தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

29 மார்ச் 2020

கரியமிலப்பூக்கள்

ஷம்மி முத்துவேல்

Spread the love

அமிலம் மற்றும் கரிப்புத் தன்மை
கொண்டவையாகவே இருந்து விடுகின்றன
சில நிஜங்கள்

மறுக்கப்படுகிறது
இனிப்பின் இயல்பு மறந்தும் கூட

இறுக்கப்பட்ட மன இயந்திரத்தின்
அழுத்தக் கோட்பாடுகள்
வேகமேற்று ..

அனல்வாயின் கொதிக்கும்
தங்கக் குழம்பின் சிதறிய பிரள்கள்
மலர்ந்து விடுகின்றன
நட்சதிரப்பூக்களாய் …

சூடு தணிக்கும் பணியென
தண்ணீர் ஊற்றப்படுகையில்
குளிர்ந்தும் இறுகியும்
கிடந்தன
கரியமிலப்பூக்கள்

ஷம்மி முத்துவேல் …

Series Navigationதிண்ணை கட்டுரை எதிரொலி: இடிக்கப்பட்ட கோயில் மீண்டும் கட்டப்படுகிறது

Leave a Comment

Archives