தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

17 ஜனவரி 2021

இடையனின் கால்நடை

எம்.ரிஷான் ஷெரீப்

Spread the love

 

காலை வெயில் அலைமோதும்

பனியில் குளித்த விருட்சங்களைச் சுற்றிய பசும்புல்வெளியில்

மேய விட்டிருந்தாய் உன் கால்நடையை

 

ஒழுகி அசைபோடச் செய்தபடியிருக்கும்

தனித்திருந்த கொட்டகையின் கூரைகள்

பகல் பொழுதின் மேய்ச்சல் நினைவுகளை

வைகறைவரை இரவிடம் கிசுகிசுக்கும்

 

வேட்டை விலங்குகளின் பார்வைக்குத் தப்பிய

கால்நடையின் சதைப் பூரிப்பில் மின்னும் அதன் சருமம்

உன் ப்ரியத்தில் உறைந்திருந்த அது

எங்கும் தப்பிப் போய்விடாது எனினும்

வேலியை இறுக்கிக் கட்டினாய் நீ

அதனையும் அறியாது அசைபோட்டபடியிருந்தது அது

 

மேய்ச்சலுக்கு இட்டுச் செல்ல முடியாத அடைமழை நாட்களில்

எங்கெங்கோ அலைந்து

தீனிச் செடி குலைகளை எடுத்து வருவாய்

உன் தலை தடவலில் உயிர்த்திருக்கும் அதனுலகம்

தீனிக்கென நீ வைத்திடும் எல்லாவற்றையும்

அன்பென எண்ணிச் சுவைக்கும்

அதட்டலுக்குப் பயந்து அடிபணியும் – பிறகும்

அகலாதிருக்க இவ் வாழ்வும்

உன் பரிவும் நிலைத்திடக் கனவு காணும்

 

தசை, தோல், எலும்பென கூறிட்டுப் பணம்பார்க்க

அதன் எடை கூடும் காலமெண்ணிக் காத்திருக்கும் உன்

கத்தியைக் கூர் தீட்டும் நாளில்

அதன் மேனியிலிருந்து எழக் கூடும்

விடிகாலைத் தாரகையோடு

பசும்புல்வெளியில் உலர்ந்த உன் பாசத்தின் வாசம்

 

எம்.ரிஷான் ஷெரீப்

 

Series Navigationமருத்துவக் கட்டுரை கிள்ளிய நரம்புநீங்காத நினைவுகள் – 27நிர்வாணிதவிர்க்க இயலாத தமிழர்தம் பட்டங்கள்உடைபட்ட மகாபாரதம் – ப.ஜீவகாருண்யனின் “கிருஷ்ணன் என்றொரு மானுடன்” நாவலை முன்வைத்துதிருப்பாவை உணர்த்தும்வழிபாட்டுநெறிசில ஆலமரங்களுக்கு விழுதுகள் இல்லைபிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! பூதக்கோள் வியாழனின் துணைக்கோள் ஈரோப்பாவில் நீர் எழுச்சி ஊற்றுகள் முதன்முறைக் கண்டுபிடிப்புகிராமத்து ராட்டினம், பூ மலரும் காலம் ஜி.மீனாட்சியின் இரண்டு சிறுகதைத் தொகுப்புகள் –என்னை ஆட்கொண்ட இசையும், நானும்புகழ் ​பெற்ற ஏ​ழைகள் – 39ஜெயந்தி சங்கர் எழுதிய சிறுகதைகளின் முழுத்தொகுப்பு விமர்சன அரங்குஜாக்கி சான் 22. புது வாழ்வு – நியூ பிஸ்ட் ஆப் புயூரிஅறிதலின் தரத்தையும் அளவையும் உயர்த்துவதை நோக்கி… ரவிக்குமாரின் இரண்டு மொழிபெயர்ப்பு நூல்கள்காரைக்குடிகம்பன் கழகத்தின்சார்பில் அகில உலகக் கருத்தரங்கு – கட்டுரை தரநிறைவுநாள்15-1-2014தாகூரின் கீதப் பாமாலை – 95 உன் தேசப் பறவை.திண்ணையின் இலக்கியத் தடம்-15ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் அத்தியாயம்-15 உபப்லாவ்யம் இருவர் அணிகள்

Leave a Comment

Archives