தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

20 ஆகஸ்ட் 2017

மந்தமான வானிலை

பிச்சினிக்காடு இளங்கோ


    அவர்கள் எப்போதும்

    தயாராக இருக்கிறார்கள்

   

    வரவேற்பு வளைவுகள்

    வைக்க

    வாகனங்களில்வந்து

    வரவேற்க

    சுவரில் எழுத

    சுவரொட்டிகள் ஒட்ட

    நாளிதழில்

    முகம்காட்ட

    பொன்னாடை போர்த்த

    மாலைகள் அணிவிக்க

    முப்போதும்

    தயாராகவே இருக்கிறார்கள்

 

    அந்தநொடியில்

    எந்தக்கவலையுமின்றி

    கரையவும்

    கரைக்கவும்

    காத்திருக்கிறார்கள்

 

    எங்கும் நிலவும்

    இந்த வானிலையில்

    மின்ன விருப்பமில்லா

    நட்சத்திரங்களுக்காக

    நாகரீகம்

    தலைவணங்குகிறது

      

    மனப்பாலருந்தி

    வலம்வரும்போது

    கதவைச்சாத்தச்சொல்கிறது

    கூச்சம்

 

    சரியில்லாத

    வானிலையோடுதான்

    பகல் இரவு உருள்கிறது

    பள்ளம் நோக்கி

 

 

  

 

 

 

    ஆனால் அவர்கள்

    எப்போதும் தயாராகவே

    இருக்கிறார்கள்

   

    பள்ளமில்லாத

    பள்ளத்திலிறங்காத

    பயணத்தையெண்ணி

    குமைகிறது குரங்கு

    புகைவண்டியாய்

 

(24.1.2014  பிற்பகல் 3.30க்கு முஸ்தபாவில் சாமான்வாங்கும்போது சிங்கப்பூர் கலைஞர் ஜேம்ஸ் துரைராஜ் அவர்களுடன் பேசும்போது தோன்றியது)

Series Navigationஆத்மாநாம்நாவல் : தறிநாடா… – சுப்ரபாரதிமணியன் -காலமாற்றமும் தொழிலோட்டமும்வலிஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் அத்தியாயம்-21 ஜயத்ரனின் முடிவு

Leave a Comment

Insider

Archives