நெய்வேலி பாரதிக்குமார் கவிதைகள்

This entry is part 1 of 24 in the series 6 ஏப்ரல் 2014

எழுத்தாளர் நெய்வேலி பாரதிக்குமார் தந்துள்ள தொகுப்பு ‘மிச்சமுள்ள ஈரம்’ அவர் முன்னுரையில் வசன கவிதைப் பொழிiவைக் காண முடிகிறது.  அதிலிருந்து ஒரு நயம்…
“மரங்கள் தங்கள் நிழலோவியங்களைச் சாலையோரங்களில் வரைந்து பின் வெயில் தாழ்ந்ததும் சுருட்டிக் கொள்கின்றன.”
இப்புத்தகத்தின் தலைப்புக் கவிதை ‘மிச்சமுள்ள ஈரம்’… இதில் விரக்தி கொண்ட ஒருவன் பேசப்படுகிறான்.  கவிதையில் முன் பகுதியில் நைத்துப்போன மனம் பதிவாகியுள்ளது.  மனிதநேயம் செத்துவிடவில்லை என்பதை ஒரு காட்சி உறுதிப்படுத்துகிறது.
சிறுகல் தடுக்கி கால் இடற
மரத்தடி நிழலுக்காக ஒதுங்கி நின்ற
யாரோ ஒரு கூடைக்காரப் பாட்டி
‘ஐயோ! … பார்த்து நடப்பா’ என்று
பதறும் அந்த ஒரு கணம்….

இது போன்ற பண்பே வாழ்க்கையில் நம்பிக்கையைத் தருகிறது என்கிறார் பாரதிக்குமார்.

‘ம்ஹ_ம்’ என்ற கவிதை தனிக் கவனம் பெறுகிறது.  இல்வாழ்க்கையின் ஆகச் சிறந்த பலம் இக்கவிதைகயில் ததும்பி வழிகிறது.  நல்ல புரிந்துணர்வு என்னும் கட்டமைப்பில் கணவன் – மனைவியின் நல்ல மனம் அழகாகப் பதிவாகியுள்ளது.  ‘ம்ஹ_ம்’ என்ற ஒலிக்குறிப்புச் சொல் எத்தனை பொருள் தருகிறது?  வேறு வேறு சந்தர்ப்பங்களில் பொருள் மாறி மாறி சுவாரஸ்யம் தருகிறது.

“உன் கைப்பக்குவம் எத்தiனை அற்புதம்”
என்பேன் சாப்பிடும் போதெல்லாம்
“ம்ஹ_ம்” என்பாய சினுங்கலோடு
“பொய்தானே சொல்கிறாய்?”
என்ற சந்தேகம் அதற்குள் ஒளிந்திருக்கும்

இதே போல் பல தருணங்கள் பேசப்படுகின்றன.

‘ம்ஹ_ம்’ என்ற சொல்தான்
உலகின் மிக அழகான சொல் என்பேன்
என்று கவிதை முடிகிறது.  இல்வாழ்க்கை பற்றிய குறிப்பிடத்தக்க புதிவு இது!

‘அஃறினை நட்பு’ என்ற கவிதை இயற்கை நேசத்தைச் சுட்டுகிறது.

சூரியன் பழுத்துக்கனியும் மதியத்தில்
காற்றை அனுப்பி எனை அழைத்த மரமே…
எதுவும் சொல்லாமல்
உன் வேரடியில் அமர்ந்த பொழுது
தோழமையுடன்
நீ
உதிர்த்த இலை எனக்காகவா?

என்ற முத்தாய்ப்பில் ‘எனக்காகவா’ என்ற வினாவில் மனிதனின் நேசம் மரத்தின் மீது படிகிறது.

‘மகளே கேள்’ கவிதையில் தன் மகள் மீது பாசத்தைப் பொழிகிறார் ஒரு தந்தை.  தேவையான அறிவுரைகள் சொல்கிறார்.  “எது வேண்டுமோ கேள்!” என்கிறார்.  அவரே எதிர்பாராமல் அந்தப் பெண் சொல்கிறாள்:

‘எல்லாம் சரி
அம்மாவிடம் சண்டையிடும் போது
சத்தத்தைக் குறை’

எல்லா வீடுகளிலும் நடக்கும் யதார்த்தம் தான் இது!

‘கவிஞனாயிருத்தல்’  கவிதை. எழுத்தின் அருமையை உணர்த்துகிறது.  இப்படி இருக்க நினைத்தேன்’ என் ஒரு சிறு பட்டியல் தருகிறார் கவிஞர்.  ‘அவ்வாறு முடியாததால் கவிஞனாக இருக்கிறேன்’ என்கிறார்.  மழை, நிலவு, காற்று, கடல், தாய் என்றெல்லாம் வாழந்துபார்க்க ஆசைப்படுகிறார்.  முடியாததால் இவற்றிற்கு மாற்றாக ஒரு கவிஞனாக இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக இருக்கிறது என்ற மனப்பாங்கு ஆரோக்கியமானது.  இக்கவிதைகயில் சொல்லாட்சி செறிவாக உள்ளது.

வறண்டு பிளந்த நிலத்தினுள்
வதங்கித் தளர்ந்திருக்கும் வேர் தேடி
நனைத்து உயிர்ப்பிக்கும் ஓர் மழைத்திவலை போல்
இருக்க நினைத்ததுண்டு….

என்ற தொடக்கத்தில் படிமம் இயற்கையோடு சங்கமிக்கும் ஆவலை உண்டாக்குகிறது.  இதே போல் அடர்த்தியான சொற்களால் கவிதை நடத்தப்படுகிறது.  எனவே சொற்கோவைச் சிறப்பாக அமைந்து விடுகிறது.

‘தோழமைக்கு’ என்னும் தலைப்பில் எட்டு கவிதைகள் உள்ளன.  மனிதர்களின் தனித்தன்மை பேசப்படுகிறது.

சொன்ன நேரத்திற்குச்
சொல்லி;ய இடத்தில் நீ முதலிடம்….

மற்றொரு நண்பரின் குணத்தைச் சுட்டுகிறார் பாரதிக்குமார்.

தனக்காகப் பறக்கத் தெரியாமல்
எல்லோருக்காகவும்
சிறகசைக்கும் பறவை நீ

மற்றொரு நண்பர் அறக்கோபம் கொண்டவர் ராம்.

தலையில் சந்தனத் துகள்களோடு
பெட்டிக்குள் அடங்கிக் கிடக்கும்
தீக்குச்சியைப் போல
சமூகத்தின் மீதான கோபத்தை
நடை போட்டபடி…
என்று பார்க்கிறோம்.  வாசிக்கும் பழக்கம் கொண்ட ஒருவரைப் பற்றி…

வெடிமருந்து அடைக்கப்பட்ட
குப்பியைப் போல் நிரம்புகிறது
உங்கள் ‘மனப்பை’

என்பது வித்தியாசமான படிம அழகு கொண்டது.

நெய்வேலி பாரதிக்குமாரின் கவிதைகள் நேர்படப் பேசுபவை.  மேலும் சிறந்த கவிதை நேர்த்தி அமைதல் கவிதையை அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்தும்.

Series Navigation
author

ஸ்ரீரங்கம் சௌரிராஜன்

Similar Posts

Comments

  1. Avatar
    bharathikumar says:

    அய்யா மிக்க நன்றி. ஆழ்ந்து வாசித்து அழகாக எழுதி இருக்கிறீர்கள் உங்கள் வாசிப்புக்கும். விமர்சனத்திற்கும் தகவல் தெரிவித்த அன்புக்கும் மீண்டு நன்றி இதனை என் ப்ளாக்கில் பதிவிடுகிறேன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *