‘அயலகத் தமிழாசிரியர்’ பட்டயம் – Diploma in Diaspora Tamil Teacher எனும் ஓராண்டுப் பட்டயப் படிப்பினை SRM பல்கலைக்கழகத் தமிழ்ப்பேராயம் தொடங்கியுள்ளது.

This entry is part 5 of 26 in the series 8 டிசம்பர் 2013
தமிழன்பருக்கு வணக்கம்.

அயல்நாடுகளில் வாழும் தமிழ்க் குழந்தைகளுக்குத் தமிழைக் கற்பிக்கும் தமிழாசிரியர்களை உருவாக்குவதற்காக ‘அயலகத் தமிழாசிரியர்’ பட்டயம் – Diploma in Diaspora Tamil Teacher எனும் ஓராண்டுப் பட்டயப் படிப்பினை SRM பல்கலைக்கழகத் தமிழ்ப்பேராயம் தொடங்கியுள்ளது.

 

இப் பட்டயப் படிப்பு குறித்தான அறிவுப்பு மடல் இணைக்கப்பட்டுள்ளது.
இணையவழி நடத்தப்படும் இந்தப் படிப்பில் சேர விரும்புவோர் பின்வரும் இணையப் பக்கத்தில் தகவல்களைப் பெறலாம்.
இந்தப் பயிற்சிச் படிப்பில் சேர விரும்புவோர் பின்வரும் இணையதளத்தில் பதிவு செய்யவும்.
உலக நாடுகளில் வாழும் தமிழர்கள் தங்கள் குழந்தைகளுக்கு முறையான தமிழ்க் கல்வி வழங்குவதற்கும் அயல்நாடுகளில் உள்ள தமிழ்ப் பள்ளிகளில் பணிவாய்ப்பு பெறுவதற்கும் இந்தப் படிப்பு பெரிதும் பயன்படும்.
தமிழகத்தில் உள்ளோரும் இந்தியாவின் பிற மாநிலங்களில் உள்ளோரும் இதில் சேரலாம்.
தங்கள் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் இந்தச் செய்தியைப் பகிர்ந்துகொள்ளுங்கள்.
நன்றி
Series Navigationஈசாவின் விண்ணுளவி கோசி [GOCE] கண்டுபிடித்த பூகம்ப நில அதிர்ச்சிகள் உண்டாக்கிய புவியீர்ப்புத் தழும்புகள்ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் அத்தியாயம் 12 ஜராசந்த வதம்
author

அறிவிப்புகள்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *