தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

9 டிசம்பர் 2018

இயக்கமும் மயக்கமும்

கு.அழகர்சாமி

 

(1)

ஓடும்

ஆற்றைச் சதா பாலம் கடக்கும்.

 

(2)

ஊருக்கு நடக்கும் முன்னே

ஊர் போய்ச் சேர்ந்திருக்கும் அவசரமாய் ஒற்றையடிப் பாதை.

 

(3)

எங்கு போய் நிற்பதென்று ஓடிப் பார்த்து விடவேண்டுமென்று

ஓடும் நெடுஞ்சாலையில் ஓடும் ஒரு நாய்.

 

(4)

இளைக்க ஓடும் இரயிலின் சக்கரக்கால் பாய்ச்சலை முறியடிக்கும்

மலைத் தொடர் சாவகாசமாய் ஊர்ந்து.

(5)

நீந்த

நதி நெடுக இரு கரையும் சதா காத்திருக்கும்.

 

(6)

ஊரும் எறும்புகளில் ஊரும் வரிசை ஊரும்

எறும்புகளின்  எறும்பாய்.

 

(7)

யார் செலுத்த முடியும்

முன்கூட்டியே இலக்கை  வீழ்த்தும் அம்பை?

(8)

 

நதி ஓடுகிறதா?

சதா நகரும் இந்தக் கணத்தில் ’உறையும்’ நதி சதா நகர்கிறதா?

(9)

எப்போது புறப்பட்டன ஊரும் எறும்புகள்?

புறப்பட்டாலொழிய புறப்படாத சமயத்திலிருந்தா?

 

(10)

மரத்திற்கு சந்தேகம் மரத்திலிருக்கும் பறவை

பறக்காமல் இருக்கிறதா  அல்லது பறக்காமலா இருக்கிறதென்று.

(11)

கரையென்று ஓடிப் போனது?

கடலேன் இப்படி சதா ஓடிவரும் அலைஅலையாய்க் கரை தேடி.

 

 

                                             

                                               கு.அழகர்சாமி

Series Navigationவால்ட் விட்மன் வசனக் கவிதை – 65 ஆதாமின் பிள்ளைகள் – 3ஜீசஸ் ஏன் கருத்தில் கொள்ளவில்லைமனத்துக்கினியான்வழக்குரை காதைபிச்சை எடுத்ததுண்டா?‘காசிக்குத்தான்போனாலென்ன’எழுத்தாளர் தமிழ்மகனுக்கு அமுதன் அடிகள் விருதுமாலோனுபவம் – நான் அனுபவித்த சிறு அனுபவம்வலிதாயகம் கடந்த தமிழ் ஜனவரி 20,21,22: ஒரு நீங்காத நினைவுகவிதையில் இருண்மைபெரியவன் என்பவன்தினம் என் பயணங்கள் – 8மருத்துவக் கட்டுரை – தொண்டைச் சதை வீக்கம் ( Tonsillitis )திண்ணையின் இலக்கியத்தடம் – 25சீதாயணம் நாடகப் படக்கதை – ​2​3​தொடுவானம் – 6 வெற்றி மீது வெற்றி

Leave a Comment

Archives