கவுட் Gout மூட்டு நோய்

This entry is part 14 of 26 in the series 8 டிசம்பர் 2013

 

 gout 5         கவுட் என்பது வினோதமான ஒருவகை எலும்பு நோய். இதற்கு ஒரு சொல்லில் தமிழில் பெயர் இல்லை. ஆகவே கவுட் என்றே அழைப்பது சுலபம். இதை மூட்டு வீக்கம் என்றும் கூறலாம்.           மூட்டுகளிலும் , காதுகளிலும், வேறிடங்களிலும் உள்ள குருத்தெலும்புகளில் சோடியம் பையூரேட் படிந்து ஏற்படும் ஒருவகை வளர்சிதை மாற்றக் கோளாறு கவுட்.

இதனால் கால் கட்டை விரல், கணுக்கால், முழங்கால் மூட்டுகள் வீங்கி கடும் வலி உண்டாகிறது இந்த வீக்கமும் வலியும் எந்தவிதமான முன் அறிவிப்புமின்றி திடீரென்று இரவில் தோன்றி .பெரும் வேதனையை உண்டுபண்ணிவிடும். ஒரு சிலரால் நடக்கவும் முடியாது. சரியான சிகிச்சை பெற்றால் சில நாட்களில் வீக்கமும் வலியும் குறைந்துவிடும். ஆனால் மீண்டும் எப்போதாவது வரும்.

பத்து பேர்களில் ஒன்பது பேர்கள் நடுத்தர வயதுடைய ஆண்களாக இருப்பர். இவர்களின் பரம்பரையில் வேறு யாருக்காவது கவுட் இருக்கலாம். பெண்களிடம் இது உண்டாவது மிகவும் குறைவு. அதைவிட பிள்ளைகளிடம் காண்பது இன்னும் குறைவு. ஆண்களில் அதிகமான உடல் பருமன் உடையோர், உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு கவுட் வரும் வாய்ப்பு அதிகம் இருக்கலாம்.

1891-0550x0475        கவுட் என்பது ஒருவகையான மூட்டு அழற்சி ( Arthritis ) நோய்தான். அதிர்வை அல்லது எரிச்சலை உண்டுபண்ணும் உப்புவக்கை படிமங்கள் மூட்டு இடுக்குகளில் படிவதற்கு எதிராக உடல் செயல்படுவதால் உண்டாகும் மூட்டு வீக்கமும் வலியுமே கவுட். ( Gout is actually a form of arthritis, specifically, it is the body’s reaction to irritating crystalline deposits in the space between the bones in a joint )

இப்படி வீக்கமும் வலியும் கடுமையாக இருந்தாலும் சிகிச்சையில் இது நல்ல குணமாகிறது. சிலருக்கு உணவுக் கட்டுப்பாட்டிலேயே சரியாகிறது. வேறு சிலருக்கு நீண்ட நாட்கள் சிகிச்சையும் தேவைப்படும்.

நீண்ட நாட்கள் இதனால் பாதிக்கப்பட்டவர்களின் கைகள், கால், காது பகுதிகளில் கடினமான தடிப்புகள் உள்ளதைக் காணலாம். இதை டோப்பை ( tophi ) என்று அழைப்பதுண்டு. இவை யூரிக் அமில படிமங்கள். இவை வலியையும் , கடின உணர்வையும் உண்டுபண்ணும்.

இதுபோன்று இவை சிறுநீரகத்தில் படிந்தால் அங்கு கற்கள் உற்பத்தியாகும் .

கவுட் மூட்டு நோய்க்கான காரணங்கள்

          இரத்தத்தில் அளவுக்கு அதிகமான யூரிக் அமிலம் ( Uric Acid ) இருப்பது.முக்கிய காரணமாகும்.
            இந்த அமிலம் உணவு ஜீரணிப்பதற்கு உதவுவது. இது சிறுநீரகத்தால் கழிவுப் பொருளாக வெளியேற்றப்படுகிறது.
உடலில் இந்த அமிலம் அதிகம் உற்பத்தி ஆனாலோ, அல்லது குறைவாக வெளியேற்றப்பட்டாலோ அது மூட்டுகளில் சோடியம் யூரேட் உப்பாக பதிந்து வீக்கத்தையும் வலியையும் உண்டுபண்ணுகிறது.
           கவுட் உருவாகும் தன்மை சரிவர தெரியாவிட்டாலும் , அடிபடுதல், காயம், அறுவைச் சிகிச்சை, மன உளைச்சல், மது, சில மருந்துகள் போன்றவை இது உருவாவதைத் துரிதப்படுத்துகின்றன. சில கட்டிகள், புற்று நோய் போன்றவற்றிலும் கவுட் ஏற்பாடலாம். அதோடு சிறுநீரக வியாதி, இரத்தச் சோகை, சொரியாசிஸ் தோல் வியாதியிலும் கவுட் உண்டாகலாம்.

                                       பரிசோதனைகள்

gout_big_toe_s5         இரத்தத்தில் யூரிக் அமிலத்தின் அளவு முக்கிய பரிசோதனையாகும். ஆனால் சில வேலையில் இது அதிகம் இருந்தாலும் கவுட் இல்லாமல் இருக்கலாம். வலி வந்தபின் அதன் அளவு குறைவாகவும் இருக்கலாம். இதை நிச்சயப்படுத்த எக்ஸ்ரே படம் தேவைப்படும். அல்லது வீக்கமுற்ற மூட்டு நீர் எடுத்து பரிசோதனை செய்து பார்க்கலாம்.

            சிகிச்சை முறைகள்

கவுட் மூட்டு வீக்கம் கடும் வலியைத் தருவதால் வலியைக் குறைப்பதே சிகிச்சையின் முதல் நோக்கமாகும். பாதிக்கப்பட்ட பகுதியில் துணி பட்டால்கூட வலிக்கும். ஆகவே அப்பகுதியில் கட்டு போடவேண்டிய அவசியம் இல்லை.

வலி நிவாரன மாத்திரைகள் உடன் உட்கொள்ளலாம். அவற்றில் NSAID ( Nonsteroidal anti- inflammatory drugs ) வகையானவை பயன்படுத்துவது நல்லது. குறிப்பாக Ibuprofen மாத்திரை அதிகம் பயன்படுத்தலாம். ஆஸ்பிரின் மாத்திரைகளைத் தவிர்க்கவேண்டும். அது யூரிக் அமில வெளியேற்றத்தைக் குறைக்கிறது.

ஆரம்ப கடும் வலியைக் குறைத்தபின் , உடலின் யூரிக் அமிலத்தைக் குறைக்கும் முயற்சியை மேற்கொள்ளலாம்.

பல நூற்றாண்டுகளாக Colchicine எனும் மருந்து பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. இது வீக்கத்தையும் வலியையும் குறைக்கிறது.

354020_SEvere_gouty_arthritis      உடலில் உற்பத்தியாகும் யூரிக் அமிலத்தைக் குறைக்க Allopurinol என்ற மருந்து மாத்திரையாக பயன்படுத்தலாம். ஆனால் இதை வலி உள்ளபோது உட்கொள்ளாமல் வலி நின்றபின் தடுப்பு முறையில் தினமும் உட்கொள்ளவேண்டும். அரிப்பு, தலைசுற்றல், குழப்பம் போன்ற பக்கவிளைவுகள் இதில் உள்ளன.

Probenecid, Sulfinpyrazone போன்றவை அதிகமான யூரிக் அமிலத்தை வெளியேற்ற உதவினாலும், பக்கவிளைவுகள் அதிகம் உள்ளவை.

உடலின் யூரிக் அமிலத்தின் அளவை சம நிலையில் வைத்திருக்க சில புரோதச் சத்து அதிகமுள்ள சில உணவுவகைகளைத் தவிர்க்கவேண்டும். அவற்றில் யூரிக் அமிலத்தை உற்பத்தி செய்யும் பூரின் என்பது அதிகம் உள்ளது. அவை உறுப்புகளின் இறைச்சி ( organ meats ), இறால், நண்டு, கணவாய், கொழுப்பு மீன் வகைகள், சார்டின் மீன் வகைகள், பசலைக் கீரை வகைகள் ( spinach ) , தண்ணீர்விட்டான் கிழங்கு ( aspara gus ) அவரை வகைகள், கடலை வகைகள் .

மது அருந்துவோர் கட்டாயமாக அதை உடன் நிறுத்தவேண்டும். யூரிக் அமில வெளியேற்றத்தைத் தடை செய்கிறது.

நிறைய நீர் பருகுவது மிகவும் நல்லது!

    The price of high living

” The old image of gout sufferer as a rotund, aging aristocrat, surrounded by roast beef and flagons,of ale, swollen foot propped on a cushion, was’t entirely mythical.While gout isn’t simply a sign of ” high living ” and can occur anytime in adulthood, we now know that rich foods and alcohol can contribute to the real cause of gout and will certainly aggravate the disease after the initial attack ”

.gout2 PRinc_photo_of_inflamed_gout_toe(  முடிந்தது )

Series Navigationகொட்டுப் பூச்சிகளும் ஒட்டடைகளும்உனக்காக மலரும் தாமரை
author

டாக்டர் ஜி. ஜான்சன்

Similar Posts

3 Comments

  1. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    அன்பார்ந்த வைத்யர் ஸ்ரீ ஜான்சன் அவர்களுக்கு மனங்கனிந்த ஆங்க்ல புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

    மிக அதிகமான் குளிர் ப்ரதேசத்தில் உத்யோகத்தில் இருக்கும் எனக்கு கடந்த இரண்டு வருஷங்களில் குறிப்பாக டிஸம்பர் ஜனவர் மாதங்களில் யூரிக் ஆஸிட் அதிகமாகி கைமூட்டுகளில் வலி இருந்தது. இந்த வருஷம் எப்படி இருக்குமோ என்று பயந்தேன். முருகனருளால் இந்த வருஷம் சுகமே.

    ஆயினும் ஒவ்வொரு குளிர்ப்பருவமும் மனதில் இது வலியையும் கொணருமோ என்ற பயம் உள்ளது.

    பொதுவிலே யூரிக் ஆஸிட் அளவை கட்டுமானத்தில் வைத்துக்கொள்ள நீர் பருகுவது அல்லாமல் வேறு ஏதேனும் ஆஹாரம் சார்ந்த நியமங்கள் கையாள வேண்டுமா? மாம்சாஹாரம் நான் எடுத்துக்கொள்வதில்லை. Spinach முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்று சொல்லியுள்ளீர்கள். மற்ற கீரைகளான மெந்தியக்கீரை, பசலைக்கீரை போன்றவை எடுத்துக்கொள்ளலாமா? அது போல இந்த யூரிக் ஆஸிடை வெளித்தள்ளும் படிக்கான ஆஹாராதிகள் எவை என்று குறிப்பிட்டாலும் எனக்கு உபகாரமாக இருக்கும்.

    நன்றி. அன்புடன்
    க்ருஷ்ணகுமார்

  2. Avatar
    Dr.G.Johnson says:

    அன்பு நண்பர் திரு க்ரிஷ்ணகுமார் அவர்களே, உங்களுக்கும் எனது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள். கவுட் பற்றி கேட்டுள்ளீர்கள். பசலைக் கீரை, அவரை வகைகள், முட்டைகோஸ், எல்லாவிதமான கடலை வகைகள் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும். தக்காளிப் பழம் கூட அதிகம் உட்கொள்ளாமல் இருப்பதும் நல்லது. அன்புடன் டாக்டர் ஜி. ஜான்சன்.

  3. Avatar
    Oli Mohamed says:

    ஆமணக்கு எண்ணையை தினமும் ஐந்து சொட்டுகள் வீதம் சாப்பிட்டும் வெளி பூச்சாக பூசி வந்தால் குணமாகும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *