தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

12 ஜூலை 2020

திண்ணையின் இலக்கியத் தடம் -8 நவம்பர் – டிசம்பர் -2000

சத்யானந்தன்

Spread the love

நவம்பர் – டிசம்பர் -2000

நவம்பர் 4, 2000 இதழ்:

Jawaharlal-Nehru_0மார்க்ஸீஸம், முதலாளித்துவம், இந்தியாவின் எதிர்காலம் – ஜவஹர்லால் நேருவின் வாழ்க்கை வரலாற்று நூலின் ஒரு பகுதி – ஒத்துழையாமை இயக்கம் தோற்று சிறையில் இருக்கும் போது லெனின் தலைமையில் ரஷியா காணும் முன்னேற்றத்தை நேரு பாராட்டுகிறார். பொருளாதாரக் கொள்கைகளில் கம்யூனிஸமே சிறந்தது. ஆனாலும் நேருவுக்கு அங்கு ஜனநாயகக் குரல் நசுக்கப் படுவதில் உடன்பாடில்லை. (www.thinnai.com/index.php?module=displaystory&story_id=200110411&edition_id=20001104&format=html )

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஒரு கறைபடியாத கரம் : ரால்ஃப் நாடர்: உபயோகிப்பாளர் உரிமைக்காகப் போராடிய ரால்ஃப் நாடர் பற்றிய ஒரு கட்டுரை. கட்டுரை ஆசிரியரின் பெயர் இல்லை. பெரிய நிறுவனங்கள் அரசியல் கட்சிகளுக்கு நிதி அளித்து மறைமுகமாக அரசியலைக் கட்டுப்படுத்துவதை நிறுத்த வேண்டும், உபயோகிப்பாளர் உரிமைகள் சரியான கவனம் பெற வேண்டும், ஆயுதப் பரவலால் பயன் பெருவது ஆயுத உற்பத்தி நிறுவனங்களே என்பன உட்பட அவரது தேர்தல் அறிக்கையின் விவரங்கள் இக்கட்டுரையில் இடம் பெற்றுள்ளன.

(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=200110412&edition_id=20001104&format=html )

இந்த வாரம் இப்படி – சின்ன கருப்பன் – 1. நார்வே தூதருடன் பிரபாகரன் நடத்திய சந்திப்பு நம்பிக்கை அளிப்பது. 2.காஷ்மீரில் பயங்கரவாதிகளால் ஷியா வகுப்பினர் வேட்டையாடப் படுவது கண்டிக்கத் தக்கது. 3.கிரிக்கெட் மீது மக்களின் நம்பிக்கை போய் விட்டது. 4.சிறிய மாநிலங்கள் வருவது அரசியல் காரணத்துக்காக. 4. டான்ஸி வழக்கு இழுத்துக் கொண்டே போகிறது. 5. ஜாக்கி சான் சண்டையிடுவதும் பிரபு தேவா நடனம் ஆடுவதும் ஒரே மாதிரி இருக்கிறது.

(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=200110413&edition_id=20001104&format=html )

நான் ஏன் ஒரு கம்யூனிஸ்ட் அல்ல- பெட்ரண்டு ரஸ்ஸல் – Portraits from Memory என்னும் நூலின் ஒரு பகுதி- ரஸ்ஸல் ஸ்டாலின் கொடுங்கோலாராய் மக்களை அடிமைக் கூடாரங்களில் அடைத்துச் சித்திரவதை செய்தார். மார்க்ஸ் முன்னெடுத்த வர்க்கப் போராட்டம் தொழிலாள வர்க்கத்தின் கை ஓங்கி விவசாயிகளை அவர்கள் அடிமை செய்வதாக முடிந்ததற்கு ரஷியா உதாரணம். ஜனநாயகம் இல்லாத ஒரு அமைப்பு மக்களுக்கு எதிரானதே. கம்யூனிஸ நாடுகளில் மறுப்புக் குரல் வலுக்க வேண்டும். போர் மூலம் கம்யூனிஸ நாடுகளில் ஜனநாயகம் வர வாய்ப்பில்லை. இன்னொரு போர் வந்தால் உலகம் அழிவது ஒன்றே பலனாக இருக்கும் (மொழிபெயர்ப்பாளர் பெயர் இல்லை) –
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=200110414&edition_id=20001104&format=html )

கணினிக் கட்டுரைகள் 13- இணையத்தில் இயங்கு பக்கங்களை (Dynamic pages) உருவாக்கப் பயன்படும் சேவையர் பக்க நிரலமைப்பு – மா.பரமேஸ்வரன்
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=400110411&edition_id=20001104&format=html )

தமிழும் மென் கலனும்-பகுதி 8- வே-வெங்கட ரமணன்- (www.thinnai.com/index.php?module=displaystory&story_id=400110412&edition_id=20001104&format=html )

கதைகள் – நதிக்கரையில் – ஜெயமோகன், பிரம்மாண்டம் – சுரேஷ் குமார் இந்திரஜித்
கவிதைகள்- நிழல்களில் வாழுகின்றோம் – திலகபாமா, Rest in peace -கோகுலக் கண்ணன்

நவம்பர் 18,2000 இதழ்:

கட்டுரை: கார்ல் சாகன் அவர்களது மேற்கோள்கள் (தொகுத்தவர் பெயர் இல்லை)

பயத்தின் காரணமாகவும், அதிகாரத்தின் மீது கொண்ட ஆசையாலும், அளவிட முடியாத், உண்மையிலேயே நம் அனைவருக்கும் பொதுவான அறிவை அழித்த ஏராளமான மனிதர்கள் நம் வரலாற்றில் நிரம்பிக் கிடக்கிறார்கள். இது இன்னொரு முறை நடக்க அனுமதிக்கக் கூடாது
– காஸ்மோஸ். (www.thinnai.com/index.php?module=displaystory&story_id=400111811&edition_id=20001118&format=html)

நவம்பர் 19 2000 இதழ்:

புத்தக விமர்சனம்: இந்திரன்- ஞானி – படைப்பியல் நோக்கில் தமிழ் இலக்கியம் புத்தக விமர்சனம் – பண்டைய தமிழ் இலக்கியத்திலிருந்து ஜெயகாந்தன் வரை மார்க்ஸீய நோக்கோடு ஞானி எழுதியுள்ள கட்டுரைகளின் தொகுப்பு. இது. ஞானி மார்க்ஸிஸத்தை விமர்சிக்கவும் தயங்கவில்லை.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60011191&edition_id=20001119&format=html )

அறிவியலும் தொழில் நுட்பமும்: உங்கள் உழைப்பை சமூகத்துக்குத் தாருங்கள்- வே.வேங்கட ரமணன்- லினக்ஸ் பற்றிய கட்டுரைத் தொடரின் 10வது பகுதி
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=400111912&edition_id=20001119&format=html )

கதைகள்: ‘இது பாம்பே தமிழ் சங்கம் முன்பு கேட்ட டயலாக் ‘ – சித்திர லேகா, சுருதிபேதம் – ரகுநாதன், சுந்தரி -மௌனி.

கவிதைகள்: தவிர்த்திருக்கலாம் – சித்திர லேகா, அற்றைத் திங்களும் அவ்வெண்ணிலவும் – வ.ஐ.ச. ஜெயபாலன்

நவம்பர் 26 இதழ்: இந்த வாரம் இப்படி – மஞ்சுளா நவநீதன்

கிரிக்கெட் ஊழல் பற்றிய செய்திகள் தொடர்கின்றன. காஷ்மீரில் போர் நிறுத்தம் அறிவித்த வாஜ்பாய் அரசுக்கு கண்டனங்களே எழுந்தன, அமெரிக்காவின் தேர்தலில் ப்ளோரிடா குழப்பம் இன்னும் தீரவில்லை. அமெரிக்கா வியட்நாமில் நிகழ்த்திய குற்றங்களுக்கு மன்னிப்பே கேட்கவில்லை.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=200112614&edition_id=20001126&format=html )

அறிவியலும் தொழில்நுட்பமும் – மோனாலிஸாவின் கண்களில் என்ன இருக்கிறது? நீங்கள் தான் – சாந்த்ரா ப்ளேக்ஸ்லீ – மோனாலிஸாவின் கண்களைப் பார்ப்போரின் பார்வைக் கோணத்தை ஒட்டி மோனாலிஸாவின் புன்னகை தோன்றி மறைகிறது.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=400112612&edition_id=20001126&format=html )
நகைச்சுவையும் வித்தியாசமானவையும் – தினக் கப்ஸா- எழுதியவர் பெயர் இல்லை – வீரப்பன், ராஜ்குமார், சோனியா காந்தி, பங்காரு லட்சுமணன், ராமதாஸ், மூப்பனார் ஆகிய தலைவர்களின் செயற்பாடுகள் குறித்த நகைச்சுவையான கற்பனைகள்.

(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=700112614&edition_id=20001126&format=html )
கதைகள்- பெயர் தெரியாமல் ஒரு பறவை- வண்ணதாசன், மலையூர் – சா.கந்தசாமி

கவிதைகள்- எத்தனையோ நாள்- கோமதி, பூவா தலையா- பசுபதி

நவம்பர் 27, 2000 இதழ்: சமீபத்திய ஐரோப்பிய படங்கள்- ஜாஃபர் நோமன் – Roman II Postino 1994 directed by Michael Radford, Leo Sonnyboy 1994 – Rolf Lyssy, Left Luggage – 1998 -Jeroen Krabbe, The tongue of Butterfiles 1999 Joes Louis Creada, All about my mother – 1999 – Pedro Almodovar , Cinema Paradasio – 1988 Guiseppe Tornatore, Just Friends 1993 – Marc Henry Wajnberg, The dinner of Fools – 1998 Francis Vaber ஆகிய படங்களைப் பற்றிய சுருக்கமான விமர்சனம்.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60011271&edition_id=20001127&format=html )

டிசம்பர் 3 2000 இதழ்:

தனியார் மயமாக்கல்: ஒரு தனித்த பார்வை – சின்னகருப்பன்- தனியார் மயமாக்கம் எந்த நியதிகளின் அடிப்படையில் செயற்படுத்தப் படுகிறது என்பது முக்கியமானது. அரசு நிறுவனங்களைத் தனியார் மயமாக்குவதானால் அதன் பங்குகளை, அதில் வேலை செய்யும் தொழிலாளர்கள் மற்றும் பொது மக்களுக்குப் பிரித்துக் கொடுக்க வேண்டும். வாக்காளர் அடையாள அட்டையின் அடிப்படையில் ஒரு குடிமகனுக்கு இவ்வளவு பங்கு என்று வழங்க வேண்டும்.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=200120311&edition_id=20001203&format=html )

இந்த வாரம் இப்படி- சின்னக் கருப்பன் – 1.ராமதாஸ் தலித்துகளையே குறி வைத்துக் குற்றம் சாட்டுகிறார். 2. தேர்தல் கமிஷன் கட்டாயத்தால் காங்கிரஸில் உட்கட்சித் தேர்தல் நடக்கலாம். 3.ஒரு திருநங்கை கோரக்பூர் நகர மேயராகத் தேர்ந்தெடுக்கபட்டதற்குப் பாராட்டு. 4.வீரப்பனைப் பிடிக்கக் காட்டுக்குள் அதிரடிப்படை புகுந்துள்ளது. 5.சியாமளன் இயக்கிய Unbreakable படத்தைப் பார்த்தால் விமர்சனம் எழுதுங்கள். (www.thinnai.com/index.php?module=displaystory&story_id=200120313&edition_id=20001203&format=html )

அறிவியலும் தொழில் நுட்பமும்

பூச்சிக் கொல்லி மருந்துக்குப் புதிய நம்பிக்கை- ஜொஹான்னஸ்பர்க் நகரில் ஐநாவின் சுற்றுப் புறச் சூழல் அமைப்பு மிகவும் நாசகாரமான பூச்சிக் கொல்லிகளில் 13 வகை பூச்சி மருந்துகளைத் தடை செய்ய உலக நாடுகளின் கூட்டத்தை நடத்தியது. டிடிடி தான் மிகவும் ஆபத்தான மருந்து. அதை நிறுத்தும் முன் மலேரியாவைத் தடுக்க கொசுவைக் கொல்லும் வேறு நாசினி ஒன்று கண்டுபிடிக்கப் பட வேண்டும். (கட்டுரையாசிரியர் பெயர் இல்லை.www.thinnai.com/index.php?module=displaystory&story_id=400120311&edition_id=20001203&format=html )
நகல் டாலி ஆடு தயாரித்த அறிவியலாளர் குழு இப்போது கோழிகளைத் தயாரித்திருக்கிறது (கட்டுரையாசிரியர் பெயர் இல்லை )
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=400120312&edition_id=20001203&format=html )

கதைகள்- மிஸ்டர் கோடு கோடு கோடு – தி.ஜானகிராமன், இரண்டு குழந்தைகள்- ஜெயகாந்தன்,

கவிதைகள்- கல்யாண்ஜி கவிதைகள், சாலையோரம்- டி.பிரியா, உயிரின் வலி- எஸ்.வைத்தீஸ்வரன்.

டிசம்பர் 7 2000 இதழ்:

கதைகள்: செம்மங்குடி (தன் ஊர் தேடல்)- மௌனி

டிசம்பர் 10 இதழ்:

இந்த வாரம் இப்படி: சின்னக் கருப்பன்- பாபர் மசூதி இடிப்புப் பிரச்சனை பாராளுமன்றத்தில் பெரிய அமளியை ஏற்படுத்தி இருக்கிறது. நீதிமன்றத்தால் இது தீராது. இரு தரப்பும் பேசி முடிவு செய்ய வேண்டும்.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=200121014&edition_id=20001210&format=html )
இலக்கியக் கட்டுரைகள்-
என் கதை- 1 : கே.டானியல்- மொத்தம் எனக்கு முப்பத்தைந்து வருட இலக்கியப் பயணம். பஞ்சமர் என்னும் நாவலில் யாழ்ப்பாணச் சூழலில் பஞ்சமரை முன் வைத்து எழுதியிருக்கிறேன். மார்க்ஸின் தரிசங்களே எனக்கு வழிகாட்டி.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60012101&edition_id=20001210&format=html )
ஆத்மாநாம் கவிதைகள்: சுந்தர ராமசாமி- அனுபவத்தில் மனம் இழையும் பயணம் எந்தப் புள்ளியில் கவிதையின் உடலாக மாறுகிறது என்னும் கேள்விக்குத் திட்டவட்டமான பதில் இல்லை. அநேக கவிதைகளில் இந்த உடல் உயிராக மாறும் காரியம் அவருக்கு நடக்கவில்லை.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60012102&edition_id=20001210&format=html )

அறிவியலும் தொழில் நுட்பமும்

தூங்கு தம்பி தூங்கு- நல்ல ஞாபக சக்திக்கு நல்ல தூக்கம் தேவை – கட்டுரையாசிரியர் பெயர் இல்லை.

(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=400121012&edition_id=20001210&format=html )

கதைகள்:
பக்கவாத்தியம் -அஸ்வகோஷ், ஒரு திண்ணை டயலாக்- சித்திரலேகா
கவிதைகள்- கற்பனை செய்யுங்கள் – ஜான் லென்னான், திலகபாமாவின் இரண்டு கவிதைகள், நதிகளின் சங்கீதம் – சத்யன் சுந்தர்

டிசம்பர் 17 2000 இதழ்:

கூடங்குளம் செர்னோபில் ஆகுமா? – செர்னோபில் விபத்தும் விளைவும்- 26.4.1986- சோவியத் யூனியனின் செர்னோபில் நகரில் அணு உலையில் ஒரு விபத்து. ஒரு வெடிப்பு. ஹிரோஷிமாவில் வீசப்பட்ட குண்டை விட நூறு மடங்கு கதிரியக்கம் உரிய விபத்து இது. இந்த அணு உலை மூன்று ஆண்டுகள் கூட இயங்கவில்லை. இதன் இடிபாடுகள் மற்றும் சிதறிய ரசாயனப் பொருட்களை அப்புறப்படுத்த 350000 பேர் பணியில் ஈடுபடுத்தப் பட்டனர் அதில் 40000 இறந்தனர். 50 லட்சம் மக்களும் குழந்தைகளும் எதோ ஒரு விதத்தில் கதிரியக்கப் பின் விளைவுகளால் பாதிக்கப் பட்டனர். கூடங்குளத்துக்கு இந்த ஆபத்து உண்டு. அணு உலையே கூடாது.

(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=200121711&edition_id=20001217&format=html )

மெல்லத் தமிழ் இனிச் சாகும்: சின்னக் கருப்பன் கிழக்கு மாநிலங்களின் அசலான மொழிகள் அழிந்து ஆங்கிலமே அவர்களின் மொழியானது. ஜம்மு காஷ்மீரில் காஷ்மீரி மொழி அழிந்து உருதுவே அவர்களின் மொழி ஆனது. எகிப்தின் அசல் மொழியின் பெயரே தெரியாமற் போய் அதற்கு ‘ஹீரோக்லிபிக்ஸ்’ என்னும் பெயரை அமெரிக்கர்கள் வைத்து அவர்களே அந்த மொழியில் எழுதப்பட்டவற்றை மொழி மாற்றம் செய்கின்றனர். எகிப்தியருக்கு அந்த மொழி தெரியவே இல்லை. பிலிப்பைன்ஸ் நாட்டுப் பாரம்பரிய மொழிகள் காலனி ஆதிக்கத்தால் அழிந்து போயின. தமிழ் நாட்டில் அரசியல்வாதிகள் தொடங்கி, நடுத்தர மக்கள் வரை எல்லோருமே குழந்தைகளுக்கு ஆங்கில வழிக் கல்வி போதிக்கிறார்கள். காலப்போக்கில் ஆங்கில மோகத்தில் தமிழ் அழியும் அபாயம் இருக்கிறது.

(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=200121712&edition_id=20001217&format=html)

இலக்கியக் கட்டுரைகள்- சுந்தர் க்ராஸ் எழுதிய புதிய புத்தகம் – Ein Weites Feld – ஆலன் ரைடிங்- மொழிபெயர்ப்பாளர்கள்- சின்னக் கருப்பன் & கோபால் ராஜாராம்- மேற்கு ஜெர்மனி கிழக்கு ஜெர்மனியை விழுங்கி அதில் இருந்த பல தொழில்களையும் நிறுவங்களையும் நசித்துப் போகச் செய்தது என்பதே நூலின் மையக் கருத்து.

(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60012171&edition_id=20001217&format=html )

உடைபடாதது படத்தை முன் வைத்து ஒரு விசாரணை- கோபால் ராஜாராம்- சியாமளன் இயக்கிய Unbreakable என்னும் படத்தைப் பற்றிய விமர்சனம். ஒரு விபத்தில் தனி ஒரு ஆளாக உயிர் பிழைப்பவன் கதாநாயகன். அவன் ஒரு கால் பந்தாட்ட மைதானத்துக்குக் காவலாளி. அவன் மனித குலத்தையே காக்கப் பிறந்த அதி மனிதன் என்று ஒரு புதிய ஆள் அவனை நம்ப வைக்கிறான். நம்பிக்கைகள் பற்றிய ஆழ்ந்த தரிசனம் தரும் படம் இது. நம்பிக்கைகள் ஒருவரது / அல்லது ஒரு சமூகத்தின் தனிப்பட்ட விஷயம். ஆனால் அடுத்தவர் நம்பிக்கைகளில் தலை இடும் போது அல்லது அவற்றை நசுக்கும் போது அது ஆரோக்கியமற்றது.

(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=600121714&edition_id=20001217&format=html )

கதைகள்: எலி அசோகமித்திரன்,

கவிதைகள்: கதை கதையாம் காரணமாம் – சித்திர லேகா, அவள்- வ.ஐ.ச. ஜெயபாலன்

***************************
டிசம்பர் 25,2000 இதழ்

இந்த வாரம் இப்படி – மஞ்சுளா நவநீதன்- 1. சோ ஜெயலலிதாவை சந்தித்திருக்கிறார். அரசியல் புரோக்கராக செயற்படும் இவரை விட சுப்ரமணியம் சுவாமி மேல். 2.சத்துணவுத் திட்டத்தை பிபிசி பேட்டியில் ஜார்ஜ் மக்கவர்ன் என்னும் அமெரிக்க அரசியல்வாதி பாராட்டினார். 3.வன்னியரின் கோயிலுக்குள் தலித்துகள் நுழைய கம்யூனிஸ்டுகள் போராடுகிறார்கள். பார்ப்பனீயத்துக்கு அடுத்து வன்னியரியம். 4.தமிழக அரசின் வெள்ளை அறிக்கைப் படி 27500 இட ஒதுக்கீட்டுக்கான இடங்கள் நிரப்பப் படவில்லை. 5.சமுத்திரம், விக்கிரமன், செந்தில் நாதன் ஆகிய எழுத்தாளர்கள் சாகித்ய அகாதமியின் சிறுகதைத் தொகுப்புக்கான கதைகளை முடிவு செய்த சா.கந்தசாமி தமது கதைகளை விட்டு விட்டதை உள்நோக்கம் கொண்டதாகக் குற்றம் சாட்டி இருக்கிறார்கள். சாகித்ய அகாதமி கதைத் தேர்விற்கான விளக்கங்களை அளிக்காவிட்டால் புஷ்பா தங்கதுரை முதல் குறும்பூர் குப்புசாமி வரை குற்றம் சாட்ட வாய்ப்புண்டு.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=200122511&edition_id=20001225&format=html )

கதைகள்: போய்க் கொண்டிருப்பவள் – வண்ணதாசன், பிழைப்பு – ரகுநாதன்; கவிதைகள்- இன்னொரு கடவுள் – பாரதி ராமன்; ஹைக்கூ கவிதைகள்

(திண்ணை வாசிப்பு தொடரும்)

Series Navigationநுகம்ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் அத்தியாயம்-8 துவாரகா வாசம்.

One Comment for “திண்ணையின் இலக்கியத் தடம் -8 நவம்பர் – டிசம்பர் -2000”

  • ஷாலி says:

    ராமதாஸ் தலித் பாந்தர் என்ற தலித் புலிகளின் இயக்கம் தன்னைக் கொல்ல முயற்சிக்கிறது என்று குற்றம் சாட்டியுள்ளார்.
    ஆனால் தலித் இயக்கத்தினைக் குற்றம் சாட்டுகிற போக்கிலேயே இவர் பேசி வருவது எனக்கு வேறொன்றை நினைவூட்டுகிறது. ஆங்கிலேய ஆட்சியில் ஒரு சாதியினரைக் குற்றப் பரம்பரை என்று அபாண்டமாய்க் குற்றம் சாட்டிப் பதிவு செய்து வைத்துக் கொண்டு ஏதும் குற்றம் நடந்தால் முதலில் அந்த இனத்தினரின் வீட்டைச் சோதனை செய்வது போன்றல்லாம் அக்கிரமங்கள் செய்தார்கள். அந்தச் சாதியினரின் பிரதி நிதிகள் அதனை எதிர்த்துப் போராடி இப்படிப் பட்ட கறுப்புச் சட்டங்களை எதிர்த்து இயக்கங்கள் நடத்தினர். வெற்றியும் பெற்றனர். ஜாதி சார்ந்த கட்சிகள் நடத்துவதில் உள்ள அபாயம் , ஒரு கட்சியைக் குற்றம் சாட்டுவது அந்தக் குறிப்பிட்ட சாதியினரைக் குற்றம் சாட்டுவதாய்ப் போய் முடியும். இது நல்லதல்ல.
    http://www.thinnai.com/index.php?module=displaystory&story_id=200120313&edition_id=20001203&format=html
    திரு.சின்னக்கருப்பன் அன்று கூறியது இன்று உண்மையாகிவிட்டது.தலித் இளைஞர்கள் ஜீன்ஸ் பேன்ட் கூலிங்கிளாஸ் போட்டு நாடகக்காதல் நடத்துகிறார்கள் என்று சொல்லியே செல்லங்கொட்டாய் தலித் கிராமத்தின் முன்னூறு குடிசைகளை கொளுத்திவிட்டார்கள்.


Leave a Comment

Archives