கர்ம வீரர் காமராசர்!

This entry is part 7 of 32 in the series 15 டிசம்பர் 2013

indira_kamaraj_morarji‘குட்டி ஜப்பான்’ என்று அழைக்கக்கூடிய பட்டாசு தொழிற்சாலை நகரமான சிவகாசிக்கு ஒரு உறவினரைச் சந்திப்பதற்காக சென்று கொண்டிருந்தோம்.. பொதுவாக பயணம் என்றாலே எனக்கு மிகவும் பிடித்த விசயம். அதிலும் மழை வரும் முன்பு, லேசான மண் மணத்துடன், மெல்லிய தென்றல் குளிர் காற்றாய் வீச, உல்லாச உந்தின் கதவின் கண்ணாடிகளை இறக்கிவிட்டு அனைத்தையும் அனுபவித்துக் கொண்டு வாலியின் கவிதைகள் தேனிசையாய் முழங்க.. வேறு என்ன வேண்டும்? மதுரை தாண்டி விருதுநகரைத் தொட்டவுடன், அதுவரை வாய் மூடி மௌனமாக சாரதியாக வந்தவர், ஒரு மெல்லிய சிலிர்ப்புடன், ‘அட, விருதுநகர், நம்ம காமராசர் ஐயாவோட ஊரு.. புண்ணிய பூமி’ என்று சொல்லிவிட்டு அப்படியே நினைவில் ஆழ்ந்துவிட்டார். மெல்ல பேச்சுக்கொடுக்க ஆரம்பித்தேன்.. அதாங்க எங்க ஊட்டூக்காரவிக, திருநாவுக்கரசு அவிங்கதான்….

நான் : காமராசரை பார்த்திருக்கிறீர்களா நீங்கள்?

திருநாவுக்கரசு ; ஆகா, என்ன அப்படி கேட்டுட்டே, ஐயா பக்கத்திலேயே உட்கார்ந்திருக்கேனாக்கும்.. ஈரோடு வாசவி காலேஜ்ல படிச்சிக்கிட்டிருந்தப்ப, நான் மாணவர் காங்கிரசு தலைவனாக இருந்தேன்.

நான்; ஓ, அப்படீன்னா அவரைப் பற்றி நிறைய உங்களுக்கு தெரியும்னு சொல்லுங்க.

அரசு: ஆமாம், என்னை மிகவும் கவர்ந்த தலைவர் அல்லவா அவர். என்னை மட்டுமல்ல பல எதிர்கட்சித் தலைவருக்குக்கூட இவரை ரொம்ப பிடிக்குமாம். அப்படிப்பட்ட ஒரு சொக்கத் தங்கம்.

நான்: படிக்காத மேதை இல்லையா அவர்? சாதாரணமான குடும்பத்தில் பிறந்த மிக எளிமையான மனிதரும் கூட இல்லையா?

அரசு: ஆமாம், காமராஜரோட இளமைக்காலம் பத்தி பேசறதுன்னா, (நினைவுகள் பின்னோக்கிச் செல்ல, அமைதி காத்த மனது, மெல்ல திறக்க ஆரம்பித்தது). மகாத்மா காந்தியோட இளமைக் காலமும், காமராஜரோட இளமைக்காலமும் ஒன்றுபட்டு இருந்ததுன்னு சொல்லலாம். இளமைக்காலங்களில் ஏற்பட்ட தாக்கங்கள் பின்னாட்களில் அவர்களை வழிநடத்தியது என்றால் அது மிகையாகாது. பெரும் தலைவர் காமராஜர் என்று எல்லோராலும் போற்றப்படுபவர் இளமையில் படிப்பதற்கு வசதியின்றி, அரைக்கால் கால்சட்டையும், மேல் சட்டையும் அணிந்து கொண்டு தங்கள் குடும்பத் தொழிலான, பொட்டலம் கட்டும் மளிகை வியாபாரத்திற்குச் செல்ல வேண்டிய சூழநிலைக்கு ஆளானார். ‘தந்தையோடு கல்வி போம்’ என்பார்கள். தந்தை இறந்தவுடன் பள்ளிப் படிப்பை நிறுத்த வேண்டியதாகிவிட்டது. ஏனைய பல தலைவர்கள் போல் பற்பல நூல்களை ஆழ்ந்து படிக்க முடியாமல் போனதற்கு இதுவும் ஒரு காரணம். ஆனால் இந்த நிகழ்வுகள் அவருக்கு வாழ்க்கைக் கல்வியைக் கற்றுத் தந்தன. தன்னுடைய அடி மனதில் ஏற்பட்ட வேதனையின் வெளிப்பாடாகவே தான் தமிழ் நாட்டை ஆண்ட போது மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டு வந்தார். இன்று பல மாநிலங்களில், மத்தியஅளவிலும், இந்த மதிய உணவுத் திட்டத்திற்கு முன்னுதாரணமாக விளங்கிக் கொண்டிருக்கிறது. அன்றைய கால கட்டங்களில் கிராமப் புறங்களில் உள்ள மக்கள் தங்கள் குழந்தைகளை கல்வி கற்பதற்கு ஈர்ப்பதற்காகவே இத்திட்டம் கொண்டுவரப்பட்டது என்று கூறலாம். மகாத்மா காந்தியடிகளின் வாழ்க்கையில் தாம் இளமையில் அரிச்சந்திரன் நாடகம் பார்த்ததன் தாக்கம்தான் சத்தியசோதனை எழுதத் தூண்டுகோலாக அமைந்தது போல காமராசருக்கும் இந்த நிகழ்வுகள் ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளுக்கு அச்சாரமாய் அமைந்தன.

நான் : இலவச மதிய உணவு, இலவச சீருடைகள், இப்படிப் பலத் திட்டங்களைத் தீட்டி அமுல்படுத்தியதோடு, தமிழகத்தில் கல்விச் செல்வம் பெருகச் செய்த, கிராமங்கள் தோறும் ஓராசியர் பள்ளிகளும் திறக்கப்பட்டன என்று அறிந்திருக்கிறேன்.

அரசு : ஆம். இந்த மதிய உணவுத் திட்டத்தை சத்துணவுத் திட்டமாக மாற்றியது போல அவர் அனைத்திந்திய காங்கிரசின் அக்ராசனராக இருந்த போது (தலைவர்) அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட இலவசப் பால் பொருட்கள் குழந்தைகளுக்கு நாளொன்றுக்கு 2 முறை கொடுக்கப்பட்டது. அப்போது அமெரிக்காவில் இருந்த வந்த பால் பவுடர் மிகவும் சுவையாகவும் சத்துள்ளதாகவும் இருக்கும். நான் கூட குடித்திருக்கிறேன் அந்தப் பால் பவுடரை. கிராமப்புறங்கள் மட்டுமன்றி நகர்ப்புறங்களில் நடந்த சில நிகழ்ச்சிகளும் சொல்கிறேன்

பெற்ற தாய்மார்கள் தன்னுடைய குழந்தைகளைப் பார்த்து, “மத்தியானம் அங்கே சோறு போட்றாங்க, பாலும் தறாங்க ஒடுங்கடா… இங்கே ஏண்டா சுத்திட்டுத் திரியறீங்க” என்று சத்தம் போடுவதைக் கேட்டிருக்கிறேன். இப்படியாகத்தான் நம் இந்தியாவில் கல்வி ஆரம்பமானது. அன்றைய நாட்டின் நிலைமைக்கு ஏற்ப பள்ளிச் சீருடைத் திட்டத்தையும், 5ம் வகுப்பு வரை இலவசக் கல்வியையும் கொண்டு வந்தார். இன்றைய வளர்ச்சியைப் பார்க்கும் போது அன்றைய நடந்த நிகழ்வுகள் இவ்வாறு நம் கண் முன்னே நன்றிப் பெருக்குடன் விரிகின்றன.

நான்: காமராசருடைய அரசியல் வாழ்க்கை மிக நேர்மையான ஒன்று அல்லவா?

அரசு : ஆம், அதிலென்ன சந்தேகம். உலகறிந்த உண்மையாச்சே இது! நாடு சுதந்திரம் பெறாமல் அடிமைப்பட்டுக் கிடந்த காலம் அது. 1920 ஆம் ஆண்டு அவர் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி நடத்திய ஒத்துழையாமை இயக்கம் மற்றும் சட்ட மறுப்பு இயக்கத்தில் தீவிரமாகக் கலந்து கொண்டார். 1957 ம் ஆண்டு பொதுத் தேர்தலிலும் தமிழ்நாட்டில் காங்கிரஸ் அமோக வெற்றிப்பெற்றது. பெருந்தலைவர் காமராஜரே மீண்டும் தமிழ்நாட்டின் முதலமைச்சரானார்.
1963ம் ஆண்டு வரை, ஒன்பது ஆண்டுகாலம் தமிழக முதலமைச்சராக இருந்த பெருந்தலைவர் காமராஜர், தான் கொண்டு வந்த கே. பிளான் மூலம் தானே முதலமைச்சர் பதவியைத் துறந்தார். அகில இந்திய காங்கிஸ் தலைவரானார். எத்துனைப் பேருக்கு வரும் இந்த மனசு? 1952-ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் காமராசர் சாத்தூர் தொகுதியில் நின்று வெற்றி பெற்றார். சுமார் பன்னிரண்டு ஆண்டுகாலம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருந்து தமிழ்நாட்டின் காங்கிரஸ் பேரியக்கத்திற்குப் பெரும் செல்வாக்கை ஏற்படுத்தித் தந்தார். காமராசர் என்ற தனி மனிதரின் அரசியல் என்று கூறுவதைவிட அன்றைய கால கட்டங்களில் அதாவது 47 முதல் 63 வரை தமிழக அரசியல் மற்றும் மத்திய அரசியல் எவ்வாறு இருந்ததுன்னு கேட்டிருந்தால் பொருத்தமாக இருக்கும். ஏனென்றால் அவருடைய வாழ்க்கை வரலாறு அரசியலோடு பின்னிப் பிணைந்திருந்தது.
தன்னலமற்ற, மிகச் சிறந்த தலைவர் ஐயா காமராசர் அவர்கள். அதற்கொரு சின்ன உதாரணம். அவர் மாநில முதல்வராக இருந்த போது, அவருடைய விருதுநகர் இல்லத்தில் மின் விசிறி இல்லாமல் அவருடைய தாய் பனை ஓலை விசிறியால் விசிறிக் கொண்டிருந்ததைக் கண்ட ஒரு தொண்டர், இரண்டு மின் விசிறிகளைக் கொண்டுவந்து மாட்டி விட்டுச் சென்றுவிட்டார். வீட்டிற்குத் திரும்பிய காமராசர் இதைக் கண்டு வெகுண்டு, “இப்படி உனக்கு சுகம் கேட்குதா என்ன?, இதைக் கொண்டுபோய் உடனடியா திருப்பிக்கொடு.. இந்த மின்விசிறி போட்டவன் நாளைக்கு ஏதாவது என்னிடம் எதிர்பார்க்கலாமில்லையா?”, என்று திட்டிவிட்டு அதை விருதுநகர் காங்கிரசு அலுவலகத்துக்கு அனுப்பிவிட்டாரம். அவ்வாறு கறை படாமல் வாழ்ந்து காட்டியவர்தான் காமராசர்.
இவர் மட்டுமல்ல இவரோடு இருந்த கக்கன் போன்றவர்களும் இவருக்கு இணையாக தன்னலமற்ற, பொதுநலச் சேவையே தம் உயிராகக் கொண்டு வாழ்ந்து வழிகாட்டிச் சென்றிருக்கிறார்கள். அமைச்சராக இருந்தபோதே, மாற்று உடை இல்லாமல்கூட இருந்தவர் கக்கன் அவர்கள். ஒரு முறை கக்கன் தன் மிதி வண்டியை மிதித்துச் சென்றதைப் பார்த்து மக்களே வேதனைப்பட்டனர். ஆனால் இன்று நாட்டில் நடப்பதைப் பார்க்க மிகவும் வேதனையாக உள்ளது. அவர்கள் வாழ்ந்து காட்டிச் சென்றதைக் கூட கருத்தில் கொள்ளவில்லையே இன்றைய அரசியல்வாதிகள் என்று வேதனையாக இருக்கிறது.

நான் : “படிக்கும்போது மாணவர்களுக்கு அரசியல் வேண்டாம்; படிப்பை முடித்த பின்பு எந்த அரசியலில் வேண்டுமானாலும் ஈடுபடுங்கள்” என்பதே அவருடைய அறிவுரை என்று படித்திருக்கிறேன்.

அரசு : ஆம். படிக்கும்போது அரசியல் வேண்டாம் என்பது படிக்காத மேதையின் பண்புள்ள சிந்தனை.

நான் : சிறைக்குக்கூடச் சென்றிருக்கிறார் இல்லையா?

அரசு : ஆமாம். கள்ளுக்கடை மறியல், அந்நியத் துணிகள் பகிஷ்காரம், கொடிப் போராட்டம், உப்பு சத்தியாகிரகம், சைமன் கமிஷன் எதிர்ப்பு ஆகியவற்றில் காமராசர் ஐயா பங்கேற்றுச் சிறைத் தண்டனையும் பெற்றார். அது மட்டுமல்ல அடுத்தடுத்துப் போராட்டங்கள் அனைத்திலும் ஈடுபட்டு பலமுறை சிறை தண்டனைகளை அனுபவித்தவர் காமராசர் ஐயா அவர்கள்..

நான் : வேறு ஏதும் அவருடைய தனிப்பட்ட குணத்தை விளக்கக்கூடிய சம்பவங்கள் தெரியுமா?

அரசு : ஐயா எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் நிதானம் இழக்காமல் பொறுமையாக சிந்தித்து முடிவெடுக்க வல்லவர். வீணாக வம்புக்கு வந்தாலும் அவர்களோடு சண்டையிடாமல் ஒதுங்கிக் கொள்வது நல்லது என்ற எண்ணத்தைக் கடைபிடிப்பவர் அவர். ஒரு முறை, இலக்கியச் செல்வர் குமரி அனந்தன் அவர்கள் தமிழக இளைஞர் காங்கிரசின் தலைவராக இருந்த சமயம். கட்சியிலுள்ள மூத்தத் தலைவர்கள் பலர் குமரிஅனந்தன் அவர்களுக்கு உரிய மரியாதை தராமல் பல்வேறு விதத்திலும் அவரைத் தொந்தரவு செய்தார்களாம். குமரி அனந்தன் அதனைச் சமாளிக்க முடியாமல் பொறுமையின் எல்லைக்கே சென்றுவிட்டிருக்கிறார், முடிவில் வேறு வழியின்றி பெருந்தலைவர் காமராசரிடம் சொல்லியிருக்கிறார். மூத்த தலைவர்கள் தனக்கு இடைஞ்சல் செய்கிறார்கள். என்று சொன்னால் காமராசர் அவர்களை அழைத்துக் கண்டித்து, திருத்துவார் என நினைத்திருக்கிறார் குமரிஅனந்தன். ஆனால் ஐயாவோ, “நீ போகிற இடத்தில் ஒரு பெரிய பாறை இருக்குதுன்னா என்ன செய்வே? அதை அசைத்து தள்ளி வச்சிட்டாப் போவே! இல்லைன்னா அதைச் சுற்றித்தானே போவாய். அதைப் போல் சுற்றிப்போயேன்” என்று சொன்னாராம். வீணாக வம்புச்சண்டைக்கு இழுப்பவர்களை விட்டு விலகிவிட வேண்டும் என்பது கர்மவீரர் காமராசரின் அன்புக் கட்டளை ஆகும்.

நான் : ஆட்சி அமைப்பில் அவருடைய பங்கு இன்றியமையாதது அல்லவா?

அரசு : ஆங்கிலத்தில் ‘கிங் மேக்கர்’ என்று சொல்லுவார்கள். அது போல் நம் இந்தியாவை நிர்வகிக்கும் பொறுப்பில் அதாவது பாரதப் பிரதமராக ஒருவரை நியமிக்கும் பொறுப்பில் இருந்தார். அவர் யாரைக் கைகாட்டுகிறாரோ அவரே பிரதமர் ஆகும் வாய்ப்பு இருந்தது. அவர் கைகாட்டுதலில்தான் இந்திராகந்தி பிரதமரானார். அவ்வாறு மிக உயர்ந்த பொறுப்புகளில் காமராசர் இருந்தார். அபோது காங்கிரசில் பெரிய மாற்றம் கொண்டுவரக் கருதி ஒருவருக்கு ஒரு பதவி என்ற திட்டத்தைக் கொண்டு வந்து அதற்கு எடுத்துக்காட்டாக தன்னுடைய முதல்வர் பதவியை தானே விலகினார். இதுதான் ‘கே’ பிளான் என்பது. இன்று இதுபோல யாரை நாம் பார்க்க முடியும். அரசியல் சதுரங்கத்தில் வெட்டப்பட்ட மிகப்பெரும் தலைவர் காமராசர். ஒரு கல்லூரி மணாவரான பெ.சீனிவாசன் என்ற மாணவர் தலைவரை அவருக்கு எதிராக நிற்க வைத்து தோற்கடிக்கப்பட்டார். மக்கள் மீது மிக நம்பிக்கை வைத்திருந்த காமராசர் உடல் நலம் குன்றி தேர்தல் சமயத்தில் படுத்திருந்த போதும், மற்ற தலைவர்கள் வெற்றி பெறுவதற்காக இந்தியா முழுவதும் சுற்றுப் பயணம் செய்த காமராசர் அவர்கள் தனது தொகுதியான விருதுநகர் தொகுதியிலும் ‘எனது மக்கள் என்னை வெற்றி பெற வைப்பார்கள் ’ என்று மக்கள் மீது அதீத நம்பிக்கை கொண்டு கூறினார். ஆனால் தேர்தல் முடிவு மாறுபட்டிருந்தது.
காமராசருடைய தோல்வி கண்டு அண்ணாதுரையே வருந்தினார். எதிர் கட்சிக்காரர்களையும் பாராட்டும் மனோபாவம் பெருந்தலைவர்களிடம் அன்று இருந்தது. இன்று அதுவும் காணப்படவில்லை. தேர்தலில் தோற்ற பிறகும் மக்கள் மத்தியில் மிகுந்த செல்வாக்கோடு காணப்பட்ட அவர் ஸ்தாபன காங்கிரசு தலைவராக இருந்தார். அப்போது நான் ஈரோடு மாணவர் காங்கிரசு தலைவராக இருந்தேன். ஈரோடு வாசவி கல்லூரி ஆண்டு விழாவிற்கு அவரை அழைத்து வந்து சிறப்படைந்தோம். மாணவர்கள் மத்தியில் காமராசருக்கு மிகப்பெரும் செல்வாக்கு இருந்தது. அதைச் சரியான வகையில் பயன்படுத்தத் தவறிவிட்டோம். இல்லாவிடால் இன்றைய காங்கிரசின் நிலை இந்த அளவிற்கு குறைந்திருக்காது, அன்று, காங்கிரசு தோற்ற சமயத்தில் கூட 37 சதவிகித வாக்குகள் பெற்றிருந்தது. ஆனால் இன்று 10 சதவிகித வாக்கு பெற்றாலே மகிழ்ச்சியடையும் நிலையில் இருக்கிறோம். காமராசர், கக்கன், ,மன்றாடியார் போன்ற தலைவர்கள் மக்களுக்கு ஆற்றிய பணிகளை மக்களுக்குக் கொண்டு செல்லத் தவறியதே இதற்குக் காரணம். மக்களுக்கு தன்னலமற்று பணியாற்றக்கூடிய தலைவர்கள் இல்லை என்பதே இன்றைய நிலை. இன்று மக்கள் பெருந்தலைவர்களை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்.

நான் : காமராசர் போன்ற நல்ல தலைவர்கள் நாட்டிற்கு வேண்டும் என்ற ஏக்கம் இப்பொழுதெல்லாம் மக்களிடம் அதிகமாகிவிட்டது. என்ன செய்ய முடியும்….

அரசு : தமிழ் நாட்டைப் பொறுத்த வரை காங்கிரசு வேறு காமராசர் வேறு என்பதில்லை. பாராளுமன்றத் தேர்தலில் காமராசர் தோற்றாலும் மிகப் பெரும் தலைவராகத் திகழ்ந்தார். அன்றைய காலகட்டங்களில் ஸ்தாபன காங்கிரசின் தலைவராகத் திகழ்ந்தவருக்கு சென்ற இடமெல்லாம் மக்களுடைய பேராதரவும் மரியாதையும் இருந்தது.

நான் : காமராசர் பற்றிய ஒரு சுவையான சம்பவம் நான் படித்தேன். முதல்வராக இருந்தபோது பெருந்தலைவர் காமராசர் அவர்கள் சுற்றுப்பயணம் செய்து கொண்டிருந்த சமயத்தில், அவருக்கு நிறைய ஊர்களில கதர் துண்டுகள் போர்த்தி மரியாதை செய்திருக்கிறார்கள். நிறைய துண்டுகள் போர்த்தப்பட்டதைக் கவனித்த ஒரு தொண்டர், இவ்வளவு துண்டுகளையும் வைத்து காமராசர் என்ன செய்யப் போகிறார், நம்மைப் போன்ற தொண்டர்களுக்குத்தானே கொடுக்கப்போகிறார், என்று எண்ணி ஒரு பெரிய துண்டை எடுத்து தனக்காக வைத்துக்கொண்டிருக்கிறார். கூட்டம் முடிந்து தங்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தவுடன் அந்த தொண்டரைக் காமராசர் அழைத்து, “ஒரு துண்டை நீ எடுத்து வைத்திருக்கிறாய் அல்லவா? அதை அந்த மூட்டையில் சேர்த்துவிடு” என்றாராம். அந்தத் தொண்டர் ,ஒரு சாதாரண துண்டை எடுத்ததற்கு இவ்வளவு தூரம் நினைவு வைத்து தலைவர் கேட்டுவிட்டாரே என மனம் வருந்தியிருக்கிறார். அதற்கு தலைவரோ,

“தம்பி உனக்கு நான் வேறு நல்ல துண்டு வாங்கித் தருகிறேன். ஆனால் இந்தத் துண்டை நாம் தொடக்கூடாது. ஏன்னா, இதெல்லாம் சென்னையில் இருக்கிற பாலமந்திர் ஏழைப் பிள்ளைகள் படிக்கும் பள்ளிக்குக் கொடுக்க வேண்டியது. ஏழைகளுக்கு உதவுவதற்காகத்தான் இந்த ஏற்பாடு” என்றிருக்கிறார் காமராசர்.

அரசு : இன்னொரு விசயம் கூட நினைவிற்கு வருகிறது. அரசாங்கத்தில், அந்தந்த திட்டத்தை அமுல்படுத்தும்போதும், அவைகளுக்குச் சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளைக் கலந்து ஆலோசிக்கத் தவறியதே இல்லை காமராசர் ஐயா. அவர்கள் அரசாங்க ஊழியர்களே என்றாலும் கூட அவர்களுக்குத் தக்க மரியாதைகளைக் கொடுத்து வந்திருக்கிறார். தன் கூடவே முதலமைச்சர் காரிலேயே அவர்களைப் பற்பல ஊர்களுக்கு உடன் அழைத்தும் செல்லுவார் அதிகாரிகளுக்கு இந்த நடவடிக்கை அதிசயமாக, ஆச்சர்யமாக, அதிர்ச்சியாகக்கூட இருந்தது என்று கேள்விப்பட்டிருக்கிறேன். காரில் போகும்போது அவர்களை அந்தத் திட்டம் பற்றிய பல் வேறு பிரச்சினைகளையும், அவைகளைத் தீர்த்து வைக்கும் வழிமுறைகளையும் காமராசர் அவர்கள், சொல்லிக்கொண்டேச் செல்லுவாராம்.

நான் : சரி ஊர் நெருங்கிவிட்டது. காமராசர் ஐயா பற்றி பல்வேறு கவிஞர்கள், அருமையான பல கவி மாலைகள் புனைந்துள்ளார்கள். அவற்றில் கவிஞர் மு. மேத்தா அவர்கள் பாடிய ஒரு கவிதை என் மனதை விட்டு நீங்காத ஒன்று. இதோ கேளுங்களேன்.. தலைப்பே அருமை பாருங்கள்!

கருப்புக் காந்தியும் நெருப்புக் கவிதையும்

-கவிஞர் மு. மேத்தா

ஒரு தீர்க்க தரிசியை
நேசிப்பதைப் போல்
உன்னை நேசிக்கிறேன்…
உன்னால்தான் முடிந்தது
தாயையும் பார்க்காமல்
தாய்நாட்டைப் பார்ப்பதற்கு!

நீ நினைத்திருந்தால்
கரன்ஸி நோட்டுகளால்
விருதுநகரில்
இன்னொரு இமயமே
எழுந்திருக்கும்!

நீ
லட்சுமியை அனுப்பி
சரஸ்வதியை வரவழைத்தாய்.
இவர்களோ
சரஸ்வதியையே
லட்சுமியாக்கிக் கொண்டிருக்கிறார்கள்!

ஆமாம்… நீ
கல்விக்கண் திறந்தாய்!
இவர்களோ
கல்விக் கடை திறந்தார்கள்!
என்னால்
கள்ளுக்கடை
வைத்திருப்பவர்களைக் கூட
மன்னிக்க முடிகிறது.
கல்விக் கடை வைத்திருப்பவர்களை
மன்னிக்க முடியவில்லை.
நிஜத்தைச் சொல்லுகிறேன்
நேரு குடும்பத்தின் மீது நீ
பாசம் வைத்திருத்திருந்தால்
இந்தியாவின் பாரிணாமமே வேறு!

கருப்புதான் நீயும்…
கருப்புக் காந்தி!
மகாத்மா காந்தியோ
சிரிக்கும் நெருப்பு.

நீ
சிரிக்கத் தெரியாத
நெருப்பு.
அந்த நெருப்பு
திருநீறாகி விட்டது.
உன் சாம்பலுக்குள்ளும்
தணல் தகிக்கிறது.

பெரியாரின் பல்கலைக்கழகத்தில்
‘பச்சைத் தமிழன்’ எனும்
பட்டம் பெற்றவனே!

இன்று நீ இருந்திருந்தால்
இங்கிருக்கும்
காய்ந்த தமழர்களைக்
கண்டித்திருப்பாய்!

இன உணர்வு
தமிழனுக்கு இருந்திருந்தால்
இந்தியாவின் ஸ்டாலினாய்
இருந்திருக்க வேண்டியவன் நீ!

மணி முடி உன்முன்
வைக்கப்பட்டது.
ஆனால் நீ
காளிக்குத்
தலையை வெட்டித் தந்த
கபாலிகனாகவே காலத்தை முடித்தாய்!

வாழ்க காந்தியம்
வாழ்க காமராசர்.

Series Navigationமானிடக் கவிஞர் பாரதி ஒரு மகாகவியே [மீள் பதிப்பு] [பாரதி பிறந்த தினம் : டிசம்பர் 11]ஓரினச்சேர்க்கையும் ஹிந்து மரபும்
author

பவள சங்கரி

Similar Posts

66 Comments

  1. Avatar
    paandiyan says:

    //பெரியாரின் பல்கலைக்கழகத்தில்
    ‘பச்சைத் தமிழன்’ எனும்
    பட்டம் பெற்றவனே!//

    சத்தியமா இது கவிதைதானுங்க. சந்தேகமே இல்லை.

  2. Avatar
    புனைப்பெயரில் says:

    தாயையும் பார்க்காமல்
    தாய்நாட்டைப் பார்ப்பதற்கு!–>

    காமராஜர் ஒரு கோழை. அவருக்கு சம்பளம் உண்டு. அதில் தாயை காத்திருக்கலாமே.
    ———
    நீ
    லட்சுமியை அனுப்பி
    சரஸ்வதியை வரவழைத்தாய்.
    இவர்களோ
    சரஸ்வதியையே
    லட்சுமியாக்கிக் கொண்டிருக்கிறார்கள்!–>
    ஆம், சரஸ்வதி மட்டும் நாவில் கொண்டவர்கள் பிச்சை எடுக்கும் பராரிகளாக இருந்த போது,
    லஷ்மி கடாட்சம் சரஸ்வதிக்கு பெறுத் தராததால் தான்
    படித்தவன் வீழ்ந்தான். அதுவே காமராஜர் செய்தது.
    ———–
    என்னால்
    கள்ளுக்கடை
    வைத்திருப்பவர்களைக் கூட
    மன்னிக்க முடிகிறது.–>
    அதில் என்ன தவறு..? கள் ஒன்றும் போதைப் பொருளல்ல..
    அந்த பனைஏறி நாடார்கள் ஓட்டுப் போட்டுத்தான் இவர் கன்னியாகுமரியில் ஜெயிக்க முடிந்தது.
    ——–
    கருப்புதான் நீயும்…
    கருப்புக் காந்தி!–>
    ஒரே கவிக் கொசுத் தொல்லை. கருப்புக் காந்தி, கருப்பு எம் ஜீ ஆர்.
    அப்ப, நீங்க கருப்பு கீட்ஸ்ஸா..?

    பெரியாரின் பல்கலைக்கழகத்தில் –>
    கோட்டாக்கள் மூளைகளாக
    மூளைகள் ஈசானிய மூலை தூக்கிப் போடப்பட்டது.
    —–
    இந்தியாவின் ஸ்டாலினாய்
    இருந்திருக்க வேண்டியவன் நீ!–>
    ஏங்க இந்தியாவின்
    ஏங்கல்ஸ் இல்ல சாக்ரடீஸ், வாஷிங்டன், ஜார்ஜ் மன்னர் என்றெல்லாம் அவுத்து விடலாமே…

    கிராமங்களை கிராமங்களாக வைத்திருக்க, கருவேல முட்களையும் புளிய மரத்தையும் நட்டார் காமராஜர்.
    ஆனால், ஊர் தோறும் சாலை போடப்பட்டது திமுக் ஆட்சியில் தான். பின் வாஜ்பாய் அரசின் நாற்கர சாலைத் திட்டத்தில் கிராமங்கள் விழித்தது.
    ஊழல் கும்ப்ல எனினும் சாமான்யன் எழுந்தது திமுக கும்பலால் தான்.
    இவர் டி டி கே, டி வி எஸ் என்று வால் பிடிக்காமல் இருந்திருந்தால், இந்திராவின் பின் வால் பிடிக்காமல் இருந்திருந்தால், மொரார்ஜி எழுந்திருப்பார். தேசம் சுபிட்சமாயிருக்கும்.
    நல்ல மனிதர் என்பது வேறு.
    இப்படி துதி பாடுவது வேறு.
    பழைய காங்கிரஸில் நாடார் மட்டுமே அதிகமாக தங்கியது.

    1. Avatar
      ஷாலி says:

      //ஆனா, அவரால் குறட்டை ஒலிக்காக உதைக்கப்பட்ட அந்த கறுப்புக் காட்டான், கையில் குழப்பி சோத்தை தின்ற காமராஜரின் யதார்த்த ஆட்சி முறைக்கு அருகில் கூட நேருவின் பஞ்ச சீல கொள்கை கும்பலால் நாட்டுக்கு நல்லது செய்ய முடியவில்லையே…
      பசங்களல ஸ்கூலுக்கு வாங்கடா இல்லாட்டி அடின்னு சொல்லாமே, அவனுக்கு மதிய உணவு போடு என்று இதயம் தொடும் திட்டம் தானே தேவை..
      அது புரிந்த அந்த காட்டான் நல் ஆட்சி தரவில்லையா..? //
      அப்படின்னு நான் சொல்லலே! புனைபெயரில் சொல்றாரு.
      http://puthu.thinnai.com/?p=23804

      1. Avatar
        புனைபெயரில் says:

        அது உணமை. அதற்காக காமராஜரின் முட்டாள்தனங்களையும் பாராட்டுதல் எனக்கு உடன்பாடு கிடையாது. புளியமரம் நடுவதற்கு ஒரு ஐ ஏ எஸ் அதிகாரி போட்ட முட்டுக்கட்டையும் காமராஜர் பதிலும் இந்த எழுத்தாளருக்கு தெரியுமா என்று எனக்கு தெரியாது. பட படப்புடன் பக்கங்களை நிரப்பும் அவரின் பல எழுத்துக்கள் பற்றி எனக்கு எந்த ஒரு வியாக்கானமும் இல்லை… ஆனால் வரலாறு..? அது என்ன ரயில் பயணத்து புளியோதரை பொட்டலாமா..? அடைத்து தின்று வயிறு உப்ப படுத்துறங்க… நம் அடுத்த தலைமுறையின் வாழ்விற்கான சங்கதிகள்…

    2. Avatar
      பவள சங்கரி says:

      அன்பின் திரு புனைப்பெயரில் அவர்களுக்கு,

      காமராஜர், சைக்கிளில் சென்று கொண்டிருக்கக்கூடிய கக்கன், மாற்றுத் துணிகள் கூட வைத்துக்கொள்ளாமல் வாழ்ந்த ஜீவா போன்ற தன்னலமற்றத் தலைவர்களை மறந்து, கருணாநிதி போன்றவர்களை நாம் பாராட்டுவதால்தான், இன்று ஊழல் சேற்றில் சிக்கி திணறிக் கொண்டிருக்கிறோம். கருவேலமுள்ளையும், புளிய மரத்தையும் நட்ட தொலை நோக்குப் பார்வை உள்ள காமராசரை புரிந்து கொள்ள முடியாததுதான் உங்கள் எண்ணம் வெளிப்படுத்துகிறது. அன்று மழை பொய்த்துப்போய், விவசாயம் செய்ய முடியாமல் பஞ்சம் இருந்த காலம் அது. அப்படி ஒரு நேரத்தில் தண்ணீர் இல்லாமல் விளையக்கூடிய மரம் என்பதால் அதை ஊக்கப்படுத்தினார். கரிக்கட்டை வியாபாரம் அப்பொழுதெல்லாம் எவ்வளவு முக்கியமாக இருந்தது இல்லையா? அந்த இரு மரத்தினால் கிராம மக்களின் பொருளாதாரம் சீர்படும் என்றுதானே அவர் செய்தார். புளிய மரங்களை நாற்கரச் சாலைகளுக்காக வெட்டித் தள்ளியதால் இன்று குழம்புக்கு புளிக்காக ஆந்திராவை நாட வேண்டியுள்ளது. நீங்கள் பல விசயங்களை உங்களின் தேவைக்கேற்ப மறந்துவிட்டு பேசுகிறீர்கள். உணவுப் பஞ்சம் இருக்கும்போது வானில் ராக்கெட் செலுத்த முடியாது. அன்றைய சூழலுக்கு மனிதனுக்கு வயிறார முதலில் உணவு வேண்டும். அதைத்தான் காமராஜர் செய்தார். அவர் கைகாட்டிய இந்திரா காந்தியும் சி.சுப்பிரமணியம் மூலமாக பசுமைப் புரட்சி செய்து தன்னிறைவு ஏற்படுத்தியதோடு இன்று மற்றநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யக்கூடிய வகையில் இருக்கிறோம். 60 களில் நாம் நாற்கரச்சாலை போட்டுக்கொண்டு இருந்தால் நம்மீது சாலைகளை போட்டுக்கொண்டு மீண்டும் மாற்றான் உள்ளே புகுந்திருப்பான். 18 கேரட் தங்கம் கொண்டுவந்த, தன்னுடைய கழிவுகளைத் தானே குடிக்கச்சொன்ன மொரார்ஜியை மட்டும் பாராட்டுகிறீர்கள். எந்த நாடார்களால் கன்னியாகுமரியில் வெற்றி பெற்றார் என்று கூறுகிறீர்களோ அதே நாடார்களால் தான் அவர் விருதுநகரில் தோற்கடிக்கப்பட்டார். அதன் விளைவாக இன்றும்வருந்தி தாழ்ந்து போய் உள்ளது நம்நாடு. இல்லாவிட்டால் சிவகாசி மட்டுமல்ல , நம்முடைய தமிழர்களின் கடின உழைப்பால் தமிழகமே ஜப்பானாக மாறியிருக்கும். கொள்ளை அடிப்பவர்களை பாராட்டுகிறீர்களே. வாழ்க ஐயா உங்கள் சிந்தனை..

      அன்புடன்
      பவள சங்கரி

      1. Avatar
        புனைபெயரில் says:

        பெருவாரியான எழுத்தாளர்களைப் போல் நீங்களும் திரித்தால் என்ன சொல்வது.
        ஷாலி சுட்டிக் காட்டியது போல் பின்னொரு இடத்தில் காமராஜரை நான் புகழ்ந்துள்ளேன்.
        ஆனால், உங்களின் கட்டுரை வெறும் தொண்டரின் புகழ்ச்சியுரையாக இருப்பதால் தான் இடிக்கிறேன்.
        காமராஜர் கைகள் என் தோளில் போடப்பட்டதும் காங்கிரஸிற்கு வேலை பார்த்ததும் இன்னும் நினைவில் இருக்கிறது.
        அதற்காக அவரின் முட்டாள்தனங்கள் நியாயப்படுத்தப்படுதல் உடன்பாடில்லாதது எனக்கு. பசுமைப் புரட்சி பற்றி நீங்கள் இயற்கை விவசாயி நம்மாழ்வாரிடம் கேளுங்கள். அதன் கேடு புரியும்.
        கக்கன் மாதிரி ஜால்ரா குணமுடன் இருந்திருந்தால் பின்நாளில் காங்கிரஸில் நானும் ஒரு எம்பியாக மந்திரியாக இருந்திருப்பேன். இல்லை முரசொலியில் எழுதி கலைஞரின் கடைக்கண் பார்வையால் காசு பணம் பார்த்திருப்பேன்.
        பின் விளக்கமாக எழுதுகிறேன்.

        1. Avatar
          புனைபெயரில் says:

          விளக்கமாக பல பின்னூட்டங்கள் போட்டு விட்டேன். காமராஜர், எம் ஜீ ஆர் இருவரின் தாக்கம் என் வாழ்வில் உண்டு. காமராஜர் வீட்டில் உண்டது, அவரின் கோஷங்களுக்கு கொடி பிடித்ததும் இன்னும் நினைவு உள்ளது. ஆனால், பல களத்தில் இருந்தவர்களின் அனுபவத்தின் பின்புதான், முத்துராமலிங்கத் தேவர், இரட்டைமலை சீனிவாசன், ஜீவா, அண்ணா, பெரியார், ராஜாஜி, எம் ஜீஆர், கருணாநிதி, மு.மாறன்,ஜெயலலிதா போன்றோரின் இன்னொரு நல் முகமும் புரிந்தது.
          இவர்கள் எல்லாம் அரசியலில் ச்முகப்பொறுப்பில் வந்தவர்கள். ஏன் துதி பாட வேண்டும் நாம். நல்லவற்றை பாராட்டி, பிறவற்றை இடித்துரைப்பது நம் கடமையன்றோ…?

  3. Avatar
    புனைப்பெயரில் says:

    இதுதான் ‘கே’ பிளான் என்பது. இன்று இதுபோல யாரை நாம் பார்க்க முடியும். –> யாரையும் பார்க்க முடியாது. இது நேரு குடும்பத்திற்கு வால் பிடிக்க நடந்த சதி. அதில் காமராஜர் தலை ஆட்டும் பொம்மையாக செயல்பட்டார். அரசியலின் ஆதி தெரியாவிடின் சற்றே கூகுளிடுங்கள்.

  4. Avatar
    புனைப்பெயரில் says:

    அவர் கைகாட்டுதலில்தான் இந்திராகந்தி பிரதமரானார்.–> இல்லை அவர் கை காட்டாவிடினும் இந்திரா தான் ஆகியிருப்பார். ஏன் காங் உடைந்தது என்று படித்து பாருங்கள். புரியும் காமராஜர் ஏன் கைகாட்டினார் என்று…

  5. Avatar
    புனைப்பெயரில் says:

    மூத்தத் தலைவர்கள் பலர் குமரிஅனந்தன் அவர்களுக்கு உரிய மரியாதை தராமல்— ஜாதிய அருகாமையே ஒரு தகுதியாக நியமிக்கப்பட்டதால் வந்த எதிர்ப்பு இது. பழ. நெடுமாறனிடம் கேளுங்கள் , காமராஜர் அபிமானி எனினும் உண்மை சொல்வார்.

  6. Avatar
    புனைப்பெயரில் says:

    குட்டி ஜப்பான்— ஜப்பானில் யாரும் குட்டிகளை ( சிறு வயதினரை என பொருள் கொள்க )வேலைக்கு வைத்தால் சிறை தான். இதைக் கூட காமராஜரால் சரி செய்ய முடியவில்லை என்பதே கசப்பான உண்மை.

  7. Avatar
    சி. ஜெயபாரதன் says:

    முதல் அமைச்சராய் இருந்து போது காமராஜர், சுதந்திரப் போராட்டத்தில் பங்கெடுத்து வறுமையில் இடர்ப்பட்ட என் தந்தையாருக்குத் தியாகிகள் தாமிரப் பட்டயம் அளித்து,100 ரூ தியாகிகள் பென்சனும் அளித்ததை மறக்க முடியாது.

    சி. ஜெயபாரதன்

  8. Avatar
    paandiyan says:

    ஜெனரல் கமென்ட் எங்கு போடுவது என்று தெரியவில்லை என்பதால் இங்கு .

    திண்ணை ஆசிரியர் – சஃபாரி (SAFARI from APPLE) ப்ரௌஸர் இல் (IPAD) வழியாக திண்ணை சரியாக படிக்க முடியவில்லை. FONT PROBLEM இருக்கின்றது. இது டெஸ்ட் பண்ணப்பட்டு உள்ளதா?

  9. Avatar
    புனைப்பெயரில் says:

    காமராஜர் கிங் மேக்கர் என்பது ஜோக்கர் ஸ்டேட்மெண்ட்…அவர் பலி ஆடு மட்டுமே…
    எமோஷனல் கதைகளை எவ்வளவு வேண்டுமானாலும் எழுதிக் குவியுங்கள்.. வரலாற்றில் துதி பாடல் வேண்டாம். நாளைய தலைமுறையாவது ஆண்டான் அடிமை என்றில்லாமல் கேள்வி கேட்டு நிமிர்ந்த நடையுடன் இருக்கட்டும். இதோ ஒரு வரலாற்று தொடரில் – விகடனில் – எடுத்தது,
    ———————–
    “””இந்திராவை அனைத்து இடங்களுக்கும் அழைத்துச் செல்வதை நேரு விடவில்லை. இதைத் தொடர்ந்து காங்கிரஸ் செயற்குழு உறுப்பினராக இந்திரா ஆக்கப்பட்டார். அடுத்து கட்சியின் நாடாளுமன்றக் குழுவில் சேர்க்கப்பட்டார். அதன் பிறகு தேர்தல் குழுவில் சேர்க்கப்பட்டார். அதன் பிறகு அகில இந்திய காங்கிரஸ் தலைவராகவே 1959-ல் இந்திரா உட்கார வைக்கப்பட்டார். ‘இனி என்ன செய்வீர்கள்?’ என்று கேட்பதைப்போல இருந்தது நேருவின் நடவடிக்கைகள்!
    காமராஜர் இருக்கும்போது, லால்பகதூர் சாஸ்திரி இருக்கும்போது, நிஜலிங்கப்பா இருக்கும்போது, கோவிந்த வல்லபந்த் இருக்கும்போது துணிச்சலாக இந்திராவை காங்கிரஸ் தலைவர் நாற்காலியில் கொண்டுவந்து நேரு உட்கார வைக்கிறார் என்றால், இந்தக் கட்சியில் தனக்குப் பிறகு தன்னுடைய மகள் இந்திராதான் இந்தப் பதவிக்கு வரத் தகுதியானவர், இந்திரா மட்டுமே தகுதியானவர் என்று நினைத்ததுதான் காரணம். ………..”””
    —-
    முன்பு இந்திரா, இப்போது காமராஜர் , அடுத்து ஒரு வேளை நேரு என்றால், “மாமா” நேருவின் உண்மையான நிலையுடன் எழுதுங்கள்…

    1. Avatar
      சி. ஜெயபாரதன் says:

      புனை பெயராரே,

      ஒரு தந்தை செய்ய வேண்டிய ஒரு பணிப் பயிற்சி வேலையைத்தான் பண்டித நேரு தன் புதல்விக்கு அளித்துள்ளார். அது தந்தை மகளுக்கு ஆற்றும் நன்றி. இப்போது திரு. கருணாநிதி செய்ய வில்லையா ? தன் புதல்வி எல்லா பதவிகளில் அமர்ந்து அனுபவம் பெறச் செய்தது,நேருவின் பண்பைத் தான் காட்டுகிறது.

      ஆயினும் அனுபவம் பெற்ற இந்திரா காந்தி தேர்தலில் மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்டவர்தானே.
      புட்டு பாகிஸ்தானில் தன் மகள் பெனாசியரை ஆட்சிக்குக் கொண்டு வந்தது போல் தானே அதுவும்.

      சி. ஜெயபாரதன்

      1. Avatar
        புனைபெயரில் says:

        ஊனமுற்றோரை அடிக்கடி தாக்குவதாக இருக்கிறது உங்கள் செயல்.

  10. Avatar
    புனைப்பெயரில் says:

    1952-ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் காமராசர் சாத்தூர் தொகுதியில் நின்று வெற்றி பெற்றார். — அப்படிங்கலா… நிசமாலுமா..?
    1957 ல் தான் காமராஜர் அங்கு நின்று வென்றது.

    1. Avatar
      பவள சங்கரி says:

      மன்னிக்க வேண்டும். தவறுக்கு வருந்துகிறேன். திருத்திக்கொள்கிறேன். நன்றி.

      அன்புடன்
      பவள சங்கரி

  11. Avatar
    paandiyan says:

    1952 M.P Srivilliputtur
    1957 M.L.A Sattur
    நாளை ஒரு வேளை இது புக் ஆக வந்தால்???

  12. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    \ எமோஷனல் கதைகளை எவ்வளவு வேண்டுமானாலும் எழுதிக் குவியுங்கள்.. வரலாற்றில் துதி பாடல் வேண்டாம். \

    வழிமொழிகிறேன். திண்ணை தளத்தில் வரலாறு படும் பாடு !!!!!!!!!

    புனைவுகளும், ஸ்துதிகளும், தூஷணைகளும், புளுகுமூட்டைகளும்….. வரலாறாய் விக்ஞான பூர்வமாக…… திண்ணை தளத்தில் விக்ஞானிகளாலேயே முன்வைக்கப்படில், புனைவு எழுத்தாளரின் ஒரு வ்யாசத்தில் வரலாறு விதிவிலக்காகத் தடம் புரள்வதை பெரிய குற்றமாக ஏன் பார்க்க வேண்டும்.

  13. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    \ ஒரு தந்தை செய்ய வேண்டிய ஒரு பணிப் பயிற்சி வேலையைத்தான் பண்டித நேரு தன் புதல்விக்கு அளித்துள்ளார். அது தந்தை மகளுக்கு ஆற்றும் நன்றி. இப்போது திரு. கருணாநிதி செய்ய வில்லையா ? \

    விக்ஞானி ஸ்ரீமான் ஜெயபாரதன் குறளோவியத்தைப் படித்து குறளைப் படித்திருப்பாரோ?

    தந்தை மகற்காற்று நன்றி அவையத்து
    முந்தி இருப்பச் செயல்.

    பத்தாம்பசலிகளான பரிமேலழகர், மணக்குடவர் மற்றும் மு.வ போன்றோர் அளித்த உரைப்படி தந்தை தன் மகற்காற்றும் நன்றி என்பது அவர்களை சபையோர் மத்தியில் முந்தியிருக்கத்தக்கபடி கல்வியளித்தல் என்பதாகும்.

    மகளுக்குச் செய்த நல்லுதவியாகப்பட்டது……… அம்மகள் ராஜ்யசபையில் (அறிஞர்கள் அவையில்) (புகழுடன்???!!!) விளங்க இத்தாலி ராஜமாதாவை மணிமேகலையாகப் புகழ்ந்து அவருடைய அமுதசுரபியிலிருந்து பிச்சை வாங்கி மகளுக்கு சீட் பெற்றது!!!!!!!!!!! ………….

    ம்….. இது குறளோவியப்படி மகளுக்குச் செய்த நல்லுதவி! வாழ்க குறளோவியம்! வாழ்க த்ராவிட மடம்!!!!! வாழ்க வாழ்கவே!

    ஒருவேளை யாம் பெறப்போகும் இன்பம் இவ்வையகம் முன்னரே பெறட்டும் என்று பண்டித நேருவுக்கு குறளோவியம் எழுது முன்னமேயே அதன் *மெய்* ஞானத்தை வழங்கியிருப்பாரோ?

  14. Avatar
    சி. ஜெயபாரதன் says:

    ///தந்தை மகற்காற்று நன்றி அவையத்து
    முந்தி இருப்பச் செயல்.///

    உன்னத மேதைகளான பரிமேலழகர், மணக்குடவர் மற்றும் மு.வ. போன்றோரை இகழும் சமஸ்கிருதப் பண்டித சிகாமணி திருவாளர் கிருஷ்ணகுமார் குறளின் பொருளைச் சரிவரப் புரிந்து கொள்ள வில்லை.

    வெறுங் கல்வி அறிவு மட்டும் ஒருவரை அவையத்தில் முந்தி யிருக்கச் செய்யாது. கல்வி, கேள்வி, ஞானம், பயிற்சி, அனுபவம் முக்கியத் தேவைகள். பண்டித நேரு இந்திரா இவற்றைப் பெற வாய்ப்பளித்தார். மகள் இந்திரா அவற்றைப் பயன்படுத்தி, முன்வந்து தேர்தலில் நின்று போட்டியில் தேர்ந்தெடுக்கப் பட்டுப் பிரதம மந்திரியானார்.

    சி. ஜெயபாரதன்.

  15. Avatar
    paandiyan says:

    //தன்னுடைய கழிவுகளைத் தானே குடிக்கச்சொன்ன மொரார்ஜியை மட்டும் பாராட்டுகிறீர்கள்//

    அவர் எங்கு யாருக்கு அப்படி சொன்னார் என்பதை விவரமாக சொல்ல முடியுமா?. இனி நான் உங்களுக்கு தரப்போகும் தகவல்.

    நேர்மையான மனிதர். உண்மையான காந்தீயவாதி.
    வெள்ளைக்காரர் காலத்தில்,1930ல் – தனது ஐசிஎஸ்
    பதவியை தூக்கி எறிந்துவிட்டு இந்திய சுதந்திர
    போராட்டத்தில் ஈடுபட்ட சுதந்திரப் போராட்ட தியாகி

    26 ஜூன் 1975 அன்று உள்நாட்டு எமெர்ஜென்சி
    அறிவிக்கப்பட்டதும், ஜெயபிரகாஷ் நாராயண் தொடங்கி,
    எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த மூத்த அரசியல் தலைவர்கள்
    அனைவரும் உடனடியாகக் கைது செய்யப்பட்டு
    சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் மொரார்ஜியும் அடக்கம்.

    உங்கள் கற்பனைக்கும் பொருத்தமான ஒரு உண்மை :-

    பொது கழிப்பிடங்களில் சிறுநீரை சேகரித்து அதிலிருந்து உரம் தயாரிக்கும் தொழில் நுட்பத்தை டில்லியில் உள்ள ஐ.ஐ.டி., உருவாக்கியுள்ளது.மறைந்த முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய் போன்றவர்கள் சிறுநீரை குடிக்கும் வழக்கம் உள்ளவர்கள். சிறுநீர் சில நோய்களை குணப்படுத்துவதாக ‘நேச்ரோபதி’ டாக்டர்கள் கூறுகின்றனர். ஆனால், துர்நாற்றம் வீசும் சிறுநீரை மருந்தாக பயன்படுத்த யாரும் முன்வருவதில்லை. இதனால், சிறுநீர் கழிவு பொருளாக, சாக்கடையில் கலந்து வருகிறது.சிறுநீரில் பாஸ்பேட், நைட்ரேட் போன்ற உரம் தயாரிப்பதற்குரிய பொருட்கள் நிரம்ப உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.ஜெர்மனி நாடு சிறுநீரை சேகரித்து அண்டை நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது.

    1. Avatar
      பவள சங்கரி says:

      அன்பின் திரு பாண்டியன்,

      தங்களுடைய விளக்கத்திற்கு மிக்க நன்றி. நான் திரு மொரார்ஜி அவர்களை எந்த விமர்சனமும் செய்யவில்லை. மேலும் இது அப்படி ஒரு கட்டுரை அல்ல. தயவுசெய்து தவறாகப் புரிந்துகொண்டு என் கட்டுரையை திசை திருப்பாதீர்கள் நண்பரே.

      அன்புடன்
      பவள சங்கரி

  16. Avatar
    paandiyan says:

    பவள சங்கரி,
    காமராஜரை பாராட்டி, மொரார்ஜியை விமர்சிக்கும் இந்த பண்பு கண்டிப்பாக நீங்கள் காமராஜிடம் கற்ரு கொண்டு இருக்க முடியாது. எழுத்தும் முன் உங்களை நன்றாக பக்குவப்படுத்தி கொண்டு வாருங்கள் முதலில்

    1. Avatar
      புனைபெயரில் says:

      பாண்டியன், ராஜாஜி, மொரார்ஜி, ஜெ.பி , சி.எஸ் , ஆர்.வி என்ற பலரின் பங்களிப்பு பற்றி இந்த் எழுத்தாளருக்கு தெரியாது. அடுத்தாத்து அம்புஜத்தின் வரலாறு மாதிரி சமூக வரலாற்றையும் இவர் எழுதுவது ஏன் என்று தெரியவில்லை. ஒரு வேள பலதள எழுத்தாளர் என்று பொற்கிழி வாங்க எழுதுகிறாரோ தெரியவில்லை. இன்று எப்படி ஐ.டி ரெவலூஷனுக்கு எந்த அரசியல்வாதியும் பெயர் வாங்கிச் செல்ல முடியாதோ அது போல் தான் காமராஜர் காலத்து கனரக தொழிற்கூடங்களுக்கு காமராஜர் பெயர் தட்டிச் செல்ல முடியாது. நிச்சயம் கல்வி கற்க அவர் உந்துகோலாயிருந்தார். ஆனால், கோட்டாக்களில் அடிபட்ட மூளைகளுக்கு ஒரு இருவது சீட் வகுப்பு மூலையிலாவது போடு என்று அவர் சொல்லியிருந்தால் அப்போது சொல்லலாம் அவர் தொலை நோக்கு பார்வை கொண்டவர் என்று. இன்று தென் பகுதியில் இருக்கும் நாடார் – தேவர், நாடார் – தாழ்த்தப்படவர் பிரச்சனைகளுக்கு இவர் அரசாண்ட முறையும் ஒரு காரணம். அவரின் நற்செயல்களுக்கு பாராட்டுவது மாதிரி அவரின் முட்டாள்தனங்களும் பேசப்பட வேண்டும். அரசியலை விட இவரை விட் தொலை நோக்கு பார்வை முரசொலி மாறனுக்கு இருந்தது… நான் மாநில சுயாட்சி சிந்தனை பற்றி மட்டும் சொல்கிறேன்.

      1. Avatar
        பவள சங்கரி says:

        //அடுத்தாத்து அம்புஜத்தின் வரலாறு மாதிரி சமூக வரலாற்றையும் இவர் எழுதுவது ஏன் என்று தெரியவில்லை. ஒரு வேள பலதள எழுத்தாளர் என்று பொற்கிழி வாங்க எழுதுகிறாரோ தெரியவில்லை.//

        அடடா.. ஐயாவிற்கு நல்ல நகைச்சுவை உணர்வுகூட இருக்கும் போல் உள்ளதே.. ஆகா எத்தனை முகங்கள்தான் உங்களுக்கு!!

        என்ன செய்வது நேரிடையாக அனுபவம் பெற்றவர்கள் புனைப்பெயரில் மறைந்துகொண்டு வெளிவந்து உண்மையான திருமுகத்தைக் காட்ட மறுத்தால் இது போன்ற நிலைகளைத் தவிர்க்க முடியாமல் போகலாம்.. விரைவில் புனைப்பெயரில் என்ற திரை விலக்கி வாருங்கள், நன்றி.

        அன்புடன்
        பவள சங்கரி

  17. Avatar
    புனைபெயரில் says:

    //தன்னுடைய கழிவுகளைத் தானே குடிக்கச்சொன்ன மொரார்ஜியை மட்டும் பாராட்டுகிறீர்கள்//—> பிதற்றல். உங்கள் கதையின் திருப்பத்திற்கு போடுவது போல் அடுத்த வாரம் என்று போட வாய்ப்பில்லா நிலை. அவர் யாரையும் குடிக்கச் சொல்லவில்லை. அவர் காமராஜரிலும் பெரியவர், சிறந்தவர் என்பது சிறுநீரை விட கரிக்கும் உண்மை.. ஆனால் சிறுநீர் போல் மருத்துவகுணமுள்ள உண்மை. படியுங்கள் எங்காவது… எல் கே ஜியில் அரசியல் நிலையில் இருக்கும் நீங்கள் எம் பி பி எஸ் பாடம் எடுக்காதீர்கள்… பிளீஸ்… உங்களுக்கு எழுத்துத் திறமையும் எழுதிக் குவிக்கும் வேகமும் இருந்தால், கியரும், பிரேக்கும் வைத்துக் கொள்ளுங்கள் – வரலாறு எழுதும் முன். அதே போல், ஜாதி, மத, நிலைப்பாடுகள் பற்றி திறந்த மனதுடன் இயங்காமல் வேஷம் போட்டவர் காமராஜர். அனைவரும் வெந்த சோத்திற்கு வாழும் ஜீவன்கள் என்று மட்டும் நினைத்தர் காமராஜர். ஆனாலும், அண்ணா, குணாளா குலக் கொழுந்தே என்றழைத்து போட்டி வேட்பாளரை நிறுத்தாமல் குடியாத்தத்தில் வெற்றி பெறச் செய்தார். ஆனால் இவரின் ஜீவா கம்யூனிஸ்ட் போட்டி வேட்பாளரை நிறுத்தியது. எமர்ஜென்சியை எதிர்த்த வேகம் இவரை விட கருணாநிதியிடம் அதிகம் இருந்தது. முழுயோக்கியர் ரமண மகரிஷியாக இருந்திடலாம்… அரசியலில் வல்லவனாகவும் இருத்தல் வேண்டும். இவர் பிடித்த பல முரண்டுகளால் தான் திமுக வென்றது. வடக்கத்தி கும்பலில் இவருக்கு தெரிந்தது, பகட்டு பேமிலி நேரு குடும்பம் மட்டும் தான். கிருபாளனி, பட்டேல், நேதாஜி, மொரார்ஜி என்று பலர் இருந்தனர். அவர்களை இவர் முன்னிருத்தியிருந்தால் இவர் சீலர் என்று சொல்லலாம். காந்தி இவரின் செயல்பாடுகளை ‘கிளிக்’ என்று ஏன் விளித்தார் என்று ஒரு ஆராய்ச்சிபூர்வ கட்டுரை எழுதுங்களேன்…

    1. Avatar
      பவள சங்கரி says:

      பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக வாழ்ந்த நிஜலிங்கப்பா, சஞ்சீவி ரெட்டி, அர்ஸ், அவர்களையும் நினைவு கூற வேண்டும். படிப்பதற்கே சிரமப்பட்டு, தானும் மேன்மையடைந்து நாட்டிற்காகவும் உண்மையாக உழைத்த லால் பகதூர் சாஸ்திரி மறக்க முடியாது. பிற்படுத்தப்பட்ட மக்கள் முன்னுக்கு வருவதற்கு காரணமாக இருந்த பெரியார், அண்ணாதுரை அவர்களையும் மறக்க முடியுமா? தொழிலாளர்களுக்காகவே வாழ்ந்த ஜோதி பாசு, வி.வி. கிரி அவர்களையும் நினைவு கூறாமல் இருக்க முடியாது. ஆசிரியராக இருந்த சர். ராதாகிருஷ்ணன் அவர்களையும் அவர்தம் சேவைகளையும் நினைக்காமல் இருக்க முடியாது. எமர்ஜென்சியின்போது மக்களைத் திரட்டி, ஆட்சியை மாற்றிக் காண்பித்த ஜெயப்பிரகாஷ் நாராயணன் அவர்களைத்தான் மறக்க முடியுமா? இப்படி இந்த தலைவர்கள் மக்களுக்காகக் பணிய்யற்றியுள்ளார்
      ஒன்றுபட்ட இந்தியாவை உருவாக்கிய பட்டேல் அவர்கள் பிரதமராக இருந்திருந்தால் நம் நாடு எப்போதோ வல்லரசாக ஆகியிருக்கும். இப்படி ஒவ்வொரு தலைவரும், தங்களுடைய தனிப்பட்ட வல்லமை கொண்டு மக்களுக்காகப் பணியாற்றி நாட்டை முன்னுக்குக் கொண்டுவந்துள்ளார்கள். மொரார்ஜி தேசாய் தான் உதவி பிரதமராகவும், நிதியமைச்சராகவும் இருந்த போது என்ன திட்டங்கள் குறிப்பிடும்படி கொண்டுவந்தார், என்பது தெரியவில்லை, 18 கேரட் தங்கம் தவிர. அந்தத் திட்டமும் வெற்றி பெற்றதாகத் தெரியவில்லை.

      நன்றி.

      1. Avatar
        பவள சங்கரி says:

        திருத்தம் – இப்படி இந்த தலைவர்கள் மக்களுக்காகக் பணிய்யற்றியுள்ளார் – இப்படி இந்த தலைவர்களெல்லாம் மக்களுக்காகப் பல வகையில் பணியாற்றியுள்ளனர்!

        நன்றி.

  18. Avatar
    paandiyan says:

    சி. ஜெயபாரதன் — காமராஜர் என்று எழுதி இருப்பது மெத்த சரி .

    பவள சங்கரி — காமராசர் ஆ, காமராஜர் ஆ??

  19. Avatar
    புனைப்பெயரில் says:

    கரிக்கட்டை வியாபாரம் அப்பொழுதெல்லாம் எவ்வளவு முக்கியமாக இருந்தது இல்லையா?–> அது பற்றி உங்களுக்கென்ன தெரியும்.. நான் கருவேலங்காடு எரித்து அனல்பிடித்து அடிவேரில் கரிக்கட்டைச் செய்திருக்கிறேன். கோவை வேளாண் பல்கலையில் வறண்ட காட்டு விளைபயிர் புளி பற்றி பாண்டித்யம் பெற்றிருக்கிறேன். புளி இப்போது தாய்லாந்தில் இருந்தும் இறக்குமதி ஆகிறது. அது வேறு. ரோட்டோரம் புளியமரங்கள் வெட்டப்பட்டதின் அளவு விட பல்லாயிரம் மடங்கு புளியந்தோப்புகளாக இன்றும் இருக்கிறது. ரோடு போட்டா யாரோ வந்திடுவானாம்… சபாஷ்.. இந்த மாதிரி பாமர சிந்தனையாளர்கள் தான் புகழ் ஜட்கா ஓட்ட முடியும்… பால் பவுடரை நானும் அலுமினிய தட்டில் ஊற்றிக் குடித்திருக்கிறேன்… பவுடராக தின்னும் இருக்கிறேன்.. அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம். வரலாறு எழுதுங்கள்… வாழ்க கோஷமிடுதல் வரலாற்று பதிவு ஆகாது.

    1. Avatar
      பவள சங்கரி says:

      அன்பின் ஐயா,

      வணக்கம்.

      // அது பற்றி உங்களுக்கென்ன தெரியும்.. நான் கருவேலங்காடு எரித்து அனல்பிடித்து அடிவேரில் கரிக்கட்டைச் செய்திருக்கிறேன். கோவை வேளாண் பல்கலையில் வறண்ட காட்டு விளைபயிர் புளி பற்றி பாண்டித்யம் பெற்றிருக்கிறேன்//

      உண்மை ஐயா. நான் பிறப்பதற்கு முன்பு நடந்த சம்பவங்களை படித்துதான் அறிந்துகொள்ள முடியும். ஆனால் தங்களைப் போன்று நேரிடையாக அனுபவம் பெற்றவர்கள் மூலமாக அறிந்து கொள்வது பெரிய பாக்கியம் அல்லவா? தயவுசெய்து தங்களுடைய அனுபவங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்வீர்களா? திரை விலக்கி தங்களுடைய அனுபவம் வாய்ந்த உண்மையான முகத்தை வெளிப்படுத்தினால் பல அரிய தகவல்களும், ஆக்கப்பூர்வமான அனுபவப் பகிர்வுகளும் கிடைக்கும் என்று நம்புகிறேன். தயவுசெய்து பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன். நன்றி.

      அன்புடன்
      பவள சங்கரி

  20. Avatar
    புனைப்பெயரில் says:

    மகாத்மா காந்தியோட இளமைக் காலமும், காமராஜரோட இளமைக்காலமும் ஒன்றுபட்டு இருந்ததுன்னு சொல்லலாம் –> தயவு செய்து ஒரு பத்து ஒன்றுபட்டு இருந்த நிகழ்வுகளை சொல்லுங்களேன்…. புண்ணியமாப் போகும்.

  21. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    \ சமஸ்கிருதப் பண்டித சிகாமணி திருவாளர் கிருஷ்ணகுமார் \

    க்ஷமிக்கவும். தவறான யூகம். நான் சம்ஸ்க்ருத பண்டிதன் அல்லன்.

    \ உன்னத மேதைகளான பரிமேலழகர், மணக்குடவர் மற்றும் மு.வ. போன்றோரை இகழும் \

    ஸ்ரீமான் ஜெயபாரதன் அவர்களுக்கு இவர்கள் பேரில் எவ்வளவு மதிப்பு உண்டோ அதை விடப் பலமடங்கு மதிப்பு எனக்கு இவர்கள் பாலுண்டு. என்ன நான் இவர்கள் கருத்தை மதிக்கிறேன். ஸ்ரீமான் ஜெயபாரதன் இவர்கள் கருத்தை திரிக்க விழைகிறார். வித்யாசம் அவ்வளவே.

    \ வெறுங் கல்வி அறிவு மட்டும் ஒருவரை அவையத்தில் முந்தி யிருக்கச் செய்யாது. கல்வி, கேள்வி, ஞானம், பயிற்சி, அனுபவம் முக்கியத் தேவைகள். \

    இதில் எனக்கு அபிப்ராய பேதம் இல்லை. ஆனால் அபிப்ராய பேதம் உள்ள விஷயத்தை ஏன் பூசி மொழுகுகிறீர்கள்.

    இவர்கள் யாரும் மானம் மரியாதை இவற்றைத் துறந்து பதவியை பிச்சையாகப் பெருவதன் மூலம் மக்களுக்கு அறிஞர் சபையில் இடம் பெற வழி சொல்லவில்லை. ( த்ராவிட மடாதீசர் இந்த கண்றாவியைச் செய்து தான் மகளுக்கு அறிஞர் சபையில் இடம் பெற்றார்.)

    அல்லது பண்டித நேரு போன்று இந்திராகாந்தியை காங்க்ரஸ் கடி அரசியலில் திணித்து அவையத்தில் முந்தி இருக்க வழி வகுக்கச் சொல்லவில்லை.

    தேர்தலில் ஜெயிப்பது என்று கதை பேச வேண்டாம். ராகுல் காந்தி போன்று லல்லு பப்புவெல்லாம் கூட தேர்தலில் இன்று ஜெயிக்கிறார்கள்.

  22. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    \ வடக்கத்தி கும்பலில் இவருக்கு தெரிந்தது, பகட்டு பேமிலி நேரு குடும்பம் மட்டும் தான். கிருபாளனி, பட்டேல், நேதாஜி, மொரார்ஜி என்று பலர் இருந்தனர். அவர்களை இவர் முன்னிருத்தியிருந்தால் இவர் சீலர் என்று சொல்லலாம். காந்தி இவரின் செயல்பாடுகளை ‘கிளிக்’ என்று ஏன் விளித்தார் என்று ஒரு ஆராய்ச்சிபூர்வ கட்டுரை எழுதுங்களேன்… \

    ஸ்ரீமான் புனைப்பெயரில்……….

    இந்திராகாந்தி மற்றும் காமராஜர் பெயரில் ஸ்ரீமதி பவளசங்கரி அவர்கள் எழுதிய புகழ்மாலைப் புனைவுகளுக்குப் பரிகாரமாக

    சரித்ரத்தினை உள்ளது உள்ள படி….. நீங்களே ஏன் உங்களது வ்யாசங்களை சமர்ப்பிக்கக்கூடாது.

    1. Avatar
      பவள சங்கரி says:

      நன்றி திரு கிருஷ்ணகுமார் அவர்களே. இதைத்தான் நானும் சொல்கிறேன். எங்களைப் போன்றவர்கள், அறிந்த தகவல்களைப் பகிர்வதைக்காட்டிலும், நேரிடையாக அனுபவப்பட்டவர்கள், நேர்முகமாக சொல்லும் போது உண்மையை சரியாக தெரிந்து கொள்ளலாமே? தயவுசெய்து அவர் அதைப் புரிந்துகொண்டு வெளிவந்தால் நலம்.

  23. Avatar
    சி. ஜெயபாரதன் says:

    மதிப்புக்குரிய பெண் எழுத்தாளர்களை இப்படி எழுது, அப்படி எழுது என்று மிரட்டிக் கொண்டு வரும் இந்த ஞானச் சித்தன் யாரென்று திண்ணை ஆசிரியர் அவர் பெயரைக் குறிக்க வேண்டும். அல்லது அவரது படத்தை இட வேண்டும்.
    காமராஜர் பற்றி இவர் எழுத்தாள ஆசிரியருக்கு அறிவுரை வழங்கியது போல், முன்பு இந்திரா காந்தியைப் பற்றி ஒரு பெண் எழுத்தாளர் எழுதிய போதும் இதே மாதிரி இப்படி எழுது, அப்படி எழுது என்று அறிவுரையைச் சொல்லி மிரட்டினார் இந்த ஆணாதிக்க அறிவாளி !
    இந்த மகான் யார் பிறருக்கு அறிவுரை கூற ? இப்படி இவர் பிறரை மிரட்டுவதைத் திண்ணை வேடிக்கை பார்ப்பது unethical Journalism.
    சி. ஜெயபாரதன்.

  24. Avatar
    paandiyan says:

    //மொரார்ஜி தேசாய் தான் உதவி பிரதமராகவும், நிதியமைச்சராகவும் இருந்த போது என்ன திட்டங்கள் குறிப்பிடும்படி கொண்டுவந்தார், என்பது தெரியவில்லை, 18 கேரட் தங்கம் தவிர. அந்தத் திட்டமும் வெற்றி பெற்றதாகத் தெரியவில்லை.
    //

    Source:
    http://www.dinamani.com/editorial_articles/article846677.ece

    1977-ம் ஆண்டு மார்ச் 23-ம் தேதி, 81 வயதான மொரார்ஜி தேசாய் இந்தியாவின் நான்காவது பிரதமராகப் பொறுப்பேற்றார். பதவி ஏற்றவுடன் அவசரநிலைக்காலக் கொடுமைகளை நீக்கி, ஜனநாயகத்தை நிலைநாட்ட அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டார். அடிப்படை உரிமைகள், பத்திரிகைச் சுதந்திரம், அரசியல் கட்சிகளின் சுதந்திரமான செயல்பாடு மற்றும் தனிநபர் சுதந்திரம் ஆகியவற்றை மீட்டெடுத்தார். 44-வது அரசியல் சட்டத் திருத்தத்தின் மூலம் இந்திய அரசியலமைப்புக்கு ஏற்பட்ட ஊறுகளைக் களைந்தார்.

    மாநில சட்டசபைகளும், மத்திய நாடாளுமன்றமும் கொண்டுவரும் சட்டங்கள் அரசியலமைப்புச் சட்டத்துக்கு உட்பட்டதுதானா என ஆய்வு செய்யும், உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்ற உரிமைகள் மீட்டெடுக்கப்பட்டன.

    “இந்தியா கிராமங்களில் வாழ்கிறது’ என்ற அண்ணல் காந்தியின் வார்த்தைகளை அடிப்படையாகக் கொண்டு கிராமங்களில் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

    சிறுதொழில் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. நிலவரியைக் குறைத்தல் மற்றும் பெருமளவில் மானியம் அளித்தல் போன்ற நடவடிக்கைகளின் மூலம் நாட்டின் விவசாய முன்னேற்றம் வேகப்படுத்தப்பட்டது.

    ஏழை விவசாயிகளின் வாழ்வில் பெரிதும் அக்கறை கொண்டிருந்த அவர், வேலைவாய்ப்பற்ற கிராமப்புற மக்களுக்காக, வேலைக்கு உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். அதன் மூலம், கிராமங்களில் சாலைகளை அமைத்தல், பள்ளிக் கட்டடங்கள் கட்டுதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

    அது மட்டுமன்றி, “தனி ஒருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்’ என்ற தேசியக் கவி பாரதியின் வார்த்தைகளை உண்மையாக்கிக் காட்டியவரும் அவரே. ஏனென்றால், ஒவ்வோர் உணவு விடுதிகளும் ஒரு நாளைக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையில் ஒரு ரூபாய்க்கு ஏழைகளுக்கு உணவு வழங்க வேண்டுமென்று உத்தரவிட்டார்.

    அதை ஏற்றுக்கொண்ட உணவு விடுதிகளுக்கு மட்டுமே உரிமம் அளிக்கப்பட்டது. அந்த “ஜனதா சாப்பாடு’ ஏழைகளின் பசியைப் போக்கி அவருக்குப் பெரும் புகழைத் தேடித் தந்தது. இரண்டு ஆண்டுகள், மிகச்சரியாகச் சொல்வதெனில் 857 நாள்கள் மட்டுமே ஆட்சியில் இருந்தாலும், அவருடைய ஆட்சிக்காலம் கடும் பஞ்சங்களையும், இயற்கைச் சீற்றங்கள் பலவற்றைவும் எதிர்கொள்ள வேண்டியிருந்தபோதிலும் மக்கள் எந்த வகையிலும் இன்னல் அனுபவிக்காவண்ணம் மிகச்சிறப்பான, நிர்வாகத் திறமை மிகுந்த, ஊழலற்ற, நேர்மையான, தூய்மையான ஆட்சியை மக்களுக்குத் தந்தார்.

    சர்வதேச அளவிலே பெட்ரோலியம் மற்றும் பெட்ரோலியப் பொருள்களின் விலைகள் உயர்ந்தபோதிலும், தனது திறமையான நிர்வாகத்தால் விலைவாசியைப் பெரிதும் கட்டுக்குள் வைத்திருந்தார். ரேஷன் பொருள்கள் மக்களுக்கு மலிவு விலையில் கிடைக்கச் செய்தார்.

    அதன் மூலம் உற்பத்திப் பொருள்கள் அநியாய விலைக்கு விற்கப்படுவதையும், அப்பாவி மக்கள் ஏமாறுவதையும் தடுத்தார். உற்பத்திப் பொருள்களின் மீது அதிகபட்ச சில்லறை விலை (எம்.ஆர்.பி.) குறிக்கப்பட வேண்டும் என்பதை அறிமுகப்படுத்தி அதைக் கட்டாயமாக்கினார்.

    இன்றைக்கு ஒரு மாநிலத்துக்குள்ளேயே விவசாயப் பொருள்களை ஓரிடத்தில் இருந்து, வேறொரு இடத்துக்குக் கொண்டுசெல்ல முடியாத நிலை நிலவுகிறது. ஆனால், மொரார்ஜி தேசாய் இந்தியா முழுமைக்கும் ஒரே வேளாண்மைப் பிராந்தியமாக அறிவித்து விவசாயிகளின் விளைபொருள்கள் இந்தியா முழுவதும் கொண்டு செல்ல வகை செய்தார். அதன் மூலம் விவசாயிகளின் விளைபொருள்களுக்கு உரிய விலை கிடைக்க வழி ஏற்படுத்தினார்.

    உள்நாட்டில் மட்டுமன்றி, அயலுறவுக் கொள்கையிலும் அவர் தூய்மையைக் கடைப்பிடித்தார். அவர் தூய அணி சேராக் கொள்கையை அறிவித்து அதைச் செயல்படுத்தினார். அமெரிக்காவுடனும், சோவியத் ரஷியாவுடனும் சமமட்டத்திலான உறவுகளைப் பராமரித்தார்.

    பாகிஸ்தானின் “ஜியாஉல் ஹக்’ உடன் நேசக்கரம் நீட்டி அந்நாட்டுடன் நல்லுறவைப் பராமரித்தார். சீனாவுடன் ராஜதந்திர உறவுகளை மறு சீரமைத்து பலப்படுத்திக் கொண்டார். அமைதிக்காகக்கூட அவர் அணு ஆயுதம் வெடிக்க விரும்பவில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக, அண்ணல் காந்தியின் அப்பழுக்கற்ற தொண்டரான அவர், இந்திய தேச மக்களுக்கு ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையை மீட்டெடுத்துக் கொடுத்ததே அவர் செய்த மாபெரும் சாதனையாகும்.

    1. Avatar
      பவள சங்கரி says:

      அன்பின் திரு பாண்டியன்,

      மிக்க நன்றி. நிறைய தகவல்கள் அறிந்து கொள்ள முடிந்தது. மிகச் சிறந்த தேச பக்தர், காந்தியவாதி என்று பொதுவாக அறிந்திருந்தாலும், அரசியல் அமைப்பில் இவ்வளவு நல்ல திட்டங்கள் கொண்டு வந்திருக்கிறார் என்பது போற்றுதலுக்குரிய விசயம். பகிர்விற்கு நன்றி.

      அன்புடன்
      பவள சங்கரி

  25. Avatar
    ஜெயஸ்ரீ ஷங்கர் says:

    அன்பின் பவள சங்கரி,

    தங்களது பதில்களைப் படித்ததும் மனதுக்கு நிறைவாக இருந்தது,

    இந்தக் கட்டுரை தாங்கிய புத்தகம் வரும்போது, அதில் இந்தக் கட்டுரையை
    மீண்டும் படிக்கும் போது ‘இதெல்லாம்’ கூட நம் நினைவுக்குள் வந்து விடும்.

    நல்ல பதில்கள்.

    அன்புடன்
    ஜெயஸ்ரீ ஷங்கர்.

  26. Avatar
    சி. ஜெயபாரதன் says:

    புனை பெயரில் ஒளிந்து கொண்டு ஏட்டிக்குப் போட்டியாய் திண்ணையில் பின்னோட்டம் எழுதிக் கொண்டு, தாலிபான் மூர்க்கனைப் போல் மதிப்புக்குரிய பெண் எழுத்தாளர்களை இப்படி எழுது, அப்படி எழுது என்று மிரட்டிக் கொண்டு வரும் இந்த ஞானச் சித்தன் யாரென்று திண்ணை ஆசிரியர் அவர் பெயரைக் குறிக்க வேண்டும். அல்லது அவரது படத்தை இட வேண்டும்.

    காமராஜர் பற்றி இவர் எழுத்தாள ஆசிரியருக்கு அறிவுரை வழங்கியது போல், முன்பு இந்திரா காந்தியைப் பற்றி ஒரு பெண் எழுத்தாளர் எழுதிய போதும் இதே மாதிரி இப்படி எழுது, அப்படி எழுது என்று அறிவுரையைச் சொல்லி மிரட்டினார் இந்த ஆணாதிக்க அறிவாளி !

    இந்த மகான் யார் பிறருக்கு அறிவுரை கூற ? இப்படி இவர் பிறரை மிரட்டுவதைத் திண்ணை வேடிக்கை பார்க்கலாமா ?
    சி. ஜெயபாரதன்.

  27. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    \ புனை பெயரில் ஒளிந்து கொண்டு ஏட்டிக்குப் போட்டியாய் திண்ணையில் பின்னோட்டம் எழுதிக் கொண்டு, தாலிபான் மூர்க்கனைப் போல் மதிப்புக்குரிய பெண் எழுத்தாளர்களை இப்படி எழுது, அப்படி எழுது என்று மிரட்டிக் கொண்டு வரும் இந்த ஞானச் சித்தன் \

    ஸ்……..அப்பப்பா!

    ஏன் இப்படி கொதிக்கும் எண்ணையில் குதிக்கும் கடுகாய் தாளிக்கிறீர்கள்.

    ஸ்ரீமதி பவளசங்கரி அம்மையின் வ்யாசம் சரித்ரத்தில் வாழ்ந்து மறைந்த ஒரு பெருந்தகையைப் பற்றியது. நிகழ்வுகள் சரித்ரத் தரவுகளிலிருந்து மாறுபடும் போது அதனை இடித்துரைப்பதை மிரட்டல் என்று ஏன் சித்தரிக்கிறீர்கள். தப்பு.

    \ புனை பெயரில் ஒளிந்து கொண்டு \

    அன்பின் ஸ்ரீமான் ஜெயபாரதன் உங்களுக்குப் பாலபிஷேகம் செய்பவர்கள் புனைப்பெயரில் / பலப்பல சித்ர விசித்ர லிங்கபேதமற்ற புனைப்பெயர்களில் ஒளிந்து கொண்டு எழுதுவதை நீங்கள் கண்டும் காணாதது போல் விட்டு விடுவீர்கள் ….. ஆனால் உங்களை சாரமிகு கருத்துக்களால் காய்ச்சும் ஸ்ரீமான் புனைப்பெயரில் அவர்களை தாளிக்க முனைவீர்கள் ……என்றால் தளத்து மற்றைய வாசகர்களும் அதைக் காணாது விட்டு விடுவார்கள் என மனப்பால் குடிக்கலாமோ.

    \ இந்த ஞானச் சித்தன் யாரென்று திண்ணை ஆசிரியர் அவர் பெயரைக் குறிக்க வேண்டும். அல்லது அவரது படத்தை இட வேண்டும். \

    இந்த விக்ஞாபனத்தை அன்பர் அவர்கள் அவருடைய ஸ்துதி பாடிகளுக்கும் நீட்டிப்பார் என்றால் அவரது கருத்து (விதிவிலக்காக) சமநிலையின் பாற்பட்டது என அவதனிக்கப்படும்.

    1. Avatar
      சி. ஜெயபாரதன் says:

      ///ஏன் நீங்கள் இன்றைய “கே” கலாச்சாரத்தை வெகு சாதாரணமாக ஏற்றுக் கொள்ள கோஷம் போடும் சமூக சூழல் பற்றி ஒரு ஆழ் தொடர் எழுத முயலக் கூடாது…? ///

      ///இப்படி எழுது, அப்படி எழுது என்று ஓவ்வாதபடி பிறர்க்குச் சொல்ல இந்த அறிவாளிக்கு என்ன உரிமை உள்ளது ?
      எதையாவது உளற வேண்டும் இப்படி.///

      தென்னாட்டு பெர்னாட் ஷா “புனை பெயரார்” இப்படி ஒரு பெண் எழுத்தாளருக்கு ஆணை இட்டுள்ளார் !!!

      இவ்விதம் உங்களைச் செய்யச் சொன்னால் செய்வீரா ? இப்படி எழுதுவது பின்னோட்டம் அல்ல !

      சி. ஜெயபாரதன்.

  28. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    சஹோதரி ஸ்ரீமதி பவளசங்கரி,

    தாங்கள் தங்களது ஆற்றொழுக்குப் போன்ற நடையில் ஸ்வாரஸ்யமாக வ்யாசங்களைப் பகிர்வதைத் தொடருங்கள்.

    ஸ்ரீமான் புனைப்பெயரில் அவர்கள் சுட்டிய விஷயங்களில் உள்ள விஷய காம்பீர்யத்தை புறந்தள்ளாதீர்கள். சரித்ர நிகழ்வுகளைச் சித்தரிக்க முனைகையில் நிகழ்வுகளை ஒரு முறை சான்றாதாரங்கள் சார்ந்து பரிசீலிக்க முனையவும்.அதுவும் குறிப்பாக யாரையேனும் குற்றம் சாட்டவோ அல்லது சற்று மாற்றுக்குறைவாகவோ சித்தரிக்க முனையும் போது.

    ஒருவரைப் புகழ விழைகையில் யதார்த்தத்துக்கு மாறாக புகழ முனைவது கூட அவ்வளாவாக குற்றமாகக் காணப்படாது. ஆனால் யதார்த்தத்துக்கு மாறாக ஒருவரைக் குறைவாக சித்தரிப்பதைத் தவிர்க்கவேண்டும்.

    சிறிய உதாரணம் பாருங்கள். பரிமேலழகரை நான் சிரமேற்கொண்டு மதிக்கிறேன். ஆயினும் ஸ்ரீமான் ஜெயபாரதன் அவர்களது தவறான கருத்தாக்கத்தை இடித்துரைக்க விழைகையில் பரிமேலழகருக்கு *பத்தாம்பசலி* என்ற படிக்கு நிந்தாஸ்துதியாக அடைமொழி அளித்தது பொருத்தமாக இல்லையே என்பது …… அன்பர் அவர்கள் தாளிக்க விழைந்ததும் தான் லேட்டாகப் புரிந்தது. அவலை நினைத்து உரலை இடிக்கக்கூடாதே.

    ஸ்ரீமான் புனைப்பெயரில் அவர்கள் சுட்டிய கருத்துக்களில் உங்கள் வ்யாசங்களை மேலும் மெருகேற்றும் விஷயங்களை புறந்தள்ளாது உள்வாங்கினீர்கள் எனில் உங்கள் வ்யாசங்கள் மேலும் பொலிவு பெறும் அம்மணி.

  29. Avatar
    ஷாலி says:

    //தயவுசெய்து தங்களுடைய அனுபவங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்வீர்களா? திரை விலக்கி தங்களுடைய அனுபவம் வாய்ந்த உண்மையான முகத்தை வெளிப்படுத்தினால் பல அரிய தகவல்களும், ஆக்கப்பூர்வமான அனுபவப் பகிர்வுகளும் கிடைக்கும் என்று நம்புகிறேன். தயவுசெய்து பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன். நன்றி. பவளசங்கரி //

    கட்டுரை எழுதிய சகோதரிதான், புனைபெயரில் திரை விலக்கி உண்மையான முகத்தை காட்டி தகவல்களை பகிர வேண்டுகிறார்.

    இக்கருத்தையே திரு.ஜெயபாரதனும் வலியுறுத்துகிறார். முன்பு வாழ்வியல் பக்கங்கள் எழுதிய திருமதி.சீதாலட்சுமி அவர்களை மனம் புண்படும்படி விமரிசனம் செய்ததுபோல் பிற பெண் எழுத்தாளர்களை புனைபெயரில் விமர்சனம் செய்வதை கண்டிக்கிறார். இதில் என்ன குற்றம் கண்டார் திருவாளர்.க்ருஷ்ண குமார்?

    க்ருஷ்ணஜி! நாங்கள் ஒன்றும் துதி பாடவும் இல்லை, ஸ்தோத்திரம் கூறவும் இல்ல.பேராசிரியர்.ஜெயபாரதன் அவர்களுக்கு உள்ள தகுதியை வைத்தே அழைக்கின்றோம்.இன்றைய இணைய பல்கலைகழகத்தில் இனிய தமிழில் உலக தமிழ் மாணவர்களுக்கு வானவெளி விந்தைகளை வரிசையாக பாடம் நடத்துவதால் அவர் எங்களுக்கு பேராசிரியர்தான். எங்களைப் போன்ற அறிவியல் தாகம் கொண்ட மாணவர்களுக்குத்தான் அவர் பேராசிரியர்.உங்களைபோன்ற மகாமஹோபாத்தியாய ஸ்ரீ லஸ்ரீ க்ருஷ்ண குமார சுவாமிகளுக்கு அவர் சாதாரண மனிதனே!

    வாதம் தோல்வி அடையும்போது அபவாதத்தை ஆரம்பிக்காதீர்கள். நீங்களும்,நானும்,புனல்பெயரில்,பாண்டியன் போன்றவர்கள் முகம் அறியாமல் திரைக்குள் பாதுகாப்பை இருந்து கொண்டு எவர் முகத்திலும் சாணி அடிப்பது எளிது. இந்த சாணி எழுத்துக்களுக்கு எந்த மரியாதையும், முகம் அறிந்த நாடறிந்த திரு.ஜெயபாரதன் போன்ற எழுத்தாளர்களிடம் எதிர்பார்க்காதீர்கள். இனியேனும் துதிப்பாடல் தோப்புகரணம் போடுதலை ஸ்ரீ விநாயகப்பெருமானிடம் மட்டும் வைத்துக்கொள்ளுங்கள்.திண்ணையில் கொட்டாதீர்கள். சொல்லற்க சொல்லில் பயனிலா சொல்!

  30. Avatar
    paandiyan says:

    இங்கு மேல உள்ள கருத்துக்கும் , இந்த கட்டுரைக்கும் என்ன சம்பந்தம் என்று திண்ணை ஆசிரியர் அனுமதி கொடுத்து உள்ளார்?

  31. Avatar
    nallavan says:

    IIM Ganapathi Raman says:
    (அவர்கள் பதில் சொல்லி இருக்கின்றார் இன்னொரு கட்டுரையில். இது இங்கு உள்ளவர்களுக்கு மிக பொருத்தம். )

    ===
    இதுதான் காழ்ப்புணர்ச்சி. என் புனைப்பெயர்கள் பல. புனைட்பெயர்களை வைத்து கிண்டலடித்தல் கீழ்த்தரமான செயலாகும். இங்கே காழ்ப்புணர்ச்சியெனலாம். இப்படி ஒருவர் பல புனைப்பெயர்களில் எழதும்போது நீங்கள் ஏதெனுமொருமுறையில் தனிநபராக பாதிக்கப்பட்டிருக்கிறீர்களா? அவர் என்ன உங்கள் சாப்பாட்டைப்பிடிங்கிவிட்டாரா அல்லது உங்கள் சொத்தில் பங்கு கேட்டுவிட்டாரா? தொடர்ந்து திரும்ப திரும்ப இப்படி காழ்புணர்வுடன் எழுதும்போது கதனிப்பட்ட முறையில் பாதிக்கப்பட்டிருக்கிறாரெனத் தெரிகிறது! இவ்வளவு கோபமும் காழ்ப்புணர்வும் பின்னூட்டமிடுபவர்கள் மேல் ஏன்? உங்கள் பாதிப்பு மர்மத்தை வெளியில் சொல்லிவிடுங்கள். பொதுமனற இணையதளத்தில் எவரெவரோ வந்து அவருக்குத் தோன்றியதை எழுதிவிட்டுப்போகும்போது படித்து எதிர்கருத்துக்களை விரும்பினால் போட்டுவிட்டுப்போவதல்லாமால் ஏன் இந்த தனிநபர் தாக்குதல் ஒவ்வொருவர் மீதும்? கருத்தைக் கருத்தால் எதிர்நோக்க ஏனிந்த பயம்? தனிநபர் தாக்குதல் பயத்தில் அறிகுறிகள். அதாவது மற்றவர்கள் கருத்துக்களைக் கண்டு பயப்படுகிறீர்கள்.

  32. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    க்ருஷ்ணகுமார்

    என்பது என் பெற்றோரிட்ட பெயர்

    அது பொய்யானால்

    சொலற்கரிய திருப்புகழை உரைத்தவரை யடுத்த பகை
    அறுத்தெறிய உறுக்கி யெழும் அறத்தை நிலைகாணும்

    என்ற பகையறுக்கும் வேல் என்னை செதிள் செதிளாக சிதைக்கட்டும்.

    பொய்மையில் உழல்பவர்களுக்கு நன்மதி அளிக்கட்டும்.

  33. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    ஸ்ரீமான் ஜெயபாரதன்

    இந்த வ்யாசத்தின் பேசுபொருள் பற்றி அதற்கு ஸ்ரீமான் புனைப்பெயரில் அவர்கள் உத்தரங்கள் பகிர்ந்தது பற்றி மட்டும் இங்கு விவாதிக்கவும்.

    வேறு வ்யாசத்தில் பகிர்ந்த உத்தரத்தில் நீங்கள் கண்ட குறைகளை அங்கு விவாதிப்பது உசிதம்.

    ஸ்ரீமான் புனைப்பெயரில் அவர்களைக் குற்றம் காண விழையுமுன் உங்கள் செயல்பாடுகளை சீர்திருத்த முனையுங்கள்

    கண்யமான உரையாடலில் சக வாசகரான புனைப்பெயரில் அவர்களை

    மூர்க்கன் என்றும் தாலிபான் என்றும் விளிப்பது எக்காரணம் கொண்டும் ஒரு பெருந்தகைக்கு அழகாகாது.

    சரித்ரத் தரவுகளில் இருந்து மாறுபடுவது ஸ்ரீமதி பவளசங்கரி அவர்கள் பகிர்ந்த சில விஷயங்கள்.

    தரவுகள் சார்ந்து சுட்டிய விஷயத்தை தரவுகள் சார்ந்து மட்டிலும் அணுகுவது நேர்மை.

    அன்பார்ந்த சஹோதரி ஸ்ரீமதி பவளசங்கரி முதற்கொண்டு தாங்கள் வரை அப்படியொரு நேர்மையுடன் இந்த விஷயத்தை அணுக முயலாதது சரியன்று.

    *மிரட்டினார்*,ஆணாதிக்க அறிவாளி*, ஞானச் சித்தன்*, *தென்னாட்டு பெர்னாட் ஷா* — இது எதுவும் தரவு பூர்வமான மாற்றுக்கருத்து பகிர்ந்த அன்பரை தரவு பூர்வமான மாற்றுக்கருத்துக்களால் எதிர்கொள்ளும் முறைமை அல்ல.

    1. Avatar
      சி. ஜெயபாரதன் says:

      திரு. கிருஷ்ணகுமார்ஜி,

      கறுப்புக் கண்ணாடி போட்டுக் கொண்டு திண்ணையில் கால் நீட்டி மூதாட்டிபோல் பேசாதீர்கள்.

      புனை பெயரில் ஒளிந்துள்ள முகமூடி நபர் திண்ணையில், தமது கருத்தை தம் விருப்படி எழுதிவரும் மதிப்புக்குரிய பல மாதரின் படைப்புக்களைத் தன் கண்ணோட்டத்தில் தான் படைக்க வேண்டும் என்று விடாமல் நச்சரிப்பு [HARASSMENT] செய்து வருகிறார்.
      அவரை நீங்கள் தோள் மீது பல்லக்கில் தூக்கி ஊர்வலம் போவதில் எமக்கு எந்த எதிர்ப்பும் இல்லை.
      ஆனால் அப்படி ஒளிந்து கொண்டு எழுதும் அம்முறைப் பின்னோட்டங்கள் [GHOST COMMENTS] வலை உலகில் தவிர்க்கப்பட வேண்டும்.

      சி. ஜெயபாரதன்

  34. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    அன்பர் ஷாலி

    நீண்ட உத்தரத்திற்கு என் க்ஷமாயாசனம்.

    பேராசிரியர் ஸ்ரீமான் ஜெயபாரதன் அவர்கள் உங்களுக்கு மட்டிலும் மதிப்பிற்குறியவரன்று. நானும் அவரை மதிக்கிறேன் என்று மிகக் குறிப்பாக அவருக்கு என் உத்தரங்களிலும் பகிர்ந்துள்ளேன்.

    அவருடைய விக்ஞானம் சார்ந்த வ்யாசங்களை நான் பாராட்டியமை அவருக்கும் தெரியும்.

    அதே அன்பர் மஹாத்மா காந்தி, இந்திராகாந்தி, கருணாநிதி என்ற பெயர்களில் மதத்வேஷம் பரப்ப முனைந்தாலும் தன் படைப்புகள் மூலமும் உத்தரங்கள் வாயிலாகவும் ஹிந்துமதக்காழ்ப்பையும் அறியாமையையும் பொய்களையும் பரப்புரை செய்ய முனைந்தாலும் — (இதையும் நாடு போற்றும் என ஸ்துதி பாடிகள் ஸ்துதி பாடலாம் தான்) அவற்றை அக்கு வேறு ஆணி வேறாக நான் மறுதலிப்பதும் அவருக்குத் தெரியும். தான் அறியாத விஷயங்களை கந்தறகோளமாக அவர் பொய்ப்பரப்புரை செய்ய முனைந்தால் அது மறுப்பில்லாது போகும் என்று கனாக்காணக்கூடாது.

    நான் அவரைப் போற்றினால் ஏன் போற்றுகிறேன் என்பதும் அவருக்குத் தெரியும் அவரை மறுதலித்தால் ஏன் அவரை மறுதலிக்கிறேன் என்பதும் அவருக்குத் தெரியும்.

    மதிப்பு என்பது ஸ்துதி பாடுவது இல்லை. நாம் மதிக்கும் கருத்துக்களை மதிப்பதாகவும் மறுக்கும் கருத்துக்களை கண்யமுடன் மறுப்பதாகவும் வெளிப்படையாகப் பகிர்வது தான் மதிப்பு.

    பெருந்தகையின் அழகு கண்யமுடன் உரையாடல். இந்த வ்யாசத்தின் உத்தரங்களில் மட்டுமல்லாது ஸ்ரீமான் ஜெயபாரதன் அவர்கள் மற்ற வ்யாசத்தின் உத்தரங்களிலும் சஹ வாசகர்களை ஏகவசனத்திலும் தரம் தாழ்ந்த சொற்களாலும் (நானும் அதில் விதிவிலக்கல்ல) வசவிட்டுள்ளார்.

    பதிலுக்கு நான் ஒருமுறை கூட அவரை தரக்குறைவான வசவுகளால் எதிர் கொண்டதில்லை என்பதனையும் அவரும் இந்த தளத்து வாசகர்களும் அறிவர்.

    இங்கு என் எழுத்துக்களை சாணி என்று விமர்சித்துள்ளீர். நன்று. என்னைப்பொருத்தவரை அதை பசுஞ்சாணமாக ஏற்றுக்கொள்கிறேன். வசவை இன்னும் அதி உக்ரமாகத் தாங்கள் பதிய விழைந்தால் வேறெதாவது சாணமாக தாங்கள் ப்ரத்யுத்தரமளித்து த்ருப்தி பட்டுக்கொள்ளலாம். யதா ராஜா ததா ப்ரஜா. யதா (எவ்வாறு) ராஜா (ராஜாவோ – பேராசிரியர்) ததா(அவ்வாறு) ப்ரஜா ( குடிமக்கள் – ஸ்துதிபாடிகள்).

    பேராசிரியர் அவர்கள் தன் வசவுகளால் பொலிக பொலிக. அவர் அடியொற்றி அவரின் ஸ்துதி பாடிகளும் வசவுகள் பலதை அவரிடம் கற்றுப் பொலிக.

    ஹிந்துவாகிய எனக்கு பசுஞ்சாணத்தின் பெருமையும் மகிமையும் நன்றாகத் தெரியும். விஷங்களையும் க்லுமி கீடாதிகளையும் களைய வல்லது பசுஞ்சாணம். இந்த தளத்தில் பெருந்தகை என்ற பெயரில் ஸ்ரீமான் ஜெயபாரதன் அவர்கள் சஹவாசகர்களை ஏக வசனத்திலோ தரம் தாழ்ந்த சொற்களாலோ வசவிட முனைந்தாலும் பொய்க்கருத்துக்களையும் மதத்வேஷக் கருத்துக்களையும் பரப்புரை செய்ய முனைந்தாலும் இந்த பசுஞ்சாணம் அதைக் களைவதில் பங்கு வகிக்கும்.

    ஸ்ரீமான் ஜெயபாரதன் எனக்கு இன்னமும் பேராசிரியர் தான் பெருந்தகை தான். ஆனால் பெருந்தகைகள் தகைமையற்ற செயல்பாடுகளையும் உடையவர்கள் என்பதை அவரது செயல்பாடுகள் தொடர்ந்து இந்த தளத்தில் பதிவு செய்து வருகிறது.

    ஸ்ரீமான் ஜெயபாரதன் அவர்கள் எனக்கு மனிதன் தான். உங்களுக்கு இல்லையா?

    ஸ்ரீமான் புனைப்பெயரில் அவர்களது வ்யாசத்திலும் கூட ஏற்பதை ஏற்று மறுப்பதை மறுப்பது என் செயல்பாடு. ஒட்டுமொத்தமாக ஸ்துதி பாடுவது அல்ல. தெளிவாகட்டும்.

  35. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    \ புனைபெயரில் திரை விலக்கி உண்மையான முகத்தை காட்டி தகவல்களை பகிர வேண்டுகிறார்.\ இக்கருத்தையே திரு.ஜெயபாரதனும் வலியுறுத்துகிறார்.\ இதில் என்ன குற்றம் கண்டார் திருவாளர்.க்ருஷ்ண குமார்?\

    சொன்ன விஷயத்தையே எவ்வளவு முறை திரும்பத் திரும்பச் சொல்லுவது.

    ஸ்ரீமான் ஜெயபாரதன் அவர்கள் தனது செயல்பாடுகளில் லவலேசமாவது நேர்மை கொள்ள முனைந்தால் திரைவிலக்கலை புனைப்பெயரில் அவர்களுக்கு மட்டிலும் முன்வைக்கக்கூடாது.

    அவரது ஸ்துதிபாடிகளுக்கும் முன்வைக்க வேண்டும். இது தான் நான் கண்ட குற்றம்.

    1. Avatar
      சி. ஜெயபாரதன் says:

      கல்லை விட்டெறித்தால் கண்ணடி மாளிகை உடையும். பூக்களை வீசினால் உடையாது.

      சமூகத்துக்கு அஞ்சும் கோழையான மூதறிஞர் புனை பெயரார் பொடியன் போலின்றி முகத்திரை நீக்கி உயர் மனிதன் போல் தனிப்பட்டவர் மீது கல்லை எறியட்டும்.

      தர்க்கம் நடத்தும் திண்ணையே இம்மாதிரி முகமூடிக் குதர்க்க முறையை அனுமதிப்பது வருந்தத் தக்கது. மிகவும் பிற்போக்கானது. இப்படிச் சண்டை வளர்வதைத் திண்ணை வேடிக்கை பார்ப்பது வியப்பே.

      சி. ஜெயபாரதன்.

      சி. ஜெயபாரதன்.

  36. Avatar
    ஷாலி says:

    திரு.க்ருஷ்ண குமார் அன்பரே! நண்பரே! இங்கு இடப்படும் பின்னூட்டங்களை முறையாக படித்து விட்டுதான் எழுதுகிறீர்களா?அல்லது நுனிப்புல் மேய்கிறீர்களா? நான் எழுதாத ஒன்றை எழுதியதாக வரிந்து கட்டி வழக்காடுவது அசிங்கமாகத் தெரியவில்லையா?
    //இங்கு என் எழுத்துக்களை சாணி என்று விமர்சித்துள்ளீர். நன்று.// உங்கள் எழுத்தை மட்டும் சாணி என்று குறிப்பாக ஒன்றுமே சொல்லவில்லை.பொத்தாம் பொதுவாக முகம் தெரியாமல் பின்னூட்டமிடும் என்னையும் சேர்த்து அனைவரது தவறான விமர்சனங்களைக்குறித்து எழுதப்பட்டது.உங்கள் எழுத்து சாணி என்றால் என் எழுத்தும் அப்படியே. விழுகிற கல்லைவைத்து வீட்டைக்கட்டும் சாமார்த்தியசாலி போல் சாணத்தை வைத்து பூசி மொழுவுகிறீர்கள்.சாணி மகாத்மியத்தை ஹிந்து மதம் வினை தீர்க்கும் வினாயகனாகவே பார்க்கிறது.

    மார்கழிமாதத்தில் அதிகாலையில் முற்றத்தில் கோலமிட்டு சாணிப்பிள்ளையார் பிடித்து வைத்து பூசணிப்பூ,பீர்க்கம் பூவைத்து வணங்குவார்கள். ஆக நீங்களாகவே நினைத்துக்கொண்ட உங்கள் சாணி எழுத்து,சாதாரண எழுத்தல்ல தெய்வீக எழுத்து! தொடர்ந்து கழிக! கழிக!!

  37. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    \ கறுப்புக் கண்ணாடி போட்டுக் கொண்டு திண்ணையில் கால் நீட்டி மூதாட்டிபோல் பேசாதீர்கள். \

    அன்பின் ஸ்ரீ ஜெயபாரதன், கருத்துக்களில் காணப்படும் ஓட்டைகளை விமர்சியுங்கள். இதே கருத்தைத் தான் நான் உங்கள் பேரில் ஆரோபிப்பது.

    த்ராவிட மடாதீசர் கருணாநிதியை — கந்தறகோளமாக — தந்தை மகற்காற்றும் உதவி — என ஒப்பிட்டீர்களே — வள்ளுவப்பெருமானே!!!

    \ புனை பெயரில் ஒளிந்துள்ள முகமூடி நபர் திண்ணையில், தமது கருத்தை தம் விருப்படி எழுதிவரும் மதிப்புக்குரிய பல மாதரின் படைப்புக்களைத் தன் கண்ணோட்டத்தில் தான் படைக்க வேண்டும் என்று விடாமல் நச்சரிப்பு [HARASSMENT] செய்து வருகிறார். \

    எனக்குத் தெரிந்து ஸ்ரீமான் புனைப்பெயரில் அவர்கள் பகிர்ந்ததில் ஸ்ரீமதி ஜெயஸ்ரீ அவர்களுக்கு அவர் வைத்த விக்ஞாபனம் மட்டிலுமே நான் ஒவ்வாதது.

    இங்கு அவர் வைத்த கருத்துக்கள்– ஸ்ரீமதி பவள சங்கரி அவர்களை — சரித்ர தரவுகளிலிருந்து மாறுபடும் பிறழ்வான கருத்துக்களை முன்வைக்காதீர்கள் என்று தான். இந்த கருத்தை அவர் முகமூடி அணிந்து சொன்னால் என்ன அல்லது முகமூடி அணியாமல் சொன்னால் என்ன?

    சொந்தக்கருத்துக்களை சரித்ரம் என்ற பெயரில் முன்வைப்பதை நீங்கள் ஏற்கிறீர்களா என்பது தான் விவாதம். அதை மட்டிலும் பேசவே பேசாதீர்கள். விவாதமான விஷயத்தை விவாதிக்காது வெட்டி விஷயத்தை முழம் போடுவதை எப்போது கைவிடுவீர்கள்?

    ஒரு நபர் ஒரு புனைப்பெயரில் எழுதுவது unethical ம் அல்ல புதிதும் அல்ல. ஒரே நபர் பலபெயரில் எழுதுவது தான் unethical. இந்த விஷயம் இணையதளத்தில் அமரர் மலர்மன்னன் மஹாசயர் போன்ற ஜாம்பவான் கள் உட்பட பலரால் இடித்துரைக்கப்பட்டுள்ளது.

    முகமூடி செயல்பாட்டை நீங்கள் இடித்துரைக்க விரும்பினால் ஒட்டுமொத்தமாக அப்படி செயல்படும் அனைவரையும் இடித்துரைக்காது ஒரு நபரை மட்டும் எதிர்ப்பது தனிநபர் தாக்குதலாக மட்டிலும் கருதப்படும்.

    நான் பல்லக்கெல்லாம் தூக்க மாட்டேன். ஒத்துக்கொள்ளும் விஷயத்தில் ஒப்புமை. மாறுபடும் விஷயத்தில் மாறுபாடு.

    நீங்கள் உங்கள் ஸ்துதிபாடும் கூட்டத்தையே உங்கள் இரட்டை அலகீட்டுக்காக இடித்துரைக்காது பல்லக்குத் தூக்குகிறீர்கள். கை வலிக்கவில்லையா

    \ ஆனால் அப்படி ஒளிந்து கொண்டு எழுதும் அம்முறைப் பின்னோட்டங்கள் [GHOST COMMENTS] வலை உலகில் தவிர்க்கப்பட வேண்டும். \

    And for your Jesus sake, why dont you stress this out to your flatterers!!!!

    ம்……….அன்பின் ஜெயபாரதன்…….. என்னதான் சொல்லுங்கள் உங்களை மாதிரி நாலு வரியில் நறுக்கென்று எனக்கு எழுத வரவில்லை தான். கற்றுக்கொள்கிறேன்.

    1. Avatar
      IIM Ganapathi Raman says:

      ஒரு நபர் ஒரு புனைப்பெயரில் எழுதுவது unethical ம் அல்ல புதிதும் அல்ல. ஒரே நபர் பலபெயரில் எழுதுவது தான் unethical. இந்த விஷயம் இணையதளத்தில் அமரர் மலர்மன்னன் மஹாசயர் போன்ற ஜாம்பவான் கள் உட்பட பலரால் இடித்துரைக்கப்பட்டுள்ளது.//

      சபாஷ். Now you are speaking correctly. ஒரு நபர் புனைப்பெயரில் எழுதுவது தவறன்று என்பதை ஒத்துக்கொண்டது உங்கள் சிந்தனை ச‌ரியான வழியில் போகிறது என்பதைக் காட்டுகிறது. Keep it up.அதில் ஒரு சிறு நீட்டல் – ஒரு நபர் ஒரு புனைப்பெயரிலே மட்டுமே எழுதாமல் பல பெயர்களில் அதுவும் ஒரே நேரத்தில் ஒரே சபஜக்டைப்ப்பற்றி எழுதுவது தவறு எனபதையும் குறிப்பிட்டுக் காட்டவேண்டும். This is wrong as it will mislead readers. இதை மலர்மன்னன் சொன்னார்; ஜயமோஹன் சொன்னார் என்பது தேவையில்லை. நாமாகவே சொல்லிவிடலாம்.
      உங்கள் ஹீரோக்கள்தான் எல்லோருடைய ஹீரோக்கள் என்ற சிந்தனை எனக்கு குழந்தையை நினைவு படுத்துகிறது; தன் பெற்றோரை மட்டுமே உலகத்திற்சிறந்த பெற்றோராக நினைக்குமாம். வளர்ந்தவுடன் அப்படியெல்லாமில்லையென உணரும். சுயமாக கருத்துக்களை சொல்லத்தான் நாமிங்கு வந்திருக்கிறோம். அக்கருத்துக்களுக்கு வெளியாதரவு தேவையில்லை. அவர்கள் எப்பேர்ப்பட்ட “ஜாம்பவான்களாக’ இருந்தாலும்! Put in your thoughts and opinions here with courage of conviction. Never look for support if you are sure they are valid and just, help clarify or elucidate a point for others.

      One and God make majority என்பது ஆங்கிலப்பழமொழி. Really ethical one :-)

  38. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    அன்பர் ஷாலி,

    ஸ்ரீமான் ஜெயபாரதன் அவர்கள் பால் உங்களுக்கு எத்தனை மதிப்பு உள்ளதோ கிட்டத்தட்ட அதே மதிப்பு எனக்கும் உள்ளது. என்ன நான் உங்களைப்போல் பாலபிஷேகம் செய்வதோ பரஸ்பரம் விருதுகள் கொடுப்பதிலோ இறங்க மாட்டேன்.

    ஏதோ அவர் பேராசிரியராக எழுதிய வ்யாசத்தையெல்லாம் பரிசீலனை செய்து கரைத்துக்குடித்தது மாதிரி கருத்துப் பகிர்கிறீர்கள். அவருடைய விக்ஞானம் அல்லது கணிதம் சார்ந்த வ்யாசங்களில் நான் அவருடன் ஒத்துப்போன கருத்துக்கள் உங்கள் கண்ணில் படாது தான். ஆனால் அது ஸ்ரீமான் ஜெயபாரதனுக்குத் தெரியுமே.

    இங்கு அவருடைய கருத்துக்களுடன் நான் மாறுபடுவது விக்ஞானம் சார்ந்து அல்ல. விக்ஞானம் சாராத விஷயங்களில் மிகக் குறிப்பாகத் தரவுகள் சார்ந்து மட்டிலும் நான் அவருடன் மாறுபடுவது. ஸ்ரீமான் ஜெயபாரதன் வால்மீகி ராமாயணத்தில் சொல்லப்படாத விஷயங்களை — அதில் சொன்னதாகக் கதைத்தால் — அதில் தவறு உள்ளது என்று எனக்குத் தெரிந்தால் நிச்சயம் நான் மறுப்பேன். முடிந்தால் தரவுகள் சார்ந்து மறுக்கப்பாருங்கள். அல்லது அவருக்குப் பாலபிஷேகம் செய்வதில் உகப்பு இருந்தால் பாலபிஷேகம் செய்யுங்கள்.

    உங்களால் முடிந்த கார்யத்தை நீங்கள் செய்யுங்கள். என்னால் முடிந்ததை நான் செய்கிறேன்.

  39. Avatar
    paandiyan says:

    // பல மாதரின் படைப்புக்களைத் தன் கண்ணோட்டத்தில் தான் படைக்க வேண்டும் என்று விடாமல் நச்சரிப்பு [HARASSMENT] செய்து வருகிறார்.
    //

    திண்ணை ஆசிரியர்: இப்படி ஒருவர் துன்புருத்தியதை நீங்கள் வேடிக்கையா பார்த்துக்கொண்டு இருந்தீர்கள்? நீங்கள் இங்கு வந்து விலக்கம் சொல்லும் நேரம் இது.

  40. Avatar
    ஷாலி says:

     //ஸ்ரீமான் ஜெயபாரதன் அவர்கள் தனது செயல்பாடுகளில் லவலேசமாவது நேர்மை கொள்ள முனைந்தால் திரைவிலக்கலை புனைப்பெயரில் அவர்களுக்கு மட்டிலும் முன்வைக்கக்கூடாது.
    அவரது ஸ்துதிபாடிகளுக்கும் முன்வைக்க வேண்டும். இது தான் நான் கண்ட குற்றம்//
    குட்டையை கலக்கி குற்றம் கண்ட கீரன் கிருஷ்ணரே! இணையத்தில் 99%எழுதுபவர்கள் அடையாளம் எவருக்கும் தெரியாது.திரு.ஜெயபாரதன் போல் ஒரு சதவீதமே நாடறிந்தவர்கள்.உமது பங்காளி புனைபெயரிலின் முகமூடியை கழட்ட சொன்ன காரணம் அவர் பெண் எழுத்தாளர்களை வம்பு செய்ததால்.திரை கழட்டி முகம் காட்டச் சொன்னார்.ஒரு தெருவில் போகும் ஆயிரம் பேரையும் நிறுத்தி எவரும் அட்ரஸ் கேட்பதில்லை.ஆனால் போகும் வரும் பெண்களை எவரேனும் வம்பிலுத்தால் அந்த சம்பந்தப்பட்ட நபரை பிடித்து விசாரிப்பார்கள்.யார் நீ! எந்த ஊர்? என்று.இதைத்தான் ஜெயபாரதன் கேட்கிறார்.எந்த பெண் எழுத்தாளர்களையும் அசிங்கப்படுத்தாமல் நேர்மையாக கருத்து பதிவிடுவர்களுக்கு திரை கழட்டல் தேவை இல்லை. ஆகவே “ஸ்துதி பாடி” என்ற பேச்சே இங்கு தேவையில்லை.இத்துடன் தாங்கள் ஸ்துதி பாடுதல்,பாலாபிஷேகம் போன்ற பதப் பிரயோகங்களை நிறுத்திக்கொள்வது ஆரோக்கியமானது.தொடர்ந்து குட்டையை கலக்கும் வேலையில் இறங்கினால்……எல்லோரும் உப்பு போட்டுத்தான் சாப்பிடுகிறோம்.வேண்டாம் அநாகரீகம்.

  41. Avatar
    ஷாலி says:

    //ஸ்ரீமான் ஜெயபாரதன் வால்மீகி ராமாயணத்தில் சொல்லப்படாத விஷயங்களை — அதில் சொன்னதாகக் கதைத்தால் — அதில் தவறு உள்ளது என்று எனக்குத் தெரிந்தால் நிச்சயம் நான் மறுப்பேன். //

    வால்மீகி ராமாயணத்தின் அத்தாரிட்டி முழுவதும் க்ருஷ்ணாஜி இடம் கொடுத்துவிட்டார்களா?அய்யா அறிவுக்கொழுந்து! வால்மீகி ராமாயணத்தில் உள்ளமாதிரி வேறு எந்த ராமாயணத்திலும் கிடையாது.அதனால்தான் முன்னூறு ராமாயனத்திற்க்கும் தனித்தனி பெயர்.வால்மீகி யை பார்த்துத்தான் கம்பர் எழுதினான்.ஆனால் வால்மீகி ராமாயணத்தையே மாற்றி தமிழுக்கு தகுந்தமாதிரி எழுதினான். கம்பன் கல்லறையில் போய் கேட்கவேண்டியதுதானே! இன்னும் தெளிவாக சொல்வதாக இருந்தால் கம்பன் தான் வால்மீகியை மாற்றி விட்டான்.திரு.ஜெயபாரதன் வால்மீகி சொன்னதையே சொல்லி இருக்கிறார்.தெய்வீக நோக்கில் பூமி பிளந்து சீதா தேவி பூமிக்குள் போய் விட்டால்.சாதாரண மானிடப் பார்வையில் பூமி வெடிக்காது.ஏற்கனவே வெடித்திருந்த பள்ளத்தில் சீதை உள்ளே விழுந்து முடித்துக்கொண்டாள். இதைத்தான் திரு.ஜெயபாரதன் சொல்லி இருக்கிறார்.மானிடப் பார்வையில் பார்த்தால் தவறு தெரியாது.ஆனால் நீங்கள் தெய்வீகத்திற்கு சொந்தக்காரர்.அதுதான் சிக்கல்.

  42. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    \ உங்கள் ஹீரோக்கள்தான் எல்லோருடைய ஹீரோக்கள் என்ற சிந்தனை எனக்கு குழந்தையை நினைவு படுத்துகிறது; தன் பெற்றோரை மட்டுமே உலகத்திற்சிறந்த பெற்றோராக நினைக்குமாம் \

    ஜாம்பவான் என்றால் ஹீரோ என்று யார் உங்களுக்குப் பாடம் எடுத்தது.

    grow up baby.

    பலபெயரில் கருத்துப்பதிவதனை மற்றையோர் மங்களாசாசனம் செய்தமையை மீள்பதிவு செய்ய வேண்டுமா உரல் சஹிதம்?

    \ சுயமாக கருத்துக்களை சொல்லத்தான் நாமிங்கு வந்திருக்கிறோம். அக்கருத்துக்களுக்கு வெளியாதரவு தேவையில்லை. \

    சுயமான கருத்துக்களுடன் உலகத்தில் இன்னும் சில அன்பர்களுடன் ஒத்துப்போகிறார்கள் என்பதை அத்தாட்சியுடன் சொன்னால் ஏன் வலிக்கிறது? *சீ சீ இந்தப் பழம் புளிக்கும் என்பதாலா*?

    உங்களுக்கு ஒரு விஷயம் அவசியமில்லை என்றால் ஊருக்கு அது அவசியமில்லை என்ற உங்கள் நாட்டாமையை ஏற்க முடியாது.

  43. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    \ இத்துடன் தாங்கள் ஸ்துதி பாடுதல்,பாலாபிஷேகம் போன்ற பதப் பிரயோகங்களை நிறுத்திக்கொள்வது ஆரோக்கியமானது. \

    அப்படியா?

    \ வால்மீகி ராமாயணத்தின் அத்தாரிட்டி முழுவதும் க்ருஷ்ணாஜி இடம் கொடுத்துவிட்டார்களா?அய்யா அறிவுக்கொழுந்து! \

    இப்படி எழுதுவது ஆரோக்யமானது :-)

    எனக்கு மனிதனான மற்றும் உங்களுக்கு அமானுஷ்யமான ஸ்ரீமான் ஜெயபாரதன் அவர்கள் தான் தன்னால் முன்வைக்கப்படுவது *மெய்* என்று அதாரிட்டியுடன் சொல்லி இது வரை *மெய்* ஞானத்தின் சோர்ஸை சஸ்பென்ஸாக வைத்துள்ளார்.

    //ஸ்ரீமான் ஜெயபாரதன் வால்மீகி ராமாயணத்தில் சொல்லப்படாத விஷயங்களை — அதில் சொன்னதாகக் கதைத்தால் — அதில் தவறு உள்ளது என்று எனக்குத் தெரிந்தால் நிச்சயம் நான் மறுப்பேன். //

    ஜெயபாரதன் வால்மீகி ராமாயணத்தில் சொல்லப்பட்டுள்ளது என்பதை வால்மீகி ராமாயணம் அல்லாது வேறு ஏதாவதில் தோண்டுவது உங்கள் செயல்பாடாக மட்டிலும் இருக்க முடியும்.

    நான் சொல்ல வரும் விஷயம் எனக்குத் தவறு என்று தெரிந்தால் — என்று தெளிவாகச் சொல்லப்பட்டுள்ளது. Authorityஐ நீங்கள் கற்பனை செய்து கொள்வது உங்கள் ப்ரச்னை.

    \ திரு.ஜெயபாரதன் வால்மீகி சொன்னதையே சொல்லி இருக்கிறார்.தெய்வீக நோக்கில் பூமி பிளந்து சீதா தேவி பூமிக்குள் போய் விட்டால் \

    Is there any rule that Sri Jeyabharathan shall be the only one who should bluff in this site? பொலிக பொலிக.

    இதை வால்மீகி ராமாயணத்தில் தேடினீர்களா? அல்லது வழக்கம் போல் கம்பன் கல்லறைக்குள்ளே போய்த் தேடினீர்களா? :-)

  44. Avatar
    சி. ஜெயபாரதன் says:

    திரு. கிருஷ்ணகுமார்ஜி,

    உங்கள் இராமாயண வாசகப்படி இராமனின் இறுதி முடிவு, சீதா தேவியின் இறுதி எப்படி முடிந்தது என்று ஆதார பூர்வமாகச் சொன்னால், திண்ணை வாசகரும், நானும் கற்றுக் கொள்வோம்.

    சீதாயணம் முடிவைப் பிறகு மாற்றுகிறேன்.

    சி. ஜெயபாரதன்.

Leave a Reply to paandiyan Cancel reply

Your email address will not be published. Required fields are marked *