தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

5 ஜூலை 2020

என்னுலகம்

பத்மநாபபுரம் அரவிந்தன்

Spread the love
– பத்மநாபபுரம் அரவிந்தன் –
பன்னீர்க் குடத்துள் மிதக்கும்
சிசுவின் ஏகாந்த நிலைபோல
என் மனதுள் விரிந்து சுருங்கிச்
சுழலும் சலனங்கள்..
சலனங்கள் சங்கமித்து உருக்கொண்டு
வெளிவரும் என் வார்த்தைகள்
புரியவில்லையென்று சொல்லித் திரியும்
நீ பலமுறை கேட்டிருக்கிறாய்
நான் எங்கிருக்கிறேன் என்றோ,
எவ்வுலகில் இருக்கிறேனென்றோ..
உன் கேள்விக்கு பதிலற்று நான்
நோக்கும் பார்வை உனை நோக்கியே
இருப்பினும் பார்வைக்குள் விழுவது நீயல்ல…
உனை ஊடுருவி வெளியேறி
அது பயணித்துக் கொண்டிருக்கும்
பெருந் தொலைவு… நீ நினைத்துக் கொள்வாய்
வார்த்தைகள் இல்லையெனினும்
பார்வையாவது கிடைக்கிறதென்று….
Series Navigationதமிழ் எழுத்தில் ஒரு புதிய உலகின் நுழைவு – வெங்கடேஷின் நாவல், இடைவேளைடௌரி தராத கௌரி கல்யாணம்….! – 24

One Comment for “என்னுலகம்”

 • Jenson Fernando says:

  பாய்ந்து பயணிக்கும் பார்வைகள்
  பாவையையும் தாண்டியா?
  ஊழித் தவங்களையே தம்
  காலில் வீழடித்த கலசங்களைத்
  கடந்தும் காததூரம் கண் செலின்,
  நீர் இம்மூன்றிடில் ஒருவரே…
  மிகை சோம பானப் பிரியரொ?
  கூர் கணைகளால் – இரு
  காதலிதயங்கள் துளைக்கும்
  தூரிகைக் கலைஞரொ?
  இல்லை ….
  சித்தம் கலைந்து சிகை கலைந்து
  சுற்றித் திரியும் பித்தனோ ?


Leave a Comment

Archives