தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

13 ஆகஸ்ட் 2017

​எப்படி முடிந்தது அவளால் ?

ஜி. ஜே. தமிழ்ச்செல்வி

 
Inline image 1
மாற்றங்கள் செய்ய எண்ணி
மறந்து போன நாழிகையும்
மாற்றத் திற்குள் துவண்டு

அடையாள மற்று

ப்​

போனதையும்

மீண்டும் புதுப்பிக்க எண்ணி
தோல்வி கண்ட
தருணம் ஒன்றில்
அவளைச் சந்தித்தேன்

பால்யம் கடந்த பின்னும்
வாலி

​ப​

மங்கையாய்
சலிக்கா

 து​

முழங்காலில் ஊர்ந்திட

எப்படி முடிந்தது அவளால் ?

உள்ளத்துக் குமறல்களை
உலகுக்கு மறைத்து
சிரிப்பொலி பரப்ப
எப்படி முடிந்தது அவளால் ?

பின் நின்றுப் பார்க்கும் கண்களையும்
விச்சுக் கொட்டும் உதடுகளையும்
சலிக்காமல் ஏற்றிட
எப்படி முடிந்தது அவளால் ?

வாழ்க்கையின் எதார்த்தத்தை
சிரித்தபடி முடமாய்க்
கடந்து போக
எப்படி முடிந்தது அவளால் ?

சிறிதும் சலனமற்ற இதயத்தில்
விழியோரம் கசியும் கண்ணீரை
யாரும் பாராது சுண்டிவிட
எப்படி முடிகிறது அவளால் ?
வா என்றேன்
உள்ளத்துக் கூட்டை விட்டு
பரந்து விரிந்த இவ்வுலகு
உன்னுடையது என்று சொன்னேன்.

அகல விரிந்த பார்வையில்
நன்னம்பிக்கை தோய்த்தெடுத்து
தன்னடையில் வெற்றி

​ ​

கண்டாள்.
அவள் என் சிநேகிதி.

Series Navigationஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் அத்தியாயம் – 10 சுபத்ராவின் ஹரணம்டௌரி தராத கௌரி கல்யாணம்….! -26

2 Comments for “​எப்படி முடிந்தது அவளால் ?”

 • சி. ஜெயபாரதன் says:

  அன்புள்ள திண்ணை ஆசிரியருக்கு,

  முதல் மூன்று பகுதிகள் சிதறிப் போயுள்ளன. கீழே வருவது போல் திருத்தி விடுங்கள்.
  +++++++++++++++++

  மாற்றங்கள் செய்ய எண்ணி
  மறந்து போன நாழிகையும்
  மாற்றத் திற்குள் துவண்டு
  அடையாள மற்றுப்​ போனதையும்

  மீண்டும் புதுப்பிக்க எண்ணி
  தோல்வி கண்ட
  தருணம் ஒன்றில்
  அவளைச் சந்தித்தேன்

  பால்யம் கடந்த பின்னும்
  வாலி​ப​ மங்கையாய்
  சலிக்காது​ முழங்காலில் ஊர்ந்திட
  எப்படி முடிந்தது அவளால் ?

  சி. ஜெயபாரதன்

 • ஜெயஸ்ரீ ஷங்கர் says:

  அன்பின் தமிழ்செல்வி,

  தூய நட்பு..
  நல்லதொரு சிநேகிதம்
  வெள்ளை உள்ளத்தில் பொங்கிப் பாயும் பேரன்பு..
  தோழமையான உயர் நேசம்…!

  இவை ஒருவர் வாழ்வில் புகுந்து விட்டால்….!

  அதுவே மனோபலம்…! அன்பின் சக்தி மகத்தானது.

  அதனால் மட்டுமே சாதிக்க முடிந்தது.
  வெற்றி காண முடிந்தது.

  கவிதை அருமை.

  தன்னம்பிக்கைக்குத் தேவை தோழமை…!
  வாழ்த்துகிறேன்.

  அன்புடன்
  ஜெயஸ்ரீ ஷங்கர்


Leave a Comment

Insider

Archives