உமாமோகன் எழுதிய டார்வின் படிக்காத குருவி நூல் வெளியீட்டு விழா

author
0 minutes, 0 seconds Read
This entry is part 1 of 27 in the series 19 ஜனவரி 2014

வரவேற்புரையிலேயே  நூல் நயம் காணுவதைத் தொடங்கிட்டாங்க என்று ஆய்வுரை ஆற்ற வந்த முனைவர்.நா.இளங்கோ நகைச் சுவையாக அலுத்துக்கொண்டார் சென்ற 11ம் தேதி மாலை புதுவையில் நடைபெற்ற உமாமோகன் எழுதிய டார்வின் படிக்காத குருவி கவிதை தொகுப்பு வெளியீட்டு விழாவில்.

பதிப்பாளர் முரண்களரி யாழினி முனுசாமி வரவேற்பின் போதே தன்னைக் கவர்ந்த கவிதைகளைக் குறிப்பிட்டுத் தொடங்கதலைமை  வகித்து வாழ்த்தினார் பாவேந்தரின் மைந்தர் தமிழ்மாமணி மன்னர் மன்னன்.
நூலை வெளியிட்ட ஆயிஷா.இரா.நடராசன் கவிதைகளுக்கும் நூல்களுக்கும் பெண் எழுத்தாளர்கள் தலைப்பிடும் நவீன முறைகளை உலக உதாரணங்கள் சொல்லிப் பாராட்டித் தொடங்கினார்.
வாழ்வின் நகைமுரண்களை  இக்கவிதைகள் எடுத்துரைப்பதை உதாரணங்களோடு பகிர்ந்தார் இரா நடராசன்.நூலைப் பெற்றுக் கொண்ட கவிஞர் சுகிர்தராணி எழுத்தும்  அதன் விளைவுகளும் எழுத்தாளர் வாழ்வோடு பிணைந்திருப்பதை உளப்பூர்வமாக எடுத்துரைத்தார்.
ஒளிச்சேர்க்கை,தேவையில்லா நிழல் போன்ற கவிதைகள் இன்றைய நிஜ வாழ்வின் பிரதிபலிப்பாக இருப்பதை சுகிர்தராணி பகிர்ந்துகொண்டார்
.
அகில இந்திய வானொலி யின் தென்மண்டல கூடுதல் தலைமை இயக்குனர் க.பொ .சீனிவாசன் ,புதுவை நிலைய உதவி இயக்குனர் மு.சிவப்பிரகாசம் ,கவிஞர்.தி.கோவிந்தராசு ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
நாற்காலிக் கவிதையின் நயம் உட்படப் பல கவிதைகளை விரிவாக ஆய்வு செய்தார் முனைவர் நா இளங்கோ.அபி உலகம் உட்படப் பல கவிதைகளின் அழகியலை ரசித்துப் பேசிய எஸ்.வி.வேணுகோபாலன் உலகமயமாக்கல்,
பண்பாட்டு மாற்றம்,தனிமனித இழப்பு போன்ற கூறுகளைக் கொண்ட கவிதைகளைப் பகிர்ந்தார்.
அகநாழிகை வெளியீடாக உமாமோகன் எழுதிய  வெயில் புராணம் என்ற பயண அனுபவத் தொகுப்பையும் இந்நிகழ்வில் வெளியிட்டனர்.
உமாமோகனின் ஏற்புரை நன்றியுரையாகவும் அமைந்தது.

Inline images 1

Series Navigationதாயகம் கடந்த தமிழ் – அனைத்துலக மாநாடு ஜனவரி 20, 21, 22, 2014 ஆகிய நாள்களில் கோயம்புத்தூர் என்.ஜி.பி கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில்கமலா இந்திரஜித் கதைகள்நோ செண்டிமெண்ட்ஸ் மம்மி!முப்பது ஆண்டுகளாகப் பேசவில்லைமருமகளின் மர்மம் – 12நவீன அரபு இலக்கியம் : எச்.பீர்முகமது நூல் அறிமுகம்புகழ் ​பெற்ற ஏ​ழைகள் – 42
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *