தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

29 மார்ச் 2020

மிக பெரிய ஜனநாயக திட்டம்?!!! ஊழலில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்புதல்!

செந்தில்

Spread the love

இந்தியாவில் கடந்த சில வருடங்களாக தொடர்ந்து எழும் குரல், ஊழல்வாதிகளை, ஊழல் அரசியல் கட்சிகளை களை எடுத்தல் என.

இந்தியாவின் உச்ச நீதி மன்றம் சொல்கிறது, அன்னிய (சுவிஸ்) வங்கிகளில் உள்ள கோடி கோடியாக உள்ள சுரண்டபட்ட செல்வங்களை இந்தியாவிற்க்கு கொண்டுவர சட்டரீதியாக அதிகாரிகள், நீதிபதிகள் கொண்ட குழுவை அனுப்பு என்று!

இந்தியாவின் உயர்மட்ட காவல் நிறுவனம், மத்திய ஆட்சியில் உள்ள மந்திரிகளை ஒன்றன் பின் ஒன்றாக கைது செய்து சிறையில் அடைத்து வருகிறது!

காந்தியவாதிகள், யோக குருக்கள் என அன்னா ஹஜாரே, ராம்தேவ் போன்றோர் ஊழலை ஒழிக்க புதிய சட்டங்கள் இயற்ற மக்களை அணி திரட்டி வருகிறார்கள்!

இடதுசாரி கட்சிகள், காங்கிரஸ் (I) ஊழலுக்கு துணை போய்விட்டதாகவும், மக்கள் விரோத திட்டங்களை தீட்டி வருவதாகவும் குறை கூறீ வருகின்றனர்!

கூட்டணி மூலம் வெற்றி பெற்று ஆட்சியில் உள்ள காங்கிரஸ்(I) கட்சிக்குள் ஊழலில் சிக்கியவர்கள் மூலமும், அதிகார போதையில் சிக்கியவர்களின் மூலமும், வியாபார உலகின் பிரதிநிதிகள் மூலமும் உட்கட்சி பிளவுகள் அதிகமாகிவிட்ட நிலை ஒரு புறம்!

இந்தியாவில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதல்களுக்கு துணை போனதாகவும், பின்லேடனுக்கு உடந்தையாக செயல்பட்டதாகவும் கூறி, பாக்கிஸ்தானுடைய அதிகார- அரசியல்வாதிகளுக்கு கொடுத்துவந்த உதவி நிதியை அமெரிக்கா குறைத்து (அ) தடுத்து விடுவதாகவும் கூறியுள்ளது.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன், பொது மக்கள் உலவும் சாலையில் தொடர்ந்து குண்டு வெடிப்புகள்!!!

இதற்கு உடனே சொல்லபட்ட காரணம், முன்பு சொல்லபட்டது போலவே, இந்திய முஹைஜுடீன், லஸ்கர்-ஈ-தொய்பா என தீவிரவாத அமைப்புகள் என. இந்த அமைப்புகள் எந்த லட்சியங்களுக்காக செயல்படுகின்றன என்பது யாருக்கும் இதுவரை தெளிவாக தெரிந்ததில்லை!!!

ஒன்று தெளிவு: உலக மகா அயோக்கியர்களின் ஆட்சியை தக்கவைத்து கொள்வதற்க்காக, இந்தியாவின் வெளியுறவு கொள்கைகளை திசைமாற்ற, அயோக்கியர்களின் கூலிப்படைகளாக – தெரிந்தோ, தெரியாமலோ, தொடர்ந்து செயல்பட்டுவரும், சில திருடர்களும், வழிதவறிய சில இளைஞர்களை வழி நடத்தும் சில ஊழல் ஓநாய்களும், இந்த குண்டுவெடிப்புகளுக்கு பின்ணனியில் கட்டாயம் இருக்க வேண்டும். இந்த உலக மகா அயோக்கிய ஊழல்வாதிகளின் (உலகெங்கிலும் உள்ள) ஆதார மூலம் எங்கு இருந்து செயல்படுகிறது? இவர்களை காப்பாற்ற இப்படி பொது மக்களை கொன்று, மத கலவரங்களை உருவாக்க முயற்ச்சி செய்து-மக்களை திசை திருப்புவதில் யாருக்கு என்ன லாபம் இருக்க முடியும்? புரியாத புதிர் இல்லை!

Series Navigationநினைவுகளின் மறுபக்கம்கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) இதயத்தின் இரகசியங்கள் (Secrets of the Heart) (கவிதை -46)

Leave a Comment

Archives