சத்யம் சிவம் சுந்தரம் ஃபிஸிக்ஸ் (அறிவியல் கட்டுரை)

0 minutes, 23 seconds Read
This entry is part 1 of 24 in the series 6 ஏப்ரல் 2014
 
 
சத்யம் சிவம் சுந்தரம் ஃபிஸிக்ஸ்
============================================================ருத்ரா இ.பரமசிவன்
ஆன்டி டி.சிட்டர் ஸ்பேஸில் குளூபால் ஸ்பெக்ட்ரம்.

க்யூசிடியில் கருந்துளை சூப்பர் கிராவிடி ட்யூவல்
 
லேட்டைஸ் கணித முடிவுகளின் ஒற்றுமை.
 
வலுவாய் நிகழும் கப்லிங் அப்ராக்சிமேஷன்களில் உள்ள லிமிடேஷன்ஸ்
 
மேலும் ஹேட்ரானிக் மேட்டர் கிராவிடி ட்யூவாலிடி கப்ளிங்க் எஸ்டென்ஷன்ஸ்
 
ப்ரேன் காஸ்மாலஜியில்
 
ராண்டல் சுந்தரம் மாடல்.
 
அப்ப்ப்பா..
 
இதில் சுந்தரம் மட்டுமே புரிகிறது.
 
இது தான்
 
சத்தியம் சிவம் சுந்தரம் ஃபிஸிக்ஸ்.
 
.இது குளுவான்களின் கோக்கூன்கள் பற்றி சமாச்சாரம்.
இங்கு அறிவியல் கட்டுரை சிறகு விரிப்பது போஸ்ட் டாக்டரல் ஃபிஸிக்ஸ்.
 
 
==============================================================
 
journalCode=ijmpa
 
==============================================================
 
 
 
 
கீழ்க்கண்ட சுட்டிப்படத்திற்கு மிக்க நன்றி
 
(GOOGLE IMAGE “BRANE COSMOLOGY)
 
 
====================================================================
 
 
 
 
 

 
சவ்வுப்படல வெளிகள்” (ப்ரேன் காஸ்மாலஜி)
=============================================ருத்ரா இ.பரமசிவன்
 
(RS MODELS I AND II)
 
(ராண்டல் சுந்தரம் பிரபஞ்ச மாதிரிவடிவங்கள்)
 
 
இந்த பிரபஞ்சம் பல பரிமாணங்களின் படலங்கள் அல்லது சவ்வுகள் 
(ப்ரேன்)கொண்டு ஆராயப்படவேண்டும்.பிரபஞ்சம் 4 அடிப்படை ஆற்றல்கள் 
கொண்டு இயங்குகிறது.அவை…
 
 
(1) மின் காந்த ஆற்றல்
.
(2)கதிர் கசிவு அல்லது மென் ஆற்றல்
 
(3)அணுக்கருவின் ஆற்றல்
.
(4)ஈர்ப்பு ஆற்றல்.
 
ஆனால் இந்த பிரபஞ்சம் முழுவதும் மின் காந்த ஆற்றல் ஆட்சி செய்யும் 
அளவுக்கு மற்றவை அவ்வாறு செய்வதில்லை.மின்காந்த அலையின் வேகம் 
கதிர் கசிவு ஆற்றலுக்கு இல்லை.அணுக்கரு ஆற்றல் வெளிப்பட ப்ரோட்டான் 
நியூட்ரான்கள் (இவை நிறை மிக்கவை..ப்ரோட்டான் நிறையின் 1000ல் ஒரு பங்கு
தான் க்ட்ரான் நிறை) பிளக்கப்படவேண்டும்(ஃபிஷன்) அல்லது 
இழைக்கப்பட வேண்டும்(ஃப்யூஷன்).ஒரு துகள் இன்னொரு துகளாக 
அணுக்கருவினுள் இருக்கும் அணு எண்கள் மாற்றப்படுவதன் மூலம் மாறுவதே 
அணு இழையம் ஆகும்.ஆனால் இந்த ஒட்டு மொத்த பிரபஞ்சத்தையும் ஆட்சி செய்யும்
 “ஈர்ப்பு” மற்ற மூன்று ஆற்றல்களைப்போல் உணரப்படுவதில்லை.
அதாவது நுண் ஆற்றல்களான இந்த துகள்கள் கண்ணுக்கு தெரியா (மைக்ரோ)
நிலையில் இருந்து இயங்குகிறது.ஆனால் இவற்றை விட பில்லியன் பில்லியன் 
மடங்குகள் பெரிதான பிரபஞ்சத்தின்(மேக்ரோ யுனிவர்ஸ்) ஆற்றலின் ஆட்சி 
இந்த துகள்களின் முன்னே செயலற்று இருக்கின்றன. இது தான் முதன்மையாக 
இருக்க வேண்டும்.ஆனால் இது இங்கே கடைசியில் பிரபஞ்சத்தாலேயே 
உணரப்படாதது போல் இருக்கின்றது.இந்த முறை பிறள் தன்மையே 
ஹையாரார்க்கி ப்ராப்ளம்)விஞ்ஞானிகளை சிந்திக்க வைத்தது.
மேலும் ஆற்றல்களை பேரொன்றியப்ப‌டுத்தல் (க்ராண்ட் யுனிஃபிகேஷன்) 
கோட்பாடுகளில் முதல் மூன்றும் ஒரு திட்டவட்ட வடிவமைப்பில்(ஸ்டாண்டர்டு 
மாடல் ஆஃப் பார்டிகிள்ஸ்) ஆராயப்படுகிறது.இவை குவாண்டம் இயக்கவியல்
கோட்பாடுகள் மூலம் அணுகப்படுகின்றன.

ஆனால் ஈர்ப்பு ஆற்றல் இவற்றோடு ஒன்றியப்படுத்தப்படுவதில் சிக்கல் 
ஏற்படுகிறது.அதற்கு “அள்விய” (ஸ்கேலார்)அடிப்படையில் எல்லா 
ஆற்றல்களையும் ஒன்றிணைக்க முடியாத அளவுக்கு முதல் மூன்று 
ஆற்றல்கள் நுண்ணிதிலும் நுண்ணிதாக இருக்கிறது.ஈர்ப்பு ஆற்றலோ 
நினைக்கக்கூட முடியாத அளவுக்கு மாபெரும் அளவியங்களில் உள்ளன.
எனவே தான் பிரபஞ்சங்களை பிரபஞ்சங்கள் என்று கூறுவதற்குப்பதில் 
அவற்றை சவ்வுப்படலங்ககளாக பலப்பல பரிமாணங்கள் உடையவை சில 
பரிமாணங்கள் உள்ளவையாக மட்டுமே சுருட்டி மடக்கப்பட்ட பிரபஞ்சமாக 
(யுனிவர்ஸ் வித் கர்ல்டு அப் டைமன்ஷன்ஸ்)இருப்பதாக 
கணித சமன்பாடுகளின் வடிவமைப்புகளில் (மாடல்ஸ்)
கணித இயற்பியல் விஞ்ஞானிகள் ஆராய்கின்றனர்.
 
இதில் முன்னோடியாக இருப்பவர்கள் “லிஸா ராண்டால்” என்ற அமெரிக்கபெண்
விஞ்ஞானியும் அமெரிக்க இந்தியர்(சிவப்பு இந்தியர் அல்ல)”ராமன் சுந்தரம்”
என்ற விஞ்ஞானியுமே ஆவர்.இவர்களது மேற்கண்ட பிரபஞ்ச (சவ்வுப்படல 
பிரபஞ்சம் “ப்ரேன் காஸ்மாலஜி”) மாடல்கள் மிக மிக புகழ் பெற்றவை.
அவை
 
“ராண்டால் சுந்தரம் மாடல் ஒன்று”(ராண்டால் சுந்தரம் மாடல் ஒன்)
“ராண்டால் சுந்தரம் மாடல் இரண்டு”(ராண்டால் சுந்தரம் மாடல் டூ)
 
என அழைக்கப்படுகின்றன.
 
அவை என்ன என்ன என்று பார்ப்போம்.
  

இந்த லிங்க் படத்துக்கு நன்றி
 “அதிகப்படியான பரிமாணங்களின் சுருள்நிலைக் காரணிகள்”
=========================================================================================
(எக்ஸ்ட்ரா டைமன்ஷ்னாலிடி அன்ட் வார்ப் ஃபேக்டர்.)
ஈர்ப்பு ஆற்றல் ஏன் மற்ற மூன்று ஆற்றல்களுக்கும் பின்னுக்கு தள்ளப்பட்டது.இதற்கு சவ்வு பிரபஞ்சம் இரண்டாக பிரிக்கப்பட்டதாக விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.ஒன்று “ஒட்டு மொத்த பிரபஞ்ச படலம்”(பல்க் யுனிவர்ஸ்).மற்றது ஈர்ப்பு ஒழுகும் பிரபஞ்சம்(லீக் யுனிவர்ஸ்)
பலப்பல (சான்றாக 26 பரிமாணங்கள்)பரிமாணங்கள் சுருட்டி மடக்கப்பட்ட ஒட்டு மொத்த பிரபஞ்சத்தில் ஈர்ப்பு ஆற்றலின் இடைச்செயலி துகளான கிராவிடான்( 2 சுழல் உடையது)எல்லாம் வல்ல ஆற்றலுடையதாக இருக்கிறது.நமது பிரபஞ்சம் (3 + 1)பரிமாணம் மட்டுமே உடையது.அதனால் இங்கு ஈர்ப்பின் கசிவு அல்லது ஒழுக்கு மட்டுமே இருக்கும்.அதனால் இங்கு 1 அல்லது 1/2 சுழல் உள்ள ப்ரோட்டான் எலக்ட்ரான் போன்றவையே இயக்கம் இருப்பவை போல் காட்டிக்கொண்டிருக்கும்.
இப்போது மேலே குறிப்பிட்ட முறை பிறள்வு (ஹையரார்க்கி ப்ராப்ளம்)காரணம் அறியப்பட்டு விட்டது.மேலே உள்ள இருவகை பிரபஞ்சங்களுக்கும் உள்ள இந்த  வேற்றுமை என்பது “அதிகப்படியான பரிமாணங்களை” வைத்து தான்.இந்த தன்மை மட்டுமே ஐந்தாவது பரிமாணமாக (ஃபிஃப்த் டைமன்ஷன்) கருதப் படுகிறது.இப்பொது நம் பிரபஞ்சத்துக்கும் இந்த 5 வது பரிமாணம் இருக்கும் மானல் அப்போது பரிமாணங்கள் சூத்திரம் (3 + 1 ) + 1 ஆகும்.இந்த நிலையில் கூட இது ஈர்ப்பின் கசிவு பிரபஞ்சம் தான்.ஈர்ப்பின் ஒட்டு மொத்த பிரபஞ்சத்தின் பரிமாணங்கள் (3 + என்)+1 ஆகும்.இதில் அடைப்புக்குறிக்கு வெளியே உள்ள 1 காலம் ஆகும்.அடைப்புக்குறிக்குள் 1 என்பது நம் சாதாரண (கசிவு) பிரபஞ்சத்தை குறிக்கும்.அதிகப்படி தன்மை இங்கு 1 தான்.ஆனால் ஒட்டுமொத்த பிரபஞ்சத்தில் அது “என்” ஆக இருப்பதால் (பல்க் காஸ்மாலஜி) அது மிக மிக வலு அடைகிறது.ஈர்ப்பான் (கிராவிடான்)ஆட்சி அங்கு வலுவானது.ஆகவே சவ்வு படல பிரபஞ்சங்கள் இரு அடிப்படையில் அறியப்படுகின்றன.
அவை
(1)விண்வெளியின் “அதிகப்படி பரிமாணம் கொள்ளும் தன்மை”(எக்ஸ்ட்ரா டைமன்ஷனாலிடி)
(2)விண்வெளியில் பரிமாணங்கள் “சுருட்டி மடக்கப்படும் தன்மை”அல்லது
நீட்டி நெகிழ்த்தப்படும் தன்மை” (கர்ல்டு அப் டைமன்ஷன்ஸ் அல்லது வார்ப் ஃபேக்டர்)
முதல் தன்மையைப்பற்றி ஓரளவு தெரிந்து கொண்டோம்.2ஆம் தன்மையான‌
விண்வெளி எனும் பாய் சுருட்டி மடக்கப்படும் அல்லது நெகிழ்த்தி நீட்டப்படும் தனமை என்ன என்பதை பார்ப்போம்
========================================================================================================
Series Navigation
author

ருத்ரா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *