திண்ணையின் இலக்கியத் தடம் – 2

This entry is part 1 of 27 in the series 29 செப்டம்பர் 2013

நவம்பர் 6, 1999 ல் இரண்டு பதிவுகளைக் காண்கிறோம். முதலாவது பசவைய்யாவின் கவிதை – உன் கவிதையை நீ எழுது. அமரராகி விட்ட சுந்தர ராமசாமி கவிதைகளை ‘பசவைய்யா’ என்னும் பெயரில் எழுதினார் என்பது வாசகர்களுக்குத் தெரிந்திருக்கும். சென்ற பகுதியில் நாம் குறிப்பிட்டது போல நாம் இலக்கிய / சமூகக் கட்டுரைகளை மையப்படுத்துகிறோம் இத்தொடரில்.

மற்றொரு பதிவு சுரேஷ்குமார் இந்திரஜித்தின் “சிறுமியும் வண்ணத்துப் பூச்சிகளும்” என்னும் கட்டுரை வடிவிலான கதை. இந்தத் தலைப்பில் நாவல் எழுதிய ஜப்பானிய எழுத்தாளர் டோகுடோ ஷோனின் அவர்களுடன் இந்த நாவல் உருவான விதம் பற்றி இந்திரஜித் உரையாடினார். அதைப் பற்றிய பதிவு இது. ஷோனின் தமக்கு ஆதரிசமான ஒரு எழுத்தாளராக யாசுநாரி கவாபாட்டாவைக் கருதினார். யாசு பலதரப்பட்ட மனிதர்களுடன் பழகினார் என்று குறிப்பிட்டு ஒரு நிகழ்ச்சியை குறிப்பிடுகிறார். அதில் ஒரு வாடகைக் கார் ஓட்டுனர் தனது மனைவியின் மரணத்துக்குப் பின் மறுமணம் செய்து கொள்ளாமல் இருப்பதாகவும் மற்றவர் கட்டாயப் படுத்துகின்றனர் என்றும் தன் பிரச்சனையை யாசுவிடம் கூறுகிறான். தியாகியாக பாவித்து இயங்கிக் கொண்டே இருப்பது மனத்துக்கு சோர்வைத் தரும் என்று யாசு கூறுகிறார். மறுமணத்தை மனம் விரும்பும் பொழுது அதை செய்துகொள்வது மனத்துக்கு உற்சாகம் தரும். ஆனால் மறுமணத்துக்குப் பின்னும் தியாகம் செய்ய முயல்வதாக எதையும் செய்யும் முன் அந்த இளைஞர் யோசிக்க வேண்டும் என்கிறார்.

இன்னொரு சந்தர்ப்பத்தில் ஷோனின், யாசு இருவரும் ஒரு பெண்ணை சந்திக்கின்றனர். அவர் ஒரு சிறுமி தன்னுடன் பகிர்ந்து கொண்ட கற்பனைகள் பற்றிக் கூறுகிறார். சிறுமி மேசையிலிருந்த ஒரு கண்ணாடிக் கோளத்தைப் பார்த்த போது அதனுள் நுழைவது போலவும், வண்ணத்துப் பூச்சிகளைப் பார்க்கும் போது அவற்றுடன் பறப்பது போலவும் கற்பனை செய்கிறாள். “சிறுமியும் வண்ணத்துப் பூச்சிகளும்” நாவல் ஒரு சிறுமியின் அறிவு கூரமையும் கற்பனைவளம் மிக்க சிந்தனைகளும் பெற்றோர், பள்ளி மற்றும் சமூகத்தால் சிதைக்கப் படுவது பற்றியது. (www.thinnai.com/index.php?module=displaystory&story_id=199110613&edition_id=19991106&format=html )

******************************

*******
நவம்பர் 14 1999 இதழ்:”அசோகமித்திரனின் நம்பிக்கை – ஒரு கதை ” என்னும் தலைப்பில் அமரராகி விட்ட நகுலன் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். ஒரு தையற்கடைக்காரர் தமது கடையில் ஒரு சித்தரின் புகைப்படத்தை மாட்டியிருக்கிறார். ஆனால் அவருக்கு சித்தரின் மீது விசுவாசம் இல்லை. விசாரிக்கும் போது அந்த சித்தர் தனது மகன் உயிருக்குப் போராடும் போது அவனைக் காப்பாற்றாமல் ஒரு லட்சுமி விக்கிரகத்தைத் தன் கையில் கொடுத்ததாகக் கூறுகிறார் தையல்காரர். இந்த அளவு கதையைப் பற்றிக் குறிப்பிட்டு கதை மிக நுட்பமாக வந்திருப்பதாகக் குறிப்பிடுகிறார் நகுலன். ((www.thinnai.com/index.php?module=displaysection&edition_id=19991114&format=html)

ஒருத்தருக்கு ஒருத்தர் என்னும் தலைப்பில் வண்ணதாசன் கதையும், நீ என்ற தலைப்பில் ரேகா ராகவனின் கவிதையும் நவம்பர் 14 1999 இதழில் வெளிவந்துள்ளன.

************************************

நவம்பர் 20 இதழில் விக்கிரமாதித்யனின் “வள்ளுவர் கோட்டத்துத் தேர்” என்னும் கவிதை வெளிவந்துள்ளது.

******************************************

நவம்பர் 28, 1999 இதழ் :

“தாய்ப்பாலை என்று நிறுத்துவது என்பது பற்றி” என்னும் அறிவியல் கட்டுரை. ராண்டி ஹட்டர் எப்ஸ்டான் என்னும் அமெரிக்கப் பெண் எழுத்தாளர் தாய்ப்பாலை 4,5 வருடங்கள் அருந்திய குழந்தைகள் ஒப்பிடும் பிற குழந்தைகளை விட ஆளுமையிலும் உடலிலும் அதிக வலுவானவர்களாக இருக்கிறார்கள் என்று ஆய்வுகளை மேற்கோள் காட்டி எழுதுகிறார்.

“எஸ்தர் -இலக்கிய அனுபவம் ” என்னும் கட்டுரையில் விக்கிரமாதித்தியன் வண்ணநிலவனின் “எஸ்தர்” சிறுகதை தமிழ் சிறுகதைகளில் ஒரு மைல் கல் என்கிறார். வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழும் ஒரு கிறுத்துவக் குடும்பம் பஞ்சம் காரணமாக, பிழைப்புத் தேடி குழந்தைகள், பெரியவர்கள் வேறு ஊரில் (நகரில்) சென்று பிழைக்கலாம் என்று முடிவெடுக்கும் போது அதை நிறைவேற்ற முடியாமல் ஒரு பாட்டியம்மாள் படுத்த படுக்கையாகக் கிடக்கிறார். அந்தத் தடையை அவர்கள் (அந்தக் குடும்பத் தலைவி) தாண்டுவதே கதை. மிகவும் ஆழமாக மனதில் ஊடுருவி நம்மை பாதிக்கும் கதை. மிகக் கசப்பான ஒரு முடிவை எடுத்து அந்தத் தடையைத் தாண்டுகிறாள் குடும்பத் தலைவி. ( http://www.thinnai.com/index.php?module=displaysection&edition_id=19991128&format=html)

பாவண்ணனின் “மூன்று கவிதைகள்” தலைப்பில் கவிதைகள் வந்துள்ளன.

*******************************

டிஸம்பர் 03 1999 இதழில் கதைகள் பகுதியில் வெளிவந்தவை:
காட்டில் ஒரு மான் – அம்பை
அப்பாவிடம் என்ன சோல்வது – அசோகமித்திரன்
மரியா-கேப்ரியல் கார்ஸியா மார்க்வெஸ்
பல்லி ஜென்மம் -கிரேஸி
சுழலும் மின்விசிறி- சுரேஷ் குமார் இந்திரஜித்
அந்த முகம்- சுரேஷ் குமார் இந்திரஜித்
பொன்மொழிகள் – ஜி.நாகராஜன்
வேஷம்- பாவண்ணன்
அந்தப் பையனும் ஜோதியும் நானும் – பாவண்ணன்
சூறை – பாவண்ணன்

கவிதைகள்
விழாக் கொண்டாட வருக- நக்கீரர்
கணங்கள் – ராம்ஜி
கடைசி ஆட்டம் – மார்ட்டின் எபனேசர்
ஒரு நாத்திகனின் கவிதை – மௌனப் புறா
பசவைய்யா கவிதைகள்
உயிர் சுவாசிக்கும் – மனுபாரதி
வேட்டை (ஹிந்தி) – கங்கா பிரசாத் விமல்
அம்மாவின் காலங்கள்- வை.அ.ச. ஜயபாலன்
ரேகா ராகவன் கவிதைகள்

சமூகம் அரசியல் பகுதியில்

விழாவும் நாமும் கட்டுரையில் மதத்தின் “லிமிட்டேஷன்” “பார்” ஆகிவிட்டது. அது காலாவதியாகி விட்டது என்கிறார் பெரியார்.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=29912033&edition_id=19991203&format=html)

21ம் நூற்றாண்டில் சாதி என்னும் கட்டுரையில் குன்றம் மு ராமரத்தினம் மிகவும் நம்பிக்கையுடன் சாதிகளின் சாயம் வெளுத்து விட்டது. அடுத்த் நூற்றாண்டில் அடியோடு இல்லாமல் போய் விடும் என்கிறார்.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=29912034&edition_id=19991203&format=html)

ஈரானின் லிப்ஸ்டிக் அரசியல் என்னும் கட்டுரை பர்ஷானே மிலானே என்னும் பெண்ணால் -விர்ஜினியா பல்கலைக்கழகப் பேராசிரியர்- எழுதப்பட்டது. அவர் ஈரானில் ஒரு உணவகத்தில் உணவு உண்டபடி இருக்கும் போது உணவகத்தின் விளக்குகள் அணைக்கப் படுகின்றன. கண்காணிப்பவர்கள் வந்து விட்டார்கள் என்று உரிமையாளர் அறிவிக்கிறார். ஈரானின் கலாசாரக் கண்காணிப்பாளர்கள் வந்து கொண்டிருப்பது பற்றிய அறிவிப்பு அது. உடனே ஒரு பெண் தமது லிப்ஸ்டிக்கை டிஷ்யூ பேப்பர் தாள் வைத்து அழிக்கிறார். மற்றொருவர் தமது பாலீஷ் இட்ட நகங்களைக் கையுறையால் மறைக்கிறார். ஈரான் இன்னும் மாறவில்லை என்பது நமக்கு நினைவுக்கு வருகிறது. அரசியல் லிப்ஸ்டிக்கை வைத்து நடத்தப்படுகிறது என்கிறார் கட்டுரை ஆசிரியர் குத்தலாக.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=29912035&edition_id=19991203&format=html)

வெள்ளைத் திமிர் என்னும் கட்டுரையில் அ.மார்க்ஸ் பாண்டிச்சேரி பிரன்ச் தூதரகத்திலும், பிராங்க்பர்ட் பிரன்ச் தூதரகத்திலும் விசாவுக்காகத் தமக்கு நேர்ந்த கொடுமைகளைப் பதிவு செய்திருக்கிறார்.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=299120323&edition_id=19991203&format=html)

இன்டெர்நெட்டில் திவசம் கட்டுரையில் – மின்னணு முறையில் பல நாடுகளில் உள்ளோர் இணைந்து துக்கம் அனுஷ்டிக்கும் தமது துக்கத்தைப் பதிவு செய்யும் ஒரு நிகழ்வு பதிவாகிறது. கட்டுரையாசிரியர் ஷோபா நாராயணன்.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=299120324&edition_id=19991203&format=html)

“எனக்குள் ஒரு கனவு” என்ற தலைப்பில் மார்ட்டின் லூதர் கிங் 28.8.1963 அன்று “கருப்பர்கள்” என்று அழைக்கப்பட்டவருக்கு மத்தியில் ஆற்றிய உரையின் தமிழாக்கத்தை பாரி பூபாலன் மற்றும் கோபால் ராஜாராம் மொழிபெயர்த்துள்ளார்கள். கருப்பர்களது உரிமையை மார்ட்டின் ஒரு காசோலையுடன் ஒப்பிடுகிறார். கருப்பருக்கு மட்டும் செல்லாத காசோலை கொடுக்கப் பட்டுள்ளது. மிசிசிபி, நியூரார்க் ஆகிய மாகாணங்களில் கருப்பருக்கு ஓட்டுரிமை இல்லை என்பதைக் குறிப்பிட்டு நாம் ஓய மாட்டோம் – ஆன்மீக பலத்தால் ஆள் பலத்தை எதிர் கொள்வோம் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் சொற்பொழிவு இது.

(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=299120341&edition_id=19991203&format=html)

18.8.1906 ‘இந்தியா’ பத்திரிக்கையில் பாரதியார் “மிஷன் பாடசாலைகளை விலக்கி வைத்தல்” என்னும் கட்டுரையில், சத்ரபதி சிவாஜி கொலைகாரன், மற்றும் இந்திய ஞானிகள் அறிவிலிகள் என்று போதிக்கும் கிறித்துவ மிஷனரி பாட சாலைகளில் குழந்தைகளைச் சேர்ப்பது ‘புத்திர துரோகம்’ என்று விமர்சித்து, அதே சமயம் தான் கிறித்துவ மதத்துக்கு எதிரானவர் அல்ல என்று தெளிவு படுத்துகிறார்.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=299120344&edition_id=19991203&format=html)

‘பெரியார் காந்தியார் சாதிகள்’ என்று வீ.செல்வராஜ் எழுதிய நூலின் ஏழாவது அத்தியாயம் வெளியாகி உள்ளது. இதில் செல்வராஜ் காந்தியடிகள் தொடக்க காலத்தில், ஏற்றத்தாழ்வில்லாத ஒரு வருணாசிரம தருமத்தை பின்னாளில் ஏற்றத்தாழ்வு உள்ளதாக மாற்றி விட்டார்கள் என்று கருதினார். ஆனால் பெரியார் இதை முற்றிலுமாக நிராகரித்தார். இருவரது காலத்துக்குப் பின்னும் இன்னும் ஜாதிகள் தொடர்கின்றன. நமக்குள் இருக்கும் தன்னகங்காரம் உருவாக்கியதே சாதி ஏற்றத் தாழ்வுகள் என்று கருதிய ஜிட்டு கிருஷ்ணமூர்த்தியின் கருத்தே சரியானது.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=299120347&edition_id=19991203&format=html)

1999 பொருளாதார சீர்திருத்தங்கள் உச்ச கட்டத்தில் இருந்த காலம். அதில் நாட்டின் ஒரு முக்கியமான பொருளாதாரப் பங்களிப்பு செய்யும் ‘பாகிதாரி’ என்னும் அங்கம் சீர்திருத்தத்துக்குள் வரவில்லை என்று அலசுகிறார் ஆர் வைத்தியநாதன். திண்ணையில் முதன் முதலாக ஒரு ஆங்கிலக் கட்டுரை. (இப்போது பின்னூட்டம் ஆங்கிலத்தில் போட்டாலே பிரச்சனையாகிறது!)
கட்டுரையின் தலைப்பு Reforming the Reform Process. பாகிதாரி என்று அவர் குறிப்பிடுவது சிறு வியாபாரிகள், மற்றும் ஊழியர்கள் உணவகங்கள், இடைத் தரகு, சரக்கு வாகனங்கள் போன்ற துறைகள் நிறுவங்களாக இயங்காததால் அரசு வங்கிகளால் புறக்கணிக்கப் பட்டு அந்த சேமிப்பு மற்றும் பணமாற்றம் தனியார் கையில் போய்விடுகிறது என்று அவர் எச்சரிக்கிறார். பொருளாதார சீர்திருத்தங்கள் இந்த பாகிதாரி என்னும் அங்கத்தை உள்ளடக்க வேண்டும் என்று வாதிடுகிறார். நிறைய தரவுகளைத் தருகிறார்.

(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=299120354&edition_id=19991203&format=html)

கோபால் ராஜாராம் “உலக வர்த்தக அமைப்பு என்ன பிரச்சனை?” என்னும் கட்டுரையில் (பகுதி 1) ஏழு பிரச்சனைகளை அலசுகிறார். 1. அமெரிக்கத் தொழிலாளிகள் தம் வேலை வாய்ப்பு பறிபோகும் என அஞ்சுகின்றனர். 2.சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் உ.வ.அ. சுற்றுச் சூழல் மாசைப் பொருட்படுத்துவதில்லை என்கின்றனர். 3.வளரும் நாடுகளின் தொழிலாளர் பெரிதும் பாதிக்கப் படுவர். வளர்ந்த நாடுகளின் பொருட்களே விற்கும் என்னும் காரணத்தால். 4.பொருட்களுக்கு தேச எல்லைகள் கிடையாது ஆனால் தொழிலாளிகளுக்கு உண்டு – இது வறுமையில் வாடும் தொழிலாளிகளை மேலும் மோசமாக பாதிக்கும். 5.மலிவான கூலி உள்ள நாடுகளில் தொழிலாளியைச் சுரண்டி பன்னாட்டு நிறுவனங்கள் தம் லாபத்தைப் பன்மடங்காக்கும். 6. பொருட்களின் தரம் பற்றி உத்தரவாதமில்லை. 7. ஆசிய நாடுகளில் இரண்டு ஆண்டுகளுக்கு முன் கொரியா மிக மோசமாகப் பாதிக்கப்பட்டது போல் பிற ஆசிய நாடுகளின் பொருளாதாரம் வீழ்ச்சி அடையும்.

(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=299120355&edition_id=19991203&format=html)

***********************************
டிசம்பர் 12,1999 இதழில் அப்போதைய ஒரு அரசு அறிவிப்பின் படி முதல் ஐந்து வகுப்புகளில் தாய் மொழியான தமிழில் மட்டுமே பாடங்கள் நடத்தப் படும் என்று அரசு அறிவித்து அதை எதிர்த்து மெட்ரிக் பள்ளிகள் கூட்டமைப்பு வழக்குத் தொடர்ந்திருப்பதை சுட்டிக்காட்டி, ஹிந்துவின் என்.ராம், ஆனந்த விகடன் போன்ற ஊடகங்கள் ஒரு காலத்தில் வட மொழிக்கு முக்கியத்துவம் தந்தது போல இப்போது ‘தமிங்கிலம்’ என்னும் ஆங்கிலம் கலந்த தமிழுக்கு முக்கியத்துவம் தருகின்றன என்று சாடுகிறார் கோபால் ராஜாராம்.

(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=29912122&edition_id=19991212&format=html)
************************************

டபிள்யூ.ஈ.பி.டு.புவா என்பவர் “கிறுக்குத்தனமேறி இருத்தல் பற்றி” என்னும் கட்டுரையில் ஒரு நாள் மாலை ஒரு கருப்பருக்கு அமெரிக்காவில் இருக்க இடம், பயணிக்க ரயிலில் படுக்கை வசதி, தெருவில் கூட முகச்சுளிப்பு என இழிவுகள் தொடர்கின்றன என்று விளக்குகிறார்.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=69912171&edition_id=19991217&format=html)

டிசம்பர் 17 1999 இதழில் “வையாபுரிப் பிள்ளை” என்னும் தலைப்பில் தில்லி தமிழ்ச் சங்கத்தில் வெங்கட் சுவாமிநாதன் ஆற்றிய உரையின் முதல் பகுதி வந்துள்ளது. வையாபுரி அவர்களை சாதி அடிப்படையில் வசை பாடினார்கள். சிலப்பதிகாரத்துக்கு உரிய இடம் தமிழில் தரப்படவில்லை அது ஒப்புயர்வற்றது என்பது வெ.சா. வின் கருத்து.

(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=699121711&edition_id=19991217&format=html)

ஜி.நாகராஜனின் “நிமிஷக் கதைத் தொடரில் முதல் பகுதியும், பாவண்ணனின் “உயிரின் இசை” என்னும் கவிதையும் வெளிவந்துள்ளன.

***************************************
டிசம்பர் 19 1999 இதழில் கொக்கி -22 என்னும் தலைப்பில் ஜோசப் ஹெல்லரின் நாவலாகிய “கேட்ச் 22′ என்னும் நாவல் பற்றி எழுதுகிறார் கோபால் ராஜாராம். 1961ல் வெளிவந்த இந்த நாவல் யோசாரியான் என்னும் இளைஞன் போருக்குச் செல்லாமல் இருக்கச் செய்யும் யுக்திகளில் எப்படி தோற்று விடுகிறான் என்பதே கதை. அவன் பைத்தியம் என்று கூடத் தன்னை நிரூபிக்க முயல்கிறான். போரை எதிர்த்து மிகப் பெரிய கருத்தை இந்த நாவல் உருவாக்கியது.

()

மற்றும் “ஷெல்லும் ஏழு இன்சு சன்னங்களும்” என்னும் செங்கை ஆழியான் சிறுகதையும், வைத்தீஸ்வரனின் காலை, பறக்கும் மலர் ஆகிய கவிதைகளும் வெளி வந்துள்ளன.

********************************

(திண்ணை வாசிப்பு தொடரும்)

Series Navigation”தவிக்கும் இடைவெளிகள்”—-சிறுகதைத் தொகுப்பு—–ஆசிரியர்—உஷாதீபன்
author

சத்யானந்தன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *