அதற்கு ஒரே வழி என்பதை உணர்ந்தார். இந்த விபரீத எண்ணத்தைக் கேட்டவர்கள் இது நடக்கவே நடக்காது , அவரிடம் மூன்று மாணவிகள் வந்தாலே பெரிய ஆச்சரியம் என்று கேலி பேசினர். அப்போதிருந்த சமுதாய அமைப்பு அப்படி! பெண் கல்வியே இல்லாத காலம் அது! அந்த நிலையில் பெண்கள் மருத்துவம் பயில்வதா ?

அரசு அனுமதியுடன் சென்னைப் பல்கலைக்கழக அங்கீகாரத்துடன் 1918 ஆம் வருடம் பெண் மருத்துவர்களுக்கான கல்லூரி நிறுவப்பட்டது. அதில் சேர 151 பெண்கள் மனு செய்திருந்தனர். அவர்களில் 17 பெண்கள் தேர்வு செய்யப்பட்டு வகுப்பில் சேர்க்கப்பட்டனர். இதுவே கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரியின் ஆர்ம்பம்.

1928 ஆம் வருடத்தில் வேலூர் டவுனுக்குள் பெரிய மருத்துவமனை உருவாக்கப்பட்டது. அதுதான் இன்றைய சி.எம்.சி. மருத்துவமனை.

1928 ஆம் வருடத்தில் பாகாயத்தில் மலைகள் சூழ்ந்த அழகிய பள்ளத்தாக்கில் பரவலான நிலப்பரப்பில் மருத்துவக் கல்லூரியின் வளாகம் அமைக்கப்பட்டது.

அப்போது நாட்டின் தந்தை மகாத்மா காந்தி அவர்களும் கல்லூரியையும் மருத்துவமனையையும் விஜயம் செய்து சிறப்பித்தார்!

இன்று கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரி இந்தியாவின் தலைசிறந்த மருத்துவக் கல்லூரியாக விளங்குவதை நாடறியும்!

ஒரு தனிப்பட்ட பெண்மணி இவ்வளவு பெரிய சாதனைப் புரிய நிறைய பொருளாதாரம் தேவை. இவரின் மருத்துவப் பணியை இறைப்பணியாகவே ஏற்று 40 கிறிஸ்துவ சபைகள் ஓரளவு உதவின. ஆனால் அது போதாததால் நன்கொடைகள் திரட்டும் நோக்கில் 1941 ஆம் வருடம் அமெரிக்கப் பயணம் மேற்கொண்டார்.

தேவையான நிதி திரட்ட அவர் அமெரிக்காவின் அனைத்து பகுதிகளுக்கும் ( மாநிலங்களுக்கும் ) பிரயாணம் செய்தார்.அங்குள்ள திருச்சபைகள் அவரின் நற்பணிக்கு ஆதரவு நல்கியதோடு ஆண்டுதோறும் பொருள் உதவிகள் செய்யவும் ஆர்வம் காட்டின.பொதுமக்களும் அவருடைய புனிதப் பணியைப் பாராட்டி உதவினர்.

2 மில்லியன் அமெரிக்கப் பெண்மணிகளிடம் ஆளுக்கு ஒரு டாலர் என்று 2 மில்லியன் அமெரிக்க டாலர்கள் திரட்டினார்! அதுபோன்று பல மில்லியன் டாலர்களுடன் வேலூர் திரும்பி, மருத்துவமனையையும் மருத்துவக் கல்லூரியையும் நவீனப் படுத்தினார்.

1945 ஆம் ஆண்டில் மருத்துவக் கல்லூரியில் ஆண்களும் சேர்த்துக்கொள்ளப்பட்டனர். ( அதனால்தான் நானும் அதில் சேர்ந்து பயில முடிந்தது )

இன்று அனைத்து வசதிகளுடனும் , நவீன சிறப்புப் பிரிவுகளுடனும் , 2000 படுக்கைகள் கொண்டு, ஆசியாவின் மிகப் பெரிய மருத்துவமனையாகவும் , உலகின் மிகப் பெரிய மிஷன் மருத்துவமனையாக விளங்குகிறது!

ஐடாவின் பெயர் உலகெங்கும் பரவியது.

1952 ஆம் வருடம் உலகின் சிறந்த 5 டாக்டர்களில் ஒருவராக டாக்டர் ஐடா ஸோஃபியா ஸ்கடர் தேர்ந்தெடுக்கப்பட்டார் .

டாக்டர் ஐடா ஸ்கடர் வேலூர் நகர மக்களாலும், வட ஆற்காடு மக்களாலும் பெரிதும் போற்றப்பட்டார். அவரை பாசத்துடன் ஐடா அத்தை ( aunt Ida ) என்றே அழைத்தனர். இந்திய நாட்டின் பெண்களின் நல்வாழ்வுக்காக தமது வாழ் நாளை அர்ப்பணித்த தியாகச் செம்மல் அவர்.

தாதியர் கல்வியையும், பெண்களுக்கான மருத்துவக் கல்வியையும் இந்தியாவில் அறிமுகப் படுத்திய முன்னோடி அவர்.

அவர் தமது முதிர் வயதில் கொடைக்கானல் மிஷன் பங்களாவில் ஓய்வு பெற்றார். தமது 85 வது வயதில் ஒரு நாள் வழக்கம்போல் தபால்களைப் பார்த்துக் கொண்டிருந்தார். அமெரிக்காவிலிருந்து வந்திருந்த ஒரு தபாலில் ” டாக்டர் ஐடா , இந்தியா. ” என்று மட்டும் முகவரி எழுதப்பட்டிருந்தது. நாடு தழுவிய நிலையில் அவர் அறியப்பட்டிருந்தார்.

இந்தியப் பெண்களுக்காக அவர் செய்த மாபெரும் தியாகத்தையும் சேவையையும் பாராட்டும் வகையில் அவருடைய் நூற்றாண்டு தினமான ஆகஸ்ட் 12, 2000 நாளன்று அவரின் படமும் சி.எம்.சி. மருத்துவக் கல்லூரியும், மருத்துவமனையும் பொறிக்கப்பட்ட சிறப்பு தபால் தலை வெளியிட்டு பெருமை சேர்த்தது இந்திய அரசு!

1960 ஆம் வருடம் மே மாதம் 24 ஆம் நாள் அதிகாலையில் வழக்கம்போல் எழுந்தார். அவருக்கு வயது 90.

வழக்கத்திற்கு மாறாக தலை சுற்றுவதாகக் கூறினார்.

அவருக்கு உதவும் தாதி , ” காப்பி குடியுங்கள் அம்மா தலை சுற்றல் நின்றுவிடும் ” என்றாள் .

அவர் , ” வேண்டாம் ” என்று பதிலளித்தார்.

ஐந்து நிமிடங்களில் அவர் இறைவனடி சேர்ந்துவிட்டார்!

( முடிந்தது )

பின் குறிப்பு : இந்த எழுத்தோவியத்தை டாக்டர் ஐடா ஸ்கடர் அவர்களுக்கு காணிக்கையாக சமர்ப்பிப்பதில் மகிழ்கிறேன் .

 

Series Navigationஐம்பது வருட வளர்ச்சியும் மாற்றங்களும் – 1நான் இசைக்கும் ஒற்றைப்பாடல்
author

டாக்டர் ஜி. ஜான்சன்

Similar Posts

196 Comments

  1. Avatar
    சி. ஜெயபாரதன் says:

    மதிப்புக்குரிய நண்பர், டாக்டர் ஜி. ஜான்சன்,

    தமிழ் நாட்டில் கால் வைத்து, பெண் மருத்துவப் பரம்பரைக்கு வேரூன்றி, மருத்துவப் பணியை ஆலமரமாக்கிய டாக்டர் ஐடா ஸ்கடர் தமிழகத்தின் அன்னை தெரேஸா. அவரைத் திண்ணை வாசகருக்கு அறிமுகப் படுத்திய உங்களுக்குப் பொன்னாடை போர்த்த வேண்டும். பாராட்டுகள் நண்பரே.

    சி. ஜெயபாரதன்

  2. Avatar
    IIM Ganapathi Raman says:

    Good work. Thanks Dr Johnson.

    பண்புடையார் பட்டுண்டு உலகம் அதுஇன்வறல்
    மண்புக்கு மாய்வது மண்

  3. Avatar
    வாணிஜெயம் says:

    அற்புதமான பெண் மருத்துவக்குலத்தின் திலகமாக திகழும் டாக்டர் ஐடா ஸ்கடர் அவர்கள்.அன்னாரைப் பற்றியும் அவரது சேவைகள் குறித்தும் தாங்கள் வடித்திருக்கும் இந்தப் பதிவு போற்ற தக்க வரலாற்று ஆவணமாகும்.மன்னிக்கவும், தாங்களை பாராட்ட எனக்கு வார்த்தைகள் கிடைக்கவில்லை.

  4. Avatar
    Bala says:

    1870ல் ஐடாவுக்கு 20 வயது என்று ஆரம்பத்தில் குறிப்பிடப்படுகிறது.
    கட்டுரையின் இறுதியில் 1960ல் அவருக்கு 90 வயது என்று குறிப்பிடப்படுகிறது. இந்த இரண்டாம் குறிப்பு உண்மையானால் அவர் 1870ல் தான் பிறந்திருக்க வேண்டும். ஆனால் முதல் குறிப்புடன் இது முரண்படுகிறது….

    இது மட்டுமல்லாமல் இடையில் {அவருடைய் நூற்றாண்டு தினமான ஆகஸ்ட் 12, 2000 நாளன்று அவரின்…} என்ற குறிப்பும் வருகிறது. இதன்படி பார்த்தால் அவர் 1900ல்தான் பிறந்திருக்கவேண்டும்… ஒரே குழப்பமாக இருக்கிறது.

  5. Avatar
    சி. ஜெயபாரதன் says:

    மதிப்புக்குரிய நண்பர், டாக்டர் ஜி. ஜான்சன்,
    தமிழ் நாட்டில் கால் வைத்து, பெண் மருத்துவப் பரம்பரைக்கு வேரூன்றி, மருத்துவப் பணியை ஆலமரமாக்கிய டாக்டர் ஐடா ஸ்கடர் தமிழகத்தின் அன்னை தெரேஸா. அவரைத் திண்ணை வாசகருக்கு அறிமுகப் படுத்திய உங்களுக்குப் பொன்னாடை போர்த்த வேண்டும். பாராட்டுகள் நண்பரே.
    சி. ஜெயபாரதன்

  6. Avatar
    எஸ். சிவகுமார் says:

    அருமையான கட்டுரை வழங்கியமைக்கு நன்றியும், பாராட்டுதல்களும் !

  7. Avatar
    சத்தியப்பிரியன் says:

    மனிதர்களின் உணர்வுகளை கொச்சைப் படுத்தாமல் நல்லது செய்ய வேண்டும் என்ற அந்த அம்மையாருக்கு எனது மனமார்ந்த வணக்கங்கள்.அதை நல்ல மொழியில் கொண்டு வந்த Dr.ஜான்சன் அவர்களுக்கு நன்றி

  8. Avatar
    Dr.G.Johnson says:

    அன்புள்ள திரு சி. ஜயபாரதன் அவர்களே, வணக்கம். த்மிழகப் பெண்களின் நல்வாழ்வுக்காக மிகவும் உன்னதமான சேவை புரிந்துள்ள டாக்டர் ஐடா பற்றி தமிழகப் பெண்களும் தமிழ் மக்களும் ,இந்தியாவுக்கு தாதியர் துறையையும், பெண்கள் மருத்துவக் கல்வியையும் அறிமுகப் படுத்திய இவரைப் பற்றி இந்தியப் பெண்களும், இந்திய மக்களும் அறியாமல் உள்ளனர். பாட நூல்களில் இதுபோன்ற முன்னோடிகளின் வாழ்க்கைக் கதைகள் கூறப்படவேண்டும். அதன் மூலம் இவர்கள் மறக்கப் படாமல் எதிர் காலத்திலும் வாழ்ந்து கொண்டிருப்பார்கள். தங்களின் பாராட்டுக்கும், பொன்னாடைக்கும் எனது உளங்கனிந்த நன்றி!………

    டாக்டர் ஜி. ஜான்சன்.

  9. Avatar
    ஷாலி says:

    மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என்று நம்பி இறைபணி புரிந்தவர்கள் கிறிஸ்தவ துறவிகள்.தங்கள் சொந்த நாட்டை விட்டு வெளியேறி அந்நிய நாட்டு ஏழைகளுக்கு பணி செய்வதில் அவர்களுக்கு நிகர் அவர்களே என்பதில் எவருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது.டாக்டர்.ஐடா அம்மையாரின் அர்ப்பணிப்பு போற்றுதலுக்குரியது. இக்கட்டுரையில் குறிப்பிடப்படும் பிரசவ சம்பவம் ஒரே இரவில் ஒரே இடத்தில் மூன்று மத இளம் பெண்களுக்கு ஏற்ப்பட்டு அம்மூவரும் மறுநாள் பிரசவத்தில் இறந்து வரிசையாக சவ ஊர்வலம் சென்ற சம்பவம் ஐடா அவர்களை மருத்துவம் படிக்க தூண்டியது என்று கட்டுரை கூறுகிறது. இது உண்மைச் சம்பவம்தானா அல்லது கட்டுரை தலைவிக்கு வலு சேர்க்க வலிந்து இணைக்கப்பட்ட திரைப்பட உத்தியா?

    1. Avatar
      paandiyan says:

      //மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என்று நம்பி இறைபணி புரிந்தவர்கள் கிறிஸ்தவ துறவிகள்.//
      Comedy…

      1. Avatar
        paandiyan says:

        பாரதத்தில் வருமையையும், வியாதியை (காலரா..) கொண்டு வந்ததா கிறிஸ்துவ மிஸினரிகள்தான். வரலாறை உங்கள் இஷ்டப்படி மாற்ற முடியாது . மக்களை பொய் சொல்லி ஏமாதலாம். அவர்களுக்கு கை வந்த கலை அது

  10. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    அன்பார்ந்த டாக்டர் ஜான்சன்

    சுகவீனமுற்றவர்களுக்குச் செய்யப்படும் வைத்தியப்பணி வேறெந்தப் பணியைப் போன்றும் போற்றுதலுக்குறியதே. ஐடா அம்மையார் தான் பணி செய்ததுமல்லாமல் வைத்தியம் மற்றும் தாதி போன்ற பணிகள் செய்வதற்கு மக்களுக்கு பயிற்சி அளிக்க நிறுவனங்கள் அமைக்க முயன்றமை….. அதற்காக பரிச்ரமப்பட்டு த்வீபாந்தரம் சென்று தனம் சம்பாதித்தமை……இவையெல்லாமே ச்லாகிக்கத் தகுந்தவை.

    வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
    தெய்வத்துள் வைக்கப் படும்.

    வாழ்வாங்கு வாழ்ந்தவர் ஐடா அம்மையார். உயிர் கொடுக்கும் அரும்பணியாற்றிய இவரை மாந்தர் உயர்வாகவே மதிப்பர்.

    இவரைப்பற்றித் தாங்கள் தங்கள் லலிதமான தமிழில் வ்யாசம் சமர்ப்பித்தமைக்கு நன்றிகள் பல….

    ம்…….வ்யாசத்தின் குணம் மட்டும் ப்ரஸ்தாபித்து தோஷம் ப்ரஸ்தாபிக்கவில்லையானால் சரியாகாதே…….

  11. Avatar
    புனைப்பெயரில் says:

    இந்தப் பகுதியில் தவறான தகவல்கள் தந்துள்ள திரு.ஜான்சன் அது பற்றி மௌனமாக இருப்பது ஏன்? விக்கியில் சொல்லப்பட்ட பிறந்த நாளில் , அந்தப் பெண்ணிற்கு 20+ வயது என்பது ஏன்? முஸ்லீம், இந்து பிரசவ கோரிக்கை என்பதற்கு ஆதாரம் இருக்கிறதா? ஏன் இதற்கு பதிலே இல்லை. ஆன்மீகத்தையும், ஆயுதத்தையும் மூன்றாந்தரமாக உபயோகித்தே வெள்ளையர் நம்மை ஆண்டது. நம்மிடம் அற்புத மருத்துவ முறைகள் இருந்தன… அதை அழித்த கெமிக்கல் முறையை புகுத்தி இன்று கொள்ளையடிக்கும் களனாகவே ஆங்கில மருத்துவ முறைகள். ரசாயனத்தை உழவு பூமியில் கலக்கினால் கேன்சர் வரத் தான் செய்யும். அதை உண்டாக்கி விட்டு மருந்து விற்று மேலும் செவந்தர்களாகும் கும்பலே ஆங்கிலேயர்கள். உலகம் பல்லாயிரம் ஆண்டுகள் பல கண்டுபிடிப்புகளுடன் இருந்த போது இந்த மாதிரி மருந்துவ முறைகள் இல்லை…

  12. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    அன்பர் ஜான்சன், தாங்கள் எழுதிய வ்யாசத்தில் ஐடா அம்மையைப் பற்றி நான் ச்லாகிக்கும் மற்றொரு விஷயம்……. இவரது குடும்ப முழுதும் மிஷநரிப் பணியில் ஈடுபட்டிருக்கையில்…..இந்த அம்மணி மட்டிலும் தன் வாழ்க்கையை முற்று முழுதாக வைத்யத்திற்கு அற்பணித்தது. இது புனைவல்ல என நம்புகிறேன்.

    while reading between the lines
    I observed that
    you are so articulative
    in plotting the twists
    and twisting the plots
    and why not
    on occassions, as I remember
    even planting the plot

    அப்புறம்…… தோஷாரோபணம் என்றில்லை. பின்னும் சுவிசேஷப் பணியாளர்களுக்கு மட்டிலும் தாங்கள் ப்ரத்யேகமாக நன்றி தெரிவிக்கும் பாங்கையும் அவதானித்தேன். ம்……சுவிசேஷிகளின கால் சுவிசேஷிகளறியுமே.

    வ்யாசத்தில் தோஷம் தெரிவிக்கப்பட்டிருந்தால் அதைத் துலக்க ப்ரயாசிக்கலாமே. ஸ்ரீமான் பாலா அவர்கள் குறிப்பிட்ட படி ஐடா அம்மையாரின் ஜனன மரணத் திகதிகளில் உள்ள குழப்பம். தள நிர்வாகிகளிடம் சொல்லி வ்யாசத்திலேயே திருத்தலாம். அல்லது தகுந்த உத்தரமளிக்கலாமே.

    அன்பர் ஷாலி குறிப்பிட்டிருந்த படிக்கு முஸல்மாணிய மற்றும் ஹிந்து சமயத்தவர் மட்டிலும் இரு சதாப்தம் முன்பு ப்ரசவம் பார்க்க வேண்டியது பெண்கள் தான் என்ற நிலைப்பாடு கொண்டு தங்கள் பெண்டிரின் உயிர் துறக்க ஹேதுவாக இருந்ததாக வ்யாசத்தில் தாங்கள் குறிப்பிட்டமை யதார்த்தமா அன்றி தங்கள் புனைவா என்பதைத் தெளிவு செய்யலாமே.

    அன்பர் அவர்கள் பாடசாலைகளில் வித்யார்த்திகளுக்கு இது போன்றோரின் வாழ்க்கை சரித்ரம் பாடமாக சொல்லிக்கொடுக்கப்பட வேண்டும் என மெனக்கெடுவது என்னவோ ஞாயம் தான். ஆனால் புனைவுகளை குழந்தைகளுக்கு சரித்ரமாகச் சொல்லிக்கொடுப்பது தவறு என்பது என் பக்ஷம்.

  13. Avatar
    ஷாலி says:

    காமாலை கண்ணனுக்கு காண்பதெல்லாம் மஞ்சள் என்பதுபோல் பாண்டியனார் பார்வையில் கிறிஸ்துவ துறவியரின் மக்கள் பணி காமெடியாக காட்சிதருவதில் ஆச்சரியமில்லை.இவரின் இந்துத்வா கண்ணாடிக்கு இங்கிலாந்து மதக்காரர்கள் மத மாற்றியாக மட்டுமே தெரியும்.ஆபிரகாமிய மதங்கள் அண்ணனுக்கு எப்பவுமே ஆவாது அலர்ஜி தான். எப்படியோ நம்ம காமெடி யைப் படித்து அண்ணன் சிரிப்பாய் சிரித்தால் நமக்கு சந்தோசமே! காமெடியைப்பற்றி யார் பேசுவது என்ற விவஸ்தையே இல்லாமல் போச்சு!

  14. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    குழந்தைகளுக்கு ஐடா அம்மையாரின் அர்ப்பணிப்பு மனப்பான்மை பொலிய இருக்கும் வாழ்க்கைச் சரித்ரம் கறாராக சரித்ரமாக மதம் கலக்காது பள்ளிகளில் பாடமாக போதிக்கப்பட வேண்டும் என்பது என் பக்ஷம்.

    \ டாக்டர் ஐடா ஸ்கடர் தமிழகத்தின் அன்னை தெரேஸா. \

    விக்ஞானி ஸ்ரீமான் ஜெயபாரதன் அவர்களின் பொருந்தா ஒப்புமை.

    ஐடா அம்மையார் முழுக்க முழுக்க வைத்யப்பணி ஆற்றி மக்களுக்குச் சேவை செய்தவர். மிஷநரிப்பணியாக வைத்யம் செய்யாது மக்கள் தொண்டே மஹேசன் தொண்டு என்றே ஐடா அம்மையார் பணியாற்றியதாக வ்யாசம் சொல்லுகிறது.

    புனித ரெவரெண்டு தெரசாள் அம்மணி மஹேசன் தொண்டை மட்டும் குறியாக வைத்து தனக்கு இரையான பிணியாளர்களை வைத்து இறைப்பணி செய்யப்புகுந்தவர். இது தோஷாதீதம் என்று வைத்துக்கொண்டாலும் சரி. பணியாற்றும் விதத்தில் மலை மடுவுக்கான பெரும் வித்யாசம்

    ஐடா அம்மையார் மிகுந்த பரிச்ரமப்பட்டு தனம் சேகரம் செய்ததில் சர்வாதிகாரக் கொடூர வ்யக்திகள் போதை வஸ்து கடத்தும் பயங்கரவாதிகள் இத்யாதி நபர்களிடம் தன் நற்கார்யத்திற்காக தனம் சேகரம் செய்தார் என்று வ்யாசம் சொல்லவில்லை.

    புனித ரெவரெண்டு தெரசாள் அம்மணிக்கு குறி மஹேசன் தொண்டு மட்டிலுமாதலால் அம்மணி அவர்கள் சர்வாதிகாரக் கொடூர வ்யக்திகள் போதை வஸ்து கடத்தும் பயங்கரவாதிகள் இத்யாதி நபர்களிடம் தனம் சேகரம் செய்தார் என்பது சரித்ரம்.

    ஐடா அம்மணியின் சரித்ரத்தை களங்கமில்லாது டாக்டர் ஜான்சன் சமைத்தது பொறுக்கவில்லையானால் இது போல பயங்கர ஒப்புமைகளை அந்த அம்மணி மீது சுமத்தி அவர் சரித்ரத்தை களங்கப்படுத்த வேணுமோ?

  15. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    இன்னொரு வித்யாசம்.

    புனித ரெவரெண்டு தெரசாள் மரித்த பின் அவர் நினைவாக அத்புதங்கள் நிகழ்ந்ததாக வாடிகன் பரங்கிய கிரிஜாக்ருஹம் நற்செய்திகள் அளித்து அந்த அம்மணியைப் புனிதராக ஆக்கியது.

    சற்று காலம் முன்பு தான் டாக்டர் ஜான்சன் அவர்கள் மனிதராகப் பிறந்த சத்யசாய் பாபா அத்புதங்கள் நிகழ்த்தினார் என்றால் அதை விக்ஞான பூர்வமாக ஏற்க முடியாதே என்று கருத்து தெரிவித்திருந்தார். மனிதராகப் பிறந்து மனிதராக இறந்த ரெவரெண்டு தெரசாள் அம்மணி இறந்த பின் அவர் பெயரால்அத்புதங்கள் நிகழ்வது….. அதை பரங்கிய கிரிஜாக்ருஹம் அங்கீகாரம் செய்வது…… ஒருக்கால் விக்ஞானமாகுமோ?

    அல்லது ஹிந்துக்களாகப் பிறந்திறப்பவர்கள் வாழ்வினூடே அத்புதங்கள் நிகழ்ந்தால் அது விக்ஞானமாகாது….. ஆயின் க்றைஸ்தவ சம்பந்தம் இருந்தால்…….ஞான ஸ்நானாதிகள் செய்யப்பட்டால் விக்ஞானத்துக்குப் பொருந்தா அத்புதங்கள் நிகழ்ந்ததாகச் சொல்லப்படின் அங்கு விக்ஞானமெல்லாம் பேசக்கூடாது…… என்று புரிந்து கொள்ள வேண்டும்?

    புனித ரெவரெண்டு தெரசாள் புனிதராக்கப்பட்டவர். ஐடா அம்மையார் சாமான்யர். புனித கோஷணம்….. இத்யாதி விஷயங்களுக்கு அப்பாற்பட்டவர்.

    ஐடா அம்மையார் — பாவம் விக்ஞானத்திற்குப் பொருந்தா அத்புதம் ஏதும் நிகழ்த்தியதாக வ்யாசமும் சொல்லவில்லை. அப்படி ஏதும் நிகழ்ந்ததாக கேட்டதும் இல்லை. அவர் செய்ததெல்லாம் வைத்யம் சம்பந்தப்பட்ட சுயநலமில்லாப் பணி.

  16. Avatar
    IIM Ganapathi Raman says:

    வாரம் முடியப்போகிறது. ஆனால் இந்துத்வாவினரிடமிருந்து ஒரு எதிர்வினையும் வரவில்லையேயென்றிருக்கையில் வந்தே விட்டன.

    மஹாசயர் க்ருஸ்ணகுமார் முதலிலெழுதியதிலிருந்ததைப்படித்தால் ஐடா அம்மையாரைத் தன் தூடணைக்கு ஆளாக்குவார் என்று புரியுங்கால் கதை திசைதிரும்பத் தொடங்கி (இதற்கு திரு ஜயபாரதனுக்குத்தான் நன்றி சொல்லவேண்டும்!) மதர் தெரீசாவைப்போட்டுத்துவைத்து முடிக்கிறார்.

    //அவர் செய்ததெல்லாம் வைத்யம் சம்பந்தப்பட்ட சுயநலமில்லாப் பணி.//

    என்று ஐடா அம்மையாருக்கு ஒரு சரணம் போட்டுவிட்டார். மிசுநோரிகளில் வாரிசு என்ற தொடங்கி சுயநலமில்லாப்பணியென்று முடித்த மஹாசயருக்கு ??தேவன் மஹனே நன்றி நன்றி// என்று பாடுவார்கள் கிருத்துவர்களான திருவாளர்கள் ஜயபாரதனும் ஜாண்சனும். நல்ல காமெடி போங்கள்.

    ஐடா அம்மையாரோ, தெரீசா அம்மையோ, எவராக இருந்தாலும், அவர்கள் பொதுப்பணி செய்திருந்தால், அப்பணியினால் நனமையடைந்தோர் நன்றியுடன் நினைவு கூர்ந்து வாழ்வார்கள்; சொல்வார்கள். வேலூர் நகர மக்களும் தமிழக மக்களும் ஐடா அம்மையாரால் வேலூர் மருத்துவப்புகழையடைந்தது என்றுதான் சொல்வர்.. எந்த இந்துச்சாமியாரின் சேவையினால் அன்று. இந்து ஒருவர் இப்படி சேவைகள் செய்திருந்தால் அவரைப்பற்றித் திண்ணை வாசகர்களுக்கு கட்டுரை மூலம் சொன்னால் போச்சு. எவருமே எதிர்க்கமாட்டார்கள். இந்துத்வா வாசகர்களான உங்களைத்தவிர மற்ற திண்ணைவாசகர்கள் குழுக்களாகப் பிரியவில்லை என்பது என் பார்வை.

    உதவி செய்ய முடியாவிட்டாலும் உபத்திரமாவது செய்யக்கூடாது. தானும் செய்யமாட்டார்கள். பிறரையும் செய்யவிட மாட்டார்கள். பசித்தவனுக்கு ரொட்டித்துண்டுதான் கடவுள் அவதாரம். அதை க்ருஸ்ணகுமார் கொடுத்தாலென்ன மதர் தெரீசா கொடுத்தாலென்ன?

    விஞஞானத்தைப்பற்றி எழுதியிருக்கிறார் மஹாசயர். ஏற்கனவே சொல்லியிருக்கிறேன் புரிபடவில்லை போலும். மீண்டும் சொல்கிறேன்….

  17. Avatar
    S Ganesh says:

    Dr Johnson needs to be congratulated. I had been to Scudder Memorial Hospital in Ranipet during my CA articleship days for audit work. At that time itself mI have seen the good work done by the hospital in Ranipet and surrounding areas. But I never knew that Dr. Scudder in whose memory the hospital in Ranipet is named was the archtect of CMC, Vellore. When the normal tendency for our people, if there is an opportunity, is to go to America for studies and job and settle down there, Dr. Scudder needs to be adored for her sacrifice to leave America and settle down in the Indian countryside with a service motto.

  18. Avatar
    IIM Ganapathi Raman says:

    உரோமன் கத்தோலிக்கர்களுக்குத்தான் இன்னார் புனிதர் இவரை வணங்குங்கள் என்று கத்தோலிக்கர்களின் குருமார்கள் காட்டுகிறார்கள். இன்னார் புனிதர் என்பதை அன்னார் செயலகள் பல அல்லது சில புதுமைகள் என உரோமன் கத்தொலிக்க தேவாலயக்குழு நம்பி தம் மக்களுக்குச் சொல்கிறது. அவை விஞ்ஞானப்பூர்வமாக நிரூபிக்கப்படவேண்டும்; அபபடிச்செய்தால்தான் நம்புவோம் என கத்தோலிக்கர்கள் சொன்னதாக கேள்விப்பட்டதில்லை. இப்படியாக அவர்களுள் நூற்றுக்கணக்காரை புனிதர்கள் என்று கத்தோலிக்காகள் வணங்குகிறார்கள்.

    இதில் மஹாசயருக்கு என்ன வருத்தம் என்றுதான் தெரியவில்லை. எவரேனும் க்ருஷ்ணகுமாரை வணங்கச் சொன்னார்களா?

    புட்டபர்த்தி சாயி பாபாவை அவர் புதுமைகள் செய்தார் எனவே அவருக்கு புனிதர் பட்டம் கொடுக்கிறோம் என்று இந்துக்களை எந்த அமைப்பும் கேட்டதா? இல்லவே இல்லை. அவரின் புதுமைகள் அவரின் பகதர்களுக்குத்தான். மற்றவருக்கல்ல. அதே போல கத்தோலிக்க குருமார்கள் காட்டிய புனிதர்களின் புதுமைகள் கத்தோலிக்கர்களுத்தான். எனக்கும் க்ருஸ்ணகுமாருக்குமல்ல.

    அதே வேளையில் புதுமை எனச்சொல்லி ஊர் மக்களை ஒட்டுமொத்தமாக ஏமாற்றினால் அரசே உள்ளே பிடித்து போட்டுவிடும். பேய் விரட்டுகிறார் தோமையார் என்று கத்தோலிக்கர்களை ஏமாற்றுகிறார்கள் என்றால் பிடித்து உள்ளே போடுங்கள். அவர்கள் சொல்வார்கள்: இசுலாமியர்கள் மஜூதிகளில் பேய்விரட்டுகிறார்கள் (ஏர்வாடி தர்ஹா), இந்துக்களைப்பற்றி சொலல்வே வேண்டாம். எண்ணிலடங்கா பேயோட்டிகள். எல்லாரையும் பிடித்து உள்ளே போடுங்களேன் பார்ப்போம்!

    என் அடிப்படைக்கருத்து யாதெனில். தப்பு என்றால் எல்லாமே தப்பு. இல்லாவிட்டால் எல்லாமே சரி. Religion is not goody goody affairs. It is a mixed bag. Don’t go near it if you don’t want it.

    உங்களுக்கென தனிநபர் மதத்தை வைத்துக் கொள்ளுங்கள்; அஃது இதில் கொஞ்சம் அதில் கொஞ்சம் எனவிருந்தால் பாதகமில்லை. அல்லது ஒன்றேயொன்றில் வேண்டியதை எடுத்து வேண்டாததை விடுங்கள் (as I do or Swami Dayanand of Arya Samajam cast out of window the idol worship in Hinduism) அல்லது உங்களுக்கென்றே ஓன்றை வரித்துக்கொள்ளுங்கள் (as Spinoza and others have done)

    இப்படிச்செய்யாமல் நான் யோக்கியன் அவன் அயோக்கியன் என்று புருடா விட்டலைவதுதான் சகிக்கவில்லை.

  19. Avatar
    Dr.G.Johnson says:

    அன்புள்ள நண்பர்களே, எனது கட்டுரையைப் படித்து, கருத்து, பாராட்டு, கேள்வி, சந்தேகம், மறுப்பு எழுதியுள்ள உங்கள் அனைவருக்கும் என் நன்றி. நான் எங்கும் ஓடி ஒளிந்து கொள்ளவில்லை. இங்குதான் உள்ளேன்.

    நான் 1965 முதல் 1971 வரை வேலூர் கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயின்றவன். டாக்டர் ஐடா பற்றி திண்ணையில் எழுதவேண்டும் என்ற உந்துதலில் இதை எழுதினேன்.

    கவனக் குறைவினால் வருடங்கள் குறிப்பிடுகையில் சில தவறுகள் நிகழ்ந்து விட்டன என்பதை ஒப்புக்கொள்கிறேன். அதற்காக வருந்துகிறேன்.

    அவை வருமாறு:

    1. கட்டுரை துவக்கத்தின் வருடம் 1890 என்றிருக்கவேண்டும். அவர் பிறந்த வருடம் 1870.

    2. ஆகஸ்ட் 12 2000 ஆம் நாள் கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரியின் நூற்றாண்டு கொண்டாடப்பட்டதை தவறாக அவரின் நூற்றாண்டு என்றும் எழுதிவிட்டேன். அதற்காகவும் வருந்துகிறேன். இவை தவிர நான் எழுதியது புனைவு அல்ல. ஓர் உண்மை நிகழ்வை அழகுபட எழுதினேன். திண்டிவனம் இரவில் மூவர் கதவைத் தட்டியது பற்றி அவரைப் பற்றிய நூல்களில் உள்ளன.” Three knocks in the night ” என்ற தலைப்பிலும் இது எழுதப்பட்டுள்ளது. இதை சிறுகதை வடிவில் எழுதியுள்ளதால் இது புனைவோ என்ற சந்தேகம் எழுவது இயல்பே. இது புனைவு அல்ல என்பதை மீண்டும் கூறிக்கொள்கிறேன். இதர விவாதங்களுக்கு பின்பு பதில் கூறுவேன்..நன்றி…அன்புடன் டாக்டர் ஜி. ஜான்சன்.

    1. Avatar
      V.SWAMINATHAN says:

      Sir you need not testify your honesty before any one.Service mnded persons are rarely born and introducing them to the many itself is a service. Certainly it will create service orientation in the human mind. I have read your series on your biography two years ago. You were plain. Dr Ida loved humanity. Why common Americans should fund for building hospital in India. Generally americans and Europeasn used to donate a lot for human charities in anywhere in the world . That is ingrained in thier culture. Even we can emulate that. Whoever done great human service, they should reverred.

  20. Avatar
    Dr.G.Johnson says:

    கட்டுரை படித்து பாராட்டியுள்ள வாணி ஜெயத்துக்கு நன்றி… டாக்டர் ஜி.ஜான்சன்.

  21. Avatar
    Dr.G.Johnson says:

    திரு பாலா அவர்களுக்கும் திரு புனைப்பெயரில் அவர்களுக்கும் பதில் தந்துவிட்டேன் என்று நம்புகிறேன். நன்றி…டாக்டர் ஜி.ஜான்சன்.

  22. Avatar
    Dr.G.Johnson says:

    அன்புள்ள திரு S. சிவகுமார் அவ்ர்களுக்கு வணக்கம். கட்டுரையைப் பாராட்டியுள்ளதற்கு நன்றி… டாக்டர்.ஜி. ஜான்சன்

  23. Avatar
    Dr.G.Johnson says:

    அன்புள்ள திரு. சாத்தியப்பிரியன் அவர்களுக்கு வணக்கம். உங்கள் பாராட்டுக்கு நன்றி. அன்புடன் டாக்டர் .ஜி. ஜான்சன்.

  24. Avatar
    Dr.G.Johnson says:

    அன்புள்ள திரு ஷாலி அவர்களுக்கு வணக்கம்.உங்கள் பாராட்டுக்கு நன்றி. இரவில் வந்த மூவரும் அடுத்த நாள் சவ ஊர்வலம் நடந்ததும் உண்மை சம்பவங்கள் என்று அவரின் வாழ்க்கை வரலாற்றில் குறிப்பிடப் பட்டுள்ளன. இது திரைப் படப் பாணியில் கற்பனையில் எழுதப்படவில்லை.அன்புடன் டாக்டர்.ஜி.ஜான்சன்.

  25. Avatar
    Dr.G.Johnson says:

    அன்புள்ள திரு. பாண்டியன் அவர்களே, வணக்கம். உங்களுக்கு என் இந்த கோபம்? மிஷனரிகள் மேல்நாடுகளிலிருந்து இங்கு வந்து சேவை புரிந்தனர் என்றால் அது உங்களுக்கு காமடியா? அவர்கள் வந்த அந்த காலத்தில் நாடு வறுமையில் இருந்தது, காலரா, பிளேக், தொழுநோய் வியாதிகளால் பலர் இறந்தனர் என்பதை அவர் பார்த்து இங்கு தாங்க தயங்கினார் என்றால் அது வரலாற்றை மாற்றுவதா? மருத்துவ சேவையுடன் மிஷனரிகள் தமிழ் மொழி வளர்ச்சிக்கு என்னென்ன சேவைகள் புரிந்துள்ளனர் என்பதை ஒரு தனிக் கட்டுரையாகவே எழுதவா? இந்த உரைநடை, சிறுகதை, நாவல், போன்ற இலக்கிய மாற்றங்கள் கொண்டு வந்தவர்கள் அவர்கள்தான் என்பது உங்களுக்கு தெரியுமா? இந்த தமிழ் எழுத்தை முதல் முதலாக இந்தியாவில் அச்சில் ஏற்றியவர்கள் அவர்கள்தான் என்பது உங்களுக்கு தெரியுமா? இதையெல்லாம் மதத்தைப் பரப்ப செய்தனர் என்று நீங்கள் கூறலாம். ஆனால் அவர்கள் தமிழ் மீது காதல் கொண்டு தமிழ் பயின்று, தமிழில் பேசி, எழுதி, திருக்குறள், நாலடியார், போன்றவற்றை மொழிபெயர்த்து அவற்றின் பெருமையை உலகிற்குக் கூறினர். இவற்றை மறந்து ஒட்டுமொத்தமாக , கண்மூடித்தனமாக இப்படி சிறுமை படுத்தி எழுதுவது முறையல்ல ” நன்றி மறப்பது நன்றன்று .” அன்புடன் டாக்டர் ஜி. ஜான்சன்.

    1. Avatar
      paandiyan says:

      எனது கருத்தை நான் பதிவு பண்ணியது கோவமா? என் கருத்துக்கு பல பல புக்ஸ் சொல்லி வலு சேர்க்கலாம் என்றாலும் சமீபத்திய திரு.ராமகிருஷ்ணனின் எனது இந்தியா படிக்கலாமே நீங்கள். உங்கள் வரலாற்று பார்வையில் தவறு உள்ளது நண்பரே…

      1. Avatar
        புனைபெயரில் says:

        திரு.ஜான்சனின் சொந்த வைத்திய – கால் ஒடிந்து, சரியான நுட வைத்தியமே – அனுபவமே நாம் தலை சிறந்து இருந்ததற்கு சான்று. வெள்ளையனின் ஒரு குரூப் முதலில் வந்து சர்வ நாசம் செய்து நமது செல்வங்களைத் திருடிச் சென்றது.இன்னொரு குரூப் நம்மில் மனது வலிமையற்றவரை பாவிகள் என்று சொல்லி தங்கள் மதத்தில் பால் பவுடருக்கும் கஞ்சி தொட்டிக்கும் சுவீகாரம் செய்தது. மதம் மாறினால் எல்லாம் ஈக்குவல் என்ற புருடாவுடன் சென்றவர்கள் இன்றும் அந்த இனத்திற்கு அடிமையாகியது வரலாறு. ஒரு பக்கம் திருட்டுக் கும்பல், இன்னொன்று மனதிருடர்களாய் மதப்பிரச்சாரகர்கள், இன்னொன்று வியாதிக்கு நிவாரணம் என்று ஆஸ்பத்திரி திறந்து இன்று மேலை நாட்டி மருந்து கம்பெனிகள் கொழிக்க விதை ஊன்றியது. சித்த, ஆயூர்வதே மருத்துவ பூமி இது. விஞ்ஞான பூர்வ மெஷின்கள் கண்டுபிடித்தத அவர்கள் நம் மருத்துவ முறையை அழித்தார்கள். ஆனால், மஞ்சள் இஞ்சி , வேப்பிலை மருத்துவ முறைகள் கூட அந்தத் திருடர்கள் பெடண்ட் பண்ணி நம்மை ஏமாற்றுகிறார்கள். சலாம் அடிக்கும் கோஷ்டி அடிக்கட்டும். யோகா, தியானம் என்பதைக் கூட திருடும் கேவலமான கூட்டம்.

    2. Avatar
      புனைபெயரில் says:

      மிஷனரிகள் மேல்நாடுகளிலிருந்து இங்கு வந்து சேவை புரிந்தனர் –> சேவை புரிய அல்ல… மக்களின் அடையாளம் சிதைத்து தம் மன்னர்களுக்கு அடிமைகளை உருவாக்க. இதுவே உண்மை.

    3. Avatar
      punaipeyaril says:

      அவர்கள் வந்த அந்த காலத்தில் நாடு வறுமையில் இருந்தது__> they came here for pepper and silk. plz do not give wrong informations. if u dont know history please read it before making comments or opinions

  26. Avatar
    IIM Ganapathi Raman says:

    It is not correct to say that the story of Madam Ida Scudder was not in the school text book for children in TN. I remember to have read her story first in such a school Tamil text book prescribed for primary classes. That was many decades ago. Perhaps it is no longer available to children now.

    Time we reminded our next generation about the pioneers who came from abroad and served the people of Tamil Nadu. If not…நன்றி மறந்தவர்களாவோம்.

  27. Avatar
    Dr.G.Johnson says:

    அன்புள்ள திரு கிருஷ்ணகுமார் அவர்களுக்கு வணக்கம். உங்கள் பாராட்டுக்கு நன்றி. ஆனால் உங்களின் கடைசி வரியில் என்ன சொல்ல வருகிறீர்கள் என்பது தெரியவில்லை. உங்களின் சமஸ்கிருதம் கலந்த எழுத்தைப் படித்து புரிந்துகொள்ள முடியவில்லை. தயவு செய்து நல்ல தமிழில் எழுதுங்கள். தமிழ் தெரியவில்லை என்றால் வெள்ளையர்களால் இறக்குமதி செய்யப்பட்ட ஆங்கிலத்தில் எழுதுங்கள். நன்றி. டாக்டர் ஜி.ஜான்சன்.

  28. Avatar
    IIM Ganapathi Raman says:

    பாண்டியனோ கிருஸ்ணகுமாரோ, தங்கள்தங்கள் கோபத்தை தாங்கள் விரும்பும் குழுவின் மேலேயே திருப்பினால் நாட்டுக்கு நலம்;

    ” அவர்களெல்லாம் மருத்துவமனைகள் திறந்தார்கள்; எவரும் செல்லாவிடங்களிலும் ஏழைபாழைகள் வசிக்கும் பகுதிகளிலும் கல்விக்கூடங்கள் திறந்தார்கள். நீங்கள் ஏன் அப்படிச்செய்யவில்லை?? நாங்கள் மதமாற்றிகளா?” என்று கேட்டால், அக்கேள்வி சும்மா உட்கார்ந்திருக்க உதவுமா என்ற எதிர்க்கேள்விகளைக்கேட்க வேண்டும்.

    இராமகிருஸ்ண மடம் நடாத்துகிறதென்றால், அது நம் காலத்தில்தான். ஐடா ஸ்கட்டர் வந்த காலத்திலன்று. அவர்கள் கூட வங்காளத்திலிருந்துதான் வந்தனர். தமிழ நாட்டில் தோன்றவில்லை.

    மடங்கள் சேவை செய்தால் அங்கு குறிப்பிட்ட ஜாதியினருக்கு என்றல்லாவா போய்விடுகிறது? ஜாதிச்சேவையை மக்கட்சேவையாக மாற்றிக்கொள்ளுங்கள். அஃதாவது, ஜாதி, மத, இன பேதங்களில்லாமல் சேவை செய்யச்சொல்லுங்கள்.

    மக்கட் சேவையே மஹேசன் சேவை என்று விவேகானதர் சொன்னார் என்று சொல்லி வாய்ப்பந்தல் போட்டால் எப்படி சாரே? களத்தில் இறஙக வேண்டாவா?

    கிருத்துவரிடமும் இசுலாமியரிடம் மல்லுக்கட்டி மதத்தைப்பெருக்கலாமென நினைபபதை விட்டுவிட்டு மக்களிடம் போய் சேவை செய்யுங்கள். காலத்தினால் செய்த உதவி. காலத்தினால் செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிதன்றோ!

  29. Avatar
    Dr.G.Johnson says:

    அன்புள்ள திரு புனைப்பெயரில் அவர்களுக்கு காலை வணக்கம். இந்திய நாட்டு பெண்களுக்கு செவிலியர் துறையையும், மருத்துவக் கல்வியையும் கிடைக்க முன்னோடியாக வழி காட்டிய ஒரு தியாகப் பெண்மணி பற்றி எழுதினால், அதில் சம்பந்தம் இல்லாமல் வேறு எதையோ கொண்டு வருவது முறையா? வெள்ளையர்கள் வருமுன்பே நம்மிடம் பல்வேறு மருத்துவ முறைகள் இருந்தன. நான் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவன். 8 வயது வரை டாக்டரைப் பார்த்ததில்லை! எனக்கு கடும் காய்ச்சல் வந்தபோது எங்கள் மந்திரவாதி வைத்தியர் தன்னுடைய தூண்டை என்மேல் விசிறி கெட்ட ஆவியை விரட்டி காய்ச்சலை குணமாக்கினார் . அந்த வித்தை அவரோடு மறைந்து போனது. இதுபோன்று நிறைய மருந்து இல்லாத மருத்துவம் நம்மிடையே நிறைய உள்ளன . அவற்றை தேடிப் பிடித்து உங்களைப் போன்றோர் பிரபலம் ஆக்கினால் பலருக்கும் பயன்படும். அதை விடுத்து ஆங்கில மருத்துவ முறையை குறை சொல்வது எந்த விதத்த்தில் நியாயம் ? ஆய்வின் அடிப்படையில் வளர்ந்துள்ள மருத்துவமே இன்று உலக நாடுகளில் பயன் படுத்தப்படுகின்றது. நீங்கள் என் மருத்துவத்தைப் பயன் படுத்துகிறீர்கள் என்பது தெரியவில்லை. எது பற்றி எழுதினாலும் உடனே அதில் தொடர்பு இல்லாமல் ஆங்கிலேயர்களையும், கிறிஸ்துவ மதத்தையும் கொண்டு வரும் உங்கள் பாணி வேடிக்கையானது. உங்கள் எழுத்தில் பொறாமை உணர்வும், காழ்ப்புணர்ச்சியும் அதிகம் உள்ளது. இது ஒருவகையான தாழ்வு மனப்பான்மையே! உங்களை எண்ணி வருந்துகிறேன்…நன்றி. டாக்டர் ஜி. ஜான்சன்.

    1. Avatar
      புனைபெயரில் says:

      இது பொறாமை உணர்வும், காழ்ப்புணர்ச்சியும் அல்ல… அடிபணிய மறுப்பது – அஞ்சுக்கும், பத்திற்கும். என் இனம் மதம் மேல் எச்சித் துப்பித்தான் நான் காரில் செல்ல வேண்டும் என்றால், அது தேவையில்லை. என் கலாச்சாரத்தை பழித்துத் தான் அவன் பந்தியில் அமர வேண்டும் என்றால், தேவையில்லை. என் திறமை அவனுக்கும் , அவன் திறமை எமக்கும் பயன்படும் பண்டமாற்றிற்கு ரெடி. ஆனால், கேவணம் கட்டாமல் அவன் மாதிரி டை கட்டினால் ஜெண்டில் மேன் ஆகி விடலாம் எனும் நினைப்பற்றவன் நான். பாவிகளே என பிறரை அழைக்காத புண்ணிய வழி போற்றுபவன் நான். எங்கள் ஊர் சாமியாரை திட்டி விட்டி, வாடிகனின் அராஜகங்களை கண் பாராமல் இருப்பவன் அல்ல. எனக்கு தாழ்வு மனப்பானமை வந்ததில்லை – வெள்ளையனுக்கு என் துறை சம்பந்தமாக வகுப்பெடுத்தவன். என் மூதாதையாரிடம் கொள்ளையடித்த கும்பலுக்கு யாசம் பெற தலை வணங்கா திமிர் பிடித்தவன். சித்த, ஆயுர்வேத, ஆங்கில மருத்துவன் மூன்றையும் உபயோகிப்பவன். ஐ டாவின் மேன்மைக்கும் தலை வணக்கலாம், அதற்காக அழிக்கப்பட்ட வரலாற்றை வெளிக் கொண்டு வர நினைப்பவன். இயேசுவின் டைனாஸ்டி படியுங்கள், அதுவும் ஒரு மண்ணிற்கு அடித்துக் கொண்ட கும்பல் என்று புரியும்.

    2. Avatar
      புனைப்பெயரில் says:

      உங்கள் எழுத்தில் பொறாமை உணர்வும், காழ்ப்புணர்ச்சியும் அதிகம் உள்ளது –> வெல்டன். எதிரியை விமர்சித்தால் அதில் என்ன பொறாமை உணர்வு. என் மூதாதையார் என்ன இறைவன், விஞ்ஞானம் பெயரால் வெளி நாடுகளின் மக்களை ஏமாற்றி அடிமைப் படுத்தியவர்களா? வெள்ளையன் என்ன உழைத்து சம்பாதித்தவனா? திருடன் தானே? இதில் அவனைப் பார்த்து பொறாமைப் பட என்ன இருக்கிறது? எனக்கு எதற்கு தாழ்வு மனப்பான்மை? அத்தனை கண்டங்களிலும் வேலை செய்தாச்சு. வெள்ளைக்காரனுக்கு பண்டமாற்றாக வித்தகம் செய்தாச்சு. அவனிலும் நண்பருண்டு, அவர்களிடமும் உங்கள் மூதாதையர் கொள்ளையடித்து கோட்டும் சூட்டும் நாகரிகம் என்ற பம்மாத்திற்கு எம்மில் பல தாழ்வு மனப்பான்மை கொண்டவர்கள் அவனை மாதிரி தன் முனுசாமி, ராமசாமி பெயரை மாற்றி ஆங்கிலேயர் பெயர் வைத்து கொண்டது பற்றியும் பேசியாச்சு. வெளி நாடு சுகத்திற்காக நம் மண்ணின் மேல் சகதி வீசியதில்லை. காடாய் கிடந்தாலும் இது என் தாயின் கருவறை போல்.நான் அனைத்து மருத்துவத்தையும் நிலைக்கேற்றவாறு உபயோகிக்கிறேன்.. ஆனால், இன்று ம்ருத்துவர்கள் ஒரு வியாபாரிகளே… அவர்களிடன் என்ன சரணாகதி வேண்டியிருக்கிறது. மெடிக்கல் ரெப் தரும் டிவி, டிவிடி பிளாட் பிளைட்டுக்காக மருந்துகளை எழுதித் தருவது எந்த மருத்துவத்தில்? உங்களைப பார்த்தால் தான் பரிதாபமாயிருக்கிறது.

  30. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    அடுத்தவர் சொல்லாத விஷயத்தை சொன்னதாகச் சொல்லி விதண்டா வாதம் புரிவது அன்பின் அய் அவர்களுக்குப் புதிதல்லவே

    ஸ்ரீமான் ஜெயபாரதன் அவர்கள் செய்த தவறான ஒப்புமையாக நான் சொன்னது

    தகாத நபர்களிடமிருந்து புனித ரெவரெண்டு தெரசாள் அம்மை தனம் சேகரம் செய்தது. இது சம்பந்தமான் செய்திகள் உண்மையா பொய்யா என்பது மட்டிலும் ஒப்புமை சரியா தவறா என்பதை நிர்ணயம் செய்யும்.

    அந்த புனித அம்மையார் இறந்த பின் நடந்த miracles ஆகிய நிகழ்வுகளை வாடிகன் கிரிஜாக்ருஹம் பறைசாற்றி அவரை புனிதர் என்று அறிவித்தது. அந்த அம்மணியை யாரும் வணங்குவதையோ அந்த அத்புதங்களை நம்புவதையோ நான் விவாதத்திற்கு உட்படுத்தவேயில்லை. விவாதத்திலுள்ளது அந்த புனித அம்மணி இறந்த பின் நடந்ததாக சொல்லப்படும் miracles விக்ஞான பூர்வமாக சாத்யமா.

    புனித அம்மையாரின் சேவா க்ருஹங்களில் ஏற்கப்பட்ட பிணியாளர்களுக்கு வைத்ய சிகித்ஸை செய்யப்படாது ப்ரார்த்தனை மட்டிலும் செய்யப்பட்டு நோயுடன் பிணியாளர்கள் துன்புற்றார்கள் என்பது. ப்ரார்த்தனை செய்வதை….. அது எந்த மதத்தவராயினும் தவறென சொல்ல மாட்டேன். பிணியாளர்களுக்கு சிகித்ஸை செய்யாமை என்பது எனக்கு உடன்பாடில்லா விஷயம்.

    நேர்மையாக உத்தரமளிக்க வேணுமானால் மூன்று வரிகள் போதும் இந்த கேழ்விகளுக்கு.

    சொல்லாத விஷயங்களைச் சொன்னதாக விதண்டா வாதம் செய்ய அல்லது பூசி மொழுக வேண்டுமானால் பக்கங்கள் நிரப்பப்படலாம். உத்தரமிருக்காது.

    1. Avatar
      IIM Ganapathi Raman says:

      //அது எந்த மதத்தவராயினும் தவறென சொல்ல மாட்டேன்//

      மதுரைப்பாஷையில் சொன்னால், அப்படி போடு அருவாளை !

      புட்டபர்த்தி சாயிபாபா வாயிலிருந்து இலிங்கத்தை எடுத்துக்காட்டினாலும் மதர் தெரீசா வெறும் பிரார்த்தனையில் குணப்படுத்தினாலும் ஏசு எழுந்து வா என்றவுடன் பெண் குணமடைந்தாலும், அப்பர் இறந்த சிறுவனை வெறும் பதிகம் பாடி குணப்படுத்தினாலும், திருமழிசையாழ்வார், ‘பைநாகப்பாய் சுருட்டிக்கொள்’ என்றவுடன் பின் நடந்துவந்த பெருமாளை சொன்ன வண்ணம் செய்த பெருமாளாக நாங்கள் வழிபடுவதும் – விஞ்ஞானத்தால் நிரூபணம செய்யப்படா உலகத்தைசசார்ந்தவை. நம்பிக்கைகள்.

      அருளில்லார்க்கு அவ்வுலகில்லை என்றார் வள்ளுவர். விஞ்ஞானம் நம்புவதில்லை அவ்வுலகை.
      வள்ளுவர் பொய் சொன்னாரா என்பதை தமிழர்களிடம்தான் கேட்கவேண்டும். அவர்கள்தானே அவரைப் பொயாமொழிப்புலவர் என்கிறார்கள்?

      நம்பிக்கைகள்தான். அவை நலம் செய்யாமல் பிறருக்கோ தமக்கோ தீமை செய்யும்போது மூடநம்பிக்கைகள் எனப்படும்.

      ஒரு தனிமனிதனின் வாழ்க்கையைச்செம்மைப்படுத்த நம்பிக்கைகள் உதவினால் வேறுபேச்சுக்கே இடமில்லை. அமுதை பருக அடம்பிடிக்கும் குழந்தையை ‘அப்பா வந்து அம்புலியைப்பிடித்துத் தருவார்!’ என ஏமாற்றி அமுதூட்டும் அன்னையை செய்வதைப்போல. All is well that ends well. நாத்திகர்கள் எதுவும் பேசட்டும். அவர்கள் உலகம் தனி.

      இப்படிப்புரிதலிருந்தால் மதச்சண்டைகளுக்கு இடமில்லை. மதர் தெரீசா எங்கிருந்து பணம் பெற்றார் எனபது வேறுவாதம். டாஸ்மார்க் வருமானத்திலதான் தமிழக அரசு ஊழியர்கள் சம்பளம் தவறாமல் பெறுகிறார்கள். பணம் எங்கிருந்து வருகிறது என்று பொது வாழ்க்கையைதேடினால், அழுக்கும் நன்னீரும் சேர்ந்துவரும். எனவேதான் சொன்னார்கள்: நதிமூலமும் ரிஷி மூலமும் பார்க்காதே. திருபபதி, பழநி உண்டியகளில் சேரும் பணம் வெள்ளைப்பணமட்டுமா? சொல்ல முடியுமா? வெறும் வெள்ளைப்பணமென்றால் வெங்கடேசுவரா பலகலைக்கழகத்தை நடாத்துவது எப்படி? பழநி ஆண்டவர் கலைக்கல்லூரி ஆசிரியர்களுக்கு சம்பளம் பட்டுவாடா பண்ணுவது எப்படி?

      கிட்டத்தட்ட இறங்கி வருகிறீர்கள் பலே பலே. நீர்ப்பறவைப் படப்பாடலைப்பாடுகிறேன்: ‘தேவன் மகனே நன்றி…நன்றி”

      The manifesto of my party, in brief, is: Religion should make us more and more human; and, it can do anything in that humanisation process. Doing service to the needy poor and the dying poor, in the name of God, is part and parcel of that process. Ida Scudder may not have done that in the name of God but we thank her parents for bringing her up in that way.

    2. Avatar
      ஷாலி says:

      //அடுத்தவர் சொல்லாத விஷயத்தை சொன்னதாகச் சொல்லி விதண்டா வாதம் புரிவது அன்பின் அய் அவர்களுக்குப் புதிதல்லவே…// என்று எழுதும் ஸ்ரீமான்.க்ருஷ்ணகுமார் அவர்களும் அதனைத்தானே செய்கிறார்.திரு.ஜெய பாரதன் அவர்கள் மதர் தெரசா பணம் வசூல் செய்ததைப் பற்றி அவர் ஒன்றும் எழுதவில்லை.பொதுவான மக்கள் சேவையின் அடிப்படையில் இருவரையும் ஒப்பிட்டார். “மருத்துவப் பணியை ஆலமரமாக்கிய டாக்டர்.ஐடா ஸ்கடர் தமிழகத்தின் அன்னை தெரசா.”……. போதை மருந்து கடத்துபவரிடம் தனம் சேகரித்தார் தெரசா-என்று எழுதி ஜெயபாரதன் சொல்லாத விஷயத்தை சொல்லி ஒரு கல்லில் இரண்டு மாங்காய் (ஜெயபாரதன்+தெரசா) அடிப்பது சாட்ஷாத் மஹாசயர் க்ருஷ்ண குமார் அவர்கள்தான்.
      வசூல் உண்டியலை எவர் வைத்தாலும் அதில் யோக்கியனும் போடுவான் அயோக்கியனும் போடுவான்.திருப்பதி ஸ்ரீ வெங்கடேஸ்வர பெருமாள் கண்ணை மறைத்து நாமம் சாத்தியதால், அயோக்கியர்கள் தீய வழியில் திரட்டிய கள்ளப்பணம்,கறுப்புப்பணத்தால் உண்டியல் நிரம்பி வழிகிறது.கொள்ளைக்காரர்களால் கோயில் உண்டி நிரம்புவதால் ஸ்ரீ பெருமாளையும் ஸ்ரீமான் க்ருஷ்ணகுமார் வெறுப்பாறோ?
      ஒருவர் மேல் உள்ள வெறுப்பு நியாயத்தின் கண்ணை மறைத்து விடக்கூடாது.?
      // சேவை என்ற பெயரில் அப்பாவி மக்களை மதம் மாற்றியது.// இதுதான் க்ருஷ்ணகுமாரின் ஆதாங்கம்.கிருஸ்தவ மிஷனரிகள் வந்திருக்காவிட்டால் உயர் ஜாதி விஷ நரிகளுக்கு பல்லக்கு தூக்கி பந்தம் கொளுத்திர வேலை தொடர்ந்திருக்கும்.குமரி மாவட்ட கடலோர ஈழவ மக்கள் பெண்டு பிள்ளைகளின் வெற்று மார்பை வெவகாரமாகா பார்த்து ரசித்திருக்கலாம். சண்டாளா மிஷனரி பாதிரிகள் அவர்களுக்கு குப்பாயத்தை மாட்டி கெடுத்துவிட்டார்கள்.இதுதான் க்ருஷ்ண குமார் வகையாராக்களின் கவலை.மிஷனரி வந்ததால் மறைக்கப்பட்ட (குருகுல) கல்வி ஒழிக்கப்பட்டு மக்காலே கல்வி வந்து கரையேற்றியது.

  31. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    \ மிஷனரிகள் மேல்நாடுகளிலிருந்து இங்கு வந்து சேவை புரிந்தனர் என்றால் அது உங்களுக்கு காமடியா? \

    பரங்கியர் ஹிந்துஸ்தானத்தில் வந்து இந்த தேசத்தில் துன்பத்திற்கு உட்பட்ட யாரொருவருக்கும் பணி புரிந்தது ச்லாகிக்க வேண்டியதே.

    கேழ்விக்கு உட்படுத்தப்படுவது அவர்கள் புரிந்த சேவை அல்ல. சேவை என்ற பெயரில் அப்பாவி மக்களை மதமாற்றியது.

    மொழிச் சேவை என்பது தேம்பாவணி போன்ற காலத்தாலழியாத காவ்யங்கள் படைத்தமை. ரெவரெண்டு வேத நாயகம் சாஸ்திரியார் ரெவரெண்டு வேத நாயகம் பிள்ளை போன்று காலத்தாலழியா பாமாலைகள் புனைந்தமை. திருவாசகத்திற்கு உரையெழுதிய ஜி.யு.போப் அவர்களுடைய சேவையை. இவற்றை மொழிச் சேவை என்று அடையாளப்படுத்தல் மட்டும் தகும்..

    தமிழ் மட்டும் ஏன்…… ஹிந்துஸ்தானத்தின் பல பாஷைகளிலும் பரங்கியர் காகிதத் தாள்களில் புஸ்தகங்களை அச்சடித்தார்கள்.
    இவர்கள் வருமுன் பனையோலைகளில் புஸ்தகங்கள் இருந்தன……

    இவர்கள் செய்தது அச்செந்திர சேவை. .அச்செந்திர சேவையை மொழிச் சேவை என்பது ஏற்க இயலாது.

    கோவா Inquisition என்ற பெயரில் பரங்கிய மிஷநரிகள் சாமான்ய மக்களைக் கொன்று குவித்தும் கூட சரித்ரம் தான். அதற்கு ஹிந்துஸ்தானியர் நன்றி பாராட்ட வேண்டும் அல்லவா?.

    அது மட்டுமா ஆரியர் மற்றும் த்ராவிடர் என்பது இனம் போன்று புரட்டான கருத்துக்களை கால்டுவெல் போன்ற மிஷநரிகள் பொய்மையாக பரப்பியமைக்கு ஹிந்துஸ்தானியர் நன்றி பாராட்ட வேண்டும்?

    1. Avatar
      IIM Ganapathi Raman says:

      கட்டுரை ஐடா ஸ்கட்டர் பற்றியது. மருத்துவர் ஜாண்சனும் தன் எதிர் விளக்கங்களில் மிசுநோரிகளின் தமிழ்நாட்டு வாசத்தைப்பற்றித்தான் பேசுகிறார். இஃது இப்படியிருக்க, ஹிந்துஸ்தானம் என்று ஏன் பேசப்படுகிறது கிருஸ்ணகுமாரால்?

      அச்சு இயந்திரம் கொண்டுவரப்பட்டு விவிலியம்தான் பதிக்கப்பட்டது என்பது உண்மை. அஃது அவர்கள் செய்யக்கூடாதென்கிறாரா? இல்லை அவர்கள் செய்யவில்லை என்று எவரேனும் சொன்னரா?

      மருத்துவர் ஜாண்சன சொல்லவந்த கருத்து அதற்குமப்பால். என்ன அது?

      விவிலியத்துக்குப்பின்னர் பல நூல்கள் அச்சடிக்கப்பட்டதாலேயேதான் தமிழ் பண்டை இலக்கியம் இன்று நமக்குக்கிடைக்கிறது என்பதுதான். பனையோலைகளில் நம் முன்னோர் மட்டுமன்று, பிறநாடுகளிலும் மானுஸ்கிரிப்ட்தான்.அப்படியே பனையோலைகளில் மட்டும் இருந்தபடியாலேயே கல்வி ஒரு சிலருக்கு மட்டும் எனவாக்கப்பட்டது பனையோலை எழுத்துக்க்கள் பரவாது நண்பரே.

      ஐரோப்பாவில் போப்பின் ஆட்கள் செய்த அதே தவறைத்தான் தமிழ்நாட்டிலும் செய்தார்கள்; அதாவது விவிலியம் எல்லோரும் படிக்கக்கூடாது. குருமார்கள் மட்டுமே செய்யலாம். கூட்டனப்ர்கில் அச்சு எந்திரம் இந்த போப்பின் கூட்டத்தை அடக்கிப்போட்டது. அவர்கள் வண்டவாளத்தை வெளிக்காட்டியது. எவ்வளவு பொய் சொன்னார்கள்? எப்படி மக்களை மிரட்டினார்கள்? விவிலியம் பலபல அச்சடிக்கப்பட்டு மக்களிடையே புளங்க உரோம போப்பின் ஆடசி ஆட்டப்பட்டு ரெஃபமேஷன் உருவாகி கிருத்துவம் இரண்டாகப்பிளந்தது. அச்சு இயந்திரத்தால் ரெனைசன்ஸும் வந்தது. ஐரோப்பா இருண்ட காலத்திலிருந்து வெளிச்ச காலத்திற்கு வந்தது.

      தமிழகத்திலும் அச்சு எந்திரம் பின் தான் மக்களுக்கு கல்வி அறிவு பரவலாக்க முடிந்தது.

      பலகால ஏமாற்றூ வேலையை முடிவுக்குக் கொண்டுவந்த மிசுநோரிகளுக்கு நாம் நன்றி சொல்லவேண்டுமென்பதுதான் மருத்துவர் ஜாண்சனின் கருத்து.

      ஒரு செயலில் எண்ணம் ஒன்று; செயலகள் பலவாக இருக்கும். அச்செயலகளையும் எடுத்துத்தான் பேசவேண்டும்.

      இஃதெல்லாம் வெகு இலகுவாக புரியக்கூடிய கருத்துக்கள்; இதற்குப்போய இராமகிருஸ்ணனிடம் போக வேண்டுமா? நாமெல்லாரும் குழந்தைகளா? நமக்கென்று சொந்தமாக சிந்திக்கும் திறனில்லையா?

      நீங்களாகவே நூல்களிலிருந்து தெரிந்து கொள்ளுங்கள்; தெரிந்து நீங்களாகவே சிந்தியுங்கள். இடைத்தரகன் வேண்டாமே! பிறர் எழுதியவற்றைப் படித்தால், உங்களுக்குத் தெரியாமலேயே அவர் தண் கருத்துக்களை திணிப்பார். அக்கருத்துக்கள் நற்கருத்துக்களெனில் நன்று. இல்லாவிட்டால்….?

  32. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    பலே பலே.

    தங்களது ஆப்ரஹாமிய ப்ரேமை நான் எப்போதும் ச்லாகிக்கும் விஷயமே. தோஷமாக அது சொல்லப்படவில்லை..

    ஆப்ரஹாமிய அன்பர்களுக்கு மட்டிலும் நன்றி தெரிவித்ததைத் சுட்டியவுடன் எத்தனை வேகமுடன் அன்பர் ஜான்சன் அவர்களின் நன்றி ப்ரவாஹம். அட அட. Always better late than never.

    தோஷங்களைச் சுட்டியதற்காகச் சிறியேன் பேரில் கோபம் கொண்டு முனைப்புடன் சிறியேனை விட்டதும் கூட கோபத்தில் அழகையே காட்டுகின்றன.

    அதனாலென்ன. கோபம் கொண்டாலும் குறைந்த பக்ஷம் தோஷங்களைக் களைய முற்பட்டமைக்கு நன்றிகள் பல. அது தானே ஒரு வயாசம் பகிரப்பட்டதன் சாரம்.

    ஹிந்து முஸல்மான் பெண்டிர் இறந்தமை தாங்கள் ஒரு நூலின் ஆதாரம் பாற்பாட்டு என்று சொல்லியுள்ளீர்கள். சரி. இந்த விஷயம் உண்மையான நிகழ்வா என்பதற்குத் தரவுகள் ஏதும் உண்டா?

    என் அன்பு மனிதர்களின் ஞானம், அவர்களது கார்ய ஈடுபாடு போன்றவற்றைச் சார்ந்தது. அது என்றும் மாறாதது.

    என் கருத்துக்கள் எப்போதும் கறாரானவையே. கருத்துக்கள் குணம் தோஷம் இரண்டையும் பக்ஷபாதமில்லாது ப்ரதிபலிக்கும். விவாதங்கள் பொழுது போக்கிற்காக இல்லாமையால். என் கருத்துக்களில் உள்ள தோஷங்கள் களையப்பட்டால் மகிழ்ச்சியே.

    எந்த தெய்வத்தைத் தொழுபவர்களும் இறைவன் திருவடி நீழலை அடைவர் என்று தான் எனக்கு போதிக்கப்பட்டிருக்கிறது. என் கருத்துக்கள் அதையே ப்ரதிபலிக்கும்.

  33. Avatar
    Dr.G.Johnson says:

    அன்புள்ள திரு கிருஷ்ணகுமார் அவர்களே, இந்த கட்டுரை மிஷனரிகளை துதிபாடும் வகையில் எழுதப்படவில்லை. வருடங்கள் பற்றிய குழப்பம் விளக்கப்பட்டுள்ளது. இது புனைவு அல்ல. உண்மை சரித்திரம் என்பதை மீண்டும் கூறிக்கொள்கிறேன். அதனால் இதை பள்ளிகளில் பாடப் புத்தகங்களில் தாராளமாக பயன்படுத்தலாம். உங்களின் சமஸ்கிருத தமிழ் படிக்க சிரமாக உள்ளது. நன்றி அன்புடன் ……….

    டாக்டர் ஜி. ஜான்சன்.

  34. Avatar
    Dr.G.Johnson says:

    அன்புள்ள திரு ஷாலி அவர்களே, நீங்கள் கூறியுள்ளது உண்மை. ஒரு புனிதமான பணி பற்றி எழுதினால் திரு பாண்டியன் போன்றோர்க்கு காமடியாகத் தெரிவது வேதனைக்குரியது. தமிழ் இலக்கியவாதிகள் , இவ்வளவு குறுகிய புத்தியுடன் இருப்பது சரியா? இவர்களால் இலக்கியம் வாழுமா ? நீங்கள்தான் பதில் கூற வேண்டும்… டாக்டர் ஜி. ஜான்சன்.

  35. Avatar
    Dr.G.Johnson says:

    Dear Mr. S.Ganesh, Thank you for your comments and compliments. I know Scudder Memorial Hospital in Ranipet. It is a Mission Hospital doing wonderful work in that area. Glad you have spent time there. You are right about our people going for opportunities in America. But some of our readers have failed to understand the sacrifices done by these great men and women who have left their own country and lived in backward rural areas with sevice as their o
    nly motto. Thanks once again. With kind regards. .Dr.G.Johnson.

  36. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    \ ஆனால் இந்துத்வாவினரிடமிருந்து ஒரு எதிர்வினையும் வரவில்லையேயென்றிருக்கையில் வந்தே விட்டன. \

    ஹிந்துத்வா….. இதன் அடிப்படைகள் யாவை…… எனக்குத் தெரியாத விஷயங்கள்.

    Red herring Tactics …. ஐ விட்டு விடுங்கள்

    ஒவ்வொரு தளத்தில் பலப்பல சமயங்களில் பலப்பல முகமூடி அணிந்து கருத்துப்பகிர்வது ஒரே தளத்தில் பலப்பல சமயங்களில் பலப்பல முகமூடி அணிந்து கருத்துச் சொல்வது ஒரே வ்யாசத்தில் பலப்பல பெயர்களில் கருத்துச் சொல்வது போன்ற வீரப்ரதாபங்கள் இன்றைக்கெல்லாம் இணையத்தில் காணப்படுகின்றது

    தமிழ் ஹிந்து, தமிழ் பேப்பர் மற்றும் திண்ணை போன்ற தளங்களில் ஒரே பெயரில் ஒரே பாஷா சைலியில் வ்யாசங்கள் சமர்ப்பிப்பது உத்தரங்கள் சமர்ப்பிப்பது சிறியேன்.

    புனித ரெவரெண்டு தெரசாள் அம்மையார் சேவை செய்தார் என்ற விஷயத்தை நான் எங்கு மறுத்துள்ளேன்.

    நான் தெளிவாக அபிப்ராய பேதப்படுவது மூன்று விஷயங்களில் மட்டும். அதைப் பகிர்ந்துள்ளேன்.

    விஷயத்திற்கு மட்டிலும் வராது பொழுது போக்காக வெட்டிக் கருத்துப்பகிர்வது ஒருவர் உரிமை என்றால் அதை மறுக்க இயலுமோ?

    1. Avatar
      IIM Ganapathi Raman says:

      //ஹிந்துத்வா….. இதன் அடிப்படைகள் யாவை…… எனக்குத் தெரியாத விஷயங்கள்.//

      இறும்பூதெய்துகிறேன்.

  37. Avatar
    Dr.G.Johnson says:

    திரு IIM கணபதி ராமன் அவர்கலே கத்தோலிக்க கிறிஸ்துவர்களின் புனிதர் ப்ற்றிய விளக்கம் சரியானதே. அது அவர்களின் நம்பிக்கை. சத்திய சாயீ பாபா கடவுளின் அவதாரம் என்று சிலர் நம்புகிறார்கள். அது அவர்களின் நம்பிக்கை. இதில் நான்தான் யோக்கியன் என்று புருடா விடுவது அர்த்தமற்றது என்று அழகாகச் சொல்லியுள்ளீர்கள்… நன்றி . டாக்டர் ஜி. ஜான்சன் .

  38. Avatar
    சி. ஜெயபாரதன் says:

    தற்காலத் தமிழ்நாட்டு அறிவாளிகளுக்கு அன்னை தெரேஸா, மனித நேயப் பணிபுரிந்த கிறித்துவ அருள்நெறி அன்னியக் கூட்டம், மகாத்மா காந்தி, பண்டித நேரு, இந்திரா காந்தி, அப்துல் கலாம் ஆகியோரைப் பிடிக்காது. அவர்கள் செய்த நல்வினைகளை எல்லாம் அறவே மறந்து அவர்களை இகழ்வது இப்போது வாடிக்கை ஆகிவிட்டது.

    இந்தியாவுக்கு வந்த அன்னியக் கிறித்துவ அருள்நெறிக் கூட்டத்தைப்போல் இந்தியர் வெளிநாடு சென்று எந்த யுகத்திலாவது இவ்விதம் அருட்பணி செய்துள்ளாரா ?
    சி. ஜெயபாரதன்.

  39. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    \ திரு IIM கணபதி ராமன் அவர்கலே கத்தோலிக்க கிறிஸ்துவர்களின் புனிதர் ப்ற்றிய விளக்கம் சரியானதே. அது அவர்களின் நம்பிக்கை. சத்திய சாயீ பாபா கடவுளின் அவதாரம் என்று சிலர் நம்புகிறார்கள். அது அவர்களின் நம்பிக்கை. இதில் நான்தான் யோக்கியன் என்று புருடா விடுவது அர்த்தமற்றது என்று அழகாகச் சொல்லியுள்ளீர்கள்…\

    அன்பின் ஜான்சன்,

    மிகவும் தரம் தாழ்ந்த விவாதம் என்பது தான் சொன்ன விஷயத்தை முற்றிலுமாக முனைப்பெடுத்து மறைத்து அடுத்தவர் சொல்லாத ஒரு விஷயத்தை சொல்லியதாக விவாதிப்பது.

    விக்ஞானி ஜெயபாரதன் சாயிபாபா பற்றிய விஷயத்தை நம்பிக்கை என்று சொல்லிப் போனார். அது நேர்மையான போக்கு.

    சாயிபாபாவின் அத்புதங்கள் விக்ஞான பூர்வமானவையா என்று கேழ்வியெழுப்பியது தாங்கள். சாயிபாபாவின் அத்புதங்கள் மீது விக்ஞானம் என்ற கல்லெறிந்து உங்கள் மதத்தைச் சார்ந்த ஒரு நபரின் பால் விக்ஞானம் என்ற அதே அளவுகோல் பாய்கையில் இன்று நம்பிக்கைப் பாட்டுப் பாடுவது கபள சோற்றில் முழுப்பூசணியை மறைக்கும் செயல். இது தரம் தாழ்ந்த போக்கு.

    ரெவரெண்டு தெரசாள் புனிதர் என்று ஆனது எப்படி. மோனிகா பெஸ்ரா என்ற பெண்மணி புற்றுநோய்க்கு உள்ளானதாகவும் ரெவரெண்டு தெரசாள் சித்ரம் பதித்த பதக்கத்தை அவர் அணிந்ததாகவும் அதிலிருந்து கிளம்பிய ஒளி புற்று நோயைக் குணப்படுத்தியதாகவும் அது ஒரு அத்புதம் என்று பரங்கிய வாடிகன் கிரிஜாக்ருஹம் உலகத்திற்கு பறைசாற்றி ரெவரெண்டு தெரசாளை புனித தெரசாள் ஆக்கியது.

    இது நம்பிக்கை என்ற விஷயத்தை நான் எக்காலும் பரிஹாசம் செய்யேன்.

    ரெவ்ரெண்டு தெரசாள் பதக்கம் புற்று நோயை குணப்படுத்தும் என்பது விக்ஞானமா என்று வைத்யராகிய நீங்கள் நேர்மையுடன் கருத்துப் பகிரலாமே. சாயிபாபாவின் அத்புதங்கள் விக்ஞான பூர்வமானதா என்று கேழ்வியெழுப்ப முனைந்த தாங்கள் அதே கேழ்வியை புனித தெரசாள் பற்றிய விஷயத்தில் பரங்கிய வாடிகன் கிரிஜாக்ருஹத்தின் பக்ஷமாக எழுப்பியிருந்தால் உங்கள் நேர்மையை விதந்தோதியிருப்பேன்.

    ஐடா அம்மையின் பணி சுயநலம் பாரா வைத்யப்பணி என்று சொல்லிய தாங்கள் அதை ரெவரெண்டு தெரசாளுடன் ஒப்பிட முனையும் விக்ஞானியின் கருத்துடன் இசைய முனைந்தால் க்றைஸ்தவ ப்ரசாரம் பற்றிய வ்யாசத்தில் அவச்யம் செய்யலாம். வைத்யம் பற்றி பேசும் வ்யாசத்தில் அல்ல.

  40. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    ரெவரெண்டு தெரசாள் செய்த சேவையை சிறியேன் எப்போதும் சேவையன்று என்று குறிப்பிட்டதில்லை.

    “Hell’s Angel” என்று பரங்கியரால் சுட்டப்பட்ட இவர் சம்பந்தப்பட்ட வைத்ய தர்மத்துக்கு ஒவ்வா விஷயங்களைப் புறக்கணிக்க இயலாது.

    ஆங்க்ல வைத்யமாகட்டும் ஹிந்துஸ்தான வைத்யமாகட்டும் வைத்யரின் ப்ரதான பணி பிணியாளரின் துன்பம் நீக்குதல். குறைந்த பக்ஷம் அதைக்குறைக்க முயற்சி செய்தல். Terminal Disease என்று சொல்லப்படும் புற்று நோய்க்கு ஆளாகும் பிணியாளருக்குக் கூட உயிரைக் காக்க இயலாவிடினும் Quality of Life ஐ எப்படி மேம்படுத்துவது என்பது வைத்ய தர்மம்.

    ஐடா அம்மையார் வைத்ய ஒழுங்குகளுக்கு உட்பட்டு தன் வைத்யசாலையை நடாத்தியதாகத் தான் நான் அறிவேன். ரெவரெண்டு தெரசாள் நடாத்திய சேவா க்ருஹங்களில் உயிர் துறக்கும் ஸ்திதியில் இருக்கும் பிணியாளர்கள் தாள இயலா வலியில் துடிக்கையில் வலிநீக்கும் மருந்துகள் அளிக்காது ப்ரார்த்தனையை மட்டிலும் செய்ததாக் விக்கி பீடியாவும் பரங்கிய செய்தியாளர்களும் சொல்கின்றனர்.

    ப்ரார்த்தனை செய்வதை எந்த மதத்தவராயினும்….. அதை பிழையாக சொல்லேன்.

    உயிர் போகும் தசையில் தாள இயலா வலியுடன் துடிக்கும் பிணியாளருக்கு அறவே வலி நீக்கி மருந்துகள் அளிக்காமல் ப்ரார்த்தனை மட்டும் அளித்து இருப்பது வைத்ய தர்மமாகுமா. அல்லது வைத்ய அதர்மமா? பிணியாளருக்கு முறையான வைத்யம் அளிக்காது ப்ரார்த்தனை மட்டிலும் செய்யும் அதர்மத்தை ஐடா அம்மையார் நிகழ்த்தினார்களா? சாய்பாபா அத்புதங்கள் நிகழ்த்தியிருக்கலாம். அவரது வைத்யசாலைகளில் தர்ம வைத்யத்திற்கு ஏற்கப்பட்ட பிணியாளர்களுக்கு ப்ரார்த்த்னை கூட செய்திருக்கலாம். ஆனால் முறையான வைத்யம் அளிக்காது வலியில் துடிக்க விடப்பட்டார்கள் பிணியாளர்கள் என்று இதுவரை யாரும் பதிவு செய்ததாக வாசித்ததில்லை.

    ஐடா அம்மையைப் பற்றி உண்மையான அக்கறையுடன் வ்யாசத்தை தாங்கள் சமர்ப்பித்திருந்தால் இது போன்ற அப்த்தமான ஒப்பீடுகளை யார் சொன்னார் என்று பார்க்கது கண்டனம் செய்வது நேர்மையான போக்கு.

    மதம் சார்ந்து ப்ரார்த்தனை மட்டிலும் பிணியாளரை குணப்படுத்தும் என்றால் நம்பிக்கை சார்ந்து அதை மதிப்பேன். அதைத் தாங்கள் க்றைஸ்தவ மதப்ரசாரம் செய்ய முனைந்து ஒரு வ்யாசம் சமர்ப்பித்திருந்தால்.

    வைத்யம் பற்றிப் பேசும் வ்யாசத்தில் இது போன்ற ஒரு நிலைப்பாடை ஏற்க இயலாது. ஒவ்வாத ஒப்பீட்டில் இதுவும் ஒரு விஷயம் என்ற படிக்கு.

    1. Avatar
      IIM Ganapathi Raman says:

      //ரெவரெண்டு தெரசாள் செய்த சேவையை சிறியேன் எப்போதும் சேவையன்று என்று குறிப்பிட்டதில்லை.//

      அடிப்படைக் கருத்துப்பிழை.

      ஒருவர் இன்னொருவருக்கோ ஒரு கூட்ட மக்களுக்கோ ஏதோவொன்றை உதவியாகச் செய்கிறார். அதைப்பெற்று பலனடைந்தோர்தான் அதைச் சேவையா இல்லையா என்று சொல்ல முடியும்?

      மதர் தெரீசா கிருஸ்ணகுமாருக்கோ அல்லது அவரின் உறவினருக்கோ ஏதாவது செய்தாரா? எப்படிச் சொல்கிறார் மதர் தெரீசா செய்ததது சேவையா இல்லையா என்று.

      கிருத்துவர்களின் எதிர்க்கூட்டத்திலுள்ள ஒருவரை கிருத்துவர் ஒருவரைப்பற்றிச்சான்றிதழ் கொடுக்கச்சொன்னால் என்ன கொடுப்பார்? அஃதை எவரேனும் நம்புவரோ. Credibility of an estimate is a important criterion in evaluation of the nature of such estimate.

      எனினும் கிருஸ்ணகுமார் தம் கருத்துக்களை ஒரு கட்டுரையாகப்போட்டால், அவருக்கு தெரீசாவின் தொண்டர்க்ள் பதிலளிப்பார்கள். அஃதொரு நல்ல விவாதக்களமாக வாய்புண்டு. In ancient Tamil Nadu, religious disputations between different religious groups were patronized by the Kings. People were not killed generally speaking; rather knowledge about religions increased. Only such knowledge about our rivals will lead to broad understanding, necessary to live in a democracy.

      அப்படி தன் மனத்தை விசாலாக்கிக்கொண்டவன் மத வெறியனாகி, வெட்டு, குத்து என்றலைய மாட்டான். நேற்று உ பியில் 27 நபர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள் இரு மத வெறியர்கள் தூண்டிவிட்டக் கலவரங்களில். அரசு இராணுவ உதவியை நாடியிருக்கிறது.

  41. Avatar
    பக்கிரிசாமி.N says:

    //மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என்று நம்பி இறைபணி புரிந்தவர்கள் கிறிஸ்தவ துறவிகள்.//ஷாலி

    //ஒரு புனிதமான பணி பற்றி எழுதினால் திரு பாண்டியன் போன்றோர்க்கு காமடியாகத் தெரிவது வேதனைக்குரியது//

    ஒரு புனிதமான பணி என்று எழுதியிருந்தால் பாண்டியன் நிச்சயமாக மறுத்து எழுதியிருப்பார் என்று எனக்குத் தோன்றவில்லை. தெரிந்தோ, தெரியாமலோ கொடுத்த இடைச்செருகல் கட்டுரைத் தலைப்பைவிட்டு எங்கெங்கோ செல்ல வைக்கிறது.

    1. Avatar
      IIM Ganapathi Raman says:

      பாண்டியன் சில சொற்களைத்தேடுகிறார். அவையிருப்பின் உடனே காமெடி போன்ற சொற்களால் நகையாடுவார்.

      அச்சொற்களில் சில:

      கிருத்துவ மிசுனோரிகள்; இசுலாமிய மதத்தத்துவச்சொற்கள், அல்லா, முஹமது நபி, இசுலாம் ஒரு எளிய மார்க்கம், இயேசு, கன்னி மரியாள், தமிழர், தமிழினம் (மேத்தாவைப்பற்றிய கட்டுரையில் காண்க) மதர் தெரீசா . ஈ வே இராமசாமி, அண்ணாத்துரை, கருநாநிதி, திராவிட இயக்கம், நீதிக்கட்சி இப்படியாக.

      ஆக, திரு பக்கிரிசசாமியின் எண்ணம் சரியன்று என்று பாண்டியனின் பின்னூட்டங்களே காட்டுகின்றன. ஒருவரைப்பற்றி முடிவெடுக்குமுன் அவர் எழுதியவைகளப்பார்ப்பது நன்று. பாண்டியனின் கட்சி: ‘மாமியார் உடைத்தால் மண்சட்டி; மருமகன் உடைத்தால் பொன் சட்டி”

      ஆனால் அவர் இப்படி எழுதுவதை நாம் வரவேற்கிறோம். திண்ணை ஒரு open மேடை. எவரும் அனுமதி கேட்டு ஆட்டமாடலாம். அனைவருக்கும் உரிமை.

      இரசிக்கத்தான் நாம் இங்கு வருகிறோமில்லையா திரு பக்கிரிசாமி அவர்களே? Lets enjoy reading all sorts of writings here. Variety is the very spice of life :-)

    2. Avatar
      IIM Ganapathi Raman says:

      இறைப்பணி, புனித பணி

      இரு சொற்களுக்குமிடையில் என்ன வேறுபாட்டைக்கண்டு சொல்கிறார் என இறும்பூதெய்கிறேன்.

      (இறும்பூது = wonder, surprise. Not happiness)

      ஒன்றைப்புரிந்து கொள்ளுதல் நலம்.

      தன்னலமில்லாப்பணி, தன்னலம் கருதி செய்யப்படும் பணி.

      கோயில்களிலோ, தேவாலயங்களிலோ உண்டியலில் போடுபவர் இக்கோயில், தேவாலயம் ஆற்றட்டும் என்று போடுவதில்லை. இசுலாமியருக்கும் பொருந்தும்.

      எந்த இசுலாமியனோ, கிருத்துவனோ, இந்துவோ, தன் கடவுளை ‘எல்லாரும் எல்லாம் பெற்று வாழ வேண்டும்’ என இறைஞ்சி வழிபடுவதில்லை. தனக்கு, தன் குடும்பத்துக்கு, தன் உறவினருக்கு என்றுதான் வழிபடுகிறார்.

      அவரவர் மதம், அவரவர் மதத்தலைவர்கள் ‘மனித் நேயமே அடிப்படையாக உங்கள் வழிபாடு இருக்கட்டும் என்று சொல்லத்தான் செய்வார்களே தவிர, பக்தன் மனதில் என்னவிருக்கிறது என்று தோண்டிப்பார்க்க முடியாது.

      தியரியும் வாழ்க்கை முறையும் வெவ்வேறு. ஒன்றாக இருந்திருந்தால் உ.பியில் நேற்று 27 நபர்கள் கொல்லப்பட்டிருப்பார்களா?

      எனவே திரு பக்கிரிசாமி அவர்களே, we must make the best use of the worst scenario. அதாவது இந்த தன்னலத்தின் வழியாக ஏதாவது பொதுநலம் வருகிறதா என்றுதான் பார்க்க வேண்டும்.

      அப்படி வந்தால், அது புனித பணியே.

      1. Avatar
        IIM Ganapathi Raman says:

        இக்கோயில், தேவாலயம் ஆற்றட்டும்

        Read the above as…

        தன்னலமில்லாப்பொதுச்சேவை இக்கோயில், இம்மசூதி, இததேவாலயம் ஆற்றட்டும்.

  42. Avatar
    Dr.G.Johnson says:

    அன்புள்ள திரு கிருஷ்ணகுமார் அவர்களுக்கு. என்ன செய்வது? நம்மிடம் பனை ஓலை நூல்கள் கட்டு கட்டாக இருந்தன. அவை புலவர்களிடமும், மடங்களிலும், கோவில்களில் பூட்டப்பட்ட அறைகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தன. அவற்றை அவர்களைத் தவிர பாமர மக்கள் பார்க்க முடியாது. அவர்கள் பார்த்ததெல்லாம் ஓலைச் சுவடிகளில் எழுதப்பட்ட பஞ்சாங்கம் ஜாதகம் தான். மொழிச் சேவையை புலவர்களும் , மடாதிபதிகளும் இவ்வாறு வளர்த்தனர். இதைக் கெடுத்தனர் இந்த மிஷனரிகள். இவர் அச்சு எந்திரம் கொண்டு வந்து, தமிழ் எழுத்துக்களை அச்சில் வார்த்து, தமிழ் நூல்கள் காகிதத்தில் அடித்து பாமர மக்கள் அனைவரும் படிக்கும் வண்ணம் தந்து விட்டனர்., அச்சு வந்ததால் மொழி வளர்த்ததா இல்லையா? இல்லை என்கிறார் ஏட்டிக்கு போட்டியாகப் பேசும் திரு கிருஷ்ணகுமார். அச்சில் தமிழ் வந்தது என்ன புதுமை என்கிறார். வட மொழியிலும் வந்தது என்கிறார். தென் கிழக்கு ஆசியாவில் அச்சில் எறிய முதல் மொழி தமிழ் என்றால் அது சிறப்பு இல்லையா? அந்த முதல் தமிழ் நூல் தரங்கம்பா டியில் 1708 ஆம் ஆண்டில் அச்சிடப்பட்ட புதிய ஏற்பாடு . இதை மொழிபெயர்த்து அச்சில் தமிழில் ஏற்றியவர் சீகன்பால்கு என்ற ஜெர்மானியர். அதன் பின்பு தமிழ் நூல்கள் வெளிவரத் தொடங்கின. இதனால் பலரும் படித்தது மொழி வளர்ச்சியா இல்லையா? ஆமாம். அவர் அச்சில் எதை முதலில் அடித்தார்? ஏசுவின் சுவிசேஷத்தைதானே என்று திரு கிருஷ்ணகுமார் கூறுவார் என்பதும் தெரியும். இறைத் தூதர் வேறு எதற்கு முக்கியத்துவம் தருவார்? அச்சு வந்தபின்தான் தமிழ் மொழி வளர்ச்சியும், இலக்கிய வளர்ச்சியும் துரிதமானது என்பது எனது கருத்து. திரு கிருஷ்ணகுமாருக்கு நிச்சயமாக இதிலும் மாற்றுக் கருத்து இருக்கவே செய்யும்…அன்புடன் டாக்டர் ஜி. ஜான்சன்.

    1. Avatar
      புனைப்பெயரில் says:

      . திரு கிருஷ்ணகுமாருக்கு நிச்சயமாக இதிலும் மாற்றுக் கருத்து இருக்கவே செய்யும்— ஆம், எனென்றால் இது மாதிரி பேத்தல்களுக்கு பதில் அளித்துத் தானே ஆக வேண்டும்.

  43. Avatar
    Dr.G.Johnson says:

    மிஷனரிகள் செய்த சேவையெல்லாம் சேவை இல்லை, சேவை என்ற பெயரில் மத மாற்றம் செய்தது என்பது திரு கிருஷ்ணகுமார் அவர்களின் வாதம் .

    ஆங்கிலேயர்கள் வந்தபோது இந்தியா முகலாயர்களின் ஆட்சியில் இருந்தது. அப்போது வங்காளம், காஷ்மீர் ஹைதரபாத் போன்ற பகுதிகள் இஸ்லாம் ஆனது. ஆங்கிலேயர்கள் ஆண்ட கால்த்தில் எத்தனை மாநிலங்கள் கிறிஸ்துவ மாநிலமாக மாறின? இந்தியாவை கிறிஸ்துவ நாடாக மாற்றினார்களா? இலங்கையை மாற்றினார்களா பர்மாவை மாற்றினார்களா ? மலாயாவை மாற்றினார்களா ? இல்லையே ! ஏன் ?

    டாக்டர் ஜி. ஜான்சன் .

    1. Avatar
      paandiyan says:

      /மிஷனரிகள் செய்த சேவையெல்லாம் சேவை இல்லை, சேவை என்ற பெயரில் மத மாற்றம் செய்தது என்பது திரு கிருஷ்ணகுமார் அவர்களின் வாதம் .

      மிஷனரிகள் செய்த சேவையெல்லாம் சேவை இல்லை, சேவை என்ற பெயரில் மத மாற்றம் செய்தது என்பது திரு கிருஷ்ணகுமார் அவர்களின் வாதம் .

      //
      என்னுடைய வாதமும் அதுதான் . என் பெயரையும் சேர்க்கவும்..

      1. Avatar
        IIM Ganapathi Raman says:

        நீங்கள் வாதமே செய்யவில்லை. கருத்தை மட்டுமே வைக்கிறீர்கள். வாதமென்றால் எப்படி அது சேவையில்லை என்று விளக்க வேண்டும்.

        1. Avatar
          IIM Ganapathi Raman says:

          காமெடி என்று மொட்டையாக எழுதிவிட்டால் போதுமா?

          1. Avatar
            paandiyan says:

            கேள்வி வைப்பது கட்டுரையாளரை நோக்கி. எங்களை கொஞ்சம் வாதாட விடுகின்றீர்களா இங்கு ?

  44. Avatar
    Bala says:

    பசிப்பிணி தீர்க்கும் அறச்செயல்கள், ஈகை இவையெல்லாம் நம் தமிழ் மரபில் நெடுங்காலாமாக உள்ளவையே. ஆனால், முதியோர், ஆதரவற்றோர், அனாதைச் சிறுவர்கள், நோயாளிகள் இவர்களுக்கெல்லாம் உதவி செய்வதற்கான அமைப்பு முறைகள், நிறுவனங்கள் போன்றவை மேலைநாட்டு இறைப்பணியாளர்களாலேயே இங்கு அறிமுகமாகின, இன்று வரை நடந்துகொண்டும் வருகின்றன.
    ஊழ்வினைக் கோட்பாடு, அல்லது ‘அவன் விதி அப்படி’ என்று கருதும் மனப்பாங்கு மக்களிடம் ஆழப்பதிந்து போனதால் தொண்டூழிய அமைப்புகள் இங்கு முகிழ்க்கவில்லை என்று கருதலாம்.

    மேலை நாட்டு மொழியும், மதமும், கொள்கைகளும் இங்கு வந்து ஊடுறுவியதைக் குற்றமாகக் கருதும் கிருட்டிணகுமார் போன்றவர்களுக்கு வடக்கிலிருந்து வந்த மொழியைத் தமிழோடு கலந்து தமிழ் மரபைச் சிதைப்பது ஏன் குற்றமாகத் தெரியவில்லை?

  45. Avatar
    paandiyan says:

    //மிஷனரிகள் மேல்நாடுகளிலிருந்து இங்கு வந்து சேவை புரிந்தனர் –> சேவை புரிய அல்ல… மக்களின் அடையாளம் சிதைத்து தம் மன்னர்களுக்கு அடிமைகளை உருவாக்க. இதுவே உண்மை.

    //
    உண்மை விலைபோகாது நண்பரே .

    அப்படி அவர்கள் உருவாக்கிய அடிமைகளுக்கும் விசுவாசம் ஜாஸ்தி . என்ன ஒரு ஜாலரா இங்கு. லெப்ரேசி க்கு கையில் மணி அடிதுகொண்டு காற்றின் எதிர்புறம் போக வேண்டும் என்று ரூல் போட்ட நாடு எது ? ஜாதி என்பத இன்னும் இங்கிலாந்து கிராமங்களில் தெருவில் இருப்பது ஏண்.மண்டயை மலுங்கடித படிப்பில் அரைகுறை கல்வியில் இங்கு நன்றாக தெரியவில்லயா..

  46. Avatar
    Dr.G.Johnson says:

    திரு புனைப்பெயரில் அவர்களே, உண்மையைச் சொல்லுங்கள். ஆங்கிலேயர்களும் மிஷனரிகளும் இங்கு வந்தது மதம் மாற்ற நாட்டைச் சுரண்ட என்கிறீர்களே. அவர்கள் வராதிருந்து ஆப்ரிக்காவில் மட்டும் கவனம் செலுத்தியிருந்தால் நல்லதுதான். அந்த காண்டம் முன்னேறியிருக்கும். இந்தியா முகலாயர் ஆட்சியின் கீழ் ஆகானிஸ்தானிலிருந்து , பாகிஸ்தான் , பங்ளா தேஷ், மலாயா, இந்தோனேசியா வரை ஆட்சி விரிவடைந்து பெரிய வல்லரசாக ஆகியிருக்கலாம். உங்கள் மதமும் இங்கெல்லாம் பரவியிருக்கும். உங்கள் கோவில்கள் பாதுகாக்கப் பட்டிருக்கும். குருகுல பள்ளிகளும், திண்ணைப் பள்ளிகளும் பெருகியிருக்கும்.உங்கள் ஜாதிகள் நிலைத்திருக்கும். உங்கள் பெண்கள் விதவைத் திருமணம் செய்யும் அபாயம் இல்லை. அவர்கள் உடன்கட்டை எறிக்கொண்டிருப்பார்கள்! தமிழ் இன்னும் செய்யுள் வடிவிலேயே பனை ஓலைகளில் ஒளிந்திருக்கும். தமிழ் இலக்கியங்களில் சிறுகதைகள், நாவல்கள் படிக்கும் பழக்கமும் இல்லாமல் இருந்திருக்கும். ஆங்காங்கே சிற்றரசர்களின் ஆட்சியும் மலிந்திருக்கும்.நிறைய வாளும் வேலும் ஏந்திய போர்களையும் பார்த்து மகிழ்ந்திருப்பீர்கள். இவையெல்லாம் இல்லாமல் ( ஆங்கிலேயர் வருகையால் ) போனதென்று வருந்துகிறீரா?.டாக்டர் ஜி.ஜான்சன்.

    1. Avatar
      paandiyan says:

      நீங்கள் என்ன சொல்ல வருகிண்ரீர்கள் . களுவ கூட அவர்கள்தான் நமக்கு சொல்லிதந்தர்கள் என்றா ??

  47. Avatar
    IIM Ganapathi Raman says:

    மிசுநோரிகள் வராதிருந்தால். இங்கு அறவாழி அந்தணர்கள்தான் எழுதிக்கொண்டிருப்பார்கள் அவரைப்போன்றோருக்கு மட்டுமே கல்வி என்றாகியிருக்குமல்லவா?

    1. Avatar
      paandiyan says:

      //மிசுநோரிகள் வராதிருந்தால். இங்கு அறவாழி அந்தணர்கள்தான் எழுதிக்கொண்டிருப்பார்கள் அவரைப்போன்றோருக்கு மட்டுமே கல்வி என்றாகியிருக்குமல்லவா?

      //

      நான் காமெடி என்று ஒற்றை சொல்லில் எலுதியது எந்த அளவு உண்மை என்று இப்போ எல்லாருக்கும் புரிந்து இருக்கும் . என்ன ஒரு வரலாற்று பார்வை !!!!

      1. Avatar
        IIM Ganapathi Raman says:

        திராவிட இயக்கம் என்ற எதிர்வினை தோன்றியதே ஒரு குறிப்பிட்ட கூட்டம் கல்வியைத் தனது ஏக போக உரிமையாக்கிக்கொண்டதால்தானே? திராவிட இயக்கத்தையே பொய்யென்றும் காமெடி என்றும் சொல்லக்காரணம் தன்னலமன்று என்றால் அதுதான் காமெடி.

        இந்துமதச்சாஸ்திரங்கள் எவருக்குமில்லை; எமக்கு மட்டுமே. தேவ் இரகசியங்கள். கருவறைக்கு நுழைந்து இறைவன் அருகில் எமக்கு மட்டுமே உரிமை. மததவெல்லாம் அர்ச்சகானால் கலி முத்திப்போகும் என உச்ச நீதிமன்றத்தை நாடுவது? தேவாரம் பாடினால் அடி உதை? வாட்டர் பாட்டில் வீச்சு போலிசில் மேல். இலக்கிய விமர்சனம் என்றெழுதுகிறேன் பேர்வழி என்று கூட எவர் எவரால் பாதிக்கப்பட்டோமோ அவர்களைத்தாக்குவது

        இவையெல்லாம் காமெடியாகத தெரியவில்லை?

        மிசுநோரிகள் வரவால் பாதிக்கப்படடவர்கள் பாண்டியன்கள் முன்னோர்கள். உண்மை. பாதிக்கப்பட்டவர்கள் அரற்றுகிறார்கள். வேறென்ன?

        1. Avatar
          paandiyan says:

          திராவிட இயக்கம் — மிஸ்ஸனரி வரவு — என்ன சம்பந்தம் ? இதுதான் காமெடி என்று சொல்வது நான் .

  48. Avatar
    Shobana says:

    Thank you very much Doc for that enlightening story.
    You are indeed a very good writer. Continue your writing so we can all read and learn good stories. Thanks again…

  49. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    \ அச்சு வந்ததால் மொழி வளர்த்ததா இல்லையா? இல்லை என்கிறார் ஏட்டிக்கு போட்டியாகப் பேசும் திரு கிருஷ்ணகுமார். \

    ஐயன்மீர், க்ஷமிக்கவும்.

    அச்செந்திரம் அறிமுகப்படுத்தியதைக் குறைவாக மதிப்பிடவில்லையே. அதை அச்செந்திர சேவை என்று தானே சொல்லியுள்ளேன்.

    அச்செந்திர சேவையால் வளர்ந்தது உங்கள் க்றைஸ்தவ மதம். அதனால் வளர்ந்தது தமிழ் என்பது கதை. தமிழ் வளர்ச்சி புதுப்படைப்புகளால். தமிழில் புதுப்படைப்புகள் சமைத்த க்றைஸ்தவர்களின் பங்கை மனமுவந்து விதந்தோதியுள்ளேன். ஆகவே நான் மதக்காழ்ப்பு மிக பேசுகிறேன் என்று மட்டிலும் சொல்லாதீர்கள்.

    ஏட்டிக்குப் போட்டியாக பேசுவது தாங்கள். விட்டால் Offset Printing அறிமுகம் செய்தவர் internet அறிமுகம் செய்தவர்களைக் கூட தமிழ்ச்சேவை செய்தார் என்று சொல்வீர்கள் போலும். இதன் மூலம் இன்னமும் அதிகமான பேர்களுக்குத் தமிழ் போய்ச்சேர்ந்துள்ளதே.

    விட்டால் கசாப்புக்கடையில் ஆட்டுக்குட்டிக்குப் புல்லு பிடுங்கிப்போட்டுப் பின்னர்க் கொடுவாளால் அதனை வெட்டிச்சாய்க்கும் கசாப்பு வ்யாபாரியின் புல்லு போடும் செயலைச் சுட்டி —- இவனைப்போல் ஜீவ காருண்யம் உள்ளவர் யார் என்றும் கேழ்ப்பீர்கள் போலும்.

  50. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    \ அச்சு வந்தபின்தான் தமிழ் மொழி வளர்ச்சியும், இலக்கிய வளர்ச்சியும் துரிதமானது என்பது எனது கருத்து. \

    மொழி வளர்ச்சி புத்தி சார்ந்த சமாசாரம். புத்தகம் நகலெடுத்து அலமாரிகளில் வைத்தால் தமிழ் வளராது. அச்செந்திரக்காரருக்கு தனம் வளரும்.

    தமிழ் மொழி வளர்ச்சியும் இலக்கிய வளர்ச்சியும் மொழியின் மீதான காதலைச் சார்ந்தது. அது புதுப்படைப்புகளால் வெளிப்படுகிறது. தமிழில் தரமான படைப்புகள் அச்செந்திரத்திற்குமுன்னும் பின்னும் இருக்கின்றன. யந்த்ரத்தை இதற்குக் காரணமாகச் சொல்வது விநோதம்.

    கம்பனே எழுதியிருதாலும் அவனது ராமாயணத்தைக்குடைந்தெடுத்து கேழ்விக்கணைகளால் துளைத்த பின் அதற்கு அந்தஸ்து கிடைத்தது அச்செந்திரம் வருமுன். த்வேஷக்குப்பைகளை நகலெடுத்து ப்ரசாரம் செய்து பணம் கொடுத்த துதிபாடிகளால் அதை இலக்கியம் என்று விதந்தோதுதி தனக்கும் பார்ப்பவர்களுக்கும் குல்லாய் போடுவது அச்செந்திரம் வந்ததற்குப் பின்.

    தமிழ் கற்ற அறிஞர் கூட இணையத்தில் நகலெடுத்து வ்யாசம் சமைப்பது அச்செந்திரம் மற்றும் இணையம் போன்றவை வந்த பின். நகல்களின் குப்பைகள் பெருகுவதை மொழி வளர்ச்சி என்று துதிபாடிகளால் மட்டும் சொல்ல முடியும்.

    தோமையர் பற்றிய புளுகு மூட்டைகளை அச்செந்திரம் வருமுன் லகுவாக ப்ரசாரம் செய்ய முடிந்திராதே.

    அச்செந்திரம் வந்த பின் கொஞ்சம் இலக்கியமும் கணக்கு வழக்கில்லாது குப்பைகளும் பெருகின என்பது நிதர்சனம்.

    1. Avatar
      IIM Ganapathi Raman says:

      இணையமும்தான் போர்னோவையும் இன்னபிற அசிங்கங்களையும் தனக்குள் வைத்துக்கொண்டிருக்கின்றன. ஆனால் இணையம் இல்லாவிட்டால் மஹாசயர் இங்கெழுதிக்கொண்டிருப்பாரா? திண்ணையோ தமிழ்.ஹிந்து. காமோ சாத்தியமா?

      எதற்கும் இருபக்கங்கள் உள. இரண்டும் கலந்ததுதான் வாழ்க்கை. நல்லதை எடுத்து வாழப்பழகிக்கொள்ளவேண்டும். கெட்டது இருக்கிறதே என்று நல்லதையும் தரும் காமதேனுவைத் தூக்கியெறியலாகாது.

      அதே போல அச்சு இயந்திரமும். காம சூத்திராவையும் காமக்கதைகளையும் தீவிர வாத இயக்கக்கொள்கைகளையும் அச்சடிக்கலாம். திருப்புகழையும் திருவாசகத்தையும் அச்சடித்து தமிழ் தெரியாதோருக்கு தமிழும் சொல்லிக்கொடுக்கலாம்.

      மிசுநோரிகள் அச்சு இயந்திரத்தை ஐரோப்பாவிலிருந்து இங்கு கொண்டுவந்தது விவிலியத்தையும் கிருத்துவ மத போதனைகளையும் அச்சடித்து விநியோகிக்கதான். அப்படி மட்டுமே அவர்கள் செய்ய நினைத்திருந்தால், அதனுடனேயே நிறுத்தியிருக்கலாமே? ஏன் ஜி.யு. போப் நாலடியாரை மொழிபெயர்த்தார்? திருக்குறளை ஆங்கிலப்படுத்தினார்? நாலடியாரும் திருக்குறளும் இயேசுவின் கதையையா பறைகின்றன?

      காழ்ப்புணர்ச்சி கண்களைக் கட்டினால், திருப்புகழைக்கண்டும் தலைதெறித்து ஓட வேண்டியதுதான். அஃது ஒரு சுவிசேசமாகத் தெரிந்து தொலைத்துவிட்டால்..? மாற்றுக்கருத்தைத் தெரிவித்தோரெல்லாம் சுவிசேச ஊழியராகத் தெரியும் போது அருணகிரிநாதர் தெரியமாட்டார் என்று என்ன நிச்சயம்?

  51. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    \ மிஷனரிகள் செய்த சேவையெல்லாம் சேவை இல்லை, சேவை என்ற பெயரில் மத மாற்றம் செய்தது என்பது திரு கிருஷ்ணகுமார் அவர்களின் வாதம் . \

    ஒரு சிறு திருத்தம் அன்பின் ஜான்சன்.

    யார் செய்த சேவையையும் அது சேவை இல்லை என்று நான் எங்கும் சொன்னதில்லை.சொல்லவும் மாட்டேன்.

    ஐடா அம்மையின் லக்ஷ்யம் சேவை. மிஷநரிகளின் லக்ஷ்யம் மதமாற்றம்.

    சேவை என்பது மிஷநரிகளுக்கு ஒரு முகமூடி அவ்வளவே. நோயாளிகளுக்கு வலிநீக்கி கொடுக்காது ப்ரார்த்தனை மட்டிலும் போதும் என்று ஹடம் செய்யும் மிஷநரிகளின் செயல்பாடுகளில் அந்த மதவெறி ப்ரதிபலிக்கிறதே.

    நிச்சயமாக மிஷநரிகளின் சேவையிலும் தாங்கள் வ்யாசத்தில் குறிப்பிட்டுள்ள ஐடா அம்மையின் சேவையிலும் ஆகாசத்துக்கும் பூமிக்குமான வித்யாசம் உள்ளது.

    தாங்கள் எழுதியதின் ஆதாரப்படி ஐடா அம்மையின் குடும்ப முழுதும் மிஷநரிகளாய் இருப்பினும் இந்த அம்மை மட்டிலும் சேவையை மட்டும் குறியாகக் கொண்டு சேவைக்குத் தன்னை அர்ப்பணித்தமை தங்களாலும் தாங்கள் ஆதாரமாகக் கொண்டு எழுதிய நூலிலும் சொல்லப்பட்டுள்ளது.

    கண்டிப்பாக தங்களுக்கும் இந்த வித்யாசம் நன்று தெரிகிறது. தங்களின் வ்யாசத்திலும் அது ப்ரதிபலித்துள்ளது. ஆயினும் தெரியாதது போல பாவலா செய்தால் அதை விளக்கவே முடியாது.

    நேர்மையுடன் கருத்துப் பகிரும் தங்களுக்கும் முகமூடிகளின் பின் ஒளிந்து பல பெயர்களில் கற்பனைக்குழு அமைத்து ஏசு ஊழியம் செய்யும் பொய்யர்களுக்கும் இந்த வித்யாசம் நன்றாகவே தெரியும்.

  52. Avatar
    சி. ஜெயபாரதன் says:

    ஆங்கிலேயர் ஆட்சி வராவிட்டால், இந்தியா பாகிஸ்தான் போல் ஒரு கஜினிஸ்தான் ஆகியிருக்கும். இந்து மதமும், அதன் கலாச்சாரமும் நசுக்கப் பட்டு, பேரளவு நடைமுறை அழிந்து போயிருக்கும்.

    பிரிட்டன் இந்தியா முழுதும் இரயில் பாதைகள் இட்டு நம்மை இணைத்து ஒருமைப் படுத்தினார். தபால், தந்தி நிலையங்கள் கட்டி குமரி முதல் இமயம் வரை பற்பல தொடர்பு சந்திப்புக் களை ஏற்படுத்தினார். ஆங்கிலத்தைப் புகட்டி இந்தியர் எங்கும் வேலை பார்க்கும் அரிய வாய்ப்புகளை அமைத்தார்.

    ஆங்கில அரசாங்கம் இந்து, இஸ்லாமிய கலாச்சாரங்களை காலடியில் நசுக்கி, கிறித்துவ மதத்தைப் பரப்ப வில்லை. அது அவரது குறிக்கோளும் இல்லை.

    சி. ஜெயபாரதன்.

    1. Avatar
      paandiyan says:

      //ஆங்கிலேயர் ஆட்சி வராவிட்டால், இந்தியா பாகிஸ்தான் போல்//

      இதுதான் இந்த ஆர்டிகில்ளில் மிக சிறந்த காமெடி . அவர்கள் வராவிட்டால் இந்தியா , பாகிஸ்தான் என்ற தனி நாடு ஏது??

      1. Avatar
        சி. ஜெயபாரதன் says:

        திரு பாண்டியன் அவர்களே,

        ஆங்கிலேயர் வரும் முன்பு இந்தியாவில் முகலாயர் ஆட்சி சுமார் 400-500 ஆண்டுகள் நீடித்தது மறந்து போய் விட்டாதா ? அவரிடமிருந்து ஆட்சியைக் கைப்பற்றியது யார் ? ஆங்கிலேயர் அல்லவா ? முகலாயர் ஆட்சியில் மதம் மாற இந்துக்கள் கட்டாயப் படுத்த வில்லையா ?
        எகிப்து, மத்திய ஆசியா, இந்தோனேசியா போன்ற பகுதிகள் [பாரதம் தவிர] முழுக்க முழுக்க இஸ்லாமிய நாடுகளாய் மாறிப் போனது மறந்து விட்டதா ?

        சி. ஜெயபாரதன்.

        1. Avatar
          புனைபெயரில் says:

          எரியும் தீயில் விழுந்தால் என்ன? கொதிக்கும் எண்ணெய் சட்டியில் பாவிகளாய் விழுந்தால் என்ன?

          1. Avatar
            க்ருஷ்ணகுமார் says:

            க்றைஸ்தவ பாதிரிகள் வசியமாகி ஆங்க்ல மோகம் கொள்ளும் ஹிந்துஸ்தானியர் பற்றி காந்தியடிகள் சொல்வதற்கு சரியான உதாஹரணம் விக்ஞானி ஜெயபாரதன்.

    2. Avatar
      புனைப்பெயரில் says:

      சீனர்கள், ஜபானியர்கள், பிரஞ்சுக்காரர்கள் என்ன ஆங்கிலத்திலா அறிவு திறமை வளர்த்தார்கள்.? ரயில் பாதை என்பது நமது பொக்கிஷங்களை கொள்ளையிட அமைக்கப்பட்டது. போடி ரயில் மிளகு கடத்த என்ற எண்ணம் தான். கேடில் நல்லது என்றாகிப் பின் போனதே உண்மை. கிறிஸ்துவ மதத்தில் சரக்கு இல்லை என்பதால் தான் ஓரளவிற்கு மேல் அது பரவவில்லை. பால் பவுடருக்கும், குருடர்கள் பார்க்கிறார்கள் என்பதற்கும் எத்தனை பேர் தான் மாறுவார்கள். பாவிகள் மாறியிருக்கலாம்.

  53. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    \ ஒருவர் இன்னொருவருக்கோ ஒரு கூட்ட மக்களுக்கோ ஏதோவொன்றை உதவியாகச் செய்கிறார். அதைப்பெற்று பலனடைந்தோர்தான் அதைச் சேவையா இல்லையா என்று சொல்ல முடியும்?

    மதர் தெரீசா கிருஸ்ணகுமாருக்கோ அல்லது அவரின் உறவினருக்கோ ஏதாவது செய்தாரா? எப்படிச் சொல்கிறார் மதர் தெரீசா செய்ததது சேவையா இல்லையா என்று. \

    அன்பின் அய்….அல்லது…… அல்லது….. அல்லது…….ஏதோவொரு பெயர்

    நீங்கள் பொழுது போகாது கிறுக்குவதை வாதம் என்று ஏற்று எவராவது வாதம் செய்யத் துணிந்தால் அவருடன் நீங்கள் கண்டிப்பாக வாதம் செய்யலாம்.

    இது போன்ற கருத்துக்களுக்கு நீங்களே இன்னொரு அல்லது பல பெயர்களில் பதில் கருத்து எழுதி நீங்கள் உங்களுடனேயே வாதத்தைத் தொடர்ந்தால் உங்களுக்கு இன்னும் அழகாகப் பொழுது போகும்.

    பெயரில் பொய்மை எல்லாம் ஒரு புறம் இருக்கட்டும். வாதத்தில் நேர்மை…. கருத்து சார்ந்து நேர்மையான வாதம் என்று எப்போதாவது விதிவிலக்காகவாவது நீங்கள் முயன்றால்……உங்களுக்கு உத்தரம் தர முயற்சிக்கிறேன். இப்படி இம்சை அரசனாக தொல்லை கொடுத்தீர்களானால் பின் வேறு என்ன சொல்வது ஐயன்மீர்.

    பாண்டியன் அவர்கள் comedy என்று எதையெதையோ சொல்லியுள்ளார். நீங்கள் சொன்ன மேற்கண்ட கருத்தை வாசித்திருந்தால் comedy என்றால் என்று அவருக்குப் புரிந்திருக்கும்.

    பிறிதொரு அவதாரத்தில் அவதார வரிஷ்டரைப் பற்றிச் சொல்கையில் …..வ்ருக்ஷம் என்றொரு அன்பர் ……பின்னூட்டமிட்டு ஓய்ந்தவர்களைப் பற்றிச் சொன்னதை மிகையோ என்று எண்ணியதுண்டு. அது சத்ய வசனம் என்று புரிகிறது.

    நீங்கள் சௌகர்யமாக உங்கள் தனியாவர்த்தன…… ஹிந்துத்வேஷ…… ஜாதித்வேஷ……ஆப்ரஹாமிய ப்ரேமை சார்ந்த……. எந்த பொருளுக்கும் சம்பந்தமில்லாக் கருத்துக்களை…… பற்பல பெயர்களில் பொழிந்து தள்ளுவீர்களாக.

    பரிபூர்ண சுத்த சுவிசேஷ வேதாகம கல்லூரியில் கசடுற வாசித்து ஸ்நாதகரான கணபதி ராம சாஸ்திரியாருக்கு வாசிப்பற்ற விதண்டாவாதத் திறமையற்ற சிறியேனின் அனேக கோடி வந்தனங்கள்.

    1. Avatar
      IIM Ganapathi Raman says:

      மதர் தெரீசா ஓராண்டுகளாக அன்று, பத்தாண்டுகளாக அன்று. பல பத்தாண்டுகளாக கலகத்தாவில் வாழ்ந்தார். அங்குள்ள மக்களுக்கு அவரால் உதவிகள் கிடைத்தன. தெருவில் செத்துமடியும் மக்களை அழைத்து வந்து அவர்களுக்கு வேண்டியதைச்செய்தார். அவருக்கு செயின்ட்ஸ் ஆஃப் கட்டர் என்றும் பெயரிட்டார்கள்.

      அப்படிச் செய்த காலை நீங்களெல்லாம் ஒன்றும் சொல்லவில்லை. இப்போதுதான் விமர்சிக்கிறிர்கள்.

      வாதம் விவாதம் விதண்டவாதம் எல்லாமே இருக்கட்டும். நாம் நம் காமன்சென்ஸை மட்டும் உபஹோகித்துப்பார்த்தால் போதும்.

      அதன் படி,கிருஸ்ணகுமார் நழுவாமல் எதிர்நோக்க வேண்டிய உணமையிது:

      ஒருவர் இன்னொருவருக்கு உதவி செய்கிறார்.

      கிருஸ்ணகுமார் பார்க்கிறார். அஃது உதவியன்று. ஏமாற்று என்கிறார்.

      உதவி பெற்றவனோ செய்தவரை நன்றியுடன் பார்க்கிறான். அவ்வுதவியால் அவனும் அவன் வாழ்கிறான். அவன் அவ்வுதவியை ஏமாற்று என்றால் ந்மப்லாம். அல்லது காலத்தால் செய்த உதவி என்றுருகினால் நம்பலாம். காரணம். அவனுக்கு மட்டுமே தெரியும

      கிருஸ்ணகுமாரின் பார்வை தனக்கு வேண்டிய பார்வை – சப்ஜக்டிவ். மேலும் அவர் எதிர்முகாமைச்சேர்ந்தவர் அதாவது தெரீசா போன்ற்வர்களைப் பிடிக்காது. இப்படிப்பட்ட கிருஸ்ணகுமாரை நம்பலாமா? அல்லது உதவி பெற்ற அந்த உயிர்போகும்நிலையிலிருந்து பிழைத்தவன் சொல்லை நம்பலாமா எனப்தை நீங்களே முடிவு செய்துக்கொள்ளுங்கள்.

  54. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    \ மேலை நாட்டு மொழியும், மதமும், கொள்கைகளும் இங்கு வந்து ஊடுறுவியதைக் குற்றமாகக் கருதும் கிருட்டிணகுமார் போன்றவர்களுக்கு வடக்கிலிருந்து வந்த மொழியைத் தமிழோடு கலந்து தமிழ் மரபைச் சிதைப்பது ஏன் குற்றமாகத் தெரியவில்லை? \

    அன்பார்ந்த ஸ்ரீமான் பாலா,

    சற்று விஸ்தாரமான பதில்…… உங்களுக்கும் அன்பின் ஜான்சன் அவர்களுக்கும்

    ஒரு பாஷையில் மற்ற பாஷைகள் கலப்பது பூகோள எல்லைகளை உடைத்து விரியும் ஒரு பாஷையிலேயே சாத்யம். அப்படி எல்லைகளை உடைத்து வெளிப்போகும் ஒரு பாஷையில் ஒன்றல்ல பற்பல பாஷைகள் கண்டிப்பாக கலக்கும். மிகக் குறைவான மக்கள் பேசும் சம்ஸ்க்ருத பாஷையில் கூட அன்ய பாஷைகளின் கலப்பு காணத்தக்கதே.

    தமிழகத்தில் பிறந்து தமிழகத்தில் வாசித்து…… ஆனால் கிட்டத்தட்ட இரண்டரை தசாப்தங்களாக ஹிந்துஸ்தானத்தில் எல்லைப்பகுதிகளில் உத்யோகத்தில் இருக்கும் சிறியேன்……தினப்படி புழங்குவது….. ஹிந்தி, பஞ்சாபி / டோக்ரி, ஆங்க்லம் மற்றும் தமிழ் போன்ற பாஷைகளில். முன் பின் சொன்ன பாஷைகள் நான் அதிகமாக மற்றும் குறைவாகப் புழங்கும் பாஷைகள். நான் மட்டுமன்று என்னைப்போலப் பரதேசியாக வேறு மாகாணங்களிலிருந்து என்னைப்போலவே பலரும் இவ்வாறு புழங்குகின்றனர். எங்களைப் போன்றோருக்கு நாங்கள் எந்த பாஷையில் பேசினாலும் அதில் நிச்சயமாக மற்றொரு பாஷையின் கலப்பு அவசியம் இருக்கும்.

    உங்களது எல்லா உத்தரங்களையும் நான் விடாது வாசிப்பேன். ஏன்? ஆழ்ந்த கருத்துக்கள். மிகவும் ஸ்வச்சமான தமிழ். எந்த பாஷையும் கலவாது மிகத் தெளிவாக எளிமையான லலிதமான நான் மிகவும் விரும்பும் ஒரு தமிழ் சைலி.

    வெளி ப்ரதேசங்களில் புழங்கிய எனக்கு என் வீட்டாருடன் சில நிமிஷங்கள் தமிழில் பேசுவதல்லால் எனக்கு தமிழுடனான தொடர்பு :-

    என்னுடன் எப்போதும் புழங்கும்…….

    எங்கள் வள்ளல் அருணகிரிப்பெருமான் அருளிய …….

    பெருத்த பாருளோருக்கு….. வாருமே…..நீங்கள் வாருமே…….வந்து மயிலையும் அவன் திருக்கையயிலையும் நினைந்திருக்க வாருமே…….என்றழைத்து விதரணம் செய்து……

    மொழி….இனம்….ஜாதி…..நிறம்…..மதம்….என்று அனைத்து எல்லைகளையும் உடைக்கும்

    நினைத்தை அளிக்கும் மனத்தையும் உருக்கும்…… சிரிப்பவர் தமக்கும் பழிப்பவர் தமக்கும்……நெருப்பென்றிருக்கும்

    திருப்புகழ்.

    அதை விடின் ஸ்வாமி பெரியவாச்சான் பிள்ளையவர்களின் வ்யாக்யானங்களினடிப்படையில் அமைந்த வைஷ்ணவ காலக்ஷேபங்கள்.

    இவை என் மண்டையெனும் சட்டியிலிருப்பவை. சட்டியிலிருப்பது தான் அகப்பையில் வரும் என்பது தமிழ் வசனம். என்னுடைய சட்டியில் இவை போதாதென்று கபீரும் ரஹீமும் ரஸ்கானும் துளசிதாசரும் குரு தசமேஷும் உட்கார்ந்திருக்கையில் அகப்பையில் வேறு என்ன வரும் சொல்லுங்கள்.

    மிகவும் தூய கலப்படமில்லாத தெளிவான தமிழில் எழுதும் ஸ்ரீமான் பாலா அவர்களுக்கு என் கலப்பு மொழிநடையை வாசிக்குங்கால் அது மொழிச்சிதைவாகத் தோணுதல் யதார்த்தமே. நான் வலிந்து இவ்வாறு செய்கிறேன் என்று மட்டிலும் தாங்கள் எண்ண வேண்டாம். இணையத்தில் புழங்கப் புழங்கப் பற்பல புதிய தமிழ்ச்சொற்களைக் கூட நான் முனைப்புடன் கற்றுக்கொள்கிறேன். நான் வ்யாசங்கள் சமர்பிக்கையில் எழுதி முடித்த பின் ஒரு முறை வாசித்து சம்ஸ்க்ருத பதங்களுக்கான தமிழ்ப்பதங்களை நிரப்ப அவச்யம் முயற்சிக்கிறேன். உத்தரங்கள் எழுதுவது எனக்குக் கிடைக்கும் சொல்ப நேரத்தில் என்பதால் என் மண்டையில் இருக்கும் லகுவான என் மொழிநடையில் எழுதுகிறேன். இயன்ற வரை குறைவான சம்ஸ்க்ருத மற்றும் அன்ய பாஷைப் பதங்களை உபயோகிக்கிறேன். சில சமயம் அன்ய பாஷைப் பதங்கள் கூடி விடுகிறது. சில சமயம் குறைவாக உள்ளது. இதுவே யதார்த்தம்.

    1. Avatar
      IIM Ganapathi Raman says:

      கிருஸ்ணகுமாரின் திண்ணைப்பபின்னூட்டங்களும் தமிழ் ஹிந்து.காமில் எழுதிய கட்டுரைகளும் அவருக்கு இலக்கியத் தமிழ் நன்றாகவே வருமென்பதை ஐயந்திரிபுர காட்டுகின்றன. அவ்வப்போது பேச்சுத்தமிழிலும் களை கட்டுகிறார். எனவே மேலே உள்ள விளக்கத்தை ஒரு பொய்யாகத்தான் எடுத்துக்கொள்ள முடியும்.

      திருப்புகழையும் திருவாசகத்தையும் படிக்கும் இவர் ‘கேழ்வி’ என்றே மீண்டும் மீண்டும் எழுதிக்கொண்டு வருகிறார். ஏற்கன்வே சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. திருவாசகத்துக்கு உருகாதார் ஒருவாசகத்துக்கும் உருகார் எனப்து அதன் தமிழுக்கு சேர்த்துதான். மாணிக்கவாசகரின் தமிழ் கிருஸ்ணகுமாரை அசைக்கவில்லை போலும். என்ன திருவாசகம்! என்ன திருவாதவூரார் !! மலைக்கவேண்டியதிருக்கிறது !!!

      சங்ககாலத்து குயக்கோடனுக்கும் நக்கீரனுக்கும் நடந்த விவாதத்தை இரா. இராகவையைங்கார் ‘சங்க காலம்’ என்ற கட்டுரையில் சொல்கிறார். குயக்கோடன் தமிழுக்கு எதிரி. வடமொழி வெறியன். பாண்டியன் அரசவையில் வீற்றிருந்து தமிழை தாழ்மைப்படுத்திப் பேசியவன்.

      நம்காலத்திலும் குயக்கோடன்களின் எண்ணிக்கை பெருகிக்கொண்டுதான் வருகிறதே தவிர அருகியது போலத் தெரியவில்லை.

  55. Avatar
    Dr.G.Johnson says:

    இந்த மிஷனரிகள் வந்தாலும் வந்தார்கள்

    வேட்டு வைத்தார்கள் நம் கலாச்சாரத்துக்கு

    ” ஆலும் வேலும் பல்லுக்குறுதி ”

    என்பது போய் கால்கேட்

    டூத் ப்ரஶ் பழக்கி விட்டார்கள்!

    …டாக்டர் ஜி. ஜான்சன்.

  56. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    உங்களது கருத்தை வாசிக்கையில்….. இந்த விஷயம் பற்றி எப்போது பேசுகையிலும்…. எனக்குத் தாயுமானவர் என்றொரு அன்பரின் நான் என்றும் மறவாத கருத்து…..தமிழ் ஹிந்து தளத்தில் பதிவான கருத்து நினைவுக்கு வரும்.

    http://www.tamilhindu.com/2011/05/thaandavam-short-story/

    அதை இங்கு நான் பகிர்கிறேன்.

    \ உலகில் இருக்கும் 8 கோடி தமிழர்களும் வடமொழியை கற்றுகொள்ளட்டும் நன்றாக கற்றுகொள்ளட்டும் யாரும் வேண்டாம் என்று கூறவில்லை. அதற்காக அந்த மொழியின் சொற்களையோ உச்சரிப்புகளையோ தமிழில் கலப்பேன் என்று கூறுவது கண்டிப்பாக ஏற்றுக்கொள்ளமுடியாத ஒன்று. வடமொழி மட்டும் இல்லை தற்சமயம் தமிழில் கலந்து வழங்கி வரும் இந்தி, ஆங்கிலம்,உருது,பாரசீகம் போன்ற எந்த அயல் மொழிகளையும் தமிழில் ஏற்று கொள்ள முடியாது என்பது தான் என் பேச்சு.. மதத்தில் கலப்பு ஏற்பட்டு விடகூடாது என்று நினைக்கும் இந்த இடத்தில தான் மொழியிலும் கலப்பு ஏற்பட கூடாது என்னும் வாதத்தையும் என்னால் வைக்க இயலும். \

    இந்தக்கருத்து இந்த அன்பர் அவர்களது ஹ்ருதயத்திலிருந்து வந்த கருத்து. எப்படி நீங்கள் ஹ்ருதய பூர்வமாக உங்கள் கருத்தை தெரிவித்துள்ளீர்களோ அது போல.

    மேற்கண்ட கருத்தில் நான் மிகவும் அழுத்தந்திருத்தமாக கவனித்தது,

    \ வடமொழி மட்டும் இல்லை தற்சமயம் தமிழில் கலந்து வழங்கி வரும் இந்தி, ஆங்கிலம்,உருது,பாரசீகம் போன்ற எந்த அயல் மொழிகளையும் தமிழில் ஏற்று கொள்ள முடியாது என்பது தான் \

    நான் உங்களுக்கு அதி விஸ்தாரமாக உத்தரமளிக்க முனைவதற்குக் காரணமே ஊருக்கு உபதேசம் என்றபடிக்கில்லாது மிக உண்மையுடன் தெளிவான தமிழில் மட்டிலும் உங்களது உத்தரங்கள் அமைந்திருப்பதால். அன்பர் ஜான்சன் மற்றும் ஸ்ரீமான் ஜெயபாரதன்…..இவர்களது மொழிநடையில் கூட அவ்வப்போது சம்ஸ்க்ருத ஆங்க்ல பதங்களின் சேர்க்கை இருக்கும். உங்களது உத்தரங்களில் எனக்குத் தெரிந்துஇல்லை. அப்படி இருந்தாலும் நல்ல ஸ்வேத வஸ்த்ரத்தில் பட்ட கறை போன்று எப்போதாகிலும் இருக்கலாம்.

    நான் இரண்டாம் முறை அடைக்குறியிலிட்ட படிக்கான தமிழ் எழுதுபவர்கள் திருத்தாட்களில் என் சென்னியிருக்கும்.

    மொழியுடன் மொழிகள் கலத்தல் மதங்களுடைய கோட்பாடுகளுடன் வேற்று மதக் கோட்பாடுகள் கலத்தல் என்பது வெவ்வேறு மொழி மற்றும் மதத்தைப் பேணும் சமூஹங்கள் ஒன்றுடனொன்று கலக்கையில் நிகழும் யதார்த்தமான நேர்மையான இயற்கை நிகழ்வு. ஆனால் கலப்பின்மைக்கு சாத்யமே இல்லையா என்று நீங்கள் கேழ்க்கலாம். நிச்சயம் உண்டு. மனதில் உறுதியும் நேர்மையும் மொழியின் மீது காதலும் உள்ள அன்பர்களால் அது சாத்யம் . எனக்குத் தெரிந்து நான் வாசித்தறிந்த படிக்கு ஸ்ரீமான் பாலா அப்படியொரு அன்பர்.

    அன்பர் தாயுமானவரின் உத்தரங்களில் கூட வேற்று பாஷைகளின் பாதிப்பைக் காண நேர்ந்தது என்பதும் நான் சுட்ட வேண்டிய ஒன்று.

    தூய தமிழுக்கும் அமுதத்துக்கும் வேறுபாடும் உண்டோ ஸ்ரீமான். பாலா.

    ஆனால் நான் இத்துடன் விட்டால் அது நேர்மையாக இருக்காது. தமிழுடன் சம்ஸ்க்ருதம் கலக்கும் என்னை நீங்கள் வினவியது போல தமிழுடன் ஆங்க்ல பாஷை கலந்து அது தமிங்கிலமா அல்லது தங்க்ளீஷா என்ற படிக்கு தமிழ்ப் பொன்னிப்புனலையும் ஆங்க்ல சாராயத்தையும் கலந்து எழுதும் அன்பர்களிடம் நீங்கள் எப்போதாவது தூய தமிழில் எழுது என்று வினவியிருந்தீர்களானால் உங்கள் கருத்தைப் போன்று உங்கள் செயல்பாடுகளிலும் உறுதி உண்டு என்று நான் சபாஷ் போடுவேன். இல்லையெனின் உங்களுக்குப் பாதி மார்க்கு தான்.

    என் மொழிநடைக்காக என்னை அன்பர்கள் பலரும் ஏசியது உண்டு, பரிஹாசம் செய்ததுண்டு, புறக்கணித்ததும் உண்டு, விதந்தோதி என்னை ப்ரோத்சாஹப் படுத்தியதும் உண்டு. ஆனால் நான் யாரிடமும் இந்த விஷயத்திற்காகப் பிணக்கு கொண்டது இல்லை. பிணக்கு கொள்ளவும் மாட்டேன்.

    மாறாக தூய தமிழின் பால் கொண்ட காதலால் என் மொழிநடையைக் கடிந்து கொள்ளும் ஸ்ரீமான் பாலா போன்றோர் அவருடைய பாதரக்ஷையைக் கழற்றி என் மண்டையில் இரண்டு போடு போட்டால் கூட அதை பெருமையுடன் ஏற்றுக்கொள்வேன்.

    தங்கள் மொழிநடையில் ஆங்க்லத்தை சகட்டு மேனிக்குக் கலந்து ஆனால் தமிழுக்காக முதலைக்கண்ணீர் வடிக்கும் நாடகமாடிகள் என் மொழிநடையை விமர்சிக்கும் போது கூட மொழிக்கலப்பு விஷயத்திற்காக அவர்களிடம் நான் பிணக்கு கொள்வதில்லை. நாடகமாடிகளின் முதலைக்கண்ணீர் என்று புறந்தள்ளிப்போவேன். அவ்வளவே.

    பீஷ்ம பிதாமஹர் தன் மீது விழுந்த அம்புகளை இது அர்ஜுனன் எறிந்த அம்பு என்று ஒன்றொன்றையும் சுட்டி ஒன்று கூட சிகண்டியினுடையது அல்ல என்று சொல்வாராம்.

    உங்களது கேழ்விக்கணைகள் அது போல் எனக்கு. அர்ஜூனனின் கணை.

    கோடிக்கோடியாக மிஷநரிகள் வந்தாலும் ஹிந்துஸ்தானம் ஆப்ரஹாமிய வசம் ஆகவில்லை. ஆகாது.

    கோடிக்கோடியாக க்ருஷ்ணகுமார்கள் வந்தாலும் ஸ்ரீமான் பாலா அவர்களே…… உங்களைப் போல நேர்மையுடன் தூய தமிழ்க்காதல் கொண்டு தமிழெழுதும் ஒரேயொரு அன்பர் இருக்கும் வரை தமிழின் ஸ்தானம் ஹிமபர்வதத்தின் சிகரத்தில் இருக்கும். இது சத்யம்.

    காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு என்று தமிழில் ஒரு வசனம் உண்டு.

    எத்தனை பேர் பழித்தாலும் இழித்தாலும் என் மொழிநடை எனக்கும் அமுதத்திற்கு குறைந்ததல்ல.

    பின்னும் அன்பர் ஜான்சன் அவர்களுக்கும் ஸ்ரீமான் பாலா போன்று அன்ய பாஷைகள் அறவே கலவாது எழுத ப்ரயாசிக்கலாமே என்று நான் அவச்யம் விக்ஞாபனம் செய்வேன்.

    \ மேலை நாட்டு மொழியும், மதமும், கொள்கைகளும் இங்கு வந்து ஊடுறுவியதைக் குற்றமாகக் கருதும் \

    ஹிந்து மஹாசாகரத்தில் தெளிந்த நீர் மட்டும் கலப்பதில்லை கசடுகளும் கலக்கின்றன. எந்த மொழியினிடத்தும் எந்த மதத்தினிடத்தும் எந்த கொள்கையினிடத்தும் ஒட்டு மொத்த த்வேஷம் என்றும் எனக்கு இருந்ததில்லை. இருக்காது. விதேச விஷயங்கள் சம்பந்தமாக ….. நல்லது எது ….. கெட்டது எது என்று எப்போதும் விழிப்புடன் இருப்பேன். சென்றிடுவீர் எட்டுத்திக்கும் கலைச்செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்குச் சேர்ப்பீர் என்று தமிழ்ச் சான்றோர்கள் பொழுது போகாது சொல்லவில்லை.

    கசடுகள் கலந்தாலும் சாகரம் மாசடையாது. வேறு மொழிகள் கலந்தாலும் தமிழ் தன் தூய்மையில் என்றும் என்றென்றும் உறுதிப்பாட்டுடன் இருக்கும்…..தூய தமிழின் மீது காதலுடைய அன்பர்கள் இருக்கும் வரை.

    இறுதியாக என் கொள்கை

    வங்கள மொழியும் சிங்கத் தமிழும்
    எங்களதென்றிடுவோம்
    கன்னடம் தெலுங்கு கவின் மலையாளம்
    ஹிந்தியும் எங்களதே.

    அன்பின் ஸ்ரீமான் பாலா நீங்கள் எப்போதும் போல் உங்களது அமுத நடையில் தொடருங்கள்.

    நான்…. என்னுடைய ……எனக்கும் என்னைப்போல் பிற பலருக்கும் அமுதமான என் நடையில் தொடருவேன்.

  57. Avatar
    ஷாலி says:

    ஸ்ரீமான்.க்ருஷ்ணாஜி, //ரெவரெண்டு தெரசாள் பதக்கம்// பற்றி எழுதியிருந்தீர்கள். உங்கள் தேவ பாஷைப்படி பரங்கிய வாடிகன் கிரிஜாக்ருஹம் சில மத குருமார்களுக்கு செயின்ட் பதக்கம் அவர்கள் இறந்ததும் கொடுப்பது உண்மைதான். ஆனால் உங்க ஹிந்துஸ்தான் மதத்தில் எப்படி saint பதக்கம் கொடுக்கிறீர்கள்.?
    ஆதனூர் நந்தன் எனும் பறை அடிக்கும் புலையன் அம்பலத்து ஆடலரசனை தரிசிக்க விரும்பினான்.தில்லை வாழ் தீட்ஷிதர்கள் சும்மா விட்டார்களா? அக்கினியில் குளிப்பாட்டி தீட்ஷை கொடுத்துதான் திருநாளைப்போவார் நாயனார் செயின்ட் பதக்கம் கொடுத்தார்கள். தாயுமான சுவாமிகளுக்கும் இராமநாதபுரத்தில் உயிருடன் சமாதி கட்டி தீயை உண்ணக் கொடுத்துதான் இறை ஜோதியில் கலக்க விட்டீர்கள்.வடலூர் வள்ளலார் ஸ்ரீ இராமலிங்க சுவாமிகளும் சோதியில் கலந்த பின்னரே அருட்பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை செயின்ட் பட்டம் கிடைத்தது. க்ருஷ்ண குமார்ஜி சமையத்தில் நெருப்பாற்றில் இறங்கினால் மட்டுமே இருபிறவியாலருக்கு செயின்ட் பதக்கம் கிடைக்கிறது இதிலுள்ள விஞ்ஞான தாத்பரியத்தை மஹாசயர் தான் விளக்க வேண்டும்.
    சுந்தர்.சி. பாஷையில்,…தீயாய் வேலை செய்யணும் குமாரு……என்று சொல்வதை விட…செயின்ட் – சுவாமிகள் பதக்கம் பெற, தீயிலே…. வேகனும்…. க்ருஷ்ண குமாரு!…..என்பது சரிதானே ஜி!

  58. Avatar
    Bala says:

    டாக்டர் ஜான்சன்,
    உயிர், உடல்,பொருட்சேதங்களை நினைத்தாலே நெஞ்சம் கொதிக்கும் காலனியாதிக்கத்தின் கொடுமைகளை முழுக்க அறியாமல் நீங்கள் பேசுகிறீர்கள் என்றே நான் கருதுகிறேன். ஏனென்றால் இவை மலையளவு. காலனியாதிக்கத்தால் மறைமுகமாக ஏற்பட்ட நன்மைகள் கடுகளவு. எந்தக் காரணத்தை முன்னிட்டும் காலனியத்தை நியாயப்படுத்தவே முடியாது.

  59. Avatar
    Dr.G.Johnson says:

    திரு பாண்டியன் அவர்களே, நீங்கள் சொல்வது சரிதான். கழுவக்கூட அவர்கள்தான் கற்றுத் தந்தார்கள். நாம் வலது கையால் சாப்பிடுவதும் இடது கையால் ( பீசசக்கை ) கழுவதும் வழக்கில் கொண்டவர்கள். தண்ணீர் பஞ்சம் உண்டானால் காலையில் பணி படர்ந்த புல்லில் தேய்த்துக் கொண்டோம். அப்படியே கழுவினாலும் குளத்திலும், நீரோடையிலும், ஆற்றிலும் கழுவி அவற்றை அசுத்தப் படுத்தினோம். அதன்மூலம் வயிற்றுப் போக்கு , டைஃப்பாய்ட், காலரா போன்ற நோய்களையும் பரப்பினோம் ( அந்த நீரையே குடித்ததால் ). இடது கையால் கழுவினாலும் அதை சொப்பு போட்டு கழுவும் பழக்கமும் இல்லாமல் இருந்தோம். அந்தக் கையாலேயும் உணவு தயாரித்தோம். இன்னும் தயாரித்துக் கொண்டிருக்கிறோம். இதனால் வயிற்றுப் புழுக்கள் பரவி இரத்தச் சோகையும் பெருகியது. ( இன்றுகூட பரோட்டா போதும் உணவாக பணியாளர்கள் இந்த சரிவரக் கழுவாத மலம் படிந்த கையாலும்தான் மாவு பிசைகின்றனர். அதைத்தான் நாம் உண்டு மகிழ்கிறோம் ). இந்த வகையான கை அலம்பும் முறை தவறு , நன்றாக சோப்பு போட்டு கைகளைக் க்ழுவ வேண்டும் என்று நமக்கு சொல்லித் தந்தவர்கள் அவர்கள்தான். அதோடு வயல்களில் எருவாக மலம் கழிப்பதும், அதன் மேல் காலில் செருப்பு அணியாமல் மிதிப்பதும், கொக்கிப் புழுக்களை பரப்பி இரத்தச் சொகையை உண்டுபண்ணி பலரைக் கொல்கிறது என்று கூறியவர்களும் அவர்கள்தான். வீடுகளில் கழிவறைகள் தேவை என்று இதுபோன்ற பொது சுகாதாரத்தை இந்தியாவில் அறிமுகம் செய்தவர்களும் அவர்கள்தான்! … என்ன செய்வது நண்பரே? நம்முடைய மூளையை நாம் இதுபோன்ற நல்ல காரியங்களில் ஈடு படுத்தாமல் மூட நம்பிக்கைகளிலும் பழக்க வழக்கங்களிலும் இன்னும் பயன்படுத்தி வருகிறோம். அதனால்தான் அவர்களைப்போல் புதிய கண்டங்களைக் கண்டுபிடித்து ( ஆஸ்திரேலியா, கனடா, நியூ சீலந்து, பீஜி, ) அவற்றை நமதாக்க முடியாமல் குண்டுச் சட்டியில் குதிரை ஓட்டிக் கொண்டிருக்கிறோம். அவர்கள் பிடித்து தங்கள் வசமாக்கிக் கொண்ட மலாயா , தென் ஆபிரிக்கா , பீஜி போன்ற நாடுகளுக்கு நாம் கூலிகளாகத்தான் செல்ல முடிந்தது. டாக்டர் ஜி. ஜான்சன்.

    1. Avatar
      paandiyan says:

      நீங்கள் சொல்வது மூளுவதும் தவறு . இத திண்ணையில் ஒரு 5 வருடம் முன்பு என்று நினைக்கின்றான் — எப்படி அலம்ப வேண்டும் என்று ஒரு பாட்டுடன் கட்டுரை வந்தது . உங்கள் வரலாற்று பார்வை முர்‌ரிலும் தவறுகள் கொண்டது . தவறுகளை எங்கள் மீது திணிக்க வேண்டாம் ..

    2. Avatar
      paandiyan says:

      //டைஃப்பாய்ட், காலரா போன்ற நோய்களையும் பரப்பினோம்//

      இதை பாரத்தில் கொண்டு வந்ததா வெள்ளயர்கள்தான். இதை நான் இங்கு சொல்வது இரண்டாவது தடவை உங்களுக்கு இங்கு

    3. Avatar
      புனைபெயரில் says:

      புதிய கண்டங்களைக் கண்டுபிடித்து ( ஆஸ்திரேலியா, கனடா, நியூ சீலந்து, பீஜி, ) அவற்றை நமதாக்க முடியாமல் குண்டுச் சட்டியில் குதிரை ஓட்டிக் கொண்டிருக்கிறோம் –>>>> இதைத் தான் சொல்கிறோம். ஊர் ஊராய் போய் கொள்ளையடித்து, துப்பாக்கி, சிலுவை காட்டி “தமதாக்கி” எதேச்சிகாரத்தை பண்ணிய கும்பல் என்று, வெள்ளையர்களை. குண்டுச் சட்டியில் குதிரை ஓட்டுவது வேறு, அடுத்தவன் வயலில் மேய்வது வேறு…

  60. Avatar
    paandiyan says:

    //ஆங்கிலேயர் ஆட்சி வராவிட்டால், இந்தியா பாகிஸ்தான் போல் ஒரு கஜினிஸ்தான் ஆகியிருக்கும்.//

    எப்படி ? அவர்கள் வந்ததுக்கு அப்புறம் தான பாரதம் பிரிவினை ஆயிற்று ?

    1. Avatar
      சி. ஜெயபாரதன் says:

      பாண்டியனாரே,

      ஆங்கிலக் காலனி ஆட்சி இந்தியாவில் ஏற்படா விட்டால், முகமதியர் சாம்ராஜியம்தானே தொடர்ந்து பெருகி, பூர்வீக இந்துக்களை நசுக்கி, அவரது இஸ்லாமிய மதம் முழுவதும் பரவி யிருக்கும்.

      சி. ஜெயபாரதன்.

      சி. ஜெயபாரதன்.

  61. Avatar
    IIM Ganapathi Raman says:

    மேலே பாண்டியன் எழுதியதையும் இப்படி புனைப்பெயரில் எழுதிய //சீனர்கள், ஜபானியர்கள், பிரஞ்சுக்காரர்கள் என்ன ஆங்கிலத்திலா அறிவு திறமை வளர்த்தார்கள்.? // சேர்த்து ஒன்று சொல்லலாம்.

    திண்ணையில் போடப்படும் பின்னூட்டங்களில் வரலாற்றை விலாவரியா ஆராய முடியாது. ஆராய்ச்சியாளர்களின் முடிவைக் கோடிட்டு மட்டும் காட்டலாம்.. எனவே don’t make sweeping statements.

    இந்தியப்பிரிவினை என்பது பெரிய subject.. அதற்கென கட்டுகட்டாக ஆராய்ச்சி நூலகள் படைக்கப்பட்டிருக்கின்றன்.

    சீனர்கள், ஜப்பானியர்கள், இந்தியர்கள் இப்படி மக்கள் இனவாரியாக, மொழிவாரியாக, நாடுவாரியாக இருக்கின்றனர். எல்லோரும் மனிதர்கள்தான் என்றாலும் சிலபல குணங்கள் அவர்களுக்கு மாறுகின்றன. அம்மாற்றங்களுக்கு பல காரணங்கள். எனவே எல்லாரும் ஒரே குணத்தவர் என்ற்டுப்பது தவறான அடிப்படை.

    காலனி ஆதிக்கத்திற்கு முன், இந்தியா பல குட்டிநாடுகளாகத்தான் இருந்தது. ஒற்றுமையில்லை என்கிறது வரலாறு. சீனாவோ, ஜப்பானோ ஒரே மொழி, ஒரே நாட்டுப்பற்றால் இணைக்கப்பட்டவை. எனவே ஒப்பிட‌ முடியாது.

    1. Avatar
      paandiyan says:

      கருத்து சொன்னவர் ஒரு மிக பெரிய எலுதாளர் . அவரின் கருத்துக்கு நீங்கள் என் ஆஜர் ஆக வேண்டும் இங்கு ??

  62. Avatar
    IIM Ganapathi Raman says:

    மிசுநோரிகள் என்றே நான் எழுதிவருவதைக் கவனிக்க.

    Missionaries என்ற ஆங்கிலச்சொல்லை அப்படியே transliteration பண்ணி எழுதலாம். மருத்துவர் ஜாண்சனும் மற்றாரும் இங்கு பண்ணுவது போல: மிஷநரிகள்.

    அப்படியே கிருஸ்ணகுமாரும் மற்ற கிருத்துவ மத வெறுப்பாளர்களும் எழுதும் போது அச்சொல்லில் உள்ள நரிகள் என்பது அவர்களுக்கு ஒரு அதீத உவப்பைத் தருகின்றதைக் கவனிக்கலாம். வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்பது போல பெயர்ச்சொல்லும் ஆயுதம் போலும்! But it reminds us of children mocking at their rivals whom they cannot cow down, by twisting the proper nouns, thereby hoping to inflict some pain to their rivals. For children, a small slight may hurt deeply

    மிசுநோரிகள் என்பது Missionaries என்ற‌ ஆங்கிலச்சொல்லை தமிழ்வழிப்படுத்தி எழுதுதல். Bank என்ற சொல்லை பாங்கு என்றெழுதுவதைப்போல.Computer கம்ப்யூட்டர் என்றானதைப்போல.

    “உங்கள் தமிழைத்தெரிந்து கொள்ளுங்கள்” பேராசிரியர் பெரியகருப்பன் (தமிழண்ணல் என்று பரவலாக அறியப்படுபவர்) அவர்கள் எழுதிய நூல். தமிழ்ப்படுத்தப்பட்ட சொற்களைப்பற்றி எழுதும்போது அவர் மிசுநோரிகள் என்ற பதம் அருமையான தமிழ்ப்படுத்தல் என்கிறார்.

    //எனக்கு முன்னே சித்தர் பலர் இருந்தாரப்பா
    யானும் வந்தேன்…//

    என்ற பாரதியாரின் தன்னடக்கமான வரிகள் நினைவுக்கு வருகின்றன.. நாம் பிற தமிழறிஞர்கள் சொல்லிச்சென்றதை எடுத்தாள்வதே நல்லது.

    //தன்னேரில்லாத தமிழ்//

    சொல்லியது கம்பன். இல்லாவிட்டால் அப்படிச்சொல்லியதற்காக நம்மை வறுத்தெடுத்துவிடுவார்கள் இன்றைய குயக்கோடன்கள்.

    பாவம் தமிழ்! பரிதாபம் தமிழர்கள். அவர்தம் தாய்மொழியைக்கூட விதந்தோத அவர்களால் முடியவில்லை.

  63. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    \ அவ்வப்போது பேச்சுத்தமிழிலும் களை கட்டுகிறார். எனவே மேலே உள்ள விளக்கத்தை ஒரு பொய்யாகத்தான் எடுத்துக்கொள்ள முடியும். \

    தன் பெயரிலிருந்து ஆரம்பித்து பொய்யைத் தவிர வேறெதும் பேசேன் என ப்ரதிக்ஞை எடுத்துக்கொண்டவர்களுக்கு விளக்கம் பொய்யாகத் தானே தெரியும்.

    \ சங்ககாலத்து குயக்கோடனுக்கும் நக்கீரனுக்கும் நடந்த விவாதத்தை இரா. இராகவையைங்கார் ‘சங்க காலம்’ என்ற கட்டுரையில் சொல்கிறார். குயக்கோடன் தமிழுக்கு எதிரி. வடமொழி வெறியன். பாண்டியன் அரசவையில் வீற்றிருந்து தமிழை தாழ்மைப்படுத்திப் பேசியவன். \

    வாடிகன் ராஜசபைக்கு முகமூடி அணிந்து வீரப்ரதாபத்துடன் சேவை செய்பவர்கள் தமிங்கிலமே தமிழ் என்று பலபலப்பெயர்களில் தமிழ் பற்றி முதலைக்கண்ணீர் விடுவது யாதாகும் என்று பரலோகத்தில் இருக்கும் பரம பிதாவே அறியக்கடவர்.

    ஈயத்தைப் பார்த்துப் பித்தளைகள் இளிக்கலாகாது.

    தமிழ் பற்றிப் பேசுவதற்கு தகுதியுள்ளவர்கள் கலப்பில்லாத் தமிழில் எழுதுபவர்கள். தமிழுக்காக முதலைக்கண்ணீர் வடித்து தமிங்கிலத்தில் எழுதுபவர்கள் அல்ல.

    1. Avatar
      IIM Ganapathi Raman says:

      வாடிகனுக்குக் காவடி தூக்குபவர்கள் தூக்கட்டும். ஈயத்தைப்பார்த்து பித்தளை இளிக்கட்டும். பொய் பேசுபவர்கள் பேசிக்கொள்ளட்டும். நாம் தமிழைப்பற்றி – அஃதாவது திண்ணையில் எழுதப்படும் தமிழைப்பற்றி மட்டும் பேசுவோம். நீங்கள் எழுத மற்றவர்கள் வாசிக்கிறார்கள். அதை நினைவில் வைத்துக்கொள்வது நன்று. தவறாக எழுதுவது வாசகர்களையும் தமிழையும் அவமதித்தல் ஆகும்.

      கேழ்வி என்றெழுதியதில் எழுத்துப்பிழை இருக்கிறது என்பதை ஏற்கனவே எடுத்துக்காட்டியாயிற்று. மீண்டும்மீண்டும் அப்படியே எழுதக்காரணம்?

      தூய தமிழ், சுத்த தமிழ், என்பதெல்லாம் நமக்கு வேண்டாம் சாமி. எளிய தமிழ் போதும். அ. கி.பரந்தாமனாரின் நூலில் பெயர்: எளிய தமிழ் எழுத வேண்டுமா? என்பதுதான். பல்லுடைக்கும் பண்டிதர் தமிழ் எழுத வேண்டுமா? என்று கேட்கவில்லை.

      தமிழிலிங்கிலிஸ் என்றால், என்ன தெரியுமா? எடுத்துக்காட்டு. இப்போ டைம் என்ன சார்? இதுதான். அஃதாவது ஒரே வரியிலே இருமொழியும் கலப்பதுதான் தமிழிங்கிலிசு. அல்லது தங்கிலிச். நான் அப்படிக்கலக்கவில்லையே? Please understand when you make a mistake in Tamil and when it is pointed out to you, it is culture to correct it immediately. Elementary courtesy you gracefully show to your listeners or readers ! உங்களால் முடியும். வீம்புக்காக தமிழைப் பழிக்கிறீர்கள் என்பது என் பார்வை.

      நான் மேலேயெழுதியவற்றை தங்கிலிஸ் எனலாமா? முடியாது. வரிக்குள் ஆங்கிலமில்லை. அது தனியான சொற்றொடராகத்தானிருக்கிறது.

  64. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    \ ஸ்ரீமான்.க்ருஷ்ணாஜி, //ரெவரெண்டு தெரசாள் பதக்கம்// பற்றி எழுதியிருந்தீர்கள். \

    ஆதனூர் நந்தன் எனும் ……blah blah blah

    அன்பர் ஷாலி…. வாதம் ரெவெரெண்டு தெரசாள் பதக்கம் புற்று நோயை குணப்படுத்துமா?

    உத்தரம் உங்களுக்கும் தெரியும் டாக்டர் ஜான்சனுக்கும் தெரியும். சாயிபாபாவின் அத்புதங்களை மட்டும் தானே விக்ஞான பூர்வமாகப் பார்க்கவேணும். ரெவரெண்டுகளுடைய அத்புதங்களைப் பற்றி கேழ்வி கேட்டால் சுவிசேஷிகளும் முகமூடி போட்ட சுவிசேஷிகளும் தங்களுக்குத் தெரிந்த த்வேஷக் கதைகளையே சொல்லி ஏசு ஊழியம் செய்தாகணுமே?

    1. Avatar
      IIM Ganapathi Raman says:

      நல்ல மழுப்பல். ஏனென்றால், ஷாலி சொன்ன கருத்து: ஒருவரை செயிண்ட்ஸ் ஆக்குவதிலும் சாதி பார்க்கிறார்கள் கிருஸ்ண்குமாரின் முன்னோர்கள். நந்தனார் ஒரு ‘ஈனப்புலையன்’ எனவே அவரை எரித்துப் அவனின் ஈனத்தைப்போக்கிவிட்டார்களாம். இது வேறந்த மதத்திலிருக்கிறது என்பதுதான் அவர் கருத்து. இதை மழுப்பலாக்கி, புதுமைகள் விஞ்ஞானப்பூர்வமா என மாற்றுகிறார். அதற்கு என்பதில்:

      அக்காலத்தில் நந்தனாரும் சமயக்குரவர்களும் இன்றைய காலத்தில் செயிண்ட்ஸ் தெரீசாவுக்கு சமந்தான். அஃதாவது எப்படி கத்தோலிக்கர்களும் உரோமன் மதமும் இன்று தெரீசாவைப்பார்க்கிறதோ அதே போல அன்று சம்யக்குரவகளைப்பார்த்தது. இன்றும் இந்து சமயம் – அதாவது சைவம் – பார்க்கிறது. எவரும் அவர்களை செயிண்ட்ஸ ஆக்கவில்லை. காரணம் இந்து சமயத்தில் அப்படி அங்கீகாரம் மத குருமார் செய்ய்வில்லை. அதற்கு காரணம் அங்கு ஒரே மதத்தலைவர். இங்கு தடியெடுத்தவன் எல்லோரும் தண்டலகாரர்கள். ஆனால் இவ்விளக்கம் பொதுமக்களுக்கு (சைவப்பொது மக்களுக்கு)ப் பொருந்தாது. சேக்கிழார் சுவாமிகள் பெரியபுராணம் எழுதி சமயக்குரவர் நால்வரையும் தெய்வ நிலைக்கு உயர்த்திவிட்டார்.

      அப்பர் பாம்புக்கடியில் இறந்த சிறுவனை உயிர்ப்பித்தார். பல்லவன் அவரைச் சுண்ணாம்புக்காளவாயில் உள்ளே தள்ளி எரித்தான். சாகவில்லை. பாறைத்தூணில் கட்டிக்கடலில் எறிந்தான். அவர் மூழ்கிச்சாகவில்லை. கோளறு பதிகம் பாடினார். பிழைத்தார்.

      இதை அபபரே சொல்கிறார்.

      //கற்றுணைப் பூட்டியோர் கடலிற்
      பாய்ச்சினும் நற்றுணையாவது (நல் துணை) நமச்சிவாயமே -//

      //மாசு இல் வீணையும் மாலை மதியமும்
      வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
      மூசு வண்டு அறை பொய்கையும் போன்ற்தே
      ஈசன் எந்தை இணையடி நீழலே//

      என்று பாடியவுடன் அவர் காப்பாற்றப்பட்டார். இப்படியாக மாணிக்கவாசகர் நரியைப்பரியாக்கிய கதையுண்டு. பலபல புதுமைகள் மனிதர்களாகப்பிறந்தவர்கள் செய்ததாக பழுத்த சைவரான கிருஸ்ணகுமார் போன்றவர்கள் நம்பும்போது, பிறமத்தவர் ஏன் நம்பக்கூடாதென்கிறார்? அதற்குமட்டும் விஞ்ஞானப்பூர்வமாகுமாகுமா என்று ‘கேழ்வி’ எழுப்புவது ஏன் சாமி?

      அவருக்குப் பிடித்த பழமொழியில் சொன்னால், ஈயத்தைப்பார்த்து பித்தளை இளித்ததாம்.

  65. Avatar
    Dr.G.Johnson says:

    திரு கிருஷ்ணகுமார் அவர்களே,முதலில் உங்கள் தமிழைத் திருத்திக் கொள்ளுங்கள். உங்கள் சமஸ்கிருதத் தமிழ் படிக்க சகிக்கவில்லை . யாருக்கு தமிழ்ப் பற்று இல்லை? யார் தூய தமிழில் ( மறைமலை அடிகள் சொன்னதுபோல் ) இன்று எழுதிக் கொண்டிருக்கிறார்கள்? தமிழ் நாட்டின் பிரபல எழுத்தாளர்கள் என்கிறீரா ?

    நீங்கள் எழுதுவது ஆங்கிலம் கலந்த கலப்படத் தமிழ்தான். தூய தமிழில் உங்களைவிட சிங்கபூரிலும், மலேசியாவிலும் எழுதும் எழுத்தாளர்கள் எவ்வளவோ மேல்! எதையும் தெரிந்து பேசுங்கள். நான் ஒரு பெண்ணின் புனிதப் பணியைப் பற்றி எழுதினேன். அவரைக் காண மகாத்மா காந்தியே வேலூர் வந்துள்ளார். படமும் இணைத்துள்ளேன். நீங்கள் தொடர்பு இல்லாமல் அழுக்காறு கொண்டு மதம் , மொழி பற்றிய சர்ச்சையில் ஈடு படுவது உங்கள் குறுகிய மத வெறியையே காட்டுகிறது. வேண்டுமானால் மதம் பற்றி தனியாக விவாதிக்கலாமே? மொழி பற்றியும் கூட அவ்வாறே செய்து தூய தமிழில் உரையாடலாமே ? அதன் மூலம் தமிழகத்தில் நிலவும் கலப்புத் தமிழை ஒழித்து மறைமலை அடிகளார் , பரமானந்தர் கூறிய தூய தமிழுக்காக நாம் அனைவரும் வழி வகுக்கலாமே? டாக்டர் ஜி. ஜான்சன்.

  66. Avatar
    Dr.G.Johnson says:

    இந்துக்களும், இஸ்லாமியரும், கிறிஸ்துவர்களும், பெளத்தர்களும், நாத்திகர்களும் வாழும் தமிழகத்தில் ஏன் இந்த மத வெறி உள்ளது? இவர்கள் என்று ஒன்று கூடி வாழ்வர். ஜாதி மத பேதங்கள் என்று ஒழியும்? எல்லோரும் ஒரே இனத்தவர் என்ற உணர்வு என்று மலரும்? வெளி நாடுகளில் வேற்று இன மக்களுடன் தமிழர்கள் சரி சமமாகப் பழகி வாழ்கின்றனர். தமிழகத்தில் மட்டும் ஏன் இந்த அவலம்? இது வெட்கக்கேடு! ஆளும் கட்சியும் எதிர்க் கட்சியும் திராவிடக் கட்சிகளாக இருந்தும் பகுத்தறிவு இன்னும் வளரவில்லையே? உலகளாவிய நிலையில் நாடுகள் எல்லையில்லாமல் தொடர்பு கொள்ளும் இந்த நூற்றாண்டிலும் தமிழகத் தமிழர் நிலை இதுதானா? ….டாக்டர் ஜி. ஜான்சன்.

    1. Avatar
      paandiyan says:

      உங்களைபோன்றோர் தான் காரணம். சிங்கப்பூரில் நீங்கள் எல்லாம் தமிளந்தான் என்று ஒரு கட்டுரை எலுத முடியுமா ? இங்கு என்றால் எல்லாம் கிறிஸ்துவன் என்று ஒரு பொயீ புனைய முடிகின்றது . ஆதாரம் கட்டுபவனை கோமாளி ஆக்க முடிகின்றது . உங்களை திருத்திகொள்ளுங்கள்.

  67. Avatar
    பவள சங்கரி says:

    அன்பின் மரு. ஜான்சன் ஐயா,

    சத்தியமான வார்த்தைகள். நம் தமிழகத்தில் மதப்பிரச்சனை மட்டுமா தலை விரித்தாடுகிறது? சாதிப்பிரச்சனையும்தான் குதியாட்டம் போட்டுக்கொண்டிருக்கிறது? நாட்டில் செப்பனிட வேண்டிய பிரச்சனைகள் எத்தனையோ இருக்கிறது. இப்படி சாதி, மதம் என்று சண்டை போட்டுக்கொண்டு நம் அரிய நேரத்தைத் தொலைப்பதோடு, எத்துனைப் பேரை மன உளைச்சளுக்கு உள்ளாக்குகிறோம் என்பதை அறியாமல் தொடர்ந்து பல பெயர்களில் வந்து வேதனைப்படுத்துபவர்களை என்ன சொல்வது? கற்றோர் சபையிலேயே இப்படி ஒரு நிலை என்றால் அடித்தட்டு மக்கள் அடித்துக்கொண்டு மாய்ந்து கொண்டிருப்பதை எப்படி குறை சொல்ல முடியும். எந்த ஒரு விழிப்புணர்வும், மனித நேயமும், நம் சக மனிதர்கள் என்ற ஒரு சாதாரண இரக்கமோ கூட இல்லாமல் சொல்லம்புகளால் வேதனைப்படுத்துவர்களை என்ன சொல்ல முடியும்? காலம்தான் பதில் சொல்ல முடியும்? நம் இளைய சமுதாயத்தினரை நாமே தவறாக வழிநடத்த காரணமாகிறோம் என்று வேதனையாக உள்ளது. பொழுதுபோக்கிற்காக சர்ச்சையை வளர்ப்பதை விட்டு ஆக்கப்பூர்வமான வழிகளில் நம் வாதம் தொடர்ந்தால் எத்துனை பயனுள்ளதாக அமையும்?

    1. Avatar
      புனைப்பெயரில் says:

      சத்தியமான வார்த்தைகள், பிற நாடு இனத்திற்கும் ஒத்து வரும் என்று நினைக்கிறேன். மலேசியாவில் தமிழர்கள் ரோட்டுக்கு வந்து போராடி கொடுஞ்சிறையில் வாடுவது ஏன் என்று திரு.ஜான்சனிடம் கேட்டுச் சொல்ல முடியுமா? அங்கு இன வித்தியாசம் இல்லை என்று சொல்ல முடியுமா? சௌதி அரேபியாவில் இஸ்லாமியர்களுக்குள்ளேயே வேற்றுமை நிலவுவது தெரியும் என்று நினைக்கிறேன். சியா சுன்னி என்பது ஒற்றுமையுடன் குறீயீடா இல்ல பாகுபாடா? இரண்டாய் கிழிந்து கிடக்கும் லெபனனின் காரணம் முஸ்லீம் கிறிஸ்துவ பாகுபாடு தானே? சரி பாகுபாடே வேண்டாம் என்றால் பேசாமால் உலகம் அனைத்தையும் ஒன்றாக்கிடலாமே? சரி ஜாதி இல்லயென்றால், தாங்கள் உங்களின் குறியீடாக இல்லை பழம் பெருமை குறியீடாக ஜாதி சொல்வதில்லையா? எதற்கு வீடு என்று ஒரு வேறுபாடு… பேசாம சத்திரமும் மரத்தடியும் என்று வாழலாமே..? அம்மணி, அப்படித்தான் என் மூதாதையர் இந்தியக் காடுகளில் வாழ்ந்தார்கள். சில்க் பாதையென்று வரலாறு படியுங்கள்… அதன் நுனி பிடித்து வந்தவன் இந்த தேசத்தை , வெகுளிகளை வேட்டையாடிய வரலாறு படியுங்கள். மேட்டுக்குடியில் இலக்கியம் என்று கதைப்பது , டிரட் மில்லில் இடுப்புச் சதை குறைய ஓடுவது மாதிரியான விஷயம். எங்களுக்கு இலக்கியம் உழைக்கும் வர்க்கம் ஓடுவது மாதிரியான விஷயம். வார்த்தைகளில் நாங்கள் காட்டுவது முட்களை அல்ல, துப்பாக்கி, பீரங்கி என்று கண்டுபிடித்து உலகை கொள்ளையடித்த இனத்திற்கெதிரான சாத்வீக ஆயுதம். உரைத்தால் வலிக்கும். இதோ இன்றும் என் தேசம் யோகா, தியானம் என்று அள்ளித் தருகிறது. சாதாரண தோப்புக்கரணத்தை கூட அவர்கள் புது கண்டுபிடிப்பாய் இணையத்தில் போடுவது பாருங்கள். எங்கள் சாமி எல்லாம் கருப்புத் தான். ஆனால், எங்களுள் இறங்க்கும். அது மூட நம்பிக்க அல்ல.. இங்கிருந்து கற்ற பாபா விஷயத்தை, அப்பமும், மீனும் பங்கிட்டார் என்றால், தொட்டால் தொழு நோய் போனதென்று நம்பினால் அது விஞ்ஞான பூர்வ விஷயம். அதே நம்ம மாடசாமியோ பாபாவோ என்றால் ஏமாற்று. நித்தியின் கால்த்தில் மீடியா ஸ்ட்ராங். ஜோஸபின் காலத்தில் பெயிண்டிங் தான், அதற்கு ஒரு டாவின்சி கோட் வரை காத்திருக்க வேண்டியிருக்கிறது. வரலாறு திரிப்பதை எதிர்த்தால் ஆக்கப் பூர்வமில்லை என்ற புரிதலை என்ன சொல்ல? உங்கள் ஆதர்ச பாலகுமாரனிடம் கேளுங்கள் மிஷனரி அட்டூழித்தை. அவரே ஒரு கதையில், திறந்த பால்வாடி, பெயர் மாற்றச் சொல்லி அடுத்த நாள் சொன்னது. என்று அழகாய் சொல்லியிருப்பார். அதென்ன கற்றோர் சபை… அனுபவ சபை என்று ஒன்று உள்ளது. கற்பது என்பது ராணிமுத்த தர நாவல்களை அல்ல… எரிக்வான் டானிகன், கார்ல்சாகனும் தான். ஏன் அய்யா நுட வைத்தியத்தை வியப்பாரம், ஆனால் கெமிக்கல் வைத்தியத்தை கொண்டாடுவாரம். நமக்கு எதையும் சந்தைப் பொருளாதாரமாக்கும் மன நிலை கிடையாது. பரதேசியில் டீக்காக இந்த மலை வளங்களை அழித்த வெள்ளையன் உஙக்ளுக்கு மகான், அவர்களுக்கு தங்கள் நிலை வளமாக்க முடிந்ததால் ஜால்ரா அடிப்பவர்கள் தேவ தூதர்கள். மூட நம்பிக்கை எனும் திரு.ஜான்சன சாத்தான்கள், பாவிகள் பற்றி சொல்ல வேண்டும். உன்னுள் பார், நீயே கடவுள் என்று அற்புத அர்த்தம் புரிய தெளிந்த நிலை வேண்டும். வயிற்றில் மலம் சுமக்கும் கூட்டம், வெளிக்குப் போக அவன் கற்றுக் கொடுத்தான் என்கிறது. வெள்ளைக்காரன் மெகிக்கல் போட்டு உணவு படைத்தவன், இன்று இயற்கை விவசாயத்திற்கு நம் முன்னோர் போல் கழிவு மேலாண்மை செய்கிறான். மல்லாந்து படுத்துத் துப்ப வேண்டாம். உங்கள் தனி மனித லௌதீகத்திற்கு காட்டிக் கொடுப்பது சரியென்று படலாம். என்ன செய்ய எங்களுக்கு வாஞ்சிநாதனும் பார்தியும் தான் கடவுள்கள்.

  68. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    \ யார் தூய தமிழில் ( மறைமலை அடிகள் சொன்னதுபோல் ) இன்று எழுதிக் கொண்டிருக்கிறார்கள்? தமிழ் நாட்டின் பிரபல எழுத்தாளர்கள் என்கிறீரா ?\

    அன்பர் பாலா மற்றும் அவரைப் போன்று பலர்.

    இந்த தளம் மட்டுமின்றி பல தளங்களிலும் அன்பர் பாலா அவர்கள் எழுதுவதை நான் வாசித்துள்ளேன். அன்பர் தாயுமானவர் சொன்னபடிக்கு வேறெந்த பாஷையும் கலவா தூய நடை அவருடையது.

    அதையடுத்து நான் மிகவும் கூர்ந்து வாசிப்பது அன்பர் ஸ்ரீ ஜெயபாரதன் (மிக நுட்பமான விக்ஞான வார்த்தைகளுக்கு தமிழீடு (நன்றி – காவ்யா) கொடுக்கும் இவரது வ்யாசங்கள். அடுத்து தங்களது வ்யாசங்களையும் நான் கூர்ந்து வாசிப்பதுண்டு. காரணம் மிகக் குறைவாக மாற்று பாஷைப் பத ப்ரயோகங்கள் அதில் இருப்பது.

  69. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    \ உங்கள் சமஸ்கிருதத் தமிழ் படிக்க சகிக்கவில்லை . \

    பலருக்குப் பிடித்தும் உள்ளது. உங்களுக்குப் பிடிக்கவில்லை.ம்ஹும் சகிக்கவில்லை.அது சம்பந்தமாய் எனக்குப் பிணக்கேதுமில்லை தங்களுடன். ஆனால் இது என் மொழிநடை. காக்கையும் குயிலும் கூவுவதும் சிம்ஹமும் வ்யாக்ரமும் உறுமுவதும் அடுத்தவர் இதைப் புகழ்கிறார்களா இகழ்கிறார்களா என்று இல்லை. அது அவற்றின் இயல்பு அதனால். அது போல் என் மொழிநடை என் இயல்பு.

    பத்து லக்ஷணத்தனுக்கு நித்யனுக்கு மங்களம்
    பரம பதத்தனுக்கு சுத்தனுக்கு மங்களம்
    காரோன் அனுகூலனுக்கு கன்னி மரி சேயனுக்கு
    கோனார் சஹாயனுக்கு கூறு பெத்தலேயனுக்கு

    சீரேசு நாதனுக்கு ஜெயமங்களம் ஆதி திரியேக நாதனுக்கு சுபமங்களம்

    ஸர்வ லோகாதிப நமஸ்காரம் ஸர்வ ச்ருஷ்டிகனே நமஸ்காரம்
    தரைகடலுயிர் வாழ் ஸகலமும் படைத்த தயாபர பிதாவே நமஸ்காரம்

    இது உங்களுக்குப் பிடிக்கும். இதை நீங்கள் சகிக்கவில்லை என்று சொல்ல மாட்டீர்கள். சரியா?

    தமிழ், சம்ஸ்க்ருதம், ஹிந்தி, பஞ்சாபி, ஆங்க்லம் – எந்த பாஷையின் பாலும் எனக்கு த்வேஷம் இல்லை.

    உங்களுக்கு சம்ஸ்க்ருதத்தின் பால் அல்லது தமிழும் சம்ஸ்க்ருதமும் கலந்து எழுதப்படும் நடையின் பால் த்வேஷம் இருக்கலாம். எதையும் த்வேஷிப்பது அவரவர் ஸ்வபாவம்.

  70. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    \ நீங்கள் எழுதுவது ஆங்கிலம் கலந்த கலப்படத் தமிழ்தான். \

    பலர் என்னுடைய மொழிநடையில் இருக்கும் சம்ஸ்க்ருதத்தை மட்டிலும் சுட்டுவார்கள். பலர் இதை மணிப்ரவாளம் (தமிழ் – சம்ஸ்க்ருதம்) கலந்த நடை என்று சொல்வர். நீங்கள் சொன்னபடி ஆங்க்லமும் என் மொழிநடையில் உண்டு. நான் பழகி என் நடைமுறை வாழ்க்கையில் ஒரு பாகமாகிய உர்தூ சொற்களும் என் மொழிநடையில் உண்டு. என் மொழிநடையைக் குறிக்கையில் நான் இதை கலப்பு மொழிநடை என்று மட்டிலும் அடையாளப்படுத்துகிறேன்.

    தூய தமிழ் எனக்குப் பரிச்சயமானதே. ஆயினும் தினமும் நீங்கள் நாலு மொழி பேசி தமிழ் பேசும் வாய்ப்பு அதில் சொல்பம் — பின்னர் நீங்கள் வாசிப்பது மணிப்ரவாளம் என்றால்…. மொழிநடையின் பாதிப்பு எப்படி இருக்கும் என்பது எங்களைப் போன்றோருக்கே புரிந்து கொள்ள முடிந்தது. எங்கள் மீது கல்லெறிபவர்களுக்குப் புரியாதது. குறிப்பாகப் பெயர்ச்சொற்கள்.

    என் வ்யாசங்கள் எழுதப்பட்ட பின்பு மறுமுறை மொழிநடைக்காக மீள்வாசிப்பு செய்யப்பட்டு சீர்செய்யப்படுவதால் சம்ஸ்க்ருத பதங்கள் மாற்று பாஷைப் பதங்கள் குறைவாக இருக்கும்.

    துரித கதியில் தட்டச்சப்பட்டு பதியப்பெறும் என் உத்தரங்களில்…..துரிதமாக அவை தட்டச்சப்படுவதால் சில சமயம் மாற்று பாஷைப் பதங்கள் மிகுந்தும் சில சமயம் குறைந்தும் இருக்கும்.

    அடுத்தவருக்கு அவை புரிய வேண்டும் என்பது என் முயற்சியே. அவை புரிகின்றன என்பதும் எனக்குத் தெரியும். அன்பர் ஜெயபாரதன் அவர்கள் எழுதிய வ்யாசத்திற்கு மறுப்பாகி இரண்டு பாகங்களான என் வ்யாசத்திற்கு 500 க்கும் மேற்பட்ட உத்தரங்கள் என் மொழிநடை அடுத்தவருக்குப் புரிவதில்லை என்பது தவறு என்பதை நிர்த்தாரணம் செய்கிறது.

  71. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    \ நான் ஒரு பெண்ணின் புனிதப் பணியைப் பற்றி எழுதினேன். அவரைக் காண மகாத்மா காந்தியே வேலூர் வந்துள்ளார். படமும் இணைத்துள்ளேன். நீங்கள் தொடர்பு இல்லாமல் அழுக்காறு கொண்டு மதம் , மொழி பற்றிய சர்ச்சையில் ஈடு படுவது உங்கள் குறுகிய மத வெறியையே காட்டுகிறது. \

    கல்லெறிந்து விட்டு ஓடுவது என் வழக்கம் அன்று. அது உங்கள் வழக்கம்.

    சாயிபாபாவின் அத்புதங்களை விக்ஞானத்துக்கு உட்படுத்த முனைந்து ( அதில் ஒரு மேட்டிமைத் தனத்தைக் காண்பித்து) புனித ரெவெரெண்டு தெரசாளுடைய பதக்கம் புற்று நோயைக் குணப்படுத்தும் என பரங்கிய வாடிகன் கிரிஜாக்ருஹம் பறைசாற்றியதை நீங்கள் கண்டும் காணாமல் போவது மாற்று மதத்தைப் பகடி செய்யும் உங்கள் போக்கை காண்பிக்கிறது.

    மதிப்பிற்குறிய ஐடா அம்மையை குறைவாக என் உத்தரங்களில் சொல்லவில்லை. தங்களுக்கு மாற்றுக் கருத்து இருக்குமானால் நான் குறைவாகப் பேசிய என் வாசகங்களைச் சுட்டவும். வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று புளுகக் கூடாது. என்னுடைய எந்த வாசகத்தில் ஐடா அம்மையை நான் இகழ்ந்துள்ளேன் என குறிப்பாகப் பகிரவும்.

    மதம் பற்றிய சர்ச்சையில் நான் ஈடுபடவில்லை.

    மாறாக, அன்பர் ஜெயபாரதன் ஐடா அம்மையை புனித ரெவரெண்டு தெரசாள் அவருடன் ஒப்பிட்டார். அது தவறு என்பது என் நிலைப்பாடு. ஏன் தவறு என்பதற்கு நான் 3 காரணங்கள் கொடுத்துள்ளேன். என் ஒவ்வொரு உத்தரங்களிலும் நான் மாற்று மதத்தை மதிப்பதை மிகத் தெளிவாக சுட்டியுள்ளேன்.

    மொழி பற்றிய சர்ச்சையில் நான் ஈடுபடவில்லை. மொழி நடை பற்றிய விமர்சனத்துக்கு பதில் அளித்துள்ளேன். எனக்கு எந்த பாஷையின் மீதும் எந்த மொழிநடையின் மீதும் (தமிங்கிலம் உட்பட) த்வேஷம் கிடையாது. ஆனால் உங்களுக்கு மொழிகளின் மீது த்வேஷத்தை வெளிப்படையாக பகிர்ந்துள்ளீர்கள்.

    எனக்கு மதவெறி என்று தாங்கள் குறிப்பிடுவது உங்கள் அழுக்காறு காரணம் கொண்டே அன்றி ஆதாரம் சார்ந்து அல்ல. என்னுடைய எந்த வாசகத்தில் நான் மதவெறி கொண்டு பேசினேன் என்று நீங்கள் ஆதர பூர்வமாக தெரிவித்தால் அன்றி…. இது காரணம் இன்றி கல் வீசும் போக்கு என்று கண்டிப்பாகச் சொல்வேன்.

    அன்பர் ஜெயபாரதன் அவர்களின் மதவெறியை அவரது ஒவ்வொரு நிலைப்பட்டையும் எடுத்து விளக்கி வரிக்கு வரி விமர்சனம் செய்துள்ளேன். உங்களுடைய நிலைப்பாடுகளை மதவெறி என்று சொல்ல மாட்டேன். ஆயினும் மாற்று மதத்தை மட்டமாக மதிக்கும் போக்கு உங்களிடம் காணப்படுகிறது.

    ஏசு என்ற தேவகுமாரனின் அத்புதங்களை க்றைஸ்தவர்கள் போற்றுவதை நான் மதிக்கிறேன் என பல நூறு முறை இந்த தளத்தில் தெரிவு படுத்தியுள்ளேன். ஆனால் ஏசு என்ற நபர் சரித்ரத்தில் இருந்தார் என்றால் கண்டிப்பாக ஆதாரம் கேழ்ப்பேன். இதை மதவெறி என்று சொல்வது தான்……மட்டற்ற மதவெறி

    என்னுடைய வாசகத்தில் எந்த வாசகம் மதவெறி பேசுகிறது என்று குறிப்பிட்டுச் சொல்லவும். போகிற போக்கில் கல்லெறிந்து விட்டு ஓடுவதானால் மட்டும் வெற்றாக என் நிலைப்பாடு மதவெறி என்று கூசாது பொய் சொல்லி என் எந்த வாசகங்களில் அவை ப்ரதிபலிக்கின்றன என்று சொல்லாதிருக்க முடியும்

  72. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    \ மொழி பற்றியும் கூட அவ்வாறே செய்து தூய தமிழில் உரையாடலாமே ? அதன் மூலம் தமிழகத்தில் நிலவும் கலப்புத் தமிழை ஒழித்து மறைமலை அடிகளார் , பரமானந்தர் கூறிய தூய தமிழுக்காக நாம் அனைவரும் வழி வகுக்கலாமே? டாக்டர் ஜி. ஜான்சன்.\

    எனக்கு மொழிக்கலப்பு பற்றி எந்த வ்யாகூலமும் கிடையாது. அதே சமயம் கலப்பில்லாத மொழிநடையில் எழுத வேண்டும் என்று ஆர்வம் உள்ளவர்களை நான் மிகவும் மதிக்கிறேன். என் மதிப்பு அடுத்தவர்களுடைய நேர்மையான நிலைப்பாட்டில் உள்ளது. உண்மையில் உள்ளது. நான் மிகவும் வெறுப்பது பொய்மை. மட்டற்ற லஜ்ஜையற்ற பொய்மை. கூச்ச நாச்சமில்லாத பொய்மை.

    மொழியில் கலப்பு மதத்தில் கலப்பு போன்ற விஷயங்கள் பலகோடி மக்கள் புழங்கும் இன்றைய லோக வ்யவஹாரத்தில் சாத்யமில்லாத விஷயம் என்பது என் நிலைப்பாடு. இஸ்லாத்தில் ஹிந்து வழிபாட்டு முறைமைகள் ஹிந்து மதத்தில் இஸ்லாமிய வழிபாட்டு முறைமைகள் அது போலவே க்றைஸ்தவத்திலும் என இது நீளூம். ஆனால் தூய்மையான கலப்பில்லாத மொழி மற்றும் மத ஒழுக்கங்களுக்கும் சாத்யம் அவச்யம் உண்டு.

    நேர்மையுடன் முனைகையில். உண்மையுடன் ஒழுகுகையில். என்னால் என் வ்யாசங்களில் அதன் சாத்யத்திற்கு முனைய இயலும் (முற்றிலுமாக என்பது நான் பொய் சொல்வதாக அமையும்). என் உத்தரங்களில் இது அசாத்யம்.

    உங்களுக்கு உண்மையில் கலப்பில்லாத் தமிழில் பிடிமானம் இருந்தால் முதலில் நீங்கள் களைய வேண்டியது உங்கள் பெயர். மற்றும் டாக்டர் என்பதற்குப் பதிலாக மருத்துவர் என்ற அடைமொழி.

  73. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    \ இந்துக்களும், இஸ்லாமியரும், கிறிஸ்துவர்களும், பெளத்தர்களும், நாத்திகர்களும் வாழும் தமிழகத்தில் ஏன் இந்த மத வெறி உள்ளது? இவர்கள் என்று ஒன்று கூடி வாழ்வர். ஜாதி மத பேதங்கள் என்று ஒழியும்? \

    எல்லா மதங்களையும் மதிக்கும் போக்கு என்று வருமோ அன்று அது சாத்யம். இணையத்தைப் பொறுத்த வரை அது அவரவர் எழுத்தில் ப்ரதிபலிக்கும். என் எழுத்தில் மாற்று மதத்தை மதிக்கும் ஒவ்வொரு வாசகத்தையும் என்னால் பட்டியலிடமுடியும். ஹிந்து மத வெறி கொண்டு எழுதுபவர் கருத்துக்களை க்றைஸ்தவர்கள் கூடிமகிழும் போக்கு மதவெறிக்குக் கண்டிப்பாக அடிகோலும். அதானும் ஹிந்து மதத்தை முனைந்து இகழ்ந்து மற்றவர்களையும் அவ்வாறு இகழ்வதற்குத் தூண்டும் ஸ்ரீ ஜெயபாரதன் போன்றோரும்……… மற்றவர் ஹிந்து மதத்தை இகழ்கையில் ஸ்ரீமான் அண்ணத்துரை போன்றோர்களின் ஹிந்து மத இகழ்ச்சி புத்தகங்களைப் பரிந்துரை செய்யும் தங்கள் நிலைப்பாடு கொண்டோர் உள்ளவரை மத ஒற்றுமை என்பது தமிழகத்தில் கானல் நீர் தான் அன்றோ?

    \ ஆளும் கட்சியும் எதிர்க் கட்சியும் திராவிடக் கட்சிகளாக இருந்தும் பகுத்தறிவு இன்னும் வளரவில்லையே? \

    தமிழகத்தில் ஹிந்து மதத்தைப் பழிப்பது என்று ஆரம்பித்ததே த்ராவிடக் கட்சிகள் தானே. அதற்கு தூபம் போடுவது க்றைஸ்தவ அமைப்புகள் தானே. ஏசுபிரானின் மனைவி மக்தலீனாள் என்ற பெண்மணியை அடையாளப்படுத்த ஜெனாப் சுவனப்ரியன் முனைகையில் —- மதத்தை முன்னிறுத்தி — இஸ்லாமிய க்றைஸ்தவ க்ரந்தங்கள் அவ்வாறு கூறுவதில்லை —- ஆதலால் அவ்வாறு செய்யாதீர் என்று மறுத்தது நான் என்பதை மறவாதீர்.

    அதே சமயம் ஏசு என்று ஒரு நபர் சரித்ரத்தில் இல்லை என்பதில் நான் படித்தறிந்த படிக்கு எனக்கு திண்ணம் உள்ளதால் இல்லாத ஒரு நபருக்கு மனைவி என்பதும் இல்லாமையே என்ற நிலைப்பாடும் எனக்கு உண்டு.

    இதைப் பகுத்தறிய முனைந்தால் பகுத்தறிவு என்றால் என்ன என்று விளங்கும். பகுத்தறிவு என்று உச்சாடனம் செய்வதால் அல்ல.

  74. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    \ உலகளாவிய நிலையில் நாடுகள் எல்லையில்லாமல் தொடர்பு கொள்ளும் இந்த நூற்றாண்டிலும் தமிழகத் தமிழர் நிலை இதுதானா? \

    உங்கள் எல்லா வ்யாசங்களிலும் க்றைஸ்தவத்தை ஜபர்தஸ்தியாக நுழைக்கிறீர்கள் என்று சொல்ல மாட்டேன். ஆனால் பல வ்யாசங்களில் க்றைஸ்தவ மேட்டிமைத்தனம் வெளிப்படுகிறது. அதைக் கூடக் குறையகக் சொல்லமாட்டேன். ஆனால் இந்த வ்யாசத்தில் எழுதப்பட்ட ஹிந்து, முஸல்மாணியர் பற்றிய நிகழ்வு தவிர்க்கப்பட்டிருக்கலாம். அது உண்மை தானா என்பதற்குத் தரவு ஏதும் உள்ளதா என்று நான் கேட்டதற்குத் தாங்கள் ஒரு நூலை மட்டும் குறிப்பிட்டிருந்தீர்கள். தரவில்லா விஷயங்களை மதம் சார்ந்து (அதுவும் இகழ்ச்சியாக சொல்ல முனைதல்) சமநிலைப்பாடு உடையோரின் நிலைப்பாடு.

  75. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    அன்பர் ஜான்சன், ஒன்றை அழுத்தமாக நினைவில் வையுங்கள்.

    நான் எதிர்கொள்வது உங்கள் நிலைப்பாடுகளை. நான் மிகவும் மதிப்பது உங்கள் மருத்துவ ஈடுபாடு உங்கள் மருத்துவ அனுபவங்களை பொதுஜனங்களுடன் பகிரும் போக்கு.

    என் எழுத்துக்களில் (மொழிநடை தவிர்த்து) குறிப்பாகத் தாங்கள் ஏதும் குறை கண்டால் நிச்சயம் குறிப்பிட்ட வாசகத்தை தெளிவாகக் குறிப்பிட்டு என் குறையைத் தெரிவிக்கலாம். தவறு என் பக்கம் இருந்தால் அவச்யம் என்னைத் திருத்திக்கொள்ள முயற்சிப்பேன். வாஸ்தவமான குறை சுட்டப்படுவதை மகிழ்வுடனேயே ஏற்று என்னைச் சரி செய்ய முயல்வேன்.

    நான் மற்றவர்களை பொதுப்படையாக அன்றி மிகக்குறிப்பாக அவர்களுடைய குறிப்பிட்ட வாசகங்களைச் சுட்டியே குறைகளைச் சொல்வேன். வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று போகிற போக்கில் பொழுதுபோகாதவன் செய்வது படி அன்று.

  76. Avatar
    punaipeyaril says:

    வெளி நாடுகளில் வேற்று இன மக்களுடன் தமிழர்கள் சரி சமமாகப் பழகி வாழ்கின்றனர் –> JOKE of this thread.

  77. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    \ நீங்கள் தொடர்பு இல்லாமல் அழுக்காறு கொண்டு மதம் , மொழி பற்றிய சர்ச்சையில் ஈடு படுவது உங்கள் குறுகிய மத வெறியையே காட்டுகிறது. \

    நான் மதம் பற்றிய சர்ச்சை எதிலும் ஈடுபடவில்லை. உங்கள் வ்யாசத்தின் நாயகி ஐடா அம்மையாரின் ஒப்பற்ற பணி மதம் சாராதது. அதைக் களங்கப் படுத்துமுகமாக புனித ரெவரெண்டு தெரசாளுடைய பணியுடன் ஐடா அம்மையின் பணியை ஒப்பிட்டு உங்களுக்குப் பொன்னாடை போர்த்திய மதவெறி கொண்ட உங்கள் நண்பர் ஸ்ரீமான் ஜெயபாரதன் அவர்களுடைய கருத்தை கள்ள மௌனத்துடன் பொன்னாடை போர்த்தியதற்காக நீங்கள் ஏற்றுக்கொண்டது தவறு என்பதை இடித்துரைப்பது நேர்மையான நிலைப்பாடு. அதற்கான காரணங்களைச் சொல்லுமுகமாக மட்டிலும் புனித ரெவரெண்டு தெரசாளின் பணி எப்படி ஐடா அம்மையின் பணியுடன் வேறுபட்டது என்பதனை பகிர்ந்துள்ளேன். ரெவரெண்டு தெரசாளின் சேவையை சேவையன்று என்று சொல்லவில்லை. ஐடா அம்மையின் பணியுடன் ஒப்பிடுகையில் புனித ரெவரெண்டு தெரசாளின் பணி எப்படி வேறுபட்டது என்பதனை பகிர்ந்துள்ளேன்.

    புனித ரெவரெண்டு தெரசாளின் பதக்கம் புற்று நோயைக் குணப்படுத்தும் என்று க்றைஸ்தவர்கள் நம்பினால் அந்த மத நம்பிக்கையை நான் மதிக்கிறேன் என்று கூடத் தெளிவாக என் உத்தரத்தில் தெரியப்படுத்தி உள்ளேன்.

    விவாதம் நம்பிக்கை சார்ந்தது அன்று. நீங்கள் சாயிபாபா பற்றி மேட்டிமைத்தனத்துடன் விக்ஞானம் பேசி அதே மேட்டிமைத் தனம் இங்கு செல்லுபடியாகுமா என்பதே விவாதத்திற்கானது.

    தெரசாள் பற்றிய அத்புதம் நம்பிக்கை சாயிபாபா பற்றிய விவாதம் விக்ஞான பூர்வமானதா என்ற உங்களது முரண் தான்…. என் ஆள் யோக்யம் அடுத்தவன் அயோக்யன்….. என்று பலபலப்பெயர்களில் ஒளிந்து எழுதும் உங்கள் நண்பர் சொன்னதன் சாரம்….. உங்களுக்கு வைத்த வேட்டு அடுத்தவனுக்கு வைத்தது போன்று…..அதை விதந்தோதி நீங்கள் மகிழ்ந்த அவலத்தை என்னென்று சொல்வது?

    இப்போது சொல்லுங்கள் எங்கே என் பார்வையில் மதவெறி.

    உங்களது கருத்துக்களில் உள்ள ஓட்டைகளைச் சுட்டிய அன்பர் ஸ்ரீமான் புனைப்பெயரில் மற்றும் ஸ்ரீமான் பாண்டியன் போன்றோரின் நிலைப்பாடுகளில் உள்ள ந்யாயங்களை அறவே புறம் தள்ளி உங்களுடைய கருத்துக்களுடன் அவர்கள் வேறுபடுகிறார்கள் என்பதற்கு மட்டிலும் அவர்களுடைய கருத்துக்களை மதவெறி கொண்டவை என்று முத்திரை குத்துவது உங்களது காழ்ப்பின் பாற்பட்டது. உங்களுடைய கருத்துக்களை அடுத்தவர் மறுத்தால் அதில் உள்ள ந்யாயங்களைப் பாருங்கள். முத்திரை குத்துவது புறமுதுகிட்டோடுபவரின் முதல் நிலைப்பாடு.

    உங்களது காலனியாதிக்க அடிமை மோகம் ஆங்க்ல மருத்துவம் பற்றி அன்பர் ஸ்ரீ புனைப்பெயரில் சுட்டிய ந்யாயமான குறைகளுக்கு பதிலளிகாது அவரை முத்திரை குத்த முனைதல் அவரை மதவெறியர் என்று சொல்லுதல் வெறும் காழ்ப்பின் பாற்பட்டு மட்டிலும் அமையும்.

    நீங்கள் விதந்தோதும் மறைமலையடிகளுடன் தமிழ் நூற்களில் சம்ஸ்க்ருத கலப்பு உள்ளது என்ற வாதிட்ட பண்டிதமணி ஸ்ரீமான் கதிரேச செட்டியார் பெருந்தகை அவர்களின் கேழ்விகளுக்கு மறுப்பு சொல்லத் தெரியாது…… ஆத்திரத்தில் மேஜையைக்குத்திய உங்களது ஆதர்சர் மறைமலையடிகளின் போக்குக்கும் உங்கள் போக்குக்கும் வித்யாசம் இல்லை. மறைமலையடிகளின் இது போன்ற அடாவடி நாடகப் போக்கைக் கண்டு தோழர் ஜீவா அவர்களும் அவரிடமிருந்து விலகிப் போனது சரித்ரம்.

    அடுத்தவர் கருத்தை மிகக் கூர்மையுடன் சமர் செய்து சொல்லப்பட்ட கருத்தில் கவனம் செலுத்தி ஏற்க அல்லது மறுக்க முயலுங்கள். do not indulge in red herring tactics.

  78. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    \ எந்த ஒரு விழிப்புணர்வும், மனித நேயமும், நம் சக மனிதர்கள் என்ற ஒரு சாதாரண இரக்கமோ கூட இல்லாமல் சொல்லம்புகளால் வேதனைப்படுத்துவர்களை என்ன சொல்ல முடியும்? காலம்தான் பதில் சொல்ல முடியும்? \

    அன்பு சஹோதரி பவளசங்கரி அவர்களது கவனத்துக்கு……

    இந்த தளத்தில் வ்யாசங்கள் சமர்ப்பிக்கும் அன்பர்கள் பலபேரில் எல்லோரையும் விட மூத்தவர் ஸ்ரீ.வெ.சாமிநாதன் என்பதில் உங்களுக்கும் எனக்கும் வேறு கருத்து இருக்காது என நினைக்கிறேன்.

    அந்த அன்பருக்கு சமீபத்தில் பெங்களூரில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. அதைப்பற்றிய வ்யாசத்தைக் கூட தனது 80+ வயதில் அந்த அன்பரே இந்த தளத்தில் சமர்ப்பித்துள்ளார். தாங்கள் கூட பெரியவர் வெ.சா. அவர்களுக்குப் பாராட்டு தெரிவித்திருந்தீர்கள்.

    அதற்கு வந்த பின்னூட்டங்களில் சில :-

    \ கன்னடியர்களைப்புகழ்ந்து தமிழர்களை இகல்வதிலும் ஒரு சுகம் இருக்கிறது வெசாவுக்கு. இப்படி தானும் தன் முன்னோர்களுக்கும் உப்பைத்தந்த மண்ணை ஒருவர் இகழும் செயலை நான் பார்த்ததல் அரிது. \

    \ பெரியவர் வெ சாமிநாதனுக்கு கிட்டத்தட்ட 80 ஆகிறது……ஏதாவது சினிமாவுக்கு வசனம் எழுதிவிடுங்கள். அது நன்றாக ஓடிவிட்டால் பிரபலமாகிவிடுவீர்கள். பின்னென்ன? மேடையில் பாராட்டு மழைதான்.\

    \ இத்தகைய மனோதிடம் இல்லையென்றால் பொதுவெளியில் நுழைந்து ஏன் வருந்த வேண்டும்? Harsh? But wounds cannot be cured w/o searching ! \

    உங்களது இது போன்ற மனித நேயம் எண்பது வயது முதிர்ந்து பின்னும் தன் அனுபவங்களை நம்முடன் பகிர விழையும் ஒரு அன்பரை நோக்கி எய்யப்பட்ட சொல்லம்புகளைப் பற்றி இல்லை என நான் அறிவேன்.

    இத்தனைக்கும் அவர் தமிழரைப் பற்றி அல்லாது மிகத் தெளிவாகத் தமிழ் அரசியல்வாதிகளைப் பற்றிக் குறை கூறியுள்ளார்.

    \ தமிழர்களோ தம் சுய நலத்துக்காக தமிழ் நாட்டையே விற்றுக் கொள்முதல் செய்துவிடும் அரசியல் தலைவர்களைக் கொண்டது தமிழ் நாடு. இருந்தாலும் இதற்கு நேர் எதிராக தம் தமிழ்ப் பற்றைப் பற்றி வெற்று தகர டப்பா சத்தம் எழுப்பும் அரசியல் வாதிகள் நம்மவர்கள். \

    ஸ்ரீ வெ.சா அவர்கள் கருத்துச் சொன்னது தமிழ் அரசியல் வாதிகளைப் பற்றி. ஆனால் இந்த வ்யாசத்தை சமர்ப்பித்த அன்பர் ஜான்சன் முதல் அன்பர் அய் வரை அன்பர் ஷாலி வரை அவர் கருத்தை திரித்து எண்பது வயது முதிய ஒருவரை குழு சேர்த்து இகழும் போது நீங்கள் அப்படி இகழ்வது சரி என்ற நிலைப்பாட்டை எடுத்திருக்கலாம்.

    ஆமாம் அம்மணி. எந்த ஒரு விழிப்புணர்வும், மனித நேயமும், நம் சக மனிதர்கள் என்ற ஒரு சாதாரண இரக்கமோ கூட இல்லாமல்………(வயது முதிர்ந்த மதிப்பிற்குறிய ஒரு பெரியவரை) சொல்லம்புகளால் வேதனைப்படுத்துவர்களை என்ன சொல்ல முடியும்? காலம்தான் பதில் சொல்ல முடியும்?

  79. Avatar
    ஷாலி says:

    பொதுவாக,அதிகமாக பின்னூட்டம் எழுதி திண்ணையை ஆக்கிரமித்த பெருமைக்குரிய பெரியார் ஸ்ரீ மான்.க்ருஷ்ணகுமார் அவர்கள்.அவர் தன்னைப்பற்றிய தன்னிலை விளக்கங்களை முழுதும் படித்துப்பார்க்கும்போது…இவரை மனிதருள் மாணிக்கம்,மனிதப்புனிதர் என்று சொல்லும் அளவிற்கு அவரது குரல் அடக்கமாக ஒலிப்பதை அறியலாம். இவரது மேதா விலாசத்தையும் நற்குணங்களையும் மனித நேயத்தையும் புரிந்து கொள்ளாமல் எதிர் வாதம் செய்பவர் எவரும் மனித குல எதிரி என்பதில் எவ்வித ஐயமில்லை. இதோ மஹாசயர் பேசுகிறார்……
    “ என் கருத்துக்கள் எப்போதும் கறாரானவையே. கருத்துக்கள் குணம் தோஷம் இரண்டையும் பட்சபாதகமில்லாது ப்ரதிபலிக்கும்.
    ஹிந்துத்வா….இதன் அடிப்படை யாவை…எனக்கு தெரியாத விஷயங்கள்….ஆகவே நான் மதக்காழ்ப்பு மிக பேசுகிறேன் என்று மட்டிலும் சொல்லாதீர்கள்….கிட்டத்தட்ட இரண்டரை தசாப்தங்களாக (25 வருடம்) ஹிந்துஸ்தானத்தில் எல்லைப்பகுதியில் உத்தியோகத்திலிருக்கும் சிறியேன்…என்னுடைய சட்டியில் இவை போதாதென்று கபீரும்,ரஹீமும்,ரஸ்கானும்,துளசிதாசரும், குரு தசமேஷும் உட்கார்ந்திருக்கையில் அகப்பையில் வேறு என்ன வரும் சொல்லுங்கள்……தமிழ்,சமஸ்கிருதம்,ஹிந்தி,பஞ்சாபி,ஆங்கிலம், எந்த பாஷையின் பாலும் எனக்கு த்வேஷமில்லை….என் வ்யாசத்திற்கு 500 க்கு மேற்ப்பட்ட உத்திரங்கள் என் மொழி நடை அடுத்தவருக்கு புரிவதில்லை என்பது தவறு என்பதை நிர்த்தாரணம் செய்கிறது…..மதம் பற்றிய சர்ச்சையில் நான் ஈடு பட வில்லை…எனக்கு மத வெறி என்று நீங்கள் குறிப்பிடுவது அழுக்காறு….ஆனால் இயேசு என்ற நபர் சரித்திரத்தில் இருந்தார் என்றால் கண்டிப்பாக ஆதாரம் கேட்பேன்….நாம் மிகவும் வெறுப்பது பொய்மை. மட்ரற்ற லஜ்ஜையற்ற பொய்மை…கூச்சநாச்சமில்லாத பொய்மை என் உத்தரங்களில் இது அசாத்யம்……… “ மஹாசயர் க்ருஷ்ணாஜி இப்படியெல்லாம் பேசப்படாது. பொய் சொன்னதினால் மோட்சம் கொடுத்தவன் திருவரங்கன். குட்டிக் கண்ணனை தயிர் பானையில் மறைத்து வைத்து யசோதையிடம் கண்ணன் இங்கு இல்லையென்று பொய் சொன்னதற்காக தயிர் பானையுடன் வைகுண்ட மோட்சம் சென்ற இடையன் ததி பாண்டன் கதை தாங்கள் அறியாததா?
    மஹாசயர் மனம் மகிழ ப்ரோத்சாஹப்படுத்த நாமும் பாடுவோம்!

    நஞ்சீயர் திருவடிகளே சரணம்
    நம்பிள்ளை திருவடிகளே சரணம்
    பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
    வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
    வடக்கு திரு வீதி பிள்ளை திருவடிகளே சரணம்
    ஆழ்வார் எம்பெருமான் ஜீயர் திருவடிகளே சரணம்!

  80. Avatar
    ஷாலி says:

     //ஸ்ரீ வெ.சா அவர்கள் கருத்துச் சொன்னது தமிழ் அரசியல் வாதிகளைப் பற்றி. ஆனால் இந்த வ்யாசத்தை சமர்ப்பித்த அன்பர் ஜான்சன் முதல் அன்பர் அய் வரை அன்பர் ஷாலி வரை அவர் கருத்தை திரித்து எண்பது வயது முதிய ஒருவரை குழு சேர்த்து இகழும் போது நீங்கள் அப்படி இகழ்வது சரி என்ற நிலைப்பாட்டை எடுத்திருக்கலாம். //

    அய்யா பெரியவர் க்ருஷ்ண குமார் அவர்களே! இது என்ன வேலை? பொய்யைத் தவிர வேறெதுவும் பேசுவதில்லை என்று ஏதேனும் சங்கல்பம் செய்திருக்கிறீர்களா? என்பது வயது பெரியவர் வெ.சா அவர்களை நான் குழுவாகச் சேர்ந்து இகழ்ந்ததாக தாங்கள் கூறுவது கடைந்தெடுத்த பொய் அல்லவா? கெட்டிக்காரனின் பொய்யும் புளுகும் எட்டு நாளில் தெரிந்து விடும் என்பதை நிரூபித்து விட்டீர்களே. “நெஞ்சில் ஒரு களங்கமில்லை, சொல்லில் ஒரு பொய்யுமில்லை வஞ்சமில்லா வாழ்க்கையிலே தோல்வியுமில்லை.” என்பதை மறந்து விடாதீர்கள்.சத்தியம் தான் இறுதியில் ஜெய்க்கும். இதோ எனது பின்னோட்டம்


    ஷாலி says:
    August 26, 2013 at 7:13 pm
    பெரியவர் வெ.சா அய்யா அவர்களுக்கு கன்னடத்து கலைக் குடும்பம் கொடுத்த கெளரவம் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.அய்யாவுக்கு தெரியாதது ஒன்றுமில்லை.தமிழன் பிறரை பாராட்ட மாட்டான், பாராட்டவும் விட மாட்டான்.இப்படி பல உயர்ந்த குணநலன்கள் உள்ளதால்தான் இன்னும் உருப்படாமல் இருக்கிறான்.தங்களைப்போல் குடத்திலிட்ட விளக்காக எத்தனையோ தமிழ் அறிஞர்கள் தமிழகத்தில் இருக்கிறார்கள்.இவர்களை குன்றிலிட்ட விளக்காக உயர்த்திப் பிடிப்பதற்கு கன்னட,மலையாள,தெலுங்கு மக்களே வரவேண்டியுள்ளது.செம்மொழியான தமிழ் மொழியாம் பாடலோடு நடத்தப்பட்ட மாநாட்டிலேயும் முத்தமிழ் வேந்தர் மும்முடிச் சோழனை பார்ட்டு பார்ட்டாக பாராட்டி ஜன்னி வரும் அளவிற்கு குளிப்பாட்டி விட்டார்கள்.பதவியில் இருப்பவர்களை மட்டுமே பாராட்டும் பழக்கம் தொன்று தொட்டு வந்ததுதானே.மன்னனை பாடி பரிசு பெற்ற புலவர் கூட்டம் நம்ம மக்கள்தான்.
    Reply

  81. Avatar
    Dr.G.Johnson says:

    அன்புள்ள பவள சங்கரி. உங்களின் கருத்துக்கு நன்றி. தமிழ் நாட்டு மக்கள் ஒரே தமிழ் இனமாக வாழும் நாள் இனி என்றும் இல்லை என்றே கருத வேண்டியுள்ளது. அங்குள்ள அரசியல் கட்சிகளே அதற்குச் சான்று பகர்கின்றன. நாட்டின் நலன் கருதி, இனத்தின் நலன் கருதி, மொழியின் நலன் கருதி இக் கட்சிகளின் தலைவர்கள் விட்டுக்கொடுத்து ஒன்று சேரும் வாய்ப்பு உள்ளதா? அல்லது இன்று ஆளும் கட்சியும் எதிர்க் கட்சியும் திராவிட பெயரில் இயங்குவதால், பெரியார் அண்ணா கொள்கைகளான பகுத்தறிவுப் பாதையில்தான் மக்களைக் கொண்டு செல்கின்றனவா என்றால் அதுவும் இல்லை. மக்களிடையே பெருகிவரும் சாதி வேற்றுமையும் வெறியும் வன்முறையும் தலை விரித்து ஆடுகின்றன. இப்போது கூட குரு பூஜைகளில் வன்முறை வெடிக்கும் அபாயங்கள் உள்ளன. அன்றாடம் பல்வேறு உரிமைகளுக்காக மக்கள் சாலை மறியல்களிலும் ஆர்ப்பாட்டங்களிலும் ஈடு ப்டுகின்றனர். விலைவாசி உயர்வு, ரூபாய் மதிப்பு குறைவு , மின்சார தட்டுப்பாடு என்று மக்கள் அவதியில் வாழ்கின்றனர். இந்த சூழலில்தான் தமிழ் நாட்டு இலக்கியங்களும் படைக்கப்படுகின்றன. சாதிகள் ஒழியாத நிலையில் , நாம் எழுதுவதையும் சாதி வெறியுடன் வெறுக்கும் சாதி வெறியர்கள் எவ்வாறு திருந்துவார்கள்? தமிழகத் தமிழர் நிலை கண்டு புலம் பெயர்த்து வாழும் தமிழர்கள் காறித் துப்புகிறார்கள்! இதுவே உண்மை நிலை!…டாக்டர் ஜி.ஜான்சன்.

    1. Avatar
      புனைப்பெயரில் says:

      இதன் அடிப்படைக் காரணம், வெளி நாட்டு கும்பினிகள் இன்று இதை பொது சந்தைக்காடாய் ஆக்கியதே. திக்கு தெரியாத காட்டில் எல்லா மூன்றாம் உலக நாடுகளும் மாட்டிக் கொண்டுள்ளது. இங்கு யாரும் எழுதுவதை சாதி வெறியுடன் வெறுப்பதில்லை. ஜாதிய திணிப்புடன் லாலி பாடுவதை தான் எதிர்க்கிறார்கள். மிஷனிரி தெரசா ஏன் இந்தத் துய்ரத்தின் மூல காரணாமாக கொள்ளையடித்துச் சென்று கோஹினூர் வைரத்தை திருப்பித் தரச் சொல்லி அதில் இந்தியாவின் பல ஸ்லம்களை மாற்றியிருக்கலாமே? ஜெபம் செய்தால் நோய் சரியாகும் என்று மதம் அங்கே ஏன் வருகிறது? யோகாவும் தியானமும் கற்றால் இந்துவாக மாறு என்று யாரும் சொல்லவில்லையே.. நுட வைத்தியன் என்ன சிவயா நமஹ என்றா சொன்னான்? சகிப்புத்தன்மை யாருக்கு அதிகம் என்று உலகறியும்.

    2. Avatar
      புனைப்பெயரில் says:

      தமிழகத் தமிழர் நிலை கண்டு புலம் பெயர்த்து வாழும் தமிழர்கள் காறித் துப்புகிறார்கள்–> அப்படியா? எனக்குத் தெரிந்து ஒழுங்காய் எத்துவாளித்தனம் பண்ணாமல் வாழும் பு.பெ.தமிழர்கள் காரித் துப்புவதில்லை. விவசாய நிலம் வாங்கக் கூடாது என்று தெரிந்தும் வாங்கும், ஹவாலா மூலமாக வீட்டுக்கு பணம் அனுப்பும், பொய் பயோ டேட்டாவில் வேலை முதல் கிரீன் கார்டு வரை வாங்கும் பு.பெ. தமிழர்கள் வேண்டுமெனில் அப்படிக் காரித்துப்புவார்கள் போலும். காரித்துப்பவது அவரிகளின் கர்ப்பக்கருவறை மேல் என்று புரிந்தால் சரி. என்னைக்காவது அடி விழும் போது ஓடி வருவான், அப்போதும் இந்த மண் வாழ்வு தரும்.

  82. Avatar
    பவள சங்கரி says:

    அன்புச் சகோ. கிருஷ்ணகுமார் அவர்களுக்கு,

    வணக்கம். தயவுசெய்து பிரச்சனையை திசை திருப்பாதீர்கள்.
    //ஸ்ரீ வெ.சா அவர்கள் கருத்துச் சொன்னது தமிழ் அரசியல் வாதிகளைப் பற்றி. ஆனால் இந்த வ்யாசத்தை சமர்ப்பித்த அன்பர் ஜான்சன் முதல் அன்பர் அய் வரை அன்பர் ஷாலி வரை அவர் கருத்தை திரித்து எண்பது வயது முதிய ஒருவரை குழு சேர்த்து இகழும் போது நீங்கள் அப்படி இகழ்வது சரி என்ற நிலைப்பாட்டை எடுத்திருக்கலாம்.//
    ஒருவருடைய தனிப்பட்ட கருத்தை மதிக்க வேண்டியது சபை நாகரீகம். ஆனால் சில விசயங்கள் அளவுக்கு மீறி செல்லும்போதுதான் பொறுமை காக்க முடியாமல் போகிறது. வெ.சா. ஐயாவைப் பொறுத்தவரை என்னைப் பற்றி நன்கு அறிந்தவர். என்னுடைய நிலைப்பாடு பற்றியும் தெளிவாக இருப்பவர். நான் இது போல அவருக்காகப் பரிந்து பேச வேண்டும் என்றெல்லாம் நினைக்கமாட்டார். இது விசயமாக நான் அவரிடம் தெளிவாகவே பேசியிருக்கிறேன். அதனால் தயவுசெய்து அந்தப் பிரச்சனையை இதனுடன் இணைக்க வேண்டாம் அன்புச் சகோதரரே. அவரை தேவையில்லாமல் தொந்திரவு செய்யவோ, மன உளைச்சலுக்கோ ஆளாக்காமல் இருப்பதே அவருக்கு நாம் செய்யும் நன்மை மற்றும் நன்றி. எவர் மனதையும் புண்படுத்தும் நோக்கத்தில் நான் எழுதவில்லை. தனிப்பட்ட முறையிலும் யாரையும் குறைசொல்ல விரும்பவிலை. பொதுவான என்னுடைய மனக்குறையைத்தான் வெளியிட்டேன். சாதி, மதம் குறித்த அதிகமான வாக்குவாதம் அலுப்பைத் தருகிறது. நம் எதிர்காலம் என்னவாகுமோ, நம் வருங்காலச் சந்ததியினர் எப்படி எடுத்துக்கொள்வார்களோ என்ற அச்சமும் வருகிறது. கலப்புத் திருமணங்கள் சர்வ சாதாரணமாக அதிக அளவில் அரங்கேறிக் கொண்டிருந்தாலும், நாட்டில் தீவிரவாதமும் பெருகிக்கொண்டே போகிறது. இரண்டும் சம அளவில் உயர்ந்து கொண்டிருப்பது போலத் தெரிகிறது. திண்ணை போன்ற அதிக அளவு வாசகர்களைக் கவரும் இதழ்களில் இது போன்ற எண்ணங்களுக்கு முக்கியத்துவம் தாராமல் இருப்பது தேவையற்ற குழப்பத்தைத் தவிர்க்க உதவுமே என்றுதான் தோன்றுகிறது. மற்ற்படி ஒருவரைப் புகழ்ந்து, இன்னொருவரைக் குறை கூறி குழு சேர்த்து, கட்சி சேர்ப்பதற்காக இல்லை ஐயா. இது போன்ற சாடல்களுக்கு கட்டாயம் காலம் பத்ல் சொல்லும் என்பதும் உண்மைதானே? தங்கள் புரிதலுக்கு மனமார்ந்த நன்றி.

    அன்புடன்
    பவள சங்கரி

  83. Avatar
    paandiyan says:

    //சத்தியமான வார்த்தைகள். நம் தமிழகத்தில் மதப்பிரச்சனை மட்டுமா தலை விரித்தாடுகிறது? சாதிப்பிரச்சனையும்தான் குதியாட்டம் போட்டுக்கொண்டிருக்கிறது? நாட்டில் செப்பனிட வேண்டிய பிரச்சனைகள் எத்தனையோ இருக்கிறது. இப்படி சாதி, மதம் என்று சண்டை போட்டுக்கொண்டு நம் அரிய நேரத்தைத் தொலைப்பதோடு, எத்துனைப் பேரை மன உளைச்சளுக்கு உள்ளாக்குகிறோம் என்பதை அறியாமல் தொடர்ந்து பல பெயர்களில் வந்து வேதனைப்படுத்துபவர்களை என்ன சொல்வது?//

    FYI — today news:-
    மிகப்பெரிய கிறிஸ்தவ மிஷனரியான, சி.எஸ்.ஐ.,யின் திருச்சி – தஞ்சை மண்டல பிஷப்புக்கும், உடுமலைப்பேட்டை ஆலய நிர்வாகியாக இருந்தவர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் பின்னணியில், ஜாதி ரீதியான பாகுபாடு இருப்பது அம்பலமாகி உள்ளது. இதுகுறித்து, சி.எஸ்.ஐ., உறுப்பினர்கள் சிலர் கூறியதாவது: உடுமலைப்பேட்டை, புக்குளம், சேரன் நகர் ஆகிய இடங்களில், மூன்று ஆலயங்கள் உள்ளன. புக்குளம், சேரன்நகரில் அதிகளவு குறிப்பிட்ட சமூகத்தினர் உள்ளனர். உடுமலையில் பிற சமூகத்தைச் சார்ந்தவர்கள் அதிகம் உள்ளனர். ஏற்கனவே, அப்பகுதியில் இரு சமூகத்தினரிடையே பாகுபாடு உள்ளது. குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த பால் வசந்தகுமார், திருச்சி – தஞ்சை மண்டல பிஷப்பாக பொறுப்பேற்றதும், அப்பகுதியில் நடந்த திருச்சபை கூட்டத்தில், “நம் சமூகத்தைச் சார்ந்தவர்கள் தான் உடுமலை கிறிஸ்துநாதர் ஆலய பிஷப்பாக நியமிக்கப்படுவார்’ என, சூளுரைத்தார். அதேபோல, தன் சமூகத்தைச் சேர்ந்த கிறிஸ்டோபர் நியமித்தார். இது அவர்களுக்கு பிடிக்கவில்லை. இதன் பின்னணியில் தான் கிறிஸ்டோபர் மீது நில மோசடி புகார் தெரிவித்து உள்ளனர். இவ்வாறு, அவர்கள் கூறினர்

  84. Avatar
    புனைப்பெயரில் says:

    நாகரீகமடைந்த திருச்சி மாநகரிலேயே அதுவும் மத்தியப் பகுதியிலேயே தாழ்த்தப்பட்டவர்களுக்கு தனி கல்லறை. இதனை எதிரத்து எத்தனையோ ஆண்டுகளாகப் போராட்டங்கள். மதம் மாறினால் நீங்களும் வெள்ளைக்காரர்கள் போல டிப் டாப் ஆக மரியாதையுடன் போய்வந்து வாழலாம் என்று ஆசை காட்டி பின்னர் இந்த அவல நிலைக்குத் தள்ளிவிடுகின்றனர். விழுப்புரம் ராமநாதபுரம் போன்ற பல மாவட்டங்களில் இதே நிலைமைதான் . பெங்களூருவில் தமிழரை பிஷப்பாக்கக்கூடாது எனப் போராட்டங்கள். இது இந்தியாவில் மட்டுமல்ல எத்தனையோ நாடுகளில் எத்தனையோ இனங்களிடையே. வெள்ளைக் காரர்களுக்கும் உள்ளூர்காரர்களுக்கும் தனித் தனி வழிபாட்டிடங்கள் உண்டு. சாதிப் பாகுபாடு உள்ளது. –> இது நான் சொல்லவில்லை. தினமலர் பின்னூட்டத்தில் 13 செப்டம்பர் அன்று ஒருவர் எழுதியது. ஏதோ இந்து மதத்தில் தான் ஜாதி பாகுபாடு உள்ளது என்பது மதம் மாறியவர்களின் இயலாமையையே காண்பிக்கிறது.

    1. Avatar
      IIM Ganapathi Raman says:

      ஏற்றுக்கொள்ளக்கூடிய கருத்துதான். போன புதன்கிழமை கலகத்தா டெலிகிராஃப் நாளிதழில் வந்த கட்டுரையைபடித்தால் சிறிது தெளிவு கிடைக்கும். அது செல்வி ஜெயலலிதா இந்தியப்பிரதமருக்கு எழுதிய கடிதம் பற்றி. ஜெயலலிதா காட்டமாக அக்கடிதம் எழுதியிருக்கிறார். தலித் கிருத்துவர்களுக்கு இட ஒதுக்கீடு அவசியமென்று.

      கட்டுரையாளர் அவ்விட ஒதுக்கீடு பற்றி ஒட்டியும் வெட்டியும் உள்ள கருத்துக்களை அலசுகிறார். அதன்படி, கத்தோலிக்க குருமார்கள் இட ஒதுக்கீடு அவசியம் என்று போரடிக்கொண்டிருக்கிறார்கள். ஏன் எனபதைத்தான் புனைப்பெயரில் அறிய வேண்டும். அவர்கள் கணிப்பின்படி, அவர்கள் மதம் சொல்லியதை கிருத்துவர்கள் முழுவதும் கேட்டு நடப்பதில்லை. எனவேதான் அவர்களுக்குள்ளே விதம்விதமான ஏற்ற தாழ்வுகள். திருச்சிப்பிள்ளைக்கிருத்துவர்கள் திருச்சி தலித்துக் கிருத்துவர்களோடு சேர்ந்து த‌ங்களுக்கு கல்லறைத்தோட்டமையக்கூடாது என்கிறார்கள். வேலூர் மாவட்டத்தில் வன்னிய கிருத்துவர்கள் தலித்து கிருத்துவர்களைவிட தம்மை உயர்ந்தவராக‌ நினைத்து தனி தேவாலயம் கேட்கிறார்கள். இதையெல்லாம் கட்டுரை குறிப்பிட்டுப் பேசுகிறது. அக்கட்டுரையாளர் உரோமன் கத்தோலிக்கர். சாதித்துவேசங்கள் இருக்கின்றன என அவரும் மற்ற கிருத்துவர்களும் ஒத்துக்கொண்டுதான் தலித்து கிருத்துவருக்கு இட ஒதுக்கீடு கேட்கின்றார்கள் என தெரிந்து கொள்ளுங்கள்.

      இராஜஸ்தான் அரசே மனிதர்களுக்கு சாதி வாரியாக சுடுகாட்டைப்பிரித்து கட்ட முயல்கிறது. அதை மத்திய அரசு தட்டிக்கேட்கிறது. சுடுகாடு இந்துக்களுக்கே. டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் நேற்றைய தலையங்கத்தைப் படிக்கவும்.

      ஆனால் இந்துத்துவாதிகள், இந்துமதம் சாதிகளைச் சொல்லவேயில்லை; அவை பிறரால் உருவாக்கப்பட்டவையே. என்றெல்லாம் விதவிதமான தலைப்புக்களில் நூலகள் வெளியிட்டிருக்கின்றார்கள். தமிழ்.ஹிந்து.காமில் விளம்பரம் செய்யப்படுகிறது. புனைப்பெயரில் வாங்கிப்படிக்கலாம. அஃதாவது சாதிகள் இந்துமதத்தில் இல்லை. ஆனால் சிறுமதியாளர்களால் உருவாக்கப்பட்டது என்பது அவர்கள் உரத்த சிந்தனை.

      மதம் வேறு; வாழ்க்கை வேறு எனபதே எதார்த்த உண்மையாம். இப்பாவக்குழியில் எல்லோரும் விழுந்துகிடக்க‌ புனைப்பெயரில் கண்களுக்கு ஒரு சாரார் மட்டுமே அபடிக்கிடப்பதாகத் தெரிவது ஒருவேளை அச்சாராரில் எவராவது தம்மதத்தவர்கள் அப்பாவக்குழியில் விழவில்லை என்று இங்கெழுதியிருந்தால் மட்டுமே சரியாகும். அப்படி மருத்துவர் ஜாண்சன் சொன்னாரா? முனைவர் ஜெய பாரதன் சொன்னாரா?

      என் கணிப்பு இதுதான். மதம் மனிதனை மனிதனினிடம் மனித நேயத்தை வளர்க்கத் தவறிவிட்டது என்பது என்றோ தெரிந்த உண்மை..ஒரே தவறை இருவர் செய்ய ஒருவட் மட்டும் எழுந்து I am OK. You are not OK இப்படி பொய் சொல்வது. அம்மனிதனை மனிதனாக்க தவறிவிட்ட வகைகளில் ஒன்றுதான். நீங்கள் மாறுங்கள். பிறரை மாறுங்கள் எனச்சொல்ல உங்களுக்கு தார்மீக உரிமை கிட்டும். நந்தனாரை எரித்த விசயத்தைப்பற்றியே மழுப்பும் நீங்கள் இன்னும் மாறவில்லையெனத்தான் தெளிவு.

  85. Avatar
    புனைப்பெயரில் says:

    வெ.சா. ஐயாவைப் பொறுத்தவரை என்னைப் பற்றி நன்கு அறிந்தவர்–> வெ.சாவிற்கு என்னப் பற்றி சிறிதும் தெரியாது. ஆம், எதற்கு தெரியனும்? அவர் சமூகத்தில் கருத்துக்களை வைப்பவர். அவர் 80 ஆனால் என்ன? 8 ஆனால் என்ன? அப்ப 12 வய்தில் ராமானுஜன் கணக்குகள் வயது காரணத்தில் புரியாமல் போயிருக்கனுமே? தீவிரவாதம் நாட்டில் பெருகுகிறது என்பதன் காரணம் பற்றி பேசாமல் எப்போதும் நாட்டில் நடக்கும் துயரங்களை உடன் கதைக்கருவாக்கி பக்கம் நிரப்புவது தாண்டி, தீய மத சக்திகளுக்கெதிராக கருத்துச் சொல்பவர்களை தாக்காமலாவது இருக்கலாமே? கதைக் குப்பகளுகிடையே வரலாறு திரித்தல் போது தானே கிருட்டினகுமார்களும் பாண்டியனும் குதிப்பது..? இந்த மாதிரி முன்பே குதித்திருந்தால் கும்பினிகள் கோஹினூரை திருடிச் சென்றிருக்க மாட்டான். போய் கொஞ்சம் சுதந்திரமாக மலேசியாவில் பேசிப் பாருங்கள்…உலகில் அதிக திருட்டு வழிப்பறி நாடாக இருக்கும் தேசத்தில் இருந்து கொண்டு, இந்திய தேசத்தை கிண்டல் செய்வது நன்றி மறந்த நிலை.பெண்கள் மலேசியா நகரத்தில் ஏன் நகை அணிய பயப்படுகிறார்கள் என்று ப.சங்கரி , மருவின் ஜான் அய்யாவிடம் கேட்டு பதில் போட்டல் உதவியாயிருக்கும்.

  86. Avatar
    paandiyan says:

    பவள சங்கரி அவர்கள முதலில் நீங்கள் இந்த கட்டுரையைஒட்டி கருத்து சொல்லவில்லை ஆனால் பிநூட்டம் போடுபர்வகளை பற்றி குறை சொல்லி ஒரு பின்னோட்டம் போட்டு திசை திருப்பி உள்ளீர்கள் . பின்னோட்டம் எப்படி என்று நீங்களா ஒரு கட்டுரை எலுதலாம் அல்லவா ? பின்னோட்டம் எலுதுபவர்கள் எல்லாம் அரை குறை என்றால் நீங்கள் திண்ணை ஆசீர்யருக்கு சொல்லிவிடுங்கள் கமெண்ட் பெட்டி வேணாம் என்று ..

  87. Avatar
    paandiyan says:

    பவள சங்கரி அவர்களுக்கு தன் மனக்குறைக்கு கறுது போடலாம் கட்டுரைக்கு சம்பந்தம் இல்லமால் — ஆனால் அது போன்று க்ருஷ்ணகுமார் அவர்களுக்கு மனக்குறை சொல்லி எலுத கூடாது ? நல்ல நியாயம்..

  88. Avatar
    paandiyan says:

    //தமிழகத் தமிழர் நிலை கண்டு புலம் பெயர்த்து வாழும் தமிழர்கள் காறித் துப்புகிறார்கள்! இதுவே உண்மை நிலை//
    http://www.jeyamohan.in/?p=527
    இங்கே ஏராலமான தமிழ்நாட்டு மக்கள் தமிழர்கள் கூலிவேலைக்காக வந்து வாழ்கிறார்கல் என்பது தெரியுமா? கட்டிடங்கல் கட்டுகிரார்கல். எங்களை மலேசிய தமிழர்கள்தான் கூட்டி வருகிறார்கள். மாதம் 5000 இந்திய ரூபாய்க்கு அனுப்பலாமென்று வருகிறோம். எங்கலை அடிமை மாதிரி நடத்துகிஆர்கள். அடி உதை கூட உண்டு. பாஸ்போர்ட் பிடுங்கி கையில் வைத்திருப்பார்கல். கொடுக்க மாட்டார்கல். துரத்திவிட்டால் மலேசிய போலீஸ் பிடித்து அடித்து ஜெயிலில் அடைக்கும். ஆகவே பயந்து வாழ்கிரோம். மலேசியதமிழர்கள் கொஞ்சம்கூட கருணை இல்லாதவர்கள். கூலி கொடுக்க மாட்டார்கள்.சீனர்கள் எல்லாம் மிகமிக நல்லவர்கள். பினாங்கு பக்கம் உல்ல மலாய்காரர் கூட நல்லவர்கள். எல்லா இந்திய தமிழர்களிம் எப்படியாவது மலாய்காரர்கலிடம் போகவே ஆசைபப்டுகிரார்கள். எந்த இந்தியக்கார தமிழர்களாவது மலேசியதமிழர்போராட்டத்தை ஆதரிப்பார்களா என்று கேட்டுப்பாருங்கள். இந்த ஒரு வருசத்தில் மட்டும் 6 பேர் மலேசியாவில் கொடூரமாக காட்டில் கொன்று போட்டிருக்கிறார்கள். எந்த விசாரணையும் இல்லை.

    1. Avatar
      IIM Ganapathi Raman says:

      எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் அப்பொருள்
      மெய்ப்பொருள் காணபதறிவு

      எனவே ஜெயமோஹன் வாயில் வந்த சொற்களை அப்படியே வேதவாக்காகப் பிடித்துக்கொள்வதை விட நேரில் சென்று பார்த்தெழவதே அறிவு என்கிறார் வள்ளுவர்.

      முடியுமென்றால் செய்யுங்கள். இல்லாவிட்டால் பிறர் மீது ‘அவர் சொன்னார்1 இவர் சொன்ன்னார்!’ என தனக்கு எது பிடித்ததோ அதை அற்ப மகிழ்ச்சிக்காக‌ எழுதும் வழக்கத்தை விடுங்கள்.

      1. Avatar
        paandiyan says:

        மேல உள்ள கட்டுரையை நீங்கள் படிக்கவ இல்லை என்பது திண்ணம். எப்படியோ கருது போட்டால் போதும் என்ற மனநிலை….

  89. Avatar
    பவள சங்கரி says:

    அன்பின் திரு பாண்டியன், திரு.கிருஷ்ண குமார் மற்றும் திரு புனைப்பெயரில் அவர்களுக்கு,

    7ம் நூற்றாண்டு, தமிழ்நாட்டிலே பல்லவர் ஆட்சி பலம் பெற்றிருந்த காலம் அது. பௌத்தம், சமணம் ஆகிய மதங்கள் செல்வாக்குடன் இருந்த காலமும்அதுதான்! சைவ சமயம் மீண்டும் மலர்ச்சி பெறத் தொடங்கிய காலமும் இதுதான். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் போன்றோர் தோன்றி ஊர் ஊராகச் சென்று சமயப் பிரச்சாரம் செய்ததோடு, சென்ற இடங்களிலெல்லாம் இருந்த கோயில்கள் மீது தேவாரங்களைப் பாடினர் என்பதுதானே வரலாறு?

    அன்பே சிவம் என்பதுதான் திரு மந்திரம். திருமூலர் எழுதிய 3000 பாடல்களுக்கும் அடிப்படை, ‘ஒன்றே குலம், ஒருவனே தேவன்’
    ‘யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்பதுதான்.

    அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்
    அன்பே சிவமாவது யாரும் அறிகிலார்
    அன்பே சிவமாவது யாரும் அறிந்தபின்
    அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே!

    என் கடன் பணி செய்து கிடப்பதே ” எனும் நாவுக்கரசரின் தேவாரப் பதிக வரியும் , ஞான சம்பந்தரின் ” பணி கலந்து செய்யாத பாவிகள் தொழச் செல்வதென்றால் ” என்ற பதிகமும் மக்கள் சேவையே மகேசன் சேவை என்பதை உறுதிப்படுத்துகிறது.

    ஒரு முறை சமண சமயத்தைச் சார்ந்த கூன் பாண்டியன் மன்னனுக்கு தீராத வயிற்று வலி. சமண சமயத் தலைவர்கள் எத்தனையோ முயற்சி செய்தும், அவரைக் குணப்படுத்த முடியவில்லை. வலி தாங்காமல் துடி துடிக்கும் கணவனைப் பார்த்து தானும் துடித்துப் போகிறார் அன்பு மனைவி , சோழ நாட்டு இளவரசி மங்கையர்கரசியார். சைவ சமயத்தைச் சார்ந்த மங்கையர்கரசியாரை, ‘கண்டுமுட்டு, கேட்டு முட்டு’ என்று சொல்கிற, சமண சமயத்தைச் சார்ந்த கூன் பாண்டிய மன்னனுக்கு மணம் செய்து கொடுக்கிறார்கள். வயிற்று வலி தாங்காமல் துடித்துக் கொண்டிருக்கும் கூன் பாண்டியனை எப்படியாவது குணப்படுத்த வேண்டும் என்று தானும் துடிக்கிறாள் அன்பு மனைவி. அப்போது திருஞானசம்பந்தர் பெருமானார், மதுரையம்பதிக்கு வந்திருப்பதை அறிந்த மங்கையர்கரசியார் கணவனுக்கு வயிற்று வலி தீர உபாயம் தேட முயற்சித்தார். சமணர்கள் , திருஞானசம்பந்தரின் மடத்திற்கு தீ வைத்துக் கொளுத்தியது மன்னனைத் தீராத வினையாக தாக்கியிருக்கிறது என்பதை உணருகிறாள் அப்பத்தினிப்பெண். அடியார்கள் தங்கியிருந்த மடத்திற்குத் தீயிட்டதைக் கேட்ட ஞானசம்பந்தர், ‘பையவே சென்று பாண்டியர்க்கு ஆகவே’ என்று வெகுண்டு ஆனையிடுகிறார்.

    மங்கையர்கரசியாரோ, தங்கள் அமைச்சர் குலச்சிறையாரை அழைத்து, திருஞானசம்பந்தப் பெருமானிடம் சென்று நடந்ததைக் கூறி அவரை அழைத்து வரச் சொல்கிறார். மங்கையர்கரசியார் பெயரைச் சொன்னவுடன், ஞானசம்பந்தப் பெருமான், அரண்மனைக்கு வருகிறார். திருஞானசம்பந்தரை வணங்கி வலியைப் போக்கும்படி வேண்டுகிறார் கூன் பாண்டியன். அவரும், ‘மந்திரமாவது நீறு’ என்கிற திருநீற்றுப் பதிகம் பாடி பாண்டிய மன்னனுக்கு திருநீறு பூச, மன்னனின் வயிற்று வலியும் நீங்கி, கூனும் நிமிர்ந்து, மன்னன், ‘நின்றசீர் நெடுமாறனாக’ சைவ மதத்திற்கு மாறுகின்றார். ‘மன்னன் எவ்வழி, மக்கள் அவ்வழி’ என்று நாட்டு மக்கள் அனைவரும் சைவத்திற்கு மாறுகிறார்கள்…..

    மருள்நீக்கியார் என்பவர், இந்து சமயத்தைத் துறந்து, சமணசமயத்தில் ஈடுபாடு கொண்டு செல்லலானார். தம்பியார் உளராக வேண்டி வைத்த தயவினால் அம்பொன்மணி நூல்தாங்காது, அருள் தாங்கிய திலகவதியார் ஏக்கமுடன் சிவனை நினைந்து தம்பியார் சமணமதத்தை விட்டு சைவத்திற்கு திரும்ப வேண்டும் என வீரட்டாணம் திருக்கோவிலுக்குச் சென்று அழுது தொழுது முறையிடுகிறார். திலகவதியாரின் பிரார்த்தனைக்குச் செவி சாய்த்த எம்பெருமான், மருள்நீக்கியாரை ஆட்கொள்ள முடிவு செய்தார். மருள் நீக்கியாருக்கு சூலை நோய் வந்து வாட்டுகிறது. சமணர்கள் மயிற்பீலி கொண்டு தடவினர், ஆனால் அது எரிந்து சாம்பலாகிறது. இன்னும் ஏதேதோ வைத்தியம் எல்லாம் செய்து பார்த்தனர். எதற்கும் வலி நிற்பதாக இல்லை.. அப்போதுதான் தமக்கையின் நினைவு வர அவரிடம் ஓடிச் சென்று முறையிடுகிறார். திலகவதியாரும் மருள்நீக்கியாரை அழைத்துக் கொண்டு வீரட்டாணம் திருக்கோவிலுக்கு செல்கிறார். அங்கு சிவபெருமானை நினைத்து வணங்கி, திருநீற்றை வயிறெங்கும் பூசி இறைவனை வேண்டி வணங்கச் சொல்கிறார். மருள்நீக்கியாரும்,

    கூற்றாயினவாறு விலக்ககலீர்
    கொடுமை பல செய்தன நான் அறியேன்
    ஏற்றாய் அடிக்கே இரவும் பகலும்
    பிரியாது வணங்குவன் எப்பொழுதும்
    தோற்றாது என் வயிற்றினகம் படியே
    குடரோடு துடக்கி முடக்கியிட
    ஆற்றேன் அடியேன் அதிகைக் கெடில
    வீரட்டானத்துறை அம்மானே.

    என்ற பதிகம் பாட, சூலைநோய் நீங்கி, என்பெருமானால் தடுத்தாட்கொள்ளப்படுகிறார். ஆண்டவன் நாவுக்கரசரே என்று உளம் குளிர்ந்து அழைக்க, அவர் திருநாவுக்கரசராகி சைவத்திற்கு மாறுகிறார். சுண்ணாம்பு காளவாயிலும், கல்லைக் கட்டி கடலில் வீசியும், அனல், புனல் வாதங்கள் செய்தும் தங்களுடைய சமண சமயத்தைக் காப்பதற்கு சமணர்களும், அவைகளை வென்று சைவத்தை நிலைநாட்டி, பல்லவனை சைவத்திற்கு வரவழைத்தும், பல்லவ சாம்ராஜ்ய மக்கள் அனைவரையும் சைவத்திற்கு மதமாற்றம் செய்தார்களே…..

    இலங்கையில் பௌத்தம் எப்படிப் பரவியது… மலேசியா, சிங்கப்பூர், கம்போடியா, ஜப்பான், சைனா ஆகிய இடங்களில் பௌத்தம் எப்படிப் பரவியது.. கம்போடியாவில் அழிக்கப்பட்ட சிவன் கோவில் இன்றும் இருக்கிறது பற்றி நாம் அறிந்ததே..

    இவையெல்லாம் மிகச் சில உதாரணங்களே.. மதங்களெல்லாம் மக்களை நல்வழிப்படுத்துவதற்காகத்தான் இருக்கிறது, சக மனிதர்களோடு பாசத்தோடும், நேசத்தோடும் வாழ்வதற்காகத்தான் இந்த மதங்களே.

    சேக்கிழார் பெருமான் எழுதிய பெரிய புராணத்தில் சுந்தரரைத் தடுத்தாட்கொள்ளும் போது, , ‘வழி, வழியாய் ஆட்பட்டோம்’ என்று கூறுவது போல வழி வழியாக சைவத்தின் பால் வாழ்கின்ற இச்சிறியோளின் சின்ன கருத்து மட்டுமே இது! மதம் என்பதற்கு நெறிப்படுத்துவது என்று பொருள். நாம் அதன் பொருளைத் தவறாகப் புரிந்து கொண்டு யானைக்கு மதம் பிடித்தாற்போல நடந்து கொள்கிறோம் என்பதே வேதனைக்குரிய செய்தி….

    அன்புடன்
    பவள சங்கரி

    1. Avatar
      புனைபபெயரில் says:

      என்ன சொல்ல வர்றீங்க. இதே மாதிரி மகாபாரதம், ராமயணத்தை கட் அண்ட் பேஸ்ட் பண்ணி விட வேண்டாம். கருத்து தான் தேவை இங்கு. விட்டால் போதும் என்று இந்து மதம் மீதும் இந்த நாட்டின் மீதும், இந்தியத் தமிழர்கள் மீது காறித் துப்புகிறார்கள் என்று எழுதுவது பற்றி சொல்லுங்கள். வந்தேறிகளால் சூறையாடப்பட்டது நம் தேசமும் கலாச்சாரமும். உலகின் எந்த கிறிஸ்துவர்கள் தேர் இழுக்கிறார்கள், மொட்டை போடுகிறார்கள்? அடி மனதில் இவர்களுக்கு இந்துக் கலாச்சாரத்தை விட முடியாது. கோட்டும் சூட்டும் போட்டாலும், கோமாண்டி பரம்பரை வேர் கோமாணாண்டி தான். நம் இனம் தான். காட்டிக் கொடுப்பது ஏன். மஞ்சளையும், வேப்பிலையையும் பேட்டண்ட் செய்யும் எத்தர்கள். இன்றும் வெத்திலை பாக்கு 11 ரூபாய் பணத்திற்கு நிறைய நுட வைத்தியர்கள் அற்புத சேவை செய்கிறார்கள். நாற்பது லட்சம், ஒரு கோடி என்று பணம் கொடுத்து வரும் ஆங்கில மருத்துவர்களின் ஏகடியம் பற்றி உங்கள் கருத்தென்ன? வெளிக்க போக வெள்ளைக்காரன் தான் சொல்லிக் கொடுத்தான் என்று அதி மேதாவித்தனத்தின் கருத்திற்கு உங்கள் பதில் என்ன? மலேசியாவில் கூலித் தமிழ்த் தொழிலாளிகளை கசக்கிப் பிழிவது மூன்று தலைமுறை முன் சென்ற கூலிகள் என்பதறியுங்கள். அவர்கள் காறித் துப்புகிறார்களாம்… பிழைப்பிற்காக அடையாளத்தை தொலைத்தவர்கள், அன்னையின் தொப்புள் கொடியை கருவேலங் கொடி என்கிறார்கள், அது பற்றி உங்கள் கருத்தென்ன?

      1. Avatar
        பவள சங்கரி says:

        ஐயா புனைப்பெயரில் அவர்களே,

        எனக்குத் தெரிந்த வகையில் என் கருத்தை முன்வைத்துக்கொண்டுதான் இருக்கிறேன். கட்டிங், பேஸ்டிங் வேலையெல்லாம் நான் செய்வதில்லை ஐயா. அப்படி செய்தால் தங்களைப் போன்றோரின் கண்களில் படும் என்று அறியாதவரா நாங்கள். அதனால் கவலை வேண்டாம். எந்த ஒரு விவாதத்தையும் திறந்த மனதுடன் முன்கொண்டு செல்வதே பயனளிக்கும். நாம் திட்டவட்டமாக ஒரு முடிவை எடுத்துக்கொண்டு அதன்படியே மற்றவரும் தொடரவேண்டும் என்று விரும்புவது சரியல்ல.. மனிதநேயம் பற்றிய எண்ணம் மட்டுமே எனக்கு இருக்கிறது. நீங்கள் சொல்வதுபோல அலையன்ஸ் செய்வதெல்லாம் என் பிழைப்பல்ல…
        நாம் நம் தமிழ் மருத்துவத்தை ஏற்றுக்கொள்கிறோமா.. வைத்திய முறைகளின் முன்னோடிகளாக இருக்கும் நம் தமிழ் வைத்தியமுறை அழிந்துகொண்டுதானே இருக்கிறது. அவரவர் கலாச்சாரம் அவரவர்க்கு. அடுத்தவர் சொல்வது அனைத்தையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. நம்மை நாம் வார்த்தைகளால் நிரூபித்துக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.

        எந்த ஒரு பொருளையும் தொலைத்த இடத்தில்தான் தேடவேண்டுமேயொழிய எங்கேயோ உட்கார்ந்துகொண்டு புலம்புவதில் பயன் இல்லை என்பதே என்னுடைய தாழ்மையான கருத்து.

        அன்புடன்
        பவள சங்கரி

    2. Avatar
      IIM Ganapathi Raman says:

      //என் கடன் பணி செய்து கிடப்பதே ” எனும் நாவுக்கரசரின் தேவாரப் பதிக வரியும்//

      தாயுமானவர் சொன்னதாகக் கேள்விப்பட்டதுண்டு. I am willing to be correct if I am wrong.

      1. Avatar
        பவள சங்கரி says:

        அன்பின் திரு கணபதி ராமன் அவர்களுக்கு,

        திருநாவுக்கரசர் தேவாரப் பாடல் இதோ:

        நங்க டம்பனைப் பெற்றவள் பங்கினன்
        தென்க டம்பைத் திருக்கரக் கோயிலான்
        தன்க டன்னடி யேனையுந் தாங்குதல்
        என்க டன்பணி செய்து கிடப்பதே.

        தேவாரத் திருமுறைகளில் 4, 5, 6ஆம் திருமுறைகளை அளித்தவர் திருநாவுக்கரசு சுவாமிகள்.

        உழவாரப் பணி செய்து இறைவனையே மனம் குளிரச்செய்து, திருஞான சம்பந்தரைக்காட்டிலும் ஒரு மாற்று அதிகமான தங்கத்தைப் பரிசாகப் பெற்றாரே… நன்றி.

        அன்புடன்
        பவள சங்கரி

  90. Avatar
    பக்கிரிசாமி.N says:

    எழுந்து நின்ற பிணம்:
    இந்த சூழ்ச்சிக்கு பலியாகும் க்ருஷ்ண குமார கிரிஜாக்களுக்கு இது அற்புதமாக தெரியும்.

    நீங்காத நினைவுகள் 16:
    திரு.ஜெயபாரதன் அவர்களே! ஏன் ஸார்! இப்படி எழுதி க்ருஸ்ணகுமார் வாயில் விழுகிறீர்கள்?

    மேலே இருப்பவைகள் இந்த வாரம் திண்ணையில் வெளியான ஷாலி அவர்களின் பின்னூட்டங்கள். ஒவ்வொரு கட்டுரைக்கும் அவருடைய முதல் பின்னூட்டம். இந்த டாக்டர் ஐடா – தியாகம், கட்டுரையையும் அவர்தான், அவருடைய முதல் பின்னூட்டத்தின் மூலம் திசை மாற்றியுள்ளார் என்று முன்னமேயே எழுதியுள்ளேன்.

    எப்படியாவது, சொர்க்கம் கிடைத்தால் போதும் என்று நினைக்கிறார்போலும். அப்படியிருந்தால் அன்னாருக்கு சொர்க்கம் கிடைக்கப் ஜீஸசிடம் பிரார்த்திக்கிறேன்

    1. Avatar
      ஷாலி says:

      அன்பு நண்பர் பக்கிரிசாமி அவர்கள் எனக்கு சொர்க்கம் கிடைக்க இயேசுவிடம் பிரார்த்திப்பதாக எழுதுகிறார்.அவரது அறியாமையை என்ன சொல்வது.நண்பரே! புதிய ஏற்ப்பாடு பைபிளை ஆழ்ந்து படித்துப்பாருங்கள்.அதில் ஏதாவதொரு இடத்தில் இயேசு தன்னை கடவுள் என்றோ.அல்லது தன்னை வணங்கும் படி கூறியிருக்கிறாரா? நிச்சயமாக இல்லை.தன்னை அனுப்பிய பிதா என்னிலும் பெரியவன் என்று, ஒரு இறைவனைத்தான் வணங்கச் சொல்கிறார்.
      ஆழ்வார் பாசுரங்களில் இறைவன் தன்மையப் பற்றிய தெளிவு கிடைக்கும்.

      “தானே தனக்கு உவமன்,தன் உருவே எவ்வுருவம்,
      தானே தவ உருவும் தாரகையும்-தானே
      எரி சுடரும் மால் வரையும் எண் திசையும் அடைந்து
      இரு சுடரும் ஆய் இறை.”

      திருவள்ளுவர் இறைவனை தனக்கு உவமை இல்லாதவன் என்கிறார்.நமது பேயாழ்வார் தனக்குத்தானே உவமை ஆகிரவன் என்கிறார்.இன்னும் தெளிவாக இறைத்தன்மை பேசுகிற பாசுரங்களும் உண்டு.

      “நிறம் வெளிது, செய்து, பசிது, கரிது என்று
      இறை உருவம் யாம் அறியோம்!”

      இறைவனின் நிறம் வெண்மை,செம்மை,பசுமை,கருமை,என்று உருவம் யாம் அறியோம்.நிறங்களை,வடிவங்களை,வாசங்களைக் கடந்தவன் தானே கடவுள் எனப்படுபவன். இத்தன்மை பொருந்திய ஒரே இறைவனிடம் நண்பர் திரு.பக்கிரிசாமி பிரார்த்திப்பாராக!

      1. Avatar
        IIM Ganapathi Raman says:

        திரு பக்கிரிசாமி, பின்னூட்டக்களத்தையே கோயிலாக மாற்றிவிட்டாரே ! எங்கும் இறைவன் எதிலும் இறைவன் என்ற அந்தராத்மி தத்துவததை எளிதில் விளங்க வைத்தமைக்கு நன்றிகள் சாரே.

        Please pray for me also.

  91. Avatar
    சி. ஜெயபாரதன் says:

    அன்பு நண்பர் டாக்டர் ஜி. ஜான்சன்,

    நமது ஊர்களில் நேரும் கொடூரப் போலியோ அட்டாக் பாதிப்பு பற்றியும், பார்கின்சன் நோய் பற்றியும் கட்டுரைகள் எழுதும் படிக் கேட்டுக் கொள்கிறேன்.

    எனக்கு தெரிந்த, வேலை பார்க்கும் ஓர் ஏழை மாதுக்கு [35 வயது இருக்கலாம்] சிறு வயதில் ஏற்பட்ட போலியோ தாக்குதலால், இரு கால்கள் பாதிக்கப்பட்டு ஊன்றுகோல் வைத்து நடக்கிறார். அவருக்குச் செயற்கைக் கால்கள் பொருத்த உதவி செய்யும் கிறித்துவ அறக்கட்டளை ஏதாவது தமிழகத்தில் உள்ளதா ? அவர் திருவண்ணாமலையில் வசிக்கிறார்.

    உங்கள் மின்னஞ்சல் முகவரி /ஃபோன் எண் தாருங்கள். மேலும் விபரம் எழுதுகிறேன்.

    அன்புடன்,
    சி. ஜெயபாரதன்,
    அண்டாரியோ, கனடா.
    jayabarathans@gmail.com
    Ph: 519-396-4968

    1. Avatar
      புனைப்பெயரில் says:

      அவருக்குச் செயற்கைக் கால்கள் பொருத்த உதவி செய்யும் கிறித்துவ அறக்கட்டளை ஏதாவது தமிழகத்தில் உள்ளதா ? -> ஏம் இந்து இஸ்லாமிய அறக்கட்டளை ஆகாதா? தூதுவர் பட்டம் ஏதும் மதத்தில் கிடைக்காது என்றரிந்தும், கண்ணிற்கு சங்கர நேத்ராலயா, அடையாறு கேன்சர் மையம், மதுரை மன குன்றியோர் கிருஷ்ணன் மையம் என்று நிறைய இருக்கிறது. ஜெய்பூர் கால்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். இங்கு அப்பட்டமாக மத அலையன்ஸ் நடப்பது யார் மத வெறியர்கள் என்பது பவளமாக பளிச்சென்று தெரிகிறது.

      1. Avatar
        சி. ஜெயபாரதன் says:

        புனைப்பெயராரே,

        செயற்கைக் கால் தேவைப்படும் ஏழைகளுக்கு லட்சக் கணக்கான நிதிச் செலவின்றி இனாமாகச் செய்து தரும் இந்துமத மருத்துவ அறக்கட்டளைகள் தமிழ்நாட்டில் எங்குள்ளன ?

        சி. ஜெயபாரதன்

        1. Avatar
          புனைப்பெயரில் says:

          மத ரீதியாக அறக்கட்டளை விவரங்கள் எனக்குத் தெரியாது. ஆனால், மனிதநேய ரீதியாக தெரியும். அந்த நபர் விவரங்களை திண்ணையில் வெளியிடுங்கள். நிச்சயம் நடக்கும். நடப்பார். நமக்கு தொழில் மதம் மாற்றும் முயற்சிகள் அல்ல. கீழுள்ள காந்தி கிராமம் சென்று அவரைப் பார்க்கச் சொல்லுங்கள்.

    2. Avatar
      புனைப்பெயரில் says:

      முடவர்கள் நடக்கிறார்கள் எனும் மெரினா கூட்டத்திற்கு நல்ல வேளை இவரை அனுப்ப முயற்சிக்கவில்லை. எப்படியோ, ஏன், இந்து இஸ்லாமிய அறக்கட்டளை ஆகாதா. இவர்கள் இருவரும் நிச்சயம் மதம் மாறச் சொல்ல மாட்டார்கள். கீழ் விவரம் படிக்க:
      paandiyan says:
      September 14, 2013 at 2:07 am

      காந்திகிராம, சின்னாள பட்டி புகழ் கஸ்தூரிபா ஆஸ்பத்திரி.
      இங்கு ஊனமுற்றவர்கள், போலியோ அட்டாக் ஆனவர்களுகாக மாற்று செயற்கை கால் பொருத்தும் ஆராய்ச்சி மையம் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் பயனடைந்தவர்கள் ஏராளம். அரவிந்த் கண் மருத்துவமனையின் கிளை இங்கு செயல்பட்டு வருகிறது. இதனால் சுற்று வட்டார மக்கள் மதுரைக்கு செல்லாமல் இங்கேயே சிகிச்சை மேற்கொள்ள முடிகிறது

  92. Avatar
    பவள சங்கரி says:

    அன்பின் திரு புனைப்பெயரில் அவர்களுக்கு,

    //தீவிரவாதம் நாட்டில் பெருகுகிறது என்பதன் காரணம் பற்றி பேசாமல் எப்போதும் நாட்டில் நடக்கும் துயரங்களை உடன் கதைக்கருவாக்கி பக்கம் நிரப்புவது தாண்டி, தீய மத சக்திகளுக்கெதிராக கருத்துச் சொல்பவர்களை தாக்காமலாவது இருக்கலாமே? கதைக் குப்பகளுகிடையே வரலாறு திரித்தல் போது தானே கிருட்டினகுமார்களும் பாண்டியனும் குதிப்பது..?//

    கருக்களும், காரணிகளும், பிறர் கூறி வருபவை அல்ல.. அவரவர் சுயமாக சிந்திந்துச் செயல்படக்கூடியவை. சிறுகதை இலக்கியங்கள் காலத்தின் கண்ணாடி.. இன்றைய குப்பைகளைத்தானே அந்தக் கண்ணாடி காட்டும். மலாய் நாட்டில் பெண்கள் நகை அணிந்து செல்ல முடியவில்லை என்று வருந்துகிறீர்கள்… தமிழ்நாட்டின் இன்றைய நிலை என்ன.. நேற்றைய தீர்ப்பு மறந்துவிட்டதா? அரிதினும், அரிதான நிகழ்வெனக் கருதி தூக்கு தண்டனை வழங்கிய செய்தியை ஏன் மறந்துவிட்டீர்கள்.. எவரையும் தாக்குவது என் நோக்கமுமல்ல. பிரச்சனைகளை ஊதி, ஊதி பெரிதாக்க வேண்டியதில்லை, அமைதியான, நிரந்தரமான தீர்வு காண வேண்டும் என்பதே என் வாதம். மத மாற்றம் ஏன் நடைபெறுகிறது. அதற்கான ஆணி வேரை ஆராய்வதை விட்டுவிட்டு, மற்றவர்களைக் குறை கூறிக்கொண்டிருப்பதில் லாபம் என்ன. நம் மதத்தின் மீது நமக்கு ஏன் நம்பிக்கை இல்லாமல் போக வேண்டும். திருநாவுக்கரசரையும், சுந்தரரையும், கூன் பாண்டியனையும் தடுத்தாட்கொள்ள இறைவன் வந்தது போல இன்றும் இறைவன் தோன்றி தடுத்தாட்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்க முடியுமா? ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தானே செய்வார்கள். நாம் ஏமாறாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை யோசிப்பதைவிட்டு மதம் மாற்றுகின்றனரே என்று வெந்து போவதில் பயன் என்ன.. எங்கள் ஊரில் நடந்த உண்மை. ஒரு 50 வயது மதிக்கத்தக்க ஒரு பெண். கணவனின் வியாபாரம் நட்டமாகி, கடன் அதிகமாகி நோய்வாய்ப்பட்டு இறந்துவிட்டார். மகள் திருமணமாகி தூரமாக போய்விட்டாள். தனிக்கட்டையான இந்தத் தாய் வாழ வழியில்லை. உதவி செய்வோரும் யாரும் இல்லை. இரட்சிக்க இரு கரம் பரந்து வந்து அழைத்துச் சென்றால் போகாமலா இருப்பார் அவர். அவரைக் குறை கூறுவதை விட்டுவிட்டு அந்தப் பெண்ணிற்கு வாழ வழிகாட்டியிருந்தால் அவர் ஏன் போகப் போகிறார். பிறந்ததிலிருந்து இருக்கும் தன் மதத்தை விட்டு அவர் போகாமல் இருக்க வேண்டும் என்று எப்படி யார் சொல்ல முடியும். வெறும் வாய் வார்த்தைகளால் பயன் ஒன்றும் இல்லை. அடுத்த வேளை உணவு வேண்டும். ஆதரவு வேண்டும். வசதியும், வாய்ப்பும் இருப்பவர்களுக்கு பிரச்சனை இல்லை. மத மாற்றம் அதிகமாக நடக்கும் இடங்களைப் பாருங்கள். மிகவும் பின் தங்கிய இடங்களில், வாழ வழியில்லாமல் துயரத்தில் இருப்பவர்களுக்கு ஆறுதல் அளித்துதானே மதம் மாறச் செய்கிறார்கள். இந்த ஆதரவையும், ஆறுதலையும் நம் மடங்கள் ஏன் அளிப்பதில்லை. சுகமாக உள்ளே உட்கார்ந்து கொண்டு பிரச்சாரம் செய்து கொண்டிருந்தால் போதுமா.இறங்கி வந்து துன்பப்படுபவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். அப்போது ஏன் அவர்கள் மதம் மாறப்போகிறார்கள். அதைத் தவிர அது போன்று மதம் மாற்றும் சக்திகளை ஆதரிக்கும் எந்த எண்ணமும் துளியும் எவருக்கும் இருக்க முடியாது.

    அன்புடன்
    பவள சங்கரி

  93. Avatar
    பவள சங்கரி says:

    அன்பின் திரு பாண்டியன்,

    உங்கள் மனக்குமுறல் புரியாமல் இல்லை. //இங்கே ஏராலமான தமிழ்நாட்டு மக்கள் தமிழர்கள் கூலிவேலைக்காக வந்து வாழ்கிறார்கல் என்பது தெரியுமா? கட்டிடங்கல் கட்டுகிரார்கல். எங்களை மலேசிய தமிழர்கள்தான் கூட்டி வருகிறார்கள். மாதம் 5000 இந்திய ரூபாய்க்கு அனுப்பலாமென்று வருகிறோம். எங்கலை அடிமை மாதிரி நடத்துகிஆர்கள். அடி உதை கூட உண்டு. பாஸ்போர்ட் பிடுங்கி கையில் வைத்திருப்பார்கல். கொடுக்க மாட்டார்கல். துரத்திவிட்டால் மலேசிய போலீஸ் பிடித்து அடித்து ஜெயிலில் அடைக்கும். ஆகவே பயந்து வாழ்கிரோம்//

    ஏன் இந்த நிலை.. எதற்காக இப்படி நாடு விட்டு நாடு சென்று சிரமப்பட வேண்டும். எல்லாம் வெளிநாட்டு மோகத்தினால் வந்த வினைதானே.. 5000 சம்பளத்திற்கு வேலைக்கு வெளிநாடு போகத் தயாராக இருப்பவர்கள், உள்நாட்டில் லேபர் பிரச்சனையால் தொழில் முடங்கிப்போவதை அறிவீர்களா? கோவை, ஈரோடு பகுதியிலெல்லாம் இன்றும் லேபர் பிரச்சனை இருக்கிறது. வேலைக்கு ஆள் கிடைக்காமல் அவதிப்படுகிறார்கள் சிறு தொழில் முதலீட்டாளர்கள். குறைந்தது வாரத்திற்கு 1500 ரூபாய் சம்பளம் கொடுக்கிறார்கள். அதிக பட்சமாக மாதம் சர்வ சாதாரணமாக 10000 சம்பாதிக்க முடிகிறது. நான் சொல்வது அதிகம் படிக்காத லேபர்களுக்கு.. வேலையில் இருந்து கொண்டு தொழில் கற்றுக் கொண்டு விரைவிலேயே அவனும் ஒரு சிறு தொழில் முதலீட்டாளராக உயர்ந்து விடுவதையும் பார்க்கிறோம். இப்படியெல்லாம் நல்ல வாய்ப்பு நம் நாட்டிலேயே இருக்கும் போது மலேசியாவிற்கு ஏன் அடிமையாகச் செல்ல வேண்டும் என்பதுதான் எனக்குப் புரியாத புதிராக இருக்கிறது

    அன்புடன்
    பவள சங்கரி

  94. Avatar
    Dr.G.Johnson says:

    அன்புள்ள பவள சங்கரி,

    மதம் என்பது நெறிப்படுத்துவது என்று அழகாக பொருள் கூறியுள்ளீர்கள். வாழ்த்துககள். உங்கள் கருத்துக்கு பல்வேறு விளக்கங்களும் தந்துள்ளீர்கள். வழி வழியாக சைவத்தின்பால் வாழ்ந்து வருவதாகவும் நீங்கள் எடுத்துச் சொல்லியுள்ளீர்கள். மிக்க மகிழ்ச்சி.

    மதங்களைப் பற்றி இன்று நாம் நாட்டிலும் மட்டுமல்ல , பல நாடுகளில் சர்ச்சைகளும், குண்டு வெடிப்புகளும், போர்களும் நிகழ்வதைக் காண்கிறோம். படித்தவரும் படிக்காத பாமரரும் மதம் என்றாலே வீறு கொண்டு எழுந்து மனிதப் பண்புகளை இழந்து மிருகமாகி விடுகின்றனர். மதம் அவ்வளவு சக்தி மிக்கதாகி விட்டது.

    பாரபட்சமின்றி நாம் சற்று நேரம் நாம் சார்ந்துள்ள மதங்களை மறந்து சுதந்திர மனிதர்களாகப் பேசிப் பார்ப்போம். இது ஒரு சிறிய முயற்சிதான். சரிதானே?

    நாம் பரம்பரை பரம்பரையாக, அல்லது வழி வழியாக வேறு வேறு மதங்களைச் சேர்ந்த பெற்றோருக்குப் பிள்ளைகளாகப் பிறந்துள்ளோம்.அதனால் அந்தந்த மதத்தைப் பின்பற்றுகிறோம்.
    நம் பெற்றோரின் பெற்றோர்களும், அவர்களின் முப் பாட்டனார்களும் நிச்சயமாக ஒரு கால கட்டத்தில்தான் அந்த மதத்தை அல்லது கடவுளை அறிந்து அதை ஏற்றுக் கொண்டிருப்பார்கள். அது எப்போது? சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த நமது தாத்தா பாட்டிமார்கள் என்போமா ? கல்வி அறிவே இல்லாத அவர்கள் காலத்தில் அவர்கள் எதை வைத்து மதத்தையும் கடவுளையும் ஏற்றுக் கொண்டனர் என்பது நமக்குத் தெரியாது. ஆனால் நாம் அவர்களின் வழி வழியாக வந்தவர்கள்தான் என்பதில் சந்தேகமே இல்லை.

    இனி வேறொரு நிலைக்குச் செல்வோம்.

    அவர்களுக்கு முன்னும் அவர்களின் முன்னோர் வாழ்ந்துள்ளனர். அவர்கள் எந்த மதத்தையும் அறியாதவர்கள். அவர்களும் மனிதர்கள்தான். பல்லாயிரக்கணக்கான நூற்றாண்டுகள் அவர்கள் வாழ்ந்திருப்பர் – கடவுள், மதம் ஏதும் அறியாமல்!
    ஆகவே மதங்கள் அனைத்தும் 5000 ஆண்டுகளுக்குப் பின் ” நாகரீக ” மனிதர்களால் உருவாக்கப்பட்டவையே. நாகரீகம் பெருகப் பெருக புதுப் புது மதங்கள் தோன்றி புதுப் புது கடவுள்கள் உருவாக்கப் பட்டனர்.

    இதை நம்பிக்கொண்டுதான் இன்று இந்த கணினி நூற்றாண்டில் நாம் மதத்தின் பெயரால் அடித்துக் கொண்டு சாகிறோம்! இதுதான் அறிவுடமையா? .டாக்டர் ஜி . ஜான்சன் .

  95. Avatar
    Dr.G.Johnson says:

    அன்புள்ள பவள சங்கரி ,

    இனி தமிழர் வழிபாட்டுக்கு வருவோம். நமது தமிழர் வாழ்வு முறையை சங்க இலக்கியங்களில்தான் ஆதாரப் பூர்வமாக காண முடியும். அந்த காலம் கி.மு. 300 முதல் கி.பி, 300 என்ற 600 வருடங்கள் என்று மதிப்பிடப் படுகிறது. இதை நாம் சர்ச்சை செய்யாமல் முதலில் ஏற்றுக் கொள்வோம். சங்க இலக்கியங்களில் முருகனைத் தவிர வேறு கடவுள் பெயர்கள் இல்லை. முருகன் குறிஞ்சி பாடலில்தான் எழுதப் பட்டுள்ளார். அதுகூட பெண்களுக்கு ” அணங்கு ” என்ற பயத்தை உண்டாக்குபவர் முருகன் என்றும் , அதை வேலன் என்ற குறிசொல்பவர் குணப்படுத்துபவர் தீர்த்து வைப்பதாக நம்பினர். உதாரணத்துக்கு காதல் நோயில் உள்ள ஒரு இளம் பெண்ணுக்கு முருகன் ” அணங்கு ” தந்து விட்டதாக அவளின் தாய் பதறினாளாம். ஆக நமது சங்கத் தமிழர்கள் அநேகமாக முருகனை மட்டுமே தெய்வமாக வழி பட்டுள்ளனர் என்பது தெரிய வருகிறது. அப்போது வேறு மதங்கள் ( இந்து மதம் ) உட்பட தமிழ் நாட்டில் இல்லை என்றே கொள்ள வேண்டியுள்ளது. ( தொடரும் )

  96. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    அன்பர் ஷாலி

    தாங்கள் ஒரே நபர் பல பெயரில் எழுதும் ஒன் மேன் ஆர்மியின் ஒரு பகுதியா தாங்கள் என்று தெளிவு செய்யவும்

    தாங்கள் தங்களது பதிவை மீட்டு குறிப்பிட்டுள்ளீர்கள். மகிழ்ச்சி. அதில் ஸ்ரீ வெ.சா வை தாங்கள் புகழ்வது வஞ்சப் புகழ்ச்சி போலும் அன்பர் ஜான்சன் ஸ்ரீ வெ.சா அவர்கள் தமிழ் அரசியல் வாதிகளைப் பற்றி சொன்னதை தமிழர் பற்றிச் சொன்னதாக கருத்துத் திரிபு செய்த உத்தரத்தை அடுத்து தாங்கள் அவருடன் கை கோர்த்ததும் நான் கவனித்த விஷயம்.

    தங்களது புகழ்ச்சி வஞ்சப்புகழ்ச்சி அல்ல மற்றும் தாங்கள் ஒரே நபர் பல பெயரில் எழுதும் ஒன் மேன் ஆர்மியின் ஒரு பகுதி இல்லை என்றால் என் நிலைப்பாடு தவறு தான்.

    மற்ற படி ரெவரெண்டு தெரசாள் பதக்கம் புற்று நோயைக் குணப்படுத்துமா என்ற விவாதம் எழுகையில் அது சாராது விவாதத்தை நந்தனார் பக்கம் திரிய வைக்கும் ……. விவாதத்தை அதன் போக்கிலே போகாது ….. வெட்டிப்பொழுது போக்காக மாற்றும் …… red herring tactics……அன்பர் ஒன் மேன் ஆர்மி அவர்களுடைய யுக்தி……அது தங்களுடைய பல உத்தரங்களில் காணப்பட்டமையால் என் சம்சயம் வலுப்பெற்றது.

    என் கருத்து தவறு என்றால் என் கருத்தை துலக்கிக் கொள்வதில் எனக்கு மகிழ்ச்சியன்றி வேறென்ன.

    ஆழ்வார் திருவடிகளை சரணம் செய்வது மகிழ்ச்சியான விஷயமே.

    பரிஹாசமாகவும் பகடியாகவும் செய்யப்படும் வழிபாடு கூட இறைவனுக்கு உகந்ததே என்பது சாஸ்த்ர விஷயம்.

    1. Avatar
      IIM Ganapathi Raman says:

      கிருட்டிணக்குமார் ஆட்களின் ஜாதகத்தைதேடி அலைவதை விட்டுவிட்டு அவர்களின் கருத்துக்களுக்கு எதிர்விளக்கத்தை வைக்கவும். இல்லாவிட்டால் தமது கருத்தைச் சொல்லவும். Come on, put in your views only, Could you? If you don’t do that, it is obvious to one and all that you are dodging inconvenient questions for fear of being exposed.

    2. Avatar
      ஷாலி says:

      ஸ்ரீ மான்.க்ருஷ்ணாஜி அவர்களே! இணையத்தில் கருத்து சொல்வது என்பது, “ஒரு குருட்டுக் கோழி இருட்டுக்குள்ளே இருந்து விட்டத்திலே பாய்வது போன்றது.” எழுதுகிறவன் ஆணா? பெண்ணா? என்ன ஜாதி என்ன மதம் என்ன கொள்கை எதுவும் தெரியாது.பகிரப்படும் கருத்துத்தான் கவனிக்கப்படவேண்டுமே தவிர, தங்கள் கற்பனையில் உள்ள ஒன் மென் ஆர்மி,பைமேன் ஆர்மி. என்று எல்லாம் அறிந்து தான் உத்திரம் போட வேண்டுமென்பதில்லை. நான் தனி மனிதன் என்று சொன்னாலும் தாங்கள் நம்பப்போவதில்லை.பெரியவர் வெ.சா.அவர்களை மனம் திறந்து நான் பாராட்டியது கூட உங்களுக்கு வஞ்சப் புகழ்ச்சியாக தெரியும்போது ஒன்றும் பிரயோஜனமில்லை. ஒன்று சொல்லிக்கொள்கிறேன் நீங்களோ,நானோ,அல்லது டாக்டர்.ஜான்சனோ தங்கள் நம்பும் மதத்தை தோளில் தூக்கித்தான் காப்பாத்த வேண்டிய நிலைமையில் எம்மதமும் இல்லை.எவருக்கும் தங்கள் மதத்தை காக்கும் காவலர் பொறுப்பை கடவுள் கொடுக்கவில்லை.பின்பற்றத்தான் மதங்கள் சொல்கின்றன.காக்கிற வேலையல்ல.அதை கடவுள் பார்த்துக்கொள்வார்.ஆகவே வேற்றுமையை மறந்து மனித நேயம் வளர, வளர்க்க நாம் அனைவரும் பாடுபடுவோம். சாயி பாபாவுக்காகவோ,அல்லது மதர் தெரசாவுக்காகவோ இம்மாபெரும் பிரபஞ்சம் படைக்கப்படவில்லை.இம்மனிதர்களை விமரிசிப்பதால் இந்து மதமோ, கிறிஸ்தவ மதமோ தரம் தாழ்ந்து விடுவதில்லை.நாம் அப்படி நினைத்து நம்மை ஏமாற்றிக் கொண்டு மனித மாண்புகளை மண்ணில் சாய்க்க வேண்டியதில்லை. மேலும் ஓய்வு பெரும் வயதில் தேவையில்லாத டென்ஷனை ஏற்றிக் கொண்டு துன்பப்படவேண்டியதில்லை.அனைவரும் கருத்தை சொல்லுவோம். ஏற்றுக்கொள்வதும் எடுத்தெரிவதும் அவரவர் அறிவைப்பொறுத்த விஷயம். “யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்.” என்ற எண்ணத்தோடு எழுதினால் எவருக்கும் நன்மையே!

  97. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    அன்பின் ஸ்ரீ பக்கிரிசாமி

    அன்பர் ஷாலி அவர்களது யுக்தி விவாதம் க்றைஸ்தவர்களுடைய தவறான போக்குகளை சுட்டும்படிக்குச் செல்கிறது என்றால் அதை முனைந்து திசை திருப்புவது.

    அப்படி செய்தால் அவருக்கு சுவனப்ராப்தி நிச்சயம் என்றால் வேறென்ன செய்வார்.

  98. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    அன்பு சஹோதரி ஸ்ரீமதி பவளசங்கரி அவர்களுக்கு

    என் கருத்துக்கள் மதவெறி கொண்டவை என்று அடுத்தவர் முத்திரை குத்தினால் அவை தவறு என்று சொல்ல எனக்கு முழு உரிமை உண்டு என்பதை சபை நாகரீகம் என்ற படிக்கு ஏற்பீர்கள் என நினைக்கிறேன்.

    எந்த மனிதரையும் அவர்களது நற்பண்பு சார்ந்து போற்றுவதும் அவர்களது தவறான நிலைப்பாடுகளை இடித்துரைப்பதும் நேர்மையாளர்கள் செயல் என்பதில் தங்களுக்கு மாற்றுக்கருத்து இருக்காது என நினைக்கிறேன்.

    ஸ்ரீமான் ஜெயபாரதன் அவர்களது தமிழாளுமை விக்ஞானம் சார்ந்து அவர் உலக தமிழ்ச்சகோதரர்களுக்கு ஆற்றி வரும் விக்ஞானம் சார்ந்த வ்யாசங்கள் இவற்றில் எனக்கு எந்த அளவுக்கு உகப்பு உள்ளதோ அதே அளவு ஒவ்வாமை அவருடைய க்றைஸ்தவ மத வெறி மற்றும் ஒளிவு மறைவில்லா ஹிந்து மத வெறுப்பு இவற்றில் உள்ளது. இவரது நிலைப்பாடுகளை வரி வரியாக என் வ்யாசத்தில் காரண கார்யங்களுடன் விவாதித்துள்ளேன்.

    என் உத்தரங்களை நிலைப்பாடு சார்ந்து தாங்கள் வாசித்திருந்தீர்களானால் நான் உகப்பது மற்றும் மறுப்பது அன்பர் அவர்களுடைய நிலைப்பாடு சார்ந்து என்பது துலங்கும். வ்யாசங்களைப் போற்றும் போதோ அல்லது அதில் உள்ள ஓட்டைகளை சுட்டும் போதோ இரண்டும் நிலைப்பாடுகள் சார்ந்து என்பது முக்யம்.

    அதுவே அன்பர் ஜான்சன் அவர்கள் பக்ஷத்திலும். அன்பர் ஜான்சன் அவர்களை நான் எங்கும் மதவெறியர் என்று சுட்டியதில்லை. தன் மதமான க்றைஸ்தவம் பற்றி அவர் பெருமை கொள்வதில் எனக்கு மகிழ்ச்சியே. தன் எல்லா வ்யாசங்களிலும் அவர் க்றைஸ்தவ மத ப்ரசாரம் செய்வதும் இல்லை தான். ஆனால் சமயம் கிடைக்கும் போதெல்லாம் ஹிந்து மத இகழ்ச்சியை இலைமறைவு காய்மறைவாக அவர் நிகழ்த்தும் போது அதை கண்மூடி வாய்மூடி மௌனமாக ஏற்பது என் ஸ்வபாவம் இல்லை.

    ஒரு நபர் பல பெயரில் கருத்துக்கள் ஒரே தளத்தில் பதிப்பதும் பலப்பல பெயர்களில் பல தளங்களில் பதிப்பதும் பல பெயர்களில் ஒளிந்து கொண்டு தன் கருத்துக்களில் உள்ள ந்யாய அன்யாயங்களிலிருந்து விலக முனைவதும் என்னாலும் மிகப்பலராலும் (அமரர் ஸ்ரீ மலர்மன்னன் மஹாசயர் என் நிலைப்பாட்டை ஏற்றவர்) இடித்துரைக்கப்பட்ட ஒன்று. இந்த நிலைப்பாட்டை இடித்துரைப்பதில் எனக்கு எந்த தயக்கமும் கிடையாது.

    இதே தளத்தில் நான் சமர்ப்பித்துள்ள என் முந்தைய இரு பாகங்களாலான என் வ்யாசத்தை தாங்கள் வாசித்திருந்தால் என் நிலைப்பாடுகள் மத வெறுப்பு சாராது மத நல்லிணக்கம் மற்றும் சமநிலை கொண்டவை என்பது தங்களுக்குத் துலங்கும். மத நம்பிக்கை …. விக்ஞானம்….. மேட்டிமைத்தனம்… இவற்றினூடே உள்ள துல்லிய வித்யாசங்கள்….. இவை ஹிந்து மதத்தை இழிவு செய்ய ஆயுதங்களாக பயன் படுத்தப்படுகையில் அவற்றை துல்யமாக சுட்டுவது மிகவும் அவசியம். அதை நிச்சயமாக நான் செய்வேன்.

    நான் தமிழ் ஹிந்து தளத்தில் சமர்ப்பித்த என் வ்யாசத்தின் சுட்டியைக் கீழே கொடுத்துள்ளேன்

    http://www.tamilhindu.com/2013/04/hindutva-transcending-religion-1/

    http://www.tamilhindu.com/2013/04/hindutva-transcending-religion-2/

    இதை வாசித்தால் என் நிலைப்பாடுகளில் மதவெறி என்ற விஷயம் எங்காகிலும் இருக்கிறதா என்பதும் தங்களுக்குத் துலங்கும்.

    உண்மையும் ஆருயிர் அன்பும் அஹிம்சையும்
    இல்லையெனில் நர ஜென்மமிதே
    மண் மீதில் ஒற்றுமையே கொடி தாங்கிய பாய்மரமே வெறும் பாமரனே

    என்ற எம்.கே.டி த்யாகராஜ பாகவதர் பாட்டு நினைவுக்கு வருகிறது.

    மங்கையர்க்கரசியார், திலகவதியார், மருள்நீக்கியார், திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் போன்றோரது வாழ்க்கைச் சம்பவங்களெல்லாம் அப்புறம் அம்மா இந்த பக்தர்களின் பெயரை வாசிப்பது கூட சிறியேனுக்கு அளவிலா என் நாவிற்கு என் ஹ்ருதயத்தில் அமுதமூறச் செய்கிறது என்றால் மிகையாகாது.

    என் கருத்துக்களில் மிகவும் முயன்று பொறுமையுடன் கண்யத்துடனேயே கருத்துப் பகிர்கிறேன்.

    பொய்யை பொய் என்று சொல்வதிலோ…… ஹிந்துக்களை மடையர்கள் என நினைத்து நயவஞ்சகமாக க்றைஸ்தவ மத மேட்டிமையை பொது வ்யாசங்களிலோ விக்ஞான வ்யாசங்களிலோ நுழைக்க முற்பட்டால்

    அல்லது ஹிந்து மதத்தைச் சார்ந்த அன்பர்களை பெரியோர்களை க்றைஸ்தவ மேட்டிமை வாதம் ….. பகுத்தறிவு….. போன்ற முகமூடிகள் கொண்டு நயவஞ்சகமாக எவரும் சிறுமைப்படுத்த முற்பட்டால் நிச்சயம் எனது எதிர்க்கருத்து பகிரப்படும்.

    1. Avatar
      பவள சங்கரி says:

      அன்பின் திரு கிருஷ்ணகுமார்,

      தங்களைப்பற்றிய எந்தவொரு தனிப்பட்ட கருத்தையும் நான் சொல்லவில்லை. நான் கூறியவை அனைத்தும் பொதுவான கருத்துக்களே. என் வார்த்தைகள் எந்த வகையிலாவது தங்களைப் புண்படுத்தியிருந்தால் அதற்காக மனம் வருந்துகிறேன். தாங்கள் கொடுத்திருக்கும் தொடுப்புகளில் உள்ள கட்டுரைகளை அவசியம் படிக்கிறேன். மிக்க நன்றி.

      அன்புடன்
      பவள சங்கரி

  99. Avatar
    Dr.G.Johnson says:

    அன்புள்ள பவள சங்கரி, நான் தமிழ் இலக்கியம் பற்றி இப்படி எழுதுவதைக் காணும் இலக்கிய விற்பன்னர்கள் வெகுண்டு எழலாம். நீங்கள் பொறுமையாகக் கேளுங்கள். அப்போது புரியும்.

    சங்க இலக்கிய நூல்கள் 600 நீண்ட வருடங்களில் எழுதப்பட்ட பாடல்களின் தொகுப்பாகும். இதில் எட்டுத்தொகை, பத்துப்பாட்டு என்ற இரு பெரிய தொகுப்புகள் உள்ளன என்பதை நாமறிவோம். இதில் எட்டுத்தொகை நூல்கள்தான் அந்த 600 வருடங்களில் எழுதப்பட்டவை. அதிலும் அகநானூறு, புறநானூறு, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பாதிற்றுப்பத்து, நற்றினை ஆகிய ஆறு நூல்கள்தான் அந்த காலக் கட்டத்தில் எழுதப்பட்டவை. கலித்தொகையும், பரிபாடலும் அதற்குப் பிந்திய காலத்தில் எழுதப்பட்டவை.

    பத்துப்பாட்டு நூல்கள் இரண்டாம் மூன்றாம் நூற்றாண்டுகளில் எழுதப்பட்டவை. அதில் திருமுருகாற்றுப்படை ஐந்தாம் ஆறாம் நூற்றாண்டுகளில் எழுதப்பட்டவை.
    இந்த சங்க நூல்களில் மொத்தம் 2381 பாடல்கள் உள்ளன. அவை மொத்தம் 26,350 வரிகள் கொண்டவை. இவற்றை எழுதியவர்கள் 473 பெயர் தெரிந்த புலவர்களும், 102 பெயர் தெரியாத புலவர்களுமாவார்கள். ஆகவே இந்த நீண்ட காலமான 600 வருடங்களையும், பெயர் தெரியாத் புலவர்களையும் கருத்தில் கொண்டால் இடைச்செருகல்கள் நுழையும் வாய்ப்புகள் நிறையவே இருந்திருக்கலாம். இது ஒரு புறமிருக்க ஒவ்வொரு நூல் தொகுப்பிலும் கடவுள் வாழ்த்து உள்ளதே, பின் எப்படி வேறு கடவுள் பற்றி இல்லை என்கிறீர்கள் என்ற கேள்வி எழுகிறது. நூலைத் தொகுத்தது எப்போது, கடவுள் வாழ்த்தை எழுதியது யார், அவர் எந்த காலத்தவர் என்ற வினாவும் கூடவே எழுகிறது. இவைகள் ஏன் இடைச்செருகலாகவும் இருக்கக்கூடாது?
    ( தொடரும் )

  100. Avatar
    Dr.G.Johnson says:

    அன்புள்ள பவள சங்கரி, ஒரே மூச்சில் நூழுவதும் எழுத முடியாததால் இப்படி விட்டு விட்டு எழுதுகிறேன். அதோடு நீங்களும் ” வல்லமை ” இணைய இதழின் ஆசிரியர். நீங்கள் ஒரு பெண். சொல்வதைப் பொறுமையுடன் கேட்பவர். ஒரு பெண்ணின் தியாகம் பற்றி நான் எழுதியதால் உண்டான சர்ச்சை இவ்வளவு தூரம் சென்றுள்ளது என்பதால் ஒரு பெண் பத்திரிகை ஆசிரியரான உங்களிடம் இதைப் பகிர்கிறேன். அதே வேளையில் திண்ணை வாசகர்களிடமும் இவற்றைப் பகிர்கிறேன். இனி விட்ட இடத்தில் தொடர்கிறேன். ..

    சங்க இலக்கியங்களில் இப்படி இருக்க தொல்காப்பியம் அதற்கு முன் எழுதப்பட்டது அல்லவா? அதில் கடவுள் பெயர்கள் உள்ளனவே என்று நீங்கள் கேட்கலாம். ஆம் உள்ளது .

    மாயோன் மேய காடு உறை உலகமும் (முல்லை)

    சேயோன் மேய மை வரை உலகமும் (குறிஞ்சி)

    வேந்தன் மேய தீம் புனல் உலகமும் (மருதம்)

    வருணன் மேய பெரு மணல் உலகமும் (நெய்தல்)

    முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்

    சொல்லிய முறையான் சொல்லவும் படுமே.

    இந்த தொல்காப்பிய வரிகளில் முல்லை நில மக்கள் மாயோன் என்ற திருமாலையும், கூறிஞ்சி நில மக்கள் சேயோன் என்ற முருகனையும் மருதம் நில மக்கள் வேந்தன் என்ற இந்திரனையும், நெய்தல் நில மக்கள் வருணனையும் வழிபட்டதாக எழுதப்பட்டுள்ளது. பாலை நிலம் விடுபட்டுள்ளது. இது வறண்ட பகுதி என்பதால் அங்கு கடவுள் வ்ழிபாடு இல்லாமல் இருந்திருக்கலாம். அதன்பின் அவர்கள் கொற்றவை என்ற பெண் தெய்வத்தை வழிபட்டுள்ளனர்.

    இவற்றில் முருகன், கொற்றவை இரண்டுமே தமிழ்க் கடவுள்கள் . மற்றவை வடக்கிலிருந்து வந்தவை.
    இவை தவிர சங்க இலக்கியங்களில் வரையர மகளிர் , சூரர மகளிர் கொல்லிப்பாவை என்ற சிறு கடவுள்களும் சொல்லப்பட்டுள்ளன.

    நாம் கேள்வி இதுதான். இந்த பாடல் வரி சங்க இலக்கியத்துக்கு முன்பே எழுதப்பட்டிருந்தால், இந்த வட தெய்வங்கள் ஏன் அதன்பின் எழுதப்பட்ட சங்க இலக்கியங்களில் காணவில்லை? அப்படியென்றால் இதுவும் ஒன்று இடைச்செருகல் அல்லது இப் பாடல் கி.பி. 300 க்கு பின்பு எழுதப்பட்டிருக்க வேண்டும். அப்படியென்றால் தோல்காபியமும் பல நூறு வருடங்களாக ( இதுபோன்று ) கொஞ்சம் கொஞ்சமாக இடைச் செருகலுக்கு உட்பட்டிருக்க வேண்டும்.
    ( தொடரும் )

  101. Avatar
    சி. ஜெயபாரதன் says:

    பாண்டியனாரே,

    அந்த ஏழை மாதிடம் கால்கள் பொருத்த லட்சக் கணக்கான பணத் தொகை கிடையாது. நிதி உதவி செய்து கால் பொருத்தும் இந்துமத மருத்து அறக்கட்டளை ஏதாவது தமிழ்நாட்டில் இருந்தால் சொல்வீர்.

    இந்த வேண்டுகோள் டாக்டர் ஜி. ஜான்சன் அவருக்கு.

    +++++++++++++

    அன்பு நண்பர் டாக்டர் ஜி. ஜான்சன்,

    நமது ஊர்களில் நேரும் கொடூரப் போலியோ அட்டாக் பாதிப்பு பற்றியும், பார்கின்சன் நோய் பற்றியும் கட்டுரைகள் எழுதும் படிக் கேட்டுக் கொள்கிறேன்.

    எனக்கு தெரிந்த, வேலை பார்க்கும் ஓர் ஏழை மாதுக்கு [35 வயது இருக்கலாம்] சிறு வயதில் ஏற்பட்ட போலியோ தாக்குதலால், இரு கால்கள் பாதிக்கப்பட்டு ஊன்றுகோல் வைத்து நடக்கிறார். அவருக்குச் செயற்கைக் கால்கள் பொருத்த உதவி செய்யும் கிறித்துவ அறக்கட்டளை ஏதாவது தமிழகத்தில் உள்ளதா ? அவர் திருவண்ணாமலையில் வசிக்கிறார்.

    உங்கள் மின்னஞ்சல் முகவரி /ஃபோன் எண் தாருங்கள். மேலும் விபரம் எழுதுகிறேன்.

    அன்புடன்,
    சி. ஜெயபாரதன்,
    அண்டாரியோ, கனடா.
    jayabarathans@gmail.com
    Ph: 519-396-4968

  102. Avatar
    Dr.G.Johnson says:

    அன்புள்ள பவள சங்கரி, இடையிடையே என் மருத்துவப் பணியும் இருப்பதால் ஒரே மூச்சில் நான் தொடர்ந்து எழுத முடியவில்லை. சிலர் கூறுவதுபோல் அல்லது நினைப்பதுபோல் நான் இல்லை . நான் துவக்கப் பள்ளியும், உயர் நிலைப் பள்ளியும் சிங்கபூரில் பயின்றவன். தமிழை ஒரு பாடமாகத்தான் கற்றேன். ஆனால் நூல் நிலையத்தில் நிறைய தமிழ் நூல்கள் படித்து என் தமிழை சொந்தமாகவே வளர்த்துக் கொண்டேன். சென்னைக் கிறிஸ்துவக் கல்லூரியில் புகுமுக வகுப்பில் தமிழை இரண்டாம் மொழியாக எடுத்தேன். அதன்பின்பு வேலூர் மிருதுவக் கல்லூரியில் மருத்துவம் பயின்றேன். நான் 16 வயதிலேயே தமிழில் கதை கட்டுரைகள் எழுதத் தொடங்கிவிட்டேன். என் பின்னணி இப்படி இருக்கும் போது எனது அனுபவங்களை நான் புனைவாகவோ அல்லது உண்மை நிகழ்வாகவோ எழுதினால் அதில் மறைமுகமாக கிறிஸ்துவ மதத்தை உயர்த்தியோ அல்லது இந்து மதத்தை தாழ்த்தியோ எழுத எனக்கு என்ன வேண்டியுள்ளது? நான் சொல்லித்தான் வாசகர்கள் மதத்தை மாற்றிக்கொள்ளப் போகிறார்களா?

    மனிதர்களால் உருவாக்கப்பட்ட ( அதிகம் போனால் 5000 வருடங்களுக்கு முன் தோன்றியவை ) எந்த மதத்தில் குறைகள் இல்லை? எந்த மதத்தையாவது அடுத்த மதத்தவன் குறைகள் சொல்லாமலும், கேள்விகளும் சந்தேகங்களும் எழுப்பாமல் இருப்பானா? ஒரு உதாரணம்: நீங்கள் குறிப்பிட்டுள்ள புத்த மதம். அது நேப்பால் நாட்டில் தோன்றினாலும் , அசோகர் காலத்தில் இந்தியா முழுதும் பரவினாலும், இந்திய மக்கள் அதை இன்று ஏற்றுள்ளனரா? இந்திய மக்களை அந்த மதம் காலப் போக்கில் கவரமுடியவில்லை. ஆனால் அப்போது தோன்றிய சிலப்பதிகாரம் , மணிமேகலை , நாலடியார், சீவக சிந்தாமணி போன்றவை தமிழ்க் காவியங்கள்தான்!

    திருக்குறளில் கூட சில இடங்களில் பெளத்த கருத்துக்கள் உள்ளதை நாம் காணலாம். அப்படியெனில் காவியம் படைத்த இளங்கோ அடிகளும், சீத்தலைச் சாத்தானாரும், வள்ளுவரும் பெளத்த மதத்தைப் பரப்ப இவற்றை எழுதினார்களா? குறுகியப் பார்வையுடன் பார்த்தால் அப்படித்தான் தோன்றும்! ( தொடரும் )………….டாக்டர் ஜி. ஜான்சன் .

  103. Avatar
    Dr.G.Johnson says:

    நான் துவக்கக் கல்வியும் உயர்நிலைக் கல்வியும் சிங்கபூரில் ஆங்கிலப் பள்ளியில் பயின்றவன் என்று படிக்கவும். நன்றி.

  104. Avatar
    பவள சங்கரி says:

    அன்பின் மரு. திரு ஜான்சன் அவர்களுக்கு,

    எத்துனை அரிய தகவல்களை மடை திறந்த வெள்ளமாக வழங்கியிருக்கிறீர்கள். தங்களுடைய ஈடுபாடும், பொதுவான நோக்கும் இதிலிருந்தே நன்கு விளங்குகிறது. ஒரு பெண்மணி வெளிநாட்டிலிருந்து வந்து நம் மக்களுக்குச் சேவை செய்திருக்கிறார். அவரை மனமார வாழ்த்துவதுதான் முறை.குறைந்தபட்சம் நிந்திக்காமலாவது இருக்கலாம்.அந்த அம்மணியைப் பாராட்டும் பணியை அழகாகச் செய்துள்ளீர்கள். அதற்கு வாழ்த்துகள்.

    அன்புடன்
    பவள சங்கரி

    1. Avatar
      புனைப்பெயரில் says:

      முறை.குறைந்தபட்சம் நிந்திக்காமலாவது இருக்கலாம் –> இங்கு யார் நிந்தித்தார்கள் என்று சொல்ல முடியுமா?

  105. Avatar
    Dr.G.Johnson says:

    அன்புள்ள பவள சங்கரி, இனி நான் தொடர்கிறேன். நான் முன்பே சொன்னபடி மதங்களை சற்றே மறந்து ( நம் கடவுள்கள் ஒன்றும் சொல்ல மாட்டார்கள். மதங்களை உருவாக்கியவர்கள் அவர்கள் அல்ல என்பதால் ) வழி வழியாக வந்த தமிழர்களாகவே பேசுவோம்.

    நம்து சங்க காலத் தமிழர்கள் தமிழ் நாட்டைத் தவிர அந்த 600 வருடங்களில் வட நாடு சென்றிருக்கும் வாய்ப்பு இருந்திருக்குமா? அநேகமாக இல்லை என்றே கூறலாம். சிலப்பதிகாரம் அதற்குப் பின் ( சங்க காலத்துக்குப் பின் ) எழுதப்பட்டது. அப்போது வேண்டுமானால் காவிரிப்பூம்பட்டிணத்தில் யவணர்களுடன் சேர்ந்து வாணிபம் புரிய ரோமாபுரி சென்றிருக்கலாம். அப்படியெனில் சங்க இலக்கியங்களில் இல்லாத கடவுள்கள் ( தொல்காப்பியத்தில் சொன்னபடி ) எப்படி தமிழ் மக்களிடையே வந்தனர்? அவர்களும் இங்கே இறக்குமதி செய்யப்பட்டவர்கள்தானே?

    இதிலிருந்து என்ன புரிகிறது அன்புள்ள பவள சங்கரி?

    இன்று தமிழ் நாட்டில் நாம் அனைவரும் வழிபடும் பெரும்பாலான கடவுள்கள் ( இந்துக் கடவுள் ,இஸ்லாமியக் கடவுள், கிறிஸ்துவக் கடவுள் ) வெளியிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவர்கள்தான்! முருகனும் , கொர்க்கையும் மட்டுமே சங்கத் தமிழர்களின் கடவுள்கள். இவர்கள் இருவரும் இந்துக் கடவுள்கள் இல்லை. தமிழர் கடவுள்கள்! இந்து வேறு. தமிழர் வேறு. சங்கத் தமிழர்கள் இந்து என்ற வார்த்தையை அறியாதவர்கள். இந்த இந்து என்ற சொல் இந்தியாவில் தோன்றியதல்ல. அது சமஸ்கிருத சொல்லும் அல்ல. அது பற்றி பின்பு பார்ப்போம்…நன்றி…. டாக்டர் ஜி. ஜான்சன்.

    1. Avatar
      பவள சங்கரி says:

      அன்பின் மரு. திரு ஜான்சன் அவர்களுக்கு,

      தங்களுடைய சிந்திக்கச் செய்யும், ஆழந்த கருத்துக்கள் அனைத்தும் ஆச்சரியமேற்படுத்துகிறது.அன்னை தமிழ்மீது தாங்கள் கொண்டுள்ள பல்லாண்டுக்கால காதல் தெளிவாகத் தெரிகிறது. தமிழ் கூறும் நல்லுலகம் அதைக்கட்டாயம் ஏற்றுக்கொள்ளும். வீரமாமுனிவரையும், உமறுப்புலவரையும் வாழ்த்தி வரவேற்றதுதானே நம் தமிழ்கூறும் நல்லுலகம்! தங்களுடைய ஆதங்கமும், வருத்தமும் விரைவில் மறைய எல்லாம்வல்ல எம்பெருமானை பிரார்த்திக்கிறேன். சில நேரங்களில் அவலை நினைத்துக்கொண்டு உரலை இடிக்கும் கதையாகிவிடுகிறது! என்ன செய்வது. எல்லாம் காலக்கொடுமை. தங்களுடைய அருமையான, ஆதாரப்பூர்வமான, விழிப்புணர்வேற்படுத்தக்கூடிய எத்தனையோ (கதைக்குப்பைகளைத் தவிர்த்து) கட்டுரைகளை நாங்கள் வாசித்துப் பயன் பெற்றிருக்கிறோம். அந்த நன்றியுணர்வுடன் சொல்ல வேண்டியுள்ளது. தங்களுடைய வேதனை விரைவில் தீர வேண்டும். தங்களைப் போன்ற மனிதாபிமானமுள்ள எழுத்தாளர்களின் உன்னதமான சேவை தொடர வேண்டும். இடையில் தோன்றும் இதுபோன்ற இடர்பாடுகளுக்காகத் தாங்கள் அதிக முக்கியத்துவம் கொடுத்து மன உளைச்சலை ஏற்படுத்திக்கொள்ள வேண்டியதில்லை என்பதே என் வேண்டுதல். தொடர்ந்து தங்களுடைய ஆக்கப்பூர்வமான பணிகளில் தாங்கள் ஈடுபட வேண்டும் என்பதே எங்களின் விருப்பம். நன்றி.

      அன்புடன்
      பவள சங்கரி

  106. Avatar
    paandiyan says:

    ஜான்சன் மற்றும் பவள சங்கரி இருவரும் பரவலான வாசிப்பு அனுபவம் இல்லாமல் தாங்கள் நீனைப்பது சரி என்று தப்பும் தவருமாக இங்கு ஒரு சில கருத்க்களை பதிவு மற்றும் ஏற்றி வைது உள்ளீர்கள் . அது சரி என்று நீங்கள் நீனைதால் நஸ்டம் உங்களுக்குதான தவிர வேறு யாருக்கும் இல்லை .எல்லாம் எனக்கு திரியும் என்று நம்மை நாம பாராட்டி கொள்ள வில்லை என்றால் வேறு யாரு பாராட்டுவார்கள் என்ற திராவிட அரசியல் சித்தாந்தம் உங்களுக்கு மிக பொருத்தம்…

  107. Avatar
    Dr.G.Johnson says:

    அன்புள்ள பவள சங்கரி , காலை வணக்கம். இதையும் நோயாளிகளைப் பார்த்து கொண்டிருக்கும் இடைவெளியில்தான் எழுதுகிறேன். காலையிலேயே நாம் முருகக் கடவுள் பற்றி பேசுவோம்.

    முருகன் குறிஞ்சி நிலத் தமிழர்கள் வழிபட்ட கடவுள். குறிஞ்சி என்பது மலைகள் நிறைந்த பகுதி. முருகன் தூய தமிழ்க் கடவுள் . தமிழர்களால் உருவாக்கப் பட்ட கடவுள். இவர் சிவபெருமானுக்கும் பார்வதிக்கும் பிறந்தவர் அல்ல. அப்படி ஏதும் சங்க இலக்கியங்களில் இல்லை. அவர்கள் தமிழ்க் கடவுளர் இல்லை. அதுவும் இடைச்செருகல் . முருகன் மலைப் பகுதிக் கடவுள் என்பது உண்மையே. அந்தப் பகுதி இன்று வட ஆற்காட்டுப் பகுதியாகவும் ஈர்க்கலாம். அங்குதான் காடுகள் குறைந்த கருங்கற் பாறைகள் கொண்ட மலைகள் அதிகம். அங்குதான் வள்ளி மலை உள்ளது. வள்ளி மலையில்தான் முருகன் குறத்தியான வள்ளியைச் சிறையெடுத்து இரவோடு இரவாக தப்பித்து திருத்தணி நோக்கி ஓடினார். அப்படி ஓடியபோது ஒரு ஊரில் பொழுது விடிந்து விட்டது. அந்த ஊர்தான் விடியும்காடு என்பது. அந்த ஊர் இன்று வெடியன்காடு என்று அழைக்கப் படுகின்றது. அதன்பின்பு திருத்தணியில் அவர்களின் திருமணம் நடக்கிறது என்பது அப்பகுதி தமிழ் மக்களின் நம்பிக்கை. அவர் மலைப் பகுதிக் கடவுள் என்பதற்காகவோ என்னவோ அவருடைய கோவில்கள் பெரும்பாலும் மலையின்மேல் அமைக்கப்படுகின்றன. ஒரு வேளை உடல் வருத்தி மலைமேல் ஏறி தரிசிப்பதுதான் அவருக்கும் செய்யும்
    மரியாதை என்ற தத்துவமாகவும்
    இருக்கலாம். ( தொடரும் ) டாக்டர் ஜி. ஜான்சன்

  108. Avatar
    Dr.G.Johnson says:

    அன்புள்ள நண்பர் சி. ஜெயபாரதன் அவர்களே, திருவண்ணாமலையில் வாழும் அந்த பெண்ணுக்கு செயற்கைக் கால் உதவி தேவை என்று கேட்டுள்ளீர்கள். அவர் போலியோ வியாதியினால் பாதிக்கப்பட்டிருந்தால் அந்த கால் சூம்பிப்போயிருக்கும். அவருக்கு calipers எனும் செயற்கைக் கால் பொருத்தினால் உதவியின்றி நடக்கலாம் . இதற்கு சரியான இடம் வேலூர் பாகாயத்தில் உள்ள சி. எம். சி. PHYSICAL AND REHABILITATION MEDICINE மையம் . அங்கு
    சென்று உதவி நாடலாம். அது திருவண்ணாமலைக்கு பக்கம்.

    இது தவிர ஒவ்வொரு மாவட்டத்திலும் அரசு பொதுநலத்துறை ( SOCIAL WELFARE ) செயல்படுகின்றது. அவர்களின் உதவியும் நாடலாம். அவர்களும் உதவுவார்கள்.

    அதோடு ஒவ்வொரு மாவட்டத்திலும் பொலியோ இடைநிலைப் பள்ளிகள் ( POLIO TRANSITIONAL SCHOOLS ) இயங்குகின்றன பொலியோவினால் பாதிக்கப்பட்டு நடக்க முடியாமல் தவழும் பிள்ளைகள் இங்கு சேர்க்கப்பட்டு கல்வி வழங்கப்படுகிறது.

    நான் கூட திருப்பத்தூரில் ( சிவகங்கை மாவட்டம் ) சுவீடிஸ் மிஷன் மருத்துவமனையில் அரசு உதவியுடன் ஒரு போலியோ இடைநிலைப் பள்ளி நிறுவினேன். அதில் பிள்ளைகளுக்கு இலவசமாக் செயற்கைக் கால் சாதனம் ( CALIPERS ) வழங்குகிறோம்.
    அது இன்றும் நடக்கிறது…
    டாக்டர் ஜி. ஜான்சன்.

  109. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    \ ஒரு பெண்மணி வெளிநாட்டிலிருந்து வந்து நம் மக்களுக்குச் சேவை செய்திருக்கிறார். அவரை மனமார வாழ்த்துவதுதான் முறை.குறைந்தபட்சம் நிந்திக்காமலாவது இருக்கலாம்.அந்த அம்மணியைப் பாராட்டும் பணியை அழகாகச் செய்துள்ளீர்கள். \

    அன்பு சஹோதரி தாங்கள் உத்தரங்களை முழுமையாக வாசிக்கவில்லையோ என சம்சயிக்கிறேன்.

    ஒரு உத்தரத்தில் கூட ஒரு அன்பர் கூட ஐடா அம்மையின் சேவையை இகழ்ந்ததாக எனக்கு நினைவில்லை. அந்த அம்மணியைப் பாராட்டும் பணியைச் செய்கையில் ஹிந்து முஸல்மாணிய சஹோதரர்களைப் பற்றிய நிகழ்ச்சி மட்டிலும் வ்யாசத்தைப் பொருத்த வரை எனக்கு ஏற்பில்லா விஷயம். இந்த நபர்களை பொதுவில் மதம் சுட்டாது சொல்லியிருந்தாலும் வ்யாசம் சொல்ல வரும் விஷயம் முழுமையாகவே போய்ச் சேரும் என்பது என் கருத்து.

    \ தங்களைப்பற்றிய எந்தவொரு தனிப்பட்ட கருத்தையும் நான் சொல்லவில்லை. நான் கூறியவை அனைத்தும் பொதுவான கருத்துக்களே. என் வார்த்தைகள் எந்த வகையிலாவது தங்களைப் புண்படுத்தியிருந்தால் அதற்காக மனம் வருந்துகிறேன். \

    என்னைப் பற்றி அல்லது என் கருத்துக்களைப் பற்றி ஒருவர் சொல்லும் கருத்துக்கள் என்றும் என்னைப் புண் படுத்தியது இல்லை. படுத்தாது.

    என் எழுத்தில் அடுத்த நபரைப் பற்றிப் பேசுகையிலோ அல்லது அடுத்த நபரின் கருத்தைப் பற்றிப் பேசுகையிலோ சினம் என்பது தொனிக்கவே கூடாது என்பதில் மிகக் கருத்தாக இருப்பேன். ஒரு முறை ஸ்ரீ ஜெயபாரதன் அவர்களுடைய வ்யாசத்திற்கு மறுப்பு வ்யாசம் எழுதி அதில் உரையாடுகையில் பின் இப்போது ஒரு முறை ….. என் நிலைப்பாட்டில் இருந்து சறுக்கியுள்ளேன் என்பது எனக்குத் தெளிவாகத் தெரிகிறது.

    சத்யம் ப்ரூயாத் ப்ரியம் ப்ரூயாத் – கனியிருப்பக் காய் கவர்ந்தற்று

    என்ற விஷயம் மனதில் பசுமரத்தாணி போலப் பதிய வேண்டும். கருத்துக்கள் எதிர்க்கப்படலாம் நபர்களின் செயல்பாடுகளில் உள்ள குறைகள் சுட்டப்பட வேண்டும். கடுமை தவிர்த்து இதை நிச்சயம் செய்யலாம். என் ப்ரயாசை சபலமாக என் பழனியாண்டவன் துணையிருப்பான்.

  110. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    \ நான் 16 வயதிலேயே தமிழில் கதை கட்டுரைகள் எழுதத் தொடங்கிவிட்டேன். என் பின்னணி இப்படி இருக்கும் போது எனது அனுபவங்களை நான் புனைவாகவோ அல்லது உண்மை நிகழ்வாகவோ எழுதினால் அதில் மறைமுகமாக கிறிஸ்துவ மதத்தை உயர்த்தியோ அல்லது இந்து மதத்தை தாழ்த்தியோ எழுத எனக்கு என்ன வேண்டியுள்ளது? \

    அன்பின் ஜான்சன்.

    என்னுடைய சில சொற்கள் கடுமையாக இருந்து தங்களைப் புண் படுத்தியிருந்தது என்றால் என் க்ஷமாயாசனங்கள்.

    உங்கள் வ்யாசத்தை மதித்து போற்றி கருத்துப் பகிர்ந்தவன் நான் என்பதை ஏன் மறக்கிறீர்கள் என்பது புரியவில்லை?

    உங்கள் வ்யாசத்தில் உள்ள குறையாக நான் கண்ட ஒரே விஷயம் அதில் பகிரப்பட்ட ஹிந்து முஸல்மாணிய சஹோதரர்களைப் பற்றிய சம்பவம். அந்த நபர்களின் மதத்தைக் குறிக்காது பொதுவில் சொல்லியிருந்தாலும் தாங்கள் சொல்ல வந்த விஷயம் திண்ணமாகவே சொல்லப்பட்டிருக்கும்.

    உங்கள் வ்யாச நாயகி உங்களுக்கு மட்டுமல்ல இங்கு கருத்துப் பகிர்ந்த அனைவராலும் போற்றப்பட்டார் என்பதை மறக்க முயலாதீர்கள்.

    மறுக்கப்பட்டவை அவரை புனித ரெவரெண்டு தெரசாளுடன் ஒப்பிடப்பட்டமை. அதில் எனக்கு திண்ணமான கருத்துக்கள் உண்டு. தெளிவாகச் சொல்லியிருக்கிறேன்.

    முதலில் க்றைஸ்தவம் என்ற சமாசாரத்தையே வெறுப்பவன் நான் என்று எள்ளளவும் கருதாதீர்கள். என்னுடைய வ்யாசங்களிலோ என்னுடைய உத்தரங்களிலோ இது போன்ற ஒரு நிலைப்பாட்டை நீங்கள் கண்டிருக்க முடியாது. க்றைஸ்தவத்தை அதில் உள்ள குறைகள் மற்றும் நிறைகள் சார்ந்தே நான் புரிந்து கொள்கிறேன். என் கருத்துக்கள் சரியாக இருக்கலாம். தவறாகவும் இருக்கலாம். அதை தெளிவு செய்யத் தானே இங்கு விவாதிக்கிறோம்.

    க்றைஸ்தவத்தை உயர்த்தி அல்லது ஹிந்து மதத்தை தாழ்த்தி உங்களுக்கு என்ன ஆக வேண்டும்? சரியான கேள்வியே?

    நீங்கள் எழுதுவது மதம் சார்ந்த வ்யாசங்கள் இல்லை. மதங்கள் கடந்து பலராலும் வாசிக்கப்படும் பலருக்கும் பயனளிக்கும் மருத்துவம் சார்ந்த வ்யாசங்கள். அதில் மதம் உயர்த்திப்பிடிக்கப்படுகிறது அல்லது தாழ்த்தப்படுகிறது என்ற கருத்துக்கள் பகிரப்பட்டால் அது சரியா தவறா என்று ஒரு வரி விளக்கம் கூட தெளிவு கொடுக்கும். முன்னர் அவ்வாறு கொடுத்துள்ளீர்கள் என்றும் என்னால் சுட்டிக்காட்டவும் முடியும்.

    உங்கள் கருத்துக்களுக்கு (மதம் சார்ந்த) மாற்றுக்கருத்துக்கள் கொடுப்பவர்கள் எல்லாம் மதவெறியர்கள் என்பது ….. childish visualisation…..thats surprising since you say you have started writing since the age of 16.

    cheers!

  111. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    \ தங்கள் கற்பனையில் உள்ள ஒன் மென் ஆர்மி,பைமேன் ஆர்மி. என்று எல்லாம் அறிந்து தான் உத்திரம் போட வேண்டுமென்பதில்லை.\

    \கிருட்டிணக்குமார் ஆட்களின் ஜாதகத்தைதேடி அலைவதை விட்டுவிட்டு அவர்களின் கருத்துக்களுக்கு எதிர்விளக்கத்தை வைக்கவும். இல்லாவிட்டால் தமது கருத்தைச் சொல்லவும். \

    அன்பின் அய் / ஷாலி

    ஒரு நபர் பல பெயரில் கருத்துப் பதிவது தவறு என்பதை இந்த தள நிர்வாகிகள் மிக ப்ரத்யேகமாக பூர்வாவதாரங்களில் சுட்டியுள்ளனர்.

    \ கிருட்டிணக்குமார் ஆட்களின் ஜாதகத்தைதேடி \

    முதலில் நீங்கள் சொல்லும் கருத்தில் உங்களுக்கு நம்பிக்கை இருக்க வேண்டும்.

    பூர்வ அவதாரங்களில் எத்தனை முறை அமரர் ஸ்ரீ மலர்மன்னன் மஹாசயர் அவர்கள் கருத்துக்களைக் கருத்துக்கள் என்று பார்க்காது அவர் பார்ப்பனர் என்பதால் அவர் அவ்வாறு கருத்துப் பதிந்துள்ளார் என்று கருத்துப் பதிந்துள்ளீர்கள்.

    நீங்கள் அவருடைய ஜாதகத்தைப் பார்த்ததுண்டா? அல்லது அவரது ஜாதி சான்றிதழ் பார்த்ததுண்டா? ஏன் அவருடைய கருத்துக்களை கருத்துக்கள் என்று மட்டிலும் மறுத்து உங்கள் கருத்துக்களை சொல்லியிருக்க முடியுமே?

    Don’t preach about something in which you believe the least.

    \ I am willing to be correct if I am wrong.\

    Oops! you are wrong. that should have been ” willing to be corrected” — is it not?

    Cheers!

    1. Avatar
      IIM Ganapathi Raman says:

      உங்கள் கருத்தைச் சொல்லுங்கள். அக்கருத்தை ஒட்டியோ வெட்டியோ மற்றவர்கள் பேசுவார்கள். அது போதும் ! வேறு பேச்சு நேரத்தை விரயமாக்கும்.

  112. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    \ புனைப்பெயராரே,

    செயற்கைக் கால் தேவைப்படும் ஏழைகளுக்கு லட்சக் கணக்கான நிதிச் செலவின்றி இனாமாகச் செய்து தரும் இந்துமத மருத்துவ அறக்கட்டளைகள் தமிழ்நாட்டில் எங்குள்ளன ?\

    ஜெயபாரதன் சார், புனைப்பெயராரை ஒருமையில் அல்லது பெயர் சிதைத்து விளிக்காமலிருப்பதற்கு வாழ்த்துக்கள்.

    பாவம் சார் அவர். அப்படியே அவர் சொல்லி விட்டார் என்று வைத்துக்கொள்வோம்.

    நீங்கள் விட்டு விடுவீர்கள்? காதுகேக்காதோர் போட்டுக்கொள்ளும் மிஷின் ஹிந்து இயக்கங்கள் செய்கிறார்களா என்று supplementary போட்டுத் தாக்குவீர்களே

  113. Avatar
    ஷாலி says:

     //அன்பின் அய் / ஷாலி
    ஒரு நபர் பல பெயரில் கருத்துப் பதிவது தவறு என்பதை இந்த தள நிர்வாகிகள் மிக ப்ரத்யேகமாக பூர்வாவதாரங்களில் சுட்டியுள்ளனர்.//

    அன்பின் க்ருஷ்ணகுமார்ஜி, தொடர்ந்து என் மேல் அவதூறு சுமத்தி பொய்யுரைத்து வருவது தங்களுக்கு அசிங்கமாக தெரியவில்லையா? நான் பல பெயர்களில் பின்னூட்டம் போடுகின்றேன் என்று குற்றம் சுமத்தும் நீங்கள் அதை நிரூபிக்க முடியுமா?நான் திண்ணையில் ஆரம்பத்திலிருந்து இன்றுவரை ஷாலி என்ற ஒரே பெயரில்தான் எழுதுகிறேன்.பல பெயர்களில் எழுதி ஊரைத்திருத்த வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. நான் திருந்தினால் மட்டுமே எனக்கு நற்கதி.என் எழுத்தில் உங்களுக்கு சம்சயம் ஏற்படுகிறது என்கிறீர்கள். “ சந்தேகம் பிறந்துவிட்டால் சத்தியமும் ஜெயிப்பதில்லை,சத்தியத்தை துணைக்கழைத்தால் சாட்சி சொல்ல வருவதில்லை.” இதுதான் உண்மை.ஐயா! பெரியவரே! நான் எந்தப்பெயர்களில் மாற்றி மாற்றி எழுதுகிறேன்.அந்தப்பெயரையாவது வெளியிடவேண்டியதுதானே? நம்மிடையே இல்லாத மனிதரை விவாதத்துக்குள் இழுப்பது நாகரீகமல்ல.நீங்கள் மீண்டும் மீண்டும் மஹாசயர் சொன்னதாக சொல்லிக்கொண்டே இருக்கிறீர்கள். அடுத்தபடியாக திண்ணை தள நிர்வாகிகளுக்கு ஒரே நபர் பல பெயர்களில் எழுதினால் கண்டிப்பாக அவர்களுக்கு தெரிந்துவிடும். ஆகவே இனியும் கண்ணாமூச்சி காட்டுற வேலையை விட்டு விட்டு….. “சரக்கு!…. சரக்கு!!..சரக்கு இருந்தா அவிழ்த்து விடு! இல்லே ஸலாம் போட்டு ஓடிவிடு! காயமே இது பொய்யடா, வெறும் காற்றடைத்த பையடா மாயனாறாம் குயவன் செய்த மண்ணு பாண்டம் ஓடடா! “ குமுதம் திரைப்படத்தில் இடம் பெற்ற அருமையான பாடல். புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். இனியும், யார் என்ன சொன்னாலும் பொய்யைத் தவிர மெய் பேசேன், என்று முடிவு செய்து விட்டால் யார் என்ன சொல்ல முடியும்? நமக்குத் தெரிந்த பாடலை பாடி ஆறுதல் அடைய வேண்டியதுதான்.
    “ திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம், வருந்தாத உள்ளங்கள் வாழ்தென்ன லாபம்! இருந்தாலும், இறந்தாலும் பேர் சொல்ல வேண்டும், இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்….இவர் போல ..யாரென்று ஊர் சொல்ல வேண்டும்.” கண் போன போக்கிலே……..”

    1. Avatar
      IIM Ganapathi Raman says:

      கிருட்டிணக்குமாருக்கு இருப்பது பேரனோயியா என்றுதான் தெரிகிறது. கடுமையான கற்பனை ஜீரம். நம்மால் திருத்த முடியாது. அவர் சொல்லிக்கொண்டேயிருக்கட்டும் என விடவேண்டியதுதான். ஷாலியின் முடிவு சரி.

      கடைசிப்பாடல் சரி. அதைப்பாடி விடவேண்டியதுதான்.

  114. Avatar
    theevapriyaa saalaman says:

    கிறிஸ்துவம் மருத்துவத்தையும் கல்வியையும் மதமாற்ற சந்தைப் பொருளாகப் பயன்படுத்தியதை மிகவும் தீவீரமாக எதிர்த்தவர் மகாத்மா காந்தி. ஆயினும் தங்களின் மூடநம்பிக்கை உந்துதலிலானாலும் சேவை செய்தவர் அனைவரும் போற்றுதலுக்குறியவர்களே! ஆனால் இதில் சகோதரி தெரசா பெயர் திணிக்கப்பட்டது தேவையற்றபடி திருப்ப பல குழப்பங்கள்.
    தெரசா அம்மையார் தன் கீழுள்ள அனைத்து செவிலியரையும், நோயாளி அனுமதியின்றி, ஜபம் செய்வதாகச் சொல்லி ஞானஸ்நானம் செய்ய வைத்தவை அனைவரும் அறிந்த வரலாறு. மேலும் ஒரு சின்ன கேள்வி, அவர் பணியின் தூண் அவர் கீழ் இருந்த செவிலியர், இன்றும் பணி தொடர்கிறது, யாரேனும் இன்றைய தலைவி பெயர் சொல்ல இயலுமா? வெளிநாட்டிலிருந்து வந்து சேவை செய்யும் ஒரு தேவதை என மதமாற்றப் பணியை மறைக்க மிகைப்படுத்தப்பட்ட கட்டுக்கதையே தெரசா அதீதங்கள்.

    ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து- தமிழனின் வேரில் வென்னீர் உற்றும் அற்புதப் பணியை மிஷ-நரி வழியை வைத்தியர் தொடர்கிறீர்களே?

    //நம்து சங்க காலத் தமிழர்கள் தமிழ் நாட்டைத் தவிர அந்த 600 வருடங்களில் வட நாடு சென்றிருக்கும் வாய்ப்பு இருந்திருக்குமா? அநேகமாக இல்லை என்றே கூறலாம். சிலப்பதிகாரம் அதற்குப் பின் ( சங்க காலத்துக்குப் பின் ) எழுதப்பட்டது. அப்போது வேண்டுமானால் காவிரிப்பூம்பட்டிணத்தில் யவணர்களுடன் சேர்ந்து வாணிபம் புரிய ரோமாபுரி சென்றிருக்கலாம். அப்படியெனில் சங்க இலக்கியங்களில் இல்லாத கடவுள்கள் ( தொல்காப்பியத்தில் சொன்னபடி ) எப்படி தமிழ் மக்களிடையே வந்தனர்? அவர்களும் இங்கே இறக்குமதி செய்யப்பட்டவர்கள்தானே?
    இதிலிருந்து என்ன புரிகிறது அன்புள்ள பவள சங்கரி?
    இன்று தமிழ் நாட்டில் நாம் அனைவரும் வழிபடும் பெரும்பாலான கடவுள்கள் ( இந்துக் கடவுள் ,இஸ்லாமியக் கடவுள், கிறிஸ்துவக் கடவுள் ) வெளியிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவர்கள்தான்! //
    http://ankaraikrishnan.wordpress.com/2012/08/26/veetham/
    http://chennaipluz.in/wp/tamilar/2013/09/04/%e0%ae%a4%e0%af%8a%e0%ae%a9%e0%af%8d%e0%ae%ae%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%99/
    http://chennaipluz.in/wp/tamilar/2013/08/24/the-maritime-capabilities-of-the-ancient-tamils/
    http://ankaraikrishnan.wordpress.com/2010/06/29/%E0%AE%85%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF/
    http://ankaraikrishnan.wordpress.com/2010/06/29/%e0%ae%87%e0%ae%b0%e0%ae%be%e0%ae%b5%e0%ae%a3%e0%ae%a9%e0%af%88-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-%e0%ae%9a%e0%af%8a/
    http://ankaraikrishnan.wordpress.com/2010/06/29/sanga-kaalam/
    http://ankaraikrishnan.wordpress.com/2010/06/27/print/
    சிலப்பதிகாரம் – சிலம்பின் காலம் – இராம.கி
    http://newindian.activeboard.com/t50666132/topic-50666132/
    சங்க இலக்கியமான அகநானூறு 141-ஆம் பாடலில் தீபாவளி.

    மழை கால் நீங்கிய மகா விசும்பில்
    குறுமுயல் மறுநிறம் கிளர்மதி நிறைந்த
    அறுமீன் சேரும் அகவிருள் நடுநாள்
    மறுகு விளக்குறுத்து மாயை தூக்கிப்
    பழவிறல் மூதூர்ப் பலருடன் துவன்றிய
    விழவுடன் அயர வருகத்தில் அம்ம !
    அகநானூறு 141-ஆம் பாடல் இயற்றியவர் நக்கீரர்

    அறுமீன் சேரும் அகவிருள் நடுநாள்- என்பது அமாவாசை நாளாம்.
    http://www.tamilvu.org/courses/degree/p202/p2022/html/p202213.htm

    பாடல்: மதுரைக் காஞ்சி
    கவிஞர்: மாங்குடி மருதனார்
    திணை: பாடாண்
    வரிகள்: 590-605
    (தலையாலங்கானத்துச் செரு வென்ற) பாண்டியன் நெடுஞ்செழியனைப் பாடியது…
    கணம் கொள் அவுணர்க் கடந்த பொலந் தார்
    மாயோன் மேய ஓண நன்னாள்

    கொல்லப்பட்ட அரக்கன் – தீமை வெல்லப்பட்டது.
    இருள் நீங்கியது. ஓளி வருகிறதின் அடையாளமாக சங்க காலத்தில் விளக்குகள் ஏற்றி கொண்டாடினர்.
    அறிவியல் ஞானம் பெருக- தீமை அழிவதைப் பட்டாசு கொழுத்தி கொண்டாடுகிறோம்.
    சங்க கால எழுத்துக்களின் காலம் பற்றிய தீவீர ஆய்வாளர் காலம் சொல்கிறீறே, இதே போல் பைபிளின் ஆய்வாளர் கண்டுள்ள காலம் சொல்லாமல் மறப்பதேன்?

    http://devapriyaji.wordpress.com/%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1/

    1. Avatar
      IIM Ganapathi Raman says:

      சாலமோன்!

      கட்டுரை திசை திரும்பப்பட்டிருக்கிறது. சரி. நீங்கள் திருப்பாமல், உங்கள் பங்கிற்கு கட்டுரைப்பொருளைப்பற்றிப் பேசலாமே? அதாவது, ஐடா ஸ்கட்டர் அம்மையார் மிசுநோரிகளுக்குப்பிறந்தவர். கட்டுரையாளர் அந்தப்பெண்மணி தான் கண்ட எளிய மக்கள் மருத்துவ உதவியில்லாமல் மடிவதைக்கண்டு பொருக்காமல் மருத்துவசேவை புரிந்து மடிந்தார் என்கிறார்.

      ஐடா ஸ்கட்டர் ஒரு மதமாற்றியா? அவரின் சேவை உள்ளோககம் கொண்டதா? உங்கள் கருத்தை ஆதாரங்களோடு வைககவும்.

      எனக்குத் தெரியாது. எனக்குத் தெரிந்ததெல்லாம், வேலூர் மக்களும் தமிழக மக்களும் ஐடாவைப் புகழ்ந்து நன்றிபாராட்டிய்தாகத்தான் தெரிந்தது. நான்றிந்தவரை எவரும் அவரை இழித்துரைக்கவில்லை.

      உங்களுக்கு என்ன தெரிந்தது என்று எங்களுக்குச் சொல்லலாமே சாலமோன் சார்? அதைவிட்டு சும்மா சங்ககாலத்தைப்பற்றி எழுதினால் மென்மேலும் வேண்டா பாதையில் அல்லவா இழுத்துச்செல்கிறீர்கள்! Discover the truth and enlighten us.

  115. Avatar
    IIM Ganapathi Raman says:

    //நீங்களோ,நானோ,அல்லது டாக்டர்.ஜான்சனோ தங்கள் நம்பும் மதத்தை தோளில் தூக்கித்தான் காப்பாத்த வேண்டிய நிலைமையில் எம்மதமும் இல்லை.எவருக்கும் தங்கள் மதத்தை காக்கும் காவலர் பொறுப்பை கடவுள் கொடுக்கவில்லை.பின்பற்றத்தான் மதங்கள் சொல்கின்றன.காக்கிற வேலையல்ல.அதை கடவுள் பார்த்துக்கொள்வார்.ஆகவே வேற்றுமையை மறந்து மனித நேயம் வளர, வளர்க்க நாம் அனைவரும் பாடுபடுவோம். சாயி பாபாவுக்காகவோ,அல்லது மதர் தெரசாவுக்காகவோ இம்மாபெரும் பிரபஞ்சம் படைக்கப்படவில்லை.இம்மனிதர்களை விமரிசிப்பதால் இந்து மதமோ, கிறிஸ்தவ மதமோ தரம் தாழ்ந்து விடுவதில்லை.நாம் அப்படி நினைத்து நம்மை ஏமாற்றிக் கொண்டு மனித மாண்புகளை மண்ணில் சாய்க்க வேண்டியதில்லை. மேலும் ஓய்வு பெரும் வயதில் தேவையில்லாத டென்ஷனை ஏற்றிக் கொண்டு துன்பப்படவேண்டியதில்லை.அனைவரும் கருத்தை சொல்லுவோம். ஏற்றுக்கொள்வதும் எடுத்தெரிவதும் அவரவர் அறிவைப்பொறுத்த விஷயம். “யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்.” என்ற எண்ணத்தோடு எழுதினால் எவருக்கும் நன்மையே!//

    This is a good conclusion to close comments here.

  116. Avatar
    சி. ஜெயபாரதன் says:

    மும்மூர்த்திகள் எனப்படும் பாண்டியனாரும், புனைபெயராரும், கிருஷ்ணகுமாரும் இதுவரைத் தமிழ்நாட்டில் நிலவப்பட்டு, நிதி செலவழித்து ஏழைகளுக்கு இனாமாகச் செயற்கைக் கால் பொருத்தும் கிறித்துவ அறக்கட்டளைகள் போல், ஓர் இந்துமத மருத்துவ அறக்கட்டளையின் விபரத்தைத் திண்ணையில் அறிவிக்க இயலவில்லை.

    சி. ஜெயபாரதன்

    1. Avatar
      paandiyan says:

      are you really joking?? for your question its answered already and you can see those updates on the top.
      and one more is here..
      கர்நாடக மார்வாடி சமாஜ் சார்பில் இலவச செயற்கைக் கால் பொருத்தும் முகாம் பெங்களூரில் ஆகஸ்டு 11-ஆம் தேதி நடைபெறுகிறது.

      இதுகுறித்து கர்நாடக மார்வாடி சமாஜ் வெளியிட்ட அறிக்கை:

      கர்நாடக மார்வாடி சமாஜ் அமைப்பு சார்பில், போலியோ நோயால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு ஆண்டுதோறும் செயற்கைக் கால் வழங்கும் முகாம் நடைபெறுகிற. அதன்படி, நிகழாண்டு, வருகிற ஆகஸ்ட் 11-ஆம் தேதி பெங்களூர், ஜெயநகர், முதல் பிளாக்கில் உள்ள மகாராஜா அக்ரசென் பவனில் (அசோக் பில்லர் அருகில்) காலை 9 முதல் 3 மணி வரை இந்த முகாம் நடத்தப்படுகிறது.

      இதில் பங்கேற்று பயனடைய விரும்புவோர் 96322-24056, 934217-11110 ஆகிய கைபேசி எண்களுக்குத் தொடர்பு கொண்டு தங்களது பெயர்களைப் பதிவு செய்து கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

      since this was over but nothing wrong to check with them over the phone and request the next cycle.

  117. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    \ மீண்டும் மீண்டும் மஹாசயர் சொன்னதாக சொல்லிக்கொண்டே இருக்கிறீர்கள். அடுத்தபடியாக திண்ணை தள நிர்வாகிகளுக்கு ஒரே நபர் பல பெயர்களில் எழுதினால் கண்டிப்பாக அவர்களுக்கு தெரிந்துவிடும். ஆகவே இனியும் கண்ணாமூச்சி காட்டுற வேலையை விட்டு விட்டு….. “சரக்கு!…. சரக்கு!!..சரக்கு இருந்தா அவிழ்த்து விடு! இல்லே ஸலாம் போட்டு ஓடிவிடு! காயமே இது பொய்யடா, வெறும் காற்றடைத்த பையடா மாயனாறாம் குயவன் செய்த மண்ணு பாண்டம் ஓடடா! “ \

    அப்பப்பா!

    அன்பர் ஷாலி! ஒரே வரி போதுமே நீங்கள் பல பெயரில் எழுதுவதில்லை என்று சொல்ல.

    உங்களுடன் இது சம்பந்தமான வாதம் இருக்காது.

    \ ஒரே நபர் பல பெயர்களில் எழுதினால் கண்டிப்பாக அவர்களுக்கு தெரிந்துவிடும். \

    சரியாக் கண்டுபிடித்து விட்டீர்களே. அதனால் தான் ஒருமுறை அப்படிக் கருத்துப் பதியும் அன்பருக்கு தள நிர்வாகிகள் அதை சுட்டிக்காட்டி நிறுத்தினார்கள்.

  118. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    அன்பின் ஜான்சன் மற்றும் அன்பு சஹோதரி பவளசங்கரி அவர்கள் கவனத்திற்கு

    க்றைஸ்தவ மற்றும் இஸ்லாமிய மதத்தைச் சார்ந்த பலர் பிற மதங்களைக் காழ்ப்புடன் அணுகுகின்றனர் என்று பலரும் கருத்துக்கொண்டுள்ளது பெரிதல்ல. உலகில் சமாதான தூதர் என்று அறியப்படும் மதிப்பிற்குறிய தலாய் லாமா இவ்வாறு கருத்துக்கொண்டுள்ளார். அவர் செக் குடியரசில் பேசிய விஷயத்தை அன்பர் ப்ரகாஷ் சங்கரன் காந்தி-இன்று தளத்தில் பகிர்ந்துள்ளார்கள்.

    http://www.gandhitoday.in/2013/09/blog-post_16.html

    \ “சில கிறிஸ்தவ, இஸ்லாமிய மதத்தவர்கள் பிற மதங்களை மிகவும் காழ்ப்புடன் அனுகுகின்றனர். அது மிகத் தவறு.\

  119. Avatar
    N Sivakumar, New Delhi says:

    வணக்கம் டாக்டர்! என்னுடைய கல்லூரி காலத்தில் வேலூர் கிறுத்துவ மருத்துவமனைக்கு சென்று இருக்கிறேன்.. எலும்பு மஜ்ஜை பிரிவு இந்தியாவிலேயே அப்போது இரண்டு இடத்தில் தான் இருந்ததாக கூறினார்கள்.. என்னுடைய சித்தப்பா சிகிச்சைக்காக 3,4 நாட்கள் அங்கே தங்கியிருந்தேன்… இந்தியாவில் இப்படி ஒரு மருத்துவமனையா என இன்று வரை வியக்கிறேன்… சாக வேண்டியவரை காப்பாற்றி அனுப்பினார்கள், அதும் மிக சொற்ப தொகை செலவில்… அப்போது டாக்டர். ஐடா என்னும் மாபெரும் மருத்துவ செம்மலை பற்றி சற்று கேட்டு அறிந்தேன்… தற்போது தங்களுடைய எழுத்துக்கள் அவரை பெருமைப்படுத்துவதோடு மேலும் அனைவரும் அறிய வழிவகை செய்கின்றன. சிறியவன் வணங்குகின்றேன் டாக்டர். ஐடா அவர்களையும், தங்களையும்…

  120. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    \ ஆயினும் தங்களின் மூடநம்பிக்கை உந்துதலிலானாலும் சேவை செய்தவர் அனைவரும் போற்றுதலுக்குறியவர்களே! ஆனால் இதில் சகோதரி தெரசா பெயர் திணிக்கப்பட்டது தேவையற்றபடி திருப்ப பல குழப்பங்கள்.\

    உங்கள் வரவு நல்வரவு ஆகுக ஸ்ரீமான் தேவப்ரியா சாலமோன் அவர்களே.

    கிட்டத்தட்ட இதே கருத்து என்னால் பகிரப்பட்டது. இன்னமும் சற்று மாறுதலுடன்.

    ஆயினும் தங்களின் நம்பிக்கை உந்துதலிலானாலும் சேவை செய்தவர் அனைவரும் போற்றுதலுக்குறியவர்களே! ஆனால் இதில் புனித ரெவரெண்டு தெரசாள் பெயர் திணிக்கப்பட்டது தேவையற்றபடி திருப்ப பல குழப்பங்கள்.

    இந்த கைங்கர்யத்திற்கு பாத்ரமானவர் இந்த தளத்தில் க்றைஸ்தவ மதத்தை மட்டிலும் புகழ்ந்து சமயம் கிடைக்கும் போதெல்லாம் ஹிந்து மதத்தை இகழும் அன்பர் ஸ்ரீ ஜெயபாரதன்.

    இதைச் சொன்னதற்காக அன்பர் ஜான்சன் அவர்கள் என்னையும் ஸ்ரீமான் புனைப்பெயரில் மற்றும் ஸ்ரீமான் பாண்டியன் போன்றோரை மதவெறி கொண்டவர்கள் என்று அடையாளப்படுத்த முனைகிறார்.

    இந்த விஷயத்தையே தொடாது……. இங்கு கருத்துப்பகிர்ந்த ஒரு நபர் கூட ஐடா அம்மையாரின் தன்னலம் கருதா……மதம் சாராத பணியை….. போற்றிய பின்னரும் கூட….. வ்யாசத்தின் முக்ய அம்சத்தை போற்றியிருப்பினும் கூட……அன்பர் ஜான்சன் அவர்கள் (அன்பு சஹோதரி பவளசங்கரி அவர்களும்) …… ஏதோ எல்லோரும் ஐடா அம்மையாரின் பணியைக் குறை கூறுவது போல தோற்றமளித்து ஒரு கருத்துப்பகிர்வது ஒரு எழுதாப்புறம் என்றால்……புனித ரெவரெண்டு தெரசாளின் பணியை ஐடா அம்மையின் பணியுடன் ஒப்பிட முனையும் அபத்தத்தை…… . கபள சோற்றில் பூஷணிக்காயை மறைக்கும் செயல்.

    வ்யாசம் சமர்ப்பித்த அன்பர் ஜான்சன் அவர்கள் மேற்கண்ட படிக்கு வாதிடுகையில்…….
    அன்பின் அய் அவர்களும் அன்பின் ஷாலி அவர்களும் எழுதாப்புறத்தை அன்பர் ஜான்சன் அவர்களுடன் ஓங்கி வாசித்தும் விவாதிக்க வேண்டிய விஷயத்தை அறவே விவாதிக்காது மறைக்க முயலவும்…..மேலும் வ்யாசத்துடனோ பேசுபொருளுடனோ…..அறவே சம்பந்தமில்லாத (சைவ வைஷ்ணவங்கள் …தமிழர் சமயமா….இத்யாதி) விஷயங்களில் கவனத்தை செலுத்துவதும்……(பல முறை விவாதிக்க வேண்டிய விஷயம் பற்றி நான் திரும்பத் திரும்ப அழுத்தந்திருத்தமாக உரக்கச்சொல்லியும்)…..நேர்மையான விவாதத்தில் கவனத்தைச் செலுத்தாமை என்று திண்ணமாகச் சொல்ல முடியும்.

  121. Avatar
    paandiyan says:

    //மும்மூர்த்திகள் எனப்படும் பாண்டியனாரும், புனைபெயராரும், கிருஷ்ணகுமாரும்//

    திண்ணை தள நிர்வாகிகள் இந்த மாதரி நக்கல் கலந்த கமெண்ட் ரிமூவ் பண்ணவேண்டும் என்பது இல்லை என் கோரிக்கை . அதே பாணியில் பதிலடி தரும்போது சென்சார் பண்ணாமல் பிரசுரம் பண்ணவேண்டும் என்பது வேண்டுகோள். ஒரு மதத்தை நையாண்டி பண்ணுவது , கமெண்ட் போடுவோரை கேலி பண்ணுவது எல்லாம் இங்கிலீஷ் கட்டுரயை, தமிழ்ல் போட்டு வெட்டி வேலை பார்ப்பது –சைகோ கூட இருக்கலாம். டாக்டர். ஜான்சன் இந்த வியாதியஸ்தருக்கு இங்கு உதவி பண்ணலாம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *