வால்ட் விட்மன் வசனக் கவிதை -41 என்னைப் பற்றிய பாடல் – 34 (Song of Myself) கடந்த காலம், நிகழ் காலம்.. !

This entry is part 21 of 22 in the series 15 செப்டம்பர் 2013

     (1819-1892) (புல்லின் இலைகள் –1)   மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா     கடந்த காலம், நிகழ் காலம் இரண்டையும் வெறுமை ஆக்கினேன், ஊற்றி நிரப்பவும் செய்தேன். புறப்படு நீ அடுத்து வருமென் எதிர்காலப் பக்க மடிப்பை நிரப்பிட ! என்சொல் கேட்பவர் அங்கே இருக்கிறார் ! என்னோ டென்ன அந்தரங்கம் பகிர்ந்திடப் போகிறாய் ? முகத்தை நோக்கு நான் அந்திப் பொழுதின் பக்கத்தை நுகர்ந்திடும் போது ! […]

சரித்திர நாவல் “போதி மரம்” இறுதி அத்தியாயம் – 36

This entry is part 20 of 22 in the series 15 செப்டம்பர் 2013

நிறைவாகச் சில – படைப்பாளியின் பக்கமிருந்து முதலில் இந்த நாவலைத் தொடராக வெளியிட்ட திண்ணை இணையத்தாருக்கு மனப்பூர்வமான நன்றிகள். தொடர்ந்து என்னைத் தட்டிக் கொடுத்த சக எழுத்தாளர்களுக்கும். இது சரித்திர நாவல் என்று எப்படி என்னால் உரிமை கொண்டாடப் படுகிறது? புத்தரின் வரலாற்றைக் கதை வடிவமாகக் கொடுத்தால் புத்தரின் கதை என்று தானே சொல்ல வேண்டும்? ஒரு சினிமாவுக்கும் ஒரு ஆவணப் படத்துக்கு என்ன வித்தியாசம்? அதுவே ஒரு சரித்திரக் கதைக்கும் ஒரு சரித்திர நாவலுக்குமான வித்தியாசம். […]

அப்பா என்கிற ஆம்பிளை

This entry is part 19 of 22 in the series 15 செப்டம்பர் 2013

ப.அழகுநிலா சிங்கப்பூர்   “அப்பதான் மொத, மொதல்ல அவளுக்கு அப்பாவை புடிக்காம போச்சு” என்று வசந்தாவிடம் சத்தமாக சொல்லிக்கொண்டிருந்த தேன்மொழி, அறைக்குள் நுழைந்த அரசியை பார்த்தவுடன் சட்டென்று பேச்சை நிறுத்திக்கொண்டாள். அரசியிடமிருந்து வந்த மீன் கவிச்சி, வீட்டில் மீன் குழம்பு என்று சொல்லியது. “அக்கா! ஒன்னையும், வசந்தாக்காவையும் அம்மா சாப்பிட கூப்பிடுது” ன்னு சொல்லிக்கொண்டே அலமாரியை திறந்து துண்டையும், உள்பாவாடையையும் எடுத்தவள், “ஆமாம்! நான் உள்ள நொழைஞ்சப்ப யாருக்கோ அப்பாவை புடிக்காம போச்சுன்னியே யாருக்குக்கா?” என்று அவர்கள் […]

துகில்

This entry is part 18 of 22 in the series 15 செப்டம்பர் 2013

    வசந்தத்தின் மகிழ்ச்சியான அழைப்பை ஏற்காது நான் வாயிலில் நிற்கிறேன் சிநேகிதிகளின் கணவன்களுடன் எப்படி பழக வேண்டும் என கற்றுக் கொண்டிருக்கிறேன் எந்தப் பிரச்சனையில் தலையிடுவது எந்த சிக்கல்களில் விலகி இருப்பது என்று நானே முடிவு செய்கிறேன் குழந்தைகளின் படிப்பைப் பற்றி விசாரிக்கும் போது மனதில் மண்புழு நெளிகிறது வரலெட்சுமி விரதத்தில் அவள் உச்சித் திலகம் இட்டுக்கொண்ட போது மனம் ஏனோ தீப்பற்றி எரிகிறது மனைவியிடம் சொல்ல முடியாத ரகசியங்கள் இன்னும் இருக்கின்றன தரக்குறைவான எண்ணங்கள் […]

நட்பு

This entry is part 3 of 22 in the series 15 செப்டம்பர் 2013

                                                 டாக்டர் ஜி. ஜான்சன் டிசம்பர் மாதம் இருபதாம் நாள் மாலை. வீட்டுத் தோட்டத்தில் மலர்களின் அழகில் மயங்கியிருந்த நேரம். வீட்டு வாசலில் ஒருவர் என்னைத் தேடி வந்திருந்தார். அவரை நான் அதற்குமுன் பார்த்ததில்லை. நான் அவரிடம் சென்று நின்றேன். அவரின் கையில் ஒரு பை இருந்தது.அவர் என் பெயரைச் சொல்லி அது நானா என்று கேட்டார் . நான் ஆம் என்றேன். ” டாக்டர், நான் குன்றக்குடி மடத்திலிருந்து வருகிறேன். இதை அடிகளார் உங்களிடம் சேர்ப்பிக்கச் […]

தனித்து விடப்பட்ட பாதையில் தனித்து நடந்து வந்த ஒரு மனிதர் – பி.என். ஸ்ரீனிவாசன்

This entry is part 8 of 22 in the series 15 செப்டம்பர் 2013

கடந்த சனிக்கிழமை செப்டம்பர் மாதம் 7-ம் தேதியன்று பி.என். ஸ்ரீனிவாசன் தனது 85-ம் வயதில் காலமானார் என்ற செய்தியை நான் இணையத்தில் தான் படித்தேன். அவ்வப்போது இலங்கைத் தமிழர் பற்றிய செய்திகளை, தமிழ் நாட்டுச் செய்திகளைத் தொகுத்து திருவள்ளுவர் இலக்குவனார் அனுப்பும் மடல் ஒன்றில் இந்த செய்தியும் இருந்தது. தமிழ்த் தினசரிப் பத்திரிகை எதிலும் இந்த செய்தி வந்துள்ளதா என்பது எனக்குத் தெரியாது. வாரப் பத்திரிகைகள் எதுவும் இதை ஒரு பொருட்டாகக் கருதுமா என்பதும் எனக்குத் தெரியாது. […]

ஐம்பது வருடங்களின் வளர்ச்சியும் மாற்றங்களும் – (3)

This entry is part 9 of 22 in the series 15 செப்டம்பர் 2013

இந்த இடத்தில், சந்தர்ப்பத்தில் சல்மா என்னும் கவிஞரைப் பற்றிப் பேசுவதும் பொருத்தமாக இருக்கும். அதற்கான காரணங்கள் சுவாரஸ்யமானவை பல. சல்மா தன் கவிதைகளில் தன் சொந்த துயரங்களையும் இழப்புகளையும் பற்றித் தான் பேசுகிறார் என்று தோன்றும். ஆனால் அவை உண்மையில் அத்தோடு நிற்பதில்லை. இறக்கை முளைத்துப் பறக்கத் தொடங்கி விடுகின்றன. அக்கவிதைகள் வேறு நிலைகளுக்கு நம்மை இட்டுச் செல்கின்றன. தன்  சொந்த துயரங்கள், தன் குடும்பத் துயரங்களாக, ஒரு சமூகத்தின் துயரங்களாக, அவர் சார்ந்திருக்கும் மதத்தின் நிலைப் […]

ஆமென்

This entry is part 17 of 22 in the series 15 செப்டம்பர் 2013

    விலகுங்கள் எல்லோராலும் ஏமாற்றப்பட்டவன் வந்து கொண்டிருக்கிறான் அவனுக்கு எது பொய் எது மெய்யென்று தெரியாது ரகசியங்களை சுமந்து கொண்டு திரிபவர்கள் அவன் பக்கம் திரும்பிப் பார்ப்பதில்லை அர்த்தமிழந்த வாழ்க்கையின் பக்கங்களை நிரப்பிக் கொண்டிருக்கிறான் மின்மினி வெளிச்சமாவது தேவை அவன் உறங்குவதற்கு விடியாத இரவுகள் அவன் வரப்பிரசாதம் வாழ்க்கைப் பந்தயத்தில் கடைசியாகக் கூட அவன் வருவதில்லை மேகங்களற்ற வானத்தின் அழகை அவன் பருகுவதில்லை வேலை நிமித்தமாக வெளியே செல்லும் போது நடுவழியில் அவன் பெயரைக் கூட […]

ஞாநீ

This entry is part 16 of 22 in the series 15 செப்டம்பர் 2013

    மீட்பரின் பாதங்களைக் கழுவிக் கொண்டிருக்கிறேன் மெசியா தான் இவர் என்று நம்பிக் கொண்டிருக்கிறேன் அவருக்கு பயந்து ஓய்வு நாளில் ஒன்றும் செய்வதில்லை நியாத்தீர்ப்பில் மீண்டும் சந்திக்க வேண்டியிருக்கும் அவரை இந்த விதை அழியப் போகிறது என்று முன்பே அவர் சொன்னது எங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை உங்களிடையே பிரிவினையை ஏற்படுத்த வந்ததாக அவர் கூறியது மலையில் பட்டு எதிரொலித்தது கடவுளைக் காண வேண்டுமா எனக் கூறி என்னை கடலில் அமிழ்த்திய போது தான் எனக்கு […]