தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

13 செப்டம்பர் 2020

துகில்

ப மதியழகன்

Spread the love

 

 

வசந்தத்தின்

மகிழ்ச்சியான அழைப்பை

ஏற்காது

நான் வாயிலில் நிற்கிறேன்

சிநேகிதிகளின் கணவன்களுடன்

எப்படி பழக வேண்டும் என

கற்றுக் கொண்டிருக்கிறேன்

எந்தப் பிரச்சனையில்

தலையிடுவது

எந்த சிக்கல்களில்

விலகி இருப்பது என்று

நானே முடிவு செய்கிறேன்

குழந்தைகளின் படிப்பைப் பற்றி

விசாரிக்கும் போது

மனதில் மண்புழு

நெளிகிறது

வரலெட்சுமி விரதத்தில்

அவள் உச்சித் திலகம்

இட்டுக்கொண்ட போது

மனம் ஏனோ

தீப்பற்றி எரிகிறது

மனைவியிடம்

சொல்ல முடியாத ரகசியங்கள்

இன்னும் இருக்கின்றன

தரக்குறைவான எண்ணங்கள்

எழும் போதெல்லாம்

புத்தகங்களில்

புதைந்து கொள்கிறேன்

துகிலுரித்துப் பார்க்கும்

துச்சாதனன் புத்தி

இல்லையென்றாலும்

ஆடை விலகலை நோக்கி

கண்களை கொண்டு

செல்லும்

பெரும்பான்மை நபர்களில்

நானும் ஒருவன்.

 

Series Navigationஆமென்அப்பா என்கிற ஆம்பிளை

2 Comments for “துகில்”

 • ஜி.ஜே.தமிழ்ச்செல்வி says:

  குழந்தைகளின் படிப்பைப் பற்றி

  விசாரிக்கும் போது

  மனதில் மண்புழு

  நெளிகிறது

  இயல்பானவனின் மன உணர்வு

 • Mahakavi says:

  ஆடை விலகும்போது யாருக்குத்தான் பார்க்க ஆசை இருக்காது? முற்றும் துறந்த முனிவனுக்கே ஆசை இருந்ததே. விசுவாமித்திரன் ஆடையில்லாத மேனகையைப் பார்த்ததும் எழுந்திருந்ததன் விளைவு தான் சகுந்தலை. நமக்கேன் கூச்சம்?


Leave a Comment

Archives