தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

16 பெப்ருவரி 2020

நட்பு

Spread the love

 

 

அம்பல் முருகன் சுப்பராயன்

என் பால்ய

கால நண்பனை

சந்திக்கிற போதெல்லாம்

புன்முறுவலோடு

முகத்தை

திருப்பி கொள்கிறேன்

பேசாமலேயே..

சண்டைக்கான காரணம்

ஞாபகம் இல்லை

அறிந்ததுமில்லை..

மௌனம் கலைத்தோம்

முப்பது ஆண்டுகள் கழித்து…

பல்லிடுக்கில் மாட்டிக்கொண்ட

உணவு துண்டை

எடுத்தது போல

மனம் லேசானது..

நாம் ஏன்

பேசிக்கொள்வதில்லை

என அவனும்

கேட்ட போது..

 

~அம்பல் முருகன் சுப்பராயன்

Series Navigationப.சந்திரகாந்தத்தின் ‘ஆளப்பிறந்த மருதுமைந்தன்’ நாவல்திராவிட இயக்கத்தின் எழுச்சியும் வீழ்ச்சியும் – 3சீதாயணம் நாடகப் படக்கதை – 29​

Leave a Comment

Archives