ஒரு சொர்க்கத்தை சம்பாதிப்பதற்காக
நகரங்களை உருவாக்குபவன்
என்வீதிவழியே வந்து
என்னை தட்டி எழுப்பிச் சென்றான்.
கறுப்புவடுவோடு கண்டுணர்ந்த பேரழகு
கீற்றாய் சிறுகோடாய் தேய்ந்து
இரவின் கதையை எழுத
பிறையின் ஒளியை முத்தமிட்டு
அதிசயித்து பார்க்கும் கண்கள்
மின்னல் வாகனத்தில் பறந்து சென்றது.
தொடமுடியாத ஏழுவானங்களும் அதிர
அவன் கூக்குரலிட்டான்.
நிரம்பிய கண்ணீரில்
ஒளுவெடுத்து புனிதப்படும் உள்ளங்கைகளும்
நெடுவெளி மணற்காட்டில்
தய்யம் செய்யும் விரல்களும்
அறிந்திராதொரு வன்மத்தின் தீண்டலில்
அவனின் அபயக்குரல் தொடர்ந்தது.
லாத்தும் உஜ்ஜாவும் மனாத்தும்
உடைபட்டு கீழேவிழுந்து புலம்பினகுரல்
திரும்பவும் கேட்கிறது.
மூசாவையும் ஈசாவையும் குறித்து
அறிவித்த தீர்ப்பால்
சிலுவையிலிருந்தும் போர்வாள்கள் முளைத்து
அவனின் குரல்வளையை நெருங்கிவந்தன.
யுத்த இருளின் புகைமூட்டத்தில்
எதிரே கண்டால் வெட்டச் சொன்ன புனிதவசீகரம்
எதிரியின் கைகளிலும் துப்பாக்கிகளைத் திணித்தன.
போதையூட்டப்பட்ட சொற்கள்
எப்போதும் பைஅத்திற்கு தயார்
பைசாகோபுரங்களை தகர்த்தும் எறியலாம்
அதன் அடுத்தடுத்த பக்கங்களில்
தினந்தோறும் கவனிப்பாரற்று
துயரம் மேலிட கண்ணீர் சிந்தி கிடக்கிறது
லக்கும்தீனுக்கும்வலியதீன்.
குண்டுகள் வெகுஅருகாமையிலும் வெடிக்கின்றன.
மறைக்கப்பட்ட வரிகளினூடே
அர்ஷின்முத்திரை ஒன்று தவறிப்போனதை
எல்லோராலும் அறிந்து கொள்ள முடியவில்லை
சொல்லி முடிப்பதற்குள்
லாத்தும் உஜ்ஜாவும் மனாத்தும்
ரத்தத்திலிருந்து முளைக்கத் தொடங்கின.
ஜிகாதின் சொற்களைத்தவிர
இப்போது அவனிடம்
வேறெந்த சொற்களும் மிச்சமிருக்கவில்லை
—
ஹெச்.ஜி.ரசூல்
- கரியமிலப்பூக்கள்
- திண்ணை கட்டுரை எதிரொலி: இடிக்கப்பட்ட கோயில் மீண்டும் கட்டப்படுகிறது
- விபத்து தந்த வெகுமதி
- ‘அது’ வரும் பின்னே, சிந்தை தெளியட்டும் முன்னே
- விட்டு விடுதலை
- நடனக்கலைஞர் சாந்தா ராவ் நினைவாக…
- அவனேதான்
- ப மதியழகன் கவிதைகள்
- அழுகையின் உருவகத்தில்..!
- கிறீச்சிடும் பறவை
- பிரயாண இலக்கியம் – தி ஜானகிராமனும் மற்றோரும் – இரண்டு
- என் கைரேகை படிந்த கல். தகிதா பதிப்பகத்தின் மிகச்சிறந்த கவிதைத் தொகுப்பு
- முற்றுபெறாத கவிதை
- ஜென் ஒரு பு¡¢தல் – பகுதி -2
- காத்திருக்கிறேன்
- கதையல்ல வரலாறு: ருடோல்ப் ஹெஸ்ஸென்ற பைத்தியக்காரன் ? (தொடர்ச்சி)
- எனது இலக்கிய அனுபவங்கள் – 7 எழுத்தாளரும் புத்தக வெளியீடும்
- உருமாறும் கனவுகள்…
- வேறெந்த சொற்களும் அவனிடம் மிச்சமில்லை
- பழமொழிகளில் திருமணம்
- அன்னையே…!
- கவிதைகள். தேனம்மைலெக்ஷ்மணன்
- செல்லம்மாவின் கதை
- சித்தி – புத்தி
- விடாமுயற்சியும் ரம்மியும்!
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) இரு கதைகளுக்கு இடையே (கவிதை -40 பாகம் -3)
- நினைவுகளின் மறுபக்கம்
- மிக பெரிய ஜனநாயக திட்டம்?!!! ஊழலில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்புதல்!
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) இதயத்தின் இரகசியங்கள் (Secrets of the Heart) (கவிதை -46)
- அம்ஷன் குமாருடன் ஒரு சந்திப்பு
- ஆள் பாதி ஆடை பாதி
- ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 9
- பஞ்சதந்திரம் – தொடர் – நூல்வரலாறு
- பனியுகத்தின் தோற்றமும், மாற்றமும் ! கடற்தளங்களின் உயர்ச்சியும், தாழ்ச்சியும் -2