விளக்கு விருதுக்குரியவராக எழுத்தாளர் பெருமாள் முருகன்

This entry is part 26 of 26 in the series 29 டிசம்பர் 2013

அன்புள்ள கோபால்சாமி சென்ற ஆண்டுக்கான விளக்கு விருதுக்குரியவராக எழுத்தாளர் பெருமாள் முருகனை தேர்வு செய்திருக்கிறோம். உதிரிகளின் வாழ்நிலையை இலக்கியத்தில் சிறப்பாகப் பதிவு செய்திருப்பதற்காகவும்,ஒரு வட்டாரத்தன்மை குறித்த பார்வைக்கு அழுத்தம் கொடுத்திருப்பதற் காகவும்,வட்டாரச் சொல்லகராதி,வரலாற்றுக் கண்ணோட்டம்,இலக்கிய முன்னோடிகள் குறித்த மறுவாசிப்பு,கல்விப்புலத்தில் காத்திரமான இலக்கிய உரையாடல்களை முன்னெடுத்தது என இலக்கியச் செயல்பாடுகளை விரிவுபடுத் தியதிலும் அவர் பங்களிப்பு சிறப்பானது. விவாதத்தில் வந்த மற்ற படைப்பாளிகள்:சி.மோகன்,கோணங்கி,யூமா வாசுகி, ஆ.மாதவன். இத்துடன் பெருமாள்முருகனின் படைப்பு விவரங்கள் உள்ளன. வெளி ரங்கராஜன் 26.12.2013 பெருமாள் […]

தாயகம் கடந்த தமிழ் – அனைத்துலக மாநாடு ஜனவரி 20, 21, 22, 2014 ஆகிய நாள்களில் கோயம்புத்தூர் என்.ஜி.பி கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில்

This entry is part 24 of 26 in the series 29 டிசம்பர் 2013

தாயகம் கடந்த தமிழ் என்ற பொருளில், ஓர் அனைத்துலக மாநாடு  ஜனவரி 20, 21, 22, 2014 ஆகிய நாள்களில் கோயம்புத்தூர் என்.ஜி.பி கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் நிகழவிருக்கிறது என்ற செய்தியினை மகிழ்வுடன் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். (திண்ணை இதைக் குறித்து முன்னர் செய்து வெளியிட்டிருந்தது. நன்றி.  ஆனால் இது Updated message. பேராளர் பதிவு, இணைய தள முகவரி எனச் சில மாற்றங்கள். இதை திண்ணையில் வெளியிடக் கோருகிறேன்)   கோவையிலுள்ள தமிழ்ப் பண்பாட்டு […]

மருமகளின் மர்மம் 9

This entry is part 2 of 26 in the series 29 டிசம்பர் 2013

தன் கழுத்தில் இருந்த அட்டிகை காணாமற் போயிருந்ததைத் தன் மாமியார் சாரதா உடனே கண்டுபிடித்துவிட்டதால் நிர்மலாவுக்கு அதிர்ச்சி விளைந்ததே தவிர, வியப்பு ஏற்படவில்லை. கிளம்புகையில் பளிச்சென்று கழுத்தில் மின்னிய கனத்த நகை காணாததை ஒரு பெண்மணி கண்டு பிடிப்பதில் ஆச்சரியப்பட ஏதும் இல்லைதான். ஆனால் அதைப் பற்றியே கவலைப் பட்டு என்ன சொல்ல வேண்டும் என்பது பற்றி யோசித்து வைத்திருந்த நிர்மலா, அப்போதுதான் கவனித்தவள் போல் கழுத்தில் தடவிப் பார்த்துவிட்டு, “அய்யோ! ஆமா, அத்தை! நான் கீழே […]

அறிதலின் தரத்தையும் அளவையும் உயர்த்துவதை நோக்கி… ரவிக்குமாரின் இரண்டு மொழிபெயர்ப்பு நூல்கள்

This entry is part 1 of 26 in the series 29 டிசம்பர் 2013

பேரா. க.பஞ்சாங்கம் மணற்கேணிப் பதிப்பகத்தின் வெளியீடாக ‘அதிகாரத்திடம் உண்மையைப் பேசுதல்’, ‘உரையாடல் தொடர்கிறது’ ஆகிய இரண்டு நூல்கள் ரவிக்குமாரின் மொழிபெயர்ப்பில் வெளிவந்துள்ளன. ஏற்கனவே ‘பணிய மறுக்கும் பண்பாடு’ என்ற நூலிலும், வேறு சில இதழ்களிலும் கட்டுரைகளாக வந்தவைகள்தான் என்றாலும் இருத்தல் குறித்த தத்துவம் சார்ந்த மொழியாடல்கள் என்பதனால் மீண்டும் மீண்டும் வாசிப்பைக் கோரி நிற்கின்றன இந்த எழுத்துக்கள். ‘அதிகாரத்திடம் உண்மையைப் பேசுதல்’ என்ற நூல் எட்வர்டு ஸெய்த்(1935-2003) எழுதிய ஏழு கட்டுரைகளின் தொகுப்பாகவும், அவரைக் குறித்து நினைவுக் […]

சீதாயணம் நாடகப் பின்னுரை – படக்கதை – 13

This entry is part 2 of 26 in the series 29 டிசம்பர் 2013

  [சென்ற வாரத் தொடர்ச்சி] சீதாயணம் படக்கதை -13 நாடகம் : சி. ஜெயபாரதன், கனடா வடிவமைப்பு :  வையவன் ஓவியம் :  ஓவித்தமிழ் படம் : 25, படம் : 26 & படம் : 27  [இணைக்கப் பட்டுள்ளன] சீதாயணம் ஓரங்க நாடகத்தின் பின்னுரை   பின்னுரை: பன்முகமுடைய, பல இனங்கள் கொண்ட, பல மதங்கள் உடைய, பல  மொழிகள் பேசும், பல மாநிலங்கள் ஒட்டிய பாரத நாட்டில் விடுதலைக்குப் பிறகு மதச்  சண்டைகளும், […]

கண்ணீர் விட்டோம் வளர்த்தோம்

This entry is part 2 of 26 in the series 29 டிசம்பர் 2013

தோழியர் கே.வி காலமாகி விட்டார். நண்பர் ரகு என்னிடம் சொன்னார்.  சமுத்திர குப்பத்திலிருந்தும்  எனக்குச் செய்தி  சொன்னார்கள். தொழிற்சங்க இயக்கத்தில் இப்படித்தான்  தோழர் தோழியரை  பெயருக்குப்பதிலாக ஆங்கில எழுத்துக்கள் வைத்து மட்டுமே  அழைத்தார்கள் இன்னும் அழைக்கிறார்கள். ஈ எம் எஸ், பி ஆர், எம் கே, ஆர் என் கே, எஸ் எஸ் டி ,ஒ பி ஜி, இப்படித்தான் தலைவர்களின் பெயரைச் சொல்லிக்கொள்வார்கள்.வி¡¢ந்து பறந்து  தேசம் தழுவிய இயக்கங்களில் இது எத்தனையோ சவுகர்யத்தை தரமுடியும். இப்போது  […]

பெண்மனதின் அரூப யுத்தம் ‘அம்மாவின் ரகசியம்’

This entry is part 2 of 26 in the series 29 டிசம்பர் 2013

– ஷங்கர் ஆர்மன்ட், ஃபிரான்ஸ்   குறுநாவல் – அம்மாவின் ரகசியம் ஆசிரியர் – சுநேத்ரா ராஜகருணாநாயக தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப் வெளியீடு – காலச்சுவடு பதிப்பகம் விலை – ரூ 55   மனிதர்களின் வாழ்க்கைகளை தடம்புரள செய்வதில் அடக்குமுறை, அதிகாரங்கள் ஆகியன இனபேதங்களைப் பார்ப்பது இல்லை. விதவிதமான புரட்சிகளும் கூட தம் இலட்சியப் பயணங்களின் பாதைகளில் நசுங்கி விழும் சாதாரணர்களின் வாழ்க்கைகளிற்காக தம் நடையை நிறுத்துவதும் இல்லை. இந்த இரு எதிர் இயக்கங்களின் […]

இடையனின் கால்நடை

This entry is part 2 of 26 in the series 29 டிசம்பர் 2013

  காலை வெயில் அலைமோதும் பனியில் குளித்த விருட்சங்களைச் சுற்றிய பசும்புல்வெளியில் மேய விட்டிருந்தாய் உன் கால்நடையை   ஒழுகி அசைபோடச் செய்தபடியிருக்கும் தனித்திருந்த கொட்டகையின் கூரைகள் பகல் பொழுதின் மேய்ச்சல் நினைவுகளை வைகறைவரை இரவிடம் கிசுகிசுக்கும்   வேட்டை விலங்குகளின் பார்வைக்குத் தப்பிய கால்நடையின் சதைப் பூரிப்பில் மின்னும் அதன் சருமம் உன் ப்ரியத்தில் உறைந்திருந்த அது எங்கும் தப்பிப் போய்விடாது எனினும் வேலியை இறுக்கிக் கட்டினாய் நீ அதனையும் அறியாது அசைபோட்டபடியிருந்தது அது   […]

வால்ட் விட்மன் வசனக் கவிதை – 55 ஆதாமின் பிள்ளைகள் – 3

This entry is part 18 of 26 in the series 29 டிசம்பர் 2013

  (Children of Adam) பெண்டிர் பெருமை ..!    (1819-1892)   மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா       என்னை விட மாதர் இம்மி அளவும் திறமையில் குன்றி யவர் அல்லர் ! பரிதி ஒளிவீச்சு பட்டுப் பழுப்பான முகம் ! அவரது சதை மேனி முதியத் தெய்வீகக் குழைவு பெற்றது. வலுப் பெற்றது. நீச்சல் தெரியும் அவர்க்கு படகோட்ட, குதிரை ஏறிச் செல்ல, மல் யுத்தம் […]

தாகூரின் கீதப் பாமாலை – 95 உன் தேசப் பறவை.

This entry is part 1 of 26 in the series 29 டிசம்பர் 2013

  மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா.    நீங்கிச் செல்லா ஓரினிய உணர்வை நெஞ்சம் பற்றிக் கொண்டது தாள இசைப் பின்னலில்  ! வெகு தூரக் காலைப் புலர்ச்சியில் ஒரு பறவையின் அரவம்.   வெகு தொலைவு இரவுப் பாட்டை அது பாடுகிறது !  பறவையின் இறக்கைகள் நிறம் மாறி விட்டன, கடந்த வசந்தத்தில் மலர்ந்த அசோகப் பூக்களின் செந்நிறத்தில் ! பறவையின்  மார்பில் முடிந்த கால வசந்த நறுமணம் […]