சென்றன அங்கே !

This entry is part 2 of 22 in the series 30 மார்ச் 2014

 

 

பிச்சினிக்காடு இளங்கோ(சிங்கப்பூர்)

 

  அதுதான் அழகு

  அதுவல்லாமல்

  வேறெது அழகு?

 

  கண்கள் நம்மைக்

  கண்டுகொள்ளாமல்

  கண்டுகொள்வது எதை?

 

  அனுமதியின்றி

  கண்கள் செல்வது

  எங்கே?

 

  அதை

  நினைத்தால் மனசு

  பறபறக்கும்

  பார்த்தால் கவிதை

  பிறப்பெடுக்கும்

 

  பலருக்கும்  அப்படித்தான்

  கவிதை பிறக்கிறது

 

  சிற்பியின் உளி

  அதைத்தான்

  ஓவியமாய்ச் செதுக்கியிருக்கிறது

 

  ஓவியன் தூரிகை

  அதைத்தான்

  சிற்பத்தின் சிறப்பாய்த்

  தீட்டியிருக்கிறது

 

  கவிஞனின் எழுதுகோல்

  பேசும் ஓவியமாய்

  சிலிர்க்கும் சிலையாய்

  வடித்திருக்கிறது

 

 கண்கள் பசியாறுவது

 அதைத்தான்

 

 பார்க்கப் பார்க்க

 துறவியின் மனமும்

 துறவறம் துறக்கும்

 

 கருமியின் மனமும்

 கவிதை கிறுக்கும்

 

 

 

 

 

 

 கவர்ச்சிப்படைப்பின்

 எல்லையாயிருக்கும்

 இரட்டைப்பிறவி

 எது?

 

ஆமாம்

கண்கள் எங்கே?

 

(தமிழினி ஜூலை 2008-ல் ஜெயமோகன் எழுதிய ‘அருளும் மருளும் அது ‘ கட்டுரையைப்படித்தபோது. 16.03.2014 இரவு)

Series Navigationவாழ்க நீ எம்மான் (2)அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் – தி.க.சி. அஞ்சலிதொடுவானம் 9. ஒளித்து வைத்த ஓவியங்கள்சீன மரபு வழிக்கதைகள் – 1.மெங்கின் பயணம்பட்டறிவுகளின் பாடங்கள் – [எஸ்ஸார்சியின் ‘தேசம்’ சிறுகதைத் தொகுப்பை முன்வைத்து]மூத்த – இளம்தலைமுறையினர் ஒன்று கூடிய பிரிஸ்பேர்ண் கலை – இலக்கிய சந்திப்பு அரங்குமருத்துவக் கட்டுரை டிங்கி காய்ச்சல்ராதாதினமும் என் பயணங்கள் – 10திண்ணையின் இலக்கியத் தடம் – 28ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் அத்தியாயம்-37அன்னம் விருது பெறும் எழுத்தாளர் சங்கரநாராயணன்
author

பிச்சினிக்காடு இளங்கோ

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *